Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

 

உக்ரேனில் சண்டைக்காக மேற்குலகு பில்லியனில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. 

துருக்கிக்கும் சுரியாவுக்கும் கிள்ளியாவது கொடுத்தார்களா ? மனிதாபிமானத்துக்காக கண்ணீர் விடுபவர்கள் பதில் கூறுங்கள். 

இவர்களது அண்ணன் தம்பிகளின்  பணத்தில் தான்  மேற்குலகே
ஏன் அமெரிக்காவே  வாழ்கிறது???

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை. அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்க

alvayan

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு... இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை

விசுகு

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்? முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை.

அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்காட்டித்தான் மனிதாபிமானத்தைக் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெறும் அற்ப புத்தி!

என்னுடன் பணிபுரியும் துருக்கி நண்பனின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே ரென்ற்றுக்குள் படுத்துறங்குகின்றனர். பெரிய உதவிகள் இன்னும் கிட்டவில்லை.

உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு உலகத்தில் நடக்கும் எந்த அழிவுகளை பற்றியும் கவலை இல்லை. அதற்காக சந்தோசப்படவுமில்லை. ஆனால், எங்கு அழிவுகள் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் தான் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இவர்களது அண்ணன் தம்பிகளின்  பணத்தில் தான்  மேற்குலகே
ஏன் அமெரிக்காவே  வாழ்கிறது???

மேற்கு கட்டி வளர்க்கப்பட்டதே கொள்ளைகளால்தான் என்பது உங்களுக்குத் தெரியாத என்ன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு உலகத்தில் நடக்கும் எந்த அழிவுகளை பற்றியும் கவலை இல்லை. அதற்காக சந்தோசப்படவுமில்லை. ஆனால், எங்கு அழிவுகள் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் தான் 

சரியான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2023 at 15:45, கிருபன் said:

 அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. 

சும்மா போங்கப்பூ....

வெள்ளை நிறத்திற்காக கால் கழுவி அடிமை விசுவாசத்தைக் காட்டுவதை விடவா கூலிக்கு மாரடிப்பது தாழ்ந்துவிட்டது ? 🤣

இத்தால் சகலரும் அறிவது....

கூலிக்கு மாரடிக்கும் தொழிலை இழிவாகக் காட்டியதற்காக யார்  களம் சார்பாக கருப்பனுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சும்மா போங்கப்பூ....

வெள்ளை நிறத்திற்காக கால் கழுவி அடிமை விசுவாசத்தைக் காட்டுவதை விடவா கூலிக்கு மாரடிப்பது தாழ்ந்துவிட்டது ? 🤣

புலம்பெயர்ந்த எல்லோரும் உங்களைப் போல மகாராஜாவாக வாழமுடியாதுதானே @Kapithan. அதற்காக கால் கழுவி அடிமையாக இருக்க நாமெல்லாம் பழைய கால ரோமாபுரியில் வாழவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த எல்லோரும் உங்களைப் போல மகாராஜாவாக வாழமுடியாதுதானே @Kapithan. அதற்காக கால் கழுவி அடிமையாக இருக்க நாமெல்லாம் பழைய கால ரோமாபுரியில் வாழவில்லை.

அதே நாட்டில் அதே கொள்ளையடித்த காசில் அதே வாழ்வை வாழ்ந்தபடி சில பக்கங்களை மறந்து விட்டு விரல் நீட்டிப்பேசும் இன்னும் வாழும் ரோமாபுரி மன்னர் அவர். 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுவாசத்திற்காக எதையும் செய்வார்கள் போலுள்ளது.:face_with_tears_of_joy:
அழிவுகள் ஆயிரமிருந்தும் உக்ரேனுக்காக மட்டும் அழுவதுதான் சகிக்க முடியவில்லை. :nerd_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த எல்லோரும் உங்களைப் போல மகாராஜாவாக வாழமுடியாதுதானே @Kapithan. அதற்காக கால் கழுவி அடிமையாக இருக்க நாமெல்லாம் பழைய கால ரோமாபுரியில் வாழவில்லை.

பேச்சு பல்லக்கு, தம்பி கால்நடை என்று ஒரு சொல்லடை உங்களைப் போன்றோரை நினைவுபடுத்துகிறது கிருபன். 🤣

3 hours ago, விசுகு said:

அதே நாட்டில் அதே கொள்ளையடித்த காசில் அதே வாழ்வை வாழ்ந்தபடி சில பக்கங்களை மறந்து விட்டு விரல் நீட்டிப்பேசும் இன்னும் வாழும் ரோமாபுரி மன்னர் அவர். 

