Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suma-shritharan.jpg?resize=700,375&ssl=1

தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கான போட்டியில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் தலைமைப் பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை கட்சியின் தற்காலிக செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திடம் கையளித்துள்ளனர்.

சுமந்திரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து, சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேநேரம், சிறிதரனை தலைவருக்கான வேட்பாளராக முன்மொழிந்து குருகுலராஜா, வேழமாலிகிதன், விஜகுமார், உள்ளிட்ட 6 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போது, திருகோணமலையில் இடம்பெறும் அடுத்த பொதுச்சபை கூட்டத்தில் தலைவர் தெரிவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

https://athavannews.com/2023/1361588

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதரன் வென்று சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும். அரசியல் ஞானம் அற்ற சுமந்திரன் இதட்கு பொருத்தமானவர் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Cruso said:

ஸ்ரீதரன் வென்று சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும். அரசியல் ஞானம் அற்ற சுமந்திரன் இதட்கு பொருத்தமானவர் இல்லை. 

இங்கிலீசு இல்லை என்று கொஞ்சம் கிளம்புமே ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இங்கிலீசு இல்லை என்று கொஞ்சம் கிளம்புமே ?

அதுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து கொள்ளலாம். தலைவரே அப்படித்தானே நடந்து கொண்டார். வேணுமென்றால் செல்வம் அடைக்கலநாதனை வைத்துக்கொள்ளலாம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Cruso said:

அதுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து கொள்ளலாம். தலைவரே அப்படித்தானே நடந்து கொண்டார். வேணுமென்றால் செல்வம் அடைக்கலநாதனை வைத்துக்கொள்ளலாம். 😜

உங்களுக்கு விளங்கிறது  அங்குள்ள வர்களுக்கு விளங்கணுமே ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Cruso said:

அதுக்கு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து கொள்ளலாம். தலைவரே அப்படித்தானே நடந்து கொண்டார். வேணுமென்றால் செல்வம் அடைக்கலநாதனை வைத்துக்கொள்ளலாம். 😜

பிறகு செல்வத்துக்கு மொழி பெயர்ப்பாளர்??😝

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

பிறகு செல்வத்துக்கு மொழி பெயர்ப்பாளர்??😝

 உண்மையாகவே இப்போது யார் தலைவர் என்று எனக்கு தெரியவில்லை. மாவையா இல்லை சம்பந்தரா? அப்படி மாவை என்றால் அவருக்கு யார் மொழிபெயர்ப்பாளர்? 

45 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு விளங்கிறது  அங்குள்ள வர்களுக்கு விளங்கணுமே ?

இல்லை. அவரை நல்ல ஒரு அரசியல் ஞானியாக மாற்றலாம் என்று தீர்மானித்து விடடார்களோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமையை தெரிவு செய்வோம் - மாவை சேனாதிராஜா

1638119194-mavai-senathirajah-2.jpg

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் விண்ணப்பங்களைச் செய்துள்ளனர். ஆரம்பத்திலிருந்தே புதிய தலைமைக்கான தெரிவானது வாக்கெடுப்பின்றி நடைபெறவேண்டும். அதுவே கடந்த காலங்களில் சம்பிரதாயமாக இருந்து வருகின்றது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜா தற்போது தலைமைக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசுக்கட்சிக்கான புதிய தலைமையானது எதிர்வரும் மாதம் நடைபெறுவதற்கு திட்டமிட்டுள்ள பொதுச்சபையின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளது. இதற்காக எமது கட்சியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் விண்ணப்பங்களை செயலாளரிடத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

என்னைப்பொறுத்தவரையில், எனது அரசியல் வாழ்க்கையில் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டிகள் காணப்பட்டாலும் எப்போதும் வாக்கெடுப்பு வரையில் சென்றதில்லை. அவ்விதமான நிலைமைகள் சில வேளைகளில் கட்சியை கூறுபோடுவதற்கு வழிவகுக்கும் நிலைமைகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளன. 

ஆகவே, தலைமைப்பதவிக்கான தெரிவின்போது, வாக்கெடுப்பின்றி சுமூகமான அடிப்படையில் தெரிவினை நிறைவு செய்வதை நோக்காக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். 

