Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார நிவாரண உதவி திட்டத்தினூடாக 250 கர்ப்பிணி பெண்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்கூரஹல ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், மற்றும் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜயசேகர மற்றும் அவர்களது குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

jf02.jpg?resize=600%2C337&ssl=1

jf03.jpg?resize=600%2C337&ssl=1

https://athavannews.com/2023/1346004

  • Replies 55
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு ஆபத்தான நிகழ்வு என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது.தமிழர்கள் பெளத்தர்களாக மாறுவது என்பது சிங்கள மயமாக்கலின் ஒரு படிதான். மிக விரைவிலேயே இந்த தமிழ் பெளத்தர்கள் சிங்கள இனத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. ஏனென்றால், இவர்களை தமிழ் சமுதாயம் ஒதுக்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் இவர்கள் முழுவதுமாகவே சிங்களவராகும் நிலை உருவாகும். ஆக, யாழ்ப்பாணத்தின் இதயப்பகுதியிலேயே முன்னர் தமிழர்களாவிருந்து பின்னர் சிங்கள பெளத்தர்களாக மாறிய சமுதாயம் ஒன்று எதிர்காலத்தில் இருக்கும். இவர்களுக்கு சிங்கள அரசுகள் செய்யப்போகும் சலுகைகளைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் மேலும் தமிழர்களும் பெளத்தத்தினைத் தழுவலாம். உள்ளிருந்தே அரிக்கப்பட்டு, பலவீனப்பட்டுப்போகும் நிலையினை மெதுவாக தமிழினம் அடைந்துகொண்டிருக்கிறது. 

அதுசரி, அருண் சித்தார்த்தைக் காணோம்? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, ரஞ்சித் said:

அதுசரி, அருண் சித்தார்த்தைக் காணோம்? 

ஓ அவரா நல்லூர் முஸ்லீம்களுக்கு சொந்தமான இடம் என உருட்டிக்கிட்டு கிடக்கான் வெங்காயம் 

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லூர் முஸ்லீம்களுக்கு சொந்தமான இடம்

ஓ, அது வேறையா? அது எப்போது நடந்தது? இராவணன் முஸ்லீம் என்று ஒரு பகுதி சொல்லிக்கொண்டு திரியுது.

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரஞ்சித் said:

ஓ, அது வேறையா? அது எப்போது நடந்தது? இராவணன் முஸ்லீம் என்று ஒரு பகுதி சொல்லிக்கொண்டு திரியுது.

ஓ ..இதுதான் கக்கூசு கட்டப்போறன் என்று சொல்லிக்கொண்டு திரியிறாரோ...பொருத்தமான இடம்தன் பிடிசிருக்கிறார்..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரஞ்சித் said:

ஓ, அது வேறையா? அது எப்போது நடந்தது? இராவணன் முஸ்லீம் என்று ஒரு பகுதி சொல்லிக்கொண்டு திரியுது.

பேட்டி பார்க்கல்லையோ கிடைத்தால் இணைக்கிறன்

முழு மதத்திலையும் ராவணன் இருக்காரு இப்ப முபாறக் அப்துல் மஜித் வேற பேட்டி கொடுத்து இருக்காரு அவரு முஸ்லீம்தானாம்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0313iW95kXNK64AfSUUJfRHVuXg1ZPoHqctpAxudpgVWHjict7rsv1Atv9YXeHrTdRl&id=100007500161614&mibextid=Nif5oz

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இது நல்ல விடயமாகவே தென்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முஸ்லீம்களின் பேச்சுவழக்கில் பேசுகிறான். நச்சுப்பாம்பு !

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ரஞ்சித் said:

முஸ்லீம்களின் பேச்சுவழக்கில் பேசுகிறான். நச்சுப்பாம்பு !

இதையும் யாழில வச்சு அழகு பார்க்கிறாங்க 

19 minutes ago, குமாரசாமி said:

எனக்கு இது நல்ல விடயமாகவே தென்படுகின்றது.

ஆயுபோவன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, குமாரசாமி said:

எனக்கு இது நல்ல விடயமாகவே தென்படுகின்றது.

இன்று வவுணியாவில் சர்வமத பத்திரிகையாளர் மாகாநாடு நடந்தது.

அதில் பேசிய பிக்குகள், புலிகள் வடக்கில் பெளத்தத்தை பாதுகாத்தனர். 

