Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகள் ஆயுதம் வழங்க வேண்டும் – முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.நா.

 

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

இஸ்ரேலின் யுத்தத்தில் அமரிக்க போர்க்கப்பல் எதற்காக? Israel Palestine War?/ kUNA kAVIYALAHAN

இந்தத் திரியோடு தொடர்புடையதால் இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

 

இஸ்ரேலின் யுத்தத்தில் அமரிக்க போர்க்கப்பல் எதற்காக? Israel Palestine War?/ kUNA kAVIYALAHAN

இந்தத் திரியோடு தொடர்புடையதால் இணைத்துள்ளேன்.

குணாவின் காணொலிகள் தற்போது ஊரில் கிளி ஜோசியம் சொல்வோரின் கதைகள் போல  மாறி வருகின்றன: இயல்பாக நடக்கும் சம்பவங்களை எடுத்து, "பார் நான் முதலே சொல்லியிருக்கிறேன், இது தீர்க்க தரிசனம்" என்பதான தோற்றம் காட்டல்!

 1979 முதல் அமெரிக்காவிற்கு ஈரான் ஒரு முள்ளு மத்திய கிழக்கில். ஹிஸ்புல்லாவும் , ஈரானும் ஹமாசின் தாக்குதலைப் பயன்படுத்தி தாமும் யுத்தத்தில் இறங்கக் கூடாது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியே அமெரிக்கா கப்பல்களை அனுப்பியது. இது தினசரி செய்திகள் பார்ப்போருக்கே விளங்கும் விடயம். இதற்கு எப்படி குஞ்சம் கட்டி வீடியோ போடுவது என்று யோசித்த போது, உக்ரைன் ரஷ்யா யுத்தம் வசதியாக கிடைத்து விடுகிறது.

அமெரிக்கா தான் புரினுக்கு கிச்சு கிச்சு மூட்டி பெப்ரவரி 2022 இல் பெலாரசிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த படைகளை கியேவ் நோக்கிப் போக வைத்தது என என்று கற்பனை வலை பின்னாதவரை குணாவை நம்பலாம்😎!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் கதறி அழுத பாலத்தீன தூதர்: குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? என்று கண்ணீர்

பாலத்தீன தூதர்  கண்ணீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐ.நா. வின் மூன்றாவது குழுவின் வருடாந்திர கூட்டத்தின் தயாரிப்பு ஆலோசனையின் போது பாலத்தீன தூதர் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடையவைத்தன.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூன்றாவது குழுவான சமூக, மனிதநேய, கலாச்சார மேம்பாட்டுப் பிரிவின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் நடைபெறும் தாக்குதல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறுதல், இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கான கூட்டத்தின் தயாரிப்பு தொடர்பான ஆலோசனை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இஸ்ரேல் நாட்டின் ராணுவ தாக்குதலும் விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது பேசிய ஐ.நா. அமைப்பிற்கான பாலத்தீன தூதரக அதிகாரியான சஹர் கே.ஹெச் சாலெம், "11 நாட்களாக, காஸா பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இப்படி நேரடி தாக்குதல்களின் காரணமாக உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாக உள்ளனர்,” என்றார்.

மேலும், "காஸாவில் உள்ள ஒரு பாலத்தீன குடும்பத்தைக் கூட இஸ்ரேல் காப்பாற்றவில்லை," என்றும், காயமடையாதவர்கள் இடம்பெயர்கிறார்கள், அல்-அஹ்லி மருத்துவமனையில் பாதுகாப்பு இருப்பதாக நினைத்து அங்கு அடைக்கலம் தேடியவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற தாக்குதல்கள் தான் இஸ்ரேலை பாதுகாப்புடன் இருப்பதாக உணர வைக்கிறதா என்றும் இது இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற ஆதரவின் தேவையை நிறைவேற்றுகிறதா என்றும், பாலத்தீன குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் வீடுகளின் மீது குண்டு வீசிக் கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கைகளை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார்.

 

"குழந்தைகள் கூட குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? "

பாலத்தீன தூதர்  கண்ணீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மண்லமும் இடிபாடுகளும் வழக்கமான காட்சிகளாக மாறிவிட்டன.

பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள் என்றும், பள்ளிகள் மற்றும் ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், "சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன" என்பதுடன் உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இதில், "மோசமான விஷயம் என்னவென்றால், 22 மருத்துவமனைகளில் இருப்பவர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதை, உலக சுகாதார அமைப்பு (WHO) நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் நடவடிக்கை என்று முத்திரை குத்தியுள்ளது." என வேதனையுடன் கூறினார்.

"காஸாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள். ஆனால் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று கருதி இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. இந்த பேரழிவு எப்போதும் போல போரில் விளைந்த ஒரு சேதமாக கருதப்படக்கூடாது. இது மனிதாபிமானமற்றது மற்றும் சர்வதேச சட்ட அடிப்படையிலான ஒழுங்கு விதிகளை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிகோலுகிறது." என்றார் அவர்.

துயரத்துடன் தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேலின் குற்றங்களுக்கு எதிராக நிற்கவும், அந்நாட்டு அரசு தொடங்கியுள்ள மனிதத் துன்பங்களை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். "எங்களுக்கு நீதி தேவையே ஒழிய பழிவாங்குதல் அல்ல" என்ற அவர், உலகத்தின் ஆதரவு பாலத்தீனர்களுக்கு மிகவும் தேவையானது என்று கூறினார்.

இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டின் சார்பில் அந்நாட்டின் இளைஞர் பிரதிநிதியான கார்மேலி பேசிய போது, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதல்களை நினைவு கூர்ந்தார். இதன் விளைவாக ஏராளமான கொலைகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

"ஹமாஸ் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பிற்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. குடிமக்களோ, தனிநபர்களோ பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதமுடியாது. ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளது," என்று அவர் கூறினார். தற்காப்புக்கான இஸ்ரேலின் உரிமையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போதைய நிகழ்வுகளை ஹமாஸ் ஆயுதக் குழு அரசியல் ஆக்குவதற்கு எதிராக எச்சரித்தார்.

 
பாலத்தீன தூதர்  கண்ணீர்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து வெளியேற ஒரு பெண்ணுக்கு அங்கிருந்த நபர் ஒருவர் உதவினார்.

இஸ்ரேலின் ராணுவம் காஸா மீது வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக எச்சரித்துள்ளது. மேலும், இன்னும் வடக்கு பகுதியில் உள்ள பாலத்தீனர்கள் தென்பகுதியை நோக்கிச் செல்லுமாறும் எச்சரித்துள்ளது.

இது இஸ்ரேலுக்கு போரின் அடுத்த கட்டங்களில் தனது படைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க உதவும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இதற்கிடையில், காஸா மீதான விமானத் தாக்குதல்களில் 55 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள மசூதியில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

தரைவழித் தாக்குதல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் படையெடுப்பிற்கு ஆயத்தமாகும் வகையில், காஸாவின் எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளது. இருப்பினும் அந்தத் தாக்குதல் எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லை.

காஸாவுக்குள் அதிக உதவிகளை அனுப்பிவைக்க முடியும் என்று ஐ.நா. நம்புகிறது. சண்டை தொடங்கிய பிறகு முதல் முறையாக நேற்று அத்தியாவசியப் பொருட்கள் பொருட்கள் மக்களைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி 1,400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று இரண்டு வாரங்கள் ஆகிறது. காஸாவில் இதுவரை 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
பாலத்தீன தூதர்  கண்ணீர்
படக்குறிப்பு,

காஸாவில் தவிக்கும் மக்களுக்கு மருத்துவர்களும், அறுவை சிகிச்சைக் குழுவினரும் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர் குழுக்களுக்கு அனுமதி கோரும் செஞ்சிலுவைச் சங்கம்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) காஸாவில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் மனிதாபிமானப் பொருட்களுடன் சென்று பணியாற்ற மருத்துவ பணியாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்தின் சாரா டேவிஸ் பிபிசி பிரேக்ஃபாஸ்டிடம் கூறுகையில், "இப்போது மிகவும் தேவையானது மனிதாபிமான பொருட்கள் மற்றும் காஸாவுக்குள் அத்தியாவசிய உதவிகள் தொடர்ந்து வருவதே ஆகும்,” என்றார்.

தங்களுக்குத் தேவைப்படுவது அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவது மட்டுமல்ல என்று கூறும் அவர், “காஸாவில் படுகாயங்களுடன் தவிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக் குழுவினரையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும்,” என்றார்.

இஸ்ரேல் ஒப்புக்கொண்டபடி காஸாவில் தவிப்பவர்களுக்கு உதவ 20 டிரக்குகள் உதவிப்பொருட்களுடன் பயணிக்க எகிப்துக்கும் காஸாவிற்கும் இடையிலான எல்லைக் கடப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இதேபோன்ற உதவிகள் தேவை என்று டேவிஸ் கூறினார்.

"இத போன்ற உதவிகள் தொடர வேண்டும். 20 டிரக்குகள் மூலம் அளிக்கப்படும் உதவியால் மட்டும் பொது மக்கள் உயிர்வாழ முடியாது. இது உண்மையில் மிகவும் மோசமான நிலைமை," என்று அவர் கூறினார்.

"நாங்கள் காஸாவில் செயல்படும் எங்கள் குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் விவரிக்கும் காட்சிகள் பயங்கரமானவையாக இருக்கின்றன."

 
பாலத்தீன தூதர்  கண்ணீர்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

ஹமாஸ் அமைப்பிடம் பணயக் கைதிகளாகப் பிடிபட்டுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கை தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக பிரதமர் அறிவிப்பு

இந்நிலையில், தாக்குதல் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பிரிட்டன் குடிமக்களை மீட்கும் முயற்சிகள் தொடர்வதாக பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். ரஃபா கடவுப் பாதை வழியாக அவர்களை மீட்க, பிரிட்டன் அரசு"சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

டெலிகிராப்பில் இது குறித்து எழுதியுள்ள அவர், எகிப்து-காஸா இடையே ரஃபா பாதையை மீண்டும் திறக்கப்படுவதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து வெளியேற உதவுவது மட்டுமின்றி உதவிகளை வழங்குவதற்கும் பயன்படக் கூடிய ஒரே வழி அந்த பாதைதான் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், "பொதுமக்களுக்குத் தேவைப்படும் அனைத்து நீர் விநியோகங்களும்" காஸாவுக்குள் " சாத்தியமான இடங்களில்" நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உலக சுகாதார நிறுவனம் காஸாவில் சராசரியாக தினசரி நீர் நுகர்வு ஒரு நபருக்கு வெறும் மூன்று லிட்டர் தான் என்று மதிப்பிட்டுள்ளது. ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச தினசரி தண்ணீர் தேவை 100 லிட்டராக உள்ளது.