நாம் இருவரும் சேர்த்துதானே கொள்ளையிட்டோம். பங்கும் சரி சமானமாகப் பிரித்தோமே மறந்துவிட்டீர்களா விசுகர், கோபம் ஏன்? பங்கு பிரிப்பில் குறையேதும் உள்ளதோ ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

 

நாம் இருவரும் சேர்த்துதானே கொள்ளையிட்டோம். பங்கும் சரி சமானமாகப் பிரித்தோமே மறந்துவிட்டீர்களா விசுகர், கோபம் ஏன்? பங்கு பிரிப்பில் குறையேதும் உள்ளதோ ? 

🤣

நீங்கள் நினைக்கிறீர்கள் இதில் உள்ள விசத்தை நான் அறியமாட்டேன் என்று.  எம் இனத்தின் இது போன்ற உதபுவர்களை பதம் பார்க்கும் ஈனத்தனத்தை அறிந்ததால் தான் 

அதில் காலை வைக்கும் போதும் தெரிந்தே வைத்தேன் எடுக்கும் போதும் மிக மிக சுத்தமாகவே எடுத்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

நீங்கள் நினைக்கிறீர்கள் இதில் உள்ள விசத்தை நான் அறியமாட்டேன் என்று.  எம் இனத்தின் இது போன்ற உதபுவர்களை பதம் பார்க்கும் ஈனத்தனத்தை அறிந்ததால் தான் 

அதில் காலை வைக்கும் போதும் தெரிந்தே வைத்தேன் எடுக்கும் போதும் மிக மிக சுத்தமாகவே எடுத்தேன். 

விசுகர்,

கொள்ளையடித்த காசில் வாழ்வதாக நீங்கள் என்னைக் கூறியபோது அதை அப்படியே உங்களிடம் திருப்பிவிட்டேன். அம்புட்டுதே. 

முன்னர் என்னை சோசல் காசில் வாழ்வதாக கூறினீர்கள். தற்போது கொள்ளையடித்த காசில் வாழ்வதாகக் கூறுகிறீர்கள். உண்மையில் இவற்றை நான் பெரிதாக எடுக்காமல் நகைச்சுவையாக கடந்துபோகிறேன். ஆனால் நீங்கள் கூறியதை அப்படியே உங்களிடம் நகைச்சுவையாகத் திருப்பிவிடும்போது அதை விசம் என்கிறீர்கள். 

உங்களுக்கு வந்தால் ரத்தம், பிறருக்கு வந்தால் தக்காளிச் சட்னியா 😀

(விசுகர், நீங்கள் யாரென்பதை நான் அறியேன், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் யாம் அறிந்திலோம். இங்கே கூறப்படுவது எல்லாமே யாழ்  களத்தில் நீங்கள் எழுதும் கருத்துக்களுக்கான செல்லச் சண்டையே தவிர தனிப்பட்ட ரீதியில் எதுவுமே இல்லை. 👍)

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2023 at 20:16, alvayan said:

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு...

இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை வேறை லெவெல்..எந்த சயத்தைவிடவும் நாம்தான் பெரிது..அல்லாதான் பெரிது..இப்ப..கதை வேறை..

எங்க‌ட‌ நாட்டை கூட‌ 2004 சுனாமி தாக்கிய‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அத‌ற்கு எங்க‌ட‌ ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்தினார்க‌ளா
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இய‌ற்கை கொடுத்த‌ அழிவு
டென்மார்க்கில் கூட‌ நில‌ ந‌டுக்க‌ம் வ‌ந்த‌து க‌ட‌லை ஒட்டி இருக்கும் ஊரில் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் பாதிப்பு ஒன்றும் பெரிசா இல்லை................

