Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

FCFA7708-DD30-4-C16-AD85-70-E9530-A04-C9

அருமையான ஓவியம் பாராட்டுக்கள்.......!

நான் அப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றபடி தனித்தனியாகத்தான் எடுத்தனான்......அதாவது 18 வயசில் காரும் (light vehicle)  மோட்டார் சைக்கிளும், 21 வயதில் (all moter coches) பஸ்சுக்கு எடுத்தனான்.இந்த லைசென்சில் லொறி எல்லாம் ஓடலாம். அதே 21 வயதில் வவுனியாவில் வேலைசெய்யும் பொழுது ட்ராக்ட்டருக்கு 8 போட்டு காட்டி எடுத்தனான்.....! 😁

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நல்லகாலம் பிளைட் ஓடேலாது. அதுவுமெண்டால் நாங்கள் இஞ்சை இருக்கேலாது.:rolling_on_the_floor_laughing:

அது சரி.....

அங்கை ஆரிட்டையும் உங்கடை சமையல் சித்து விளையாட்டையும்  செய்து காட்டினனீங்களோ? :cool:

அது இல்லாமலா ?? பின்னாலே வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

கவனம் யாழில் ரக்ரர் படத்தை ,ஸ்கூட்டியில புழுதி எழுப்பினதை  கொண்டு வந்து ஒட்டிடாதீங்கோ..சும்மாவே யாழ் தள்ளாடுது அப்புறம் எழும்பி ஓட முடியாதவே பாடு சொல்ல இயலாது..✍️🖐️

😃

7 hours ago, Kavi arunasalam said:

FCFA7708-DD30-4-C16-AD85-70-E9530-A04-C9

சிரித்து முடியவில்லை அண்ணா. நல்ல படம் 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்து

 

இரவு கொழும்பு சொய்சா புரத்தில் இருந்து 10 மணிக்கு வெளிக்கிட்ட சொகுசு பஸ் விடிகாலை 4.30 க்கு இணுவிலுக்கு வந்துவிட்டது. ஒருவருக்கு 4500 ரூபாய்கள். நல்ல வசதியான பஸ்தான். ஓட்டுனர் சிங்களத்திலும் தமிழிலும் மாறிமாறிக் கதைக்க அவர் சிங்களவரா தமிழரா என்றுகூட மட்டுக்கட்ட முடியவில்லை. 

 

அடுத்தநாள் எல்லோரும் வரவேற்பறையில் இருந்து கதைத்துக்கொண்டிருக்க காணிகள் பார்த்த கதையும் வருகிறது. வேறு காணிகள் பார்க்கவில்லையோ என்கிறா மச்சாள். பார்த்துப் பார்த்து களைத்துவிட்டது. மிஞ்சிப்போனால் உதயனின் காணி இருக்குத்தானே. அதற்குள் ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டாவது இருக்கலாம் தானே என்கிறேன். உடனே கணவரின் தங்கை மகள் “தோட்டக் காணிக்குள் எப்பிடி நீங்கள் வீடு கட்ட முடியும்? நாங்கள் விடவே மாட்டோம்” என்கிறா. கணவர் இதைக்  கேட்டுத் திடுக்கிட்டுப் போய் நிற்க எனக்குக் கோபம் வருகிறது. “எம்மை வீடு கட்ட வேண்டாம் என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும். உங்கள் அம்மா சொன்னாக்கூடப் பரவாயில்லை” என்கிறேன். “ ஏன் அவள் இந்த வீட்டுப் பிள்ளை தானே. அவளுக்குக் கதைப்பதற்கு எல்லா உரிமையும் இருக்கு” என்கிறா. 

 

இருக்கட்டும். எனக்குச் சொந்தமான காணியில் நான் எதுவும் செய்ய முடியும் என்கிறார் கணவர். இல்லை அண்ணா சுற்றிவர மற்றவர்கள் தோட்டம் செய்யும் போது அவர்கள் ஓம் என்று சொல்லாமல் நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்கிறா தங்கை. அப்படியும் இருக்குமோ என்று நான் எண்ணிவிட்டுப் பேசாமல் இருக்க, அப்ப நீயே இந்தக் காணியையும் எடுத்துக்கொண்டு காசைத் தா என்கிறார் கணவர். உடனே அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ஒரு இரண்டு ஆண்டுகள் செல்ல வாங்குவதைப்பற்றி யோசிக்கிறேன். அதுவும் நான் தான் விலையைச் சொல்வேனே தவிர நீங்கள் சொல்லும் விலைக்கு நான் வாங்கமாட்டேன் என்கிறா. எம்மை விட அவர்களிடம் பணம் இருப்பது ஊருக்கே தெரிந்த விடயம். என் மகள் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்கிறாள். இத்தனை நேரம் சும்மா பார்த்துக்கொண்டிருந்த தங்கையின் கணவர் சரிசரி தேவையில்லாமல் உந்தக் கதையள் எதுக்கு நிப்பாட்டுங்கோ என்று கூறிய பின் யாரும் எதுவும் பேசாது எழுந்து செல்கிறோம்.

