Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் பிரவேசம்::ரஜினி மீண்டும் ஆலோசனை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பிரவேசம்:: ரஜினி மீண்டும் ஆலோசனை.!

1625107981_rajinikanth.jpg

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், இன்று சந்தித்து பேச உள்ளாா். அதற்கு முன்பாக சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன் என்றார். 


முன்னதாக தான் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வர முடியவில்லை என கடந்த ஆண்டு அறிக்கை மூலம் ரஜின வருத்தம் தெரிவித்திருந்தாா். ஆனால் தற்போது அவர் தான் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. 


சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, சென்னையிலிருந்து, கடந்த 19-ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றாா். அவருடன் குடும்பத்தினரும் சென்றனா். 


அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அங்கு தங்கி சிறிது நாள்கள் ஓய்வெடுத்த நிலையில், அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ரஜினி, வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.dinamani.com/tamilnadu/2021/jul/12/political-entry-rajini-consults-again-3658675.html

  • கருத்துக்கள உறவுகள்

அதி கார ஆசை யாரைவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்

தனது கட்சியை கலைத்துள்ளதாக செய்திகள் சொல்கின்றனவே???

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பேரூந்து நடத்துனர் அல்லவா...! எந்தெந்தத் தரிப்புகளில் தரித்துச் செல்லவேண்டும் என்ற அனுபவம், இன்றும் அவரை வழிநடத்துவதில் ஆச்சரியமென்ன. ??

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொல்லைய விட, இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல 🙄

  • கருத்துக்கள உறவுகள்

ரசனி…. அரசியலுக்கு வந்து, தமிழகத்து… சிஸ்ரத்தை சரி படுத்த வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு படமும் வெளிவரும் முன்னர் இப்படியான செய்திகள் வந்தவண்ணம் இருக்கும்.
ஆனாலும் அரசியியலில் ரஜனி வருவார்.   ஆனாலும் அரசியலிற்கு  வரமாட்டார்.
படம் ஓடினால் காணுமே .

  • கருத்துக்கள உறவுகள்

Old Guy Dancing GIFs - Get the best GIF on GIPHY

அவரது ரசிகர்களை திருப்திப் படுத்த அப்பப்ப புளுகித் தொலைக்க வேண்டிக் கிடக்கு.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த்: "மக்கள் மன்றம் கலைப்பு, ரசிகர் மன்றம் தொடரும் - அரசியல் எண்ணம் கிடையாது"

7 மணி நேரங்களுக்கு முன்னர்
ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,RAJINIKANTH

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை," என்று கூறியுள்ளார்.

"நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்."

"கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக, முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,RAJINIKANTH

முன்னதாக, செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை காலையில் பேசிய ரஜினிகாந்த், உடல் நல பிரச்னைகள் காரணமாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியதாகவும், கொரோனா கால சூழல்கள் காரணமாக பொதுவெளியில் அனைவரையும் சந்திப்பதை தவிர்த்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் நிர்வாகிகளுடன் பேசிய ரஜினிகாந்த், தமது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் மன்றம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். உடல் நல பிரச்னைகள் காரணமாக அவர் அந்த படிப்பிப்பின் இறுதிக் காட்சிகள் மற்றும் டப்பிங்கில் பங்கேற்க இயலாமல் போனது. தற்போது உடல் நலம் தேறிய அவர் அதில் கவனம் செலுத்துவார் என்று அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ரஜினிகாந்தின் அரசியல் தவிர்ப்பு அறிவிப்பை வரவேற்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி

ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,RAJINIKANTH

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு கூறியிருந்த ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ளதாக அறிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் அரசியலில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்று அப்போது அவர் கூறியதால், தமிழக சட்டமன்ற தேர்தல் களம் கடந்த ஜனவரி மாதம் சூடுபிடித்தபோது, அந்த களத்தில் தமது மக்கள் மன்றம் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

இருந்தபோதும், "ரஜினிகாந்த் கொரோனா கால சூழ்நிலை மற்றும் உடல் நல பிரச்னைகளால், அப்போதுதான் அரசியலுக்கு வரமாட்டார். இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அவர் அரசியலுக்கு வருவார். அதன் அடையாளமாகவே மக்கள் மன்றம் கலைக்கப்படவில்லை," என்று ரஜினியின் அரசியலை ஆர்வத்துடன் எதிர்பார்த்தவர்கள் கூறி வந்தனர்.

