Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்-

 
நியுசிலாந்தில் வணிக வளாகத்தில் தாக்குதலை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியுசிலாந்தில் பத்துவருடத்திற்கு மேல் வசித்துவந்த இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
lynmall-300x169.jpg
நியுசிலாந்தில் ஆக்லாந்தில் வணிவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்தியவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
லைன்மோலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
new-ze-in-300x169.jpg
கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்றநிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்து காயத்துடன் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடைப்பதை நேரில் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
new-ze-in2-300x169.jpg
வணிகவளாகத்திலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியே ஒடுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வணிகவளாகத்திற்குள் நுழைந்த நபர் பலரை காயப்படு;த்தினார் பொலிஸார் அவரை கண்டுபிடித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆறுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மூவரின் நிலைமை ஆபத்தானதாக காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

https://thinakkural.lk/article/134990

 

  • Replies 71
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைச் சேர்ந்த ஐஸிஸ் பயங்கரவாதி நியுசிலாந்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்

The exterior of Lynnmall in New Lynn on November 13, 2014 in Auckland, New Zealand.

இலங்கையினைச் சேர்ந்த முஸ்லீம் அடிப்படைவாதப் பயங்கரவாதியொருவன் நியுசிலாந்தில் இன்று நடத்திய தாக்குதலில் இதுவரையில் 9 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

கத்திகளைக்கொண்டு அவன் நடத்திய தாக்குதலில் பொருட்களைக் கொள்வனவு செய்யவந்த அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

அருகிலிருந்த பொலீஸாரை மக்கள் உஷார்படுத்தியடைதையடுத்து இந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

இவன் பொலீஸாரினால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், பொலீஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இத்தாக்குதலினை நடத்தியிருக்கிறான். 

கொரோணா கால கஷ்ட்டங்களில் மக்களும் நாடும் மூள்கியிருக்க, இத்தருணத்தினைத் தனது பயங்கவாதத் தாக்குதலுக்கு இவன் தேர்ந்தெடுத்திருப்பது, இந்த அடிப்படைவாதிகளின் குரூரத்தையே காட்டுகிறது.

https://www.bbc.com/news/world-asia-58405213

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்துப் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டின் இத்தாக்குதல் பற்றிக் கூறுகையில் , "பொலீஸாரினால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த ஐஸிஸ் அடிப்படைவாதி ஒருவனால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இது" என்று கூறினார். 

இப்பயங்கரவாதியின் பெயரினை வெளியிட மறுத்த அதிகாரிகள், இவன் ஐஸிஸ் அடிப்படைவாதப் பயங்கரவாதிகளைத் தீவிரமாக ஆதரித்து வந்ததாகவும், அவர்களது பிரச்சார உத்திகளால் கவரப்பட்டு பயங்கரவாத தாக்குதலினை நடத்தியதாகவும் கூறுகிறார்கள்.

பிரதமரின் கருத்துப்படி, இத்தாக்குதல் தொடங்கி ஒரு நிமிட நேரத்திலேயே இவன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். 

"இன்று நடத்தப்பட்டிருப்பது மிகவும் அநியாயமான ஒரு நடவடிக்கை. மக்களை வெறுக்கும் ஒரு செயல், நிச்சயம் தவறானது" என்று பிரதமர் மேலும் கூறினார்.

2011 இல் நியுசிலாந்திற்கு வந்துசேர்ந்த இந்த அடிப்படைவாதி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பாதுகாப்பிற்கு அச்சுருத்தலான மாறியதுடன், அன்றிலிருந்து இவன் தொடர்ச்சியாக பொலீஸாரினால் கண்காணிக்கப்பட்டு வந்ததாகப் பிரதம்ர் மேலும் தெரிவித்தார்.

இவன் தொடர்ச்சியாக பொலீஸாரின் கடுமையான கண்காணிப்பின் கீழ் வாழ்ந்துவந்தாலும், இந்தத் தாக்குதல் எப்படிச் சாத்தியமானது என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். இவனால் 9 பேர் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயப்படும்வரை ஏன் பொலீஸார் இவனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

"ஒருவனை நீங்கள் 24 மணித்தியாலமும் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கிறீர்கள் என்றால், அவனை கைதுசெய்து அருகிலிருந்து கண்காணித்தால் ஒழிய அவனின் அனைத்து நடவடிக்கைகளையும் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், எமது கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபடியினால்த்தான் எம்மால் 9 பேருடன் அவனது தாக்குதலினை முறியடிக்க முடிந்தது" என்று பொலீஸ் கமிஷனர் அன்ட்ரு கொஸ்ட்டர் கூறினார்.

"மக்கள் எல்லாப்புறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். எங்கும் கூக்குரலும், அவல ஓலங்களும். ஒரு வயோதிபர் கத்திக் குத்துக் காயத்துடன் தரையில் போராடிக்கொன்டிருந்ததைப் பார்த்தேன்' என்று ஒரு பெண் கூறினார்.

