Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும்  தலிபான்களின் உண்மையான முகத்திரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  தலிபான்களின் உண்மையான முகத்திரை

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை நோக்கி தலிபான்கள் நகர்ந்து அதிகாரத்திற்கான தனது ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தியுள்ளனர். சில மாவட்டங்களில் தலிபான்கள் பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

தலிபான்களின் இலக்குகள் அனைத்துமே அதன் நம்பிக்கைகள் மற்றும் நலன்களுக்கு விரோதமானவை என்று கருதப்படுகின்றது. 

afghan.jpg

குறிப்பாக பெண்கள் மற்றும் அமெரிக்க, மேற்கத்திய படைகள், மத சிறுபான்மையினர் மற்றும் ஆப்கானிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு உதவிய பொதுமக்கள் என அனைத்து தரப்புகளுமே தலிபான்களின் தற்போதைய இலக்குகலாகியுள்ளன.

ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தானுடனான முக்கிய எல்லைக் கடப்புகளைக் கைப்பற்றிய பின்னர், தலிபான்கள் இப்போது நாட்டின் கணிசமான இடங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். 

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பல முக்கிய இடங்களை கைப்பற்றியுள்ளனர். பல ஊடக அறிக்கைகளின்படி, இந்த பிராந்தியங்களில் பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரம் குறித்து தலிபான்கள் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது. 

இந்த கட்டுப்பாடுகளால் பெண்கள் இனி பள்ளிக்கு செல்ல முடியாது. பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும். ஒரு ஆண் உறவினருடன் இல்லாவிட்டால் அவர்கள் சந்தைக்கு செல்ல முடியாது போன்ற கடுமையான விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்தை பின்பற்றுமாறு தலிபான்கள் ஆப்கானியர்களை கட்டாயப்படுத்திய 2001 க்கு முந்தைய காலங்களுக்கு மீண்டும் திரும்பியுள்ளதனையே தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன. 

பெண்கள் தங்களை தலை முதல் கால் வரை மறைக்கும்படி கட்டாயப்படுத்தினர். ஆப்கானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சுமார் 30வீதமான  அரசு பெண் ஊழியர்கள் தலிபான் ஆட்சியின் போது வீடுகளுக்கு வெளியே வேலை செய்ய அனுமதியில்லை. 

இந்த பிற்போக்கு விதிகள் ஆண்களுக்கும் பொருந்தும். தாடியை வளர்க்கச் சொல்கின்றனர். பால்க் மாகாணத்தில் வசிப்பவர்கள் பலருக்கு  தலிபான்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.

உள்ளூர்வாசிகளுக்கு இந்த கடுமையான விதிகளைப் பின்பற்றும்படி கட்டளையிட்டப்பட்டுள்ளது. தாடியை மொட்டையடிக்கவோ அல்லது ஒழுங்கமைக்கவோ கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தலிபான்கள் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் தனது கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த மாதம் தீவிரவாதிகள் மாவட்டத்திற்குள் நுழைந்தபோது இஸ்லாமிய பிரார்த்தனைகள், தலிபான் சார்பு கோஷங்கள் மற்றும் இசைக்கு பதிலாக அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரங்களை ஒளிபரப்ப பால்க் மாவட்டத்தின் ஒரே வானொலி நிலையமான நவ்பஹரை தலிபான் கட்டாயப்படுத்தியதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

202105mena_afghanistan_women_rights.jpg

உள்ளூர் ஊடக கண்காணிப்புக் குழுக்களின் கருத்துப்படி, தலிபான்களின் கட்டுப்பாடுகள் காரணமாக கிட்டத்தட்ட 20 வானொலி நிலையங்கள் வடக்கு மாகாணங்களில் ஒளிபரப்பப்படுவதை நிறுத்திவிட்டு அவை பிரச்சார ஆதாரங்களாகப் பயன்படுத்துகின்றன. 

