Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Justin said:

எனக்குப் புரிந்த வரையில், தாயகத்தில் இளம் சந்ததியிடம் தமிழர்களின் அரசியலில் தலைமை தாங்க என்ன, பங்கு பற்றும் ஆர்வம் கூட இல்லை!

கண்ணா!காலத்திற்குக் காலம் புதிய தலைவர்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். சேர் பொன் அருணாசலம்>ஜீஜீபொன்னம்பலம்>தந்தை செல்வா ஈஅமிர்தலிங்கம் > தேசியத்தலைவர் பிரபாகரன் என்று தலைவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சம்பந்தர்>சுமத்திரன் மாதிரி அரசியல்தற்குறிகள் காணாமல் போவார்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் . சம்பந்தன் சுமத்தரனை விட இன்னுமொரு எதிர்காலத்தலைவரை நீங்கள் ஆதரிக்கத்தான்  போகீறீர்கள். சம்பந்தன் தமிழினத்துக்குக் கிடைத்த சாபக்கேடு. கருணாவைப் போல சம்பந்தரைத் தெரிவு செய்ததும் தலைவர் விட்ட மிகப் பெரிய பிழை.

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

வருவதே டியூட்டி ஃப்ரீ யில் சாமான் வாங்கி கொண்டு போகத்தானே. பல எம்பிகள் ஜனநாயக, நல்லாட்சி   பட்டறைகள் என வருவார்கள்…ஆனால் அதை கிரகிப்பதை தவிர மிச்சம் எல்லாம் செய்வாகள்.

வெளி நாடுகளுக்கு வந்து இங்கு குடியேறி நிரந்தரமாக வெளிநாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டு தமிழர் போராட்டம் தொடர்பாக  அரசியல் செய்வோர் தாம் வாழும் நாடுகளில் உள்ள ஜனநாயக நடைமுறைகளை  உள்வாங்கி அனைவரையும் அரவணைத்து எல்லோரது கருத்துக்களையும் உள்வாங்கி ஸமார்ட் அரசியல் செய்கின்றார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nedukkalapoovan said:

இப்படியான சுதந்திர சுயாதீன அரசியலுக்கு வழி வராது.. சொறீலங்காவில். அப்படி அதிஷ்டவசமாக அமைந்தால்.. நிச்சயம்... மக்களுக்கான அரசியலை உள்ளூர் இளைய கல்வி.. மற்றும் சமூக ஆர்வலர்கள்.. அரசியல் ஒத்த கருத்துள்ளோருடன் இணைந்து செயலாற்ற விருப்பம் உள்ளது. நிச்சயம்.. பதவி ஆசை.. மக்கள் நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமிருக்காது. 

இரட்டை குடியுரிமை இருந்தாலே பாராளுமன்றத்துக்கும்,அதற்கு மேலேயும் உள்ள நிலைகளில் அரசியல் செய்ய முடியாது என்ற சட்டம் உள்ள நாட்டில், ஒரு தமிழாராக நீங்களோ அல்லது 2ம் தலைமுறை தமிழ் பிள்ளைகளோ அரசியல் செய்ய அனுமதிக்கப்பட போவதில்லை நெடுக்ஸ். 

இது இல்லாத ஊருக்கு வழி சொல்லும் நேர மினக்கேடு. இப்படி ஒன்றை செய்வதாயின் இலங்கையில் உள்ள பெளத்த பேரினவாத கட்டமைப்பு அழிக்கப்பட்டாலே முடியும்.

ஆனால் உங்கள் போன்றோருக்கு நிச்சயம் புலம் பெயர் நாட்டில் செய்ய நிறைய இருக்கிறது. ஒரு மாபெரும் தலைமைதுவ வெற்றிடம் இங்கே இருக்கிறது. நம்பிக்கையானவர் கூட எவரும் இல்லை.

உண்மையில் அரசியல் செய்ய ஆர்வம் இருந்தால்…இங்கே ஆரம்பியுங்கள். கொள்கை வழுவாதோரை சேர்த்து கொண்டு இறங்குங்கள்.

புலத்தை விட, புலம்பெயர் சமூகத்துக்குத்தான், நேர்மையான, கொள்கை பிடிப்புள்ள, நம்பிக்கையான தலைமைத்துவம் தேவைப்படுகிறது.

பிகு

அட்வைஸ் பண்ணும் நானே ஏதும் செய்யலாமே?  என நினைக்க கூடும்.

