Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே புள்ளிவிபரம் பார்த்தேன். அதன் அடிப்படையில் 

பெற்றோர் நோர்வே நாட்டினராக உள்ள குடிமக்கள் கிட்டத்தட்ட 80%

நோர்வேக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் கிட்டத்தட்ட 20%.

இதில் வாக்குரிமை உடைவர்கள் கிட்டத்தட்ட 65%

இப்படி குடிபெயர்ந்து நோர்வே வந்தவர்களில் வெஸ்ட்டேர்ன் பக்கம் இருந்து வராதவர்கள் அதாவது  பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் 50%.

நோர்வே புள்ளிவிபரத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்வாக்குகள் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் வீதம் சிறிய அளவே ஆகும். 

இந்த பெண்மணி ஏற்கனவே துணை மேயராக பணியாற்றி உள்ளார். பலவித அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. நீண்ட அரசியல் எதிர்காலம் இவருக்கு உள்ளது. இவரது அரசியல் கருத்து தேர்தலின் பின் வந்த மாற்றமாக தெரியவில்லை. டெய்லி மிரருக்கு 2019இல் வழங்கிய செவ்வியின் பிரதிபலிப்பாகவே மேற்கண்ட செவ்வி உள்ளது. 

இளம் சமுதாயம் தெளிவாகவே உள்ளது. இந்த பெண்மணியை பந்தய குதிரையாக பயன்படுத்த நினைக்கும் அதிக அறிவுள்ள பெரியவர்கள் தாங்கள் தேர்தலில் நின்று பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கலாம்.

கனடாவின் முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போல் இவர் எதிர்காலத்தில் ஒதுங்க போவது இல்லை. 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • Replies 53
  • Views 3.7k
  • Created
  • Last Reply
27 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நோர்வே புள்ளிவிபரம் பார்த்தேன். அதன் அடிப்படையில் 

பெற்றோர் நோர்வே நாட்டினராக உள்ள குடிமக்கள் கிட்டத்தட்ட 80%

நோர்வேக்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் கிட்டத்தட்ட 20%.

இதில் வாக்குரிமை உடைவர்கள் கிட்டத்தட்ட 65%

இப்படி குடிபெயர்ந்து நோர்வே வந்தவர்களில் வெஸ்ட்டேர்ன் பக்கம் இருந்து வராதவர்கள் அதாவது  பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் 50%.

நோர்வே புள்ளிவிபரத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்வாக்குகள் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் வீதம் சிறிய அளவே ஆகும். 

இந்த பெண்மணி ஏற்கனவே துணை மேயராக பணியாற்றி உள்ளார். பலவித அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. நீண்ட அரசியல் எதிர்காலம் இவருக்கு உள்ளது. இவரது அரசியல் கருத்து தேர்தலின் பின் வந்த மாற்றமாக தெரியவில்லை. டெய்லி மிரருக்கு 2019இல் வழங்கிய செவ்வியின் பிரதிபலிப்பாகவே மேற்கண்ட செவ்வி உள்ளது. 

இளம் சமுதாயம் தெளிவாகவே உள்ளது. இந்த பெண்மணியை பந்தய குதிரையாக பயன்படுத்த நினைக்கும் அதிக அறிவுள்ள பெரியவர்கள் தாங்கள் தேர்தலில் நின்று பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கலாம்.

கனடாவின் முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் போல் இவர் எதிர்காலத்தில் ஒதுங்க போவது இல்லை. 

இவர் நோர்விஜூய அரசியல் பேசவில்லை , இங்கே அது பற்றி எவரும் கருத்துத் கூறவில்லை. இவர் தமிழர் அரசியல் பற்றி நோர்வே சார்பாகப் பேசுகிறார், இவரைத் தமிழர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இவருக்கு எதிரான கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களே முன்வைத்துள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்+
17 hours ago, Kapithan said:

இந்தப் பெண் என்ன விதமான பதிலைக் கூறியிருக்க வேண்டும் என்கிறீர்கள் ? 

