Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி

இது முள்ளிவாய்க்காலிற்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழீழக் குடிமகனின் கருத்துக்கள் ஆகும். 

என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும். இதை நான் நன்கு யோசித்து என்னால் தீரணம் எட்ட முடியாததால் 'அமரர்' என்ற சொல்லால் இவ்வாறு படுகொலை ஆனோரை விளித்து எனது ஆவணங்களில் பதிவிட்டு வருகிறேன். இவ்வாறு இரண்டு தடவை செய்துள்ளேன்.

இரண்டாவது தடவை குறித்த போது யாழ் கள உறவு ஒருவர் கொதித்தெழுந்து சண்டியன் சின்னத்தம்பியாகி என்னைத் தூற்றினார். அவர் என்னைக் குறித்துப் பதிந்த கருத்துக்கள் எனக்குச் சிரிப்பைக் கொணர்ந்தாலும் இது தொடர்பாக ஒரு வாதம் நிகழ்த்துவதென்பது மக்களின் கருத்தை அறியவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவெடுக்க இருப்போரிற்கு ஒரு அடியெடுத்துக் கொடுக்கும் நிகழ்வாகவும் இருக்கும் என்பதால் இத்திரியைத் திறக்கிறேன்.

இங்கு நாம் "இறுதிப் போர்" என்பதை விட "இறுதிப்போரின் கடைசிக் கட்டம் ( 2009/01-05)" எனக் குறிப்பிடலாம். ஏனென்றால் இறுதிப் போர் என்பது நான்காம் ஈழப்போரை மொத்தமாகக் குறிக்கும் சொல்லாகும். அதன் இறுதிக் கட்டத்திலே தான் இது நடந்தேறியுள்ளதால் அவ்வாறு குறிப்பிடுவதே சாலப் பொருத்தமாகும்.

இவ் இறுதிப்போரின் கடைசிக் கட்டத்தில் சரணடைவுகள் பன்னேரங்களில் நடந்தேறின. கடைசிக் கட்டத்தின் தொடக்கத்திலேயே சரணடைவுகள் தொடங்கிவிட்டன. கட்டாய ஆட்சேர்வுகள் உட்பட உயர் தரநிலைகளில் இருந்தோர் கூட சிங்களவனிடம் சென்று சரணடைந்தனர். அவர்களில் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டோர் தவிர ஏனையோர் வதைத்துக் கொல்லப்பட்டனர். அதே போல சன்னங்கள் தீரும்வரை அடிபட்ட பின்னர் சரணடைந்தவர்களும் உண்டு. இவர்களும் கொல்லப்பட்டனர். சரணடைந்த சில பெண் போராளிகளை உயிருடன் வைத்து உடல்கள் இரண்டாக்கக் கிழித்துப் பிளக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அடுத்து ஒடுவிலில் (இனியில்லையென்ற கடைசி நிலை) தலைவரின் அனுமதியோடு பன்னாட்டிற்கு அறிவித்துவிட்டு அலுவல்சாராக சரணடைந்தோர். இவர்கள் அனைவரும் கூட வேவ்வேறு கால கட்டங்களில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். 

இப்போது வினா என்னவெனில், இவ்வாறாக இறுதிப் போரின் கடைசிக் கட்டத்தில் சரணடைந்தோரை மாவீரர் என்று விளிப்பதா இல்லை அமரர் என்று விளிப்பதா? (இப்படியொரு வினா எழுப்ப எனக்குத் துளியும் விருப்பமில்லை. இருந்தாலும் கள உறவு ஒருவர் முன்வைத்த கருத்தால் இதை எழுப்பத் தலைப்படுகிறேன்.)

மாவீரர் எனில், புலிகள் இருந்த காலத்தில், அதாவது 2009 மே வரை, சரணடைந்து படுகொலையானவர்கள் "மாவீரர்" எனவோ அவர்களின் சாவுகள் "வீரச்சாவு/காயச்சாவு" எனவோ த.வி.பு. ஆல் அறிவிக்கப்பட்டதில்லை. ஆயினும் 1997ம் ஆண்டு தெரியாத்தனமாக சோனகர்களிடம் உயிர்த்தப்ப உதவி கேட்ட போது சிங்களப் படையினரிடம் அவர்களால் கூட்டிக்கொடுக்கப்பட்டு வதைபட்டு உயிரிழ்ந்த ஆறு போராளிகளும் மாவீரர் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் கடற்கரும்புலி மேஜர் பாலனின் உச்ச உயிர் தியாகத்தால் இவர்களின் சாவுகள் "வீரச்சாவு" என்ற வரையறைக்குள் கொண்டுவரப்பட்டதென ஊகிக்கிறேன். ஆனால், வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேறு யாரும் இவ்வாறு எப்பொழும் அறிவிக்கப்படவில்லை, நானறிந்தவரை.

இறுதிப்போரிலும், ஒடுவில் நிலைக்கு முன்னர், சரணடைந்து/ சமர்முனையில் பிடிபட்டு படுகொலையான யாரும் மாவீரர்களாக அறிவிக்கப்பட்டதில்லை, புலிகளின் தமிழீழ நடைமுறையரசு ஆண்ட வரை. எனவே நானும் ஒடுவிலில், அதாவது மே 16, 17, 18 இல், சிறிலங்கா அரசிடம் எவ்விதத்திலும் சரணடைந்த/பிடிபட்டு கொல்லப்பட்ட போராளிகளை மாவீரர் என்ற சொல்லால் விளிக்கவில்லை. குறிப்பாக வெள்ளைக்கொடியோடு சென்று சரணடைந்தோரைக் கூட.

