Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

02.jpg

https://athavannews.com/2021/1227366

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கோமாளித்தனம். ஒருவர் இப்படி வேண்டுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

இதென்ன கோமாளித்தனம். ஒருவர் இப்படி வேண்டுகிறார். 

ராஜாபக்சாவின் "குருவியோ">>> போர்ட் சிற்றியில்  புகுந்து விளையாடுகிற பிளானாக இருக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

இதென்ன கோமாளித்தனம். ஒருவர் இப்படி வேண்டுகிறார். 

இதைத்தான்… குனிஞ்சு கும்பிடுறது, எண்டு சொல்லுறவை. 🤣

விரைவில் அவருக்கு… பெரிய பதவி ஒண்டு, வரப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை போராட்டம் முளைவிட தொடங்கிய காலத்தில் முதலில் களையெடுக்கப்பட்டது வடக்குகிழக்கில் இருந்தபடி தமது தனிப்பட்ட பிரபல்யம் பொருளாதாரம், அரசியல் ஆதாயம் செல்வாக்கு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமது இனத்தின் பாதிப்பு சுய கெளரவம்பற்றி கிஞ்சித்தும் யோசிக்காமல்  சிங்கள தலைமைகளுக்கு பாத பூசை செய்பவர்களைத்தான் என்பது வரலாறு.

இனத்தின் சுயகெளரவம் என்ற ஒற்றை சொல்லுக்காக போராட்டம் ஆரம்பித்து முடிவடைந்து எத்தனை தசாப்தங்கள் கடந்து போயின, எத்தனை எத்தனை ஆயிரம் மனித உயிர்கள்,அங்கவீனர்கள் ,சந்ததியே இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டவர்கள் , எத்தனை ஆயிரம் கோடி சொத்து இழப்புக்கள் இவற்றிலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டதா இந்த சிங்களவர்களின் புறங்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சோற்றை நக்க ஓடிக்கொண்டிருக்கும் பெயரில் மட்டுமே தமிழை கொண்டிருக்கும் இந்த கூட்டம்?

கட்டுப்படுத்த ஆள் இல்லை என்று ஆன பிறகு இந்த கால் கழுவும் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகுமேயொழிய கட்டுப்பாட்டுக்குள் ஒருபோதும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா நகர் முழுவதும் ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’ என பொறிக்கப்பட்ட பதாதைகள்

IMG20210708094814 01 வவுனியா நகர் முழுவதும் 'வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச' என பொறிக்கப்பட்ட பதாதைகள்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.

IMG20210708102905 வவுனியா நகர் முழுவதும் 'வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச' என பொறிக்கப்பட்ட பதாதைகள்

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற மீள் வருகையடுத்து ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’  பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொது மக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

IMG20210708102835 01 வவுனியா நகர் முழுவதும் 'வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச' என பொறிக்கப்பட்ட பதாதைகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் ஆதரவு தெரிவித்து இவ்வாறு பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

https://www.ilakku.org/vavuniya-basil-rajapaksa-poster/

  • கருத்துக்கள உறவுகள்

நிதிஅமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது!!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நிதிஅமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது!!!!

இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும், அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்றே கருத வேண்டும்.

பசில் ராசபக்ச நாட்டுக்கு சேவையாற்ற நினைத்தால் கோட்டாபய ராசபக்சாவை போன்று அமெரிக்க குடியுரிமையை துறக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றே தோன்றுகிறது என தேசப்பற்றுள்ள பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரச நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்குப்பற்றுவதும் தவறானதாகும்.

இரட்டை குடியுரிமையினையுடைவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிராக செயற்பாடாகும்.