அரசியல் எனக்கு, என் போன்ற அணுகுமுறை உள்ளோர்க்கு இயலாத விடயம் என்பது எனக்கு தெளிவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, புலவர் said:

கண்ணா!காலத்திற்குக் காலம் புதிய தலைவர்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். சேர் பொன் அருணாசலம்>ஜீஜீபொன்னம்பலம்>தந்தை செல்வா ஈஅமிர்தலிங்கம் > தேசியத்தலைவர் பிரபாகரன் என்று தலைவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சம்பந்தர்>சுமத்திரன் மாதிரி அரசியல்தற்குறிகள் காணாமல் போவார்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் . சம்பந்தன் சுமத்தரனை விட இன்னுமொரு எதிர்காலத்தலைவரை நீங்கள் ஆதரிக்கத்தான்  போகீறீர்கள். சம்பந்தன் தமிழினத்துக்குக் கிடைத்த சாபக்கேடு. கருணாவைப் போல சம்பந்தரைத் தெரிவு செய்ததும் தலைவர் விட்ட மிகப் பெரிய பிழை.

மன்னிக்கவும் தமிழினத்துக்கு கிடைத்த முதல் சாபக் கேடு ஜி. ஜி பொன்னம்பலமே.  அருமையாக கிடைத்த சந்தர்பங்களை எல்லாம் தவறவிட்டு சிங்களவரே வலியுற்றுத்திய சமஸ்டியை நிராகரித்து,    நியாயமற்ற 50 க்கு 50 கோரிக்கையை  கேட்டு  காலம்  கடத்தி மலையக தமிழரின் வாக்குரிமையை பறித்த சட்டத்தை ஆதரித்து செய்த சுயநல அரசியலின் தாக்ககத்தையே தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவிக்கின்றனர். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

 

இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களின் நிலமை இவ்விடயத்தில் எப்படி? 

சாண் ஏற முழம் சறுக்கும் நிலையில் 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரும்பாலான தமிழர்கள் எவருமே இவர்களின் அரசியலில் எள்ளளவும் நம்பிக்கையில்லாதவர்கள் என்பது வேறு விஷயம், ஆனால் சுமந்திரன் சொல்வதில் எந்த தவறுமேயில்லை.

எழுந்து நடக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு இனத்தின் அரசியலுக்கு எழுந்து நடக்க முடியாதவர்கள் தலைமை தாங்குவது எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல.

முதுமை ஒரு குற்றமல்ல, ஏளனத்துக்குரியதும் அல்ல ஆனால் துடிப்பாக பணியாற்றவேண்டிய சில விடயங்களுக்கு முதுமை நிச்சயம் ஒரு தடைதான், அதனால்தான் உலகின் ஏறக்குறைய அனைத்து வேலைகளுக்கும் வயசு கட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறார்கள் அரசியலை தவிர.

இது ஒரு விடயம் தொடர்பான பொதுவான கருத்துதான் இவர்களுக்கான வக்காலத்து அல்ல. , 

இலங்கை அரசியலில் தமிழர் தரப்பில் ஆற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் சரி அறிவார்ந்தவர்களாக இருந்தாலும் சரி எவர் தலைமைக்கு வந்தாலும் அவர்களுக்கு சிங்களவன் எதுவுமே கொடுக்கபோவதில்லை, வேண்டுமென்றால் அற்ப சலுகைகளை வழங்கி புதியவர்களை தன் பக்கம் இழுக்க மட்டுமே வாய்ப்புள்ளது என்பதில் எப்போதுமே அசையாத நம்பிக்கை உண்டு.

சிங்களவர்களும் அவர்கள் அரசியலும் என்ன செய்வதென்று புரியாது மரண பயத்தில் கையை பிசைந்து கொண்டு இருந்த தமிழர் ஆயுத போராட்ட காலத்திலேயே தமிழருக்கு கிபீர் குண்டுகளை தவிர வேறு  எதுவும் தர தயாராக இருக்காத சிங்கள தேசம், சிங்கள தேசத்தின் பங்களா, சொகுசு கார், சம்பளம் அவர்களின் பாதுகாவலர்கள் என கோழி குஞ்சுமாதிரி சிங்களவர்களின் செட்டைக்குள்  வலம்வரும் தற்கால தமிழ் அரசியல்வாதிகள்.........

சிங்களவர்களிடமிருந்து எதுவும் தமிழர்களுக்கு  பெற்று தருவார்கள் என்றோ அல்லது சிங்களவர்கள் இவர்களுக்கு அஞ்சி எதுவும் கொடுப்பார்கள் என்றோ இன்னும்    நம்பினால் அது நகைச்சுவையின் உச்சம்.

