Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

நடிகர்கள்: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு; ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்; இசை: ஷான் ரோல்டன்; இயக்கம்: த.செ. ஞானவேல். வெளியீடு: அமெஸான் பிரைம் ஓடிடி.

விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் 'ஜெய் பீம்'.

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மனைவி செங்கண்ணி (லிஜோமோல் ஜோஸ்). அந்த ஊர் பெரிய மனிதர் வீட்டில் ஒரு நாள் பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. சில நாட்களில் அந்த வீட்டில் கொள்ளை நடந்துவிட, ராஜாக்கண்ணுவைத் தேடுகிறது காவல்துறை. அவரைத் தேடும் சாக்கில், அவரது மனைவி, உறவினர்களையும் பிடித்துவந்து துவைத்தெடுக்கிறார்கள் காவல்துறையினர்.

ஒரு நாள் ராஜாக்கண்ணு கிடைத்துவிட, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்துகிறார்கள். பிறகு, ராஜாக்கண்ணுவும் அவருடன் லாக்கப்பில் இருந்த அவரது உறவினர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை. இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் சந்துரு (சூர்யா). இதற்குப் பிறகு, என்ன நடக்கிறதென்பது மீதிக் கதை.

தமிழ்நாட்டில் மிகச் சிறுபான்மையான இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையின் அத்துமீறலை மையமாகக் கொண்டு, வணிகரீதியான ஒரு திரைப்படத்தை முயற்சிப்பதற்கே மிகப் பெரிய துணிச்சல் வேண்டும்.

பிறகு, அந்த அத்துமீறலையும் நியாயத்தைப் பெறுவதற்கான போராட்டத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிறப்பான சினிமா திரைக்கதையாக உருவாக்க வேண்டும். த.செ. ஞானவேலிடம் அந்தத் துணிச்சலும் இருக்கிறது, சிறந்த சினிமாவாக உருவாக்கும் நேர்த்தியும் இருக்கிறது.

ஜெய் பீம்

பட மூலாதாரம்,@2D_ENTPVTLTD

படம் துவங்கி சில நிமிடங்களிலேயே தடதடக்க ஆரம்பித்துவிடுகிறது திரைக்கதை. காவல்துறையினர் இருளர் பழங்குடியினரின் பகுதிக்குள் வந்து, அந்த மக்களை இழுத்துச் செல்லும்போது, நம்மையே இழுத்துச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது காட்சியமைப்பு.

இருளர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என ஒவ்வொரு தருணமும் அதிரவைக்கிறது.

பொதுவாக இம்மாதிரியான சித்ரவதைகளையும் பாதிக்கப்பட்டவர்களின் குரலையும் தொடர்ந்து காட்டும்போது சீக்கிரமே ஓர் ஆவணப்படம் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்பட்டுவிடும். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியின் பாத்திரம் உடனடியாக நியாயத்தை நோக்கிப் போராட ஆரம்பிப்பதால், படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, ஒரு விறுவிறுப்பான த்ரில்லராக மாறுகிறது. எந்த இடத்திலும் கூடுதலாக ஒரு காட்சியோ, வசனமோ இல்லை.

அடிப்படையில் பார்த்தால், இந்தப் படம் ஒரு Court - Drama வகையைச் சேர்ந்ததுதான். ஆனால், பாதிக்கப்படும் மக்களின் துன்பமும் நியாயத்தை நோக்கிய அவர்களது போராட்டமும் அவை படமாக்கப்பட்ட விதமும் இந்தப் படத்தை வேறு உயரத்திற்கு நகர்த்தியிருக்கின்றன.

இந்தப் படத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப்படுகின்றன. ஒன்று, அதிகாரக் கட்டமைப்பு தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யும் என்பதை துலக்கமாகக் காட்டுவது. இரண்டாவதாக, அரசால் அநியாயம் இழைக்கப்பட்டவர்கள் போராடினால், அது ஒரு நெடிய போராட்டமாக இருந்தாலும் உரிய நியாயம் கிடைக்காமல் போகாது என்பதைச் சொல்லி, ஒரு நேர்மறையான உணர்வை ஏற்படுத்துவது. அந்த வகையில் இந்தப் படம் முக்கியமான ஒரு திரைப்படம்.

JaiBhimOnPrime,

பட மூலாதாரம்,@2D_ENTPVTLTD

இயக்குநர் ஞானவேலுக்கு அடுத்தபடியாக படத்தில் பாராட்டத்தக்கவர், நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ். செங்கண்ணியாகவரும் லிஜோமோல், படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார். எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டமில்லாத அவரது நடிப்பைப் பார்க்கும்போது, இருளர் பழங்குடியைச் சேர்ந்த ஒருவரே அந்தப் பாத்திரத்தில் நடித்திருப்பதாகத்தான் கருதத் தோன்றுகிறது.

இதற்கடுத்தபடியாக, சிறப்பாக நடித்திருப்பது நாயகனாக வரும் மணிகண்டன். வேறொருவரை இந்தப் பாத்திரத்தில் நினைத்துப்பார்க்க முடியவில்லை. படத்தில் விசாரணை அதிகாரி பெருமாள்சாமியாக வருகிறார் பிரகாஷ் ராஜ். அவரது நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒரு காட்சியில், கதாநாயகனை சித்ரவதைசெய்து கொலைசெய்த மூன்று காவலர்களையும், கடந்து செல்லும்போதே அவர் பார்க்கும் பார்வை, அட்டகாசம்.

வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருக்கிறார் சூர்யா. அவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்கபடம் இது. அரசு வழக்கறிஞராக வருகிறார் குரு சோமசுந்தரம். கேட்கவா வேண்டும்!

இந்தப் படத்தில் திரைக்கதையைப் போலவே, மிக வலுவான இரண்டு அம்சங்கள் இசையும் ஒளிப்பதிவும். அதை இருவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பாடல்களும்கூட படத்தோடு பொருந்திப்போகின்றன.

தமிழின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் சேர்கிறது, இந்த "ஜெய் பீம்".

ஜெய் பீம் - சூர்யா படத்தின் சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

எளிய மக்களின் கதை, கிராமத்துக்கதை, மண்வாசனைக்கதை என்ற வகையில் பல தமிழ்ப்படங்கள் போற்றப்பட்டிருக்கின்றன...

அவற்றில் பெரும்பான்மையானவை இடைநிலைச் சாதியைச் சார்ந்த இயக்குநர்களால் எடுக்கப்பட்ட சுயசாதிப் பெருமை பேசும் படங்கள்தாம்...

அண்மையில்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகள் படமாக்கப்பட்டு வருகின்றன..

மெட்ராஸ், மேற்குத் தொடர்ச்சி மலை,கர்ணன், அசுரன், வரிசையில் இப்போது ஜெய் பீம் வந்திருக்கிறது

அதுவும் அமைப்பு ரீதியாகக்கூட பலமில்லாத இருளர் சமூகத்தில் நடந்த உண்மைக் கதை..

இந்தக் கதையின் உண்மை நிகழ்வில் நீதிக்குப் போராடிய தோழர் கோவிந்தன் போல், பி.எல்.சுந்தரம், வி.பி.குணசேகரன், பா.பா.மோகன், பேராசிரியர் பிரபா கல்யாணி, 
ஹென்றி டிபேன், எவிடென்ஸ் கதிர் போன்றவர்களும், விளம்பரமில்லாத கம்யூனிஸ்ட் தோழர்களும் எளிய மக்களின் வாழ்வுரிமைக்குப் போராடிக் கொண்டுதானிருக்கிறார்கள்..

ஜெய்பீம் திரைப்படம் அவர்களுக்கெல்லாம் மரியாதை செய்திருக்கிறது.. 

அறியப்பட்டிருக்கிற எல்லா அடையாளங்களை விடவும் நான் முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் அடையாளம் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர் என்பது..

கதியற்ற மக்களை நேசிக்கும் ஒருவனாக இப்படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன்..
இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர்கள் ஜோதிகா, சூர்யா ஆகியோரை அன்போடு வணங்குகிறேன்‌‌..

செவ்வணக்கம்.. ஜெய்பீம்
இன்குலாப் ஜிந்தாபாத்

https://www.facebook.com/kavitha.bharathy

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுல தண்ணீ வந்துட்டே இருக்கு... சூர்யாவின் ஜெய் பீம் படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை: சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய் பீம் படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய் பீம். இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், ஜோஸ் லிஜிமோல், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் அமேஸான் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. இருளர் இன மக்கள் சந்திக்கும் துயரங்களை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஞானவேல்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பிரிவியூ ஷோ போடப்பட்டது. இந்தப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலினும் படத்தை பார்த்து விட்டு நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். மனதை கனமாக மாற்றிவிட்டது ஜெய்பீம் திரைப்படத்தின் நினைவுகள் இரவு முழுவதும் தனது மனதை கனமாக மாற்றிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். படத்தில் நடித்துள்ள நடிகர் சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார். அமேஸான் பிரைம் இந்நிலையில் படம் அமேஸான் பிரைம் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் படம் குறித்த தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த நெட்டிசன், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மிக ஆழமாகவும், அழுத்தமாகவும் காட்டியமைக்கு நன்றி சூர்யா சார்.. வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. படத்தை பார்த்த இந்த நெட்டிசன், இந்த மாதிரி எத்தனை படங்கள் வந்தாலும் இன்னும் அவை நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படியோ படம் அமேஸிங்... வாழ்த்துகள் சூர்யா சார் மற்றும் ஜெய் பீம் டீம் என பதிவிட்டுள்ளார். பேசப்படும் டாப்பிக்... படத்தை பார்த்த இந்த நெட்டிசன், எண்ணிக்கையில்லா எமோஷன்ஸ்... பல காட்சிகளில் கண்களில் தண்ணீர் வருகிறது... ஜெய் பீம் தான் இந்த வாரம் பேசப்படும் டாப்பிக்காக இருக்கும்.. வேற லெவலில் உள்ளது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதை காண காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஜெய் பீம் சிறந்த படம் சார் ஜெய் பீம் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், உண்மையிலேயே உங்களுக்கு ரசிகராக இருப்பதில் பெருமைப்படுகிறேன் சூர்யா சார். நீங்கள் தான் என்னுடைய இன்ஸ்பைரேஷன் சார்... சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதிலும் நீங்கள் தான் என் உத்வேகம்... ஜெய் பீம் சிறந்த படம் சார்... புரெடியூஸராக ஜோதிகா மேம்முக்கும் வாழ்த்துகள்.. இது போன்ற படங்களை கொடுங்கள்... என பிதவிட்டுள்ளார். அற்புதமான இயக்கம்.. சவுத் மூவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெய் பீம் படம் குறித்து பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஜெய் பீம் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி... குறிப்பாக ஜோஸ் லிஜிமோலின் பர்ஃபார்மன்ஸ் ஆஸம். சந்தேகமே இல்லை.. ஜெய் பீம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. அற்புதமான இயக்கத்திற்கு ஞானவேல் சாருக்கு நன்றி... எங்களின் ரேட்டிங்.. 4 1/2 என குறிப்பிட்டுள்ளது. ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், ஜெய் பீம் படம் சூர்யாவுக்கு ஜாக்பாட்தான். படத்தில் நடித்துள்ள அனைவருமே இந்த படத்தை பர்ஃபெக்ட் படமாக்கியுள்ளனர். மணிகண்டனை ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். குறைத்து மதிப்பிட்டு விட்டோம்.. சிம்பிளி ஆஸம்... என பதிவிட்டுள்ளார். நாட்டுக்கு தேவையான படம் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், சூப்பர் படம் சூர்யா சார்... சில படங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, படக்குழுவினருக்கு நன்றி... அனைவரும் பார்க்க வேண்டிய படம்... இந்தப் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்... நாட்டுக்குத் தேவையான ஒரு படம் என பதிவிட்டுள்ளார். கண்ணுல தண்ணி வருது.. ஜெய் பீம் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், படத்தின் ஒரு காட்சியை ஷேர் செய்து இந்த சீன்லலாம் கண்ணுல என்ன அறியாம தண்ணி வந்துட்டு இருக்கு.. என பதிவிட்டுள்ளார்.