இந்த‌ இய‌ற்கை அழிவோடு அர‌சிய‌லை ம‌த‌த்தை க‌ல‌ப்ப‌து அழ‌க‌ல்ல‌ 

உல‌கில் அதிக‌ நில‌ ந‌டுக்க‌ம் ஏற்ப‌ட்ட‌ நாடுக‌ளில் இன்டொனேசியாவும்.............அந்த‌ நாடு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு தீங்கு ஒன்றும் செய்ய‌ வில்லை ஆனால் இய‌ற்கையால் ப‌ல‌ அழிவுக‌ளை ச‌ந்திக்கும் நாடு


இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இது போல் ந‌ட‌க்க கூடாது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பையன்26 said:

இது இய‌ற்கை கொடுத்த‌ அழிவு

அது தான் உண்மை 👍
இயற்கை அழிவுகள் இலங்கையில் தமிழர்கள் பிரதேசங்களிலும் வரலாம், சிங்களவர் பிரதேசங்களிலும் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

எங்க‌ட‌ நாட்டை கூட‌ 2004 சுனாமி தாக்கிய‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அத‌ற்கு எங்க‌ட‌ ம‌த‌த்தை கொச்சை ப‌டுத்தினார்க‌ளா
 

நாங்கள் ..எந்த சந்தர்ப்பத்திலும் மத மமதை கொண்டு அலையவில்லை ஐயா...லட்சத்தில் ஒருசிலர் குரான் எரித்ததிற்கு ..துள்ளிய துள்ளலுக்கே நான் எழுதியது...அதில் அந்த மக்களுக்கு  அனுதாபம் செலுத்தியுமுள்ளேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்வு!

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரும் பெருநிறுவனங்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்வு!

பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலகின் மிகப்பெரும் நிறுவனங்களும் நாடுகளும் முன்வந்துள்ளன.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் , துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 874,000 பேருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் சூடான உணவை வழங்க 77 மில்லியன் டொலர்களைக் கோருகிறது.

பிராந்தியத்தின் கடுமையான குளிர்ந்த குளிர்கால நிலைமைகளில் சூடான உணவு தேவைப்படுபவர்களில் சிரியாவில் புதிதாக இடம்பெயர்ந்த 284,000 மக்களும் துருக்கியில் 590,000 பேரும் அடங்குவர், இதில் 45,000 அகதிகள் மற்றும் 545,000 உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர்.

இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து அமைப்பு ஆகியவை துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவு தரும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விளையாட்டு கூட்டமைப்புகளாக மாறியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக சர்வதேச ஒலிம்பிக் ஆணையம் அறிவித்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைக்கு ஆதரவாக ஆரம்ப தொகையாக 200,000 யூரோக்களை ஐரோப்பிய கால்பந்து அமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான அதன் அறக்கட்டளை, நன்கொடையாக வழங்கும் என அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் பிரீமியர் லீக், ஒரு மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கத்தின் அதிர்வுகளுக்குப் பிறகு 100 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தொடர்கின்ற நிலையில், துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,700க்கும் அதிகமாக உள்ளது.

துருக்கியில் வெள்ளிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 20,213க்கும் அதிகமாக உயர்ந்தது, சிரியாவில் 3,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

நிலநடுக்கங்களுக்குப் பிறகு சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
 

 

https://athavannews.com/2023/1323846

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிரியாவிற்காய் ஒருத்தரும் நிதியுதவி கோரவில்லை ? அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏன் சிரியாவிற்காய் ஒருத்தரும் நிதியுதவி கோரவில்லை ? அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா 

கேடு கெட்ட‌ உல‌க‌ம் எதிலும் சுய‌ ந‌ல‌ம்

இந்தியா இர‌ண்டு நாட்டுக்கும் உத‌வுவ‌தாக‌ செய்தியில் பார்த்தேன் அக்கா.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=1218620215437592 👈

கட்டிட இடிபாடுகளுக்கு  உள்ளேயிருந்து வீடியோ அனுப்பிய சிரியா சிறுவன்!
நான் இறப்பேனா இல்லை இன்னும் உயிர் வாழ்வேனா என்று தெரியவில்லை. 
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்… மேற்கண்டவாறு சிரியாவில் பூகம்பத்தின் 
இடிபாடுகளின் கீழ் சிக்குண்டு வெளியேற வழியில்லாமல் தவிக்கும் 
தைரியமான சிறுவன் அங்கிருந்து தனது மொபைல் மூலம் வீடியோ செய்து 
அனுப்பிய காட்சியே இதுவாகும்.மீட்பு பணியாளர்கள் தனக்கு அருகாமையில் 
நெருங்கிவிட்ட நிலையில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?

துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகளின் பெற்றோர் யார் எங்கே என்பதும் தெரியாத நிலை இருக்கிறது.

இதுகுறித்து துருக்கி பிபிசி செய்தியாளர் டாம் பேட்மேன் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கே அவர் கண்ட காட்சிகளையும், சேகரித்த செய்திகளையும் இங்கே கட்டுரையாக தொகுத்து வழங்குகிறது பிபிசி.