இதன் பொருள் என்னவென்றால், வெளிநாட்டு ஊடகங்களின் அணுகல் தலிபான் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில், சர்வதேச சமூகத்திற்கான தகவல் பரிமாற்றத்தில் 'கண்கள் மற்றும் காதுகளாக' உள்ளூர் ஊடகங்கள் வேலை செய்ய இயலாது என்பதாகும். 

இதன் மூலம் உலகின் பிற பகுதிகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றது. இது தலிபான்களின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்களை வெளிப்படுத்துகின்றது.

மனித உரிமைகள் கண்காணிப்பு தரவுகளின் படி, குண்டுஸ் மாகாணத்தில் உள்ள பாக்-இ ஷெர்காட்டில் வசிப்பவர்களை வெளியேறுமாறு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.  

ஆப்கானிய அரசாங்கத்திற்கு கடந்தகால ஆதரவை வழங்கியவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். வீடுகளை  சூறையாடி எரித்துள்ளனர்.  குறிப்பாக வடக்கில், சமீபத்திய மாதங்களில் 270,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமெரிக்க படைகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ள நிலையில் தலிபான்கள் ஹெராத் மாகாணத்தில் ஹசாரா மற்றும் ஷியாக்களை குறிவைத்துள்ளனர். 

சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகம் மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிரான பயங்கரமான அட்டூழியங்களைக் காண்பிக்கும் தொடர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டது. 

22 ஆப்கானிய கமாண்டோக்களை தலிபான்கள் தூக்கிலிட்டதைக் காட்டும் வீடியோவும் வெளியிடப்பட்டது.  இவை அனைத்து பாரிய போர்க்குற்றங்கள் என்பதுடன் மனித உரிமைகளுக்கு சவாலான விடயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/110201

  • Replies 55
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத வியாபாரிகளுக்கு இனி ஏறுமுகம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 06:48, குமாரசாமி said:

ஆயுத வியாபாரிகளுக்கு இனி ஏறுமுகம். 😎

இன்னும் 20 வருசத்திற்கு பின்பு வேறு யாராவது  ஆப்காண் மக்களுக்கு பாடம் எடுக்க  படை எடுப்பார்கள் ...

அபிவிருத்தி என்று சீனாக்காரன் கொள்ளை யடிப்பான்',ஜனநாயக காவலர்கள் என்று மேற்கு கொள்ளையடிக்க நாங்கள்... முடிந்தால் கருத்து சொல்லி கொண்டிருப்போம் 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 06:48, குமாரசாமி said:

ஆயுத வியாபாரிகளுக்கு இனி ஏறுமுகம். 😎

😀அடிப்படை இஸ்லாத்தின் உண்மை முகம்

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 22:48, குமாரசாமி said:

ஆயுத வியாபாரிகளுக்கு இனி ஏறுமுகம். 😎

இனி அவர்களுக்கு  கத்தி  வாளே  போதும்???

கேட்க  எவருமில்லை???😢

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானின் அமெரிக்க படை பின்வாங்கியபின் அங்கு ஏதோ நரகம் பூமியில் உருவாகுவது  போல் ஊடகங்கள் பறையடிக்கின்றன உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது அங்குள்ளவர்கள் வெளியில் வந்து சொன்னால்தான் உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகள் உண்மையில் ஆப்கானுஸ்தானுக்கு உதவி இருந்தால் இன்று மேற்கு நாடுகள் போல் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாட்டுக்கு வந்தபின்னர் பலநூறு ஆப்கான் மக்களுடன் பழகியிருக்கின்றேன்.

அடிப்படையில் மிகவும் மென்மையானவர்கள், நாகரிகமானவர்கள் , பாகிஸ்தான் பங்களாதேஷ்காரர்கள் போல எகத்தாளம் நக்கல் நையாண்டி , மதவெறி போன்றன பெரும்பான்மையான ஆப்கன் மக்களிடம் கிடையாது.