குருந்தூர் பிக்கர் செய்வது அடாவடி என்று பேசினர்!

என்னப்பா நடக்குது? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் எங்கள் மீது தன் மதத்தை திணிக்கவே செய்துள்ளனர். அதற்கு எடுபட ஒரு கூட்டமும் எம் மத்தியில் இருந்தே வந்துள்ளது. அதற்கு சிங்கள பெளத்த பேரினவாதமும் விதிவிலக்கல்ல. ஆக்கிரமிப்பு ஆயுத பலத்தின் அடிப்படையில் அமைவதால்.. ஆயுத பலமற்றிருக்கும் மக்களை எப்படியும் ஏறி மிதிக்கலாம்.. என்ற மிதப்பின் வெளிப்பாடுகளே இவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவன் உண்மையிலேயே தமிழ்த் தாய் தந்தைக்கு பிறந்தவனா? அல்லது சிங்களம் கற்று அங்கு வாழ்ந்து, இங்கு இனத்தை சிதைக்க அனுப்பப்பட்டவனா?

என்ன பொய் சொல்லி அந்த மக்களை கூட்டி வந்தார்களோ? இருக்க...... நாட்டை முன்னேற்ற புலம்பெயர்த்தோர் முன்  வரவேண்டுமாம், தமிழ்க் கற்பிணிப் பெண்களுக்கு அதுவும் பௌத்த இளைஞர்  ஏன் உதவி வழங்க வேண்டும்? இங்குள்ள அரசியல்  வியாதிகள் எங்கே போய்விட்டனர் இவைகளை கவனிக்காமல்? எங்கள் இராணுவத்தினரின் குருதி தமிழ் மக்களில் ஓடுகின்றது, இராணுவத்தினரை வெளியேறவேண்டாம் என தமிழர் போராடுகின்றனர், இனி இங்கே பிறந்த பிள்ளைகள் சிங்கள பௌத்தர்களால் பராமரிக்கப்படுகிறார்கள் என பிரச்சாரம் பெருகும். ஏன் இந்தப் கர்ப்பத்துக்கு காரணமானவர்களால் அவைகளின் தேவைகளை   நிவர்த்தி செய்ய முடியவில்லையா? எங்கள் பொருளாதாரத்தை தடுத்து, அபிவிருத்திகளை இல்லாமல் சூறையாடி, தங்கள் கைகளை நம்பியிருக்க வைத்து, தாங்கள் நினைத்ததை சாதிக்கிறார்கள். உரிமை வேண்டாம், அபிவிருத்தி செய்யபோறோம் என்று வெளிக்கிட்டவர்கள் எங்கே? கிறிஸ்தவர்கள் மக்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றம்  செய்கிறார்கள் என குற்றம் சாட்டியவர்கள் எங்கே? கிறிஸ்தவர்களை விரட்டி விட்டோம் என வீராப்பு பேசிய, சைவம் வளர்த்த காவலன் எங்கே இரகசிய கூட்டம் நடத்துகிறார்? நிச்சயமாக இதன்பின்னால் சிங்களத்தின் அடிமைகள், மக்களை கூட்டி காட்டி அடிமையாக்கி அதற்கு  கூலியாக பாத்திரத்தில் பிச்சை பெற்றிருப்பார்கள். மக்களின் இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது சட்டப்படி குற்றம். ஏன் தெற்கில் வறிய கர்ப்பவதிகள் இல்லையா? இவர்களிடம் தமிழ் கர்ப்பவதிகள் உதவி கோரியிருந்தனரா? சைவத்தின் தலைவன் இந்தியாவிடம் முறையிடுவோம் என்றவர்கள் எங்கே?  இவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது? சச்சியர் தனது நாடகத்தில், அடிமைகளை வைத்து கிறிஸ்தவ மதமாற்றம் என்றொரு நாடகமாடி, ஆயர் இல்ல வாசலில் கோயில் பிச்சைக்காரன் போல குந்தியிருந்து படம் காட்டி, இனத்தையும் மதத்தையும் விற்று பாராட்டு பெற்றதுதான் செய்த தொண்டு. இதை ஒரு  பிக்கு சரித்திரமாக எழுதும், அதை வரலாறாக எமது வருங்கால சந்ததி படிக்கும்.