துருக்கியின் அடனா நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்

குழந்தைகள் தங்களக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகள் எவ்வளவு கொடுமையானது என்பதை புரிந்துகொள்ள முடியாத வயதில் இருக்கின்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு ஆறு மாத பெண் குழந்தைக்கு மருத்துவர்கள் புட்டிப்பால் புகட்டிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவளது பெற்றோர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னும் நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத குழந்தைகள் அங்கே இருக்கின்றனர். அவர்களது பெற்றோர்கள் இறந்திருக்கக்கூடும் அல்லது நிலநடுக்கத்தின் இடர்பாடுகளில் சிக்கி கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கக்கூடும்.

துருக்கியில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் அவர்களது குடும்பங்களை சிதைத்தது மட்டுமல்லாமல் தற்போது அவர்களது அடையாளங்களையும் பறித்துக் கொண்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் குழந்தையின் கைகளை மருத்துவர் நர்ஷா கெஸ்கின் இறுகப் பற்றியிருந்தார். அந்த குழந்தையின் படுக்கையில் 'யாரெனத் தெரியாதவள்' (anonymous) என்று ஒட்டப்பட்டிருந்தது.

அவளுக்கு பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தன. அவளது கண்களுக்கு கீழே கருத்து போயிருந்தது. முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அத்தகைய நிலையிலும் அவள் எங்களை திரும்பி பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.

`அவள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டாள், எப்படி இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாள் என்பது எங்களுக்கு தெரியும். ஆனாலும் அவளது சரியான முகவரியை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கான தேடல் தொடர்ந்து வருகிறது` என்கிறார் அதனா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரும், இணை இயக்குனருமான மருத்துவர் கெஸ்கின்.'

இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான குழந்தைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து இடிந்த கட்டடங்களின் இடர்பாடுகளுக்கு நடுவே மீட்கப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் இந்த அதனா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதற்கு ஒரே காரணம் இந்த மருத்துவமனை கட்டடம் மட்டும்தான் இன்னும் இடியாமல் நின்றுக் கொண்டிருக்கிறது.

5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க இந்தக் குழந்தை தலையில் காயம்பட்டதுடன், பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன.
 
படக்குறிப்பு,

5 அல்லது 6 வயது மதிக்கத்தக்க இந்தக் குழந்தை தலையில் காயம்பட்டதுடன், பல எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன.

இங்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நகரத்தின் பல்வேறு மருத்துவமனைகள் இடிந்து விழுந்துவிட்டது. சில மருத்துவமனைகள் சேதமடைந்து கிடக்கின்றன. அதனால் இந்த அதனா மருத்துவமனை அனைவருக்கும் ஒரு மீட்பு மையமாக மாறிவிட்டது.

நிலநடுக்கத்தால் இஸ்கெண்டிருன் நகரத்தில் இருந்த மருத்துவமனை கட்டடம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே அங்கே மகப்பேறு சிகிச்சை பிரிவில் புதிதாக பிறந்திருந்த பல குழந்தைகள் அவசர அவசரமாக இங்கே ஒரே மூச்சில் கொண்டு வரப்பட்டனர்.

`தற்போது நாட்டின் பேரிடர் மண்டலம் முழுவதும் தாங்கள் யார் என்ற அடையாளம் தெரியாத சுமார் 260 குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர்` என்று துருக்கியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்னும் பல பகுதிகளில் தேடல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இந்த எண்ணிக்கைகள் கணிசமான அளவு உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

மருத்துவர் கெஸ்கினை நான் பின் தொடர்ந்து சென்றபோது மருத்துவமனை முழுவதும் நிலநடுக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகாக நிரம்பியிருந்த காட்சிகளை என்னால் காண முடிந்தது. அறுவை சிகிச்சை பிரிவுக்குள் சென்றபோது அங்கே காயமடைந்த குழந்தைகள் பலர் இருந்தனர்.

அங்கே ஒரு பெண் குழந்தை கைகளில் டிரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். அவளுக்கு தலையில் பலத்த காயங்களும், பல இடங்களில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

அந்த குழந்தை அவளது பெயரை கூறக்கூடிய நிலையில் இருக்கிறாளா என்று நான் மருத்துவர் இலக்னூர் பன்லிசூர் கேட்டபோது,`அவளது கண் அசைவுகள் மற்றும் உடல் சைகைகள் மூலமாகவே தற்போது அவள் சொல்ல வருவதை தாங்கள் புரிந்து கொள்வதாக` அவர் கூறினார்.