 

எனக்கு மனதுள்ளே கனன்றுகொண்டிருக்கிறது. கணவர் இதை எதிர்பார்க்கவே இல்லை என்பது அவர் என்னிடம் ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் புலம்பியதில் இருந்து புரிய, என் தங்கையின் கணவருக்கு போன் செய்து உங்களுக்குத் தெரிந்த லோயர் யாராவது இருந்தால் கூறுங்கள் என்கிறேன். தனக்கு நன்கு தெரிந்தவர் மணிவண்ணன். நான் சொல்லி விடுகிறேன். போய்ப் பாருங்கள் என்கிறார். அடுத்தநாள் காலையே செல்வோம் என எண்ணிப் போன் செய்தால்  மாலைதான் தாம் திறப்பதாக கூற மாலை 5.30 இக்குப் போய் காவலிருக்கிறோம். 

 

திறந்தவுடன் இன்னொரு ஆணும் ஒரு பெண் வக்கீலும் இருக்கின்றனர். மணிவண்ணன் வர ஏழரை ஆகும் என்கிறார். எனக்கு ஒருவிதமான கூச்சமாகவும் இருக்கு. அந்தப் பெண் வக்கீலிடம் விபரம் கேட்க, உங்கள் பெயரில் காணி இருந்தால் நீங்கள் என்னவும் செய்யலாம். யாருக்கும் விற்கலாம். என்கிறா. கணவரின் முகத்தில் விளக்கெரிகிறது. ஆனாலும் காணி உங்கள் பெயரில் இருந்தாலும் அவர்கள் சோழவரியை இருபது ஆண்டுகளுக்குமேல் கட்டியிருந்தால் அவர்களுக்குக் காணி சொந்தமாவதற்குரிய சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கு. எனவே உங்கள் பெயரில் சோழவரி கட்டுவதற்குரிய ஏற்பாட்டைப் பாருங்கள் என்கிறார். 

அடுத்தநாளே பிரதேச சபைக்குச் சென்று கணவரின் பெயரில் சோழவரியை மாற்றுவதற்குரிய படிவத்தைக் கேட்டால் படிவம் 300 ரூபாய்கள். அத்துடன் அந்த நிலத்துக்குரிய திட்டம் மற்றும் தாய் உறுதி, காணி உறுதி என்பன கட்டாயம் வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே காணிக்குத் திட்ட வரைபு இருக்கிறதா என்று கேட்க கணவர் தெரியாது என்கிறார். தங்கையிடம் தான் கேட்கவேண்டும். கணவனோ நீயே கேள் என்கிறார். எனக்கோ சங்கடமாக இருக்கு. ஆனாலும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருக்க, என் நல்ல நேரம் வீட்டுக்குச் சோழவரி கட்டும் விலைப் பட்டியலை ஒருவர் மணி அடித்துத் தந்துவிட்டுப் போக என்ன உது என்கிறேன் மச்சாளிடம். சோழவரி கட்டவேண்டும். அதுதான் என்கிறா. கடிதம்போடாமல் கொண்டு வந்தா தருவார்கள் என்கிறேன் நம்பாமல். இது வெளிநாடில்லை. இங்க வீடுவீடாக கொண்டுபோய் குடுப்பினம் என்றவுடன் தோட்டத்தின் சோழவரியும் அப்படித்தானோ என்கிறேன். 

:தோட்டத்தின்ர சோழவரி உங்கள் பெயரிலோ இருக்கு? 

 

:இல்லை அம்மாவின் பெயரில் தான் தொடர்ந்து கட்டிக்கொண்டு இருக்கிறம். 

 

:இனிமேல் நீங்களே கட்டிக்கொண்டிருக்காமல் உதயனின் பெயருக்கு மாத்தி விடுவம். 

 

:அது கன காசு சிலவு மச்சாள். பேசாமல் அம்மாவின் பெயரிலேயே இருக்கட்டும். 

 

:என்ன சிலவு ?

 

:பிளான் எல்லாம் கீற வேணும். அதுக்கு கன காசு. போக சேவையர்மார் செய்து முடிக்க நாலைஞ்சு மாசம் செல்லும். அதுக்குள்ள அண்ணா திரும்பப் போயிடுவார் எல்லோ. 

 

:காசு பிரச்சனைஇல்லை. அதை நாங்கள் குடுப்பம். ஆரும் இருந்தாச் சொல்லுங்கோ. 

 

:எனக்கு ஒருத்தரையும் தெரியாது. 