ஹமாஸின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் குடும்பங்களைச் சந்தித்ததையும், இரு தரப்பும் இணைந்து பேசி தீர்வை எட்டுவதற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுனக் விவரித்தார்.

இது "கவனம் மற்றும் எச்சரிக்கைக்கான காலம் என்பது மட்டுமல்ல, தார்மீக தெளிவுக்கான காலமும் கூட" என்பதுடன் "பயங்கரவாதத்தின் கசப்பான அனுபவங்களுக்கு எதிராக மனிதகுலம் வெற்றி பெறுவதற்கான தருணம்" என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c03dd5e6p8mo

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

குணாவின் காணொலிகள் தற்போது ஊரில் கிளி ஜோசியம் சொல்வோரின் கதைகள் போல  மாறி வருகின்றன: இயல்பாக நடக்கும் சம்பவங்களை எடுத்து, "பார் நான் முதலே சொல்லியிருக்கிறேன், இது தீர்க்க தரிசனம்" என்பதான தோற்றம் காட்டல்!

இங்கே யாழிலும் இருதரப்பு ஆய்வாளர்களது(யூத,பலஸ்தீன)கருத்துகளிலும் ஒருவகைக் கணக்கெடுப்பு மனப்பாங்கு மிளிர்வதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். அதனையும் யோசியத்தோடு ஒப்பிடலாமா? இங்கே நான் குணா அவர்களது பார்வை சரியானது என்ற நோக்கில் எழுதவில்லை.  மனிதப் பேரவலம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், பெரும் இனஅழிவைச் சந்தித்த தமிழ் இனத்தின் முகமாக இருக்கும் புலத்தமிழரில் ஒரு பகுதியினர் துடுப்பாட்டப் போட்டியின் வர்ணனைபோன்று எழுதும் மனப்பக்குவத்தைப் பெற்றிருப்பதுகூட பெரும் வளர்முகம்தான். யூதரும், பலஸ்தீனரும் தத்தமது இறைமைக்கான போராட்டத்தில் இதில் தமிழீழத்தவர் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கமுடியும். யூதருக்குப் பலம் வாய்ந்த பல்வகைப் படைகளுடனும், பலம்வாய்த அரசாகவும், மேற்கினது செல்லப்பிள்ளையாகவும், பலஸ்தீனருக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசும் படைகளுமாகவும் அயலிலே அவர்களுக்கு கைகொடுக்கப் பெரும் அரபு நாடுகளுமாக இரு பெரும் அணிகளாக உலகே பிரிந்து நின்று உதவுகிறது. ஆனால், தமிழீழத்தவர் மீதான இன அழிப்பில் உலகோ ஒரு நேர்கோட்டில் நின்று எம்மை அழிப்பதற்கு உதவியது. உலகின் இந்த அசைவின் ஊடாகவே எதிர்காலத்தை நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த உலகினது ஏழை நாடுகள் பல திவாலாகியது தனியே கொரோனா மட்டுமல்ல. ரஸ்ய – உக்ரேன் போரும் ஒரு கரணியமென்பது அனைவரும் அறிந்தது. இன்று பல வளர்ந்த நாடுகள் உக்ரேனுக்கு முண்டுகொடுத்து விழிபிதுங்கி நிற்பதையும் காணமுடிகிறது. 

ரஸ்ய – உக்ரேன் போராகட்டும், யூதப் – பலஸ்தீனப்  போராகட்டும் இதிலே தமிழரது வகிபாகம் ஏதாவது சாத்தியமா? நாமே நீரினுள் வீழ்ந்த எறும்புபோல் தத்தளிக்கின்றோம். இந்த நிலையிலிருந்து இந்தப்போரழிவை நோக்காவிடினும் அமைதிகாத்தாலே போதுமானது. இரு தேசங்களதும் பின்னணிகளையும் வரலாற்று அசைவுகளையும் கற்றிதல், தேடல் எமது நிலைகுறித்த ஒரு சரியான பார்வைக்கு வழிவகுக்குமாயின் பயனுடையதாகும். 

யூதர்களோ பலஸ்தீனர்களோ ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதுபோன்றே தற்போதைய மனிதப்படுகொலைகள் சுட்டுகின்றன. ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்குப் எப்போதும் முதற்பலியாவது அப்பாவி மக்களே என்பதை இவ்வுலகு அறிந்திருந்தும் அதை அனுமதித்திருப்பதை எப்படி நோக்குவது. யூதப் பொதுமக்களை கமாஸ்  கொன்றது பயங்கரவாதமென்றால், இஸ்ரேல் பலஸ்தீனப் பொதுமக்களைக் கொல்வதும் பயங்கரவாதமென்றே கொள்ளமுடியும்.  இரு பயங்கரவாதமும் உலகுக் கேடனதே. இரண்டும் ஒரே கனதியானவையே. 
நாமும் இனஅழிப்பிற்குள்ளாகும் இனமென்றவகையிலே உலகில் நடைபெறும் இன அழிப்புகளை நோக்க வேண்டியவராயுள்ளோம்.
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

"குழந்தைகள் கூட குண்டுவீசி கொல்லப்பட வேண்டியவர்களா? "

 

பாலத்தீன தூதர் கண்ணீர்

காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், எங்கு பார்த்தாலும் புகை மண்லமும் இடிபாடுகளும் வழக்கமான காட்சிகளாக மாறிவிட்டன.

பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் எங்கும் செல்லமுடியாமல் எங்காவது பாதுகாப்பு கிடைக்குமா என துடிக்கிறார்கள் என்றும், பள்ளிகள் மற்றும் ஐ.நா. சபை கட்டிடங்கள் உட்பட முழு சுற்றுப்புறக் கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், அங்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, எரிபொருள் இல்லை, உணவுப் பொருட்கள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், "சவக்கிடங்கில் பிணங்கள் நிரம்பி வழிகின்றன" என்பதுடன் உடல்கள் கொத்துக்கொத்தாக புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார்.

14 வருடங்களுக்கு முன்னர் நாங்கள்

இப்போ அதை நிலை

அதே வேண்டுகோள்

அதே கதறல்

முதல்க்கோணல் முற்றிலும் கோணல்

எம் அழிவை அனுமதித்து கொண்டாடிய அதே மக்கள் அவர்களது அரசுகள் 

இன்றாவது முதல் தவறை முதல் கோணலை உணர்ந்தால் உலகம் முழுவதும் மக்கள் நிம்மதிப்பெரு மூச்சு கேட்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளின் கால்களில் அவர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளது . அவர்கள்  இறந்தால் அடையாளம் காண்பதற்காகவாம்.

  • கருத்துக்கள உறவுகள்+

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இஸ்ரேலிய குண்டுத்தாக்குதலில் வெள்ளிக்கிழமை  கொல்லப்பட்ட 32  வயதான பலஸ்தீனியப் பெண் கவி ஹெபா அபு நாடா  எழுதிய கடைசிக் கவிதை..

என் நண்பர்களின் பட்டியல் 
சுருங்கி வருகிறது
நண்பர்கள் 
சின்னச் சின்ன 
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்
ஏவுகணைகளைவிட 
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை 
என்னால்
மீட்க முடியவில்லை
காக்க முடியவில்லை
எனக்கு அழ முடியவில்லை
எனக்கு 
என்ன செய்வதென்றும் தெரியவில்லை

ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல் 
சுருங்கி வருகிறது
இது வெறும் பெயர்கள் அல்ல
வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த 
அவர்களும் நானே
நானும் அவர்களே

அல்லாவே
மாபெரும் இச்  "சா" விருந்தில் 
நான் என்ன செய்யமுடியும்

எந்தக் கொம்பனாலும் 
கனவிலுங் கூட 
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது
     - ஹெபா அபு நாடா

ஹெபா புனித மெக்கா நகரில் 1991ல் பிறந்தவர். காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் biochemistry  படித்தவர். பின் master  in clinical  nutrition காசாவிலுள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஒக்சிசன் இறந்தவர்களுக்கானதல்ல என்ற அரபு  நாவலின் ஆசிரியர். 

ஹெபாவின் முகநூல் இணைப்பு

https://www.facebook.com/profile.php?id=100002457890081&mibextid=ZbWKwL.

அவர் கொல்லப்படுவதற்கு  முதல் நாள் தன் முகநூலில்  அறபியில் போட்ட பதிவுக்கு முகநூல் தந்த ஆங்கிலத்தைதே நான் மேலே தமிழில் தட்டுத்தடுமாறி தமிழில்  மொழிபெயர்த்தேன். போர்க்களத்திலிருந்து அவா அவலத்தில் போட்ட ஒரு பதிவே கவித்துவமாகியிருக்கிறது.
                 - Arun ampalavanar

 

ஆறுதலா ஒருத்தன் அணைச்சதும் அந்த சிறுவனோட அழுகை...

Palestinian child in shock after surviving Israeli attack in Gaza | AJ #shorts

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

இங்கே யாழிலும் இருதரப்பு ஆய்வாளர்களது(யூத,பலஸ்தீன)கருத்துகளிலும் ஒருவகைக் கணக்கெடுப்பு மனப்பாங்கு மிளிர்வதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். அதனையும் யோசியத்தோடு ஒப்பிடலாமா? இங்கே நான் குணா அவர்களது பார்வை சரியானது என்ற நோக்கில் எழுதவில்லை.  மனிதப் பேரவலம் ஒன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், பெரும் இனஅழிவைச் சந்தித்த தமிழ் இனத்தின் முகமாக இருக்கும் புலத்தமிழரில் ஒரு பகுதியினர் துடுப்பாட்டப் போட்டியின் வர்ணனைபோன்று எழுதும் மனப்பக்குவத்தைப் பெற்றிருப்பதுகூட பெரும் வளர்முகம்தான். யூதரும், பலஸ்தீனரும் தத்தமது இறைமைக்கான போராட்டத்தில் இதில் தமிழீழத்தவர் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கமுடியும். யூதருக்குப் பலம் வாய்ந்த பல்வகைப் படைகளுடனும், பலம்வாய்த அரசாகவும், மேற்கினது செல்லப்பிள்ளையாகவும், பலஸ்தீனருக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசும் படைகளுமாகவும் அயலிலே அவர்களுக்கு கைகொடுக்கப் பெரும் அரபு நாடுகளுமாக இரு பெரும் அணிகளாக உலகே பிரிந்து நின்று உதவுகிறது. ஆனால், தமிழீழத்தவர் மீதான இன அழிப்பில் உலகோ ஒரு நேர்கோட்டில் நின்று எம்மை அழிப்பதற்கு உதவியது. உலகின் இந்த அசைவின் ஊடாகவே எதிர்காலத்தை நோக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த உலகினது ஏழை நாடுகள் பல திவாலாகியது தனியே கொரோனா மட்டுமல்ல. ரஸ்ய – உக்ரேன் போரும் ஒரு கரணியமென்பது அனைவரும் அறிந்தது. இன்று பல வளர்ந்த நாடுகள் உக்ரேனுக்கு முண்டுகொடுத்து விழிபிதுங்கி நிற்பதையும் காணமுடிகிறது. 