உள்ளூர் அரசியலினால் சுக்குநூறாய் சிதறிபோய்விட்ட ஆப்கானில் உலகமெங்குமிருந்துபோய்  குழுமிய அடிப்படை மதவெறியும் ஈவு இரக்கமும் இல்லாத காட்டுமிராண்டிகளால் அந்தநாடு சுடுகாடாகிவிட்டது.

ஆப்கானிஸ்தான் மக்களென்றாலே தலிபான் அல்கொய்தா போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது,

சில ஆப்கானிஸ்தான் காரர்கள் தாம் ஆப்கனை சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட்டு எம் கண்களை உற்று நோக்குவதையும் மெளனமாவதையும் கவனித்திருக்கிறேன், அடிப்படையில் அந்த மண்ணுக்கு உரித்தானவர்கள் வெளியே சொல்லமுடியாத உள்ளகுமுறல்களுடன் வாழுகின்றார்கள் என தோன்றுகிறது.

2 minutes ago, valavan said:

உண்மை. இங்கிருக்கும் ஆப்கன் மக்களும் பழகுவதற்கு இனியவர்கள். இலங்கையர்கள் என்றால் கொஞ்சம் அதிகமான பாசத்துடன் பழகுவர்.

எனக்கு பிடித்த உணவுகளில் ஒன்று ஆப்கன் கெபாப் (Afghan Kebab) பிக்கரிங் என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆப்கன் உணவு விதியியில் அடிக்கடி வாங்குவது. குடும்பமாக அக் கடையை நடத்துகின்றனர். அக் கடையின் உரிமையாளர் தான் கனடாவுக்கு வந்த காலத்தில் முதல் 15 வருடங்கள் ஈழத் தமிழர் ஒருவரின் உணவு விடுதியில் தான் வேலை பழகி, படிப்படியாக முன்னேறி இன்று ஒரு கடைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளேன் என்று நன்றியுடன் கூறுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானில் நல்ல நில கீழ் தாதுக்கள் இருக்கு அதை எடுக்குமளவிற்கு தாலிபானுக்கு வசதியில்லை, சீனா இனி உதவலாம்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, valavan said:

புலம்பெயர் நாட்டுக்கு வந்தபின்னர் பலநூறு ஆப்கான் மக்களுடன் பழகியிருக்கின்றேன்.

அடிப்படையில் மிகவும் மென்மையானவர்கள், நாகரிகமானவர்கள் , பாகிஸ்தான் பங்களாதேஷ்காரர்கள் போல எகத்தாளம் நக்கல் நையாண்டி , மதவெறி போன்றன பெரும்பான்மையான ஆப்கன் மக்களிடம் கிடையாது.

உள்ளூர் அரசியலினால் சுக்குநூறாய் சிதறிபோய்விட்ட ஆப்கானில் உலகமெங்குமிருந்துபோய்  குழுமிய அடிப்படை மதவெறியும் ஈவு இரக்கமும் இல்லாத காட்டுமிராண்டிகளால் அந்தநாடு சுடுகாடாகிவிட்டது.

ஆப்கானிஸ்தான் மக்களென்றாலே தலிபான் அல்கொய்தா போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது,

சில ஆப்கானிஸ்தான் காரர்கள் தாம் ஆப்கனை சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட்டு எம் கண்களை உற்று நோக்குவதையும் மெளனமாவதையும் கவனித்திருக்கிறேன், அடிப்படையில் அந்த மண்ணுக்கு உரித்தானவர்கள் வெளியே சொல்லமுடியாத உள்ளகுமுறல்களுடன் வாழுகின்றார்கள் என தோன்றுகிறது.

23 hours ago, நிழலி said:

உண்மை. இங்கிருக்கும் ஆப்கன் மக்களும் பழகுவதற்கு இனியவர்கள். இலங்கையர்கள் என்றால் கொஞ்சம் அதிகமான பாசத்துடன் பழகுவர்.