 

:உங்கள் மகனும் கட்டட அளவையாளர்தானே. அவருக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் தானே. 

 

:அவன் போன் செய்யேக்குள்ள கேட்டுப்பாக்கிறன்.

 

:தோட்டத்துக்கு சோழவரி கட்டுற துண்டை ஒருக்கா தாங்கோ பார்ப்பம். 

 

:தேடித்தான் எடுக்கவேணும். இவர் வந்ததும் கேட்டுப் பார்க்கிறன்.

 

:சரி. 

 

மச்சாளுக்கு நாம் காணி அளப்பது பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் உதை உப்பிடியே விடுவம். உங்கள் அம்மாவின் பெயரில் தான் சோழ வரி கட்டுறதாலை எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறேன்.  

நீ குழப்பாதை. பிளானைக் கீறி எடுத்தால்தான் உவவுக்கு கொஞ்சம் பயம் வரும் என்கிறார்.   

 

அடுத்த நாளே என் தங்கையின் கணவர் ஒரு நில அளவையாளரைத் தொடர்புகொண்டு வார இறுதியில் வருவதாகக் கூற தங்கையிடமும் கூற தங்களுக்கு ஒரு சாமத்தியவீடு இருப்பதாகவும் அதனால் தாங்கள் நிற்கமாட்டோம் என்றும் கூற அடுத்த வார இறுதிக்கு அது ஒத்திவைக்கப்படுகிறது. 

 

கணவர் இன்னும் ஒரு எட்டு நாட்கள் தான் நிற்பார். அவரில்லாது காணி அளப்பது சரியானதாக இருக்காது என்பதனால் அடுத்த வாரமும் அவர்கள் ஏதும் சாட்டுச் சொல்லி தட்டிக்கழித்தால் என்ன செய்வது என்று யோசனை ஓடுகிறது. நில அளவையாளர் பக்கத்துக் காணிக்காரரின் பெயர்களும் தேவை என்கின்றார். சகோதரியும் கணவரும் தமக்குத் தெரியாது என்கின்றனர். என்ன நீங்கள். இங்கேயே இருக்கிறியள். பக்கத்து காணிக்காரரைத் தெரியாமல் இருக்கிறியளா? என்கிறார் கணவர். நல்ல காலத்துக்கு கணவரின் அண்ணா ஒருவர். அவருக்கு காணிக்காரரின் பெயர்கள் தெரிந்தபடியால் அலைச்சலின்றி பெயரை அளவையாளரிடம் கொடுக்க அவரும் காணி அளப்பதற்கு வருகிறார். 

 

எல்லாமாக மூன்றுபேர் வருகின்றனர். இரண்டு மணி நேரத்தின் பின் தங்கையின் எட்டுப் பரப்புப் போக எமக்கு ஐந்து பரப்பு வருகின்றது என்கிறார் அளவையாளர். தங்கையின் கணவருக்கு டென்ஷன் ஏற்பட அதெப்படி வரும். எங்கட காணியில குறைச்சு அளந்திட்டியளோ என்று கோபமாகக் கேட்கிறார். அதற்கு அந்த நில அளவையாளருடன் வந்தவர் “தம்பி நீங்கள் உப்பிடிக்க கதைக்கக் கூடாது. நாங்கள் பத்து ஆண்டுகளாகத் தொழில் செய்கிறம். ஒருவரும் உப்பிடிச் சொன்னதில்லை. முந்தி காணியளை காலாலைதான் அளக்கிறது. கூடக் குறைய வாறது தான் “ என்றவுடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு அவர் தன் வீட்டுக்குப் போகிறார். என்னடா இது என்று எமக்குக் குழப்பமாக இருக்க அளவையாளர் சொல்கிறார் கூட இருப்பதை இரண்டாகப் பிரித்துவிடவோ என்று. ஓம் அப்பிடிக்க செய்யுங்கோ பிரச்சனை இல்லை என்று நான் கூற, நீ வாயை மூடிக்கொண்டு இரு. இது என்ர காணி. நானே முடிவை எடுக்கிறன். அஞ்சு நிமிஷம் பொறுங்கோ என்றுவிட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாவின் வீட்டுக்குச் செல்கிறார். 

 

நானும் மற்றவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள “இது எனக்குத்தான் கெட்டபெயர். நான் தான் தடுத்திட்டன்  என்று தங்கச்சியார் நினைக்கப்போறா, இந்தாள் ஏன் இப்பிடிச் செய்யுது” என்கிறேன். “அவை சகோதரங்கள். கதைச்சு முடிவெடுக்கட்டும் அக்கா. நீங்கள் தலையிடாதேங்கோ” என்கிறார் அளவையாளர். 