எதிர்கால எம் சந்ததிக்கு பொய்யான ஒரு நம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் துரோகம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, island said:

வெளி நாடுகளுக்கு வந்து இங்கு குடியேறி நிரந்தரமாக வெளிநாடுகளில் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டு தமிழர் போராட்டம் தொடர்பாக  அரசியல் செய்வோர் தாம் வாழும் நாடுகளில் உள்ள ஜனநாயக நடைமுறைகளை  உள்வாங்கி அனைவரையும் அரவணைத்து எல்லோரது கருத்துக்களையும் உள்வாங்கி ஸமார்ட் அரசியல் செய்கின்றார்களா? 

இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, நன்னிச் சோழன் said:

**** சுமந்திரனுக்கே 59 வயதாயிற்று!

அங்கு பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் 90 % வீதமானோர் கிழடுகளே. அது இப்போது வயோதிபர் மடமாக மாறி விட்ட்து. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Cruso said:

அங்கு பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் 90 % வீதமானோர் கிழடுகளே. அது இப்போது வயோதிபர் மடமாக மாறி விட்ட்து. 

எல்லாத்தையும் விட பெரிய வயோதிப மடம் அமெரிக்காவில தான் இருக்கு.....தடக்குப்பட்டு விழுந்து எழும்புற சனாதிபதியும்.....மைக்குக்கு முன்னாலை நிண்டு முழுசுற  அரசியல்வாதிகளும்.......

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

« 

மூப்பின் காரணமாக எம்பி பதவியை சம்பந்தன் கைவிடவேண்டும் - சுமந்திரன்

என் மூப்பினை தெரிந்துகொண்டே என்னை திருகோணமலை மக்கள் தெரிவுசெய்தனர் - சம்பந்தன்« 

 

இவரு ஊத.. அவரு ஆட.. ஒரே கூத்துத்தான்…

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்மந்தர் இறந்தாலும் அவரது எலும்புக்கூட்டை பாராளுமன்றம் கொண்டு செல்ல வேண்டும்…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவரு ஊத.. அவரு ஆட.. ஒரே கூத்துத்தான்…

தமிழர் நாம் “வொய் பிளாட்…சேம் பிளாட்…” என காதை துடைச்சுட்டு போக வேண்டியதுதான்🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையின் பொருட்டு  நடைடுறை அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதனால் அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக  உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு பாராளுமன்ற சம்பளம்,  எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் என மொத்தமாக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இது மக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இக் காலகட்டத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா? என்று சுமந்திரன் தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற வேளையில், வினவப்பட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.

அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார். 

”2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் எனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் ”  என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.

எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தனின் முதுமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தன்-பதவி-விலக-வேண்டும்-சுமந்திரன்/175-326710

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன் பதவி விலக வேண்டும்:சுமந்திரன்.

கரடியே காறித்துப்பிவிட்டது என வேறு ஊடகங்களில் பேசிக்கொள்கிறார்கள்.😁

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இதை ஒருவேளை ஐயா சம்பந்தரே

நீ அடிக்கிற மாதிரி நடி

நான் அழுவுற மாதிரி நடிக்கிறன்

எல்லாரும் ஏமாந்தவுடன்

தலைவர் பதவியைத் தாறன்

என்று சொல்லியிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, குமாரசாமி said:

கரடியே காறித்துப்பிவிட்டது என வேறு ஊடகங்களில் பேசிக்கொள்கிறார்கள்.😁

உந்த துப்பல் சத்தி எல்லாம் நாங்க பார்க்காததா? வேண்டாததா?

அரசியலில் இதெல்லாம் இல்லாமலா?

நாங்க பிரபலமாவதற்கு ஆளை வைத்தே துப்ப சொல்லுவம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனின் சூழ்ச்சி அம்பலம் : சம்பந்தனுக்கு பறந்தது கடிதம்

11-21.jpg

இலங்கை தமிழரசுக்கட்சியின் கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு கடந்த 20 ஆம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் அவர், சுமந்திரனின் அரசியல் நகர்வுகள் மற்றும் சம்பந்தனை அரசியலுக்குள் கொண்டு வந்த பின்னர் அவரை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக தெரிவித்த கருத்து தொடர்பாக  மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது

நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது. ஆப்பிரஹாம் சுமந்திரன் அவர்களின் தன்னிச்சையான முடிவுகளால் தமிழ் தேசியம் தேய்ந்து கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிஷ்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காமையின் விளைவுகளைத்தான் இப்போது பகிரங்கமாக காணக் கிடைக்கின்றது.

