Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை பேசும் இவர்களின் நோக்கம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஈழதேச சாதிய ஒடுக்குமுறை  பேசும் இவர்களின் நோக்கம் என்ன? சாதியத்தை வென்ற மாவீர சரித்திரம் எங்களுக்கு இருக்கு மறந்துவிட்டோமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் நிலவும் தீவிர சாதிய பாகுபாடு - பள்ளிகளிலும் எதிரொலிக்கும் அவலம்

வசந்தா
20 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்துவருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளையே செய்து வருகின்றனர் எனவும் பிபிசி சிங்கள சேவையின் களச் செய்தி கூறுகிறது.

இலங்கையின் வட மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் இந்து ஆலயங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவானது, 1956ம் ஆண்டு நீக்கப்பட்ட போதிலும், மத சுதந்திரம் இன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

அத்துடன், குடியிருக்கவோ, விவசாயம் செய்யவோ விருப்பம்போல் நிலத்தை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும் அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.

2022ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் மூலம், விவசாயத்திற்காக நீரைப் பெறுவதில் கூட பாகுபாடு காட்டப்படுவது தெரியவந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியொருவர், வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது பெற்றுக்கொண்ட தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து வரும் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு அரசு அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆதிக்க சாதி குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை காட்டிலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் மிக மோசமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி குழந்தைகள் கல்விக்கு தேவையான சீருடை போன்ற அடிப்படை வசதிகளற்று உள்ளனர் என கூறப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகளை ஆசிரியர்களும் ஒதுக்குகின்றனர். சில பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகளுக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இருந்ததையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அதேபோல ஆதிக்க சாதி பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியை காட்டிலும் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் கல்வி தரம் சிறப்பானதாக இல்லை.

மற்றொரு பிரச்னை ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கும் வன்முறைகள். பல சமயங்களில் இந்த குற்றங்களுக்கான நீதி மிக தாமதமாகவே வழங்கப்படுகின்றன

சமூக பாகுபாட்டு சட்டமூலமொன்று 1957ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போதிலும், அந்த சட்டம் திறன்பட அமலாக்கப்படுவதில்லை என யாழ்ப்பாணம் சிவில் சமூக கேந்திர நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் தெரிவிக்கின்றார்.

'சட்டம் இருந்தும் பலனில்லை'

''1957ம் ஆண்டு சமூக பாகுபாட்டு சட்டம் என்ற சாதிக்கு எதிரான சட்டமூலமொன்று காணப்படுகின்றது. அவ்வாறான சட்டம் 60 வருடங்களாக காணப்படுகின்ற போதிலும், அந்த சட்டம் வடக்கு மாகாணத்தில் அமலாகவில்லை. 2021ம் ஆண்டு வட்டுக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட சாதி பிரச்னை தொடர்பில் போலீஸ் அறிக்கையில் தெளிவாக சாதி பிரச்னை என கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த பிரச்னையை கூட அந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை," என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கோவில்களுக்கு தாம் தற்போது அனுமதிக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட சாதி என்ற அடிப்படையில் ஆதிக்கசாதியை சேர்ந்தவர்கள் பாகுபாடு காண்பித்து வருவதாக யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் வசந்தா தேவி தெரிவிக்கின்றார்.

''சிவன் கோவில் இருக்கின்றது. அங்கு போவதற்கு முடியும். ஆனால், எங்களோட சமூகத்துடன் அவர்கள் ஒன்றாக நின்றதில்லை. சமமான உரிமைகள் வழங்கப்படுவதில்லை. அன்னதானம் என்றால், எங்களோட சமூகம் மரக்கறி வெட்டிக் கொடுக்கவோ அல்லது வேலைகள் செய்யவோ கூடாது. சாப்பாட்டிற்கு மாத்திரம் அமர வைத்து சாப்பாடு கொடுப்பார்களே தவிர, மற்றப்படி எதுவும் நடக்காது. நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். கோவிலுக்குள் விடுகின்றார்கள். எல்லாம் சமமாக வந்துட்டது. பிரச்னை இல்லை என்று. ஆனால் பிரச்னை நிறைய இருக்கின்றது. இனி தான் பிரச்னை கூட. எங்கட சமூகத்தை மதித்து, இந்த வேலையை செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். சாமியை தூக்குவதற்கு கூட எங்கட மக்களுக்கு உரிமை இல்லை." என கதிர்காமநாதன் வசந்தா தேவி குறிப்பிடுகின்றார்.

