Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு ராமநிக்காய பீடத்தினரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினர்.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் கொழும்பு ராமநிக்காய பீடத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பில் நேற்றையதினம்(10.12.2023) இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தாம் மேற்கொண்டுள்ள மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலை திட்டம் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சு,சுரேந்திரன்,

இமயமலை பிரகடனம்

இலங்கையிலுள்ள நான்கு பௌத்த பீடங்களில் ஒன்றாகிய ராமநிக்காய பீடத்தினரை உலகத் தமிழர் பேரவையினரும் பௌத்த பிக்குமார் அடங்கிய குழுவினரும் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.

சந்திப்பில் எம்மால் தயாரிக்கப்பட்ட இமயமலை பிரகடனத்தினையும் கையளித்தோம். குறித்த சந்திப்பில் ராமநிக்காய பீடத்தின் துணைப் பொதுச் செயலாளர் ராமநிக்காய பீடம்தம்மவன்ச தேரர் கலந்துகொண்டு எமக்கு ஆசீர்வாதமும் தந்தார்.

கொழும்பு ராமநிக்காய பீடத்தினரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினர்(Photos) | Gtf Met The Members Of The Rama Nikaya Peetha

அதாவது சந்திப்பில் அவர்கள் தெரிவித்த கருத்து என்னவென்றால் இலங்கையில் அனைவரும் சமம் என்ற ஒரு நிலை ஏற்படும் போதுதான் இலங்கையில் பொருளாதார மேம்பாடு மற்றும் ஏனைய விடயங்களில் மேம்பாடு ஏற்படுவதற்கு சாத்திய கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கையில் குறிப்பாக சமாதானம் சமதர்மம் நல்லிணக்கம் என்பன அனைவரும் சமம் என ஏற்கப்பட்டால் மாத்திரமே ஏற்படும்.

எனவே மக்கள் மயப்படுத்தப்படுகின்ற இந்த வேலை திட்டத்திற்கு தாங்கள் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் மக்கள் மத்தியில் இந்த வேலை திட்டம் மேற்கொள்ளப்படும் வெற்றியளிக்கு மென தெரிவித்ததோடு தமக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது” என்றார்.

https://tamilwin.com/article/gtf-met-the-members-of-the-rama-nikaya-peetha-1702233736

23-65760ff7eaf08.webp

23-65760ff8744df.webp

23-65760ff8dc3b4.webp

  • Replies 131
  • Views 11.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட

  • குமாரசாமி
    குமாரசாமி

    எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது.   ஒரு சில பல இடங்களில்  நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  • ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இரு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

யாரெல்லாம் இந்தியாவுக்குகாவடி தூக்குகின்றனரோ அவர்கள் பங்கெடுக்கும் பேச்சுவார்தைகளால் எந்தப் பயனும் கிடையாது . ஆகவே அவர்கள் பங்குபெறத்தேவையில்லை. இது பட்டறிவு.

100%

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொழும்பு ராமநிக்காய பீடத்தினரை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினர்.

சரி சந்திக்கட்டும். இனி நடக்கப்போறதையும் சொல்லட்டும். எங்கடை பனங்கொட்டை காவியள் மாதிரி அறிக்கை விட்டு இருக்கிற கொஞ்ச நஞ்ச சனத்தையும் கொல்லாமல் விட்டால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

தமிழ் மக்களின் பலவேறு அமைப்புக்கள் இவ்வாறு சிங்கள மக்களுக்குள் இயங்கும் பலவேறு அமைப்புகளை சந்திப்பது உடனடி நன்மைகளை தராமல் விட்டாலும்  நீண்ட காலத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்த வல்லது. ஆகவே தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் இவ்வாறு தொடர்சசியான சந்திப்புகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. 

இனத்தை எப்படி அழித்தொழிப்பது என்று நன்கு திடடமிட்டு செயல்படுபவன் 
பொருளாதார சிக்கல் சொந்த சிக்கல் வரும்போது அதை இடை இடையே மறந்துவிடுவான் 

நாங்கள்தான் அடிக்கடி போய் அவனுக்கு நினைவுபடுத்தவேண்டும் 
அப்பத்தான் ஓ இதை வேற நான் மறந்துவிட்டேன் என்று தொடர்வதுக்கு ஏதாவது செய்துகொண்டு இருப்பான் 

  • கருத்துக்கள உறவுகள்

1686107911-gajendrakumar-ponnambalam-2.j

வெள்ளையடிப்பு செய்த உலக தமிழர் பேரவை : கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு!