தகைமையுள்ள பல்வேறு தமிழ் தேசிய ஆளுமைகள் இருக்கத் தக்கதாக நீங்கள் 2010ஆம் ஆண்டு ஆப்ரிகாம் சுமந்திரனை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்கி அரசியல் முகவரி கொடுத்தீர்கள்.

ஆனால் இப்போது அரசியல் ரீதியில் உங்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்துவிதமான சூழ்ச்சிகளையும் முன்னெடுக்கின்றார்.

வேடிக்கையான சுமந்திரனின் கருத்து

2015 தேர்தலுக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் தான் அரசியலை விட்டும் விலகப் போவதாகக் கூறிய சுமந்திரன் இப்போது உங்களைப் பதவி விலகச் சொல்வது வேடிக்கையானது.

இரா.சம்பந்தன் அவர்களே! தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் நீங்கள். தமிழ் தேசியத்தின் பால் நீங்கள் கொண்டிருந்த பற்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை உங்களுக்கு அளிக்கச் செய்தது. கடினமான கால கட்டங்களில் நீங்கள் நாம் திருப்தியுறும் வகையில் வழிநடாத்தினீர்கள்.

உள்நோக்கம் கொண்ட ஒரு செயற்பாடு

இப்போது உங்களின் ஆளுமைத் தளத்தை படுகொலை செய்யும் வகையில் உங்களை அவமதித்து ‘முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் இரா.சம்பந்தன். உடனடியாகப் பதவி விலக வேண்டும்’ என்ற தனது தனிப்பட்ட கருத்தை தனியார் ஊடகமொன்றில் பகிரங்கமாகக் கூறி, 288 நாடாளுமன்ற நாட்களில் வெறும் 39 நாட்கள் மட்டுமே சமூகமளித்த உங்களுக்கு நான்கு மில்லியன் ரூபாய் தொலைபேசி, எரிபொருள் வாகனம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தகவலறியும் சட்டத்துக்கமைய பெறப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அளிக்கப்படும் சிறப்புரிமையைக் கூட கேள்விக்குட்படுத்திய சுமந்திரனின் நாகரீகமற்ற கூற்று பற்றியும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உங்களை பதவி விலகச் சொல்லி நிர்ப்பந்திப்பதும், அல்லாதவிடத்து அதற்காக நடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்லியிருப்பது உள்நோக்கம் கொண்ட ஒரு செயற்பாடாகும்.

தமிழ் தேசிய அரசியல் இது உங்களை அவமானப்படுத்தியது மட்டுமல்ல தமிழ் தேசிய அரசியலுக்கான உங்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவதுடன் அது தமிழ் அரசுக்கட்சியையும் இழிந்துரைக்கும் செயற்பாடுமாகும்.

எனவே விரைவாக இதற்கு தகுந்த நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும் என்பதே தமிழ்தேசியவாதிகளின் எதிர்பார்ப்பாகும். நீங்கள் வளர்த்த கடா பகிரங்கமாக பொதுவெளியில் வைத்து உங்களின் மார்பில் பாய்ந்துவிட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட தமிழரசுக்கட்சி

தின்னை எப்போது காலியாகும் என்ற அவரது எதிர்பார்ப்பு பகிரங்கமாகவே வெளிப்பட்டுவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவே நீங்கள் செயற்பட்டீர்கள் அதை இல்லாமல் செய்வதற்காகவே கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுக் கோரப்பட்ட போது த.தே.கூட்டமைப்பைச் சிதைத்து தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தினார்.

தமிழ் தேசியக் கூட்டடைப்பை ஆப்ரிஹாம் சுமந்திரன் திட்டமிட்டு சிதறடித்தமையின் நோக்கம் த.தே.கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து உங்களை தூக்கியெறிவதேயாகும். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உங்களை விலக நிர்ப்பந்தித்து அரசியலில் இருந்து உங்களை முற்றாக அகற்றுவதே அவரது இலக்காகும். அதைத்தான் பகிரங்கமாக அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகம்

உடல் ரீதியில் நீங்கள் பலவீனமுற்றாலும் மனரீதியில் மிகவும் வலிமையானவர் உங்களின் வலிமையைச் சிதைப்பதற்கே திரு சுமந்திரன் பகிரங்கமாக இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.