சாதிய பாகுபாடால் மதம் மாறும் மக்கள்

சாதி அடிப்படையில் மக்களை கோவில்களுக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கின்றமையினால், அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விபுலானந்தா சுவாமி கூறுகின்றார்.

''பல தசாப்த காலமாக எமது மக்களை கீழ்தரமாக நடத்தி, அவர்களை எமது சமய நிகழ்வுகளுக்கு கூட அனுமதிப்பதில்லை. எமது மக்கள் சிறிய சிறிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த காரணத்தினால் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறுகின்றார்கள்" என்கின்றார் விபுலானந்தா சுவாமி.

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்களே கள்ளு இறக்குதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருவதாக அந்த தொழிலில் ஈடுபடும் காங்கேசன்துறையைச் சேர்ந்த சுந்தரம் மெத்தானந்தம் குறிப்பிடுகின்றார்.

தங்களை ஒதுக்கி வைத்து, அவமானப்படுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளதாக அவர் கூறுகின்றார்.

தங்களை அழைத்து, உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தங்களை கணக்கெடுக்க மாட்டார்கள் எனவும் சுந்தரம் மெத்தானந்தம் தெரிவிக்கின்றார்.

தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், அவர்களுக்கான மரியாதை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என திருநகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராசநாயகம் தெரிவிக்கின்றார்.

rasanayagam

''இன்றைக்கும் திருநகர் மக்களை குறைத்து கதைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் இல்லாவிட்டால், மற்றவர்கள் வாழ முடியாது. அங்கு சூழலை துப்பறவு செய்வது இந்த ஊர் மக்கள் தான். அதை கொச்சைப்படுத்துவதற்கு யாராலும் முடியாது. அவரை (கடவுளை) தவிர. அது கூடாது. எந்த இடத்திற்கு சென்றாலும், எங்களுக்கான மரியாதையை கட்டாயம் தர வேண்டும்," என அந்தோணி ராசநாயகம் குறிப்பிடுகின்றார்.

மறுப்பு தெரிவிக்கும் அரசு அதிகாரிகள்

daughlas

ஒடுக்கப்பட்ட சாதி என கூறப்படும் தரப்பினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசியல்வாதிகளும், அரச நிர்வாகிகளும் மறுக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அவ்வாறான பிரச்னை கிடையாது என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில் அமைசசருமான டக்ளஸ் தேவானந்தாவிடம், பிபிசி வினவியது.

தாம் போராட்டங்களில் ஈடுபட்ட காலப் பகுதியில் அவ்வாறான பிரச்னைகள் காணப்பட்ட போதிலும், தற்போது அந்த பிரச்னை கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் ஷெலி உபுல் குமாரவிடம் பதிலளித்தார்.

ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் அமைச்சர் நிராகரித்தார்.

சாதிய பாகுபாடு என்பது புதியதொரு பிரச்னையாக உள்ளது எனவும் அதை கேட்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர், இந்த' புதிய பிரச்னை' குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சாதிய பாகுபாடால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அதை வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர்.

சாதி பிரச்னை தொடர்பில் கருத்து வெளியிடும் பட்சத்தில், தாமும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என ஏனையோர் அடையாளம் கண்டுக்கொள்வார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்க முன்வருவதில்லை.

வடக்கில் சாதிவாதம் மற்றும் வறுமை ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும் உள்ளது.

விடுதலைப் புலிகளில் இருந்த உறுப்பினர்களில் பலர், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பது இரகசியமல்ல.

அதிகாரிகள் நிராகரித்த போதிலும், யாழ்ப்பாணத்தில் சாதி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள இந்த மக்கள் எப்போது அந்த பிரச்னையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்? என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.

செய்தியாளர் - ஷெலி உபுல் குமார, பிபிசி சிங்கள சேவை

https://www.bbc.com/tamil/articles/clj7y7jg79po

  • கருத்துக்கள உறவுகள்

நான்நினைக்கிறன் மதப்பிரச்சினையை கிண்டி எடுத்த மாதிரி இதையும் கிண்டி எடுக்க இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு தேவை இருக்கு போலை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாதவூரான் said:

நான்நினைக்கிறன் மதப்பிரச்சினையை கிண்டி எடுத்த மாதிரி இதையும் கிண்டி எடுக்க இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு தேவை இருக்கு போலை

ஏற்கனவே அங்க ஒருத்தர்(அருண் சித்தார்த்) கிண்டிக் கொண்டிருக்கிறார். உண்மைகளும் உள்ளது. கல்வி, பொருளாதார முன்னேற்றங்களால் முன்னர் போல இல்லை.