 

சிறிது நேரத்தில் கணவரும் தமையனும் ஒருபக்கத்தால் வர மறுபக்கம் தங்கையின் கணவரும் வருகிறார். தங்கையின் கணவர் "இவர் குடும்பத்தைப் பார்த்ததுக்கு மாமி நாலேகால் பரப்பு மட்டும்தான் எழுதினவா. ஆனபடியால் மிகுதி எங்களுக்குத்தான் சேரவேண்டும். நான் இரண்டு மூண்டு பேரிட்டை இப்ப விசாரிச்சிட்டுத்தான் வாறன் " என்கிறார். உடனே தமையன் "இல்லை உங்களுக்கு வீடுவளவும் காணியும் சீதனம் தந்தபடியால் சீதனக் காணி தவிர மிகுதி தம்பிக்குத்தான் சேரவேணும். நீங்கள் கதைப்பதற்கு ஒன்றும் இல்லை" என்றவுடன் "எனக்கு இவை அளந்ததில நம்பிக்கை இல்லை. திரும்ப வேறு யாரையும் கொண்டு அளவுங்கோ" என்று கூற சேவையருக்குக் கோபம் வந்துவிட்டது. என் கணவரைப் பார்த்து உங்களுக்கு வேறை யாரையும் கொண்டு அளக்கவேணும் என்றால் அளவுங்கோ என்கிறார். எனக்கு நாலேகால் பரப்பில் கால் பரப்பு குறைந்தால் இவர்கள் எனக்குத் தரவா போகிறார்கள். நீங்கள் அளந்ததில் எனக்கு எந்தக் குறையுமில்லை. நீக்கள் எங்கள் காணிக்குரிய பிளானை கீறி ரெஜிஸ்டர் பண்ணித் தாங்கோ. மச்சான் நீங்கள் வேறு ஒருவரைப் பிடித்து உங்கள் காணி எட்டுப் பரப்பும் இருக்கிறதா என்று பாருங்கள் என்றவுடன் அளவையாளர்கள் எல்லைக் கற்களை நான்குபுறமும் கிண்டித் தாட்டுவிட்டுச் செல்கின்றனர். 

 

  

 

 

    

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின்படி தோட்டக் காணிக்குள் வீடுகட்ட முடியாது அக்கா. ஆனால் எனக்கு தெரிய பிரதேச சபையே காணிக்க மண்ணைக் கொட்டி மீன் சந்தை கட்டியிருக்கு! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சட்டத்தின்படி தோட்டக் காணிக்குள் வீடுகட்ட முடியாது அக்கா. ஆனால் எனக்கு தெரிய பிரதேச சபையே காணிக்க மண்ணைக் கொட்டி மீன் சந்தை கட்டியிருக்கு! 

எம்மூரில் மூன்று வீடுகள் கட்டப்பட்டிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பதினைந்து

எனது சொந்த அனுபவத்தில் சொந்தங்கள் தான் விரோதிகளாகவும் இருக்கின்றார்கள்.
சகோதர உறவு முறையை கூட தக்க வைக்க பணம் / பொருட்கள் தேவைப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமே…!

இவ்வளவு தான் சொந்தம்..! அண்ணா தங்கச்சிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் என்று சொன்னால், உலகத்தில எல்லா அண்ணர் மாரும் தானே செய்யினம் எண்டும் சொல்லிவினம்..! சோழவரியை.. சோலை வரி எண்டு மாத்தி விடுங்கோ..! தொடருங்கோ…!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

சட்டத்தின்படி தோட்டக் காணிக்குள் வீடுகட்ட முடியாது அக்கா. ஆனால் எனக்கு தெரிய பிரதேச சபையே காணிக்க மண்ணைக் கொட்டி மீன் சந்தை கட்டியிருக்கு! 

நான் ஊரில் இருந்த காலம்,அதற்கு முந்திய காலங்களிலும் விவசாய குடியேற்ற காணிகளில்  பெரிய,சிறிய வீடுகள் கட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது.பல இடங்களில் பங்களா போன்ற வீடுகளே கட்டியிருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எனது சொந்த அனுபவத்தில் சொந்தங்கள் தான் விரோதிகளாகவும் இருக்கின்றார்கள்.
சகோதர உறவு முறையை கூட தக்க வைக்க பணம் / பொருட்கள் தேவைப்படுகின்றது.

பலருக்கும் மனச்சாட்சி என்பதே இல்லை.

9 hours ago, புங்கையூரன் said:

சுமே…!

இவ்வளவு தான் சொந்தம்..! அண்ணா தங்கச்சிக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் என்று சொன்னால், உலகத்தில எல்லா அண்ணர் மாரும் தானே செய்யினம் எண்டும் சொல்லிவினம்..! சோழவரியை.. சோலை வரி எண்டு மாத்தி விடுங்கோ..! தொடருங்கோ…!