https://tamil.filmibeat.com/reviews/how-is-jai-bhim-movie-twitter-review/articlecontent-pf235655-088809.html

நேற்றிரவு ஜெய் பீம் பார்த்தேன். அருமையான, மனதுள் அதிர்வுகளை ஏற்படுத்திய நேர்மையான படம்.

அரசாலும், அதிகாரங்களாலும், ஏனைய சாதிகளாலும் மிக மோசமாக ஒடுக்கப்படுகின்ற இருளர் சாதியினருக்கு எதிராக இந்திய காவல்துறை செய்யும் அட்டூழியங்களையும், அவர்களின் லொக்கப்புகளில் நடக்கும் சித்திரவதைகளையும் அதனால் நிகழும் கொலை(களையும்) யும் மிக நேர்மையாக காட்டி, அதற்கு எதிராக போராடிய நீதிபதி சந்துருவின் வாழ்க்கை / வழக்கையும் சினிமாவாக எடுத்து ஒடுக்கப்படு ஒரு சாதியினருக்காக குரல் கொடுக்கின்றது ஜெய் பீம்.

படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே இது ஒரு சினிமா என்ற உணர்வு விலகி, கண்ணுக்கு முன் நிகழும் நிகழ்வுகள் என்ற உணர்வு தொற்றத் தொடங்கி, சில இடங்களில் கண்ணீரும் சிந்தி, அறச்சீற்றமும் எழுந்து ,ஈற்றில் வழக்காடும் சந்துருவின் போராட்டத்தில் உணர்வு ரீதியாக இணைந்து படம் முடிந்த பின்னும் அந்த உணர்வு ஒரு நீண்ட வரியாக மனதுக்குள் தொடர்கின்றது.

நல்ல சினிமா / நேர்மையான தமிழ் படம் பார்க்க விரும்புகின்ற அனைவரும் தவற விடக்கூடாதா படம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நேற்று  ஜெய் பீம்  முழுமையாக பார்த்தேன்
விசாரணை என்று காவல்த்துறை செய்யும் அட்டுழியங்களை காண
நெஞ்சு பதறுகின்றது,
உண்மையில் யெயிலுக்குள்  விழும் அடிகள் ,சித்திரவதைகள்  பார்க்கும் பொழுது உண்மையில் நம்மை அறியாமலே கண்ணீர்  வருகின்றது
படம் பார்க்கத்தொடங்கி சில நிமிடங்களில் படத்தினுள் ஒன்றி போய்
விடும் அளவுக்கு சிறப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார்கள்
இதற்க்கு முன்பும் சில வருடங்களுக்கு முன் ஒரு படம் பார்த்தேன்
விசாரணை என நினைக்கின்றேன்
அதிலும் போலீஸ் சித்திரவதைகள் இருக்கும் அனால் இந்த படம் பார்க்கும் பொது வந்த வலி ,,,

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பார்த்த அருமையான படம்.

குறவர்களையும், இருளர்களையும் திருடர்களாகப் பார்க்கும் மனநிலை கொஞ்சமாவது மாறும்.

—-

ஜஸ்டிஸ் சந்துரு: இன்றைய செய்தி இன்றே வரலாறு!

மின்னம்பலம்2021-11-05T07:49:58+5:30
 

spacer.png

சமகாலச் சம்பவங்கள் சரித்திரங்கள் ஆக மாறும் தருணத்தை உலகின் மிகப்பெரிய கணினி தேடு பொறியான கூகுள் எளிதாக நமக்கு அடையாளம் காட்டுகிறது. நம் காலத்தில் நடக்கும் குறிப்பிட்ட சில விஷயங்களை பற்றி நம்மில் பெரும்பாலானோர் கூகுளில் தேடத் தொடங்கும்போது கூகுளைப் பொருத்தவரை அது சரித்திரம் ஆகிறது.

ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வழக்கறிஞர் சந்துரு இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து தொடர்ந்த ஒரு வழக்கில் வெற்றி பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. அன்று வழக்கறிஞராக இருந்த சந்துரு இன்று ஓய்வு பெற்ற நீதிபதியாக இருக்கிறார். ஜெய்பீம் படத்திலும் அன்றைய வழக்கறிஞர் இன்றைய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவுக்கு நன்றி பாராட்டப்பட்டுள்ளது. மேலும் படம் வெளியாவதையொட்டி ஊடகங்களில் வெளிவந்த தகவல்களும் சந்துரு எடுத்து வழக்காடிய வழக்குதான் ஜெய்பீம் படத்தில் கதையாக்கப்பட்டுள்ளது என்று உரக்கக் கூறின.

இதையடுத்து கூகுள் பயன்பாட்டாளர்கள் பலரும் ஜஸ்டிஸ் சந்துரு என்ற வார்த்தையை கடந்த சில நாட்களாக தேடிவருகிறார்கள். ஜஸ்டிஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி தேட ஆரம்பிக்கும் பெரும்பாலானோரும் கடந்த சில நாட்களில் சந்துருவை நோக்கித்தான் அந்தத் தேடுதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஜஸ்டிஸ் என்று கூகுள் தேடுபொறியில் டைப் செய்தாலே ஜஸ்டிஸ் சந்துரு, கே சந்துரு ஆகிய பெயர்களை வரிசையாக ரிசல்ட் ஆக கொடுக்கிறது கூகுள். அதாவது சூர்யா நடித்த பாத்திரத்தின் உண்மையான அந்த மனிதர் யார் என்பதை கோடிக்கணக்கானோர் கடந்த சில நாட்களில் கூகுள் மூலம் தேடியிருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.

இணையதள நிபுணர்கள் சிலரிடம் இது பற்றி நாம் பேசினோம். “ கூகுள் என்பது தன்னிடம் பெரும்பாலானோர் எதை தேடுகிறார்களோ அதை பொதுமையாக்கிக் கொடுக்கிறது. அந்த வகையில்தான் ஜஸ்டிஸ் சந்துரு என்ற வார்த்தை கடந்த சில நாட்களாக கூகுள் சர்ச் தேடுதலில் அதிக இடம் பிடித்து இருக்கிறது. ஜஸ்டிஸ் என்றாலே சந்துருவை தான் தேடுகிறார்கள் என்பதை தனது தரவுகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட கூகுள் JUST என்ற வார்த்தையை டைப் செய்தாலே கீழே ஜஸ்டிஸ் சந்துரு என்பதை காட்டிவிடுகிறது. வேறு ஒரு நீதிபதி பரபரப்பாக பேசப்படும் வரை இந்த தேடுபொறி ஜஸ்டிஸ் என்றால் சந்துருவை தான் காட்டும் ஏனென்றால் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை முன்னிறுத்துகிறது.

இதேபோல 2017 பிப்ரவரி மாதத்தில் ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். அப்பொழுதும் அதற்கு முன் ஜெயலலிதா இறந்த நிலையில் அவர் முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது அழுததை வைத்தும் அவரை நடிகர் என்று பலர் விமர்சித்தனர். அதிலும் குறிப்பாக சிவாஜிகணேசனை விட நன்றாக நடிக்கிறார் என்று பரவலான விமர்சனங்கள் வந்தன. அந்த நிலையில் அப்போது கூகுள் தேடுபொறியில் ஓபிஎஸ் என்று டைப் செய்தாலே பன்னீர்செல்வம் படத்தையும் கூடவே சிவாஜி கணேசன் புகைப்படத்தையும் காட்டியது. அது அன்றைய இணைய பயன்பாட்டாளர்களின் மனநிலையை பிரதிபலித்தது. அதுபோல இன்றைய இணைய பயன்பாட்டாளர்கள் சந்துருவை தேடித்தேடி படிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் தான் இப்போது ஜஸ்டிஸ் என்று டைப் செய்தாலே அது சந்துருவிடம் போய் நிற்கிறது. இது ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சூழலை காட்டுகிறது. ஒரு சினிமா ஒரு நீதிபதியை தேடத் சொல்கிறது என்றால் அதன்படி நீதிபதியை பல்வேறு மக்களும் தேடிப் படிக்கிறார்கள் என்றால் இது ஒரு ஆரோக்கியமான இணைய பயன்பாடு தான்” என்கிறார்கள் அவர்கள்.

https://minnambalam.com/politics/2021/11/05/23/justice-chandru-google-search-jeibeem-tamil-film

  • கருத்துக்கள உறவுகள்

 

பேட்டி......! 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அவசியமான திட்டப்பணிகளை முடித்து வீடு திரும்ப பின்னேரம் ஆகிவட்டது. எப்பொழுதும் தீபாவளியை சொந்த வீட்டில் கொண்டாடும் நான், கடந்த இரு வருடங்களாக செல்ல முடியாத நிலை. ஆனால் துபாயிலும் அண்மித்த பகுதிகளும் தீப ஒளி, வண்ண விளக்குகள் அலங்காரம், சிறு சிறு பட்டாசு வெடிகளின் சத்தம் இரவு முழுவதும் கேட்டன.