எனக்கு பிடித்த உணவுகளில் ஒன்று ஆப்கன் கெபாப் (Afghan Kebab) பிக்கரிங் என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆப்கன் உணவு விதியியில் அடிக்கடி வாங்குவது. குடும்பமாக அக் கடையை நடத்துகின்றனர். அக் கடையின் உரிமையாளர் தான் கனடாவுக்கு வந்த காலத்தில் முதல் 15 வருடங்கள் ஈழத் தமிழர் ஒருவரின் உணவு விடுதியில் தான் வேலை பழகி, படிப்படியாக முன்னேறி இன்று ஒரு கடைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளேன் என்று நன்றியுடன் கூறுவார்.

காலீது ஹுசேய்னியின் The kite runner, a thousand splendid suns நாவல்களை படித்திருக்கிறீர்களா?

அற்புதமான, அழகான ஒரு ரோஜாவை போல் இருந்த நாட்டை அந்நிய சக்திகளும், அடிப்படைவாதிகளும் எப்படி கசக்கி பிழிந்தார்கள் என்பதை மிக தத் ரூபமாக சொல்லி இருப்பார். 

ஆப்கானிகளின் பண்பில் எனக்கு பிடித்தது அவர்களின் விரும்தோம்பல்தான். விருந்துக்கு அழைத்து போகாவிட்டால், கடும் சினம் கொள்வார்கள்.  நன்றி மறவாமையும், நம்பினோரை கைவிடாமையும் வெளிநாட்டில் வந்தும் கடைப்பிடிப்பார்கள்.

ஆனால் குல பெருமை, அதீத சுய கெளரவம் பார்ப்பார்கள். இஸ்லாத்தின் மீது கண்மூடித்தனமான கீழ்படிதலும் உள்ளவர்கள். இந்த குணங்களால் அடிப்படைவாத சகதிக்குள் இலகுவில் சிக்கி கொள்கிறார்கள்.

எனக்கு பிடித்த ஆப்கானிய உணவுகள், பிலவு ரைஸ், Lamb Charsi Karahi, Peshawari Naan. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க யுனியில் இருந்தப்போ தலிபான் போராளி ஒருவரின் சகோதரரும் அதே யுனியில் படித்தார். அவர் பாகிஸ்தானியர். 

தலிபான்கள் வெறுமனே ஆப்கான் பின்னணி மட்டும் கொண்டவர்கள் அல்ல. பாகிஸ்தான்.. ஈரான் போன்ற நாடுகளின் பின்னணியும் கொண்டவர்கள்.

சோவியத் ஆக்கிரமிப்பில் ஆப்கான் இருந்த போது.. தலிபான்களை பாகிஸ்தான் ஆதரவோடு உருவாக்கியது அமெரிக்கா.

பின் சோவியத் படைகளின் வெளியேற்றத்தோடு அமெரிக்க ஆதிக்கம் உருவெடுக்க.. தலிபான்களின் எதிர் முனைக்கு போனது பாகிஸ்தான். ஈரான் ஆதரவு வழங்கியது.

இங்கு உலக வல்லாதிக்கங்களோடு.. பிராந்திய அரசுகளின் போட்டா போட்டிக்கும் அங்கு கொட்டிக்கிடக்கும் வளங்களுக்குமான போட்டியில் அப்பாவி ஆப்கன் மக்கள் தங்கள் சொந்த பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளிக்க முடியாது.. சனநாயகம்.. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற இந்த இரண்டு கோர ஆக்கிரமிப்புப் பிடிகளுக்குள்ளும் கிடந்து மடிகிறார்கள்.

