Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பைடன் மருத்துவமனையில் -

கமலா அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானார்

Biden briefly transfers power to Harris, making her the 1st woman in U.S. history to hold powers of the presidency

Edited by கற்பகதரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

https://www.cnn.com/2021/11/19/politics/kamala-harris-presidential-power/index.html

85 நிமிடங்கள் மட்டும்*

அந்த 85 நிமிடங்களில் அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக பதியப்பட்டுள்ளார். அந்த ஒன்றரை மணித்தியாலத்தில் ஹமாசும் ஈரானும் இணைந்து சீனாவின் பிண்ணணி ஆதரவுடன் அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கவில்லை என்பது பற்றி மகிழ்ச்சி அடைய வேண்டும். இப்படி நடந்திருந்தால் மூன்றாவது உலக யுத்தத்தை ஆரம்பித்த அமெரிக்க ஜனாதிபதியை உலகம் மறக்காதிருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண்; ஜோ பைடன் உடல் நலப் பரிசோதனையால் வாய்ப்பு

3 மணி நேரங்களுக்கு முன்னர்
கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வரலாற்றிலேயே அதிபர் அதிகாரத்தைப் பெற்ற முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழக்கமான உடல்நலம் சார்ந்த மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட போது, சிறிது நேரம் தன் அதிபர் அதிகாரத்தை, கமலா ஹாரிஸுக்கு வழங்கினார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயதான கமலா ஹாரிஸ், வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) 85 நிமிடங்களுக்கு அதிபர் பொறுப்பில் இருந்தார். அப்போது ஜோ பைடனுக்கு கொலோனோஸ்கோபி பரிசோதனைக்காக மயக்க மருந்து செலுத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் தனது கடமைகளைச் செய்யும் திறனோடு இருக்கிறார் என்றும் பைடனின் மருத்துவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஜோ பைடனின் 79ஆவது பிறந்த நாளன்று மாலை இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொறுப்பிலிருந்த கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் மேற்கு வளாகத்தில் உள்ள தன் அலுவலகத்திலிருந்து கொண்டே, தன் பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

கமலா ஹாரிஸ்தான் முதல் கருப்பின மற்றும் தெற்கு ஆசிய அமெரிக்க துணை அதிபர். அவர்தான் அமெரிக்க வரலாற்றின் முதல் பெண் துணை அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்காலிகமாக அதிபரின் அதிகாரங்கள் பரிமாற்றப்படுவது இதற்கு முன் அமெரிக்காவில் நடந்திருக்கிறது, அது தொடர்பான செயல்முறைகளும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் ஜென் சாகி கூறினார்.

ஜோ பைடன், அமெரிக்க அதிபர்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

ஜோ பைடன், அமெரிக்க அதிபர்

"முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2002 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் இது போல அதிகாரத்தை பரிமாற்றம் செய்துள்ளார்" என ஜென் சாகி ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிட்டார்.

மருத்துவ பரிசோதனை எல்லாம் முடித்துக் கொண்டு ஜோ பைடன் சிரித்த முகத்தோடு வெள்ளை மாளிகைக்குத் திரும்பினார். "நான் நன்றாக இருக்கிறேன்" என்று கூறினார்.

"78 வயதான ஜோ பைடன் ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும், அவர் தன் அதிபர் பணிகளை சிறப்பாக செய்யும் திறனோடு இருக்கிறார்" என்றும் அதிபரின் மருத்துவர் கெவின் ஓ கானர் கூறினார்.

ஜோ பைடனுக்கு செய்யப்பட்ட கொலோனோஸ்கோபியில், அவர் குடலில் ஒரு சிறு திசு வளர்ச்சி இருப்பதை கண்டுபிடித்து எளிதில் அகற்றிவிட்டதாக மருத்துவர் கூறினார். மேலும் பைடனின் நடை கொஞ்சம் விரைத்திருப்பதாகவும், அதற்கு முதுகெலும்பு தேய்மானம் காரணமென்றும் கூறினார்.

அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக வயதான அதிபராக பொறுப்பேற்றவர் ஜோ பைடன்தான். அவர் கடந்த 2019 டிசம்பரில் முழு உடல்பரிசோதனை செய்து கொண்டார்.