0-02-03-b0f1e5ee915eb29f313e6b5de0c73db3

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, வாதவூரான் said:

நான்நினைக்கிறன் மதப்பிரச்சினையை கிண்டி எடுத்த மாதிரி இதையும் கிண்டி எடுக்க இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு தேவை இருக்கு போலை

இனப்பிரச்சனையை சாதி/மதப்பிரச்சனையாக்கி உள்ளதையும் கெடுக்கும் நடவடிக்கைதான் இது..

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே விமல் வீரவம்ச வட கிழக்குக்கு காணி அதிகாரம் கொடுத்தால் வெள்ளாளர் ஆதிக்கம் அதிகரித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பிரச்சனை என்று குப்பையை கோழி கிண்டி விட்டது போல் பிரச்சனையை தொடங்கி விட்டார்.. இப்ப நெருப்பு பத்திக்கொண்டு விட்டது. தமிழர்களைப் பிளவு படுத்தி குளிர் காயுது சிங்களமும் இந்தியாவும் 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் , கிந்தியா இந்த பிரச்சனையை கையில் எடுத்து,  இனப்பிரச்சனை, சிங்கள பௌத்தமயமாக்கல், ஆகாத பகுதிர்வு, இந அழிப்பு போன்றவரை தள்ளிப்போடுதல் அல்லது மறைத்தல் போன்றவற்றை செய்ய முயற்சிக்கிறது.

(அனால், பிபிசி சிங்களத்தில் உள்ள சாதி பிரச்னையை என் கதைக்க மறுக்கிறது. வஸுதேவாவே சொல்லி இருந்தார் கோவிவிகம மாத்திரமே அதிபர் ஆக முடியும் என்று. இதாய் விட தமிழர் இடத்தில இருக்கும் ஊர்வழி சாதி பாகுபாடு சிங்களத்திலும் இருக்கிறது.)  

ஆனா, எங்களிடம் உள்ள பிரச்னையை இனிமேலும் மறுக்க, மறைக்க முடியாது.

சும்மா வாய்சவாடவலுக்கு, சாதி பார்க்கவில்லை என்று பேசிவிட்டு, மிச்ச எல்லாத்துக்கும்  சாதி பார்ப்பதால் வந்த வினை. 

இங்கே சொல்லப்பட்டு இருந்தது - whatsapp  குழு நிர்வத்துக்கு சாதி பார்த்து தெரிவது என்றால் எங்கே நாங்கள் வந்து அடைந்து இருக்கிறோம்? 

  • கருத்துக்கள உறவுகள்

1) பத்திரிகையாளர்களுக்கு தற்போது பரபரப்பான செய்திகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு பரபரப்பு தேவைப்படுகிறது.

2) இப்படியொரு பக்கத்தை கிளறவேண்டியதேவை  ஒரு பகுதிக்கு இருக்கிறது. அதுயார்? 

3) இந்தக் கட்டுரையில் கூறப்படும் விடயங்கள் உண்மையானவை. அதற்கு யாழ்  களத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன. (அதனுடன் தொடர்புபட்டவர்களில் ஒருவர்  தற்போதும் யாழ் களத்தில் இருக்கிறார். )

ஆனால் இதையெல்லாம் இங்கே கிளறுவதால் பயனேதும் உண்டா? இல்லை. 

அப்படியென்றால் ஏன் இதைக் கிளறுகிறார்கள? 

எல்லாம் பரபரப்பிற்காகவும, தமிழர்களை இழிவுபடுத்துவதற்காகவும்தான். 

வேறென்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

//சாதி பிரச்னை தொடர்பில் கருத்து வெளியிடும் பட்சத்தில், தாமும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என ஏனையோர் அடையாளம் கண்டுக்கொள்வார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்க முன்வருவதில்லை.//

இதுதான் உண்மை.. இதை உயர்ந்த சாதியினர் வாய்ப்பாக பயன்படுத்தி இங்கு சாதிபிரிவினை இல்லை என்று வாய்கூசாமல் பொய் பேசுகின்றனர்.. இனப்பிரச்சினைதான் முக்கியம் மற்றதெல்லாம் அப்புறம் என்கின்ற கருத்தை திணிக்கின்றனர் உயர்ந்த சாதியினர்.. இதுவும் ஒரு வகை அடக்குமுறைதான்.. ஆனால் அதை பாதிக்கப்படும் தரப்பினர்தான் சொல்லவேனும் உயர்ந்த சாதியினர் அல்ல.. எனக்கு எங்கே வலிக்கிறது என்பதை நான் தான் சொல்லவேணும்.. யாரும் என்மீது திணிக்ககூடாது.. இனப்பிரச்சினைக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல சாதிப்பிரச்சினை.. இனப்பிரச்சினையில் சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குகின்றனர்.. சாதிப்பிரச்சினையில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களை ஒடுக்குகின்றனர்.. பெயர்கள்தான் மாறுகின்றனவே ஒழிய பாதிப்பு இரண்டிலும் ஒன்றுதான்

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில இன்னும் ஓர் விடயம்...

