Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

pho__9_.JPG

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். 

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பிழம்பு said:

pho__9_.JPG

இவரைப் பார்த்தால் நித்தியானந்த சுவாமிகளின் சீடர்போலவும் தெரியவில்லையே.🧐

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பிழம்பு said:

pho__9_.JPG

ஐயோ இந்த டிசைன் எல்லாம் எங்கிருந்து  கிளம்புறாங்கள் எண்டு தெரியலையே அல்லா காப்பாற்று 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pho__9_.JPG

அந்த மனம் தான் கடவுள் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

pho__9_.JPG

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். 

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம் | Virakesari.lk

இதுக்கேன் ஐ.நா சபை?!
கடன் வாங்கின இலங்கையும் கடன் கொடுத்த நாடுகளும் ஏற்றுக்கொண்டால் சரியே!

ரொம்ப காசு வைச்சிருக்கிறார் போல! கொஞ்சம் சங்கத்திற்கு கேட்டுப்பாப்பம்!😜

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படாதீர்கள்! இப்போ மருத்துவ அவசரப்பிரிவுக்கு அழைப்பு எடுத்திருப்பார்கள். பிரபல்யமாவதற்கு எத்தனை வழிகள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, satan said:

அவசரப்படாதீர்கள்! இப்போ மருத்துவ அவசரப்பிரிவுக்கு அழைப்பு எடுத்திருப்பார்கள். பிரபல்யமாவதற்கு எத்தனை வழிகள் உண்டு.

ஏங்க? இப்போ அங்கொட மருத்துவப் பிரிவுக்கு வந்துவிட்டதா???

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா தர்மப்பிரபுவே…நீங்கள் வாழும் ஊரிலா இப்படி வெயில் வாட்டுகிறது…🤭

5 hours ago, பிழம்பு said:

pho__9_.JPG

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஏங்க? இப்போ அங்கொட மருத்துவப் பிரிவுக்கு வந்துவிட்டதா???

மனநல மருத்துவம். அங்கொடையில் அமைந்து இருப்பதால் அவ்வாறே அழைக்கிறார்கள். அங்கு வேறு பல முக்கியத்துவம் இருக்கலாம் ஆனால் இதை வைத்தே அழைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இதுக்கேன் ஐ.நா சபை?!
கடன் வாங்கின இலங்கையும் கடன் கொடுத்த நாடுகளும் ஏற்றுக்கொண்டால் சரியே!

ரொம்ப காசு வைச்சிருக்கிறார் போல! கொஞ்சம் சங்கத்திற்கு கேட்டுப்பாப்பம்!😜

மூச்சு காட்டாமல் இருங்கோ பொடியா 🤣 அந்தாள் இலங்கைப்பிசரை நீங்களும் உதவுங்கோ என்று போராடப்போகுது🤭😂

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்திலை மீன் சந்தேக்கை பாருங்க உவரின்ரை மனிசிகாரி நிண்டு விலை கூடிட்டெண்டு மீன்விக்கிறவையோட மல்லுகட்டி மீன்வாங்கிகொண்டு நிப்பா. இந்தாள் கிறெடிற் காட்டில உருவி கடனை கட்டிறமாதிரி கதைக்கிறார். கடனை அடைக்கிறதெண்டா அடைக்கவேண்டியதுதானே அதற்கேன் இவ்வளவு கூத்து.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  வரவேற்கவேண்டிய  விடயம்

கனவு காண்பதில்  எதற்கு  கஞ்சத்தனம்??🤣

அவரது புத்திசாலித்தனம்  பிடித்திருக்கிறது?😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் செய்த முறை கோமளித்தனமாக இருந்தாலும், இதை பற்றி, நானும், தலயும், மருதரும் திண்ணையில் விவாதித்து இருக்கிறோம்.

இதை, ஒரு தமிழ் அரசியல் தலைவர் சொன்னால், வலு இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னரும் இது குறித்து நானும் பகிடியாக எழுதி இருந்தேன்.

5 பில்லியன் டாலரை தருகிறோம். உங்கள் கடனை கட்டி நிம்மதியாக இருங்கள். அதேவேளை, ஐநாவுக்கு அறிவித்து, எங்களுக்கு எங்கள் நாட்டினை தந்து விடுங்கள். என்று... (இந்தாள் யாழ் வாசிக்கிறாரோ தெரியவில்லை).