இராதிகா சிற்சபேசன் போல, தன்வாயால் கெட்டு, எங்களின் குரல் கனேடிய நாடாளுமன்றத்தில்  அறவே இல்லாமல் போனது போல போகவேண்டும் என்கிறீர்களோ? 

ஐயனே,
எனக்கு ராதிகா சிற்சபேசன் தன்வாயால் என்ன சொல்லிக் கெட்டார் என்பது பற்றித் தெரியாது. அவர் கட்சி தாவியதை குறிப்பிடுகிறீர்களா இல்லை வேறுதுவுமா என்பது பற்றித் தெரியவில்லை. இயன்றால் அறியத் தரவும்.

இந்த புதிய அரசியல்வாதி தொடர்பாக நான் இணையத்தளத்தில் வாசித்த போது(இவரது தெரிவிற்குப் பின்னரே இவர் அறிந்து கொண்டேன்) இவர் சிங்களத்திற்கு ஆதரவான கருத்துக்களையே கூறியிருப்பதாக எனக்குப்படுகிறது.  

"Gunaratnam said that Sri Lankans must also decide the best solution for SriLanka and not any foreign country. She said that Sri Lanka must not wait for foreign pressure to work on a solution.

The newly elected Norwegian MP also said that minority rights in Sri Lanka must be protected.

 "

(https://colombogazette.com/2021/09/27/newly-elected-norwegian-mp-refuses-to-boycott-sri-lanka/)

நான் இவரிடம் இருந்து எமக்காக ஏதேனும் பேசுவார்(இனப்படுகொலை) என எதிர்ப்பார்த்தேன். ஆனால் இவர் சிங்களத்தின் கையால் பரிசு பெற்றது மட்டுமில்லாது, சிங்கள தேசமே முழு ஈழத்தீவின் சிக்கல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார். (இலவு காத்த கிளி) 

image_1547060697-8f2cebd31b.jpg

இதைவைத்தே இவரிடம் இருந்து எமக்கான குரல்கள் சிறிதளவேனும் எதிர்பார்க்கக் கூடாது எனக் கூறியிருந்தேன். இவரது கருத்துக்கள் யாழில் உள்ள சிங்கள தேசிய ஆதரவாளர்களுக்கு அமிர்தம், எனக்கு அல்ல. 

அந்த போன்மி(Memes) தொடர்பில்,
நான் மனதில் போட வேண்டுமெத் தோன்றியதையே போட்டனான். நான் இட்ட கருத்தை(யாரிகள் தவிர்த்து) பொதுவாக பின்வாங்குவதில்லை!😏

மட்டுநிறுத்த நடவடிக்கைகளுக்கு உட்படுமாயின் உட்படட்டும். யாழின் கண்ணியம் இதனால் மீறப்பட்டிருக்குமாயின் அதற்கு 'மட்டும் யாழ் நிருவாகத்திடம்' மன்னிப்புக் கோருகிறேன். 

Edited by நன்னிச் சோழன்
quote deleted

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, narathar said:

இவர் நோர்விஜூய அரசியல் பேசவில்லை , இங்கே அது பற்றி எவரும் கருத்துத் கூறவில்லை. இவர் தமிழர் அரசியல் பற்றி நோர்வே சார்பாகப் பேசுகிறார், இவரைத் தமிழர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இவருக்கு எதிரான கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களே முன்வைத்துள்ளார்கள். 

நீங்கள் நோர்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நோர்வே அரசில் அங்கம் வகிக்கும் ஒருவர் என்றால் பணியின் நிமித்தம் உங்களிடம் உதவி கேட்கப்பட்டால் நோர்வே அரசு சார்பாக தமிழர் பற்றி பேசுவீர்களா அல்லது பேச மாட்டீர்களா? 