இவ்வாறு விளிக்காமைக்கு என்னிடம் இரண்டு காரணங்கள் உண்டு :- 

  1. மாவீரர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. மாவீரர்கள் எனில் அனைவரும் சமம். அவர்களில் சிலரை தூக்கிப் பிடிப்பதும், சிலரை கீழே விடுவதும் என்பது என்னைப் பொறுத்தவரை கூடாத செயல்கள். இதன் அடிப்படையில் சரணடைந்தோரை நான் மாவீரர் என விளிக்கவில்லை. 
  2. மற்றது, புலிகளின் பழைய நடைமுறையில் சரணடைந்தோர் மாவீரராக எப்பொழுதும் அறிவிக்கப்பட்டதில்லை. எனவே அதையே நானும் பின்பற்றி இறுதிப்போரின் கடைசிக்கட்டத்தில் சரணடைந்தோரை நான் மாவீரர் என விளிக்கவில்லை. என்னைப் பொறுத்த வரை மாவீரர் என்ற சொல்லுக்கு புலிகள் கொடுத்த பொருளையே பேணுவதே சரியாகும். 

எனவே இதில் எனக்கு குழப்ப நிலை இருந்தமையால் முன்சொன்ன காரணங்களை முன்வைத்து அவர்களை அமரர் (பொதுவாக இறந்த ஒருவரை குறிக்க தமிழில் பயன்படுத்தும் சொல்) என்ற சொல்லால் விளித்தேன்.

அப்பொழுது இறுதிப் போரின் கடைசிக் கட்டத்திற்கும் முன்னரான காலத்திற்கும் வேறுபாடு உண்டென்றும் (நான் அதை அறியாத வரலாற்றைத் திரிக்கும் சிங்களக் கைக்கூலியாம்!)  அவர்கள் மாவீரர் என்றும் ஒரு உறவு வாதத்தை முன் வைத்தார்.

என்னைப் பொறுத்தவரை,

இறுதிப்போரின் இறுதிக்கட்டத்தின் ஒடுவிலில் சரணடைந்தோரை வேறேதும் பிடாரச்சொற்களை (Newly coined term) புதிதாக உண்டாக்கிப் பொதுவாக விளிக்கலாம். ஆனால், வெள்ளைக் கொடியோடு சென்ற எல்லோரும் உடனே கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் உயிரோடு வைக்கப்பட்டு 2016ம் ஆண்டில் அடித்துக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா கார்டியன் என்ற வலைத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது, 2016ம் ஆண்டில்.

ஆனால், மாவீரர் என்று குறிப்பிடுவது எவ்வளவு தொலைவு தகும் என்பது எனக்குத் தெரியவில்லை.

எனவே இதுதொடர்பாக பொதுமக்கள் என்ன கருதுகின்றனர் என்பதை அறிய விரும்புகிறேன்.

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Sad 1
Posted

எதிரியால் இறந்த (கொல்லப்பட்ட) போராளிகள்(அரசியல், ஆயுதம் ) மாவீரர்கள் தான்.
எதிரியிடம் சரணடைந்தவர்கள் தலைமையின் கட்டளையின் படியே செய்தார்கள்.
 
  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த கருத்துக்குழப்பத்தினை தவிர்க்க ஒரு ஆலோசனை.

(இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்) தன்னை மாவீரர் என்று அழைக்கவேண்டாம் என்றும், மாவீரர் என்று அழைக்க இரண்டு விடயங்கள் நடந்திருக்க வேண்டும் என்று தலைவர் சொல்லி இருந்தார்.

அந்த இரண்டு விடயங்கள் என்ன என்று யாராவது விளக்கம் தர முடியுமா?

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வணக்கம் தம்பி நன்னிச்சோழன்

உங்கள்  பணிகளின் சுமையும்

அதற்காக  நீங்கள்  செலவிடும்  நேரங்களுக்கும் முதற்  கண் நன்றிகள்

இவ்வாறான  பணிகள் ஆய்வுகள் சேவைகளின் போது

ஏற்படக்ககூடிய தடங்கல்கள்  மற்றும்  குறுக்கீடுகள் என்பனபற்றியும் அறிவேன்

ஆனால் தவறுகள்  அதிலும் போராளிகள் மீதான தவறான விதைப்புக்களும் எமக்கே  தெரியாத  விடயங்களில்  முடிவுகளை  தனிப்பட்ட நாமெடுப்பதும் நிச்சயமாக  தவிர்க்கப்படணும்.