குறிப்பாக அந்த போராளியின் சகோதரரின் கருத்துப்படி.. தலிபான்களிலும் மென்போக்காளர்கள் உள்ளனர். அவர்களின் நோக்கம்.. ஒரு இஸ்லாமிய கலாசாரத்தை மதிக்கக் கூடிய சமூகத்தை கட்டி எழுப்புவதுதான். அதற்கு இடமளிக்காததால்.. அவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத்துக்குள் உள்ளிளுக்கப்பட்டு அதன் ஆதிக்கத்துக்கு இலக்காகி உள்ளனர். மற்றும்படி தலிபான்கள் மேற்குலகம் சித்தரிப்பது போன்ற கொடும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கொண்டு ஆட்சி செய்ய விரும்பும் அமைப்பு அல்ல என்று விளக்கம் சொல்லப்பட்டது. 

எப்படி எமது விடுதலைப் போராட்டம் சொறீலங்கா அரச பயங்கரவாதத்தின் பொய் பிரச்சாரம் மூலம் பயங்கரவாதமாக்கப்பட்டதோ.. அதை மேற்குலகும் தன் நலன்சார்ந்து ஆதரித்து நின்றதோ.. அதே நிலை தான்..!

ஆனால் ஆப்கானில் தலிபான்களின் எழுச்சி.. தெற்காசிய அரச பயங்கரவாதிகளுக்கு குறிப்பாக.. ஹிந்தியா.. பாகிஸ்தான்.. சொறீலங்காவுக்கு நிச்சயம் நிம்மதியாக இருக்காது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான் ஆக்களின்ரை சிவன் கோவில்  ஒன்று இருக்கின்றது.நான் அடிக்கடி போய் இருக்கின்றேன். அவர்களுடன் பழகியும் இருக்கின்றேன். நல்ல மனிதர்கள்.பண்பானவர்கள்.
தலிபான்களை வைத்து ஆப்கானிஸ்தான் மக்களை எடை போட முடியாது.
சரித்திரங்களை புரட்டி பார்த்தால் ஆப்கானிஸ்தான் முஸ்லீம் நாடு இல்லைத்தானே....:)

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2021 at 08:40, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான் ஆக்களின்ரை சிவன் கோவில்  ஒன்று இருக்கின்றது.நான் அடிக்கடி போய் இருக்கின்றேன். அவர்களுடன் பழகியும் இருக்கின்றேன். நல்ல மனிதர்கள்.பண்பானவர்கள்.
தலிபான்களை வைத்து ஆப்கானிஸ்தான் மக்களை எடை போட முடியாது.
சரித்திரங்களை புரட்டி பார்த்தால் ஆப்கானிஸ்தான் முஸ்லீம் நாடு இல்லைத்தானே....:)

சிவன் கோவிலா...முதல் தடவையா கேள்விப்படுகிறேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, putthan said:

சிவன் கோவிலா...முதல் தடவையா கேள்விப்படுகிறேன்...

நான் என்ன பொய்யாயாயாயா சொல்லுறன்? 😁

https://youtu.be/OpTfeC3-yTc

https://youtu.be/NhIFFDCvNSg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் என்ன பொய்யாயாயாயா சொல்லுறன்? 😁

https://youtu.be/OpTfeC3-yTc

https://youtu.be/NhIFFDCvNSg

On 31/7/2021 at 23:40, குமாரசாமி said:

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தான் ஆக்களின்ரை சிவன் கோவில்  ஒன்று இருக்கின்றது.நான் அடிக்கடி போய் இருக்கின்றேன். அவர்களுடன் பழகியும் இருக்கின்றேன். நல்ல மனிதர்கள்.பண்பானவர்கள்.
தலிபான்களை வைத்து ஆப்கானிஸ்தான் மக்களை எடை போட முடியாது.
சரித்திரங்களை புரட்டி பார்த்தால் ஆப்கானிஸ்தான் முஸ்லீம் நாடு இல்லைத்தானே....:)

உண்மைதான். ஆப்கானிகள் என்றதும் எமது நினைவுக்கு வருவது பஹ்தோ இன மக்கள் மட்டும்தான். ஆனால் தஜீக்கிகள், ஹசராக்கள், சீக்கியர், மிக குறைந்தளவு இந்துக்கள், யூதர் கூட வாழ்ந்த நாடு அது. இப்போ மதச்சிறுபான்மையான இந்து, சீக்கிய, யூதர்களை கிட்டதட்ட முற்றாக வெளியேற்றி விட்டார்கள்.

ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் என்று ஒரு மாகாணம் உண்டு. இதன் முந்தைய பெயர் kafiristan. காபிர் என்றால் நம்பிக்கை அற்றவன் (முஸ்லிமுக்கு எதிர்பதம்). இந்த பகுதிகள் மக்கள்தான் கடைசியாக இஸ்லாத்தை ஏற்றவர்கள். ஆகவே அவர்கள் மதம் மாறும் வரை இந்த பெயர்.

அதே போல் மஹா அலக்சாண்டரின் படைகளின் மரபணுவும், தைமூர், ஜின்சிஸ்கான் போன்ற மங்கோலியர்களின் படைகளின் மரபணுவும் மிகவும் செறிவாக இன்றைய ஆப்கானிகளில் உள்ளது.

பட்டுப்பாதை, அதற்கு முன்பு கூட கலாச்சரங்களின் கலவை புள்ளியாக இப்போ ஆங்கிலத்தில் cosmopolitan என்போமே? அப்படிபட்ட ஒரு நகரமாக இருந்தது காபூல். 

மொகாலய சாம்ராஜ்யத்தின் ஸ்தாபகர் பாபர் கூட உஸ்பெக்கிஸ்தானை சேர்ந்தவர் (தைமூரினதும், ஜின்சிஸ்கானினதும் வாரிசு இவர்) என்ற போதிலும் காபூலினை கைப்பற்றி அதன் ராஜாவாகி, அதன்பின் காபூலின் ராஜாவாகவே இந்தியா வருகிறார்.

பாபர் ஆக்ராவில் இறந்தாலும் காபூலிலேதான் புதைத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல் சகுனியியும், காந்தாரியும் கந்தஹாரில் இருந்துதானே வந்ததாக சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2021 at 00:40, குமாரசாமி said:

சரித்திரங்களை புரட்டி பார்த்தால் ஆப்கானிஸ்தான் முஸ்லீம் நாடு இல்லைத்தானே....:)

உண்மை.
சீனாவில் உள்ள உய்குர் மக்களும் முன்பு முஸ்லிம் இல்லை.முஸ்லிம்  மதத்தால் ஆக்கிரமிக்கபட்டவர்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே போல் சகுனியியும், காந்தாரியும் கந்தஹாரில் இருந்துதானே வந்ததாக சொல்லப்படுகிறது.

காந்தார நாடு என்பது இன்றைய கந்தஹார்
அந்த நாட்டின் இளவரசியின் பெயர் காந்தாரி
என்று மருவியது.
கந்தஹாரி   என்பதே சரியான பெயர்

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்கள் முஸ்லீம் அடிப்படைவாதிகள் இல்லையென்று நிறுவுவது கடிணமானது. அவர்களின் செயற்பாடுகள் அவர்களின் அடிப்படைவாதிகள் தான் என்றே இதுவரை நிரூபித்து வருகின்றன. மற்றைய மதங்களையும், அவற்றின் புராதனச் சின்னங்களை அழிப்பதையும் மத அடிப்படைவாதம் என்றே கருதப்படவேண்டும். அத்துடன், தனது மக்களையே மிகவும் பிற்போக்குத்தனமான வாழ்வுக்குள் இழுத்துவைத்துக்கொண்டும், பெண்களை மிகவும் இழிவாக நடத்திக்கொண்டும் வரும் ஒரு அமைப்பு நிச்சயமாக அடிப்படைவாதிகளேயன்றி வேறில்லை.

இன்னொரு விடயம். இன்றுவரை தலிபான்களுக்கும் முஜஹிதீன்களுக்கும், ஐஸிச்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை உணராமல் எம்மில் பலர் எழுதுவதைப் பார்க்கமுடிகிறது.