சிங்கள பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றில் கையொப்பமிட்டதை அடுத்து உலக தமிழ் பேரவையுடனான சந்திப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்துள்ளது.

மாவீரர் நினைவேந்தலின் போது அரசாங்கம் மக்கள் மீது மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கட்டவிழ்த்து விட்டதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

இந்த பின்னணியில், அரசாங்கத்திடம் பிரகடனத்தை கையளித்தமையானது வெள்ளையடிப்பு செயற்பாடு என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக தாயகத்தில் உலக தமிழ் பேரவை எவருடனும் கலந்தாலோசிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு பயணம் செய்துள்ள உலக தமிழர் பேரவை உறுப்பினர்களை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1362684

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர் பேரவைக்கு ரெலோ கண்டனம்!

262319361.jpeg

ஆதவன்.

உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பிக்குகளுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை கொச்சைப்படுத்தும் முகமாக முன்னெ டுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் - இவ்வாறு ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்;

தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு கலந் துரையாடாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல், தன்னிச்சையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனைக் குரியது. புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத்தம்மைக்காட்டிக்கொண்டு எமது ஒட்டுமொத்த அரசியல் அபிலா ஷைகளையும் தவறாக வழி நடத்திச்செல்லும் இந்த நடவடிக்கையை நாங் கள் நிராகரிக்கிறோம்.

அவர்கள் முன்வைத்திருக்கும் பிரகடனத் திலே மாகாணங்களுக்கான அதிகாரங்களைப் பகிர்வதற்கே புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று கூறி 6 இருப்பது வேடிக்கையானது. அது மாத் திரமல்ல தமிழ் மக்களுடைய அரசியல் இலக்கையே புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஒருசிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்க ளுக்காக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மலினப்படுத்தும் நட வடிக்கைகளில் புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் ஈடுபடவேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைப்பதோடு. கண்டனத்தையும் பதிவு செய்து கொள்கிறோம் - என்றுள்ளது. 
 
https://newuthayan.com/article/உலகத்_தமிழர்_பேரவைக்கு_ரெலோ_கண்டனம்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக தாயகத்தில் உலக தமிழ் பேரவை எவருடனும் கலந்தாலோசிக்கவில்லை

3 hours ago, கிருபன் said:

தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு கலந் துரையாடாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல், தன்னிச்சையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது வேதனைக் குரியது.

பிக்குகளை சந்திக்கும்  அளவுக்கு தமிழ் மக்களை பிரநிதித்துவம் செய்பவர்களை மதிக்காதது கண்டனத்துக்கு உரியது.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2023 at 08:19, ஈழப்பிரியன் said:

மேலும் இந்த சந்திப்பில் அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இமயமலைப் பிரகடனத்தை எல்லோருக்கும் திறந்து காட்டுகிறார்கள்.

ஆனால் தமிழர்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?

யாருக்காவது தெரிந்தால் இந்தப் பிரகடனத்தில் என்னதான் உள்ளது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பௌத்த பேரினவாதத்தின் முதுகெலும்பாக விளங்கும் பிக்குகளை யாழ்ப்பாணம் அழைத்து, அவர்களோடு சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொண்ட எமது விடுதலை இயக்கம் சமாதான நல்லெண்ணத்துக்கு சிறிலங்கா அரசை வற்புறுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த இமயமலைப் பிரகடனத்தை எல்லோருக்கும் திறந்து காட்டுகிறார்கள்.

ஆனால் தமிழர்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?

யாருக்காவது தெரிந்தால் இந்தப் பிரகடனத்தில் என்னதான் உள்ளது ?

https://www.tamilguardian.com/sites/default/files/Image/pictures/2023/Sri Lanka/231208 GTF Ranil/FINALHimalaya Declaration - English with signatories and titles with the date.pdf

👆இமயமலைப் பிரகடனத்தை 2023 ஏப்ரல் மாதமே தமிழ் கார்டியன் திறந்து காட்டி விட்டது.

பொது மக்கள் அறியாமல் இருப்பது பரவாயில்லை. "பரிஸ்ரர்" பொன்னம்பலமும், ரெலோவின் பேச்சாளரும்  உள்ளடக்கம் அறியாமல் இருக்கிறார்கள் பாருங்கள்? அங்கே தான் நிக்கீனம் எங்கள் "தமிழ் தேசிய கிச்சு கிச்சு மூட்டித்" தலைவர்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தகவலுக்கு நன்றி ஜஸ்ரின்.