உடனடியாகக் கட்சி காப்பாற்றப்பட்டு தமிழ்த்தேசியத்தின் கனவுகளைச் சுமந்த மக்களின் அபிமானமிக்க தமிழ்தேசியவாதி ஒருவரைக் கொண்டு தலைமைத்துவத்தைப் பலப்படுத்தி கட்சியை நிலைப்படுத்தாவிட்டால் நிச்சயம் கட்சியின் இருள் சூழ்ந்த பக்கத்தை விரைவில் காண வேண்டி வரும் அது நமது இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமாகும். நமது அரசியல்பாதையில் போடப்படும் மாபெரும் தடைக்கல்லாக அமையும். ஆக இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=259452

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

சுமந்திரனின் சூழ்ச்சி அம்பலம் : சம்பந்தனுக்கு பறந்தது கடிதம்

முதுமை காரணமாக உடல் செயற்பாடாமல் அரசியலிலும் செயற்படவில்லை என்று உண்மையை சொன்னது ஆப்பிரஹாம் சுமந்திரனின் சூழ்ச்சி 🤔

Edited by விளங்க நினைப்பவன்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

உடனடியாகக் கட்சி காப்பாற்றப்பட்டு தமிழ்த்தேசியத்தின் கனவுகளைச் சுமந்த மக்களின் அபிமானமிக்க தமிழ்தேசியவாதி ஒருவரைக் கொண்டு தலைமைத்துவத்தைப் பலப்படுத்தி கட்சியை நிலைப்படுத்தாவிட்டால்....

https://akkinikkunchu.com/?p=259452

யார் அது?

"அக்கினிக் குஞ்சில்"  "அக்கினி" அவ்வளவு இல்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயாவின் அரசியல் அனுபவம் தொடர்பில் அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதுடன் நீண்ட அனுபவசாலி என்றே பலரும் கூறுவார்கள்.

அவரது தெளிவான பார்வையும் அரசியல் அனுபவமும் எப்போதும் தேவையானது. ஆனால், வயது மூப்பின் காரணமாக அவரால் முன்னரைப் போன்று செயற்பட முடியவில்லை.

குறிப்பாக அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அந்த மக்கள் தங்கள் பிரதிநிதி தொடர்பில் தேடுகின்றதுடன் தங்களுக்காக ஒருவர் களத்தில் இருக்கவேண்டும் என்று கோரியிருக்கின்ற நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலைமையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரவித்திருந்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்திருந்தார்.
 

http://www.samakalam.com/சம்பந்தன்-பதவி-விலக-வேண்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, கிருபன் said:

சம்பந்தன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயாவின் அரசியல் அனுபவம் தொடர்பில் அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதுடன் நீண்ட அனுபவசாலி என்றே பலரும் கூறுவார்கள்.

அவரது தெளிவான பார்வையும் அரசியல் அனுபவமும் எப்போதும் தேவையானது. ஆனால், வயது மூப்பின் காரணமாக அவரால் முன்னரைப் போன்று செயற்பட முடியவில்லை.

குறிப்பாக அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அந்த மக்கள் தங்கள் பிரதிநிதி தொடர்பில் தேடுகின்றதுடன் தங்களுக்காக ஒருவர் களத்தில் இருக்கவேண்டும் என்று கோரியிருக்கின்ற நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலைமையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரவித்திருந்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்திருந்தார்.
 

http://www.samakalam.com/சம்பந்தன்-பதவி-விலக-வேண்/

அடுத்த மாதம் பட்ஜெட் வருகின்றது. அநேகமாக அதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். மொட்டு கட்சி ரணிலுடன் முட்டுப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. விரைவில் தேர்தல் வரலாம், அப்போது திருகோணமலைமக்கள் தீர்மானிக்கட்டும். கொஞ்சம் பொறுத்திருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Cruso said:

அடுத்த மாதம் பட்ஜெட் வருகின்றது. அநேகமாக அதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். மொட்டு கட்சி ரணிலுடன் முட்டுப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. விரைவில் தேர்தல் வரலாம், அப்போது திருகோணமலைமக்கள் தீர்மானிக்கட்டும். கொஞ்சம் பொறுத்திருப்போம். 

அடுத்த தேர்தலில் சம்பந்தன் போட்டியிட்டால்  100% வெல்வார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, MEERA said:

அடுத்த தேர்தலில் சம்பந்தன் போட்டியிட்டால்  100% வெல்வார். 