ஆனால், அந்த கருத்துகளுக்கும் தமது இன்றைய அறிவிப்பு மூலம் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

"ரஜினியை இயல்பாக இருக்க விடுங்கள்"

ரஜினியின் சமீபத்திய நிலைப்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறுகையில், "ரஜினி எடுத்த முடிவு நல்லதுதான். தமிழ்நாட்டுக்கு தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் கூறி வந்தார். சாதாரண நடத்துநராக இருந்த தமிழ் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் கொடுத்தனர். அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று ரஜினி கூறி வந்தார். அவர் அரசியலுக்கு வந்து செய்ய முடியாத நல்ல பணிகளை வெறும் நற்பணி மூலம் செய்யலாம். இப்படிப்பட்ட ஒருவரை அரசியலில் இழந்து விட்டோமே என்று மக்கள் எண்ணம் அளவுக்கு அவரால் நற்பணி மன்றத்தை பயன்படுத்தி சமூக சேவை செய்ய முடியும்," என்றார்

"ரஜினி நினைத்தால் பல முனைகளில் இருந்தும் கோடி கோடியாக நன்கொடையாக குவியும். அந்த நிதியைக் கொண்டு தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள் மேம்பாடு, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளுக்கு உதவுவது போன்ற சமூக பணிகளில் அவர் தமது நற்பணி மன்றம் மூலம் செய்தாலே போதும், அதுவே தமிழக மக்களுக்கு செய்யும் பெருந்தொண்டாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

"தமது அறிக்கையின் கடைசி வரிசையில், வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் நாடு, ஜெய்ஹிந்த் என்று கூறி முடித்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட "ஜெய்ஹிந்த்" என்ற வார்த்தையை பாரதிய ஜனதா கட்சியினர் தங்களுக்கு சாதகமாக அரசியல் விளையாட்டுகளுக்கு பயன்படுத்தி மீண்டும் அவரை உசுப்பி விடாமல் ரஜினியை அவரது போக்கில் இயல்பாக இருக்க விட்டாலே போதும்," என்கிறார் குபேந்திரன்.

ரஜினிகாந்த்: "மக்கள் மன்றம் கலைப்பு, ரசிகர் மன்றம் தொடரும் - அரசியல் எண்ணம் கிடையாது" - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!

சென்னை ராகவேந்திரா மணடபத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சந்திப்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை ராகவேந்திரா மணடபத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சந்திப்பில் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவருகிறார். தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவது தொடர்பாக இங்கு ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் ரஜினிகாந்த். அதைத் தொடர்ந்து மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளில் இணைந்தனர்.

 
  • 7/7
     
    vikatan%2F2021-07%2F31f6b40d-851f-4370-997c-b17a3076e4a7%2FWhatsApp_Image_2021_07_12_at_10_45_13_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 1/7
     
    vikatan%2F2021-07%2F22346d9f-3957-458a-af13-de66f031bcd4%2FWhatsApp_Image_2021_07_12_at_10_47_34_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 2/7
     
    vikatan%2F2021-07%2Fedec1596-26e2-4ea8-a010-f51520fe3ac9%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_58_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 3/7
     
    vikatan%2F2021-07%2F39ab992c-dff2-4d81-a7c6-34e6488e4e23%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_59_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 4/7
     
    vikatan%2F2021-07%2F82daaad4-bfd8-4787-983a-77820fddbf72%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_51_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 5/7
     
    vikatan%2F2021-07%2F86c87ac6-b9d2-4737-9141-9dfb596d6cf0%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_50_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 6/7
     
    vikatan%2F2021-07%2Fe2e3f33b-5853-4165-a3ce-77755c2ad31c%2FWhatsApp_Image_2021_07_12_at_10_46_47_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 7/7
     
    vikatan%2F2021-07%2F31f6b40d-851f-4370-997c-b17a3076e4a7%2FWhatsApp_Image_2021_07_12_at_10_45_13_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1
  • 1/7
     
    vikatan%2F2021-07%2F22346d9f-3957-458a-af13-de66f031bcd4%2FWhatsApp_Image_2021_07_12_at_10_47_34_AM.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.1

சிலர் ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். இந்தநிலையில், இன்று மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதற்கு முன்பாகப் பேசிய ரஜினி, `` `அண்ணாத்த’ ஷூட்டிங், கொரோனா, தேர்தல் அதன் பிறகு மெடிக்கல் செக்கப் இவற்றால் ரசிகர்களை, மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க முடியாமல் போனது. மக்கள் மன்றத்தின் பணி என்ன, அதைத் தொடரலாமா என்ற கேள்விகள் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் உள்ளது. எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என்பது குறித்து ரசிகர்களிடம் குழப்பம் உள்ளது; எனவே, அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவிருக்கிறேன்!" எனத் தெரிவித்தார்.