அப்போதும், அவர் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாகவும், அதிபர் பொறுப்பில் பணியாற்றும் ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் அவரது மருத்துவ அறிக்கைகள் கூறின.

https://www.bbc.com/tamil/global-59357515

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 85 நிமிடத்தில் கமலா ஹாரிஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் எல்லாரும் குதியாக் குதிக்கின்றார்கள்😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அந்த 85 நிமிடத்தில் கமலா ஹாரிஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் எல்லாரும் குதியாக் குதிக்கின்றார்கள்😁

900+ Smoke Background Images: Download HD Backgrounds on Unsplash

நல்லா😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அந்த 85 நிமிடத்தில் கமலா ஹாரிஸ் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் எல்லாரும் குதியாக் குதிக்கின்றார்கள்😁

இப்படிப் பொங்கிவிட்டு அப்படியே படுத்துவிடவேண்டியதுதான். கமலா காரீசு அம்மையாரவர்கள் மட்டுமல்ல, கயேந்திரகுமார் பொன்னம்பலமே அமெரிக்க அதிபராகினாலும், வெள்ளைமாளிகையின் வெளியுறவுக் கொள்கை மாறாது. அப்படித் தமிழர்சார்பாக மாற்ற நிறைய உழைப்பு, உரையாடல், ஏற்பு, விட்டுக்கொடுப்பு, உறுதிதளராமை, கொள்கைப்பற்றோடு உலக மாற்றங்களை அவதானித்து நகரும் திறன் எனப் பலபரிமாணங்களைக் கடக்க வேண்டும்.  அதைவித்து அவர் வந்தால் இவர்வந்தால் என்ற பார்கைளால் எமக்கான விடியலைக் காணமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பெண் ஜனாதிபதி அல்ல, ஜனாதிபதி அதிகாரங்களை கையில் வைத்திருந்த முதல் பெண் - இரெண்டும் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

முதல் பெண் ஜனாதிபதி அல்ல, ஜனாதிபதி அதிகாரங்களை கையில் வைத்திருந்த முதல் பெண் - இரெண்டும் ஒன்றல்ல.

சனாதிபதி அதிகாரங்களை மைத்திரி கையில் வைத்திருந்தபோதுதான் முள்ளிவாய்க்கால் அவலத்தை அவரால் நிகழ்த்த முடிந்தது. 

அமெரிக்காவில் வில்லியம் கென்றி காரிசன் 35 நாட்களே சனாதிபதி அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nochchi said:

இப்படிப் பொங்கிவிட்டு அப்படியே படுத்துவிடவேண்டியதுதான். கமலா காரீசு அம்மையாரவர்கள் மட்டுமல்ல, கயேந்திரகுமார் பொன்னம்பலமே அமெரிக்க அதிபராகினாலும், வெள்ளைமாளிகையின் வெளியுறவுக் கொள்கை மாறாது. அப்படித் தமிழர்சார்பாக மாற்ற நிறைய உழைப்பு, உரையாடல், ஏற்பு, விட்டுக்கொடுப்பு, உறுதிதளராமை, கொள்கைப்பற்றோடு உலக மாற்றங்களை அவதானித்து நகரும் திறன் எனப் பலபரிமாணங்களைக் கடக்க வேண்டும்.  அதைவித்து அவர் வந்தால் இவர்வந்தால் என்ற பார்கைளால் எமக்கான விடியலைக் காணமுடியாது. 

நன்றி நொச்சியார் கமலா பற்றி முகநூலிலும் வேறுபல தமிழ்  ஊடகங்களிலும் பொங்கிற பொங்கு இருக்கே இவ்வளவுக்கு எங்கடை சமூகம் சுய  சிந்தனையற்று வளர்ந்துள்ளார்களே எனும் போது எங்கள்  மீது வெறுப்பே வருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

நன்றி நொச்சியார் கமலா பற்றி முகநூலிலும் வேறுபல தமிழ்  ஊடகங்களிலும் பொங்கிற பொங்கு இருக்கே இவ்வளவுக்கு எங்கடை சமூகம் சுய  சிந்தனையற்று வளர்ந்துள்ளார்களே எனும் போது எங்கள்  மீது வெறுப்பே வருகின்றது .