விசேடமாக, தலைப்பதவிக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களிடையே இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய தலைமையை தெரிவு செய்யும் அதேநேரம் அந்த தலைமையின் கீழ் கட்சி மேலும் வலுவாக தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் காத்திரமான பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கும் என்பதே நோக்கமாக உள்ளது என்றார்.

மாவைக்கு புதிய பதவி

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தற்போதைய தலைமைப்பதவியை இழக்கும் பட்சத்தில் அவருக்கு தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் என்ற பதவி வழங்கப்படுவதோடு அவரே கட்சியின் ஏழுபேர் கொண்ட அரசியல்குழுவிற்கும் தலைமையை வகிக்கும் வகையிலான ஏற்பாடொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைந்தே பயணிப்போம் என்கிறார் சுமந்திரன்

அதேநேரம், எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு இருவர் மட்டும் தான் போட்டியிடுகின்றார்கள் என்பது தவறானது என்றும், ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் பலர் தலைமைத்துவத்தை வகிக்கவல்லவர்களாக உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 

அதுமட்டுமன்றி, தற்போதைய நிலையில் இருவர் விண்ணப்பங்களைச் செய்துள்ள நிலையில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு நிறைவடைந்த பின்னர் பொதுச்சபை உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்கு அமைவாக தெரிவு செய்யப்படும் தலைமையுடன் இணைந்த பயணம் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

எனினும், சிவஞானம் சிறீதரன், கட்சித்தலைமைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பித்ததன் பின்னர் டில்லிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில், அவர் இந்த விடயம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடுவதற்கு சாத்தியமான நிலைமைகள் காணப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
https://www.battinews.com/2023/12/blog-post_67.html

  • கருத்துக்கள உறவுகள்

இருவருமே தமிழரசுக்கட்சியின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள். சுமத்திரனுக்கு ஆளுமை இருக்கிறது. ஆனால் இனநலன்சார்ந்த சிந்தனையோ ஏனையோரை அரவணைத்துச் செல்லும் பக்குவமோ அற்றவர். சிறிதரன் பாம்புக்கு வாலும் மீனுக்குத்தலையும் காட்டக்கூடியவர். அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். இருவரில் ஒருவர்தான் என்றால் சிறதரனே எனது தெரிவு. சுமத்திரன் தலைவராக வந்தால் கட்சி மேலும் பிளலவுபடும்.சுமத்திரன் சிறிதரன் என்று வரும் போது சிறிதரனே அனத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனும், தொப்பியை எறிய வேணும்!! 👍

  • கருத்துக்கள உறவுகள்

தலைமைத்துவப் போட்டி என்பது இலங்கைத் தமிழர்கள்  இந்தியாவின் தலைமையை ஏற்பதா அல்லது மேற்குலகின் தலைமையை ஏற்பதா என்பதுதான்.  

இதில் சிறீதரன்ஹிந்துத்துவ+அகண்ட பாரத ideology ஐக் கொண்ட RSS இந்தியாவின் பிரதிநிதி, சுமந்திரன்  மேற்குலகின் பிரதிநிதி. 

இங்கே நாம்  எந்த அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எமது நலன்களை அடையப்போகிறோம் என்பதுதான் கேள்வி. 

😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

எமது சொந்த நலன்களை எங்கே நாம்  அடைந்தோமோ.இலங்கையில் உள்ள தமிழாகள் எங்கே தங்களது நலன்களை பெறமுடியும் என்று  செல்வதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்து இருக்கிறார்களோ அதே மேற்குலக நாடுகளின் உதவிகளுடன் தான் தமிழர்கள் நலன்களை அடையமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனைப் பிடிக்காது விடினும் ஸ்ரீதரன் இதற்க்குப் பொருத்தமானவர் இல்லை. பொது அறிவு குறைந்த அகன்ற சிந்தனை அற்ற குறுகிய வட்டத்துக்குள் சிந்திக்கும் ஒருவர். செத்த வீடுகளுக்கும் சாமத்தியச் சடங்குகளுக்கும் மட்டுமே போய் வாக்கரசியல் செய்பவர் ஸ்ரீதரன். ஸ்ரீதரன்க்கு சுமத்திரனே மேல். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

ஒரு அரசியல்வாதி தலைமைத்துவத்துக்கு சில பண்புகள் இருக்க வேண்டும். ஊழல்  நடந்தால் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். உண்மையை பேச கூடாது. சரியோ பிழையோ இனத்துக்காக பேச வேண்டும். பொய் சொல்ல தயங்க கூடாது. ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும். இப்படியான நல்ல குணாதிசயங்கள் இருக்க வேண்டும்.