அவை  எமக்காக  அனைத்தையும் ஈர்ந்த  அவர்களுக்கு  நாம்  செய்யும்  மாபெரும்  துரோகமாக  மாறலாம்

நன்றி

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருக்கு யார் தீர்பெழுதுவது🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவ்விடயத்தில் என் கருத்துக்கு எவ்வளவு பெறுமானம் இருக்கிறதோ தெரியாது😂

இருந்தாலும்: மேலே நுணா சொல்லியிருப்பதே சரியானது. தலைமையை நிராகரித்தோ, தப்பியோடும் எண்ணத்திலோ வெள்ளைக் கொடி ஏந்தியோர் சரணடையவில்லை. அந்த சரணடைதல் யுத்தத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சரணடைந்த பின்னர், உடனடியாகவோ அல்லது 7 வருடங்கள் கழித்தோ எதிரி கொலை செய்திருந்தால், நிச்சயமாக அவர்கள் மாவீரர்கள் கௌரவத்திற்குரியோரே!

புலிகள் அமைப்பு 2009 இற்கு முன்னர் பின்பற்றிய மரபை (convention), இந்த விடயத்தில் நாம் இன்றும் பின்பற்றினால் பாதகமான பின்விளைவுகள் ஏற்படுமென நினைக்கிறேன். உதாரணமாக, 10 வருடம் போராடிய ஒரு போராளி சரணடைந்து , கொலையாகாமல் தப்பி வாழ்ந்தால், அவரது 10 வருட வாழ்க்கைத் தியாகத்தை உதாசீனம் செய்ய முடியுமா? இல்லையல்லவா? இப்படி உயிரோடு மீண்ட சரணடைந்த போராளிகள், முன்னாள் போராளிகள் என்றால், சரணடைந்து எதிரியால் கொல்லப் பட்டோர் மாவீரர்களே. இது மிகவும் எளிய தர்க்க முடிவு, இதற்கு ஏன் புதுச் சொல் தேடி தலை முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்?  

  • Like 11
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Justin said:

நன்றி Justin 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, நன்னிச் சோழன் said:

என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும்.

இதில் ஒரு சிக்கலும் இல்லை நன்னி.

போராட போய் இறந்தவர்கள் எல்லோருமே மாவீரர்கள் தான்.

இதில் சண்டை சரணடைவு என்று வித்தியாசம் இல்லை.

Edited by ஈழப்பிரியன்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில் ஒரு சிக்கலும் இல்லை நன்றி.

போராட போய் இறந்தவர்கள் எல்லோருமே மாவீரர்கள் தான்.

இதில் சண்டை சரணடைவு என்று வித்தியாசம் இல்லை.

நன்றி ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, நந்தன் said:

நன்றி Justin 

10 minutes ago, விசுகு said:

நன்றி Justin 

இதில் நன்றி சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை, நந்தன், விசுகு, என்றாலும் உங்கள் அன்புக்கு நன்றிகள்!🙏

இது போன்ற இறுக்கமான மரபு, சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்க்கை/உயிர்த் தியாகம் செய்தோரை வரையறை செய்வது "தேவையில்லாத ஆணி" என்பதால் தான் பல உறவுகள் எதுவும் எழுதாமல் கடந்து போகிறார்களென நினைக்கிறேன். 

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Justin said:

ஆனால் மௌனம்  சம்மதம்  என்றாகிவிடக்கூடாது அல்லவா???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு நான் செத்தால் நான் அமரர். ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி, தலைமையின் ஆணைப்படி சரணடைந்து, பாரிய வதைகளுக்கு உட்பட்டு உயிரைக் கொடுத்தவர்களையும் அமரர் என்று ஒரே தட்டில் வைக்கமுடியாது.

இறுதி யுத்த காலத்தில் சரணடைந்தோ, எதிரியுடன் பிடிபட்டோ கொல்லப்பட்ட போராளிகள் அனைவரும் என் பார்வையில் மாவீரர்கள். அவர்களின் சாவும் வீரச்சாவுதான்.

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை பற்றிய என் கருத்தை ஏலவே திண்ணையில் சொல்லி விட்டேன். இருந்தாலும் கேட்டு கொண்டபடி ஒரு ரெக்கோர்ட்டுக்காக மீளவும் எழுதுகிறேன்.

1. நம் எல்லாருக்கும் இருக்கும் குழப்பம் நன்னிக்கும் இருந்துள்ளது. அமரர் என்றபதத்தை பாவிக்க முன்னர் அவரும் ஒரு குழப்ப நிலையில் இருந்து - தனக்குள் தர்க்கித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்பது தெரிகிறது.

2. இது உண்மையில் எம் இனத்தின் தலைமைகளின் பிழை. இந்த வரலாற்றை பேணலை - நாடுகடந்த அரசோ அல்லது அதை ஒத்த அமைப்போ செய்திருக்க வேண்டும். யாரும் செய்யாத போது தனிமனிதர்கள் தன்னார்வமாக செய்யும் போது - சில முடிவுகளை பொது அபிபிராயம் கேட்டு செய்ய முடியாமல் - அவரகளே முடிவை எடுக்கும் நிலை. 

3.  வரலாறு உள்ளபடி எழுதப்பட வேண்டும் என்பதிலும் தவறு என காண்பதை எடுத்து சொல்ல வேண்டும் என்பதிலும் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். தன்னார்வமாக வரலாறை எழுதுவதை போலவே அதை சரிபார்ப்பதும். இரெண்டுமே இனத்துக்கு நாம் செய்யும் முக்கிய கடமை. இதை விட இதில் தனிப்பட்ட ஈகோகளுக்கு இடமிருக்க கூடாது.

