Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தை வீணாக்காதீர்கள் .காலம் பொன் போன்றது .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்!
ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால்,
10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...!
 
இன்னொருவன்
30 வயதில் திருமணம் செய்கிறான்.
1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...!
ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான்.
ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...!
 
இன்னொருவன்
27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...!
ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில்
அவர் மரணித்து விடுகிறார்...!
இன்னொருவர்
50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து விட்டு செல்கிறார்...!
நம்மால் புரிந்துகொள்ள சிரமமான இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் வல்ல இறைவன்
முன்பே கணித்து வைத்தவை.
 
எழுதுகோல்கள் தூக்கப்பட்டு விட்டன. ஏடுகளும் மடித்து வைக்கப்பட்டு விட்டன...!
அவனைப் போல் எனக்கில்லையே என்று நீ புலம்பும் அதே நேரத்தில்,
உன்னைப்போல் நான் இல்லையே என்று அவன் புலம்பிக்கொண்டிருப்பான்.
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!
 
உனக்கு முன்னால் உள்ளவர்கள் முந்தியவர்களும் அல்ல,
உனக்குப் பின்னால் உள்ளவர்கள் பிந்தியவர்களும் அல்ல...!
நீயும் யாரையும் முந்தவும் இல்லை, யாரையும் பிந்தவும் இல்லை...!
அந்த இறைவன் உனக்கென குறித்த நேரத்தில் நீ உனது பணியை
செய்து கொண்டிருக்கின்றாய்!
அவ்வளவே...!ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 
நன்றி முக புத்தகம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிலாமதி said:

உண்மைதான். எமக்கு அப்பால்பட்ட சக்தி ஒன்று உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிலாமதி said:

நன்றி முக புத்தகம்.

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

ஒன்று சறுக்கினால் இன்னொன்றில் ஏறவேண்டியது தானே. 😀

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் தாயார் சொல்லுவா

எல்லோருக்கும் தலையில் எழுதி மயிரால் மூடிவிட்டிருக்கென்று.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னக்கா முகப் புத்தகம் வேலை செய்யவில்லை என்று சொல்லிப் போட்டு 

இப்படி எப்படி?

6 minutes ago, நிலாமதி said:

ஒன்று சறுக்கினால் இன்னொன்றில் ஏறவேண்டியது தானே. 😀

அக்கா,  இவ்வளவு வேகமாக… மற்றதில், ஏறுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அக்கா,  இவ்வளவு வேகமாக… மற்றதில், ஏறுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. 🤣

அது தான் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடியப்ப சிக்கலை அவிழ்ப்பதிலும் பார்க்க , பிடடாகவே குழைத்து விடலாம்.😀
 ஒனறு தனிப்படட து மற்றது நட்ப்புகளுக்கானது நடப்புகளுக்கானதில் சில தவறுகள் ( என்னால் ) ஏற்பட்டுவிட்ட்து. அதைப்பேசாமல் கை விடடாச்சு  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எனது மனைவியின் தாயார் சொல்லுவா

எல்லோருக்கும் தலையில் எழுதி மயிரால் மூடிவிட்டிருக்கென்று.

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

மொட்டை விழ முதல் எழுதியாச்சு.  ......மொட்டை விழுந்தாலும்.  வெளியில் தெரியாது 😁

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லி இருக்கு........கருத்துக்களால் மறுக்கலாம் ஆனால் யதார்த்தம் இதுதான்......!  👍

நன்றி சகோதரி......!  

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, suvy said:

உண்மையை சொல்லி இருக்கு........கருத்துக்களால் மறுக்கலாம் ஆனால் யதார்த்தம் இதுதான்......!  👍

நன்றி சகோதரி......!  

ஏதோ ஒரு ஒழுங்கில் சகலமும் நடைபெறுவதை நானும் உணர்ந்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மொட்டைத் தலையருக்கு எங்கே எழுதியிருக்கு ? 🤨

நீங்க என்னை சொல்லல்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்க என்னை சொல்லல்லையே?