தமிழ் கூட்டமைப்பு இந்தியாவின் முகவராக செயற்பட விரும்புகின்றது. இந்த பெண்மணி காரணமாக தங்கள் பிழைப்புக்கு போட்டி வந்துவிடும் என்று அஞ்சுகின்றார்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெண்மணிக்கு நோர்வேயில் தமிழ்த்தேசியம் சம்பந்தமான ஒரு அமைப்பு தமது ஆதரவைத் தெரிவிக்கவில்லை பெரும்பாலும் இவர் பொதுவான வாக்காளர்களாலேயே தெரிவுசெய்யப்பட்டார்.

தவிர நோர்வேயில் வாழும் ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்து என்னவெனில் எங்கெயோவொரு இடத்தில்

"நான் தமிழர்களது தேசியக்கொடியை கைகளில் பிடித்துக்கொண்டு தெருக்களில் நின்றதையிட்டு வெட் கப்படுகிறேன்" எனக்கூறியதாக அறிந்தேன்.

சிலவேளைகளில் தற்போதுள்ள தமிழீழத் தேசியக்கொடியில் சில திருத்தங்களைஏறொஅடுத்தவேண்டும் எனும் கருத்து குறிப்பிட்டுச்ச்சொல்லக்கூடிய அளவிலான மக்களுக்கு இருக்கலாம் ஆனால் அத்திருத்தம் மேற்கொள்ளும்வரைக்கும் தேசியக்கொடி அது இல்லை எனக்கூறமுடியாதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

இந்தப் பெண்மணிக்கு நோர்வேயில் தமிழ்த்தேசியம் சம்பந்தமான ஒரு அமைப்பு தமது ஆதரவைத் தெரிவிக்கவில்லை பெரும்பாலும் இவர் பொதுவான வாக்காளர்களாலேயே தெரிவுசெய்யப்பட்டார்

 புலம்பெயர்ந்த எந்த நாட்டிலும் ஒரு தமிழர் அந்த நாட்டின் மக்கள் பிரதிநிதியாக வந்தவுடன் எங்கள் எதிர்பார்ப்பு அவர் எங்கள் இனத்திற்கு ஏதாவது செய்வார்  என்று எல்லோரும் நினைப்பது இயல்பு

ஆனால் அவர் அதைச் செய்யவில்லை என்றவுடன் அவருக்குத் துரோகிப்பட்டம் அழிப்பது அறியாமை

அவரை எங்கள் வழிக்கு கொண்டு வருவதும்
அவரால் எங்களுக்கு வேண்டியதை செயற்படுத்துவதும் நம் கைகளில் தான் உள்ளது.

4 hours ago, நன்னிச் சோழன் said:

மட்டுநிறுத்த நடவடிக்கைகளுக்கு உட்படுமாயின் உட்படட்டும். யாழின் கண்ணியம் இதனால் மீறப்பட்டிருக்குமாயின் அதற்கு 'மட்டும் யாழ் நிருவாகத்திடம்' மன்னிப்புக் கோருகிறேன். 

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே
இனி யாழ் களம் மட்டுறுத்தியென்ன இல்லாவிட்டால் என்ன

  • கருத்துக்கள உறவுகள்+
27 minutes ago, வாத்தியார் said:

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே
இனி யாழ் களம் மட்டுறுத்தியென்ன இல்லாவிட்டால் என்ன

இதனால், தங்களுக்கு ஏதேனும் சிக்கலோ?

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நன்னிச் சோழன் said:

இதனால், தங்களுக்கு ஏதேனும் சிக்கலோ?

ஒரு பொதுவெளியில் நீங்கள் ஒரு கருத்தை எழுதிவிட்டுச் சிக்கல் இல்லாமல் இருக்கும்போது எனக்கு என்ன சிக்கல் வரும்
எல்லாவற்றிற்கும்  களம் கொடுக்கும் இடம் தான் காரணம்

இலங்கை தீவில் சம உரிமை வேண்டி போராட தொடங்கிய தமிழினத்தை இன்று அங்கு தமது இருப்புக்காக போராட வேண்டிய பரிதாப நிலையை ஏற்படுத்தியதே தீவிர கடும் தமிழ் தேசியவாதிகளின் போராட்ட சாதனை. 