லின் மோல் எனப்படும் பல்பொருள அங்காடியொன்றிலிருந்து மக்கள் சிதறியோடும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த அங்காடியை நோக்கிக் குறைந்தது 6 நோயாளர் காவு வாகனங்களும், வைத்திய உதவியாளர் வாகனங்களும் சென்றதாக  மக்கள் கூறுகின்றனர்.

காயமடைந்தவர்களில் 6 பேரை வைத்தியசாலைக் கொண்டுசென்றிருப்பதாகவும், அவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்னும் இருவர் கடுமையாகக் காயமடைந்தாலும், உயிர் ஆபத்து இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி மார்க்க பேர்வழிகள் ஆரம்பிச்சுட்டானுவ ,பாவம் பிரதமர்  முக்காடு போட்டு முஸ்லிம்களுடன் குந்தியிருந்தும் இரக்கம் காட்டாமல் அவனுங்க வேலையை காட்டிவிட்டானுவ  

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... என்ன விசயமெண்டா.....

நேற்று திண்னையில் சொன்னேன்...... ரிசாட் .... குடும்பமே உள்ள.... யாருக்கு போன் பண்ணி இருப்பார்.... ஒன்று தூள் கோஸ்டி அல்லது ஜிகாதி கோஸ்டி.....

சாளரத்தினூடு வீசிய போனை எடுத்து ஆராய வேண்டும்.

ஜிகாதி எண்ணம் வந்தால்.... மனம்... மூர்க்கமாகும், வக்கிரமாகும்..... வழமைக்கு மீளாது.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவரை பிடித்து நாடு கடத்தாமல், கடைசிவரை அவரை பத்திரமா பாதுகாத்து நியூசிலாந்து மக்களுக்குகத்திகுத்து வாங்கி கொடுத்திருக்கு காவல்துறை.

அகதியாக தஞ்சமடைந்த அவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லாத தமிழர்கள் உட்பட்ட பிற இனங்களை குழந்தைகள் குடும்பம் என்றும் பார்க்காமல் கதற கதற பிடித்து நாடு கடத்தும் அரசுகள், மத அடிப்படை இஸ்லாமிய பயங்கரவாதிகளை மிகவும் மென்மையாக கையாள்கிறது.

ஒருவேளை அவர்களுக்கு செய்த பாவம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நியூசிலாந்து மக்களை சூழ்கிறதோ என்னமோ.

காயமடைந்த அப்பாவி நியூசிலாந்து மக்கள் குணமடைய பிரார்த்தனைகள்.

அப்படியே இன்னும் சில லட்சம் சிரியா மற்றும் ஐஎஸ் ஆதரவாளர்களை பாவம் பார்த்து பிளேன் பிளேனா கொண்டுவந்து உங்கள் நாட்டில் இறக்குங்கள் நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரதாக்குதல் நடத்தியவரை பொலிஸ் முதலே கைதசெய்ய விரும்பினாலும் பிரதமர்  அனுமதித்திருப்பாரோ  தெரியவில்லை.:rolleyes:
இறந்த பயங்கரவாதியின் இறுதி கிரிகையில் யசிந்தா ஆர்டென் புர்க்காவுடன் கலந்து கொள்ளமாட்டார் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிக்கப் பட்டவரே தாக்குதல் நடாத்த முடியுமெனில் நியூசிலாந்தின் பாதுகாப்பை என்னவென்று சொல்வது.  ஜெசிந்தா  மடம் கொரோனாவுக்கு கொடுத்த பாதுகாப்பு பயங்கரவாத்துக்கு கொடுக்கவில்லை. மசூதி தாக்குதலோடு பாடம் படித்து இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

3 hours ago, வாலி said:

இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.

நாட்டின் பாதுகாப்பு,பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் விட வாக்கு வங்கி முக்கியம் ருடோவுக்கும் லிபரலுக்கும். தாம் வகை தொகையாக குடியேறவும் ஒன்றுக்கும் 10 பிள்ளைகளை பெத்து அரச செலவில் வளர்க்கவும் இஸ்லாமியர்களில் 90 வீதமானோர் லிபரலுக்குத்தான் வாக்கு போடுவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

இவர்தான் ஆளாம்.....டிவிட்டர்ல வந்தது..... மூலம் இணைக்கேலாது. ஏனெண்டால் பின்னோட்டங்கள் அவ்வளவும் செந்தமிழ்

இலங்கையை சேர்ந்த ISIS தீவிரவாதி (A/L 2008 Batch) ( பச்சை சங்கி) நியூசிலாந்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட 60 வினாடிகளுக்குள் சுட்டுகொல்லபட்டன். 5 வருடமாக பொலிஸ் ரேடாரில் இருந்த தாலிபான் isis தீவிரவாதி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 
 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அதென்ன இலங்கையர்??

அவர் ஒரு முசுலிம்

அவர்களுக்கென்று ஒரு பண்பு நாடு கொள்கை? உண்டு.

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

முஸ்லீமும்  சிங்களவனும் வெளிநாடுகளில் குற்றம் செய்தால் இலங்கையர் அதே வடகிழக்கு தமிழன் மலையக தமிழன் செய்தால் இலங்கைத்தமிழன் என்ற சொற்பதம் உபயோகிப்பினம் .இதைச்செய்வது சிங்களவன் அல்ல செத்த வீட்டு செய்தி சொல்லும் இணையம் தமிழ் பிபிசி போன்றவை .