4. சரணடைந்தோரை விளிக்க மாவீரர், வீரச்சாவு போன்ற பதங்களை புலிகள் இருக்கும் போது பாவிக்கவில்லை என்ற நன்னியின் வாதம் சரியானது.

அதே போல் - சரணடைந்தோர் எல்லாரும் - ஒரே வகையினர் அல்ல. சிலர் தலைவர் அறிவிக்கும் முன்பும் தாமாக சரணடைந்தனர். பலர் தலைவர் அறிவித்த பின் சரணடைந்தனர். நடேசன் அண்ணை உட்பட்ட இன்னும் சிலர் புலிகளின் உத்தியோகபூர்வ சரணடையும் அணியாக சென்று சரணடைந்தனர். 

இதில் தலைமையின் அறிவுப்புக்கு பிறகு சரணடைந்தோர் - சகல வகையிலும் மாவீரர்களே. மேலே பலர் கூறியுள்ளது போல - அவர்கள் இறுதிவரை போராடினார்கள் - பின்னர் தலைமை அல்லது தளபதிகள் கொடுத்த கட்டளையை ஏற்று சரணடைந்தனர். 

அப்போ யாரை விளிக்க நாம் மாவீரர்/ வீரச்சாவு போன்ற பதங்களை தவிர்க்கலாம்?

அ. சரணடைந்து பின் வேறு காரணத்தால் இறந்தோர்.

ஆ. விடுதலை போர் நடந்த காலம் நெடுகிலும் (லெப் சங்கர் முதல் - முள்ளிவாய்கால் கடைசி வரை) - தலைமை கட்டளையிடாமல் சரண்டைந்தோர்.

இது எனது கருத்து மட்டுமே. ஆனால் இது அடிப்படையான ஒரு தர்க விளக்கத்தை தருவதாக நான் கருதுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, goshan_che said:

ஆ. விடுதலை போர் நடந்த காலம் நெடுகிலும் (லெப் சங்கர் முதல் - முள்ளிவாய்கால் கடைசி வரை) - தலைமை கட்டளையிடாமல் சரண்டைந்தோர்.

இறுதி யுத்ததின் இறுதிநாட்களில் சரணடைந்து பின் கொல்லப்பட்ட ஒருவர் - தலைமை உத்தரவிடும் முன்னர் சரணடைந்தாரா இல்லையா என்பதில் தரவு மயக்கம் இருக்கும் எனில் - benefit of the doubt அடிப்படையில் அவரையும் குறித்த பதங்களை கொண்டு விளித்தல் பொருத்தமாக இருக்கும்.

3 hours ago, நந்தன் said:

யாருக்கு யார் தீர்பெழுதுவது🤔

நெஞ்சை பிழியும் கேள்வி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான தலைமையின் கீழ் அந்த தலைமையின் இயக்கத்தின் கொள்கைக்கு வழிகாட்டலுக்கு உட்பட்டு இயங்கி மரணித்த எல்லோரும் மாவீரர்களே தான். அந்த வகையில்.. வெவ்வேறு தலைமையின் கீழ் இயங்கினும்.. தமிழீழம் என்ற தமிழ் மக்களின் பொது இலட்சியத்தை அடைய எவ்வழியில் என்றாலும் தலைமைகளின் கட்டளைக்கு உட்பட்டு போராடி அல்லது செயற்பட்டு.. மாண்டவர்கள் எல்லோரும் மாவீரர்களே. அந்த வகையில் தான் தமிழீழ தேசிய தலைவர் சிவகுமரன்.. குட்டிமணி உட்பட பல தியாகிகளையும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்பணித்தார். குட்டிமணி எதிரியிடம் பிடிபட்டு சிறையில் வீழ்த்தப்பட்டார் என்பதற்காக.. அவர் இறுதிவரை கொண்டிருந்த தமிழீழத் தாகம் என்பது புறக்கணிப்படக்கூடாது. இதே தான் எல்லா மாவீரர்களுக்கும். 

தமிழீழத்தைக் கைவிட்டு எதிரிக்கு இனத்தை நிலத்தை காட்டிக்கொடுத்தோர்.. ஆக்கிரமிக்க துணை நின்றோர் நிச்சயம் மாவீரர்கள்.. தியாகிகளாக முடியாது. 

இதில் குழப்பம் எதற்கு..?! 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்னியின் குழப்பத்துக்கு காரணமாக நான் கருதுவது:

'வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தோர், கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவர்களது சரணுக்குப் பின்னான நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதே' என்று நினைக்கிறேன். 

இவர்களுக்கு முன்பே சரணடைந்த தயா மாஸ்டர் மற்றும் இன்னொருவர் (ஜோர்ஜ் ?) அவர்கள் மேலிருந்த மறைமுக அழுத்தம் காரணமாக போராட்டத்துக்கு எதிராக பேசியதால் மக்களால் விரும்பப்படவில்லை. எனது நிணைவு சரியானால் இவர்களில் ஒருவர் இயற்கையா மரணித்த போது மாவீரர் என்றோ, நாட்டுப்பற்றாளர் என்றோ யாராளும் அழைக்கப்படவில்லை. 

தலைவர் உடலை அடையாளம் காண கருணாவுடன் கொண்டு செல்லப்பட்டவர், தயா மாஸ்டர் என்று நினைக்கிறேன்.