ரஸ்ய – உக்ரேன் போராகட்டும், யூதப் – பலஸ்தீனப்  போராகட்டும் இதிலே தமிழரது வகிபாகம் ஏதாவது சாத்தியமா? நாமே நீரினுள் வீழ்ந்த எறும்புபோல் தத்தளிக்கின்றோம். இந்த நிலையிலிருந்து இந்தப்போரழிவை நோக்காவிடினும் அமைதிகாத்தாலே போதுமானது. இரு தேசங்களதும் பின்னணிகளையும் வரலாற்று அசைவுகளையும் கற்றிதல், தேடல் எமது நிலைகுறித்த ஒரு சரியான பார்வைக்கு வழிவகுக்குமாயின் பயனுடையதாகும். 

யூதர்களோ பலஸ்தீனர்களோ ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல என்பதுபோன்றே தற்போதைய மனிதப்படுகொலைகள் சுட்டுகின்றன. ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்குப் எப்போதும் முதற்பலியாவது அப்பாவி மக்களே என்பதை இவ்வுலகு அறிந்திருந்தும் அதை அனுமதித்திருப்பதை எப்படி நோக்குவது. யூதப் பொதுமக்களை கமாஸ்  கொன்றது பயங்கரவாதமென்றால், இஸ்ரேல் பலஸ்தீனப் பொதுமக்களைக் கொல்வதும் பயங்கரவாதமென்றே கொள்ளமுடியும்.  இரு பயங்கரவாதமும் உலகுக் கேடனதே. இரண்டும் ஒரே கனதியானவையே. 
நாமும் இனஅழிப்பிற்குள்ளாகும் இனமென்றவகையிலே உலகில் நடைபெறும் இன அழிப்புகளை நோக்க வேண்டியவராயுள்ளோம்.
நன்றி

என்னுடைய கருத்து குணா எப்படி "அமெரிக்க ஷதி" கதையாடலை நடக்கும் சம்பவங்கள் வைத்து உருவாக்குகிறார் என்பது பற்றி மட்டும் தான், இது தான் கிளி ஜோசியம்.

யாழ் களத்தில், உலகின் முக்கியமான சம்பவங்கள் பற்றி வாதப் பிரதிவாதங்கள் நடப்பது சாதாரணமானது, அனேகமானோர் தகவல்களை, வரலாற்றுத் தரவுகளைப்  பகிர்கிறார்கள், எனவே பயனுள்ளவை தான் இந்தப் பரிமாற்றங்கள்.

நீங்கள் சொல்வது போல, "நமக்கு தொடர்பென்ன, எனவே பேசாமல் இருப்போம் என்றால் எதையும் கற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் வாழும் (Middle America) அமெரிக்கர்கள் போல நாமும் மாறி விடுவோம் - என்ன நன்மை? ஒன்றுமில்லை. என்ன தீமைகள்? பல. 

  • கருத்துக்கள உறவுகள்+

தலைநகர் திருகோணமலையில் புலிகளால் பாவிக்கவென பதுங்ககழிக்குள் மறைத்து வைத்திருந்த இரு வெப்பமுக்க உந்துகணை செலுத்திகளை (Thermobaric Rocket Launcher) சிங்களத் தரைப்படையினர் கைப்பற்றினர் (2006ம் ஆண்டு) என்பது போன்ற செய்தி ஒன்று.

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, vasee said:

 

 

நல்ல கருத்துக்கள்....
ஆனால், இதில் இவர் கூறுகிறார், ஈழத் தமிழர்கள் 1970களில் நடந்த இஸ்ரேலியப் போரில் ஈழ்தமிழர்கள் பாலஸ்தீனம்/லெபனான் ஓடு சேர்ந்து நின்று போராடி உயிர்த்தியாகம் செய்தார்கள் என்று. இது எவ்வளவு தூரம் உண்மை. நான் இப்படியொரு தகவல் அறிந்ததில்லை, அதனால்தான் கேட்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

அரபு நாடுகள் ஆயுதம் வழங்க வேண்டும் – முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.நா.