என்னைப்போல அப்படியே சிந்தி.  இல்லையெனின் நீ துரோகி என்பதே இவ்வாறான தீவிர தமிழ் தேசியர்களின் தலிபான் மனப்பான்மை. 

சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கு  துரோகி பட்டம் கொடுத்து அவர்களை கொலை செய்வது,  அல்லது கொலை அச்சுறுத்தல் மூலம்  எதிரிகளை நோக்கி விரட்டியடிப்பது போன்ற நடவடிக்கைகளால் ஒரு இனத்தின் இருப்பையே சிதைத்த  இவ்வாறான தலிபான்  தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து விடுதலை பெறுவதே தமிழரின் எதிர்காலத்துக்கு முதல் தேவை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, tulpen said:

ஒரு இனத்தின் இருப்பையே சிதைத்த  இவ்வாறான தலிபான்  தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து விடுதலை பெறுவதே தமிழரின் எதிர்காலத்துக்கு முதல் தேவை. 

இப்ப கடைசி பத்து வருசமாய் நீங்களும் உங்கடை ஆக்களும் சிந்திச்சு கொண்டிருக்கிறதை கண்கூடாய் பாத்துக்கொண்டிருக்கிறம் தானே...

15 minutes ago, குமாரசாமி said:

இப்ப கடைசி பத்து வருசமாய் நீங்களும் உங்கடை ஆக்களும் சிந்திச்சு கொண்டிருக்கிறதை கண்கூடாய் பாத்துக்கொண்டிருக்கிறம் தானே...

எங்கட ஆக்கள் உங்கட ஆட்கள் என்று யாரும் அங்கு இல்லை. எல்லாருமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இப்ப கடைசி பத்து வருசமாய் நீங்களும் உங்கடை ஆக்களும் சிந்திச்சு கொண்டிருக்கிறதை கண்கூடாய் பாத்துக்கொண்டிருக்கிறம் தானே...

    விழலுக்கிறைத்த நீர்.

5 minutes ago, satan said:

    விழலுக்கிறைத்த நீர்.

விழலுக்கிறைத்த நீர் என்பது கடந்த பத்து வருடம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த போராட்டத்துக்கும் மிக மிக பொருத்தமானது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, tulpen said:

இலங்கை தீவில் சம உரிமை வேண்டி போராட தொடங்கிய தமிழினத்தை இன்று அங்கு தமது இருப்புக்காக போராட வேண்டிய பரிதாப நிலையை ஏற்படுத்தியதே தீவிர கடும் தமிழ் தேசியவாதிகளின் போராட்ட சாதனை. 

என்னைப்போல அப்படியே சிந்தி.  இல்லையெனின் நீ துரோகி என்பதே இவ்வாறான தீவிர தமிழ் தேசியர்களின் தலிபான் மனப்பான்மை. 

சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கு  துரோகி பட்டம் கொடுத்து அவர்களை கொலை செய்வது,  அல்லது கொலை அச்சுறுத்தல் மூலம்  எதிரிகளை நோக்கி விரட்டியடிப்பது போன்ற நடவடிக்கைகளால் ஒரு இனத்தின் இருப்பையே சிதைத்த  இவ்வாறான தலிபான்  தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து விடுதலை பெறுவதே தமிழரின் எதிர்காலத்துக்கு முதல் தேவை. 

8 minutes ago, tulpen said:

எங்கட ஆக்கள் உங்கட ஆட்கள் என்று யாரும் அங்கு இல்லை. எல்லாருமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். 