 
ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!
 
 

``வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை’’ என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு! Rajini kanth Meets Rajini makkal mandram cadre (vikatan.com)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரசனி…. அரசியலுக்கு வந்து, தமிழகத்து… சிஸ்ரத்தை சரி படுத்த வேணும். 🤣

அமெரிக்காவுக்கு போய் மண்டை கழுவிக்கொண்டு வந்திருக்காரு 😂

  • கருத்துக்கள உறவுகள்

தலிவா….நீ பெரிய ஆளு தலிவா ….

உசுப்பேத்தி, உசுப்பேத்தி இந்த சப்பாணி பய கதையையே முடிச்சிட்ட இல்ல🤣.

இனி நீ ஏன் அரசியலுக்க வரப்போறே?🤣

  • கருத்துக்கள உறவுகள்

அவரசமாக ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்த ரஜினி பின்னணி என்ன?

1990-கள் முதல் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசி வருகிறார். ஊடகங்களில் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு ஒவ்வொரு படத்திற்கும் இதை ஒரு விளம்பரம் போல செய்து வந்தார்.


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜக ரஜினியை அரசியலுக்குக் கொண்டு வந்து திமுகவை பலவீனமாக்க முயன்றது. ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர நேரடி மறைமுக அழுத்தங்களைக் கொடுத்தது பாஜக. ரஜினியும் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதற்கு முன்பே ரஜினி ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றம் என்பது போல ஆக்கி அதில் பல அணிகளை உருவாக்கி வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பும் கொடுத்தார்.

பின்னர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லி விட்டு ஒதுங்கியும் விட்டார். ஆனால் ரஜினி மக்கள் மன்றங்களும் அதன் நிர்வாகிகளும் அப்படியே இருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பாஜகவினரோடு சேர்ந்து கொண்டு ஆங்காங்கே கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வருவதாகவும், பாஜக பலரையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதாகவும் ரஜினிக்கு செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம் திமுகவின் பக்கம் பல ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சாய இது தேவையற்ற அழுத்தங்களை தனக்கு உருவாக்கும் என்பதை உண்ரந்த ரஜினி மக்கள் மன்றங்களை கலைப்பதாக இன்று அறிவித்ததோடு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்து விட்டார் ரஜினி.

 

 

https://inioru.com/அவரசமாக-ரஜினி-மக்கள்-மன்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

தலிவா….நீ பெரிய ஆளு தலிவா ….

உசுப்பேத்தி, உசுப்பேத்தி இந்த சப்பாணி பய கதையையே முடிச்சிட்ட இல்ல🤣.

இனி நீ ஏன் அரசியலுக்க வரப்போறே?🤣

நீங்கள் சட்டம் கொஞ்சம் தெரிஞ்சவர் எண்டபடியாலை ஒரு கேள்வி. 😂

பட்டப்பெயரை எல்லாம் கையெழுத்தாய் வைக்கலாமோ? 😎

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சட்டம் கொஞ்சம் தெரிஞ்சவர் எண்டபடியாலை ஒரு கேள்வி. 😂

பட்டப்பெயரை எல்லாம் கையெழுத்தாய் வைக்கலாமோ? 😎

ரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு!

வசந்திய நம்பி ஏமாற வேண்டாம்🤣. நான் சும்மா கூகிள்ள பார்த்து அடிச்சு விடுறனான்.

ஆள் சட்டபடி பேரை மாத்தீட்டோ தெரியா. இல்லாட்டிலும் பிரச்சனை இல்லை எண்டு நினைக்கிறன். வேறு சிலர் சினிமாவுக்கு வைத்த பெயரில் தேர்தலிலும் நின்றுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

வசந்திய நம்பி ஏமாற வேண்டாம்🤣. நான் சும்மா கூகிள்ள பார்த்து அடிச்சு விடுறனான்.