விமல்வீரவன்ச சொன்னதுதான்.

தமிழருக்கு தீர்வைக் கொடுத்தால், உயர்சாதி, தாழ்சாதியை ஒடுக்குவார்களாம்.... 

அதால....

கொய்யால... 🫢

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு குடிபெயர்வால், உயர்சாதியினர் தொகை குறைவு. பொருளாதார வளப்பெருக்கத்தால், வருமானத்துக்காக உயர்சாதியினரை அண்டி வாழ வேண்டிய நிலையிலும் யாரும் இல்லை.

இருந்தாலும், வெளிநாடு போகாது, போராட சென்றோர் சிரமப்படுகின்றனர். 

கலியாண உறவுகளில் கலப்பு இல்லை, பொருளாதார பலம் இதை மாற்றகூடும்.

இது ஒரு பத்திரிகையாளர் சொன்னது. அவரது பூர்வீக வீட்டை கனடா சகோதரி விற்ற போது, வாங்கியவர்கள், அதேசாதி அயலவர்களை விட மிக அதிக விலை கொடுத்தார்கள். அங்கே சாதியமும் இல்லை, சாதியரீதியில் எதிர்க்க உறவுகள் யாரும் அங்கே இல்லையாம்.

வகுப்புவாத ஏற்றத்தாழ்வு மேற்கிலும் உண்டு

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

ஏற்கனவே அங்க ஒருத்தர்(அருண் சித்தார்த்) கிண்டிக் கொண்டிருக்கிறார். உண்மைகளும் உள்ளது. கல்வி, பொருளாதார முன்னேற்றங்களால் முன்னர் போல இல்லை.

இந்த அரைப்பை***** மெதுவாக சாதிய ஒடுக்குக்குமுறை என்று கூவிக்கொண்டு புதிய இந்திய இறக்குமதி  சாதிகளை திணிப்பதை இவரது காணொளிகளில் காணலாம். பொதுவாக இலங்கை தமிழர்களுக்கு முற்றிலும் சம்பந்தமற்ற பெரியார் ,அம்பேத்கர் போன்ற பாரத் மாத்தாக்கியின் கும்பலை இங்கே ஈழத்தமிழர்கள் தலையில் கட்டமுனைவதுடன் தலித், திராவிடம் முதலிய முற்றாக அந்நியோநியமான சொற்களை இவரது கருத்துக்களில் காணலாம். ஈழத்தில் தமிழ்நாட்டைவிட ஒப்பீட்டளவில் காணாமலேயே போய்க்கொண்டிருக்கும்   சாதிய ஏற்றத்தாழ்வுகளை கொம்புசீவி விட்டு புதிய சாதிய வகுப்புவாதங்களை கையிலெடுக்க ஏவிவிடப்பட்டுள்ள RAW இன் கைப்பிள்ளை தான் இவர்.
சமீபத்தில் மறவன் புலவு ஒரு காணொளியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் போகமுடியாது ஆனால் கோவில் அர்ச்சகர் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்று உளறியிருந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசாணை பிறப்பித்து சாதியம் அகற்றும் நிலையிலிருக்கும் கூட்டத்தின் கைப்பிள்ளைகள் அவர்களது எஜமானர்களை விட நாகரீகமடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திடம் சாதியஅடக்குமுறைகளை களைந்தெறிய இறக்கிவிடப்பட்டிருப்பதுதான் காலக்கொடுமை.
இப்பத்தி மூலம் தமிழர்களிடம் சாதியக்கட்டமைப்பு இல்லை என்பதை நான் நிறுவ முற்படவில்லை 
ஆனால் எமக்கு பாடமெடுப்பவருக்கு அதற்குரிய தகுதி தராதரம் இருக்கவேண்டுமல்லவா    

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இப்பத்தி மூலம் தமிழர்களிடம் சாதியக்கட்டமைப்பு இல்லை என்பதை நான் நிறுவ முற்படவில்லை 
ஆனால் எமக்கு பாடமெடுப்பவருக்கு அதற்குரிய தகுதி தராதரம் இருக்கவேண்டுமல்லவா    

அருமையான கருத்து. அக்னி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

நல்ல விளக்கம்👍, எம்மவர்கள் இதை விளங்கி நடப்பார்களா?, சாதியென்பது படித்து முன்னேறிவிட்டால் ஓழிந்துவிடும்

11 hours ago, Kapithan said:

1) பத்திரிகையாளர்களுக்கு தற்போது பரபரப்பான செய்திகள் கிடைப்பதில்லை. அவர்களுக்கு பரபரப்பு தேவைப்படுகிறது.