உங்கள் நம்பிக்கை வீண் போகா விடடால் நல்லதுதான். இருந்தாலும் சாகப்போகிற வயதிலாயாவது மனுஷனை நிம்மதியாக போக விட மாடடீர்கள் போலத்தான் தெரிகிறது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/10/2023 at 03:41, island said:

மன்னிக்கவும் தமிழினத்துக்கு கிடைத்த முதல் சாபக் கேடு ஜி. ஜி பொன்னம்பலமே.  அருமையாக கிடைத்த சந்தர்பங்களை எல்லாம் தவறவிட்டு சிங்களவரே வலியுற்றுத்திய சமஸ்டியை நிராகரித்து,    நியாயமற்ற 50 க்கு 50 கோரிக்கையை  கேட்டு  காலம்  கடத்தி மலையக தமிழரின் வாக்குரிமையை பறித்த சட்டத்தை ஆதரித்து செய்த சுயநல அரசியலின் தாக்ககத்தையே தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவிக்கின்றனர். 

இப்போது அவரது பேரனார் தமிழ் ஈழம்தான் ஒரே முடிவு என்ற நிலையில் இருக்கிறார். நடக்குமா? இன்னும் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம்!

adminOctober 31, 2023
written by  admin October 31, 2023
wickneswaran-R-Sambanthan.jpg?fit=800%2C
“சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கேள்வி – பதில் அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன், அவர் தாம் பதவி விலகத் தேவையில்லை என்று கூறியுள்ளார். அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சம்பந்தனின் நாடாளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் நாடாளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம்.

வடக்கு – கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் நாடாளுமன்றத்தில் தமது குரலையும் உடலையும் வெளிக்காட்டுவதுதான் அவர்களின் கடமை என்று நினைப்பது தவறு. தமிழ் மக்களின் வருங்காலம் நாடாளுமன்றத்தால் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களின் விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய உலகறிய எமது அவலங்களை வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தெரியப்படுத்தி, இலங்கை சம்பந்தமான பொதுக் கருத்தை வெளிநாடுகளில் எமது புலம்பெயர் சகோதரர் வாயிலாக எழ வைத்து எமது நாட்டின் அரசாங்கத்துக்குப் போதிய நெருக்குதல்களை ஏற்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை பாரப்படுத்தினால் எமக்கு நன்மைகள் கிடைக்கலாம். அப்போதுகூட சீனாவிடம் முழுமையாக சரணாகதி அடைய சிங்கள அரசியல்வாதிகள் ஆயத்தமாக உள்ளார்கள். தமிழர்களின் உரிமைகளை வழங்குவதிலும் பார்க்க எவரிடமும் நாம் மண்டியிடத் தயார் என்பதே அவர்களின் மனோநிலை.

இந்த விதத்தில் தமிழ் மக்களின் தற்போதைய நிலையை அறிய அவர்களின் இதுவரை கால அவலங்களை அறிய, அவர்களின் அபிலாஷைகளை அறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் நாடும் முக்கிய நபர் சம்பந்தனே.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்தார். அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்தில் இருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும்.

அவரைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும். வெளி உலகம் சம்பந்தனை ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ முனைவது தமிழ் மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். அவர் வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லை.

அவரில் பல குறைகள் இருந்துள்ளன – இருக்கின்றன. ஆனால், யாரிடந்தான் குறைகள் இல்லை? அதுவும் தமிழர்கள் மத்தியில் ஒரு தமிழர் பற்றி இன்னொரு தமிழரிடம் கேட்டால் யாரும் நினையாத குறைகள் எல்லாம் நிறைந்தோடி வெளிவந்து விடுவன. இதனால்தான் நான் அண்மையில் ஓர் ஊடகம் என்னிடம் கேள்வி கேட்டபோது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவை என்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன். தீர்மானங்கள் அவர்கள் மூவராலும் ஒருமித்து எடுக்கப்பட வேண்டும் என்றேன்.

சம்பந்தனை இருக்க விடுங்கள். தற்போதைய நாடாளுமன்ற காலம் முடிவடையும்போது அவரின் அங்கத்துவம் தானாகவே முடிந்துவிடும். திருகோணமலை மக்களின் தேவைகளைப் பார்க்க – பாதுகாக்க சம்பந்தன் ஒரு தகுந்த அமைப்பை உண்டு பண்ணுவார். இல்லை என்றால் அதனை அமைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி அவருக்கு உதவி வழங்க வேண்டும்.

சம்பந்தனை வெளியேற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. சம்பந்தன் தனது சுயசரிதையை அல்லது தனது காலத்தில் நடந்த முக்கிய அரசியல் சந்திப்புகள் பற்றி ஒரு நூலை வெளியிட முன்வர வேண்டும். – என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2023/196776/




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.