எமில் சௌந்தரநாயகம் என்று ஒருவர், 1950களில் லண்டனுக்கு வந்தவர். இன்சூரன்ஸ் கொம்பனி ஆரம்பித்து அப்போதே மில்லியன் கணக்கில் சுத்தினவர். அவரது வீடியோ யூடூப்பில் உள்ளது.

அவர், அமெரிக்க அரசுக்கு சொல்லி இருந்தார், எமது நாட்டினை பிடித்து, பிரித்து, தாருங்கள், திருகோணமலையை தருகிறோம் என்று.

அது சரி, சிங்கள அரசு இதனை கண்டுகொள்ளுமா?

பணம், அய்யா... பணம்... அவர்களுக்கு நாட்டினை அடைவு வைப்பதிலும், விடுதலை முக்கியம்.

சரி, பணத்தினை நாம் எங்கே பெறுவது. பெறலாம். பெறும் வழி குறித்து, ஓணாண்டியார் சொல்லுவார்.😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

இந்தாள் செய்த முறை கோமளித்தனமாக இருந்தாலும், இதை பற்றி, நானும், தலயும், மருதரும் திண்ணையில் விவாதித்து இருக்கிறோம்.

அப்பயும் உந்த ஐடியா கோமாளித்தனமானது எண்டுதானே நான் சொன்னான் நாதம். 

நான் சொன்னதை இந்த வவுனியா நபர் நிறுவியுள்ளார் என எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

அப்பயும் உந்த ஐடியா கோமாளித்தனமானது எண்டுதானே நான் சொன்னான் நாதம். 

நான் சொன்னதை இந்த வவுனியா நபர் நிறுவியுள்ளார் என எடுக்கலாம்.

மருதர் அப்படி சொல்லவில்லையே, தல...

தவிச்ச முசல் அடிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இலங்கை சிங்கள அரசு விரைவில் தவிச்ச முசல் நிலைமைக்கு வந்தே தீரும்....

அப்போது பார்க்கலாம் என்று தான், இந்தியாவும், மேற்கும் காத்திருக்கின்றன.

அந்த காத்திருப்பு.... முடிவில்... மேலே சொன்ன நபர் செய்தது போல, ஒரு தமிழ் அரசியல் கட்சி மூலமாக, அல்லது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலமாகவும் நகரத்தப்படலாம்.

ஆகவே.... இன்றைய சூழலில், எதனையும், நிராகரிக்க முடியாது. பார்ப்போம்.  

நாம் விவாதிக்கும் போது... இலங்கை அரசு தவிச்ச முசல் நிலையில் இருக்கவில்லை என்பது முக்கியமானது.

அத்துடன் சேர்த்து, தென்பகுதியில் புகுந்த சீனத்து டிராகன், கிளப்ப வேண்டுமாயின், சிங்களத்துக்கு பணம் தேவை.

சிங்களத்துக்கு, இந்தியாவோ, அமெரிக்காவோ நேரடியாக பணம் கொடுக்காது. காரணம் தேவையில்லாத ராஜதந்திர சிக்கல்.

அங்கே இருக்கிறது... விசயம்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மருதர் அப்படி சொல்லவில்லையே, தல...

தவிச்ச முசல் அடிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இலங்கை சிங்கள அரசு விரைவில் தவிச்ச முசல் நிலைமைக்கு வந்தே தீரும்....

அப்போது பார்க்கலாம் என்று தான், இந்தியாவும், மேற்கும் காத்திருக்கின்றன.

அந்த காத்திருப்பு.... முடிவில்... மேலே சொன்ன நபர் செய்தது போல, ஒரு தமிழ் அரசியல் கட்சி மூலமாக, அல்லது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலமாகவும் நகரத்தப்படலாம்.

ஆகவே.... இன்றைய சூழலில், எதனையும், நிராகரிக்க முடியாது. பார்ப்போம்.  

நாம் விவாதிக்கும் போது... இலங்கை அரசு தவிச்ச முசல் நிலையில் இருக்கவில்லை என்பது முக்கியமானது.