இதன் தமிழாக்கம் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2023 at 08:46, தமிழ் சிறி said:

IMG-20231209-WA0042.jpg?resize=750,375&s

யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்

குறித்த சந்திப்பு தொடர்பில், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவிக்கையில்,

யாழ் மறைமாவட்ட ஆயரை இன்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து, அவருக்கு நாங்கள் மேற்கொள்ள உள்ள வேலை திட்டம் தொடர்பில் விரிவாக விளங்கப்படுத்தினோம்.

எமது திட்டத்தினை நல்ல ஒரு திட்டம் இதை தான் வரவேற்பதாக தெரிவித்த ஆயர், மக்கள் மயப்படுத்தப்பட்ட திட்டத்தினை தாம் எப்போதும் வரவேற்போம், மேன்மேலும் இந்த விடயத்தினை தொடர்ச்சியாக செயற்படுத்துமாறு, ஆயர் எம்மிடம் கோரினார் என தெரிவித்தார்.

IMG-20231209-WA0047.jpg?resize=600,280&s

IMG-20231209-WA0042.jpg?resize=600,280&s

IMG-20231209-WA0044.jpg?resize=600,280&s

https://athavannews.com/2023/1362665

புத்தபிக்குகள்.  அது தான் மொட்டைகள். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கிறார்களா ?? 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி ஜஸ்ரின்.

இதன் தமிழாக்கம் இல்லையோ?

வேறெங்கும் தமிழில் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன் - 6 அம்சப் பிரகடனம்:

1. நாட்டின் பன்முகத்தன்மையை, எந்த ஒரு சமூகமும் தன் கௌரவத்தை இழக்காத வகையில் காக்கவும், முன்னேற்றவும் வேண்டும்.

2. பொருளாதாரப் பிரச்சினையைப் பொருத்தமான ஒரு அபிவிருத்தி மாதிரி மூலம் தீர்க்க வேண்டும் - உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், புலம்பெயர்ந்த இலங்கையரின் முதலீடு,நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வளர் திசையில் வைத்திருத்தல், நாட்டை ஒரு மத்திய தர வருமானமுள்ள நாடாக மாற்றுதல்.

3. ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் - அந்த அரசியலமைப்பு தனி மனித, சமூக உரிமைகளை முன்னேற்றி, சமத்துவம், சம பிரஜாவுரிமை என்பவற்றை மக்களிடையே பேண வேண்டும். நிர்வாக அமைப்புகளின் பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும். மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அப்படியொரு அரசியலமைப்பு வரும் வரை, தற்போதிருக்கும் அரசியமைப்பின் படி இதய சுத்தியோடு அதிகாரப் பகிர்வின் அலகுகளை அமல் படுத்த வேண்டும்.

4. பிரிக்கப் படாத, ஐக்கியமான ஒரு நாட்டின் கீழ் அதிகாரங்களைப்  பகிர்ந்தளிக்க வேண்டும். மத, இன, கலாச்சார மற்றும் வேறு அடையாளங்களை ஏற்றுக் கொண்டு, மதித்து இன மதக் குழுக்களிடையேயானா புரிந்துணர்வை உருவாக்க வேண்டும்.

5. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொண்டு, பொறுப்புக் கூறி, சமாதானமாகி, எதிர்காலத்தில் இத்தகைய துன்பங்கள் மீள நிகழாமல் உறுதி செய்யும் ஒரு இலங்கையை இலக்கில் நிறுத்த வேண்டும்.

6. இரு தரப்பு மற்றும் பல் தரப்பு சர்வ தேச ஒப்பந்தங்களை மதித்து சுதந்திரமான, செயலூக்கமான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து, உலகின் சமாதானம் நிலவும் ஜனநாயக நாடுகளின் வரிசையில் இலங்கை இணைய வேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, island said:

தமிழ் மக்களின் பலவேறு அமைப்புக்கள் இவ்வாறு சிங்கள மக்களுக்குள் இயங்கும் பலவேறு அமைப்புகளை சந்திப்பது உடனடி நன்மைகளை தராமல் விட்டாலும்  நீண்ட காலத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்த வல்லது. ஆகவே தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் இவ்வாறு தொடர்சசியான சந்திப்புகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது. 