 

இவர் பேச்சு நல்ல ஆக்ரோஷமாக இருக்கிறது. இலங்கையில் எத்தனை தமிழர்களை கொன்றிருப்பார். ஜிஹாத் குழுக்களை வழிநடாத்தியவர்களில் முக்கிய பங்கு வகித்தவர். இப்போது என்னமோவெல்லாம் பேசுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of blimp

 

May be a doodle of text

 

 

May be pop art of text

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

14 வருடங்களுக்கு முன்னர் நாங்கள்

இப்போ அதை நிலை

அதே வேண்டுகோள்

அதே கதறல்

முதல்க்கோணல் முற்றிலும் கோணல்

எம் அழிவை அனுமதித்து கொண்டாடிய அதே மக்கள் அவர்களது அரசுகள் 

இன்றாவது முதல் தவறை முதல் கோணலை உணர்ந்தால் உலகம் முழுவதும் மக்கள் நிம்மதிப்பெரு மூச்சு கேட்கும் 

ஆதிக்க சக்திகளின் கைப்பாவைகளாகிவிட்ட போரை ஆதிக்க சக்திகளால் மட்டுமே நிறுத்த முடியும் என்பதையே ஐநாவிலே குப்பையில் போடப்பட்ட போர்நிறுத்தம் கோரிய மனு சுட்டுகிறது. ஐ.நா  2008இல் தமிழீழத்திலேயே தோற்றுவிட்டது. எனவே அது ஐ.நா சபையல்ல அறிக்கைச்சபை மற்றும் ஆக்கிரமிப்பு நாடுகளுக்கான சபை போன்ற பாத்திரங்களையே வகிக்கிறது. ஐ.நா உண்மையில் அதிகாரமுள்ள சபையெனில் 
சிறிலங்காவால் தமிழீழத் தமிழர்கள்
மியன்மாரால் ரொகிங்கியர்கள்
துருக்கியால் குர்திஸ்கள்
இந்தியாவில் காஸ்மீர் மணிப்பூர் என இன அழிவுகள் தொடராது தடுக்கப்பட்டிருக்கும்.  ஐ.நாவில் கூடும் ஆதிக்க சக்திகளின் சதுரங்க ஆடுகளமாகிவிட்டபின் ஐ.நாவை அப்பாவி மக்கள் நம்புவதால் பயன் உண்டா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

நீங்கள் சொல்வது போல, "நமக்கு தொடர்பென்ன, எனவே பேசாமல் இருப்போம் என்றால் எதையும் கற்றுக் கொள்ளாமல் அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் வாழும் (Middle America) அமெரிக்கர்கள் போல நாமும் மாறி விடுவோம் - என்ன நன்மை? ஒன்றுமில்லை. என்ன தீமைகள்? பல.

நன்றி

இங்கே நான் 'அமைதிகாத்தல்' என்பதை பக்கச்சார்பற்றிருத்தல் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். யாரையும் எதையும் அறியவேண்டாம் என்று எங்கேயும் நான் சுட்டவில்லை. அறிவதன்வழியே நாம் எதைக் கற்றுக்கொள்கின்றோம். எந்த அடைவுகளை எட்டுகின்றோம் என்பதை திட்டமிட்ட நிலப்பறிப்பையும் இன அழிவையும் எதிர்கொள்ளும் இனமென்ற நிலையில் இருந்து நோக்க வேண்டும். பலஸ்தீனப்பகுதிகளில் இன்று நெந்தன்யாகு செய்வதையே (டட்லியிலிருந்து ரணில்வரை) கந்தளாய் முதல் மயிலந்தமடு வரை நில அபகரிப்பு சிங்களக்குடியேற்றம் எனத் தொடர்கிறது. எதுவும் செய்ய முடியாதவர்களாகப் புலம்பெயர் தமிழர்களாகிய நாமும் இருக்கின்றோம். இதிலே நாம் யார் பக்கம்? 

நன்றி 

13 hours ago, nochchi said:

ரஸ்ய – உக்ரேன் போராகட்டும், யூதப் – பலஸ்தீனப்  போராகட்டும் இதிலே தமிழரது வகிபாகம் ஏதாவது சாத்தியமா? நாமே நீரினுள் வீழ்ந்த எறும்புபோல் தத்தளிக்கின்றோம். இந்த நிலையிலிருந்து இந்தப்போரழிவை நோக்காவிடினும் அமைதிகாத்தாலே போதுமானது. இரு தேசங்களதும் பின்னணிகளையும் வரலாற்று அசைவுகளையும் கற்றிதல், தேடல் எமது நிலைகுறித்த ஒரு சரியான பார்வைக்கு வழிவகுக்குமாயின் பயனுடையதாகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கொடூரத்தின் உச்சம்; உயிரிழந்த உடல்களில் வெடிகுண்டுகள்… ஹமாஸ் அமைப்பின் தந்திரம் வெளியீடு

12-18.jpg

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 17-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.

இதில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் (ஐ.டி.எப்.) யஹலோம் பிரிவு, கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய பின்னர், மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

எனினும், இந்த பணி ஆபத்து மற்றும் மிக கடினம் நிறைந்துள்ளது என்று இந்த சிறப்பு படைப்பிரிவானது, தெரிவிக்கின்றது. ஏனெனில், இஸ்ரேலிய எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் யாரும் உள்ளனரா? என்று பாதுகாப்பாக செல்ல வேண்டி உள்ளது.

வெடிக்காத வெடிகுண்டுகள் மீதம் உள்ளனவா? என்றும் அவற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது.