 

என் கவனமின்மையை நினைக்கச் சிரிப்பாக இருக்கு. எல்லோரும் சோழவரி என்று சொல்ல நானும் அதுதான் என்று நினைத்துவிட்டேன். படிவத்தில் சரியாகத்தான் எழுதியிருப்பார்கள். அதைக்கூட நான் கவனிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 16:53, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிகுதியையும் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்😀

வீட்டுக்கு வீடு வாசற்படி தான்...உங்களின் கோபம் புரிகிறது.  அதுவும் ஒரு முக்கால் பரப்புக்காக :(

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட கெதியெண்டு எழுதப்பா மிச்சத்தை.. அடுத்த வீட்டு புதினம் கதைக்கிறதெண்டாலே அன்னம் தண்ணி இல்லாமல் திண்ணையில இருக்கிற ஆக்கள் நாங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sabesh said:

வீட்டுக்கு வீடு வாசற்படி தான்...உங்களின் கோபம் புரிகிறது.  அதுவும் ஒரு முக்கால் பரப்புக்காக :(

நீங்கள் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்கிறியள். 😀

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

அது எமக்கு நேராகச் சொல்லப்படவில்லை. ஆனால் மகளுக்குச் சொன்னர்களாம். வெளிநாட்டில இருக்கிறியள். இங்க வந்து இருக்கப்போறியளோ. உங்கட அப்பாவுக்குப் பேராசை என்று.😀😂  

53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட கெதியெண்டு எழுதப்பா மிச்சத்தை.. அடுத்த வீட்டு புதினம் கதைக்கிறதெண்டாலே அன்னம் தண்ணி இல்லாமல் திண்ணையில இருக்கிற ஆக்கள் நாங்கள்..

நாங்கள் அன்ன தண்ணி இல்லாமல் எப்பிடி எழுதமுடியும் ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

நன்றி ராசன் உங்கள் நெஞ்சார்ந்த கருத்திற்கு.
அண்மையில் உவ்விடம் வந்து திரும்பிய நண்பர் ஒருவர் எனக்கு சொன்னது......சொந்தக்காரர் வீடுகளில் சாப்பிட,தண்ணி குடிக்கவே பயமாக இருக்கின்றதென......

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

தற்போது போராசை ஒன்று அசை போட தொடங்கியுள்ளது ஈழத்தில் அது கன சொந்தங்களை தூரமாகவே வைத்துள்ளது சொத்துப் பிரிப்புப் பிரச்சினைகள் வெட்டுக்குத்து,கொலை வரைக்குமே சென்றுள்ளது அக்கா 

தொடரட்டும்.

சொந்தபந்தம் எண்டாலும் பரவாயில்லை. வாடகைக்கு இருந்த ஆக்களுக்கும் ஆசை வருதே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில சொய்ஸா வாழ்கிற உவங்களூக்கு எதுக்கு இங்க காணி என ஒரு கேள்வியும் வந்திருக்குமே🤔🤔.

 

அது தம்பி சொய்சா   அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல்.   வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா   வாழ்வதுபற்றி தெரியும்.  

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, நிலாமதி said:

அது தம்பி சொய்சா   அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல்.   வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா   வாழ்வதுபற்றி தெரியும்.  

என்ன சகோதரி நீங்கள்????

தற்போது பல திரிகளில் புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் சொகுசாக வாழ்ந்தபடி...... என்றுதானே கருத்தெழுதுகின்றார்கள்.

அந்த தம்பி என்ன செய்யும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதினாறு  


 

அடுத்தநாளே பழைய காணித் தரகர் போன் செய்கிறார். தம்பி எங்களுக்குக் காணி ஒன்றும் வேண்டாம். இனிமேல் காணி பார்க்கக் கூப்பிடவேண்டாம் என்கிறேன். இல்லை அக்கா. இந்தக் காணியைப் பார்த்தால் உங்களுக்கும் அண்ணருக்கும் கட்டாயம் பிடிக்கும். உங்களுக்குப் பிடிக்காட்டில் இதோட நான் கேட்க மாட்டன் என்கிறார். சரி அதையும் ஒருக்காப் பார்த்திடுவம் என்று நானும் கணவரும் மகளும் செல்ல பின்னாலேயே தங்கையின் கணவரும் வருகிறார். இணுவிலில் இருந்து இருபது நிமிடம் ஓட்டோவில் செல்ல தரகர் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே சென்றால் பெரிய வளவு. தென்னை மரங்கள், மாமரங்கள், பாலாமரங்கள், வாழைத்தோட்டம் என நான் எதிர்பார்த்தவாறு காணி இருக்க நட்டநடுவே ட வடிவில் பழைய வீடு ஒன்றும் இருக்க எம் எல்லோருக்கும் பிடித்துவிடுகிறது. 