11 hours ago, தமிழ் சிறி said:

யாழ் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்பண நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 மக்களை காப்பாற்ற வக்கற்ற பிச்சை எடுக்கத்தள்ளிய சமுகத்துக்கு நிலையம் ஒரு கேடு 

 

11 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிகழ்வில்கூரஹல ரஜமஹாவிகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வத்துறகும்புற தம்மரத்தன தேரர், பலாங்கொட இம்புல்பே விஜித வன்ச தேரர், மற்றும் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி மீஹஜந்துர விமலதர்ம சுவாமி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்தோடு கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜயசேகர மற்றும் அவர்களது குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கில் தமிழர் பௌத்தராக இருந்திருக்கவில்லை என வாதிடுவோர், அங்கு, இளைஞர் பௌத்த சங்கமாம், அதில் கலந்துகொள்ள சிங்கள பிக்குகள். பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்லவேணும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குளம் வற்றிவிட்டால்,வேறிடம் நோக்கி நகர்வது பறவைகளின் இயல்பு தேவையுங்கூட. அவ்வாறே நாட்டை இதுவரை விழழுங்கியது விகாரைகளும் இராணுவமும். இப்போ இவர்களை பராமரிக்க அரசாலோ மக்களாலோ முடியாது. இருந்த வளங்களெல்லாம் இராணுவ முகாம், விகாரைகள் அமைத்து தீர்ந்துவிட்டன. மக்கள் வறுமையால் வீதிகளில் இறங்கி நிஞாயம் கேட்க்கின்றனர். வயிறு வளர்க்க வழியில்லை, வடக்கிற்கு படையெடுப்பதும் நிலைகொள்வதுமே இப்போது அவர்களுக்கு உள்ள ஒரே வழி. சிறுவயதிலேயே பெற்றோர் தம் பிள்ளைகளை விகாரைகளில் தள்ளிவிடுகின்றனர். கல்வியறிவு இல்லை, தட்டிகேட்க்கும் திராணியுமில்லை, கற்றுக்கொடுப்பது; தட்டிப்பறிப்பது, ஒழுக்கக்கேடு. அண்மைய செய்திகளின்படி, விகாரைகளில் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம், மாற்றி விட்ட வேறு விகாரைகளிலும் அதே நிலைமை. பிக்குகள் பாலியல், போதை குற்றச்சாட்டில் கைது. நிலைமை வடக்கிற்கும் பரவும் அபாயம். கூத்தாடிகள் இவற்றிற்கு முகவர். இவர்களுக்கு சமுதாயமில்லை, இனமில்லை, மதமில்லை, கட்டுப்பாடுகள் இல்லை கடைமையும் இல்லை. இவற்றை விற்று வயிறு வளர்ப்பதும் வீண் வீம்பு பேசுவதுமே பிழைப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ரஞ்சித் said:

உள்ளிருந்தே அரிக்கப்பட்டு, பலவீனப்பட்டுப்போகும் நிலையினை மெதுவாக தமிழினம் அடைந்துகொண்டிருக்கிறது. 

ஆனால் நாங்கள் இதனைப் பற்றிக் கவலைப்படாமல், வெறிச்சோடி இருக்கும் தீவுகளில் பிரமாண்டமான கோவில்களைக் கட்டுகிறோம். 

புதுப்புது கடவுள்களை அறிமுகப்படுத்துகிறோம்.

மாணவர்களின் உடல்உள ஆரோக்கியம் வேண்டாம் புதுக்கட்டிடங்கள் வேண்டும் எனக் கேட்கிறோம். 

இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு எத்தனை பேர் உண்மையான நோக்கம் அறிந்து வந்தார்களோ தெரியவில்லை.. ஒரு வகையில் இவர்கள் மேல் அனுதாபமே வருகிறது. 