வெறும் கையுடன். போய் சந்திக்க முடியுமா ?? அப்படியென்றால் போய் கோப்பி தேனீர்  மற்றும் சிற்றுண்டிகள். வயிறுயாற. அருந்தி கதைக்கலாம்   😂😂...தமிழனை வெட்டுவோம்.  என்பதையும்  இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்  இந்தியாவுக்கு ஒடுங்கள்   இது சிங்களவர் நாடு என்பதையும் மிக இலகுவாக மறந்து விட்டீர்கள்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

வெறும் கையுடன். போய் சந்திக்க முடியுமா ?? அப்படியென்றால் போய் கோப்பி தேனீர்  மற்றும் சிற்றுண்டிகள். வயிறுயாற. அருந்தி கதைக்கலாம்   😂😂...தமிழனை வெட்டுவோம்.  என்பதையும்  இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்  இந்தியாவுக்கு ஒடுங்கள்   இது சிங்களவர் நாடு என்பதையும் மிக இலகுவாக மறந்து விட்டீர்கள்   🙏

தீர்மாங்களை சட்டவாக்கம் செய்வதிலேயே இலஙகை அரசியல் அமப்பில் சிக்கல் இருக்கிறது, அதனையும் தாண்டி அந்த சட்டம் அமுலாக்கம் செய்வதிலும் சிக்கல் உண்டு, அதற்கேற்ப வகையிலேயே இலங்கையின் அரசியல் முறை (விகிதாசார பிரதிநிதித்துவம் உள்ளடங்கலாக) உள்ளது.

உங்களது கருத்து மிக சாதாரணமான கேள்வி போன்று இருந்தாலும் மிகவும் ஆழமான நடைமுறை சாத்தியமற்ற (இலங்கையின் அரசியலில்) ஒரு மற்றுமோர் நடவடிக்கையாகவே இந்த இமயமலை பிரகடனமும் இந்த தரப்பின் சந்திப்பும் இருக்கும் என்பதனையே எதிர்வு கூறியுள்ளது.

ஆனால் முயற்சிப்பதில் தவறில்லைதானே?

39 minutes ago, Justin said:

வேறெங்கும் தமிழில் இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால், சுருக்கமாக கீழே தந்திருக்கிறேன் - 6 அம்சப் பிரகடனம்:

1. நாட்டின் பன்முகத்தன்மையை, எந்த ஒரு சமூகமும் தன் கௌரவத்தை இழக்காத வகையில் காக்கவும், முன்னேற்றவும் வேண்டும்.

2. பொருளாதாரப் பிரச்சினையைப் பொருத்தமான ஒரு அபிவிருத்தி மாதிரி மூலம் தீர்க்க வேண்டும் - உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், புலம்பெயர்ந்த இலங்கையரின் முதலீடு,நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வளர் திசையில் வைத்திருத்தல், நாட்டை ஒரு மத்திய தர வருமானமுள்ள நாடாக மாற்றுதல்.

3. ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் - அந்த அரசியலமைப்பு தனி மனித, சமூக உரிமைகளை முன்னேற்றி, சமத்துவம், சம பிரஜாவுரிமை என்பவற்றை மக்களிடையே பேண வேண்டும். நிர்வாக அமைப்புகளின் பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும். மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். அப்படியொரு அரசியலமைப்பு வரும் வரை, தற்போதிருக்கும் அரசியமைப்பின் படி இதய சுத்தியோடு அதிகாரப் பகிர்வின் அலகுகளை அமல் படுத்த வேண்டும்.

4. பிரிக்கப் படாத, ஐக்கியமான ஒரு நாட்டின் கீழ் அதிகாரங்களைப்  பகிர்ந்தளிக்க வேண்டும். மத, இன, கலாச்சார மற்றும் வேறு அடையாளங்களை ஏற்றுக் கொண்டு, மதித்து இன மதக் குழுக்களிடையேயானா புரிந்துணர்வை உருவாக்க வேண்டும்.

5. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொண்டு, பொறுப்புக் கூறி, சமாதானமாகி, எதிர்காலத்தில் இத்தகைய துன்பங்கள் மீள நிகழாமல் உறுதி செய்யும் ஒரு இலங்கையை இலக்கில் நிறுத்த வேண்டும்.