சரணடைந்து புனர்வாழ்வு என்ற பெயரில் மூளைச்சலவை செய்த வெளியேவந்து எழுதிக் கொடுக்கப்பட்ட புத்தகம் வெளியிட்டு பின்னர் நோயால் இறந்த பெண் போராளியின் (தமிழினி) நிலையும் அவ்வாறே.

ஆகவே வெள்ளைக் கொடியுடன் வந்து, (கொல்லப்பட்டோர்), உயுருடன் இருந்திருந்தால் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே இருக்கவேண்டிய சிங்கள அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பர்.

ஆகவே... நன்னியின் நிலைப்பாடு... நிராகரிக்க முடியாத விவாத ஆய்வுக்குரியது என்றே கருதுகிறேன்.

இது கருத்து மட்டுமே, எனது நிலைப்பாடல்ல.

Edited by Nathamuni
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நன்னிச் சோழன் said:

இப்போது வினா என்னவெனில், இவ்வாறாக இறுதிப் போரின் கடைசிக் கட்டத்தில் சரணடைந்தோரை மாவீரர் என்று விளிப்பதா இல்லை அமரர் என்று விளிப்பதா?

சரணடைந்த போராளிகளும் மாவீரரர்கள் தான்
அப்போது அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருந்ததால் சரணடைந்தார்கள் அல்லது சரணடைய உந்தப்பட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, நன்னிச் சோழன் said:

புலிகளின் பழைய நடைமுறையில் சரணடைந்தோர் மாவீரராக எப்பொழுதும் அறிவிக்கப்பட்டதில்லை. எனவே அதையே நானும் பின்பற்றி இறுதிப்போரின் கடைசிக்கட்டத்தில் சரணடைந்தோரை நான் மாவீரர் என விளிக்கவில்லை. என்னைப் பொறுத்த வரை மாவீரர் என்ற சொல்லுக்கு புலிகள் கொடுத்த பொருளையே பேணுவதே சரியாகும். 

2009க்கு முன்னரான போராட்ட காலங்களின் நிலைமை வேறு. அன்றைய நிலை, திட்டங்களும் வேறு. 
ஆனால்...

இறுதி நிலைப்பாடு வரைக்கும் கடைசி மண் வரைக்கும் நின்றவர்கள் அவர்கள்.
அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது எமது கடமை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, Nathamuni said:

நன்னியின் குழப்பத்துக்கு காரணமாக நான் கருதுவது:

'வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தோர், கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவர்களது சரணுக்குப் பின்னான நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதே' என்று நினைக்கிறேன். 

இவர்களுக்கு முன்பே சரணடைந்த தயா மாஸ்டர் மற்றும் இன்னொருவர் (ஜோர்ஜ் ?) அவர்கள் மேலிருந்த மறைமுக அழுத்தம் காரணமாக போராட்டத்துக்கு எதிராக பேசியதால் மக்களால் விரும்பப்படவில்லை. எனது நிணைவு சரியானால் இவர்களில் ஒருவர் இயற்கையா மரணித்த போது மாவீரர் என்றோ, நாட்டுப்பற்றாளர் என்றோ யாராளும் அழைக்கப்படவில்லை. 

தலைவர் உடலை அடையாளம் காண கருணாவுடன் கொண்டு செல்லப்பட்டவர், தயா மாஸ்டர் என்று நினைக்கிறேன்.

சரணடைந்து புனர்வாழ்வு என்ற பெயரில் மூளைச்சலவை செய்த வெளியேவந்து எழுதிக் கொடுக்கப்பட்ட புத்தகம் வெளியிட்டு பின்னர் நோயால் இறந்த பெண் போராளியின் (தமிழினி) நிலையும் அவ்வாறே.

ஆகவே வெள்ளைக் கொடியுடன் வந்து, (கொல்லப்பட்டோர்), உயுருடன் இருந்திருந்தால் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே இருக்கவேண்டிய சிங்கள அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பர்.

ஆகவே... நன்னியின் நிலைப்பாடு... நிராகரிக்க முடியாத விவாத ஆய்வுக்குரியது என்றே கருதுகிறேன்.

இது கருத்து மட்டுமே, எனது நிலைப்பாடல்ல.

இந்த குழப்பத்துக்கு இது விடையாக அமையும் அல்லவா?

2 hours ago, goshan_che said:

அப்போ யாரை விளிக்க நாம் மாவீரர்/ வீரச்சாவு போன்ற பதங்களை தவிர்க்கலாம்?

அ. சரணடைந்து பின் வேறு காரணத்தால் இறந்தோர்.

ஆ. விடுதலை போர் நடந்த காலம் நெடுகிலும் (லெப் சங்கர் முதல் - முள்ளிவாய்கால் கடைசி வரை) - தலைமை கட்டளையிடாமல் சரண்டைந்தோர்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
12 hours ago, nunavilan said:

எதிரியால் இறந்த (கொல்லப்பட்ட) போராளிகள்(அரசியல், ஆயுதம் ) மாவீரர்கள் தான்.
எதிரியிடம் சரணடைந்தவர்கள் தலைமையின் கட்டளையின் படியே செய்தார்கள்.
 
11 hours ago, Nathamuni said:

இந்த கருத்துக்குழப்பத்தினை தவிர்க்க ஒரு ஆலோசனை.

(இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்) தன்னை மாவீரர் என்று அழைக்கவேண்டாம் என்றும், மாவீரர் என்று அழைக்க இரண்டு விடயங்கள் நடந்திருக்க வேண்டும் என்று தலைவர் சொல்லி இருந்தார்.

அந்த இரண்டு விடயங்கள் என்ன என்று யாராவது விளக்கம் தர முடியுமா?

7 hours ago, விசுகு said:

வணக்கம் தம்பி நன்னிச்சோழன்

உங்கள்  பணிகளின் சுமையும்

அதற்காக  நீங்கள்  செலவிடும்  நேரங்களுக்கும் முதற்  கண் நன்றிகள்

இவ்வாறான  பணிகள் ஆய்வுகள் சேவைகளின் போது

ஏற்படக்ககூடிய தடங்கல்கள்  மற்றும்  குறுக்கீடுகள் என்பனபற்றியும் அறிவேன்

ஆனால் தவறுகள்  அதிலும் போராளிகள் மீதான தவறான விதைப்புக்களும் எமக்கே  தெரியாத  விடயங்களில்  முடிவுகளை  தனிப்பட்ட நாமெடுப்பதும் நிச்சயமாக  தவிர்க்கப்படணும்.

அவை  எமக்காக  அனைத்தையும் ஈர்ந்த  அவர்களுக்கு  நாம்  செய்யும்  மாபெரும்  துரோகமாக  மாறலாம்

நன்றி

6 hours ago, Justin said:

இவ்விடயத்தில் என் கருத்துக்கு எவ்வளவு பெறுமானம் இருக்கிறதோ தெரியாது😂

இருந்தாலும்: மேலே நுணா சொல்லியிருப்பதே சரியானது. தலைமையை நிராகரித்தோ, தப்பியோடும் எண்ணத்திலோ வெள்ளைக் கொடி ஏந்தியோர் சரணடையவில்லை. அந்த சரணடைதல் யுத்தத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சரணடைந்த பின்னர், உடனடியாகவோ அல்லது 7 வருடங்கள் கழித்தோ எதிரி கொலை செய்திருந்தால், நிச்சயமாக அவர்கள் மாவீரர்கள் கௌரவத்திற்குரியோரே!

புலிகள் அமைப்பு 2009 இற்கு முன்னர் பின்பற்றிய மரபை (convention), இந்த விடயத்தில் நாம் இன்றும் பின்பற்றினால் பாதகமான பின்விளைவுகள் ஏற்படுமென நினைக்கிறேன். உதாரணமாக, 10 வருடம் போராடிய ஒரு போராளி சரணடைந்து , கொலையாகாமல் தப்பி வாழ்ந்தால், அவரது 10 வருட வாழ்க்கைத் தியாகத்தை உதாசீனம் செய்ய முடியுமா? இல்லையல்லவா? இப்படி உயிரோடு மீண்ட சரணடைந்த போராளிகள், முன்னாள் போராளிகள் என்றால், சரணடைந்து எதிரியால் கொல்லப் பட்டோர் மாவீரர்களே. இது மிகவும் எளிய தர்க்க முடிவு, இதற்கு ஏன் புதுச் சொல் தேடி தலை முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும்?  

6 hours ago, ஈழப்பிரியன் said:

இதில் ஒரு சிக்கலும் இல்லை நன்னி.

போராட போய் இறந்தவர்கள் எல்லோருமே மாவீரர்கள் தான்.

இதில் சண்டை சரணடைவு என்று வித்தியாசம் இல்லை.

5 hours ago, கிருபன் said:

நாளைக்கு நான் செத்தால் நான் அமரர். ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி, தலைமையின் ஆணைப்படி சரணடைந்து, பாரிய வதைகளுக்கு உட்பட்டு உயிரைக் கொடுத்தவர்களையும் அமரர் என்று ஒரே தட்டில் வைக்கமுடியாது.

இறுதி யுத்த காலத்தில் சரணடைந்தோ, எதிரியுடன் பிடிபட்டோ கொல்லப்பட்ட போராளிகள் அனைவரும் என் பார்வையில் மாவீரர்கள். அவர்களின் சாவும் வீரச்சாவுதான்.

3 hours ago, goshan_che said:

இதை பற்றிய என் கருத்தை ஏலவே திண்ணையில் சொல்லி விட்டேன். இருந்தாலும் கேட்டு கொண்டபடி ஒரு ரெக்கோர்ட்டுக்காக மீளவும் எழுதுகிறேன்.

1. நம் எல்லாருக்கும் இருக்கும் குழப்பம் நன்னிக்கும் இருந்துள்ளது. அமரர் என்றபதத்தை பாவிக்க முன்னர் அவரும் ஒரு குழப்ப நிலையில் இருந்து - தனக்குள் தர்க்கித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்பது தெரிகிறது.

2. இது உண்மையில் எம் இனத்தின் தலைமைகளின் பிழை. இந்த வரலாற்றை பேணலை - நாடுகடந்த அரசோ அல்லது அதை ஒத்த அமைப்போ செய்திருக்க வேண்டும். யாரும் செய்யாத போது தனிமனிதர்கள் தன்னார்வமாக செய்யும் போது - சில முடிவுகளை பொது அபிபிராயம் கேட்டு செய்ய முடியாமல் - அவரகளே முடிவை எடுக்கும் நிலை. 