உங்களுக்கு மொட்டை என்று எனக்குத் தெரியாது  பிரியன், நீங்கள் சொல்லும்வரை 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:
உனக்கு விதிக்கப்பட்டது வேறு..அவனக்கு விதிக்கப்பட்டது வேறு..
ஆக, உனது நேரத்தில் உனது வேலையை திறம்பட செய்துவிடு...!

உண்மை
உன்னால் முடிந்ததை இன்றே செய்து விடு
அது உன் கடமை
என்னால் முடியவில்லை என்று நான் எப்போதும்
கவலைப் பட்டதில்லை
இப்போது எனது பிள்ளைகள் அதை நிறைவேற்றி உள்ளார்கள்
தலைவிதி என்பது எங்களையும் மீறிய ஒரு சக்தியால் நிர்ணயிக்கப்படுகின்றது அக்கா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நிலாமதி said:
ஆதலால், உனக்கென குறிக்கப்பட்ட நேரங்காலத்தை
செவ்வனே பயன்படுத்திக்கொள்...!
 
நல்லதொரு இணைப்பு.
பிறக்கும் போதே உன் தலைவிதி எழுதப்பட்டு விட்டதென முதியவர்கள் கூறுவார்கள்.
நாடு விட்டு நாடுகள் வந்து இப்படி வாழ்வோம் என கனவிலும் நினைத்திருப்போமா?

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை வீணாக்காதீர்கள் காலம் பொன் போன்றது - நல்லதொரு அறிவுரை 👍

ஆனாலும் இலங்கை தமிழ் பிரதேசங்களில் குறிப்பிட்ட அளவு ஆட்களை  தேர்ந்து எடுத்து மேற்குலக நாடுகளுக்கு சென்று இன்பத்துடன் வாழ்வாயாக என்று அவர்கள் தலையில் தலைவிதி எழுதி அனுப்பி வைக்கும் உடான்ஸ் கடவுளின் சக்தியே மகத்தானது.

எல்லாம் விதி என்றல் எதற்கு குத்தி முறிவான், பேசாமல் இருக்கலாம் அல்லவா ? போராட்டம் தோல்வி அடைந்து இத்தனை மக்கள் இறந்ததும் ஏற்கனவே இறைவனால் தீர்மானிக்கப்பட்டதென்றால் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி முடித்த சிங்களவருக்கு நாங்கள் நன்றியல்லவா சொல்ல வேண்டும் ?

ஒவ்வொரு நிகழ்வின் மாற்றத்துக்கும் ஒரு காரணி உண்டு. இயலாமையின் வெளிப்பாடுதான் விதி. ஒரு காரியம் நடக்கவேண்டி விரதம் இருந்து அது நடந்தால் இறையருள் ! நடக்காவிட்டால் விதி 😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருமே முயற்சி செய்கின்றவர்கள் தான்.ஆனால் வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது ஏன்?

10 minutes ago, குமாரசாமி said:

எல்லோருமே முயற்சி செய்கின்றவர்கள் தான்.ஆனால் வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அது ஏன்?

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

  • கருத்துக்கள உறவுகள்

பதிவில் உள்ள செய்தி அருமை. பதிவையும் யாழ் சொந்தங்களின் பின்னூட்டங்களையும் வாசித்தபின் பின்வருமாறு எழுதத் தோன்றுகிறது :

       "வாழ்வில் நமக்கு ஒப்பீட்டுக் கவலை அவசியமில்லை. நமது முயற்சிகளும் மனநிறைவுமே நமது ஆளுமையில் உள்ளவை"  என்பதுவே பதிவின் மையக் கருத்து. மற்றபடி "இறைவன் கணித்து வைத்தவை" என்பதும், "விதிக்கப்பட்டவை" என்பதும் அவரவரின் வேறுபட்ட வெளிப்பாடுகள்; நம்பிக்கை சார்ந்தும் இருக்கலாம். மேற்குறிப்பிட்ட பதிவில் நம்பிக்கை சார்ந்ததாகவே தோன்றுகிறது.