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பேட்டி பார்க்கல்லையோ கிடைத்தால் இணைக்கிறன்

முழு மதத்திலையும் ராவணன் இருக்காரு இப்ப முபாறக் அப்துல் மஜித் வேற பேட்டி கொடுத்து இருக்காரு அவரு முஸ்லீம்தானாம்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0313iW95kXNK64AfSUUJfRHVuXg1ZPoHqctpAxudpgVWHjict7rsv1Atv9YXeHrTdRl&id=100007500161614&mibextid=Nif5oz

யாரு அந்த சிவப்பு தொப்பிக்காரனா? முனாக்களே எழுதுவார்கள் , இந்த ஆள் எந்த கட்சி , எங்கே இருக்கிறோம் எண்டு அவருக்கே தெரியாதாம். எப்பயாவது இருந்திட்டு வந்து இப்படி பயித்தியக்கார தனமாக உளறுவார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ராவணன் இருந்த காலத்தில் முஸ்லிமகளே இல்லை. இங்குள்ள முஸ்லிம்கள் எல்லாம் இந்துவாக   இருந்து மதம்  மாறியவர்கள் .   அப்படி என்றால் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் நாங்கள் இதனைப் பற்றிக் கவலைப்படாமல், வெறிச்சோடி இருக்கும் தீவுகளில் பிரமாண்டமான கோவில்களைக் கட்டுகிறோம். 

புதுப்புது கடவுள்களை அறிமுகப்படுத்துகிறோம்.

மாணவர்களின் உடல்உள ஆரோக்கியம் வேண்டாம் புதுக்கட்டிடங்கள் வேண்டும் எனக் கேட்கிறோம். 

இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு எத்தனை பேர் உண்மையான நோக்கம் அறிந்து வந்தார்களோ தெரியவில்லை.. ஒரு வகையில் இவர்கள் மேல் அனுதாபமே வருகிறது. 

 

சிறப்பு !!

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதையும் யாழில வச்சு அழகு பார்க்கிறாங்க 

நம்மட ஆட்கள் 19 வயது யுவதியை கூட்டி கொண்டு ஓடிய 54 வயது குடும்பஸ்த்தரை ஆணுறுப்பு சிதைய செய்து கொன்று குடும்ப கெளரவம் காப்பாற்றுவதில் பிஸி 🙊

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரஞ்சித் said:

.தமிழர்கள் பெளத்தர்களாக மாறுவது என்பது சிங்கள மயமாக்கலின் ஒரு படிதான். மிக விரைவிலேயே இந்த தமிழ் பெளத்தர்கள் சிங்கள இனத்திற்குள் உள்வாங்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. ஏனென்றால், இவர்களை தமிழ் சமுதாயம் ஒதுக்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் இவர்கள் முழுவதுமாகவே சிங்களவராகும் நிலை உருவாகும். ஆக, யாழ்ப்பாணத்தின் இதயப்பகுதியிலேயே முன்னர் தமிழர்களாவிருந்து பின்னர் சிங்கள பெளத்தர்களாக மாறிய சமுதாயம் ஒன்று எதிர்காலத்தில் இருக்கும். இவர்களுக்கு சிங்கள அரசுகள் செய்யப்போகும் சலுகைகளைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் மேலும் தமிழர்களும் பெளத்தத்தினைத் தழுவலாம். உள்ளிருந்தே அரிக்கப்பட்டு, பலவீனப்பட்டுப்போகும் நிலையினை மெதுவாக தமிழினம் அடைந்துகொண்டிருக்கிறது. 

அதுசரி, அருண் சித்தார்த்தைக் காணோம்? 