மருதர் இந்த ஐடியாவை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை நாதம். அவர் புலம்பெயர் நாட்டில் எமது பொருளாதார பலத்தை கூட்டி, அதன் மூலம் மேற்கின் கொள்கையை எமக்கு சாதகமாக்குவது பற்றித்தான் பேசினார்.
சரி அதை விடுவம்.

உங்கட ஆசையை ஏன் கெடுப்பான். 

உந்த வவுனியா தம்பிக்கு ஒரு போனை போட்டு, ரெண்டு பேருமா சேந்து முதல்ல காசை பிரட்டுங்கோ…..

காசு ரெடி எண்டதும் சொல்லுங்கோ….

இலங்கை மற்றும் அவர்களின் கடன்காரரோட டீல் பண்ணி ஒரு நல்ல விலைக்கு உங்களுக்கு வடக்கு-கிழக்கை நான் முடிச்சுத்தாரன்.

கொமிசன் எதுவும் வேண்டாம். சொந்த இனம் என்பதால் நோ சார்ஜ்ஜஸ்.

நல்ல ஒரு லோயர வச்சு பத்திர பதிவும் செய்ய வேணும். இல்லாட்டில் லூட்டன் பாதிரியாருக்கு நடந்த மாரி எங்கட அருமந்த நாட்டை ஆரும் ஆட்டையை போட்டுடுவாங்கள்.

# நாடு வாங்கலியோ நாடு….

# லாபாய்…லாபாய்….தாயட்ட…ஹத்தராய்…🤣

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

இங்கே பதிந்த பலரும்... நகைச்சுவையா எழுதினர்.... நீங்களும் அந்த வழியே தான் போகிறீர்கள்.

பரவாயில்லை.... அந்த மனிதரை விடுங்கள்.

ஒரு விடயத்தினை சொல்லி விட்டு நகர்கிறேன். வெளியே போகவேணும்.

அசைக்க முடியாத, உலகே முன்னர் எப்போதுமே கண்டிராத மாபெரும் பேரரசு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விழுந்த கதை.... எங்கோ ஆஸ்திரியாவில் பிறந்த, ஜெர்மனியில் அதிகாரத்துக்கு வந்த ஒரு மனிதரால் தொடங்கியது. 

இன்று அந்த சாம்ராஜ்யத்தினை நடாத்திய நாட்டினுள், பிரிவினை குரல் கேட்க்கிறது.

1400 மைல்களுக்கு அப்பால் இருந்த அந்தமான் தீவுகளை, மலேசிய / சிலோன் கவர்னர் கீழ் இல்லாமல், டெல்லி கவனேர் ஜெனரல் கீழ் கொண்டு வந்த பிரிட்டிஷ் அரசு அதே போல, 18 மைல் தொலைவில் இருந்த இலங்கையும் கொண்டு போயிருந்தால், நம்ம நாடு, இந்தியாவின் இன்னோரு மாநிலமாக இருந்திருக்கும். 

அதேபோல, ஜின்னா இல்லாமல் இருந்திருந்தால், பாகிஸ்தானோ, பங்களாதேசோ இருந்திருக்க முடியாது. 

உண்மையில் பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மானா அல்லது ஜின்னாவா என்பது விவாதத்துக்கு உரியது. முன்னவர் பாகிஸ்தானில் இருந்து விடுவித்தார், பின்னவர், இந்தியாவில் இருந்து விடுவித்தார்.

1983 இனக்கலவரத்தின் பின்னர், குமுதம் இதழில் ஒரு கேள்வி. பங்களாதேஷ் போல, இந்திரா அம்மையார் இலங்கைக்கு இராணுவத்தினை, அனுப்பி, தமிழர்களுக்கு உதவ முடியாதா என்ற கேள்விக்கு, அரசு பதில்: ஒரு 250 மில்லி அடித்தால்.... இன்று கனவில் அப்படி நடக்கும்.

ஆனால் 1987ல் இந்தியா ராணுவத்தினை அனுப்பியது.

ஆகவே, எதனையும் நிராகரிக்க முடியாது.