இதில், உயிரிழந்த சில உடல்களில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய சில புகைப்படங்களை ஐ.டி.எப். வெளியிட்டிருக்கிறது.

அவற்றில், குழந்தைகள் பள்ளிக்கு போகும்போது கொண்டு செல்ல கூடிய பை ஒன்று வயல்வெளியில் கிடக்கிறது. ஆனால், அதில், ரிமோட் உதவியுடன் வெடிக்க கூடிய 7 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இதனை எப்படியும் யாரேனும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், உள்நோக்கத்துடன் ஹமாஸ் அமைப்பு தேர்வு செய்துள்ளது. போரில் பல தந்திரங்களில் ஒன்றாக இதனை அந்த அமைப்பு பயன்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது.
 

https://akkinikkunchu.com/?p=259150

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 24 மணித்தியாலங்கள் 1000 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய விமான குண்டு வீச்சில் இறந்ததாக காஸா மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் 300 க்கு மேற்பட்ட கமாசின் இடங்களை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் #ஊடறுப்பு  #அருஸ்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கிடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இஸ்ரேல் உடனடியாகவே 3 இலட்சம் அளவிலான ரிசர்வ் படையினரை திரட்டி தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பிப்பதாக சொல்லியிருந்தாலும் இதுவரையில் அது தீவிரப்படுத்தப்படவில்லை. இதற்கு அமெரிக்காவும் காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேசும்போதே உடைந்து அழுத Palestine Representative; "இஸ்ரேல் ஒரு குடும்பத்தை கூட விட்டு வைக்கல"

ஐநா அவையில் கண்ணீர்விட்டு அழுத பாலத்தீன பிரதிநிதி - அதே நிகழ்வில் இஸ்ரேல் பிரதிநிதி என்ன சொன்னார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

 

நல்ல கருத்துக்கள்....
ஆனால், இதில் இவர் கூறுகிறார், ஈழத் தமிழர்கள் 1970களில் நடந்த இஸ்ரேலியப் போரில் ஈழ்தமிழர்கள் பாலஸ்தீனம்/லெபனான் ஓடு சேர்ந்து நின்று போராடி உயிர்த்தியாகம் செய்தார்கள் என்று. இது எவ்வளவு தூரம் உண்மை. நான் இப்படியொரு தகவல் அறிந்ததில்லை, அதனால்தான் கேட்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்.

 

போர்ப்பயிற்சி எனும் பெயரில் இவர்களை அரண்களுக்கு வெளியே கொண்டு போய் இறக்கி விடுவார்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவுக்குள் இரவோடு இரவாக தரை வழியே நுழைந்த இஸ்ரேலிய படைகள் - என்ன நடந்தது?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,EPA

23 அக்டோபர் 2023, 05:54 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தொடர்ந்து நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், மீண்டும் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காஸா துண்டு நிலப் பகுதியில் மேலும் 320 இடங்களக் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

இதனிடையே தங்களுடையே இல்லங்கள் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி தாக்கப்பட்டதாக பாலத்தீன ஆட்சியகம் கூறியுள்ளது.

கடந்த சில மணிநேரங்களில் காஸாவில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு அருகில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த மருத்துவமனைகளில் காஸாவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனை ஆகியவை அடங்கும் என்று பாலத்தீனிய ஊடகங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தனது டெலிகிராம் சேனலில், அல்-குத்ஸ் அருகே நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது குவைத் மருத்துவமனைக்குப் பின்னால் நடந்ததாகக் கூறி இடிந்த ஒரு கட்டிடத்தின் படங்களையும் அது வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ மற்றும் படங்களை பிபிசியால் இன்னும் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

அந்தப் பகுதிகளில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதா என்பதை உறுதிப்படுத்துமாறு பிபிசி இஸ்ரேல் தற்காப்புப் படைகளைக் கேட்டுள்ளது, மேலும் அவர்கள் சோதனை செய்வதாக எங்களிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் எங்களுக்குத் தெரிந்தவுடன் சமீபத்திய மேம்பாடுகளை உங்களுக்குக் கொண்டு வருவோம்.

காஸா தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

காஸாவில் பலி 5,000-ஐ தாண்டியது - ஒரே நாளில் 436 பேர் பலி

காஸாவில் கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதில் இருந்து இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 436 பேர் பலியானதாகவும், இதுவரை மொத்தம் 5,087 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவர்கள் அளித்த தகவல்படி, கொல்லப்பட்டவர்களில் 2,055 பேர் குழந்தைகள், 1,119 பேர் பெண்கள், 217 பேர் மூத்த குடிமக்கள். அத்துடன், 15,273 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாலத்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காஸாவில் மற்ற அரசு அமைப்புகளைப் போல சுகாதாரத்துறையும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,EPA

காஸாவுக்குள் இரவோடு இரவாக புகுந்த இஸ்ரேலிய தரைப்படை

காஸா மீது 2 வாரங்களுக்கும் மேலாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், முதன் முறையாக தரைவழியே எல்லை தாண்டியுள்ளது. தரைவழியே படையெடுக்க காஸா எல்லையை ஒட்டி ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளில் ஒரு பிரிவினர் இரவோடு இரவாக எல்லை தாண்டி காஸாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.