முன்னாள் அமைச்சர் பசில் ராசபகிச பாராளுமன்ற உறுப்பினராகி நாட்டுக்கு சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு இரட்டை குடியுரிமையினை உடையவருக்கு அரசியலில் அனுமதியளிக்க முடியாது என்றார்.😕

  • கருத்துக்கள உறவுகள்

குனிவது

கும்பிடுவது என்று  புறப்பட்ட  பின்னர்??????😪

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற மீள் வருகையடுத்து ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’  பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொது மக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

தமிழ் மக்கள் பசில் ராஜபக்ஷவை  விரும்புகிறார்கள் என்கிற மாயையை உருவாக்குவதற்காக அவர்களின் அடிவருடிகளால் காட்டப்படும் படம் போன்றே இருக்கிறது. தமிழர் இல்லாமல் இனி நாட்டில் அசைய முடியாத நிலை. ஒருபக்கம் சீனா விழுங்கப்போகுது, மறுபக்கம் சர்வதேசம் நெருக்குது, இன்னொரு பக்கம் சிங்களம் சிந்திக்குது. அந்தப்பக்கம் உட்கட்சி முரண்பாடு, பொருளாதார வீழ்ச்சி.  இவற்றிலிருந்து தப்புவதற்கு தமிழரை அணைப்பது போல் அணைத்து புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை பெற முயற்சிக்கலாம். அவர்கள் அணைக்கிறார்களோ இல்லையோ நம் ஆக்கள் ஒட்டிக்கொண்டிருந்து ஏதாவது பருக்கை இருக்கிறதா என்று ந ....... பார்ப்பார்கள். நெருக்கடியை சமாளிக்க பசிலை வரவழைத்து ஒரு நாடகம். மொத்தத்தில் புதிய கோப்பையில் பழைய கள் வாசனையோடு. அவரோ  ராஜபக் ராஜபக்ஷகளுக்குள் தந்திரம் கூடியவர். ஒருவேளை அமெரிக்கா இலங்கையை தன்வசம் இழுப்பதற்காக இவரை வைத்து காய் நகர்த்தலாம். குரைத்த தினேஷ் குணவர்தன பெட்டிப்பாம்பாய் வளைவதிலிருந்து பல சந்தேகங்கள் வருகிறது. எப்படியிருந்தாலும் இலங்கை ஒரு ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலுள்ளது இப்பொழுது.     

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

02.jpg

https://athavannews.com/2021/1227366

என்ன படத்தைப்போட்டு இன்னொன்றோடு இணைத்து கதை எழுதுகிறார்கள் போலுள்ளது.  இங்கு கொரோனா கட்டுப்பாடு அனுசரிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தமிழ் மக்கள் பசில் ராஜபக்ஷவை  விரும்புகிறார்கள் என்கிற மாயையை உருவாக்குவதற்காக அவர்களின் அடிவருடிகளால் காட்டப்படும் படம் போன்றே இருக்கிறது

பசில் அவர்களுக்கு வட கிழக்கில் நிறைய ஆதரவு உள்ளது . அடுத்த கட்டம் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல்.... அதுதான் பசிலின் இலக்கு.
வட கிழக்கு மக்களின் ஆதரவுடன் அவர்தான் இலங்கையின்  அடுத்த தலைவர். 
தமிழ்த் தேசியம் போராட்டம் எல்லாம் பின் தள்ளப்படும்

  • கருத்துக்கள உறவுகள்
அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து
............
கௌரவ பஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கௌரவ பஷில் ராஜபக்ஷ பதவியேற்றமை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"நிதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவின் ஆளுமை என்பது எமது மக்களினால் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
அவ்வாறான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலிலும் பயணித்துக் கொண்டிருக்கும் எமது அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது.
அதேபோன்று, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பான நம்பிக்கையையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேலும், கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்து, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட வேலைத் திட்டங்களும், எம்மால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நிலையான இடத்தினை பிடித்திருக்கின்றமையினால், அவரின் தற்போதைய பதவியேற்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது" என்று தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person, standing and indoor
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

நிதிஅமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது!!!!

இலங்கையின் புதிய நிதி அமைச்சர் இலங்கை திருநாட்டை சரியான பாதையில் நிதிபரிபாலனம் செய்வதற்கு தேவையான அறிவையும், ஆரோக்கியத்தையும், பலத்தையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்கட்டும்.

ஓம் நமசிவாய!

 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையின் புதிய நிதி அமைச்சர் இலங்கை திருநாட்டை சரியான பாதையில் நிதிபரிபாலனம் செய்வதற்கு தேவையான அறிவையும், ஆரோக்கியத்தையும், பலத்தையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்கட்டும்.

ஓம் நமசிவாய!