ஓரளவு தீபாவளி சூழல் திருப்தியோடு, 'ஜெய்பீம்' திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். முதலில் சாதாரணமாக போய்க்கொண்டிருந்த படம், நேரம் செல்ல செல்ல நம்மை உள்ளிழுத்து ஒன்றிப்போக வைத்து கண் கலங்க வைக்கிறது.

கதாநாயகியின் நடிப்பு என்று சொல்வதை விட, கதையோடு வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சில வருடங்கள் கழித்து, உணர்வோடு ஒன்றி பார்த்த படம்.

நிறைவுக்காட்சி படமாக்கபட்ட விதம், அருமை!

Edited by ராசவன்னியன்
எழுத்துப் பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் இறுதியில் ஜஸ்டிஸ் சந்துரு என்பவரின்  நிஜ வாழ்க்கையை படமாக்கியதாக கூறப்படுகிறது.

ஜெய்பீமுக்கு மராட்டிய கவிதையின் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் தமிழில் ஒரு பெயர்  வைத்திருக்கலாம் என்ற ஒரு.நெருடல்.

படத்தின் கதாநாயகியின் நடிப்பு சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

செங்கேணி கிட்ட 1 லட்சம் தரதா பேரம் பேசுனாங்க

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மணிகண்டனின் செவ்வி

 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெய் பீம் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள்.....

 

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  அலுவலகத்திற்கு  புறப்பட  ஆயத்தப்படுத்திக்  கொண்டிருக்கும்  போது  இளையவள்  கீழே  இறங்கி  வந்தாள் .  

கண்ணெல்லாம்        சிவந்து  போயிருந்தது .  

நித்திரைக்  கலக்கம்  என  நினைத்துக்  கொண்டு  “என்னம்மா  இரவிரவா  முழித்து  படித்துக்  கொண்டிருந்தனீரோ  " எட்டு  மணித்தியால  நித்திரை  வரக்கூடிய  மாதிரி  உமது  Schedule ஐ   அமைத்துக்  கொள்ளும்  என  எத்தனை  தரம்  அம்மா  சொல்லியிருக்கிறேன்”  என்று  சற்றே  கவலையுடனும்  வாஞ்சையுடனும்  சொன்னேன் . 


“இல்லையப்பா " நாங்கள் நேற்று  ஜெய் பீம்  பாத்தது, இரவெல்லாம்  நித்திரை  வரவேயில்லை, மனதை  மிகவும்  குழப்பி  விட்டதப்பா, இந்த  காலத்திலும்  எமது  மொழி  பேசுபவர்களிடையே  இப்படி  நடக்கிறது  என்று  நினைக்க  வெட்கமாக  இருக்கிறது”  என்றாள்.  


தொடர்ந்து  "எல்லைக்கிராமங்களில்,  நீங்கள்  ஈடுபட்டுக்  கொண்டிருக்கும்  தன்னிறைவு  அடையச் செய்யும்  வேலைத்திட்டங்களின்  பயனாளிகளை  எவ்வாறு  தெரிவு  செய்கின்றிர்கள்”  என்றும்  வினவினாள்.

 
வேறொன்றுமில்லை  , அம்பாறை சிங்கள  தமிழ்  எல்லைக்கிராமங்களில்  வாழும்  வறுமைக்கோட்டிட்கு  மிக  கீழே  வாழும்  குடும்பங்களுக்கு  சுய  தன்னிறைவு  அடையச் செய்யும்  வேலைத்திட்டங்களில்  நண்பர்கள்  சிலருடன்  சேர்ந்து  என்னை  ஈடுபடுத்திக்  கொண்டிருக்கிறேன்  . ஆதரவு  மிகக்  குறைத்த  அவர்கட்கு  நிரந்தர  வருமானத்தை  ஈட்டக்கூடிய  சிறு  வேலைத்திட்டங்களை  அடையாளம்  கண்டு, நிதி  உதவியுடன்  அமைத்துக்  கொடுத்தல்,   அவர்களின்  பிள்ளைகளின்  கல்வி  நிலைப்பாட்டை   மேம்படுத்துவதற்கான  செயல்பாடுகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்த  ஆவன    செய்தல்  என்று  எனது  ஒய்வு    நேரங்களின்  ( அப்பிடி  ஒன்று  இருக்கிறதா  என்ன!! 😀) பெரும்பகுதி  போய்க்கொண்டிருக்கிறது.  


அந்த  செயல்  திட்டங்களிற்கு  தானும்  நிதி  உதவி  அளிக்க  விரும்புவதாக  சொன்னாள்.

 
ஜெய் பீம்  பட  குழுவிற்கு  ஒரு  நன்றிக்  கடிதம்  அனுப்ப   இருக்கிறேன் … 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சாமானியன் said:

காலையில்  அலுவலகத்திற்கு  புறப்பட  ஆயத்தப்படுத்திக்  கொண்டிருக்கும்  போது  இளையவள்  கீழே  இறங்கி  வந்தாள் .  

கண்ணெல்லாம்        சிவந்து  போயிருந்தது .  

நித்திரைக்  கலக்கம்  என  நினைத்துக்  கொண்டு  “என்னம்மா  இரவிரவா  முழித்து  படித்துக்  கொண்டிருந்தனீரோ  " எட்டு  மணித்தியால  நித்திரை  வரக்கூடிய  மாதிரி  உமது  Schedule ஐ   அமைத்துக்  கொள்ளும்  என  எத்தனை  தரம்  அம்மா  சொல்லியிருக்கிறேன்”  என்று  சற்றே  கவலையுடனும்  வாஞ்சையுடனும்  சொன்னேன் . 


“இல்லையப்பா " நாங்கள் நேற்று  ஜெய் பீம்  பாத்தது, இரவெல்லாம்  நித்திரை  வரவேயில்லை, மனதை  மிகவும்  குழப்பி  விட்டதப்பா, இந்த  காலத்திலும்  எமது  மொழி  பேசுபவர்களிடையே  இப்படி  நடக்கிறது  என்று  நினைக்க  வெட்கமாக  இருக்கிறது”  என்றாள்.  


தொடர்ந்து  "எல்லைக்கிராமங்களில்,  நீங்கள்  ஈடுபட்டுக்  கொண்டிருக்கும்  தன்னிறைவு  அடையச் செய்யும்  வேலைத்திட்டங்களின்  பயனாளிகளை  எவ்வாறு  தெரிவு  செய்கின்றிர்கள்”  என்றும்  வினவினாள்.

 
வேறொன்றுமில்லை  , அம்பாறை சிங்கள  தமிழ்  எல்லைக்கிராமங்களில்  வாழும்  வறுமைக்கோட்டிட்கு  மிக  கீழே  வாழும்  குடும்பங்களுக்கு  சுய  தன்னிறைவு  அடையச் செய்யும்  வேலைத்திட்டங்களில்  நண்பர்கள்  சிலருடன்  சேர்ந்து  என்னை  ஈடுபடுத்திக்  கொண்டிருக்கிறேன்  . ஆதரவு  மிகக்  குறைத்த  அவர்கட்கு  நிரந்தர  வருமானத்தை  ஈட்டக்கூடிய  சிறு  வேலைத்திட்டங்களை  அடையாளம்  கண்டு, நிதி  உதவியுடன்  அமைத்துக்  கொடுத்தல்,   அவர்களின்  பிள்ளைகளின்  கல்வி  நிலைப்பாட்டை   மேம்படுத்துவதற்கான  செயல்பாடுகளை இனங்கண்டு நடைமுறைப்படுத்த  ஆவன    செய்தல்  என்று  எனது  ஒய்வு    நேரங்களின்  ( அப்பிடி  ஒன்று  இருக்கிறதா  என்ன!! 😀) பெரும்பகுதி  போய்க்கொண்டிருக்கிறது.  


அந்த  செயல்  திட்டங்களிற்கு  தானும்  நிதி  உதவி  அளிக்க  விரும்புவதாக  சொன்னாள்.

 
ஜெய் பீம்  பட  குழுவிற்கு  ஒரு  நன்றிக்  கடிதம்  அனுப்ப   இருக்கிறேன் … 

உங்கள் மகள் உங்களைவிட சிறப்பாக மக்களுக்கு சேவை செய்வார்👍

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாதித்திருக்கு ........அதுதான் ஒரு படத்தி வெற்றி .......குறிஞ்சிமலர் போல அபூர்வமாய் பூத்திருக்கு.........!  👏

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் சூர்யா 2 நல்லப்படம் கொடுத்துள்ளார் அதுக்குள்ளயா.? 😢

IMG-20211107-232938.jpg

IMG-20211110-134556.jpg

ஜெய்பீம் திரைப்படம் சில பல உண்மைகளை மறைத்தும் திரித்தும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அதில் முக்கியமானது ராஜாக்கண்ணுவை அடித்துக் கொன்றவர் அந்தோணிசாமி எனும் பொலிஸ் அதிகாரி. இவர் ஒரு தலித் கிறிஸ்தவர். 

தலித் சமூகத்தை சார்ந்தவரை (ராஜாக்கண்ணு இருளர் சமூகத்தை சார்ந்தவர் அல்ல, குறவர் சமூகத்தை சார்ந்தவர் ஆகும்) இன்னொரு தலித் கிறீஸ்தவர் தான் கொன்று உள்ளார். ஆனால் ஜெய்பீம்  படத்தில் ராஜாக்கண்ணுவை கொன்றவரின் பெயர் குருமூர்த்தி. குருமூர்த்தி வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்று காட்டுவதற்காக அவர் வீட்டு கலண்டரில் வன்னியர் சமூகத்தின் புனித சின்னமான அக்கினி கலசத்தை காட்டி உள்ளார்கள். கொலையான ராஜாக்கண்ணு, வழக்கறிஞர் சந்துரு, பொலிஸ் உயரதிகாரி பெருமாள்சாமி (பிரகாஷ்ராஜ் பாத்திரம்) போன்றோரின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லாமல் காட்டிவிட்டு அடித்துக் கொன்றவருக்கு மட்டும் வன்னியர் சமூகத்தின் தலைவர் ஜெ.குரு வை நினைவுபடுத்தும் பெயரை வைத்து நீதிமன்றத்தில் அவரை குரு என்றே அழைக்கின்றார்கள்.