3 hours ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 
 

இந்த உலகத்திலே சொந்த தாய் மொழி மீது வன்மமும் குரோதமும் கொண்ட தமிழ் மொழி பேசும் முஸ்லீம் என்று போட்டு கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

 

1 hour ago, putthan said:

இதை ஒரு யாழ்ப்பாண தமிழன் குடும்ப பிரச்சனை காரணமாக செய்திருந்தால் .....

தலையங்கம் வேறு மாதிரி வந்திருக்கும் ...."யாழ்ப்பாண தமிழன்  கொலையாளி"
பக்கம்பக்கமாக எழுதியிருப்பார்கள் முன்னாள் புரட்சிவாதிகள்

 உலகளவில் இன்றும் ஈழத்தமிழர் என்றால் கொலையாளிகள் என்றுதான் முத்திரை குத்தி வைத்திருக்கின்றார்கள். இது எனக்கு நடந்த சொந்த அனுபவம். சென்ற புதன்கிழமை 20 பேர் கூடிய ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன்.

ஜேர்மனியர்கள் பெரும்பான்மையான ஒன்று கூடல் அது.
அங்கே இனவெறி சம்பந்தமாக ஒரு உரையாடலும் இடம்பெற்றது..அங்கேதான் மேற்கூறிய கொலையாளிகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்கள். நான் முடிந்தவரை எம்மை பற்றி விளங்கப்படுத்தினேன். இருந்தாலும் அந்த திரையை கிழிப்பது கடினமாகவே இருந்தது. புலம்பெயர் தமிழர்களாகிய நாம் கிணற்று தவளையாகி விட்டோமோ என்றொரு விசனமும் என் மனதுக்குள் எழுந்தது.

 எமக்குள் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த உற்சாகம் இல்லாமல் போய் விட்டதை உணர்கின்றேன். எதிரிகள் எமது தொய்வை நன்றாகவே பயன்படுத்தி விட்டார்கள். எதிரிகள் என நான்
 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

இந்த உலகத்திலே சொந்த தாய் மொழி மீது வன்மமும் குரோதமும் கொண்ட தமிழ் மொழி பேசும் முஸ்லீம் என்று போட்டு கொள்ளுங்கள் .

ஏண்ட உம்மாட வாப்பா அவங்கட உம்மாட மொழி அரபி இல்லியா?👀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

தமிழ்  பேசும் முஸ்லீம் என்று போட்டால் சந்தோசமா அண்ணேய் 

 இன்று சிலோன் முஸ்லீம் யாரவது நான் தமிழன் என்று சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றீர்களா?
ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக ஏதாவது கூட்டம் நடக்குது எண்டால் மட்டும்  தங்களுக்கும் ஒரு அலகு, சுழகு வேணுமெண்டு தொப்பியோட குந்திடுவாங்க....

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த உற்சாகம் இல்லாமல் போய் விட்டதை உணர்கின்றேன். எதிரிகள் எமது தொய்வை நன்றாகவே பயன்படுத்தி விட்டார்கள். எதிரிகள் என நான்
 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்

கனடாவில் இது 100/100 வீத உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

நாட்டின் பாதுகாப்பு,பொருளாதாரம் போன்ற எல்லாவற்றையும் விட வாக்கு வங்கி முக்கியம் ருடோவுக்கும் லிபரலுக்கும். தாம் வகை தொகையாக குடியேறவும் ஒன்றுக்கும் 10 பிள்ளைகளை பெத்து அரச செலவில் வளர்க்கவும் இஸ்லாமியர்களில் 90 வீதமானோர் லிபரலுக்குத்தான் வாக்கு போடுவர். 

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:


 சொல்ல வந்தது 10 வீதம் சிங்கள இனவாதிகள். 90 வீதம் நமது தமிழர்கள்.

 

அதிலும் முன்னாள் புரட்சிவாகள் அதி தீவீரம் .....சீனாக்காரன் சிறிலங்காவை லவ் பண்ணுவதிலும் பார்க்க இவையளின் லவ் தாங்க முடியவில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

உங்கள் கருத்து திரிக்கு சம்பந்தமில்லாத கருத்து .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியை சேர்ந்தவரே ஐ.எஸ்.ஐ.எஸ். இனால் ஈர்க்கப்பட்டு நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவர்!

நியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பான திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்.சம்சுதீன் அதில் அல் அஸ்கார் கவுறடி வீதி,காத்தான்குடி – 01, சேர்ந்தவரே இவ்வாறு தாக்குதலைமேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 7 வயதில் வெளிநாடு சென்றுள்ளார்.
4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார். என்பது தெரியவந்துள்ளது.

ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில்  வசிக்கின்றனர்.குறித்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன தொடர்புடையவர் என்று நியூசிலாந்து அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


https://www.meenagam.com/காத்தான்குடியை-சேர்ந்தவ/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.