 🙏🙏🙏

கிழக்கு நோக்கி இருக்கும் சிவனின் மந்திரமாக'நமசிவாய' வைக் கூறுகின்றார்.
 
'நமசிவாய ' என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும்.
 
'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.
 
'நமசிவயங் செலகை நமசிவாய' என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.
 
'நமசிவாயம் லங்க நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.
 
'சவ்வும் நமசிவாய நமா' என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.
 
'ஶ்ரீயும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.
 
'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.
 
'அலங்கே நமசிவாய நமோ' என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.
 
'வநம சிவாய' என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.
 
'ஓம் நமசிவாய' என்று செபித்தால் காலனை வெல்லலாம்.
 
'லங்கிரியும் நமசிவாய' என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.
 
'ஓங்கிறியும் ஓம் நமசிவாய' என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும்.
'ஓங் ஊங் சிவாய நம உங்நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.
 
'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.
 
'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.
 
'ஓங் அங்கிஷ சிவாய நமா' என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.
 
'அங் சிவாய நம' என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
 
'அங் உங் வங் சிவாய நம' என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.
 
'ஹம் ஹம் சிவாய நமா' என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.
 
'ஓம் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை செபித்தால் பூத கூட்டங்கள் வசமாகும், துஷ்ட தேவதைகள் அழியும்.
 
'சிலியும் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் மன்னர்கள் வசியம் ஏற்படும்.
 
இவையெல்லாம் தத் புருஷம் இருபத்தைந்தாம்.
 
கரூரார் பூஜா விதிகள். சிதம்பர அஷ்ட கர்ம மந்திரங்கள்.
 
வில்வம், அத்தி ஆகியவற்றின் சமித்துகளால் தற்புருஷ மந்திர ஜபம் ஜபித்து ஆயிரத்தெட்டு முறை ஹோமம் செய்தால் காரிய சித்தியாகும். பிரம்மஹத்தி முதலிய பாவங்கள் நீங்கும்.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஓம் நமசிவாய!

அதை சொல்பவர்களுக்குத்தான் நன்மையே தவிர மற்றவர்களுக்கு அல்ல சும்மா கடுப்பேத்த என்று அடித்து விடக்கூடாது பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:
 
'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.

எனது பெயரில் மேலேயுள்ள மந்திரத்தையும் குமாரசாமி அண்ணையின் பெயரில் கீழேயுள்ள மந்திரத்தையும் 1008 முறை சொல்லத்தக்க இயந்திரத்தை எங்கே வாடகைக்கு எடுக்கலாம் என்று தெரியுமா?😃

3 hours ago, nunavilan said:
 
'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்கள் போல பசில் ஐயாவும் ரொம்ப நல்லவர் .. வல்லவர் 
தமிழர்களுக்கு நடக்கும்போது ஒரு முள்ளு குத்தினால்கூட  மனமுடைந்து போவார் 
ஆதலால் தமிழர்கள் குண்டு அடிபட்டு இறந்தால் கூட யாரும் சொல்லுவதில்லை 
பச்சை குழந்தைகள் தாங்க மாட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

பசில் அவர்களுக்கு வட கிழக்கில் நிறைய ஆதரவு உள்ளது . அடுத்த கட்டம் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல்.... அதுதான் பசிலின் இலக்கு.
வட கிழக்கு மக்களின் ஆதரவுடன் அவர்தான் இலங்கையின்  அடுத்த தலைவர். 
தமிழ்த் தேசியம் போராட்டம் எல்லாம் பின் தள்ளப்படும்

பசில் அவர்களுக்கு.....🤔

இலங்கையில் பொதுவாழ்வில் இருந்தவர்களில் ஒரேயொருவரை மட்டுமே எனது வாய் "அவன்" என்று அழைத்ததில்லை.