காஸா பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இரவில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முழுவீச்சிலான தரைவழி படையெடுப்பின் தொடக்கம் அல்ல என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இந்த நடவடிக்கையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதல்

ஞாயிற்றுக் கிழமை ஒரு அரிய நிகழ்வில், இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

மேற்குக் கரையில் ஹமாஸ் குழு ஒரு மசூதியை ‘பயங்கரவாத வளாகமாகப்’ பயன்படுத்துவதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குக் கரையின் வடக்கில் உள்ள ஜெனின் நகரத்தில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியது.

அல்-அன்சார் என்றழைக்கப்படும் இந்த மசூதி தாக்கப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக பாலத்தீன அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல், ஹமாஸ், காஸா
படக்குறிப்பு,

சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின

இஸ்ரேலிய ராணுவம் மேற்குக் கரையில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து சோதனையிட்டாலும், அது காஸாவில் நடத்துவதுபோல வான்வழித் தாக்குதல்களை மேற்குக் கரையில் அரிதாகவே பயன்படுத்துகிறது.

சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்கள் மசூதிக் கட்டிடம் குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்திருப்பதைக் காட்டின.

கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு ‘பயங்கரவாதத் தாக்குதலுக்கு’ தயாரகி வந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருக்கிறது.

அவர்கள் பயன்படுத்திய இடம் மசூதியின் கீழ் இருப்பதாகவும், ஜூலை முதல் பயன்பாட்டில் இருப்பதாகவும் அது கூறியது. வளாகத்தின் நுழைவாயில்கள், ஆயுதங்கள், கணினிகள் மற்றும் தளத்தில் படமாக்கப்பட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் புகைப்படங்களுடன் அது கூறிய படங்களை வெளியிட்டது.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாப்டுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மூன்று மாதங்கள் தொடரலாம்

காஸாவில் இஸ்ரேல் இராணுவத்தின் செயல்பாடுகள் இன்னும் மூன்று மாதங்கள் வரை தொடரலாம், ஆனால் இறுதியில் ஹமாஸ் கண்டிப்பாக இருக்காது, என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோஆவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய விமானப்படையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டறிந்த பிறகு கேலன்ட் இதைத் தெரிவித்தார்.

"செயல்பாட்டு அம்சங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைத் தடுக்க எதனாலும் முடியாது," என்று அவர் கூறினார்.

"காஸாவில் இதுவே எங்களின் கடைசி நடவடிக்கையாக இருக்கும். இதற்குப் பிறகு ஹமாஸ் இருக்காது," என்றார் அவர்.

மேலும், கேலன்ட், அடுத்த கட்டமாக, பரவலாக எதிர்பார்க்கப்பட்ட தரைப்படை நடவடிக்கை, ‘விரைவில் வரும்’ என்றார். ஆனால், எவ்வளவு விரைவில் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மனிதாபிமான உதவிகள்

மேலும் 14 டிரக்குகள் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளதாக ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

பாலத்தீனியர்களுக்கு இது ‘மற்றொரு சிறிய நம்பிக்கை’ என்று அவர் கூறினார். ஆனால் இன்னும் அதிகமான உதவிகள் தெவைப்படும் என்று கூறினார்.

தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கும் அதேவேளை வெகுவாக பதிக்கப்பட்டிருகும் காஸா, ‘ஒரு நாளைக்கு ஒரு சில டிரக்குகளை அனுப்புவது மட்டுமே போதுமானதாக இல்லை’ என்று கூறியிருக்கிறது.

 
இஸ்ரேல், ஹமாஸ், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர்

‘கைதிகளை விடுவிக்காத வரை காஸாவுக்கு உதவிகள் அனுப்பக் கூடாது’

இந்நிலையில், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அரசியல்வாதியான பாதுகாப்பு அமைச்சர், இதமார் பென் க்விர், "ஹமாஸ், தன் பிடியில் இருக்கும் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிக்கச் சம்மதிக்கும் வரை காஸாவிற்குத் தொடர்ந்து உதவிகள் அனுப்பக் கூடாது" என்று கூறியுள்ளார்.

ஞாயிறன்று மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற14 டிரக்குகளின் காஸாவில் நுழைய அனுமதிக்கப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, X சமூக ஊடகத்தில் பென்-க்விர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதை உறுதிசெய்யாமல் காஸாவுக்குத் தொடர்ச்சியாக உதவிகள் அனுப்புவதுதான் இந்தப் பிரச்னைகள் இவ்வளவு பெரிதாகக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘கடத்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதற்கு ஈடாக மட்டுமே மனிதாபிமான உதவிகள்,’ என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv2lzp4z17no

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Cruso said:

இவர் பேச்சு நல்ல ஆக்ரோஷமாக இருக்கிறது. இலங்கையில் எத்தனை தமிழர்களை கொன்றிருப்பார். ஜிஹாத் குழுக்களை வழிநடாத்தியவர்களில் முக்கிய பங்கு வகித்தவர். இப்போது என்னமோவெல்லாம் பேசுகிறார். 

1990 இல் ஹாரிசுக்கு 19 வயது. ஜிகாத்தை வழி நடத்தி இருப்பது சந்தேகமே. ஆனால் சட்ட பீடத்தில் இனவாதியாக அறியப்பட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.