இப்படியொரு பயங்கரமான நிலநடுக்கத்தை எதிர்க்கொண்ட அதிர்ச்சியின் காரணமாக இங்கே பல குழந்தைகள் பேச முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அவர்களது பெயர்கள் தெரியும். ஒருவேளை ஒரு சில நாட்கள் கழித்து அவர்கள் சீரான மனநிலைக்கு திரும்பிய பின் அவர்கள் பேசுவதற்கு முயற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளின் முகவரிகளை தேட அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் முகவரிகளுக்கு பதிலாக கட்டடங்களின் உருக்குலைந்த நிலைகளே காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளில் 100 பேர் ஏற்கனவே மீட்பு மையத்தினரால் கவனிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது துருக்கியின் சமூக ஊடகங்கள் முழுவதும் இடர்பாடுகளில் சிக்கி தொலைந்துபோன குழந்தைகளின் புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன. அவர்கள் எந்த பகுதியில், எந்த கட்டிடங்களில் வசித்து வந்தார்கள் என்பது குறித்த விவரங்களை பகிர்ந்து தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர் இல்க்னர் பேன்லிசீசர், குழந்தை அறுவை சிகிச்சை வல்லுநர்
 
படக்குறிப்பு,

அதிர்ச்சி காரணமாக பல குழந்தைகளால் பேச முடியவில்லை என்கிறார் டாக்டர் இல்க்னர் பேன்லிசீசர், குழந்தை அறுவை சிகிச்சை வல்லுநர்

குழந்தைகளின் அடையாளங்களை கண்டுபிடிக்கும் பணியில் துருக்கியின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே சமயத்தில் அதனா மருத்துவமனையில் காயமடைந்த நபர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தில் மருத்துவர் கெஸ்கின்னும் தனது உறவினர்கள் பலரை இழந்துவிட்டார். தற்போது தனது குழந்தைகளுடன் அதனா மருத்துவமனையில் அவர் வசித்து வருகிறார்.

இதுகுறித்து மருத்துவர் கெஸ்கின் கூறும்போது ` இப்போது எனது குழந்தைகள் என்னிடம் இருக்கின்றனர். அதற்காக நான் கடவுளுக்கு மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு தாயாக குழந்தைகளை இழந்து தவிப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது எனக்கு தெரியும். அதே போல் இந்த சமயத்தில் நாம் திடமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த குழந்தைகளுக்காக இப்போது நாம் மட்டுமே இருக்கிறோம்` என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

நிலநடுக்கத்தில் தொலைந்துபோன சிலர் தங்களது குடும்பங்களை தேடி இணைந்து வரும் காட்சிகளையும் நம்மால் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. ஆனாலும் அங்கே பல குழந்தைகள் அடையாளங்களை இழந்து, தாங்கள் யாரென்றே தெரியாத நிலையில் இருக்கின்றனர் என்பதுதான் இன்றைய துருக்கியின் உண்மை நிலை! துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர்.

https://www.bbc.com/tamil/global-64609539

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

ஏன் சிரியாவிற்காய் ஒருத்தரும் நிதியுதவி கோரவில்லை ? அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா 

கோரோனா காலங்களிலும் மேற்குலகு கும்பல் ஈரான்,வடகொரியா,சிரியாவிற்கு எல்லாம் மனிதாபிமான அடிப்படியில் மருந்துகளை விநியோகிக்க தடை விதித்திருந்தார்கள்.அவர்களுக்கு சீனாவும் ரஷ்யாவும் உதவி செய்தது. நில நடுக்க விடயத்திலும் ரஷ்ய நிவாரண படைகள் சிரிய களத்தில் இருக்குமென நம்பலாம்.ரஷ்ய ஊடகங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

மேற்குலகிற்கு பின்பக்கம் கழுவினால் மட்டுமே உதவி செய்வார்கள் என்பது ஊரறிந்த விடயமல்லவா?