நான் ஒரு நாகரிகம் தெரியாத காட்டுமிராண்டியோ ஒருவேளை .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

02.jpg

முஸ்லீம் மத குருக்கள்....  பசில் ராஜபக்சவின், ஆசி நிகழ்விற்கு அழைக்கப் படாததை,
மிக, மிக... வன்மையாக கண்டிக்கின்றோம்.  😜

அலலது... அழைத்தும், அவர்கள் வரவில்லையா... 🤔

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

தமிழ் மக்கள் பசில் ராஜபக்ஷவை  விரும்புகிறார்கள் என்கிற மாயையை உருவாக்குவதற்காக அவர்களின் அடிவருடிகளால் காட்டப்படும் படம் போன்றே இருக்கிறது. தமிழர் இல்லாமல் இனி நாட்டில் அசைய முடியாத நிலை. ஒருபக்கம் சீனா விழுங்கப்போகுது, மறுபக்கம் சர்வதேசம் நெருக்குது, இன்னொரு பக்கம் சிங்களம் சிந்திக்குது. அந்தப்பக்கம் உட்கட்சி முரண்பாடு, பொருளாதார வீழ்ச்சி.  இவற்றிலிருந்து தப்புவதற்கு தமிழரை அணைப்பது போல் அணைத்து புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை பெற முயற்சிக்கலாம். அவர்கள் அணைக்கிறார்களோ இல்லையோ நம் ஆக்கள் ஒட்டிக்கொண்டிருந்து ஏதாவது பருக்கை இருக்கிறதா என்று ந ....... பார்ப்பார்கள். நெருக்கடியை சமாளிக்க பசிலை வரவழைத்து ஒரு நாடகம். மொத்தத்தில் புதிய கோப்பையில் பழைய கள் வாசனையோடு. அவரோ  ராஜபக் ராஜபக்ஷகளுக்குள் தந்திரம் கூடியவர். ஒருவேளை அமெரிக்கா இலங்கையை தன்வசம் இழுப்பதற்காக இவரை வைத்து காய் நகர்த்தலாம். குரைத்த தினேஷ் குணவர்தன பெட்டிப்பாம்பாய் வளைவதிலிருந்து பல சந்தேகங்கள் வருகிறது. எப்படியிருந்தாலும் இலங்கை ஒரு ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலுள்ளது இப்பொழுது.     

உண்மை அது ஆனால் அதை ஏற்கும் நிலையில் நம்மில் சிலர் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் மத குருக்கள்....  பசில் ராஜபக்சவின், ஆசி நிகழ்விற்கு அழைக்கப் படாததை,
மிக, மிக... வன்மையாக கண்டிக்கின்றோம்.  😜

அலலது... அழைத்தும், அவர்கள் வரவில்லையா... 🤔

பிரபலங்களுக்காக இறைவனை  வழிபடுவடை அவர்களது மார்க்கம் ஏற்று கொள்வதில்லை.....தனிமனித வழிபாடுகளும் அவர்களது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் ஏனைய மத சம்பிராதய்ங்கள் நடை பெறும் பொழுது  அவர்கள் கலந்து  கொள்வதை விரும்புவதில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின் நிதி மேலாண்மை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது

இதன் அடிப்படையில், பல்வேறு நாடுகள் தங்கள் சொந்த அமைச்சரவையில் நிதி நிபுணர்களை நிதி அமைச்சர்களாக நியமிப்பது வழக்கம்.

நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் நிதிக் கொள்கை, நாணய மேலாண்மை, நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் நிதிச் சட்டங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை,

வக்கீல் மற்றும் பட்டய கணக்காளர் முசுதபா கமலை அதன் நிதி அமைச்சராக பங்களாதேசு நியமித்துள்ளது.

நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்ற முசுதபா கமல், தாமரை கமல் குழுமத்தின் நிறுவனர் ஆவார்.

மேலும், பங்களாதேசு பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் வுளித் துறையின் நிதித்துறையில் பணியாற்றிய முசுதபா கமலுக்கு 40 வருட அனுபவம் உள்ளது.

முசுதபா கமலை லண்டனின் "தி பேங்கர்" பத்திரிகை 2020 ஆம் ஆண்டின் நிதியமைச்சர் விருதுக்கு பரிந்துரைத்தது.

நன்கு அறியப்பட்ட வங்கியாளரான சா யூகே கத் தரின் பாகித்தானின் நிதி அமைச்சராக உள்ளார்.

சா யூகே கத் தரின் முதுகலை பட்டம் பெற்றவர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற சிட்டி வங்கியில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

பீப் வங்கி லிமிடெட் உட்பட நிதித்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், கராச்சி பங்குச் சந்தை உள்ளிட்ட பங்குச் சந்தைகளில் 35 ஆண்டுகால அனுபவமும் சா யூகே கத் தரினுக்கு உண்டு.