நீங்கள் கூறிய அந்த கருத்தின் சாரம்சம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

     வெகுவிரைவில் இன அழிப்பாளனின் அழைப்பையேற்று கைகுலுக்க நம் (தன் தாய்) நாட்டுக்கு  அம்மணி வருவார் என எதிர்பார்க்கலாம். உப்பிடி எத்தனையோ பேர் வந்து போய் விட்டார்கள் உவவும் வந்து போவதில் மாற்றம் ஏதும் வரப்போவதில்லை. கோத்தா பேரப்பிள்ளையை பார்க்க ஜெனிவா மாநாட்டை பயன்படுத்தியதுபோல் இவவும் தடை, அலைச்சல், சிரமம் இல்லாமல்  வந்து  தன் தாய் நாட்டை பார்த்து செல்வதில் தடையேதுமில்லை.

13 minutes ago, tulpen said:

விழலுக்கிறைத்த நீர் என்பது கடந்த பத்து வருடம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த போராட்டத்துக்கும் மிக மிக பொருத்தமானது. 

கேட்பாரின்றி பருவத்துக்கு, பருவம் அழிந்து கொண்டிருந்த எம் இனத்தின் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளையும், இனஅழிப்பையும் சர்வதேச மட்டத்தில் கொண்டுவந்து பொறுப்புக்கூற வைத்துவிட்டு, அடக்குமுறைக்கு முடிவு கட்டிவிட்டு போனவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேயே நகராமல் நின்றுகொண்டு வெளுத்து வாங்குகிறீர்களே உங்களோடு வியாக்கியானம் செய்வது விழலுக்கிறைத்த நீர். 

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, வாத்தியார் said:

ஒரு பொதுவெளியில் நீங்கள் ஒரு கருத்தை எழுதிவிட்டுச் சிக்கல் இல்லாமல் இருக்கும்போது எனக்கு என்ன சிக்கல் வரும்
எல்லாவற்றிற்கும்  களம் கொடுக்கும் இடம் தான் காரணம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கண்ட நெடுகால்போவானும் கழுவியூற்றி, தேவையற்ற மலினவேலை என்று கத்தி, மண்மீட்பிற்காய் மடிந்தவரை பயங்கரவாதிகள் என்று பறையடித்து கூச்சலிலிட்டபோது உங்களுக்கு ஏற்படாமல் இருந்த சிக்கல், நீக்க அவா மற்றும் ஏழாத கேள்வி ஆகியன நிகழ்காலத்தில் என் வயதொற்றோர் நாட்டோறும் பயன்படுத்தும் ஒரு சாதாரண போன்மியால் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் அழுவது போல இருக்கிறது.😡😡

கடவுளே... 
ஒரு சாதாரண போன்மிக்கு நீங்கள் இப்படி குதியன் குத்துவது எனக்கு வியப்பைத் தருவதோடு இதுபோன்று இன்னும் இறக்க வேண்டும் என்றே தூண்டுகிறது.🤪😈  நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் போன்மியே பார்த்ததில்லைப் போலும். பாவம், அறிந்துகொள்ளுங்கள், போன்மி என்றால் என்னவென்று!🤪

//எல்லாவற்றிற்கும்  களம் கொடுக்கும் இடம் தான் காரணம்//

பா... எனக்கு நிருவாகம் எந்த இடமும் கொடுக்கவில்லை. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதை அவர்கள் பலமுறை எனக்கு மெய்ப்பித்திருக்கிறார்கள். அரிவாள் வெட்டு தழும்புகள் எனக்கும் உண்டு. 

நல்லா முக்குங்கள்!🤪🤪 

முடிந்தால் ஒலிபெருக்கி போட்டுக் கத்துங்கள்🤣🤣

zm5Qo5.gif

Edited by நன்னிச் சோழன்
Added emojis

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

உங்கள் கருத்தைப் பார்த்தால் கம்சாயினி TNA யின் பிரதிநிதியாகத்தான் நோர்வே நாடாளுமன்றத்தில் போட்டியிட்டிருக்க முடியும். நோர்வே பிரசையாக அல்ல.. 😔

வெளிநாடுகளில் வாழும்  நாம் வீதியில் வாகனம் செலுத்தும்போதுகூட அந்தந்த நாடுகளின் மிகச் சாதாரண போக்குவரத்துச் சட்ட விதிகளைக்கூட மதிக்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்  அரசியலில் ஈடுபடும்போது மட்டும் TNA யின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் சரியான சிந்தனையாக இருக்க முடியும் ? 