இன்று ஒரு காத்திரமான தலைமை, தமிழருக்கு இல்லாமை ஒரு பெரும் குறை என்பதை ஏற்றுக் கொண்டு, எமது விடுதலை ஏதோ ஒரு சிறு பொறிக்காக காத்திருக்கின்றது, அது எங்கே இருந்து வரும் என்று தெரியவில்லை என்பதை புரிந்து கொண்டு நகர்வோம்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

🤔

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

10 hours ago, இணையவன் said:

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, shanthy said:

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார். 😂

விடுதலைப்புலிகள் காலத்தில் இயற்கையால் பாதிக்கப்பட சிங்கள மக்கள் பகுதிகளுக்கு நிவாரண  உதவிகள் சென்றதாக செய்திகளும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார்

தமிழன் என்று நினைக்கிறன் அக்கோய் 
தலைக்கு 4000 ரூபாய் போட்டு இந்தியக்கடனை அடைப்பினம், அந்தப்படத்தில் ரேவதி தான் விஜயை தூண்டிவிடுவார். நம்மாளோட ரேவதி யாரோ தெரியலை. லூஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுபோய் இறக்கிவிடுவது வவுனியாக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

தமிழன் என்று நினைக்கிறன் அக்கோய் 
தலைக்கு 4000 ரூபாய் போட்டு இந்தியக்கடனை அடைப்பினம், அந்தப்படத்தில் ரேவதி தான் விஜயை தூண்டிவிடுவார். நம்மாளோட ரேவதி யாரோ தெரியலை. லூஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுபோய் இறக்கிவிடுவது வவுனியாக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது  

திரைப்படத்தின் பெயரை சொன்னதுக்கு நன்றி @அக்னியஷ்த்ரா. அந்தப்படத்தில் ஒரு நீதிமன்றக்காட்சி வரும் அதில் விஜய் சொல்வார். 

"நான் அணையின் தீக்குச்சி இல்லை எரிகிற சூரியன்" இதையும் ஒருக்கா அந்த புண்ணியவானுக்கு சொல்லிவாட்டால் நல்லது.😊

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அவர், அமெரிக்க அரசுக்கு சொல்லி இருந்தார், எமது நாட்டினை பிடித்து, பிரித்து, தாருங்கள், திருகோணமலையை தருகிறோம் என்று.

இப்படித்தான் நாதம்ஸ் இடைக்கிடை அடிச்சுவிடுவார்! எமில் சவுந்தரநாயகம்தான் தமிழீழக் கோரிக்கையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோடி என்று வரலாறு எழுதினாலும் எழுதுவார்கள்🤪

எமில் தனது மனைவியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலபுலன்களை அமெரிக்க விமானப்படைத்தளம் அமைக்க லீஸுக்குத் தருவதாகவும் அதற்கு அவரின் மனைவியை யாழ்ப்பாணத்தின் இராணியாக்க உதவவேண்டும் என்று டீல் பேச முனைந்தார். திருகோணமலையை அவர் பிரஸ்தாபிக்கவேயில்லை.  எமில் 1968 இல் சிறையில் அடைக்கப்பட்டு 1974 கிறிஸ்மஸ் நேரம் வெளியே வந்தார். அதன் பின்னர்தான் அவர் இப்படியான டீலுக்கு வெளிக்கிட்டார். ஆனால் தனது 53 ஆவது வயசிலேயே 1976 இல் இறந்துவிட்டார்..

அவரைப் பற்றிய விவரணப்படம் 👇🏾

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

இஞ்ச பாருங்கோவன்....

எங்க வந்து, முட்டையில ஏதோ பிடுங்க நிக்கிறீர்கள்.....

யூரியூப்பில இருக்குது என்றேன்..... இரவு முழுக்க தேடி......

விடயம் அதுவல்ல...... அப்படி ஒரு டீல் போடு்ம் தில் இருந்திருக்கிறது.....

அதுவே இன்றைய தேவை..... அதனையே நான் சொல்ல வந்தேன். எமில் சரித்திரம் இல்லை.... நான் சொல்ல முணைந்தது...

புறோபைல் படத்து சின்னப் பொடி வேலை மாதிரி தான் இருக்குது..... இந்த குறிப்பு.... 🤦‍♂️🤔

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.