அதே போன்று படத்தில் காட்டியமாதிரி ஊராட்சி தலைவர் மோசமானவர் இல்லை என்றும், அவரும் ஊர் மக்களும் இறுதி வரைக்கும் உறுதுணையாக நின்றனர் என்றும் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ராஜாக்கண்ணுவின் மனைவி பேட்டி அளித்துள்ளாராம்,


இதில் மேலும் சில தகவல்கள் உள்ளன. பின்னூட்டங்களிலும் இவ்வாறான தகவல் எழுதுகின்றனர்.

``உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது..." `ஜெய் பீம்' படத்துக்கு அன்புமணி கண்டனம்! | Anbumani ramadoss statement on jaibhim movie (vikatan.com)

இவ் வழக்குக்காக முதன்மையாக போராடிய கோவிந்தன் வழக்கு முடியும் வரைக்கும் திருமணமே முடிக்க மாட்டேன் என்று இருந்து வழக்கு முடிந்த பின்னரே திருமணம் முடித்தார். அவர் பற்றிய (வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்) எந்த குறிப்பும் படத்தில் இல்லை.

https://www.seithipunal.com/tamilnadu/cuddalore-mudanai-village-jai-bhim-movie-says-lie-they

  • கருத்துக்கள உறவுகள்

'ஜெய்பீம்' இயக்குநர் ஞானவேல் பேட்டி: 'பிரகாஷ்ராஜ் அறைந்த காட்சி சர்ச்சையை வியாபார தந்திரம் என பாராட்டினார்கள்'

  • ச. ஆனந்தப்பிரியா, பிபிசி தமிழுக்காக
இயக்குநர் ஞானவேல்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே சமயம் பல விவாதங்களையும் ஏற்படுத்தியது. 

கதையின் தன்மை, படத்தின் நோக்கம், விவாதங்களுக்கான பதில் என பலவற்றை 'ஜெய்பீம்' இயக்குநர் த.ச. ஞானவேல் பிபிசி தமிழுடன் கலந்துரையாடினார். அதில் இருந்து..

'ஜெய் பீம்' படத்திற்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு எதிர்ப்பார்த்ததுதானா?

"'ஜெய்பீம்' என தலைப்பு தேர்ந்தெடுத்த போதே அதில் சாதகம், பாதகம் இரண்டுமே உண்டு. சாதகம் என்றால், இதை மாற்றத்திற்கான முழக்கமாக இதை வரவேற்கலாம். மேலும், இந்த தலைப்புக்கென ஓர்அடையாளம் இருக்கிறதில்லையா? அதற்குள்ளே படத்தை சுருக்கி பார்ப்பதும் நிச்சயம் நிகழும். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால், நான் எதிர்ப்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

கதையின் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், படம் பார்த்த பின்பு நிறைய இளைஞர்கள் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார்கள். ஒரு விஷயத்தை நீங்கள் உரக்க பேசுகிறீர்கள் என்றால் அதற்குரிய எதிர்ப்பு வரத்தான் செய்யும். விளைவுகளை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், அதனால், மாற்றத்திற்கான விஷயங்களையோ, உரையாடல்களையோ வரவேற்க இந்த தமிழ்ச் சமூகம் ஏற்கனவே தயாராகதான் உள்ளது". 

படத்தின் முதல் காட்சியிலேயே சாதி குறித்து வெளிப்படையாக பேசிய காட்சியை வைத்திருந்தீர்கள். இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இதுபோன்று அதிகம் வெளிவராத போது, இந்த ஆரம்ப காட்சிக்கான தூண்டுதல் எது?

ஜெய்பீம்

பட மூலாதாரம், PR IMAGES

"நான் கள ஆய்வு செய்தபோது, கிடைத்த விஷயம்தான் இந்தக் காட்சி. மனித உரிமை ஆணையத்தின் எஸ்.சி/எஸ்.டி கமிஷனிற்கு அந்த இடத்தில் கள ஆய்வு செய்தவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களில் எப்படி அவர்களை பிடித்து போனார்கள் என்பது இருந்தது. அதுதான், இந்த ஒரு காட்சியை வைக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதல். உண்மையாக ஒரு விஷயம் நடந்து பழங்குடிகள் பாதிக்கபடும்போது, அதை நாம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை".

'ஜெய்பீம்' படத்தின் கதை உண்மை சம்பவம் அடிப்படையிலானது. உண்மைக்கு நெருக்கமாக இதை காட்சிப்படுத்துவதில் என்ன மாதிரியான சவால்கள் இருந்தது? 

"சவால்கள் என்றால் இருவேறு எதிர்திசைகள் இதில் இருக்கின்றன. ஒன்று, இது எளிமையான நிலப்பரப்பில் வாழ்கின்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை., வழக்கமாக, பழங்குடிகள் என்றால் மலைமேல்தான் வாழ்வார்கள். ஆனால், சமவெளி பகுதியில் வாழக்கூடிய பழங்குடிகள் குறித்த பார்வையே நமக்கு கிடையாது. அதனால், அந்த வாழ்க்கை குறித்து பேசுவதற்கான தேவை இருந்தது. அதையும் நான் செய்தேன். நான் முன்பு கல்வி தளத்தில் வேலை செய்துள்ளதால் இருளர் மாணவர்கள் பிரச்னைகள் என்ன என்பதை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன். 

கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளிக்கூடமே ஊரில் இருந்து தள்ளி இருக்கும். பழங்குடி மக்கள் கிராமத்தில் இருந்தே தள்ளி இருப்பார்கள். இதில் வேலை செய்யக்கூடிய பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் நண்பர்கள் எல்லாருமே எனக்கு நல்ல பழக்கம். 

எனவே, கல்வி சார்ந்து அதிகம் கவனம் செலுத்திய எனக்கு பழங்குடியினர் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை படத்திற்காக கவனம் செலுத்த வேண்டி வந்தது.

இந்த கதைக்களம் லாக்கப் மற்றும் நீதிமன்றம் சார்ந்தது. இதில் இவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான். இந்த வழக்கு குறித்து சந்துரு அவர்கள்தான் எனக்கு சொன்னார். எனவே, படம் ஆரம்பித்து அரைமணி நேரத்திற்கு பிறகு இதை வழக்கறிஞர் பார்வையில், நீதிமன்ற கோணத்தில் எடுத்து சென்றோம். 

இங்கு படத்தில் இருளர் என்பது பழங்குடிகளின் ஒரு குறியீடாகத்தான் அமைத்தேன். பழங்குடிகள் வாழ்க்கையில் உள்ள சவால்கள், இதில் சட்டம் சார்ந்து சந்துரு எதிர்கொண்ட நெருக்கடிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் நாம் படம் எடுப்பது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது. இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் எளிதாக ஆவணப்படம் என்ற எல்லைக்குள் வந்துவிடும். அது இல்லாமல், கலை நேர்த்தியோடு இருக்க வேண்டும் என்ற சவாலை நான் எடுத்துக் கொண்டேன்".

ஜெய்பீம்

பட மூலாதாரம், PR IMAGES

சாத்தான் குளம் சம்பவத்தின் லாக்கப் மரணமும், 'ஜெய்பீம்' கதையும் ஒரு புள்ளியில் இணைவதை எப்படி பார்க்கறீர்கள்?

"இரண்டு கோணங்கள் இதில் முக்கியம். இப்போதும் இது தொடர்கிறது என்பது எதார்த்தமானது. அந்த சம்பவங்கள் குறித்த செய்தி வந்தபோதுமே கூட படக்குழுவில், 'நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது 30 வருடங்களுக்கு முன்னால், நடந்தது என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், அது இப்போதும் நடக்கிறது பாருங்கள்' என ஆச்சரியமாக பேசினோம். அது ஆச்சரியம் கூட இல்லை. மிக அவமானப்பட வேண்டிய விஷயம். ஒரு நாகரிக சமூகம், சக மனிதனை அதிகாரத்தின் பிடியின் கீழ் இப்படி நடத்துகிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இது ஒரு கோணம். 

அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து எப்படி நீ கேள்வி கேட்கலாம் என்பதுதான் சாத்தான்குளம் சம்பவம். ஆனால், 'ஜெய்பீம்' அப்படி இல்லை. திட்டமிட்டு அவர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்கள் மீது இந்த பொய்வழக்கு போடுதல் என்பது அவர்களை கேட்க யாருமே இல்லை, உங்களுக்கு எதாவது நடந்தால் யாருமே கேட்க முன்வரமாட்டார்கள். 

அதை நான் எவ்வளவு வலுவாக திரைக்குள் சொல்ல முடியுமோ அதை சொல்லி இருக்கிறேன். அது நிறைய பேருக்கு புரிந்திருக்கிறது. சில பேருக்கு அது சரியாக சென்று சேரவில்லை. இதற்கு பிறகு என்ன என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். இது ஒருவருக்கு மட்டுமே நடக்கும் விஷயம் இல்லை. 

சாத்தான் குளம், பெலிக்ஸ் விஷயம் அவர் இறந்ததால் மீடியா வெளிச்சத்திற்கு வந்தது. ஒருவேளை அவர், லாக்கப்பில் இறக்கவில்லை என்றால் வாழ்நாள் முழுக்க அவர் மிகப்பெரிய துயரமான ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து இருப்பார்கள். அந்த வலியும், மன பாதிப்பும் அவர்கள் சீக்கிரம் மீண்டு எழுவதற்கான வாய்ப்பை தரவே தராது. இறப்பு மட்டும்தான் இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தது. அதனால்தான் சொல்கிறேன், ஒருவேளை அவர் இறக்கவில்லை என்றால் வாழ்வில் அது சிறையில் இருந்ததை விட மிகப்பெரிய தண்டனையாக அது இருந்திருக்கும். 

'ஜெய்பீம்'-க்காக நான் சந்தித்த நிறையபேர் இறக்கவில்லை. ஆனால், அவர்களால் நடக்க முடியாது, வேலைக்குப் போக முடியாது. உடல் உழைப்பை தவிர எதுவுமே அவர்களுக்கு மூலதனம் கிடையாது. எது அவர்களுக்கு வாழ்வியல் ஆதாரமோ அந்த உழைப்பை அவர்களால் செலுத்தவே முடியாது. இந்த மாதிரியான விஷயங்கள் இங்கு பேசப்படவே இல்லை, கவனிக்கப்படவே இல்லை.

இதில் இருந்து இந்த படம் அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்றால் இது பொய் வழக்கு குறித்தான உரையாடலை தொடங்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படியான உரையாடல் இன்னும் பெரிதாக துவங்கவில்லை. 