3.  வரலாறு உள்ளபடி எழுதப்பட வேண்டும் என்பதிலும் தவறு என காண்பதை எடுத்து சொல்ல வேண்டும் என்பதிலும் நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். தன்னார்வமாக வரலாறை எழுதுவதை போலவே அதை சரிபார்ப்பதும். இரெண்டுமே இனத்துக்கு நாம் செய்யும் முக்கிய கடமை. இதை விட இதில் தனிப்பட்ட ஈகோகளுக்கு இடமிருக்க கூடாது.

4. சரணடைந்தோரை விளிக்க மாவீரர், வீரச்சாவு போன்ற பதங்களை புலிகள் இருக்கும் போது பாவிக்கவில்லை என்ற நன்னியின் வாதம் சரியானது.

அதே போல் - சரணடைந்தோர் எல்லாரும் - ஒரே வகையினர் அல்ல. சிலர் தலைவர் அறிவிக்கும் முன்பும் தாமாக சரணடைந்தனர். பலர் தலைவர் அறிவித்த பின் சரணடைந்தனர். நடேசன் அண்ணை உட்பட்ட இன்னும் சிலர் புலிகளின் உத்தியோகபூர்வ சரணடையும் அணியாக சென்று சரணடைந்தனர். 

இதில் தலைமையின் அறிவுப்புக்கு பிறகு சரணடைந்தோர் - சகல வகையிலும் மாவீரர்களே. மேலே பலர் கூறியுள்ளது போல - அவர்கள் இறுதிவரை போராடினார்கள் - பின்னர் தலைமை அல்லது தளபதிகள் கொடுத்த கட்டளையை ஏற்று சரணடைந்தனர். 

அப்போ யாரை விளிக்க நாம் மாவீரர்/ வீரச்சாவு போன்ற பதங்களை தவிர்க்கலாம்?

அ. சரணடைந்து பின் வேறு காரணத்தால் இறந்தோர்.

ஆ. விடுதலை போர் நடந்த காலம் நெடுகிலும் (லெப் சங்கர் முதல் - முள்ளிவாய்கால் கடைசி வரை) - தலைமை கட்டளையிடாமல் சரண்டைந்தோர்.

இது எனது கருத்து மட்டுமே. ஆனால் இது அடிப்படையான ஒரு தர்க விளக்கத்தை தருவதாக நான் கருதுகிறேன்.

3 hours ago, goshan_che said:

இறுதி யுத்ததின் இறுதிநாட்களில் சரணடைந்து பின் கொல்லப்பட்ட ஒருவர் - தலைமை உத்தரவிடும் முன்னர் சரணடைந்தாரா இல்லையா என்பதில் தரவு மயக்கம் இருக்கும் எனில் - benefit of the doubt அடிப்படையில் அவரையும் குறித்த பதங்களை கொண்டு விளித்தல் பொருத்தமாக இருக்கும்.

6 hours ago, Justin said:

இது போன்ற இறுக்கமான மரபு, சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு வாழ்க்கை/உயிர்த் தியாகம் செய்தோரை வரையறை செய்வது "தேவையில்லாத ஆணி" என்பதால் தான் பல உறவுகள் எதுவும் எழுதாமல் கடந்து போகிறார்களென நினைக்கிறேன். 

2 hours ago, nedukkalapoovan said:

சரியான தலைமையின் கீழ் அந்த தலைமையின் இயக்கத்தின் கொள்கைக்கு வழிகாட்டலுக்கு உட்பட்டு இயங்கி மரணித்த எல்லோரும் மாவீரர்களே தான். அந்த வகையில்.. வெவ்வேறு தலைமையின் கீழ் இயங்கினும்.. தமிழீழம் என்ற தமிழ் மக்களின் பொது இலட்சியத்தை அடைய எவ்வழியில் என்றாலும் தலைமைகளின் கட்டளைக்கு உட்பட்டு போராடி அல்லது செயற்பட்டு.. மாண்டவர்கள் எல்லோரும் மாவீரர்களே. அந்த வகையில் தான் தமிழீழ தேசிய தலைவர் சிவகுமரன்.. குட்டிமணி உட்பட பல தியாகிகளையும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்பணித்தார். குட்டிமணி எதிரியிடம் பிடிபட்டு சிறையில் வீழ்த்தப்பட்டார் என்பதற்காக.. அவர் இறுதிவரை கொண்டிருந்த தமிழீழத் தாகம் என்பது புறக்கணிப்படக்கூடாது. இதே தான் எல்லா மாவீரர்களுக்கும். 

தமிழீழத்தைக் கைவிட்டு எதிரிக்கு இனத்தை நிலத்தை காட்டிக்கொடுத்தோர்.. ஆக்கிரமிக்க துணை நின்றோர் நிச்சயம் மாவீரர்கள்.. தியாகிகளாக முடியாது. 

இதில் குழப்பம் எதற்கு..?! 

2 hours ago, Nathamuni said:

நன்னியின் குழப்பத்துக்கு காரணமாக நான் கருதுவது:

'வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தோர், கொல்லப்படாமல் இருந்திருந்தால் அவர்களது சரணுக்குப் பின்னான நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதே' என்று நினைக்கிறேன். 