சுமந்திரனுக்கு இந்த குணாதிசயங்கள் இல்லை. அரசியயல் அறிவு இருந்தாலும் அரசியல் ஞானம் இல்லை. எனவே இவர் இதட்கு பொருத்தமற்றவர். ஸ்ரீதரனுக்கு மேட்க்கூறிய எல்லா தகமைகளும் இல்லாவிடடாலும் சுமந்திரனை விட ஒரு படி மேலேதான் இருக்கிறார். எனவே ஸ்ரீதரன்தான் பொருத்தமானவர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

ஸ்ரீதரன்க்கு சுமத்திரனே மேல்

ஆனால் நீங்கள் இங்கே ஒரு திரியில் நீண்ட கருத்து எழுதி, ஈழத்தமிழர் அபிலாசைகளை காயடிக்கும், புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவ, வெள்ளாள, ஆர்னோல்ட்-ஸ்பென்சர்-ஹூல்-கதிர்காமர்- வழியில் அல்லவா சுமந்திரனும் வருகிறார்?

நீங்கள் அன்று இந்த தமிழ் கிறிஸ்தவ குடும்பங்களை பற்றி பொதுமை படுத்தி எழுதியது உண்மையாகின், சுமந்திரனை விட சைவப்பழமாக தெரியும் சிறீதரன் நல்லம் இல்லையா?

எனது நிலைப்பாடு

முறிந்த விளக்குமாத்துக்கு குஞ்சம் சிவப்பில் கட்டினால் என்ன பழுப்பில் கட்டினால் என்ன.

சிறிதரன் - இந்தியா கவுஸ் போய் பஜ்ஜி சாப்பிடுவார்.

சுமந்திரன் - ஒட்டாவா பாராளுமன்றின் வெளியே நிண்டு டூரிஸ்ட் போட்டோ எடுத்து விட்டு, இராதந்திர சந்திப்பு என பீலா விடுவார்.

இரெண்டுமே வேஸ்டு பீசு.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அப்படி என்றால்  உங்கள் தெரிவையும் கூறிவிடுங்கள். தலைமையிடம் பேசி பார்க்கலாம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

சாணக்கியனும், தொப்பியை எறிய வேணும்!! 👍

சாணக்கியனின் ஆதரவு சுமந்திரனுக்குத் தான்.

எனவே கிழக்கு ஆதரவும் சுமந்திரனுக்கே.

சுமந்திரன் தான் அடுத்த தலைவர்.

7 hours ago, Kapithan said:

இதில் சிறீதரன்ஹிந்துத்துவ+அகண்ட பாரத ideology ஐக் கொண்ட RSS இந்தியாவின் பிரதிநிதி, சுமந்திரன்  மேற்குலகின் பிரதிநிதி. 

West is better than RSS.

1 hour ago, goshan_che said:

இரெண்டுமே வேஸ்டு பீசு.

விருப்பமோ இல்லையோ

இருவரில் ஒருவர் தானே வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அவசரம் தைப்பொங்கலுக்கு நல்ல செய்தியை எதிர்பார்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

அப்படி என்றால்  உங்கள் தெரிவையும் கூறிவிடுங்கள். தலைமையிடம் பேசி பார்க்கலாம். 😜

யாழில் அண்மையில்,  இலங்கயில் புலம் பெயர், இரெட்டை குடியுரிமை தமிழர் நாடு திரும்பி அரசியல் செய்ய அனுமதிக்க போகிறார்கள் என ஒரு புல்டோ, போண்டா கஞ்சா, கப்ஸா கதை ஒண்டு அவிழ்த்து விடப்பட்டது.

அதை நம்பி இன்னொரு உறவு தனக்கும் அப்படி அரசியல் செய்யும் யோசனை உள்ளதாக எழுதினவர்.

அவர் போல பலர் ஊரிலேயே இருக்க கூடும்.