2) இப்படியொரு பக்கத்தை கிளறவேண்டியதேவை  ஒரு பகுதிக்கு இருக்கிறது. அதுயார்? 

3) இந்தக் கட்டுரையில் கூறப்படும் விடயங்கள் உண்மையானவை. அதற்கு யாழ்  களத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன. (அதனுடன் தொடர்புபட்டவர்களில் ஒருவர்  தற்போதும் யாழ் களத்தில் இருக்கிறார். )

ஆனால் இதையெல்லாம் இங்கே கிளறுவதால் பயனேதும் உண்டா? இல்லை. 

அப்படியென்றால் ஏன் இதைக் கிளறுகிறார்கள? 

எல்லாம் பரபரப்பிற்காகவும, தமிழர்களை இழிவுபடுத்துவதற்காகவும்தான். 

வேறென்ன? 

நிதர்சனமான உண்மை👍

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2023 at 17:46, ஏராளன் said:

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இன்றும் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்துவருவதும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் சாதியின் அடிப்படையில் மீன்பிடித்தல், கள் இறக்குதல், குப்பை அகற்றுதல், சுத்தம் செய்தல், கூலி வேலைகள் போன்ற பணிகளையே செய்து வருகின்றனர் எனவும் பிபிசி சிங்கள சேவையின் களச் செய்தி கூறுகிறது.

3-F364-C50-DF2-E-4-D20-99-F1-53-AF042-A0

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

இதில இன்னும் ஓர் விடயம்...

விமல்வீரவன்ச சொன்னதுதான்.

தமிழருக்கு தீர்வைக் கொடுத்தால், உயர்சாதி, தாழ்சாதியை ஒடுக்குவார்களாம்.... 

அதால....

கொய்யால... 🫢

தலைவர் பிரபாகரன் இருக்கும் போது என்றால் அப்படி ஒடுக்கு முறை இருந்திருக்காது. ஆனால் இப்போது  இருக்கும் நிலையில்  போது அப்படி விமல் வீரவம்ச சொன்னது போல்  நடப்பதற்கு சான்ஸ் உள்ளது என்றாலும் அதை நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி தமிழ் இப்போ சாதியம்.. ஹிந்திய தேசியவாதம் இவற்றின் பிடிக்குள் சிக்கிக்கொண்டோர் கையில் இருக்கிறது.

அதேபோல்.. ஈழத்தாயக நிலம்.. ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பாளனின் எடுபிடிகள் பல வடிவங்களில்.. ஒரு இனத்தை எப்படி எப்படி எல்லாம் பிரித்துச் சிதறடிக்க முடியுமோ அப்படி சிதறடித்து.. அதனை இன்னும் இன்னும் பலவீனமாக்கி.. தனது எஜமானனின் ஆக்கிரமிப்பை எவ்வளவுக்கு வலுவாக்க முடியுமோ அதற்கு உதவி நிற்கிறார்கள்.. நிற்கத் துடிக்கிறார்கள்.

உலகெங்கும்.. மக்களின் மனங்களுக்குள் பல விச அசிங்கங்கள் அடைந்து கிடந்தாலும்.. ஒரு திடமான அரசியல்.. சமூக.. சட்டச் சூழல் தான் அந்த எண்ணங்களில் நல்லதை வெளிப்படுத்தவும் நடத்தையாக்கவும் கற்றுக்கொடுக்கும். அது 2009 மே யோடு முடிவுக்கு வந்துவிட்டது.

இப்போ.. அப்ப இருந்த நல்லதுகள் எல்லாம் தொலைந்து.. எப்படி ஒரு இனத்தை பல சிறு குழுக்களாகப் பிரித்து தன் நிலத்தாலும் ஊராலும் ஏன் மொழியாலும் கூட ஒன்றுபட முடியாத படிக்கு ஒரு நிலையை உருவாக்க முடியுமோ.. அதை நோக்கி.. சுயநல அரசியல் கூலிகளையும்.. இதர முன்னாள் ஒட்டுக்குழுக் கூலிகளையும் தனது நேரடி ஆக்கிரமிப்பு கண்காணிப்பின் கீழ் சிங்களமும்.. ஹிந்திய தேசியமும்.. உலக வல்லாதிக்க சக்திகளும் வைத்துக் கொண்டு பல விடயங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்....