 

தங்கையின்  கணவரிடம் எம் விருப்பத்தைக் கூற, நீங்கள் வாயத் திறக்கவேண்டா ம். நானே கதைத்துக்கொள்கிறேன் என்கிறார். வீட்டினுள்ளே சென்று பார்த்தால் அறைகள் நான்குமீற்றர் உயரத்துடன் இருக்கின்றன. மூன்று அறைகள், குசினி, சுவாமி அறை என்பவற்றுடன் நீளமான வரவேற்பறையும் குசினிக்குச் செல்வதற்கு நீண்ட தாள்வாரமும் இருக்கின்றன. எந்தவிதத் திருத்தவேலைகளும் தேவை இல்லை எனத்தெரிய இதை வாங்குவது என்று தீர்மானித்து 14 பரப்புக்காணியும் வீடும் ஒன்றேகால் கோடி என்கின்றனர். வீடு கட்டவே இப்ப ஒருகோடி முடியும் என்கிறார் இன்னொரு தரகர். எல்லாமாக நான்கு தரகர்கள் ஒவ்வொருத்தராக வந்து சேர, ஏன் இத்தனை தரகர்கள் என்றதற்கு இந்தக் காணி ஒருவர் இன்னொருவருக்குச் சொல்லிக் அவர் மற்றவருக்குச் சொல்லி இப்பிடித்தான் கூட்டி வருவார்கள். அதனால் தான் கனபேர் என்கிறார். ஒரு கிழமையில உங்களால் இங்கு பணத்தை எடுக்க முடியுமா என்று கேட்க ஓம் என்கிறார் கணவர். 

 

ஆறுமாதம் அவர்கள் வாடகை இல்லாமல் இந்த வீட்டில் இருப்பதற்குக் கேட்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள் என்று தரகர் கேட்க அதற்கென்ன இருக்கட்டும். ஆனால் நான் வீட்டுக்குள் வரமாட்டேன். காணியைத் துப்பரவு செய்ய, வேலி அடைக்க ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவேன் அதற்குச் சம்மதமா என்று கேளுங்கள் என்றுகூற, ஒரு முப்பத்தைந்து மதிக்கத்தக்க வீட்டின் உரிமையாளர் சம்மதம் என்கிறார். நான் காலை வேலைக்குச் சென்றால் வர இரவாகும். மற்ற இரண்டு பேரும்தான் இருப்பினம். எனக்குப் பிரச்சனை இல்லை என்கிறார்.     

 

ஒரு கோடிக்கு பேசி முடிக்க தங்கையின் கணவர் நீங்கள் பணம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? இருந்தால் இன்றே அட்வான்ஸ் குடுக்கலாம் என்கிறார். என்னிடம் இருபதாயிரம் தான் இருக்கு என்கிறேன். அண்ணரிடம் கொடுங்கோ என்றுவிட்டு அவரையும் கூட்டிக்கொண்டு புரோக்கர்மார் நிற்குமிடம் சென்று காணி உரிமையாளரையும் கூப்பிட்டு பணத்தைக் கொடுத்து அடுத்த கிழமையே எழுத்தலாம் என்றுவிட்டு மகிழ்வோடு வீடு திரும்புகிறோம். இரண்டு நாட்களில் கணவரும் மகளும் லண்டனுக்குத் திரும்ப நானே தனிய ஓட்டோவில் சென்று அலுவல்கள் பார்த்து ஒரு வாரத்தில் எழுத்துவேலை எல்லாம் முடிய எனது சித்தியையும் மச்சாளையும் கூட்டிக்கொண்டு இரண்டாம் தடவை வீட்டுக்குச் செல்கிறேன். காணியைப் பார்த்ததும் என் சித்திக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு ஐந்து நிமிடத்தில் வளவைச் சுற்றிப் பார்த்தவர் 44 தென்னை நிக்குது. தேங்காய் நல்ல விலைக்கு விக்கலாம் என்றவுடன் நான் சிரிக்கிறேன். மச்சாளின் முகத்தில் எந்த உணர்வையும் காண முடியவில்லை.  இணுவிலில் இருந்து போக வர ஓட்டோவுக்கு 2000 ரூபாய்கள். நான்கு புறமும் வேலிகள் எல்லாம் உயிர்வேலிகள். தென்னைகளில் 14 தென்னைகள் தறிக்கவேணும். உயரமாகி சோடைபோய்விட்டது என்கிறா சித்தி. மச்சாளும் அதை ஆமோதிக்க யாரையாவது பிடித்துவிடுங்கள் என்று அவர்களிடமே கேட்கிறேன். இணுவிலில இருந்து ஆர் இவ்வளவு தூரத்துக்கு வேலை செய்ய வரப்போகின்றனர் என்கின்றனர் இருவரும்.  நான்கு பக்கமும் மதில் கட்ட எக்கச்சக்கம் முடியப்போகுது என்கிறா சித்தி. பேசாமல் தகர வேலி அடியுங்கோ என்கிறா மச்சாள். கணவரிடம் கேட்க, கனக்கப் பணத்தை வீணாக்காதே என்கிறார். 