6. இரு தரப்பு மற்றும் பல் தரப்பு சர்வ தேச ஒப்பந்தங்களை மதித்து சுதந்திரமான, செயலூக்கமான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து, உலகின் சமாதானம் நிலவும் ஜனநாயக நாடுகளின் வரிசையில் இலங்கை இணைய வேண்டும்.   

ஜஸ்ரின் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமா?  எவ்வாறான அழுத்தம் மூலம் இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம்?  உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஜஸ்ரின் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமா?  எவ்வாறான அழுத்தம் மூலம் இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம்?  உங்கள் கருத்து என்ன?

//ஜஸ்ரின் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுமா?//

ஓம் அல்லது இல்லையெனப் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. இது ஒற்றைத் தீர்மானம் அல்ல, பல தீர்மானங்கள், இலக்குகளின் தொகுப்பு - எனவே எல்லாம் நடை முறையாகாது என உறுதியாகச் சொல்ல முடியும்😎.  பொருளாதாரம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஏற்கனவே  உள்ளூர் தமிழ் தலைமைகளாலும், புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளாலும் முன் மொழியப் பட்ட மாற்றங்கள் தான் - எனவே இதில் யாரும் எதிர்க்க, அதிர்ச்சி கொள்ள எதுவும் புதிதாக இல்லை!

திட்டமிடல் பாசையில் இது போன்ற பிரகடனத்தை blue print அல்லது high-level summary என்று சொல்வார்கள். ஒவ்வொரு இலக்கினுள்ளும்  பல செயல்கள் (action items) உள்ளடங்கியிருக்கும். அந்த செயல்கள் நடை பெறுமா என்பதைப் பொறுத்தே இலக்கு தப்பும் அல்லது தாழும்!

(இந்த இலக்குகளை செயல் பட்டியலாக வகைப்படுத்தும் முயற்சியைத் தான் கோசான் "ஈழத்தமிழர் அபிலாசைகள்" என்ற திரியில் செய்ய முயன்றார் என நினைக்கிறேன். பின்னர் அதை யார் பொறுப்பெடுத்தார்கள் என அறியேன்!)

அழுத்தம்? இலங்கை அரச தரப்பு வெளி அழுத்தங்களால் பணியவைக்கப் பட முடியாத சில தகைமைகளைக் கொண்டிருக்கிறது. எனவே, moderate optimism!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

👆இமயமலைப் பிரகடனத்தை 2023 ஏப்ரல் மாதமே தமிழ் கார்டியன் திறந்து காட்டி விட்டது.

ஆனால் இந்த இமயமலைப் பிரகடனத்தை யாரும் சிலாகித்துப் பேசியதாகத் தெரியவில்லை. துவாரகாவின் மாவீரர் உரை அளவுக்குக் கூட தமிழ் ஆய்வாளர்களோ அல்லது  பத்திரிகையாளர்கனோ அது பற்றிப் பேசவில்லை. நாட்டுநடப்புகளை நீண்டகாலமாக அவதானித்து வரும் எனக்கு உலகத்தமிழ்ப் பேரவை சரேன் சிறிலங்காவுக்குச் சென்ற பின்னர்தான் இந்த இமயமலைப் பிரகடனம் தெரிய வந்தது. திம்புப் பிரகடனம் இந்தோ சிறிலங்கா பிரகடனம்>ஒஸ்லோப்பிரகடனம் எல்லாம் உடனே தெரிய வந்த மாதிரி என் இந்தப் பிரகடனம் தெரியவில்லை. இந்த இமயமலைப்பிரகடனம் ஏதாவது தமிழ்ப்பத்திரிகையிலோ அல்லது தமிழ் இணையத்தளத்திலோ வந்திருப்பதாக நான் அறியவில்லை.வேறுயாராவது அறிந்திருக்கிறீர்களா?.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

இது இரணிலை பிணையெடுக்க ..இமனுவேல் அடிகளரின் இரட்டை வேசம்...இலண்டன் காரருக்கு வருட இருதி இன்பச் சுற்றுலா....இமயம் கிருபாவின்  இமாலயச்சாதனை... அவர் இனி ஐ.நா.சபை போகமாட்டார்...நல்லூருக்கு விசிட் அடிப்பார்...நாட்டில் அல்லல் படும் சனம்..இன்னும் கூட அல்லல்படும்..அவ்வளவுதான்.. இதுதான் இமையமலைப் பிரகடனம்..