தலிபான்களை அமெரிக்கர்கள் உருவாக்கவில்லை. அவர்களை உருவாக்கியது பாக்கிஸ்த்தானிய ராணுவ அரசு. 

சோவியத் ஆக்கிரமிப்பின்போது அதற்கெதிராகப் போராடியவர்கள் முஜஹிதீன்கள். இவர்களுக்கே அமெரிக்கா உதவியது. முஜஹிதீன்கள்கூட அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டவர்கள் இல்லை. கொடுங்கோலன் நஜிபுள்ளாவின் அரசுக்கெதிரான மக்களின் எதிர்ப்புப் படையே முஜஹிதீன்கள். ரஷ்ஷியா ஆப்கானிஸ்த்தானுக்குள் சென்றவுடம், அமெரிக்கா அவர்களுக்கு ஆப்படிக்க முஜஹிதீன்களுக்கு பாக்கிஸ்த்தான் மூலம் உதவியது. 

ரஷ்ஷியர்கள் வெளியேறியபின்னர் முஜஹிதீன்கள் தமக்குள் பிரிந்து அடிபட்டு, நாட்டை துண்டு துண்டாக ஆட்சிசெய்தபோது பாக்கிஸ்த்தானிய ராணுவத்தால் பாக்கிஸ்த்தானில் தங்கியிருந்த ஆப்கானிய அகதிகளில் இருந்து  இஸ்லாமிய மதரஸாக்களில் பயிற்றப்பட்டவர்களே தலிபான்கள். சில முன்னாள் முஜஹிதீன்களையும் சேர்த்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அடிப்படைவாத அமைப்பு ஆப்கானுக்குள் நுழைது தமக்குள் அடிபட்டுக் கொண்டிருந்த முஜஹிதீன்களை வீழ்த்தி நாட்டினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

ஐஸிஸ்கள், முன்னாள் ஈராக்கிய ராணுவ வீரர்களையும், இஸ்லாமிய அடிப்படைவாத மதகுருக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டது. இதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை. ஆனால், இது உருவாகும்போது அமெரிக்கா எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்ததென்பது உண்மை. அதேபோல அமெரிக்காவினால் ஈராக்கியப் படைகளுக்குக் கொடுக்கப்பட்ட பல கனரக ஆயுதங்கள் மோதல்களின்போது ஐஸிஸ்களினால் கைப்பற்றப்பட்டன என்பதும் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நான் என்ன பொய்யாயாயாயா சொல்லுறன்? 😁

https://youtu.be/OpTfeC3-yTc

https://youtu.be/NhIFFDCvNSg

பிராமணர்கள் பூஜை செய்ய போய் இருந்த இந்துக்களின் நம்பிக்கையையும்  இல்லாமல் செய்திருப்பார்கள்....

பின்லாடனின் வாரிசுகள் இந்த கோவிலில் இல்லாத காரணத்தால் இதை ஆப்கான் சைவக்கோவிலாக என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களிலும் மென்போக்காளர்கள் உள்ளனர் என்றும் சொல்கின்றனர் 😂 மென்போக்காளர்களின் நோக்கம் எல்லா ஆண்களும் முஸ்லிம் மத கட்டளைபடி  தாடி வளர்க்க வேண்டும். சேவ் பண்ண கூடாது. பெண்கள் எல்லோரும் முகத்திரை அணிய வேண்டும்.சவுக்கால் மட்டும் அடிப்பார்களாம். தலையை வெட்ட மாட்டார்களாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

தலிபான்களிலும் மென்போக்காளர்கள் உள்ளனர் என்றும் சொல்கின்றனர் 😂 மென்போக்காளர்களின் நோக்கம் எல்லா ஆண்களும் முஸ்லிம் மத கட்டளைபடி  தாடி வளர்க்க வேண்டும். சேவ் பண்ண கூடாது. பெண்கள் எல்லோரும் முகத்திரை அணிய வேண்டும்.சவுக்கால் மட்டும் அடிப்பார்களாம். தலையை வெட்ட மாட்டார்களாம்🤣