ஒரு அறிவார்ந்த சமூகத்தை தவிர எம்மவர்கள் போன்ற மந்தைக்கூட்டம் போன்றாரோல்... இவற்றை எதிர்த்து தாக்குப் பிடித்து நிற்க முடியாது. ஏனெனில்..அதற்கான.. மக்களையும் மண்ணையும் நேசிக்க கூடிய சரியான அரசியல் தலைமைகள் சமூகத்தலைமைகள் அறிவார்ந்த சமூகத் தலைமைகளும் இல்லை.. வழிகாட்டல்களும் இல்லை.

எல்லாரும் நான் பெரிசு.. என்று இருந்தால்.. பிரித்தாளுபவனுக்கு வேலை சுலபம். அதன் பிரதிபலிப்பே இது. இதொன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. எதிர்பார்த்தவை தான். இதெல்லாம் நிகழும் என்று எப்பவோ புலிகள் கட்அவுட் வைச்சுக் காட்டிவிட்டார்கள். எச்சரித்தும் இருந்தார்கள். அப்போ.. அதை எல்லாம் இலகுவாகக் கடந்து போய் விட்டு இப்போ.. குய்யோ முறையோ என்று கத்தி ஒரு பலனும் இல்லை. 

காலம் இதையும் கடந்து போகக் கற்றுக்கொடுக்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

BBC புரட்டு செய்தி போட நான் லைசன்ஸ் காசு தரேல்லாது எண்டு கடதாசி போட தான் இருக்கு

10 hours ago, nedukkalapoovan said:

9 minutes ago, Nathamuni said:

BBC புரட்டு செய்தி போட நான் லைசன்ஸ் காசு தரேல்லாது எண்டு கடதாசி போட தான் இருக்கு

பி.பி.சி.க்கு...  கட்டாயம், பெட்டிசம் போட வேணும்.  😂
இவங்கடை அரியண்டம் தாங்க ஏலாமல் கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி பரப்பும் புனைகதையும் சாதியம் தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரப்பூர்வமான கருத்தும்.

தற்பொழுது  தமிழர்  தாயகத்தில் 

யாழில்   எந்த அளவுக்கு சாதி பாகுபாடு இருக்கிறது? அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்   என்று  பிபிசிதமிழ்  பரப்பப்படும் "யாழ்ப்பாணம் சாதியத்தின் கோட்டை" என்னும் புனைகதையை   கடந்து செல்ல  முடியாது தமிழர்களிடையே  தமிழீழ அரசு(தமிழீழ விடுதலைப்புலிகள்)  விதைத்த சமத்துவத்தை சிதைக்க  இந்திய - சிங்கள அரசின் திட்டமாக இதை பார்க்கலாம் ..

U3bYYhnQiAraQBZHbfI5.jpg

சாதியம் தொடர்பான   தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது இதை காலத்தின் தேவை கருதி  தாரகம் இணையத்தில்  மீள் வெளியீடு செய்கின்றோம் 

காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகிறது. எமது 18 வருடகால ஆயுதப்போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கிவருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளை சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிமனிதருக்குச் சொந்தமானது. அந்தத் தனிமனிதர் தன்னை ஒரு “உயர்சாதிக்காரர்” என எண்ணிக்கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்கு குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடிவருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றை தீண்டக்கூடாது என்கிறார்.

இதே போன்று வடமராட்சியில் ஒரு சம்பவமும் காரைநகரில் ஒரு சம்பவமும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றார்கள். விடுதலைப்புலிகள் அந்த “உயர்சாதிக்காரர்” என்பவரை அழைத்து நியாயம் கேட்கிறார்கள். சமூக நீதி – சமத்துவம் பற்றி விளக்குகிறார்கள். மாறும் உலகத்தைப் பற்றியும் மனித நாகரிகத்தைப்பற்றியும் பேசுகின்றார்கள். கிணற்றுச் சொந்தக்காரர்கள் இலகுவாக மசிவதாக இல்லை.

தனது காணி, தனது கிணறு, தனது சாதி என அகம்பாவம் பேசுகிறார். உளுத்துப்போன சமூக மரபுகளை நியாயமாகக் காட்ட முனைகிறார்கள்.