உண்மைதான் பெருமாளவர்களே, ஆனால் இனியும் இப்படியே தொடருமானால் ஈழத்தீவிலே தமிழினத்தின் சுவடுகளைக்கூடக் (யுத்தவெ(ற்)றியோடு பல அழிக்கப்பட்டுவிட்டது) காணமுடியாது போகலாம்... 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி அதிகாரத்தை பெற்ற முதல் பெண் ‘கமலா ஹாரிஸ்’

அமெரிக்க ஜனாதிபதி அதிகாரத்தை பெற்ற முதல் பெண் ‘கமலா ஹாரிஸ்’

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனின் பதவி, தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டது.

இதன்மூலம் அமெரிக்க ஜனாதிபதி அதிகாரத்தை பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார் மற்றும் முதல் கறுப்பின மற்றும் தெற்காசிய அமெரிக்கர் ஆவார்.

ஜோ பைடனின் வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனால், அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இதனால் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்படி 57 வயதான கமலா ஹாரிஸ் 85 நிமிடங்கள் ஜனாதிபதி பொறுப்பினை பொறுப்பேற்று நடத்தினார்.

பைடனின் மருத்துவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு அறிக்கையை வெளியிட்டார், அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தனது கடமைகளைச் செய்ய முடியும் என்றும் கூறினார்.

ஜனாதிபதியின் 79ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கமலா ஹாரிஸ், வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தனது பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://athavannews.com/2021/1251154

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Paanch said:

சனாதிபதி அதிகாரங்களை மைத்திரி கையில் வைத்திருந்தபோதுதான் முள்ளிவாய்க்கால் அவலத்தை அவரால் நிகழ்த்த முடிந்தது. 

அமெரிக்காவில் வில்லியம் கென்றி காரிசன் 35 நாட்களே சனாதிபதி அதிகாரங்களைக் கையில் வைத்திருந்தார். 

இல்லை ஐயா ஹாரிசன் 35 நாட்கள் இருந்தாலும் தேர்தலில் வென்று சட்டபடி inauguration செய்து ஜனாதிபதியானவர். கமலா அப்படி அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இல்லை ஐயா ஹாரிசன் 35 நாட்கள் இருந்தாலும் தேர்தலில் வென்று சட்டபடி inauguration செய்து ஜனாதிபதியானவர். கமலா அப்படி அல்ல. 

அப்ப கமலா அக்கா எங்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தர வாய்ப்பு இல்லையா.😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப கமலா அக்கா எங்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தர வாய்ப்பு இல்லையா.😂

அந்த ஒன்றரை மணிநேரத்துக்குள் அவவை நெருங்கியிருந்தால் உங்கள் ஆசை நிறைவேறியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அந்த ஒன்றரை மணிநேரத்துக்குள் அவவை நெருங்கியிருந்தால் உங்கள் ஆசை நிறைவேறியிருக்கலாம்.

எங்கடயாள் நெருன்கினவர்...அதுக்கிள்ளை டைம் அவுட்டாப்போச்சு..இதை வைச்சுத்தான் அமேரிக்காவெ வந்தவர்..என்ன செய்யிறது நம்மடை த்லையெழுத்து

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

எங்கடயாள் நெருன்கினவர்...அதுக்கிள்ளை டைம் அவுட்டாப்போச்சு..இதை வைச்சுத்தான் அமேரிக்காவெ வந்தவர்..என்ன செய்யிறது நம்மடை த்லையெழுத்து

எங்கடையாளை நீ ஒரு சிறுபான்மை குழு இந்தப்பக்கம் இனிமேல்  எட்டிப்பார்க்காத என்று செருப்பால் அடிக்காத குறையாக அடித்து திரத்திப்போட்டினம் போல்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எங்கடையாளை நீ ஒரு சிறுபான்மை குழு இந்தப்பக்கம் இனிமேல்  எட்டிப்பார்க்காத ஒன்று செருப்பால் அடிக்காத குறையாக அடித்து திரத்திப்போட்டினம் போல்  

விளங்கினா சரிங்க..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.