ஜெய்பீம்

பட மூலாதாரம், PR IMAGES

'ஜெய்பீம்' படத்தின் முதல் காட்சியை நான் போராடி வைத்ததற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் எதுவுமே செய்யவில்லை. ஆனால், அவர்கள் மீது ஒரு வழக்கு போடப்படும். ஏன் அவர்கள் மேல் வழக்கு போட வேண்டும்? இதுபோல மற்ற ஆதிக்க சாதியினர் மீது வழக்கு ஏன் நிகழாது? இந்த கேள்விகளுக்கான பதில்தான் இந்த படம் என நினைக்கிறேன்".

கதை கேட்டு நடிகர் சூர்யா தயாரிப்பதற்கும் நடிப்பதற்கும் ஒப்பு கொண்டார். முதலில் சந்துரு கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு உங்கள் தேர்வு யாராக இருந்தது?

"தேர்வு குறித்து முதலில் நான் யோசிக்கவே இல்லை. ஏனெனில் அது சவாலான ஒரு விஷயம். இந்த கதாப்பாத்திரத்தை பிரபலமான ஒரு நடிகர் செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் விருப்பமாக இருந்தது. ஆனால், அதை அவரிடம் கேட்க முடியவில்லை. ஏனெனில் இதில் வழக்கமான பாடல், சண்டை, ஜோடி என எதுவுமே இல்லை. அவருடைய ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பு என ஒன்று இருக்கும். அதை மனதில் வைத்து வழக்கமான பொழுதுபோக்கை கொடுத்தால் படத்தின் தன்மை போய்விடும். இந்த மாதிரியான நெருக்கடிகள் எல்லாம் இருந்தது. சூர்யா என்று இல்லை எந்த ஒரு பிரபலமான நடிகரிடமும் சென்று, 'இதுபோல நான் ஒன்று செய்கிறேன், நீங்கள் நடிக்கிறீர்கள?' என கேட்பது கடினமான விஷயம். 

ஒருவேளை, இது நடக்காமல் போயிருந்தால் பல கதவுகளை தட்ட வேண்டியதாக இருந்திருக்கும். இந்த மாதிரியான ஒரு தீவிரமான கதையை எப்படி ஏற்று கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது. கதை சொல்லும்போதே நான் 'ஜெய்பீம்' என்ற தலைப்புதான் முதலில் வைத்திருந்தேன். அப்படி இருக்கும்போது, இந்த கதையை எத்தனை தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்பது தெரியாது. ஆனால், தயாரிப்பு நிலையில் ஐந்து நிமிடங்களில் கதை ஓக்கே ஆனது. பொதுவாக இதுபோன்ற கதைகளுக்கு, ஸ்கிரிப்ட் எடுத்து கொண்டு நான்கைந்து வருடம் அலைந்தேன் என்ற கதை பெரும்பாலும் இருக்கும். அதுபோன்ற எந்த ஓர் அலைக்கழிப்புமே எனக்கு கிடையாது. நான் எதிர்ப்பார்க்காத இன்னொன்று சூர்யாவே இந்த கதாப்பாத்திரத்தை எடுத்து நடிக்கிறேன் என சொன்னது. 

கதையின் தன்மையைப் புரிந்து கொண்டு இந்த கதை சொல்லப்பட வேண்டும் என்ற முனைப்பு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் சூர்யாவுக்கு இருந்தது. இது எனக்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததால் என்னுடைய கதையை இன்னும் சுதந்திரமாக சொல்ல முடிந்தது". 

ஜெய்பீம்

பட மூலாதாரம், PR IMAGES

சந்துருவிடம் முதலில் இந்த வழக்கை படமாக்க போகிறேன் என்று சொன்ன போது என்ன சொன்னார்? 

"அவருக்கு என் மீது மதிப்பும், அக்கறையும் உண்டு. அவர் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற போது அவர் குறித்து ஒரு 'டாக்குமெண்ட்ரி' செய்யலாம் என அவரது துணைவியார் பாரதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், சந்துரு அதை மறுத்துவிட்டார். 'நான் ஓய்வு பெற்றுவிட்டேன். இந்த வேலை எல்லாம் செய்தேன் என பெருமையாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை' என்றார். 

ஆனால், பழங்குடி பெண்ணுக்கான நீதிபோராட்டம் என்பது இப்போதும் தொடர்கிறது என்பதால் இந்த கதையை சொல்லும்போது இந்த விஷயம் வெளியே போக வேண்டும் என்று சம்மதித்தார். அவரும் பேராசிரியர் கல்யாணியும் நெருக்கமான நண்பர்கள். அவர் வழக்கறிஞராக இருந்த காலத்தில் இருந்தே கல்யாணியை அவருக்கு தெரியும். கல்யாணியின் அனைத்து சட்ட போராட்டங்களையும் சந்துருதான் நடத்தினார். பேராசிரியர் கல்யாணிக்காக மட்டும் கிட்டத்தட்ட 11 வழக்குகள் நடத்தி இருக்கிறார். இந்த சட்டப் போராட்டத்தில் கல்யாணியை காவல்துறை கைது செய்யாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் சந்துரு. இதை கல்யாணி பல இடங்களில் சொல்லி இருக்கிறார். 

மக்கள் பணியாற்றும் இடத்தில் அவரை பாதுகாப்பது என்னுடைய வேலை என சந்துரு அதை எடுத்து முனைப்பாக செய்திருக்கிறார். அவருடைய அந்த பங்களிப்புதான் கல்யாணிக்கு சுதந்திரமாக மக்கள் பணியாற்றுவதற்கான ஒரு வெளியை உருவாக்கி இருக்கிறது. இதுபோல, ஒருவொருக்கொருவர் இணைந்திருந்தோம். அப்படி இருக்கும்போது இதை படமாக்கலாம் என யோசனை வந்தபோது அனைத்து தரப்பில் இருந்து அந்த ஆதரவு கிடைத்தது".

சந்துரு, ராஜாகண்ணு என முதன்மை கதாப்பாத்திரங்களுக்கு உண்மையான பெயர் இருக்கும்போது, பார்வதி பெயர் 'செங்கேணி' என தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்?

"சந்துருவிடம் இருந்து எனக்கு வழக்கு குறித்த விசாரணை, தீர்ப்பு முதலான ஆவணங்கள் கிடைத்தது. இதையெல்லாம் படித்தபோது, குறவர் சமூகத்தை விட ஒருபடி பின்தங்கி இருக்கிற இருளர்களை இந்த கதையில் சொல்ல வேண்டும் என ஒரு படைப்பாளியாக என்னுடைய தேர்வு இருந்தது. அந்த இடத்தில், நான் முழுக்க இருளர்கள் வாழ்வியலைத்தான் சொல்ல வேண்டி இருந்தது. ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையில் நிறைய வாழ்வியல் வேறுபாடுகள் இருந்தன. 

ஜெய்பீம்

பட மூலாதாரம், PR IMAGES

அதனால், அந்த பகுதியில் அந்த மாதிரியான பாதிப்புக்குள்ளான விஷயங்கள், பெயர்கள் தேர்வு என யோசித்தேன். 'செங்கேணி' என்பது இருளர் பெண்ணுடைய பெயர். அந்த பெயர் நல்லதொரு தமிழ்ப் பெயராகவும், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை வலியுறுத்துவதாகவும் இருந்தது. அதனால், அந்த பெயரை தேர்ந்தெடுத்தேன்". 

கதைக்காக நிஜத்தில் செங்கேணியான பார்வதியை நேரில் சந்தித்தீர்களா?

"இல்லை சந்திக்கவில்லை. அந்த ஊரில் விசாரித்த போது அவர் மகளோடு வேறு ஊருக்கு சென்றுவிட்டார் என சொன்னார்கள். மேலும், எனக்கு தேவைப்படவில்லை என்பதால் நான் சந்திக்கவில்லை. ஏன் எனக்கு தேவைப்படவில்லை என்றால், இருளர் எனும்போது அந்த புனைவுக்கு ஏற்றதுபோலதான் நான் செங்கேணி கதாப்பாத்திரத்தை உருவாக்க முயன்றேன். இந்த கதைக்கு வரும்போதே, பார்வதிக்கு திருமணமான பிள்ளைகள் இருந்தார்கள். இந்த வழக்கு நடக்கும்போது பார்வதிக்கு 40+ வயது இருக்கும். 

இந்த கதையை எனக்கு கலை நேர்த்தியோடு சொல்வதற்கு ஓர் இளம் தம்பதியாக இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதனால், அவரை சந்திப்பது இதுபோன்ற விஷயங்கள் எழுதுவதை தடுக்கும் என தோன்றியது".

1993 காலக்கட்டத்தில் நடந்ததை ஏன் 1995 மாற்றினீர்கள்?

"படைப்பு சுதந்திரம்தான் காரணம். போராட்டம் என்பதை நான் முன்வைக்கிறேன். தனியார் தொலைக்காட்சி போன்ற விஷயங்கள் 1993ல் ஆரம்பித்தாலும், 1995-ல்தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்கு முன்பு இருந்த அரசு தொலைக்காட்சி சேனல்களில் எல்லாம் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. வானிலை அறிக்கை, அரசு சார்ந்த செய்திகள், பத்திரிக்கை அறிக்கைகள் என நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. 

அதை எல்லாம் உடைத்தது தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவுதான். அதனால், இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் புகுத்த அந்த காலக்கட்டம் தேவைப்பட்டது. மேலும், தமிழ்நாட்டு சூழலில் 1995, 96 காலக்கட்டத்தில்தான் அதிக லாக்கப் மரணங்கள் நடந்தன. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது 1995வது காலக்கட்டம் எனக்கு மிக வசதியாக இருந்தது". 

படம் வந்து பொதுவெளியில் விவாதம் ஏற்படுத்திய அதே சமயம் இன்னொரு பக்கம் நரிக்குறவர் இனத்தை சார்ந்த பெண்மணி ஒருவர் கோயில் அன்னதானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பானதே?

"இது தற்செயல் நிகழ்வுதான். ஆனால், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் குரல் என்பது படத்தில் உள்ள 'செங்கேணி'யின் இன்னொரு குரல். ஒரு கோயிலில் நான் சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லை என்ற அந்த குரல் எழுப்புதலை விட முக்கியம் என்னவென்றால் அமைச்சர் உட்கார்ந்து சாப்பிட்டார் இதை அடுத்த ஒரு பத்து நாட்களுக்கு மீடியா பேசிவிட்டு விட்டுவிடும், அதற்கு பிறகு எங்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நடக்காது என மிகவும் வெளிப்படையாக பேசுகிறார். 