நோர்வே பிரசைக்கு ஈழத்தில் என்ன வேலை?? (உங்களின் கருத்துப்படி)

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இலங்கை தீவில் சம உரிமை வேண்டி போராட தொடங்கிய தமிழினத்தை இன்று அங்கு தமது இருப்புக்காக போராட வேண்டிய பரிதாப நிலையை ஏற்படுத்தியதே தீவிர கடும் தமிழ் தேசியவாதிகளின் போராட்ட சாதனை. 

அப்படி பார்த்தால் விடுதலை கூட்டணிக்கு தான் செருப்பால் அடிக்க வேண்டும்.

4 hours ago, tulpen said:

என்னைப்போல அப்படியே சிந்தி.  இல்லையெனின் நீ துரோகி என்பதே இவ்வாறான தீவிர தமிழ் தேசியர்களின் தலிபான் மனப்பான்மை. 

நிறைய பேர் நிறைய விதாமய் சிந்திக்காமல் 27 இயக்கங்கள் எப்படி உருவாகின?? அவர்கள்  துரோகி என்றார்கள். நீங்கள் தலபான் லெவலுக்கு போயுள்ளீர்கள். உங்கடை லெவலே வேறை.

4 hours ago, tulpen said:

சுதந்திரமாக சிந்திப்பவர்களுக்கு  துரோகி பட்டம் கொடுத்து அவர்களை கொலை செய்வது,  அல்லது கொலை அச்சுறுத்தல் மூலம்  எதிரிகளை நோக்கி விரட்டியடிப்பது போன்ற நடவடிக்கைகளால் ஒரு இனத்தின் இருப்பையே சிதைத்த  இவ்வாறான தலிபான்  தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து விடுதலை பெறுவதே தமிழரின் எதிர்காலத்துக்கு முதல் தேவை. 

தமிழர்களின் எதிரிகளுக்கு செம்பு தூக்கும் தமிழர்களை இல்லை உண்டு என்றாக்கி விட வேண்டும்.

3 hours ago, tulpen said:

விழலுக்கிறைத்த நீர் என்பது கடந்த பத்து வருடம் மட்டுமல்ல. ஒட்டு மொத்த போராட்டத்துக்கும் மிக மிக பொருத்தமானது. 

சரியான போராட்ட பாதையை சொல்ல உங்களுக்கு யோக்கியம் உள்ளதா? 

3 hours ago, tulpen said:

எங்கட ஆக்கள் உங்கட ஆட்கள் என்று யாரும் அங்கு இல்லை. எல்லாருமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். 

உங்களை இதில் சேர்க்காமல் விட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தெய்வபிறவி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எங்கட ஆக்கள் உங்கட ஆட்கள் என்று யாரும் அங்கு இல்லை. எல்லாருமே கடந்த ஐம்பது ஆண்டுகளாக  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். 

ஓம் அப்கானிஸ்தான் சகோதரர்களுடன் ஐக்கியமாகி விட்டவர்கள் தான்.

15 hours ago, குமாரசாமி said:

நீங்கள் கூறிய அந்த கருத்தின் சாரம்சம் என்ன?

அது பற்றி நீங்களே பதிவிட்டு உள்ளீர்கள்.

உசுப்பி விட்டவர்கள், அந்த உசுப்பலுக்கு ஆடியவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறியவர்களே என்பது தான் பதில்.  

  • கருத்துக்கள உறவுகள்

வழமையான எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றமேற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஒரு மேற்குலக கட்சியில் அரசியல் பிரதிநிதியாக இருப்பவரை அவரது பிறந்த இனத்திற்கு மட்டும் பிரதிநிதியாக இருக்கும் படி எதிர்பார்த்து ஏமாற்றம் வந்தால் பிரதிநிதி பொறுப்பாக முடியாதல்லவா?