இவைகள் உண்மையில் நடந்த சம்பவங்கள். இப்படிச் சில சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் சந்திக்கின்றார்கள்.

சாதிவெறி என்ற பிசாசு எமது சமூகத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில், சாதிப்போய் கோரத் தாண்டவம் ஆடியது. அதுதான் சமூக நீதியாகவும் பேணப்பட்டுவந்தது. பின்னர் அதற்கெதிராக நியாயம் கேட்டு, அடக்கப்பட்ட மக்கள் போர்க்குணம்கொண்டார்கள்.

“அடங்காத்தமிழர்”? ஒரு புறமும் அடக்கப்பட்ட தமிழர்கள் ஒருபுறமுமாக களத்தில் இறங்கினார்கள்.

தாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களுக்கு கோவில்கள் திறந்துவிடப்படவேண்டும், தேனீர்க் கடைகளில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதுதான் இந்தச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் குறிக்கோள்.

இதற்காக மோதல்கள் நடந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர் இழப்புகளும் நடந்தன.

இது அன்றைய காலகட்டத்தின் ஒரு முற்போக்கான போராட்டமாகும். அடக்கப்பட்ட அந்த மக்களின் போர்க்குணம் புரட்சிகரமானது.

ஆனால் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரின் மனம் திறபடாமல் கோவில்களைத் திறப்பதிலோ தேனீர்க்கடைகளில் சமவுரிமை கிடைப்பதிலோ சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை.

அதே சமயம் “தீண்டாமை ஒழிப்பு” என்ற பெயரில் சாதிய ஒழிப்பிற்காகக் கூட்டணித் தலைவர்கள் நடாத்திய போராட்டம் கேலிக்கூத்தானவை மட்டுமல்ல சாதியத்திற்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போர்க்குணத்தைத் தமக்கே உரிய “புத்திசாதுரியத்துடன்” மழுங்கடிக்கும் ஒரு சதிச்செயலுமாகும்.

இவர்கள் நடாத்திய “சம பந்திப்போசனம்” என்ற நாடகம் தங்களை “உயர்சாதிக்காரர்கள்” என தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டணியினரின் இந்தப் போராட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப்பட்ட விளம்பரங்களேயல்லாமல் சாதிய முரண்பாட்டை அழித்துவிடும் புரட்சிகர நோக்கத்தைக் கொண்டதல்ல.

“சாதியம்” என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக்கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சனை. வேதகால ஆரிய நாகரீகத்தின் வர்ண குல அமைப்பிலிருந்து சாதிப்பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். பிராமணர்கள் வேத நூல்களை எழுதினார்கள். மனுநீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள். இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர்ந்த சாதியாகக் கற்பித்து சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப்படுத்தினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்தபடி செல்வது இங்கு அவசியமில்லை. எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அநீதிமுறை தமிழீழ சமுதாயத்திலும் வேரூன்றி விருட்சமாகிவிட்டது. தமிழீழ மக்களின் சமூக உறவுகளுடனும், சம்பிரதாயங்களுடனும், பொருளாதார வாழ்வுடனும், கருத்துலகப் பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாக சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை. சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார உறவுகளிலிருந்து எழுகிறது. மத நெறிகளும் சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

கிராமியப் பொருளாதார வாழ்வை எடுத்துக்கொண்டால் தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் சாதிய முறை அமையப்பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. ஒரு தொழில் உன்னதமானது, மற்றைய தொழில்கள் உன்னதம் குறைந்தது அல்லது இழுக்கானது என்ற மூட நம்பிக்கையின் அடிப்படையில், தொழில் செய்து வாழும் மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொழில் பிரிவுகளிலிருந்தும் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொய்யான அந்தஸ்த்துக்களில் இருந்தும் “உயர் சாதி” “தாழ்ந்த சாதி” என்ற மூடத்தனமான சமூக உறவுகளும் அவற்றைச் சூழவுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களும் தோற்றம் கொண்டுள்ளன.

செய்யும் தொழில் எல்லாம், உயர்ந்தது, உழைப்பில் உன்னதமானது, இழுக்கானது எனப் பாகுபாடு காட்டுவது மூடத்தனம். தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தை தாழ்த்தப்பட்டோர் என்றும் தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது. மனித அடிமைத் தனத்திற்கும், படுமோசமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல் முறைக்கும் சாதியம் காரணியாக இருந்து வருகிறது.