ஜெய்பீம்

பட மூலாதாரம், PR IMAGES

அதுமட்டுமல்லாமல், எங்கள் பிள்ளைகளுக்கு கல்வி இருந்தால் மட்டும்தான் முன்னேற முடியும் என்கிறார். அதில் எனக்கு ஆழமான பிடிப்பு உண்டு. அஸ்வினியுடன் நான் ஒத்து நிற்கும் கருத்து என்னவென்றால், பழங்குடிகளுக்கு தரப்படும் எதையும் விட அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வி என்பது முக்கியமானது. 'ஜெய்பீம்' படத்தை பார்த்த பலரும் வழக்கு முடிந்துவிட்டது, படம் முடிந்துவிட்டது என்றுதான் சொன்னார்கள். ஆனால், எனக்கு படம் முடியவில்லை. அந்த படம் எனக்கு எங்கு முடிகிறது என்றால், பிறருடைய அக்கறையினாலோ அல்லது கருணையினாலோ அவர்களுடைய நீதியை வென்றெடுக்க வேண்டும் என இருக்க கூடாது. அவர்களுடைய சொந்த முயற்சியில் அவர்களுக்கான அநீதிகளை எதிர்த்து போராடுவதுதான் நிரந்தர தீர்வாக இருக்க முடியும். அதற்கு கல்வி மட்டும்தான் ஒரே ஆயுதம். எப்போது அவர்கள் கல்வி பெற்று, சமமாக இந்த சமூகத்தில் நுழைகிறார்களோ அப்போதுதான் இந்த இழிவுகள் நீங்கும். அப்போதுதான் அதிகாரம் அவர்கள் மீது கைவைக்க தயங்கும். அந்த இடத்தை நோக்கி நகர்த்துவது என்பது மிக முக்கியம். அது அஸ்வினியின் குரலில் மிக உறுதியாக இருந்தது.

இதை சொல்வதற்கு அவர்களுக்கு படிப்போ, பெரிய ஆராய்ச்சியோ தேவைப்படவில்லை. அவர்களது வாழ்க்கை இதை அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்தது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மீது மதிப்பு உருவாக்கியது".

முதல்வர் ஸ்டாலின் படத்திற்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தாரே? சந்திப்பில் வேறு என்ன சொன்னார்? 

"முதல்வர் படம் பார்த்துவிட்டு 'நன்றாக இருக்கிறது' என்பதை தாண்டி, கண்கள் கலங்கி எதுவும் அவரால் பேச முடியவில்லை. அவரது துணைவியாருக்கும் கண்கலங்கி, 'மிசா காலம் நியாபகம் வந்துவிட்டது' என அப்போதே சொன்னார். 

கிட்டத்தட்ட அதுவேதான் அவருக்கும் நியாபகம் வந்திருக்கிறது. பிறகு எழுதிய கடிதத்தில்தான் படத்தை அவர் எப்படி பார்த்தார் என்பதை உள்வாங்கினேன். அதைவிட முக்கியமான விஷயம், தீபாவளி அன்று அவர் இருளர்களை சந்தித்து பட்டா கொடுப்பது என அவர்களது தேவைகளை தீர்க்க அதிகாரிகளை முடுக்கிவிட்டார். 

Twitter பதிவின் முடிவு, 1

அதேபோல, கமல்ஹாசன் படம் பார்த்துவிட்டு கண்கலங்கி, உண்மைக்கு நெருக்கமாக படம் இருப்பதாக சொன்னார். இந்த படம் எனக்கு சினிமாவாக தெரியவில்லை. அவர்கள் வாழ்க்கையை பக்கத்தில் போய் பார்ப்பது போல இருந்தது என்றார். 'விருமாண்டி' படத்தை நான் இப்படிதான் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். கிட்டத்தட்ட அதுபோன்ற உணர்வை எனக்கு கொடுத்தது என நெகிழ்ந்து சொன்னார்". 

பிரகாஷ்ராஜ் கதாப்பாத்திரம் இந்தியில் பேசியதற்காகதான் எதிரில் இருந்தவரை அடித்தார் என ஒரு சர்ச்சை கிளம்பியதே? அந்த காட்சியின் நோக்கத்தை விளக்குங்கள்?

"சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரகாஷ்ராஜ் அதற்கான சரியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அது ஒரு கதாப்பாத்திரம். திருட்டு வழக்கோடு தொடர்பு உள்ளது. அப்போது விசாரணையில் இருவருக்கும் தெரிந்த மொழியில் உரையாடாமல், தனக்கு தெரிந்த ஒரு மொழியை மட்டும் பேசுவது என்பது அதில் இருந்து தப்பித்துக்கொள்ளும் மனநிலை அல்லது மேட்டிமைத் தன்மை என்றுதான் அதை கதாப்பாத்திரமாக எடுத்து வந்தோம். 

இந்தி பேசியதற்காக அவரை அடித்தார்கள் என்று எடுத்துகொள்வது கதையை மேலோட்டமாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் விதம்தான் அது. இதற்கெல்லாம் எதுவுமே செய்ய முடியாது. 

இதுவே, 'ஸ்கேம் 1992' இணையத்தொடரில் ஒரு விசாரணை காட்சியில் இந்தி தெரியாது என்பதற்காக தமிழர் ஒருவரை மிரட்டுவார். அதை இங்கு பிரச்சனையாக இருக்கவில்லை. கதாப்பாத்திரம் என்பதை தாண்டி, ஒரு மொழியை திணிக்கும்போது வரும் கோப உணர்வு என்பதையும் நான் மறுக்கவில்லை. மற்றபடி, இதில் எந்த உள்நோக்கமோ வெளிநோக்கமோ எதுவும் இல்லை. 

சில பேர் இது நல்ல வியாபார தந்திரம் என்றெல்லாம் பாராட்டினார்கள். எனக்கு சிரிப்பாகதான் இருந்தது. நாம் ஒரு கருத்தை சொல்கிறோம். அதை வியாபாரமாக்கினால் பரவாயில்லை. வட இந்தியாவில் இந்த படம் சென்றடைந்ததற்கு காரணம் இந்த காட்சிதான் என்று சொன்னால் படம் எடுத்ததற்கான நோக்கமே போய்விடும். அந்த பாராட்டை கூட நான் ஏற்கவில்லை. நான் சொல்ல வந்த விஷயத்தின் மீது எதாவது குறுக்கீடு வந்தால் கவனிப்பேனே தவிர, யாரையும் குறிப்பிட்டு காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை"

 

https://www.bbc.com/tamil/arts-and-culture-59232645

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் பீம்: ஐஎம்டிபியில் முதலிடம், நவீன தலித் சினிமாவில் முக்கிய இடம்

நிமிடங்களுக்கு முன்னர்
ஜெய்பீம்

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

தி ஷஷாங் ரிடெம்சன் மற்றும் தி காட்பாதர் போன்ற மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஜெய் பீம். சாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைச் சொல்லும் இந்தியத் திரைப்படங்களில் இது சமீபத்தியது என்று எழுதுகிறார் திரைப்படப் பத்திரிகையாளர் அசீம் சாப்ரா.

ஞானவேல் இயக்கி, சூர்யா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் சாதீயப் பாகுபாட்டை மையமாகக் கொண்டது. வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.

ஜெய் பீம் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வரப்பட்டவர்கள் சாதியின் அடிப்படையில் பிரிப்பதாகக் காட்டப்படுகிறது.

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுகின்றனர். தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களை அங்கேயே இருக்குமாறு கூறி, அவர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

இது மனதை சங்கடப்படுத்தும் காட்சி. அந்தக் குழுவில் அச்சத்தில் நடுங்கியவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிட்டது. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற இந்தியாவின் விளிம்புநிலை, குறிப்பாக தலித்துகளின் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை நினைவூட்டும் வகையில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகையில் 20% பேர் தலித்துகள். அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருந்தபோதிலும் அவர்கள் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜெய்பீம்

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

ஜெய் பீம் என்றால், பீம் வாழ்க என்று பொருள். புறக்கணிக்கப்பட்ட மக்களின் தலைவரான, இந்திய அரசியல் அமைப்பின் தலைமைச் சிற்பியான பி.ஆர். அம்பேத்கரின் ஆதரவாளர்களால் பிரபலப்படுத்தப்பட்டது இது.

ஜெய் பீம் திரைப்படம் தமிழ் சினிமா பயணிக்கும் புதிய போக்கின் ஒரு அங்கமாகவே கவனிக்கப்படுகிறது. பல இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சாதிய அடக்குமுறைகளைப் பின்புலமாகக் கொண்ட கதைகளைக் கையில் எடுத்திருக்கின்றனர்.

1991ஆம் ஆண்டு அம்பேத்கரின் நூற்றாண்டு விழா அனுசரிக்கப்பட்டது முதல் கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் தலித் இயக்கம் வளர்ந்து வருகிறது என்று திரைப்பட வரலாற்றாசிரியர் எஸ் தியோடர் பாஸ்கரன் கூறுகிறார்.

"20 ஆம் நூற்றாண்டின் மறக்கப்பட்ட தலித் சித்தாந்தங்கள் வரலாற்றில் இருந்து மீட்கப்பட்டன. பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்கள் பல தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பரவியிருந்தன. கடந்த பத்தாண்டுகளில், சில எழுத்தாளர்கள் சினிமாவுக்குச் சென்று திரைப்படங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் வழக்கமான பாடல்கள், சண்டைகள், மெலோட்ராமா பாணியைப் பயன்படுத்தினர்"

இப்போது, தலித் சீக்கியர்களின் வாழ்க்கையைக் கூறும் அன்ஹே கோர்ஹே டா டான் (பஞ்சாபி), தகனம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனுக்கும் உயர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதலைக் கூறும் மசான் (ஹிந்தி), ஃபேன்ட்ரி மற்றும் சைரட் (இரண்டும் மராத்தி) உட்பட பிற இந்திய மொழி சுயாதீனத் திரைப்படங்களிலும் தலித் கதைகள் இடம் பெற்றுள்ளன.

ஜெய்பீம்

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

கிராமத்தில் பன்றிகளைப் பிடிக்கும் ஒரு சிறுவனின் கதையையும், ஒரு உயர் சாதிப் பெண்ணின் மீதான அவனது காதலையும் விவரிக்கிறது ஃபேன்ட்ரி. சாதி மறுப்புக் காதலைக் கூறும் இந்த இசைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த வரிசையில் தமிழில் வெளியான கூழாங்கல் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான 2022 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் சார்பில் பங்கேற்கத் தேர்வானது.