 

தங்கையின் கணவரைக் கேட்க இங்கிருந்து ஒருத்தரும் வரமாட்டார்கள் அக்கா. நீங்கள் உங்கே அயலட்டையில் விசாரித்துப் பாருங்கள் என்கிறார். தென்னை மரங்கள் வெட்டுவதற்கு யாரிடம் விசாரித்தும் சரியானவர்கள் அகப்படவே இல்லை. என் வளவுக்குப் பின்னால் மூன்று வீடுகள். அவர்களிடம் சென்று விசாரித்தால் எல்லாரும் வேலைக்குப் போறவை. வரீனமோ தெரியாது என்று என் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டு விட்டதோடு சரி. என் நண்பனின் அம்மாவுடன் கதைத்தபோது தன்னிடம் வேலை செய்யும் இருவர் இருக்கின்றனர். அனுப்பிவிடுகிறேன் என்று கூற நானும் சரி என்கிறேன். 

 

அவர்கள் வந்ததும் அவர்களைப் பார்க்க ஒரு நம்பிக்கை வருகிறது. ஒரு தென்னை மரம் வெட்ட நான்காயிரம் என்கின்றனர். அவர்கள் கதைக்கும்போது என் ஓட்டோக் காரரும் நிற்க, துண்டுபோடுவதற்குத்தான் உந்த விலை. இது முழுசாகவே வெட்டி விழுத்தலாம். மூவாயிரம் கேளுங்கள் என்கிறார். அவர்களும் சம்மதிக்க அன்றே பதினாலு தென்னைகளையும் வெட்டி வீழ்த்திவிட காணி பார்க்கமுடியாமல் இருக்கு. மாலை வீடு திரும்பும்போது ஓட்டுனரை எங்கே அகற்றுவது என்று கேட்கிறேன். தேடித்தான் பார்க்கவேணும். சிலவேளை மரங்கள் சிலாகைக்காய் அறுப்பதற்கு எடுப்பாங்கள். ஆனால் நீங்கள் வெட்டிப்போட்டுக் கூப்பிட்டால் உடன வரமாட்டினம்.  எதுக்கும் உவங்களைக்கொண்டு துண்டுபோட்டு எங்காவது அகத்திவிடுங்கோ என்கிறார். 

 

அடுத்தநாள் அவர்கள் எல்லாவற்றையும் துண்டுபோட்டுக்கொண்டு நிற்க இரண்டு மூன்று பேர் வந்து தாம் அந்தக் குற்றிகளை விறகுக்கு எடுக்கலாமா என்கின்றனர். தாராளமாக எடுத்துப் போகலாம் என்கின்றேன். அதில் இருவர் வந்து மூன்றில் இரு பகுதியை பெட்டி பூட்டிய உளவு இயந்திரத்தைக் கொண்டுவந்து எடுத்துச் செல்கின்றனர். மூன்றாவதாய் எடுப்பதாகக் கூறியவர்களை மூன்றுநாட்கள்  ஆகியும் காணவில்லை. தொலைபேசியை அடித்தாலும் எடுக்காமல் இருக்க பின்னால் உள்ள வீடுகளில் ஒன்றுக்குச் சென்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தென்னங்குற்றிகள் இருக்கு. தேவை என்றால் சொல்லி விடுங்கள் என்றுசொல்ல தாமே எடுக்கிறோம் என்றும் ஆனால் தமக்கு அதை ஏற்றிவிட ஆட்கள் இல்லை என்கின்றனர். சரி நானே ஆட்களைத் தருகிறேன் என்றுவிட்டு இரு கூலி 6000 கொடுத்து காணிக்குள் வெட்டிய தென்னைமரங்களை எல்லாம் அகற்றியாச்சு. 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வீடு கட்டவில்லை, வீடும் வளவும் வாங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
புரோக்கர்மார் கொமிசனுக்கு ஆக்களைக் கூட்டுவாங்கள், அவ்வளவு ஒற்றுமை.