          நான் பொதுவாக இவற்றை சமூக மரபு சார்ந்த கவித்துவ வெளிப்பாடாகக் கொள்வதுண்டு. உதாரணமாக "அட கடவுளே !" மற்றும்  "அப்பணிக்குப் பிள்ளையார் சுழி போட்டாயிற்று" போன்ற மரபுச் சொல்லாடல்களை நான் பயன்படுத்துவதுண்டு. இத்தகைய பயன்பாட்டால் நான் இறை நம்பிக்கை உள்ளவன் என்று பொருளில்லை. ஒரு மொழி தரும் அழகியலை நான் இழக்கத் தயாரில்லை. அவ்வளவே.  

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, இணையவன் said:

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

ஒரு பாடத்தை மூன்றாம் தரம் பரீட்சை எழுதுபவர்கள் எல்லாம் 100 மார்க் வாங்குகின்றார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, இணையவன் said:

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

உலகில் தமிழர்கள் மட்டும் அடிமைகளாக அலையவில்லையே?  ஆபிரிக்க நாட்டவர்களும் அடிமைகளாகத்தானே திரிகின்றார்கள். எல்லோருக்கும் ஆறறிவு மூளை தானே வேலை செய்கின்றது.அதெப்படி வெள்ளைக்காரன் மட்டும் உயர்ந்து காணப்படுகின்றான்?

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் அண்மையில் பார்த்த விடயம் இது. ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது?

இதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள். ஆபிரிக்காவில் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவு என நினைக்கின்றேன்.அதே போல் பிரான்ஸ்லிம் குறைவு தானே?
 
8 hours ago, குமாரசாமி said:

உலகில் தமிழர்கள் மட்டும் அடிமைகளாக அலையவில்லையே?  ஆபிரிக்க நாட்டவர்களும் அடிமைகளாகத்தானே திரிகின்றார்கள். எல்லோருக்கும் ஆறறிவு மூளை தானே வேலை செய்கின்றது.அதெப்படி வெள்ளைக்காரன் மட்டும் உயர்ந்து காணப்படுகின்றான்?

இது பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் கருத்துப்படி வெள்ளைக்காரனுக்கு மட்டும்தான் நல்லது நடக்க வேண்டும் என்பதை விதி மூலம் கடவுள் தீர்மானித்துள்ளார்.
சரிதனே?

மேற்கு நாடுகள் மட்டுமல்ல, வளர்ச்சியடைந்த பெரும்பாலான நாடுகள் கடவுளை ஒதுக்கத் தொடங்குகின்றன (அல்லது கடவுளை ஒதுக்குவதால் முன்னேறுகின்றனவா?) இது எனது கருத்து அல்ல, தரவு. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, இணையவன் said:

பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் தேறுவதில்லை. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் எங்கே பிழை விட்டார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருக்காவிட்டால் திருத்தப்பட்ட வினாத்தாள்களைப் பார்த்தால் பதில் கிடைக்கும். 

நீங்கள் விதியை நம்பினால் உங்களிடம் ஒரு கேள்வி. பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் அடிமைத்தனமாக அலைய வேண்டும் என்ற விதியைக் கடவுள் ஏன் உருவாக்கினார் ?

காரணம் இலகுவானது எமக்கு  ஊட்டப்பட்ட கல்வி முறை பிழையானது 

Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot.”

― Richard P. Feynman

ஒருவர் முனைவர் பட்டம் பெற்றாலே காணும் நம்மவர் கேட்டு கேள்வியின்றி அவரின் சொற்களை கேட்டு கொள்வது நாலு எழுத்தும் ஆங்கிலமும் தெரிந்தால் எடிகேட்பமிலி என்று துக்கிவைத்து கொண்டாடுவது எமது போராட்டம் தோற்பதுக்கு மிக முக்கிய காரணமே எமது சமூகத்தில் இந்த படித்த முட்டாள்கள் தான் .

3 minutes ago, பெருமாள் said:

Never confuse education with intelligence, you can have a PhD and still be an idiot

கல்வியை புத்திசாலித்தனத்துடன் ஒருபோதும் குழப்ப வேண்டாம், நீங்கள் பிஎச்டி படித்து முடித்த பின்  இன்னும் நீங்கள்  முட்டாள்களாக இருக்கலாம். புத்திசாலித்தனம் வேறு கல்வி வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.