ஆனால் இப்போது வெகுஜன தமிழ் சினிமாவின் பல கதாநாயகர்கள் தலித்துகள். நீண்ட காலப் பாகுபாட்டை எதிர்த்து தங்களது உரிமையை நிலைநாட்டப் போராடுபவர்கள். சட்டப்பூர்வ வழி அவர்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவராதபோது, அவர்கள் உடல் ரீதியாக மோதிப் பார்க்கவும் தயாராக இருக்கின்றனர்.

முன்னணி இயக்குநர்களின் ஒருவரான, ஆந்திராவில் குடியேறிய தமிழ் மக்களின் அவலத்தைப் பற்றிய விசாரணை, தலித்துகளின் படுகொலைகளை களமாகக் கொண்ட அசுரன் ஆகிய திரைப்படத்தை எடுத்தார். மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் இருவரும் தலித் நாயகனைக் கொண்டு கதைகளை உருவாக்கிய இரண்டு முக்கிய இயக்குநர்கள்.

"தலித் கதாபாத்திரங்களை காட்டிய விதம் வேதனையாக இருந்தது" என்கிறார் தலித் சமூக அவலங்களைத் திரைப்படமாக எடுக்கும் பா. ரஞ்சித். தமிழ்த் திரையுலகின் ஸ்பைக் லீ அவரைக் குறிப்பிடுகிறார்கள்.

காலா

பட மூலாதாரம்,WUNDERBAR FILMS

2020 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், முந்தைய தமிழ்ப் படங்களில் தலித் பாத்திரப் படைப்பு பற்றி "தி வயரிடம்" பா ரஞ்சித் பேசியிருந்தார். "ஒன்று தலித் பாத்திரங்கள் காட்டப்படவில்லை, அல்லது கதையில் அவை சேர்க்கப்படுவது 'புரட்சிகரமாக' கருதப்பட்டது."

"இத்தகைய சூழலில், எனது கதைகள் என்ன சொல்ல முடியும் என்பதை நான் சிந்திக்க வேண்டியிருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

"எனது கலாச்சாரமே பாகுபாடு மற்றும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது என்பதை நான் காட்ட விரும்பினேன்...இன்று, இயக்குநர்கள் தலித் கதாபாத்திரங்களை எழுதும்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்." என்றார் அவர்.

இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான பெரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தவர் ரஞ்சித். "சாதியும் மதமும் மனித குலத்திற்கு எதிரானது" என்ற எழுத்துக்களுடன் படம் தொடங்கும். படத்தின் நாயகன் அம்பேத்கரைப் போல் வழக்கறிஞராக வரும் ஆசை கொண்டவன.

பெரியேறும் பெருமாள் படத்தில், "போராடடா" என்ற பாடலுக்கு நடனமாடும் குழுவில் இருக்கிறார் மாரி செல்வராஜ். 1983-இல் இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலில் "நந்தன் இனமே பெறும் அரியாசனமே, எட்டுத்திக்கும் வெற்றி எழுமே மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை, பொன் உதயம் கண்டிடவே உதிரம் முழுதும் உதிரும் வரையில்" போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

2021-ஆம் ஆண்டில் வெளியான மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்திலும் இந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இப்போது அது தலித் கீதமாகக் குறிப்பிடப்படுகிறது.

சார்பட்டா பரம்பரை

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

 
படக்குறிப்பு,

முகமது அலியால் ஈர்க்கப்பட்ட குத்துச் சண்டைக் கதை சார்பட்டா பரம்பரை

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் படத்தால் ரஞ்சித்தின் படங்கள் கூடுதல் கவனம் பெற்றன. தனக்கு சொல்லப்பட்ட கதைகளால் நெகிழ்ந்துபோன ரஜினிகாந்த், கபாலி (மலேசியாவில் குடியேறிய தமிழர்களின் நிழல் உலக கதை) மற்றும் காலா (மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் நடக்கும் கதை) கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

அவரது சமீபத்திய படமான, சார்பட்டா பரம்பரையில், முகமது அலியால் ஈர்க்கப்பட்ட சென்னை தலித்துகளின் குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், வியட்நாம் போர், இனவெறி போன்றவற்றுக்கு எதிரான அவரது போர்க் குரல்களையும் விவரிக்கிறார்.

மாற்றுக் கருத்துகளும் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் தற்போதைய தலித் பிரதிநிதித்துவம் இத்தகைய பாராட்டுகளுக்கு தகுதியற்றது என்று சிலர் நினைக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு வெளியான மாடத்தி திரைப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை, நவீன சினிமா போதுமான அளவுக்கு மாறிவிடவில்லை என்கிறார்.

" ஹீரோ, அதீத ஆண்மை, எங்கும் நிறைந்திருக்கிற, மாவீர மீட்பர் கொண்ட அதே கதைகளே திணிக்கப்படுகின்றன" என்று லீனா மணிமேகலை கூறினார்.

பரியேறும் பெருமாள்

பட மூலாதாரம்,NEELAM PRODUCTIONS

"இப்போதைய படங்களில் பெண் பாத்திரங்கள் தங்கள் கணவன் அல்லது காதலர்களுக்கு வெறும் முட்டுக்கட்டைகளாக இருப்பார்கள், அல்லது சியர்லீடர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பாகுபாடுகளில் இருந்து கோடாரிகள், துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்களைக் கொண்டு தங்களது ஹீரோக்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என புறக்கணிக்கப்படும் சமூகங்கள் காத்திருக்கின்றன"

ஆயினும் இத்தகைய நவீன சினிமாவை மக்கள் பார்க்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெய் பீம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. அதனால் பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரியவில்லை. ஆனால் IMDb ஆன்லைன் தளத்தில் 9.6 பயனர் மதிப்பீட்டைப் பெற்று முதலிடத்துக்குச் உயர்ந்திருக்கிறது ஜெய் பீம்.

சுதா ஜி திலக்கின் உள்ளீடுகளுடன் எழுதப்பட்டது. அசீம் சாப்ரா ஒரு சுயாதீன திரைப்பட எழுத்தாளர் மற்றும் எழுத்தாளர். இர்ஃபான் கான்: தி மேன், தி ட்ரீமர், தி ஸ்டார் என்ற புத்தகத்தை அண்மையில் எழுதினார்.

ஜெய் பீம்: ஐஎம்டிபியில் முதலிடம், நவீன தலித் சினிமாவில் முக்கிய இடம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்திற்கு பிறகு ஓர் நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி 

அண்ணாத்த நாடகம் இன்னும் பார்க்கல 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஜெய்பீம் படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை; மனம் வெறுத்துவிட்டது" - பார்வதி அம்மாள் பேட்டி

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
18 நவம்பர் 2021, 05:12 GMT
பார்வதி

நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' திரைப்படம் பல கோணங்களிலும் ஆக்கபூர்வமான விவாதங்களையும் அதே சமயம் குறிப்பிட்ட சாதி சார்ந்த நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.

படத்தின் கதைநாயகியான நிஜ பார்வதியின் தற்போதைய பொருளாதர நிலையை கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, பார்வதி அம்மாளுக்கும் அவருக்கு பிறகு அவரது குடும்பத்திற்கும் 10 லட்ச ரூபாய் தொகையை வங்கியில் டெபாசிட் செய்வதாக நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து நேற்று அதை நேரிலும் வழங்கினார்.

'ஜெய்பீம்' படத்திற்கு பிறகு பார்வதியின் நிலை, சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்ன? என்பது குறித்து பிபிசி தமிழுடனான பேட்டியில் பார்வதி கலந்துரையாடினார். அதில் இருந்து,

'ஜெய்பீம்' படம் மூலமாக பார்வதியை பலருக்கும் தெரிய வந்திருக்கிறது. இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

 

என் மகள், மருமகன், பேரப்பிள்ளைகளோடு வசித்து வருகிறேன். அவர்கள் கூலி வேலை செய்கிறார்கள். மற்றபடி வயது, உடல்நிலை காரணமாக என்னால் இப்போது எதுவும் செய்ய முடிவதில்லை.

நேற்று நடிகர் சூர்யா உங்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து காசோலை வழங்கினார் இல்லையா? என்ன பேசினீர்கள்?

மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று நடிகர் சூர்யாவை சந்தித்தபோது பெரிதாக எதுவும் பேசவில்லை. காசோலையை என் கையில் கொடுத்து, வங்கியில் போட்டு கொள்ளுங்கள். 'உங்கள் காலம் வரை இதில் வரும் பணத்தை உபயோகித்து கொள்ளுங்கள், பிறகு என் மகள், பேரப்பிள்ளைகள் வைத்து பிழைத்து கொள்ளட்டும்' என சொன்னார்கள். இப்படி பல பேருடைய உதவி வந்து கொண்டிருக்கிறது.

'ஜெய்பீம்' படம் பாத்தீங்களா?

பேரப்பிள்ளைகள் தொலைபேசியில் போட்டு வந்து காண்பிப்பார்கள். ஆனால், என்னால் முழுதாக பார்க்க முடியவில்லை. மனம் வெறுத்து விட்டது. உயிரே போய் விட்டதே, இனிமேல் படம் பார்த்து என்ன செய்ய போகிறேன்?.

உண்மையிலே அந்த காலக்கட்டத்தில் என்ன நடந்தது?

ஒத்த கோபாலபுரம் ஊரில் நெல் அறுக்கும் வேலைக்காக சென்றிருந்தேன். அங்கே நான்கு மாடி கொண்ட பக்கத்து வீட்டு பெண் ஒருத்தி இருந்தார். அவர் அந்த ஊரில் இருந்த ஒருவரை காதலித்தார். அப்படி இருக்கும்போது, ஒருநாள், அந்த பெண் 40 பவுன் நகையும், ஐம்பதாயிரம் பணத்தையும் எடுத்து கொண்டு அவர் அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

அன்றிரவு பத்து மணிக்கு எங்கள் வீட்டுக்கு காவல் வேன் வந்தது. எஸ்.ஐ. எங்களிடம் வந்து, 'ஐயா, பேச வேண்டும் என சொல்கிறார். ஸ்டேஷனுக்கு வாங்க!' என்று அழைத்தார். என் வீட்டுக்காரருக்கு போலீஸ் என்றாலே பயம். சண்டை, வம்புக்கெல்லாம் போகாத ஆள் அவர். அந்த நேரத்தில் அவர் போலீஸ் வந்தது தெரியாமல் வெளியே கோவில் பக்கம் சென்று விட்டார். இவர் எங்கே என போலீஸ் விசாரிக்க, நான் தெரியாது என சொன்னேன். உடனே அவர்கள் என் பெரிய மகன், கணவரின் இரு தம்பிகளுடன் என்னையும் கூட்டிக்கொண்டு கோபாலபுரம் சென்றார்கள். அங்கு எங்கள் மீது பெரிய நாய்களை வைத்து மோப்பம் பிடிக்க விட்டார்கள்.