இனி இவரை ஒதுக்குகிறோம் நாறடிக்கிறோமென்று kneejerk reaction காட்ட வெளிக்கிட்டு ஏதாவது தவறான தெரிவுகளை மேற்கொள்வர்! இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரே நிலை இந்த விடயத்தில்! 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அநேகமானவர்களுக்கு பொறாமை தங்களால் , தங்கள் பிள்ளைகளால் செய்ய முடியாததை இவ/இவர்கள்  செய்வதா  என்ட எரிச்சலில் எல்லோரையும் துரோகியாக்கி விட்டுடுறது ..."தானும் படுக்கார் ,தள்ளியும் படுக்கார்" என்பது தான் நினைவில் வந்து தொலைக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நன்னிச் சோழன் said:

கடவுளே... 
ஒரு சாதாரண போன்மிக்கு நீங்கள் இப்படி குதியன் குத்துவது எனக்கு வியப்பைத் தருவதோடு இதுபோன்று இன்னும் இறக்க வேண்டும் என்றே தூண்டுகிறது.🤪😈  நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் போன்மியே பார்த்ததில்லைப் போலும். பாவம், அறிந்துகொள்ளுங்கள், போன்மி என்றால் என்னவென்று!

 எனது கருத்தும் வேண்டுகோளும் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந்தால் அந்தச்  சிரமத்திற்கு மன்னித்து விடுங்கள். (இது கள நிர்வாகத்திற்கும் )  
கள்ளிப்பால் ஊற்றிக்  குழந்தைப்படுகொலை செய்யலாம் என்ற கருத்தை யாரும் இனிமேலும்
எங்கேயும் பகிராதீர்கள்

இதுவும் எனது வேண்டுகோள் மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்+
9 minutes ago, வாத்தியார் said:

 எனது கருத்தும் வேண்டுகோளும் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந்தால் அந்தச்  சிரமத்திற்கு மன்னித்து விடுங்கள். (இது கள நிர்வாகத்திற்கும் )  
கள்ளிப்பால் ஊற்றிக்  குழந்தைப்படுகொலை செய்யலாம் என்ற கருத்தை யாரும் இனிமேலும்
எங்கேயும் பகிராதீர்கள்

இதுவும் எனது வேண்டுகோள் மட்டுமே

ஐயனே... எனக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. நான் கூறியவற்றால் தாங்கள் மனம் நொந்திருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்; மன்னித்து விடுங்கள்.

யாழ்களத்தில் வயதில் மூத்தோர் அதிகம் என்பதால் 'இந்த' மட்டத்திலான போன்மிகள் பகிர்வதை இயன்றளவு தவிர்க்கிறேன்.

நன்றி

Edited by நன்னிச் சோழன்

4 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே... எனக்கு எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. நான் கூறியவற்றால் தாங்கள் மனம் நொந்திருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன்; மன்னித்து விடுங்கள்.

யாழ்களத்தில் வயதில் மூத்தோர் அதிகம் என்பதால் 'இந்த' மட்டத்திலான போன்மிகள் பகிர்வதை இயன்றளவு தவிர்க்கிறேன்.

நன்றி

 மீம்ஸ் ற்கும் வயதிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. எல்லா வயதினரும் எல்லா விதமான மகிழவூட்டும் மீம்ஸ் களை வயது வேறுபாடு இன்றி ரசிப்பார்கள். ஆனால் இந்த மீம்ஸை மனித தன்மை உள்ளவர்கள் வெறுப்பார்கள். அவ்வளவு அருவருக்க தக்கது. சொல்ல போனார் வயதில் கூடிய கிழடுகளே இந்த மீம்ஸை உருவாக்கியவர்கள்.  புதுமை விரும்பும் புதிய தலைமுறை இளைஞர்கள் இதனை விரும்ப மாட்டார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.