எப்படி தமிழ் நாட்டில் பல்லாயிரம் முஸ்லீம் தமிழர்கள் உருவானார்கள் என்ற வரலாற்றை படித்தால் ஏன் இலங்கையில் தமிழ்பெளத்தர்கள் உருவாகுவது தப்பு இல்லை என்று புரியும்.. சிங்களவன் தமிழர்களை மதம் மாற்றுகிறான் அதை தடுக்கவேண்டும் என்பதை பேசுவதைவிட தமிழர்களை தமிழர்களையே சாதி சொல்லி ஒதுக்குவதை நிறுத்துங்கள் என்பதை பேசினாலே இந்த பிரச்சினைக்கு ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.. இல்லாவிடில் ஆற்று நீர் பள்ளத்தை நோக்கி ஓடுவதுபோலவே ஒடுக்கப்படுபவர்கள் தம் விடுதலையை தேடி பயணித்துக்கொண்டே இருப்பார்கள்.. வரலாறு கூர்ப்பு போன்றது.. மாறிக்கொண்டே இருக்கும்.. ஆயிரம் ஆண்டுகள் முன் இந்துக்கள் இருக்கவே இல்லை தமிழர்களில்.. இன்று இந்துக்கள் பெரும்பாலனா தமிழர்கள்.. நாளை பெளத்தர்கள் ஆனால் அதையும் காலம் எழுதும் கணக்கு என்று கடந்து செல்லவேண்டியதுதான் நம்மாளுங்க சாதி மனநிலையை கைவிடாவிட்டால்.. சுருங்கி சுருங்கி நூறு வெள்ளாளர்களும் நாலு பிராமணர்களும்தான் தமிழ் பேசும் இந்துக்கள் என்ற நிலை நாளை ஈழத்தில் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.. இன்று ஈழத்தில் தமிழர்களின் எண்ணிக்கையை கணிசமாக தகவைத்திருப்பவர்கள் வெளிநாடு போக காசு இல்லாத இந்த ஏழை தாழ்த்தப்பட்ட மக்களே.. வேளாளர்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பம் குடும்பமாக ஊர் ஊராக வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.. உதாரணத்துக்கு புங்குடுதீவில் வேளாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒரு வீட்டிலும் ஆட்கள் இல்லாத ஊர்கூட இருக்கின்றது.. ஆனால் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் இன்றும்கூட சனநெரிசலுடன் அடர்த்தியாக இருக்கின்றன.. வேளாளர் ஊர்கள் பல ஒன்று இரண்டு பெரியவர்களுடன் ஆளரவம் இல்லாமல் காத்தாடுகின்றன.. 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் நாங்கள் இதனைப் பற்றிக் கவலைப்படாமல், வெறிச்சோடி இருக்கும் தீவுகளில் பிரமாண்டமான கோவில்களைக் கட்டுகிறோம். 

புதுப்புது கடவுள்களை அறிமுகப்படுத்துகிறோம்.

மாணவர்களின் உடல்உள ஆரோக்கியம் வேண்டாம் புதுக்கட்டிடங்கள் வேண்டும் எனக் கேட்கிறோம். 

👍

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு எத்தனை பேர் உண்மையான நோக்கம் அறிந்து வந்தார்களோ தெரியவில்லை.. ஒரு வகையில் இவர்கள் மேல் அனுதாபமே வருகிறது. 

 

மற்றய மத கூட்டங்களுக்கு போவோர் நிலையும் அதே தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதையும் யாழில வச்சு அழகு பார்க்கிறாங்க 

ஆயுபோவன் 

 

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் நாங்கள் இதனைப் பற்றிக் கவலைப்படாமல், வெறிச்சோடி இருக்கும் தீவுகளில் பிரமாண்டமான கோவில்களைக் கட்டுகிறோம். 

புதுப்புது கடவுள்களை அறிமுகப்படுத்துகிறோம்.

மாணவர்களின் உடல்உள ஆரோக்கியம் வேண்டாம் புதுக்கட்டிடங்கள் வேண்டும் எனக் கேட்கிறோம். 

இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு எத்தனை பேர் உண்மையான நோக்கம் அறிந்து வந்தார்களோ தெரியவில்லை.. ஒரு வகையில் இவர்கள் மேல் அனுதாபமே வருகிறது. 

 

ஈழத்தமிழனுக்கு யாருமே எதிரியில்லை. அவன் தனக்குத்தானே எதிரியை வைத்துக்கொண்டிருக்கின்றான்.

நாகரீகமாக பேசுங்கள் எழுதுங்கள் என்பவர்கள் கூட சாதி வேற்றுமை பார்க்கின்றார்கள். தமிழர் பகுதிகளில் சாதி எனும் இழவு நோயை அழித்து விட்டு வெளியே வாருங்கள்.

சிங்கள ஆக்கிரமிப்பு பற்றி பேசலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Nathamuni said:

இன்று வவுணியாவில் சர்வமத பத்திரிகையாளர் மாகாநாடு நடந்தது.

அதில் பேசிய பிக்குகள், புலிகள் வடக்கில் பெளத்தத்தை பாதுகாத்தனர். 

குருந்தூர் பிக்கர் செய்வது அடாவடி என்று பேசினர்!