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி.......ரெம்பப் பிரயாசைப் பட்டு விரும்பியதுபோல் வாங்கி இருக்கிறீங்கள் ......!எல்லைகளை சரியாக அடைக்கவும் அதுதான் முக்கியம்.....!  💐

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகளின் ஒன்றாயினும். அங்கே போய் வாழ்வதாகயிருந்தால.  சிறந்ததொரு முயற்சிகள்      எங்களுக்கு முரசுமோட்டை இல் 2..5 ஏக்கர் வயல் காணி இருந்தது   நாங்கள் போய் பார்பதில்லை  ...குத்தகைக்கு விடப்பட்டுள்ளது     அதாவது நெல் மூட்டையாக தாருவார்கள்.     இப்போது வயல் 2 ஏக்கர் ஆகி விட்டது    பக்கத்து வயல்காரர்.   வரம்புகளை. அரக்கி   அரக்கி கட்டி விட்டார்கள்.....எனவேதான் எல்லைகள் முக்கியம்  சுவி அண்ணா சொன்னது போல் வேலிகள் வடிவாக அடைத்து வையுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அது எமக்கு நேராகச் சொல்லப்படவில்லை. ஆனால் மகளுக்குச் சொன்னர்களாம். வெளிநாட்டில இருக்கிறியள். இங்க வந்து இருக்கப்போறியளோ. உங்கட அப்பாவுக்குப் பேராசை என்று.😀😂  

ம்ம் கன பேர் அதைதான் இங்க சொல்லி இருக்குறார்கள் 

17 hours ago, குமாரசாமி said:

நன்றி ராசன் உங்கள் நெஞ்சார்ந்த கருத்திற்கு.
அண்மையில் உவ்விடம் வந்து திரும்பிய நண்பர் ஒருவர் எனக்கு சொன்னது......சொந்தக்காரர் வீடுகளில் சாப்பிட,தண்ணி குடிக்கவே பயமாக இருக்கின்றதென......

இங்க உள்ளவர்கள் கதைப்பதைதானே சொன்னேன் எங்க மாமி இருவர் கனடா, லண்டன் வீடு வளவு காணி காடு பிடித்து போய் இருக்கிறது இப்பவரைக்கும் வரவில்லை 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது அதை கொடுத்தால் என் அப்பாவின் சொந்தங்கள் பயனடையும் ஆனால் கொடுக்கவும் மாட்டார்கள் ஊருக்கு வரவும் மாட்டார்கள் .

 

16 hours ago, Nathamuni said:

சொந்தபந்தம் எண்டாலும் பரவாயில்லை. வாடகைக்கு இருந்த ஆக்களுக்கும் ஆசை வருதே.

நீங்க வேற நாதம்ஸ் என் தங்கையின் வீடு ஒன்று சுனாமி ஏரியா என ஒதுக்கிய பகுதிகளில் இருக்கிறது ஒரு  குடும்பத்தை குடி வைத்தோம் பாழடைந்து கிடக்கிறது என ஆனால் எல்லாம் ஒரு வருட ஒப்பந்தம் என வருட முடிவில் வெளியேறுங்கள் வீடை சரி செய்து எடுக்க போகிறோம் என சொல்ல சண்டைக்கு வந்துவிட்டார்கள் உதவி செய்ய போய் உபத்திரத்தில் முடிகிறது பல கதைகள் 

 

15 hours ago, நிலாமதி said:

அது தம்பி சொய்சா   அல்ல சொகுசா ...சொகுசு( நோகாம ) ஒருகஷ்டமும் இல்லாமல் வாழ்தல்.   வெளிநாடு வந்து பார்த்தால் தான் சொகுசா   வாழ்வதுபற்றி தெரியும்.  

அது சொகுசு தான் அக்கா வெளிநாட்டு வாழ்க்கை நானும் அனுபவித்தவன் தானே எனக்கு தெரியாததா இங்க பலர் அங்கே காசு காய்க்கிறது என்ற நினைப்பிலே கோடிகளை கொடுத்தும் வர முண்டியடிக்கிறார்கள்

5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேலி அடைக்க ஆட்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்

முடிஞ்சவரைக்கும் மதில் வேலி கட்டுங்கள் அதுவே பல பிரச்சினைகளை தவிர்க்கும் 

அப்பாடா காணி வாங்கியாச்சு என பெருமூச்சு விட்ட தருணம் மக்களே அக்கா கோடி கொடுத்து காணி வாங்கு இருக்காவு இருக்காவு இருக்காவு என அறியத்தருகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்க உள்ளவர்கள் கதைப்பதைதானே சொன்னேன் எங்க மாமி இருவர் கனடா, லண்டன் வீடு வளவு காணி காடு பிடித்து போய் இருக்கிறது இப்பவரைக்கும் வரவில்லை 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது அதை கொடுத்தால் என் அப்பாவின் சொந்தங்கள் பயனடையும் ஆனால் கொடுக்கவும் மாட்டார்கள் ஊருக்கு வரவும் மாட்டார்கள் .

காணிகள் பற்றையாக. காடு போல் இருக்குமாயின் மாநகரசபை தண்டப்பணம் அறவிடுமில்லையா  ?? அப்படி சட்டம் இருப்பதாக அறிந்தேன்   ....பிழையா??

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.