இப்போது நம்மவர்கள்  கழுவ ஆரம்பித்து விட்டார்கள் அல்லவா? இனி தனி நாடுதான்.:smiling_face_with_tear:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 05:05, alvayan said:

குரான் எரித்ததிற்கு ..துள்ளிய துள்ளலுக்கே

சுவீடனில் குர்ரான் எரித்ததிற்கு துருக்கிய பிரதமர்  எர்டோகன் துள்ளியது அல்லாவின் இராஜ்யம் தனது தலைமையில் தான் அமையபோவதாக தனது மக்களை பேய்காட்டி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு.  தற்போது அல்லாவின் பூமியில் பேரழிவுகரமான இயற்கை அழிவு நடை பெற்றது அவரது மதவாத அரசியலுக்கு பெரிய பின்னடைவு.இப்போதே துருக்கிய மக்கள் அவர்மீது வெறுப்படைய தொடங்கிவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 28,000 ஆக உயர்வு!’ உலகம் இன்னும் இருக்கிறதா’ என கேட்டு அழுத மூதாட்டி !

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000ஐ கடந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் ஜேர்மன் மீட்பு பணியாளர்களும் ஆஸ்திரிய இராணுவமும் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி பெயர் குறிப்பிடப்படாத குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டத்தை மீறும் எவரையும் தண்டிப்பதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்க தாம் தயாராக உள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்னும் சில பகுதிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து குழந்தைகளையும் முதியவர்களையும் உயிருடன் மீட்டு வருகின்றனர்
பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச மீட்புப் பணியாளர்கள், உறைந்த வானிலை இருந்தபோதிலும், இன்னும் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றனர் .
7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தின் மையப்பகுதியான கஹ்ராமன்மாராஸ் என்ற தெற்கு நகரத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே இழுக்கப்பட்ட 70 வயதான மெனெக்சே ‘ உலகம் இன்னும் இருக்கிறதா’ என கேட்டு அழுதார்.

தெற்கு ஹடேயில் 123 மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு வயது சிறுமி உயிருடன் காணப்பட்டதாக Hürriyet நாளிதழ் தெரிவித்துள்ளது,

துர்க்கியே மற்றும் சிரியா முழுவதும் குறைந்தபட்சம் 870,000 பேருக்கு உணவு உதவி தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கலாம் என மேலும் தெரிவித்துள்ளது .

நிலநடுக்கத்தில் 12,141 கட்டிடங்கள் இடிந்து அல்லது கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

https://thinakkural.lk/article/239062

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவை பொறுத்த வரை உதவிகள் செய்வது, மனிதாபிமான நிவாரண உதவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ரஷ்ய  படைகள்  ஆக்கிரமிக்கவும், அழிப்பதற்கு மட்டுமே நாடுகளில் இறங்கும். ஈழ தமிழ்  ரஷ்ய ஆதரவு தத்துவதலைவர் தொடங்கி தொண்டர்கள் வரை மேற்குலக நாடுகளிலேயே தமக்குரிய உயர்ந்த பாதுகாப்பையும், நல்லவாழ்கையையும் தேடிக்கொண்டதை காணலாம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

ரஷ்யாவை பொறுத்த வரை உதவிகள் செய்வது, மனிதாபிமான நிவாரண உதவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ரஷ்ய  படைகள்  ஆக்கிரமிக்கவும், அழிப்பதற்கு மட்டுமே நாடுகளில் இறங்கும். ஈழ தமிழ்  ரஷ்ய ஆதரவு தத்துவதலைவர் தொடங்கி தொண்டர்கள் வரை மேற்குலக நாடுகளிலேயே தமக்குரிய உயர்ந்த பாதுகாப்பையும், நல்லவாழ்கையையும் தேடிக்கொண்டதை காணலாம்.