சூரி கணக்கு போல் சிலேட்டை அழித்து விட்டு ஆரம்பித்து பார்க்கலாம் என நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

West Vs. India போட்டியில் சம்பந்தர் உயிரோடு இருப்பதைப் பலர்  மறந்தே விட்டனர். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2023 at 02:27, nunavilan said:

பிறகு செல்வத்துக்கு மொழி பெயர்ப்பாளர்??😝

இப்படியே அடுத்தடுத்து பல  மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து கடைசி மொழி பெயர்ப்பளராக கூகிளை நியமித்தால் வேலைவாய்பை அதிகரிக்கலாம் தானே. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

செயலாளர் பொருளாளர் பதவி தங்களுக்கு தேவை என கிழக்கு மாகாணத்தார் கேட்க்கின்றனர் 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2023 at 20:19, பெருமாள் said:

இங்கிலீசு இல்லை என்று கொஞ்சம் கிளம்புமே ?

சிறீதரன் முன்பு பாடசாலை அதிபராக கிளிநொச்சியில் பணியாறினாராம். பாடசாலை அதிபர் என்றால் கிஞ்சித்தாவது இங்கிலீசு பரீட்சயம் ஆகத்தானே வேண்டும்?

On 3/12/2023 at 14:26, Kapithan said:

தலைமைத்துவப் போட்டி என்பது இலங்கைத் தமிழர்கள்  இந்தியாவின் தலைமையை ஏற்பதா அல்லது மேற்குலகின் தலைமையை ஏற்பதா என்பதுதான்.  

இதில் சிறீதரன்ஹிந்துத்துவ+அகண்ட பாரத ideology ஐக் கொண்ட RSS இந்தியாவின் பிரதிநிதி, சுமந்திரன்  மேற்குலகின் பிரதிநிதி. 

இங்கே நாம்  எந்த அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எமது நலன்களை அடையப்போகிறோம் என்பதுதான் கேள்வி. 

😁

சிறீதரன் இந்தியாவின் பிரதிநிதியா? அப்படி என்றால் றோவின் விளையாட்டுக்களை சிறீதரன் தலைமை ஏற்றால் தாராளமாக காணலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயம் said:

சிறீதரன் இந்தியாவின் பிரதிநிதியா? அப்படி என்றால் றோவின் விளையாட்டுக்களை சிறீதரன் தலைமை ஏற்றால் தாராளமாக காணலாம்?

கம்பீரமாக வெள்ளை வேட்டி சேட்டுடன் காட்டியளித்த சிறீதரன் தற்போது காவியுடன் காட்சிதருவது எதனால் என்று நினைக்கிறீர்கள்? 

இந்தியாவின் தற்போதைய அவசர  தேவை இந்திய பார்ப்பனீயத்திற்கு ஈடாக இலங்கையில்இ ந்துத்துவாவைத் தூக்கிப்பிடிக்கக் கூடிய, தனது சொல் கேட்கக்கூடிய  ஒரு தலைமை.

ஆனால் அந்தத் தலைமை வடக்கு கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்தவும் வேண்டும். தனது சொல்லைக் கேட்கவும் வேண்டும். 

அம்புட்டுதே.  

😉

4 hours ago, ரதி said:

செயலாளர் பொருளாளர் பதவி தங்களுக்கு தேவை என கிழக்கு மாகாணத்தார் கேட்க்கின்றனர் 

நீங்கள் கேட்கிறீர்களா அல்லது கிழக்கு மாகாணத்தினர் கேட்கின்றார்களா? 

(வாய் சும்மதானே இருக்குது அதுதான்,.......😃)

12 hours ago, island said:

இப்படியே அடுத்தடுத்து பல  மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து கடைசி மொழி பெயர்ப்பளராக கூகிளை நியமித்தால் வேலைவாய்பை அதிகரிக்கலாம் தானே. 😂😂

சிறீதரன்  Google இருக்கிற துணிவில் போட்டியில் இறங்கியிருப்பார்,.   ......🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

செயலாளர் பொருளாளர் பதவி தங்களுக்கு தேவை என கிழக்கு மாகாணத்தார் கேட்க்கின்றனர் 

நிச்சயமாக அங்கும் ஒரு முக்கிய பதவி கொடுக்கப்பட வேண்டும். அதில் ஏதும் பிரச்சினை இருக்காது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.