இதென்ன சிம்ரன் இதெல்லாம்... 🥴

வதந்திகளை நம்பவேண்டாம் என்று சொல்லிப்போட்டு, நீங்களே வதந்திகளை பரப்புவதே?

ம்...ம்ம்ம்... நீங்களே வதந்தி என்று சொன்னாலும், தல, பிரகிராசிதான், பிரகிராசிதான்... 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

வசந்திய நம்பி ஏமாற வேண்டாம்🤣. நான் சும்மா கூகிள்ள பார்த்து அடிச்சு விடுறனான்.

இண்டையிலையிருந்து நாங்கள் ஒண்டுக்கை ஒண்டு.. 🤣

Vadivelu Kovai Sarala Comedy Video - Pooviyoor Anbarasu Comedy animated gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தலிவா….நீ பெரிய ஆளு தலிவா ….

உசுப்பேத்தி, உசுப்பேத்தி இந்த சப்பாணி பய கதையையே முடிச்சிட்ட இல்ல🤣.

இனி நீ ஏன் அரசியலுக்க வரப்போறே?🤣

மக்கள் மன்றத்தை, ரசிகர் மன்றமாக மாத்திப்போடார்.... அதுக்காக தான் இன்றய சந்திப்பு...

அடுத்த படத்துக்கும் கையெழுத்து போட்டாச்சு. அண்ணாத்தே ஓடவேணும்...கீர்த்தி சுரேசுடன் நடிக்க போகிறார் என்று கதை... 

கில்லாடி, வியாபாரி.... 80 வயதை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் மனிதர், மக்களின் சினிமா மோகத்தினை காசாக்கி கொண்டு இருக்கிறார். 

ஊடகங்களும், சும்மா கிளப்பி விட்டு, அவர் காசை என்னும் விளம்பரத்துக்கு உதவுகின்றன. 👌

6 minutes ago, குமாரசாமி said:

இண்டையிலையிருந்து நாங்கள் ஒண்டுக்கை ஒண்டு.. 🤣

வரேக்க ஒரு மாதம் லீவு எண்டார், பிறகு, அதெல்லாம் சும்மா எண்டார்... இப்ப, துண்டை உதறி தோளிலை போட்டு விட்டாரே.... என்ன விசயமா இருக்கும்....🤔

தல நம்மளை வைச்சு, பகிடி பண்ணவில்லை தானே....😇

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

இண்டையிலையிருந்து நாங்கள் ஒண்டுக்கை ஒண்டு.. 🤣

Vadivelu Kovai Sarala Comedy Video - Pooviyoor Anbarasu Comedy animated gif

கு.சா வும் கோஷா வும் ஒண்ணு.

இதை அறியாதார் வாயில மண்ணு😎 

36 minutes ago, Nathamuni said:

வரேக்க ஒரு மாதம் லீவு எண்டார், பிறகு, அதெல்லாம் சும்மா எண்டார்... இப்ப, துண்டை உதறி தோளிலை போட்டு விட்டாரே.... என்ன விசயமா இருக்கும்....🤔

தல நம்மளை வைச்சு, பகிடி பண்ணவில்லை தானே....😇

சேச்சே…

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, Nathamuni said:

மக்கள் மன்றத்தை, ரசிகர் மன்றமாக மாத்திப்போடார்.... அதுக்காக தான் இன்றய சந்திப்பு...

அடுத்த படத்துக்கும் கையெழுத்து போட்டாச்சு. அண்ணாத்தே ஓடவேணும்...கீர்த்தி சுரேசுடன் நடிக்க போகிறார் என்று கதை... 

கில்லாடி, வியாபாரி.... 80 வயதை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் மனிதர், மக்களின் சினிமா மோகத்தினை காசாக்கி கொண்டு இருக்கிறார். 

ஊடகங்களும், சும்மா கிளப்பி விட்டு, அவர் காசை என்னும் விளம்பரத்துக்கு உதவுகின்றன. 👌

தமிழ் நாட்டு சனத்தின்ரை தலையிலை எவ்வளவு அரைக்கேலுமோ அவ்வளவுக்கு அரைக்கின்றார்கள். பாவம்.....அறியாமை மக்களை நினைத்து வருத்தப்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

 

Edited by நிழலி
ஒருமையில் எழுதப்பட்ட வரிகள் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி காந் என்பது அவரது படப் பெயர் அல்ல.அவருக்கு மாத்தி வைக்கப்பட்ட பெயர்.அது தான் அவரது சட்டபூர்வமான பெயர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.