ரஸ்யாவின் உதவிக்கு சிரிய அதிபர், துருக்கி அதிபர் நன்றி  தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁). இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது. கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது  தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம், இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில்  வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds). இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார். கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள். இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁). ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁). இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும். 2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு  மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁), 
    • வடக்கு, கிழக்கில் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணிந்து நீதிமன்றங்கள் செயற்படுகின்றனவா? - செல்வராசா கஜேந்திரன் ! By Shana     வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா? பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா ? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிதிக்கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, எமது தமிழின தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எல்லை கடந்து செல்கின்றன. எமது தேசத்தின் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன .ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான்,ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறான நிலையில் மே 18 ஆம் திகதியை முன்னிட்டு எங்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூர்ந்து அதற்கான நீதியினைக்கோரும் விதமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் இந்த இனப்படுகொலை வாரம் அனுஷ்டிப்பதும் அந்த இனப்படுகொலை,2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகக் கொண்டு கோத்தபாய ராஜபக்சவும் அவரது அண்ணன் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிய போது தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர் பிழைத்த வரலாறு உள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக மக்களுக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வை இந்த வாரம் நாம் அனுஷ்டிப்பது வழமை .அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் பகுதியில் புவன கணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் இந்த நாட்டின் நல்லிணக்கம், பிற இனங்கள், மதங்களை மதிக்கும் பண்பு. ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. அவர்கள் 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பொதுமக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களுக்கு உணவு,கஞ்சி பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக்கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தினங்களில் ''தன்சல் ''உணவு வழங்கும் செயற்பாடுகளைச் சுகாதார சீர்கேட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கோருவார்களா? அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?இந்த இனவாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள் என்றார்.   https://www.battinews.com/2024/05/blog-post_160.html
    • முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு (புதியவன்) முல்லைத்தீவு, முத்தையன் கட்டில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை கையடக்க தொலைபேசியில் காணொலி எடுத்த இளைஞன் நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளார்.  நேற்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகள் சிலர், புதுக்குடியிருப்பிலுள்ள தமது நண்பியொருவரின் வீட்டுக்கு சென்று, அவரின் உறவினர் வீடு அமைந்துள்ள முத்தையன்கட்டில்  நீரோடும் வாய்க்காலில் மாணவிகள் குளித்துக் கொண்டிருந்த போது, உந்துருளியில் வந்த இரண்டு இளைஞர்கள் மாணவிகளுடன் ஆபாசமாக பேசியுள்ளனர். சிறிது தூரம் சென்று மீண்டும் உந்துருளியில் வந்த இளைஞர்கள் இருவரும், மாணவிகள் குளிப்பதை காணொலி எடுத்துள்ளனர். அந்தப் பகுதியில் சுற்றி வட்டமடித்து தொடர்ந்து காணொலி எடுத்துள்ளனர். இதன்போது, மாணவியொருவர் குளிப்பதற்காக கொண்டு வந்த அலுமினிய வாளியை இளைஞர்கள் மீது வீசியுள்ளார். உந்துருளியை செலுத்தி வந்தவரின் தலையில் வாளி பட்டு, இருவரும் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளனர். மாணவிகள் சத்தமிட்டபடி வீதிக்கு ஓடிவர, உந்துருளியை செலுத்தி வந்தவர் எழுந்து உந்துருளியுடன் ஓடிவிட்டார். பின்னாலிருந்து காணொலி எடுத்தவரை மாணவிகள் பிடித்ததுடன், இந்த களேபரத்தை அவதானித்த பிரதேச இளைஞர்கள் சிலர் வந்து அந்த இளைஞனை நையப்புடைத்தனர். அவரது கையடக்க தொலைபேசியில் காணப்பட்ட மாணவிகள் குளித்த காணொலிகள் அனைத்தும்  அழிக்கப்பட்டதுடன்  இளைஞனின் மேலாடைகள் களையப்பட்டு, நையப்புடைக்கப்பட்டார். மாணவிகளும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். (ஏ) https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_மாணவிகள்_குளிப்பதை_வீடியோ_எடுத்த_நபர்_நையப்புடைப்பு!!  
    • முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: அம்பிகா சற்குணநாதனின் அறிக்கை! தமிழருக்கு எதிரான இன அழிப்பையும், மறைக்கப்பட்ட தமிழரின் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையிலாக ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் இவ்வருடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதை தடுத்து நிறுத்தும் நோக்குடன் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுள்ளனர். எனவே நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் உயிரிழப்பிற்கு அரசாங்கம் காரணமில்லை என காண்பித்து வரலாற்றை அழிப்பதும் மறைப்பதுமே நினைவேந்தல்களை தடுப்பதன் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் ஒன்றுகூடுவதன் மூலமும் உணவை பரிமாறிக்கொள்வதன் மூலமும் நோய் பரவும் என்பதாலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏன் மே தினக்கூட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கேட்டுக்கொள்ளவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் வெசாக் தன்சல்களையும் தேர்தல் பிரச்சார பேரணிகளையும் தடைசெய்யுமாறு பொலிஸார் நீதிமன்றங்களிடம் வேண்டுகோள் விடுப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகள் இதற்கு எதிராக குரல்கொடுப்பார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.   http://www.samakalam.com/முள்ளிவாய்க்கால்-கஞ்சி-வ/    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.