பார்வதியின் வீடு
 
படக்குறிப்பு,

பார்வதி அம்மாளின் வீடு

நாங்கள் திருடி இருந்தால்தானே நாய் எங்களை காட்டி கொடுக்கும்? அது சாதுவாக நின்று கொண்டு திருடு போன வீட்டை மோப்பம் பிடித்து கொண்டு சென்றதே தவிர எங்களிடம் வரவில்லை. அப்போதே ஊர்மக்கள், 'நாங்கள் அப்பாவி, அப்படி எல்லாம் திருட மாட்டோம்' என சொன்னார்கள். பிறகு, காவல் நிலையம் கூட்டிப்போய் எங்கள் நான்கு பேரையும் ஒவ்வொரு அறையில் விட்டு பயங்கரமாக அடித்தார்கள். இன்னும் கூட என்னால் கையை தூக்க முடியாது.

'நாங்கள் என்ன செய்தோம்? எதற்கு எங்களை போட்டு அடிக்கிறீர்கள்?' என கேட்டதற்கு, 'திருடிய பணத்தையும் நகையையும் கொண்டு வந்து வைத்து விடுங்கள்' என சொன்னார்கள்.

அதன் பிறகு, கட்சிக்காரர்கள், ஊர்க்காரர்கள் எல்லாம் என் கணவரிடம் 'மனைவி, பிள்ளைகளை எல்லாம் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். நீ போய் ஆஜராகு' என சொன்னார்கள். அதற்குள் அவரை எங்கள் ஊர் தலைவர் வேனில் பிடித்து வந்து விட்டார். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் முள்வேலி காடு. அங்குள்ள முள் மரத்தில் கட்டி உடைகளை அகற்றி அடித்து துன்புறுத்தி, பின்பு காவல் நிலையம் கூட்டி வந்தார்கள்.

அங்கு காவல் நிலையத்தில் நான் இருக்கையில் அமர்ந்திருந்த எஸ்.ஐ.-யிடம் 'ஒரு தப்பும் பண்ணல சார்' என காலில் விழுந்து கெஞ்ச, உட்கார்ந்த நிலையிலேயே என்னை செருப்பு காலால் எட்டி உதைத்தார். அதன் பிறகு, என்னை விடுவித்துவிட்டு என் கணவர், குள்ளன், கோவிந்தராஜன் என மற்றவர்களை காவல் நிலையத்திலேயே வைத்திருந்தார்கள். என் கொழுந்தனார்களை அடித்து கை விரல்களை வளைத்தனர். அப்போது அடித்தது இப்போது வரைக்கும் அவர்களுக்கு அந்த பாதிப்பு இருக்கிறது.

பிறகு மாலை நான்கு மணிக்கு என் மகன், கொழுந்தனார்கள் என எங்களை மட்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அடுத்த நாள் என்னை சாப்பாடு செய்து எடுத்து வர சொன்னார்கள். நானும் சோறு, கருவாட்டு குழம்பு செய்து கொண்டு காவல் நிலையம் சென்றேன். அங்கே என் கணவரை உடம்பில் துணி இல்லாமல், ஜன்னலில் கட்டி வைத்து அடித்தார்கள். அதில் ரத்தம் பீய்ச்சி காவல் நிலைய சுவர் எல்லாம் அடித்து இருந்தது. 'ஏன் இப்படி அடித்து கொடுமைப்படுத்துகிறீர்கள்? நாங்கள் திருடவில்லை' என கெஞ்சினோம். 'எடுத்த பணத்தையும், நகையையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு கூட்டிப்போ' என சொன்னார்கள்.

ஜெய் பீம் திரைப்படத்தின் செங்கேணி கதாபாத்திரம்

பட மூலாதாரம்,JAI BHIM

பிறகு, அவரை கட்டி, சிண்டை பிடித்து இழுத்து எட்டி எட்டி உதைத்தார்கள். அங்கேயே அவர் உயிர் போய் விட்டது. அப்போதும் அவர் நடிக்கிறார் என்று சொல்லி மீண்டும் மீண்டும் உதைத்தார்கள். சோறு அள்ளி அவர் வாயில் வைத்தால் சாப்பிடவில்லை. அவரது ஒரு கண்ணை குத்தி விட்டார்கள். மருத்துவரை பார்த்து விட்டு, மெடிக்கலில் கொடுத்த மாத்திரையையும் சாப்பிடவில்லை. அந்த நேரத்தில் எஸ்.ஐ. குடித்துவிட்டு, என் கணவர் நடிக்கிறார் என அவரது வாயிலும் மூக்கிலும் மிளகாய்த்தூளை கரைத்து ஊற்றி அடித்தார்கள். அவருக்கு உயிர் இருந்தால்தானே? அப்போதே உயிர் போய்விட்டது.

அதை பார்த்து, போலீஸ்காரர்கள் ஏதோ இந்தியில் பேசினார்கள். எனக்கு புரியவில்லை. என்னை அடித்து ஊருக்கு அனுப்பி விட்டார்கள். நான் பஸ் பிடித்து விருத்தாச்சலம் சென்று அங்கிருந்து எங்கள் ஊர் பேருந்துக்கு காத்து கொண்டிருந்தேன். அதற்குள் காவல் நிலைய வேன் ஒன்று எங்கள் ஊர் நோக்கி போனது. அந்த வேனில் இருந்த காவலர்கள் அந்தோணிசாமி, வீராசாமி, ராமசாமி இவர்கள் மூன்று பேரும் ஊருக்குள் சென்று, ராஜாகண்ணு தப்பித்து விட்டான் என்று சொன்னார்கள்.

அதற்குள் நான் ஊருக்கு வந்துவிட்டேன். அதற்குள் வெளியே விட்ட என் கொழுந்தனார்களை மீண்டும் அழைத்து போய் விட்டார்கள். இந்த செய்தி எல்லாம் ஊர் மக்கள் என்னிடம் சொல்ல, வந்த பேருந்திலேயே மீண்டும் ஏறி சென்றேன். காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது, அடிக்கிற சத்தம் கேட்கிறதா என பார்க்க சொல்லி கட்சிக்காரர்கள் எங்களிடம் சொல்லி அனுப்பினார்கள். அங்கு ஆள் இருந்தால்தானே? ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் அங்கு வாசலில் கட்டில் போட்டு தூங்கி கொண்டிருந்தார். வேறு சத்தமே இல்லை. கதவு திறந்திருக்கிறது. அவரது உடலை தூக்கி ஜெயங்கொண்டாம் பகுதியில் போட்டு விட்டார்கள். நாங்கள் கிளம்பலாம் என அங்கு பக்கத்தில் இருந்த டீக்கடையில் டீ குடித்தால் கிளாஸ்ஸில் ஒரே இரத்த வாடை. குடிக்க முடியவில்லை. டீயை கீழே உற்றிவிட்டு ஊருக்கு கிளம்பினால் அங்கு கட்சிக்காரர்கள், ஊர்மக்கள் என கூட்டம் நிற்கிறது.

சூரியா

பட மூலாதாரம்,JAI BHIM

பேருந்தை விட்டு கீழே இறங்கியதும் மயங்கி விழுந்த எங்களை எழுப்பி என்ன நடந்தது என கேட்டார்கள். நாங்கள் சொன்னதை கேட்டு உடனே எல்லாரும் கிளம்பி காவல் நிலையம் சென்றார்கள். அங்கே ஏற்கனவே இருந்த இரண்டு பேரையும், 'ராஜாகண்ணுவை கொலை செய்ததை வெளியே சொல்ல கூடாது, சொன்னால் உங்களுக்கும் இதுதான் நடக்கும்' என மிரட்டி வேறு ஜெயிலுக்கு அனுப்பி விட்டார்கள். சம்பவத்தை கண்ணால் பார்த்த அவர்களும் பயந்து விட்டார்கள்.

போலீஸ்காரர்கள் கண்ணில் படக்கூடாது என எங்களை கட்சி அலுவலகத்தில் உட்கார வைத்து விட்டார்கள். பிறகு நாங்கள் கடலூருக்கு மனு கொடுக்க சென்று விட்டோம். இந்த பக்கத்தில் காவல் துறையினர் 'தப்பித்து போன' ராஜாகண்ணுவை தேடிக்கொண்டிருந்தார்கள். பிறகு வழக்கு நடந்தது.

சம்பவம் நடக்கும் போது உங்களுடைய வயது என்ன?

சின்ன வயதுதான். ஆனால், வழக்கின் சமயத்தில் கோவிந்தன் (முதனை கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்) எனக்கு 40 வயது என்றும், என் கணவருக்கு 35 வயது என்றும் கொடுத்து விட்டார். அந்த சமயத்தின் அதிர்ச்சி காரணமாக எதுவும் சொல்ல முடியவில்லை. 13 வருடங்கள் நடந்த வழக்கிலும் தீர்ப்பு வந்துவிட்டது. வழக்கில் இரண்டு லட்சத்திற்கும் கிட்ட வந்த பணத்தில் ஒரு லட்ச சொச்சத்தை வங்கியில் போட்டு விட்டார்கள். அதில் வரும் பணத்தை மாத மாதம் வாங்கி கொள்வேன்.

மீதி பணம், என் கொழுந்தனார்களுக்கு. இப்போது கோவிந்தராஜன், குள்ளன் என எல்லாரும் இறந்துவிட்டார்கள். எனக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பையன் அவரது அப்பா இறந்த அதிர்ச்சியில் அவனும் இறந்து விட்டான். பெரிய மகன் போலீஸ் அடியால் பாதிக்கப்பட்டு காது சவ்வு அறுந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான். மகள் மட்டும்தான் என்னுடன் இருக்கிறாள்".

"ஜெய்பீம் படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை; மனம் வெறுத்துவிட்டது" - பார்வதி அம்மாள் பேட்டி - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.