என்னப்பா நடக்குது? 🤔


https://youtu.be/X8xrbbN0I48?si=HIxiiGXcei9DDSBD
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ரஞ்சித் said:

இது ஒரு ஆபத்தான நிகழ்வு என்றுதான் என்னால் பார்க்க முடிகிறது.தமிழர்கள் பெளத்தர்களாக மாறுவது என்பது சிங்கள மயமாக்கலின் ஒரு படிதான்

மறுக்கவியலாத உண்மை. இது சிங்களத்தின் தொடக்கப் புள்ளி. புள்ளி பெருவட்டமாகப் பரவும்போதே தமிழினம் அரசியல்வாதிகளும் விழிப்பர். அதன்பின் திருதிருவென முழிப்பர். அப்போது காலம் கடந்திருக்கும்.

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

புங்குடுதீவில் வேளாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒரு வீட்டிலும் ஆட்கள் இல்லாத ஊர்கூட இருக்கின்றது

ஒரு ஊரை மட்டும் வைத்துக் கண்கிடமுடியாது. தீவகத்திலேயுள்ள பெரும்பாலானவர்களுக்குக் குடாவிலும், வன்னியிலும் மற்றும் வெளியிடங்களிலும் நிலம் தொழில் என இருப்பதால் கணிசமானவர்கள் அங்கும் இருக்கிறார்கள் என்பதே எனது கணிப்பு. அதைவிடச் சாதியெனும் வியாதி மாற இன்னும் ஒரு நுற்றாண்டையாவது தமிழினம் கடக்க வேண்டியிருக்கும். அப்போது தமிழரென்று ஒரு இனம் ஈழத்தீவில் இருக்குமா என்பதே வினா? ஆகவே தமிழினம் ஒன்றுதிரள்வதைத் தடுக்கவும் பிரிவினைகளை வளர்க்கவும் சாதி மதமென்னும் கருவிகள் பொறிமுறையாக்கப்பட்டுத் தமிழினத்துள் கடந்த 14ஆண்டுகளில் செலுத்தப்பட்டு வீரியமாக்கப்பட்டு வருகிறது. புத்தரையும் புகுத்தித் தமிழ்ப் புத்தர்களை உருவாக்கிவிட்டால்(ஏற்கனவே இருந்தது என்பது வரலாறு) தமிழினம் மேலும் உடைந்து சிதைவடைவதோடு, பிறகு சிங்களவர்கள் குருந்தூர் மலைக்காகவோ, தையிட்டிக்காகவே போராடத்தேவையில்லை. ஏனென்றால் தமிழ் பௌத்தர்கள் போராடுவார்கள். அவர்களிடம் வாள்,பொல்லு, கத்தி, பெற்றோல் என்பவற்றைக் கையளித்துவிட்டுக் கூத்தைப் பார்க்கச் சிங்களம் தயார்ப்படுத்துகிறது. சிங்கள பௌத்தம் மூலோபாயத்தோடு நகர்கிறது. இதற்குள்ளே சாதியை இழுத்துவிட்டு என்ன பயன் என்று புரியவில்லை. வேற்றுமையில் ஒற்றுமைகண்ட இனமாகத் தமிழினம் தடைகளைக் கடந்து ஒரு தேசியமாக நிமிர்ந்ததை சுக்கு நூறாக உடைத்து நொருக்குவதில் யாருக்கு வரவாகும் என்பதைத் தமிழினம் அறிவுபூர்வமாகச் சிந்திக்கவேண்டும். இல்லையே அழிவினுள் மூழ்குதலே விதியென்றாகும்.
நன்றி  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போனவாரந்தான் சரத் வீரசேகர அறைகூவல் விட்டார். தாழ்த்தப்பட்டவர்கள் வேளாளருக்கு எதிராக போராடவேண்டும் என்று. இன்று அது களத்தில் முளை விடுகிறது. சிங்களம்   கதைவசனம், நாடகம், தகுந்த பாத்திரம், எல்லாம் தயாரித்த பின்னே கசிய விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, குமாரசாமி said:

எனக்கு இது நல்ல விடயமாகவே தென்படுகின்றது.

சாதியை தூக்கிபிடித்தால் இதுதான் நடக்கும்😪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, உடையார் said:

சாதியை தூக்கிபிடித்தால் இதுதான் நடக்கும்😪

பட்டும் திருந்தாத இனம். பல்லின நாடுகளில் பரவியிருந்தும் திருந்தாத இனம்.

கல் தோன்றா மண் தோன்றா காலம் முன் தோன்றிய தமிழ் மொழி பேசும் இனம் அன்று போல் இன்றும் வாளோடு வாழாமல் இருக்கின்றது.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.