இவர்களுக்கு முன்பே சரணடைந்த தயா மாஸ்டர் மற்றும் இன்னொருவர் (ஜோர்ஜ் ?) அவர்கள் மேலிருந்த மறைமுக அழுத்தம் காரணமாக போராட்டத்துக்கு எதிராக பேசியதால் மக்களால் விரும்பப்படவில்லை. எனது நிணைவு சரியானால் இவர்களில் ஒருவர் இயற்கையா மரணித்த போது மாவீரர் என்றோ, நாட்டுப்பற்றாளர் என்றோ யாராளும் அழைக்கப்படவில்லை. 

தலைவர் உடலை அடையாளம் காண கருணாவுடன் கொண்டு செல்லப்பட்டவர், தயா மாஸ்டர் என்று நினைக்கிறேன்.

சரணடைந்து புனர்வாழ்வு என்ற பெயரில் மூளைச்சலவை செய்த வெளியேவந்து எழுதிக் கொடுக்கப்பட்ட புத்தகம் வெளியிட்டு பின்னர் நோயால் இறந்த பெண் போராளியின் (தமிழினி) நிலையும் அவ்வாறே.

ஆகவே வெள்ளைக் கொடியுடன் வந்து, (கொல்லப்பட்டோர்), உயுருடன் இருந்திருந்தால் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே இருக்கவேண்டிய சிங்கள அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பர்.

ஆகவே... நன்னியின் நிலைப்பாடு... நிராகரிக்க முடியாத விவாத ஆய்வுக்குரியது என்றே கருதுகிறேன்.

இது கருத்து மட்டுமே, எனது நிலைப்பாடல்ல.

2 hours ago, வாத்தியார் said:

சரணடைந்த போராளிகளும் மாவீரரர்கள் தான்
அப்போது அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக இருந்ததால் சரணடைந்தார்கள் அல்லது சரணடைய உந்தப்பட்டார்கள்

1 hour ago, குமாரசாமி said:

2009க்கு முன்னரான போராட்ட காலங்களின் நிலைமை வேறு. அன்றைய நிலை, திட்டங்களும் வேறு. 
ஆனால்...

இறுதி நிலைப்பாடு வரைக்கும் கடைசி மண் வரைக்கும் நின்றவர்கள் அவர்கள்.
அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது எமது கடமை.

கருத்துக்கள் வைத்த அத்தினை கள உறவுகளுக்கும் எனது நன்றிகள்.

"மாவீரர்" என்றே மாற்றம் செய்கிறேன். 

Edited by நன்னிச் சோழன்
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நன்னிச் சோழன் said:

கருத்துக்கள் வைத்த அத்துணை கள உறவுகளுக்கும் எனது நன்றிகள்.

"மாவீரர்" என்றே மாற்றம் செய்கிறேன். 

நன்றி நன்னி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, நன்னிச் சோழன் said:

மற்றது, புலிகளின் பழைய நடைமுறையில் சரணடைந்தோர் மாவீரராக எப்பொழுதும் அறிவிக்கப்பட்டதில்லை. எனவே அதையே நானும் பின்பற்றி இறுதிப்போரின் கடைசிக்கட்டத்தில் சரணடைந்தோரை நான் மாவீரர் என விளிக்கவில்லை. என்னைப் பொறுத்த வரை மாவீரர் என்ற சொல்லுக்கு புலிகள் கொடுத்த பொருளையே பேணுவதே சரியாகும். 

இரண்டுமே ஒரே மாதிரியானது இல்லை   

1...முதலாவது போரிட விரும்பமால்.   அல்லது வேறு காரணம் இங்கே இயக்கம்  தொடர்ந்து போரடுகிறது

2...போரிட விருப்பம் இருந்தும்   முடியவில்லை...சந்தர்ப்பம் இல்லை   ...இயக்கமும் போரட்டத்தை. நிறுத்தி விட்டது   எனவே சரணடைவது தான் ஒரே மார்க்கம்...தொடர்புகள்   ஆயுதம் வழங்கல்  கட்டளைகள்  என்பன இல்லாமல்  என்ன செய்வது என்பது அறியாமல்   காத்திருந்தது   சரண் அடைத்திருக்கலாம் இல்லையா??  எனவே… உங்கள் முடிவு மிகச்சரியாகும்.  வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
8 minutes ago, Kandiah57 said:

இரண்டுமே ஒரே மாதிரியானது இல்லை   

1...முதலாவது போரிட விரும்பமால்.   அல்லது வேறு காரணம் இங்கே இயக்கம்  தொடர்ந்து போரடுகிறது

2...போரிட விருப்பம் இருந்தும்   முடியவில்லை...சந்தர்ப்பம் இல்லை   ...இயக்கமும் போரட்டத்தை. நிறுத்தி விட்டது   எனவே சரணடைவது தான் ஒரே மார்க்கம்...தொடர்புகள்   ஆயுதம் வழங்கல்  கட்டளைகள்  என்பன இல்லாமல்  என்ன செய்வது என்பது அறியாமல்   காத்திருந்தது   சரண் அடைத்திருக்கலாம் இல்லையா??  எனவே… உங்கள் முடிவு மிகச்சரியாகும்.  வாழ்த்துக்கள் 🙏

நன்றி

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.