பூட்டானின் நிதியமைச்சர் நம்கே செரிங்.

முதுகலை பட்டம் பெற்ற இவர், உலக வங்கியில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு

திருமதி நிர்மலா சீதாராமன் இந்திய நிதி அமைச்சராக உள்ளார்.

பொருளாதார வல்லுனர் நிர்மலா சீதாராமனுக்கு இங்கிலாந்தில் வேளாண் பொறியாளர்கள் சங்கத்தின் பொருளாதார வல்லுநராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

திருமதி நிர்மலா சீதாராமன் லண்டனில் உள்ள பிக் 4 தணிக்கை நிறுவனம் (பிக் 4 தணிக்கை நிறுவனம்) பி.டபிள்யூ.சியில் மூத்த மேலாளராகவும் அனுபவம் பெற்றவர்.
36 வயதான இப்ராகிம் அமீர் மாலத்தீவின் நிதி அமைச்சராக உள்ளார்.

சர்வதேச பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இப்ராகிம் அமீர், அமெரிக்காவில் ஃபுல்பிரைட் உதவித்தொகை பெற்றவர்களில் ஒருவர்.

இது தவிர, மாலத்தீவின் மத்திய வங்கியில் மேலாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது

டாக்டர் பழனிவேல் தியாகரான் இந்தியாவின் தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ளார்.

தியாகரான் உலகப் புகழ்பெற்ற எம்ஐடி பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டமும், அமெரிக்காவின் பவ்பலோ பல்கலைக்கழகத்தில் பிஎச்டியும் பெற்றுள்ளார்.

டாக்டர் பழனிவேல் தியாகரான் அமெரிக்காவில் லெகிய்மன் பிரதர்சு கோல்டிங்சு இன்க் நிறுவனத்தில் நிதி மேலாளராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

தியாகரான் சிங்கப்பூரில் உள்ள இசுடாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் உலகளாவிய மூலதனப் பிரிவின் தலைவராக 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

இந்த சர்வதேச சூழலில், பசில் ராயபக்ச இலங்கையின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பட்டாசுகளுடன் பல கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

இலங்கை பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய புத்திசாலி பசில் ராக்ச என்று கதைகள் கூறப்படுகின்றன.

பசில் ராக்சவின் கல்வித் தகுதி சரியாக என்ன? நிதித்துறையில் அவரது அனுபவம் என்ன?

அமெரிக்க தூதர் ராபர்ட் ஓ. பிளேக் தனது நாட்டிற்கு அனுப்பிய குறிப்பில் பசில் ராக்ச பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  'பசில் ஊழல், கல்வி லிமிடெட் மற்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டது'

அதாவது, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட படிப்பறிவற்ற மோசடி பசில் ராக்ச என்று கூறுகிறார்

எனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த நிதி நிபுணர்களைச் சந்திக்க, நியமிக்கப்பட்ட இலங்கை நிதி அமைச்சரின் திறமை ஒரு பத்து சதவீதம் கூட இல்லை.

இது கொண்டாட வேண்டிய ஒன்றல்ல .. வெட்கப்பட வேண்டிய ஒன்று.

வாட்சப்பில் ஒரு நண்பனிடமிருந்து வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப, தராவது, மகிந்தவுக்கு ஆசி வேண்டி பூசை செய்து, துன்னூறு அனுப்பி வைக்கவேணும்.

எங்கண்ட மகிந்தா என்ன தக்காளி தொக்கா. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

இப்ப, தராவது, மகிந்தவுக்கு ஆசி வேண்டி பூசை செய்து, துன்னூறு அனுப்பி வைக்கவேணும்.

எங்கண்ட மகிந்தா என்ன தக்காளி தொக்கா. 😁

நேற்று… பசிலுக்கு, நடந்த பூசையில் ஏதோ… தவறு நடந்து விட்டது போலுள்ளது. 😂

குளிக்காமல்…. பூசை செய்து விட்டார்கள் என்று, ஜேர்மனியில் உள்ள பிரபல சாத்திரியார் சொல்லுகிறார். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.