தலிபான்களில்… இப்படியான, நல்லவர்களும் இருக்கிறார்கள் என அறிந்து ஆச்சரியமடைந்தேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தலிபான்களில்… இப்படியான, நல்லவர்களும்

அதற்க்கு காரணம் அவர்கள் கடைப்பிடிக்கும் அந்த அமைதியான கொள்கை தான் அவர்களை நல்லவர்களாக, மென்மையானவர்களாக மாற்றியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

இன்னொரு விடயம். இன்றுவரை தலிபான்களுக்கும் முஜஹிதீன்களுக்கும், ஐஸிச்களுக்கும் இடையிலான வேறுபாட்டினை உணராமல் எம்மில் பலர் எழுதுவதைப் பார்க்கமுடிகிறது.

நான் அப்படி நினைகவில்லை ரஞ்சித். யாழில் முன்னரும் முஜாகிதீன், ஹிஸ்பி இஸ்லாமி, நோர்தேன் அலையன்ஸ், தலிபான்கள் பற்றி எல்லாம் பலர் சிலாகித்துள்ளார்கள்.

நீங்கள் எழுதிய மிச்சத்தில் அதிக முரண்பாடில்லை.

தாலிப் என்றால் (இஸ்லாத்தின்) மாணவன் என்பதே அர்த்தம். முன்னாள் முஜகிதீன்கள் ரஸ்ய வெளியேற்றத்தின் பின் warlords ஆக மாறி செய்த கொடுமைகளை எதிர்கொள்ள, மக்கள் மத்தியில் இருந்து எழுந்த மறுவினையே தாலிப்கள். ஆனால் இவர்களின் ஆரம்பம் முதலே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ இவர்களை வழி நடத்தியது.

ஆனால் இவர்கள் எப்போதும் பாகிஸ்தானின் நண்பர்களும் இல்லை. பின்னாளில் சுவாட் சமவெளியில் “பாகிஸ்தானி தாலிபான்” உருவாகி - பாகிஸ்தான் ஆமிக்கு தண்ணி காட்டியது நினைவிருக்கலாம்.

அதே போல் இவர்களுக்கும் அல்கொய்தா, ஐ எஸ் க்கும் தொடர்புகள் பலமானவை. 2001 இல் முல்லா ஓமரையும் விட அல்லது அவருக்கு நிகராக பின்லேடனும் அவரின் அரபி சகபாடிகளும் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தினர்.

அதே போல் - நிச்சயம் எந்தவொரு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கும் தலிபான் அடைக்கலம் கொடுத்தே ஆகும்.

இங்கேதான் உகிர் முஸ்லீம்களை வைத்து, சீனாவை உள்ளே இழுத்து விட தயாராகிறது அமெரிக்கா. 

உகிர் முஸ்லீம்கள் மத்தியில் ஒரு அமைப்பை அமெரிக்காவே உருவாக்கும். பின் அவர்களை ஆப்கானிஸ்தான் நோக்கி தள்ளும்.

உகிர் முஸ்லீம்களை கட்டுபடுத்துமாறு சீனா கேட்டாலும், அதை செய்யும் வலு இருந்தும் கொள்கை காரணுங்களுக்கா தலிபான்கள் செய்ய மாட்டார்கள்.

அப்படி ஒரு தலிபான் கமாண்டர் செய்ய ஒத்து கொண்டாலும் - இன்னொருவரை அமெரிக்கா “முஸ்லீமை காட்டி கொடுப்பதா?” என்று களமிறக்கும். 

முடிவில் வேறு வழியில்லாமல் சீனா இறங்க வேண்டி வரலாம். 

ஆனால் சீனாவுக்கும் இந்த கேம் தெரியாமல் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.