நீண்டகாலமாக எமத சமூதாயத்தில் நிலவி வந்த சாதிய வழக்குகளையும் சம்பிரதாயங்களையும் தொகுத்து அந்நிய காலனித்துவ ஆட்சியாளர்கள் சட்டமாக்கினார்கள். இதுதான் தேச வழமைச்சட்டம் எனப்படும். இச்சட்டங்கள் சாதியப் பிரிவுகள் பற்றியும் சாதிய வழக்குகள் பற்றியும் விளக்குகின்றன. சாதியத்தை நியாயப்படுத்தி வலுப்படுத்த முனைவதோடு உயர்சாதிக்காரர் எனக் கருதப்படும் ஆளும்வர்க்கத்தின் அபிலாசைகளைப் பேணும் வகையிலும் இந்தச் சட்டத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

பிரித்து ஆளும் கலையில் கைதேர்ந்த அந்நிய காலனித்துவவாதிகள் மூட நம்பிக்கைகளிலிருந்து பிறந்த சமூக வழக்குகளை சட்டவடிவமாக்கி சாதிய முரண்பாட்டை வலுப்படுத்தினார்கள். சாதியத்தால் பயனடைந்த உயர்சாதியினர் எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்போராடத் துணியவில்லை.

பதவிகளைக் கைப்பற்றிக்கொள்வதற்காக காலத்திற்குக் காலம் சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்ற போர்வையில் சில கேலிக்கூத்துக்களை நடாத்தி அப்பாவிகளான அடக்கப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெற்று பதவிக்கட்டில் ஏறினார்கள்.

விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்கள் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டமும் தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப்புரட்சியை உண்டு பண்ணியது எனலாம். அரச பயங்கரவாத அட்டூழியங்களும் அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும் எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின. பழமையில் தூங்கிக்கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது. வர்க்க, சாதிய காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப் பற்றுணர்வு தோன்றியது. தமிழீழ மக்கள் ஒரே இன மக்கள் என்ற இனவுணர்வும் பிறந்தது. சாதிய வேர்களை அறுத்தெறிந்து எல்லா சமூகப்பிரிவுகளிலிருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக புலிகள் கண்ட வளர்ச்சியும் அவர்களது புரட்சிகர அரசியல் இலட்சியங்களும் சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது. தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது.

புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்களது இலட்சியப் போராட்டமும் சாதி வேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்துப் பேசுவதோ, செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட – அது வெட்கக்கேடானது, அநாகரிகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்துவந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றமாகும்.

இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிடமுடியவில்லை. சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதிய வெறியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாதியப் பிரச்சனைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பிலேயே குணமாக்கி விடுவதென்பது இலகுவான காரியம் அல்ல. அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ சாதியப் பேயை விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இந்தப் பிரச்சனைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடூரமானது. அனுமதிக்க முடியாதது.

மற்றையது, சாதி ரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கேற்றவிதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயல் இழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகர புறநிலைகளும் சாதிய அமைப்பை தகர்க்கத் தொடங்கியிருக்கிறது. எனினும் பொருளாதார உறவுகளிலும் சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்துவிடப்போவதில்லை. எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாயப் புரட்சியுடன் மனப் புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமத்துவத்தை நோக்கமாகக்கொண்ட சமுதாயப் புரட்சியை முன்னெடுப்பது புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையைப்பெற்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்தமுடியும். ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதார திட்டங்களைச் செயற்படுத்தி கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி சாதிய உறவுகளை படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையைப்போக்க மனப்புரட்சி அவசியம். மன அரங்கில் புரட்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். இங்குதான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.

எமது இளம் பரம்பரையினருக்கு புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழைமையான பிற்போக்கான கருத்துக்கள், கோட்பாடுகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை இருள் நீங்கி புதிய விழிப்புணர்வும், புரட்சிகரச் சிந்தனைகளும் இளம் மனங்களைப் பற்றிக்கொண்டால்தான் சாதியம் என்ற மன நோய் புதிதாகத் தோன்றப்போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.

pdf ல் பார்க்க :-

சாதியமும் -தமிழீழ விடுதலைப்புலிகளும்

9vsBKW2je9lIbEATGzcN.jpg

-விடுதலைப்புலிகள் – புலிகளின் அதிகாரபூர்வ இதழ் - 20

நன்றி 

தமிழீழ ஆவணக்காப்பகம் 

https://www.thaarakam.com/news/b99e9819-73fe-49d6-8fb6-a36034df22d0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.