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, alvayan said:

இமயமலை பிரகடனம் என்பதன் அர்த்தம் அடைவது சிரமம் என்பதா? அல்லது மிகவும் உயர்தரமான தீர்வு என்பதா?

10 hours ago, Justin said:

https://www.tamilguardian.com/sites/default/files/Image/pictures/2023/Sri Lanka/231208 GTF Ranil/FINALHimalaya Declaration - English with signatories and titles with the date.pdf

👆இமயமலைப் பிரகடனத்தை 2023 ஏப்ரல் மாதமே தமிழ் கார்டியன் திறந்து காட்டி விட்டது.

பொது மக்கள் அறியாமல் இருப்பது பரவாயில்லை. "பரிஸ்ரர்" பொன்னம்பலமும், ரெலோவின் பேச்சாளரும்  உள்ளடக்கம் அறியாமல் இருக்கிறார்கள் பாருங்கள்? அங்கே தான் நிக்கீனம் எங்கள் "தமிழ் தேசிய கிச்சு கிச்சு மூட்டித்" தலைவர்கள்😂!

அப்படி சொல்ல முடியாது. அவர்கள் அதை அறிந்தும் அறியாதது போல நடிக்கிறார்களா? அரசியல்வாதிகள் இப்போது எல்லாவற்றிலும் அரசியல் செய்வதின் விளைவுதான் இது.

டெலோ தலைவருக்கு எதுவும் விளங்காது, எனவே அவரது பேச்சாளர் சுரேந்திரன் சொல்லுவதை கேட்டுக்கொண்டு இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

ஆனால் இந்த இமயமலைப் பிரகடனத்தை யாரும் சிலாகித்துப் பேசியதாகத் தெரியவில்லை. துவாரகாவின் மாவீரர் உரை அளவுக்குக் கூட தமிழ் ஆய்வாளர்களோ அல்லது  பத்திரிகையாளர்கனோ அது பற்றிப் பேசவில்லை. நாட்டுநடப்புகளை நீண்டகாலமாக அவதானித்து வரும் எனக்கு உலகத்தமிழ்ப் பேரவை சரேன் சிறிலங்காவுக்குச் சென்ற பின்னர்தான் இந்த இமயமலைப் பிரகடனம் தெரிய வந்தது. திம்புப் பிரகடனம் இந்தோ சிறிலங்கா பிரகடனம்>ஒஸ்லோப்பிரகடனம் எல்லாம் உடனே தெரிய வந்த மாதிரி என் இந்தப் பிரகடனம் தெரியவில்லை. இந்த இமயமலைப்பிரகடனம் ஏதாவது தமிழ்ப்பத்திரிகையிலோ அல்லது தமிழ் இணையத்தளத்திலோ வந்திருப்பதாக நான் அறியவில்லை.வேறுயாராவது அறிந்திருக்கிறீர்களா?.

நீங்கள் சொன்ன பிரகடனங்கள் எல்லாம் யுத்த காலத்தில், தமிழர் பிரதிநிதிகளாக தரப்பொன்று (அல்லது சில) இருந்த காலத்தில் இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளின் விளைவாக வந்தவையாக இருந்ததால் உடனே கவனம் பெற்றன.

இது பேச்சு வார்த்தையின் முடிவுப் பிரகடனம் இல்லையல்லவா? எனவே யார் கவனிக்கப் போகிறார்கள்?

இப்போது கூட, பிரகடனத்தின் உள்ளடக்கத்தைச் சுட்டிக் காட்டிய பிறகும் அதைப் பற்றி எதுவும் பேசாமல், வேறெதையோ தானே பேசிக் கொண்டிருக்கிறோம்? முந்தியே தெரிந்திருந்தால் வித்தியாசமாக பேசியிருப்போம் என்கிறீர்களா? நான் நம்பவில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பினருடன் உலகத் தமிழர் பேரவையினர் சந்திப்பு

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உலகத் தமிழர் பேரவையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருன் கொழும்பில் விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்திருந்த உலகத் தமிழர் பரவையின் உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன் போது இமாலய பிரகடனம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த உலகத் தமிழர் பேரவையினர் மதத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தனர்.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் விசேட சந்திப்பை நடத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் எவையும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.samakalam.com/கூட்டமைப்பினருடன்-உலகத்/

  • கருத்துக்கள உறவுகள்

tna.jpg?resize=700,375&ssl=1

உலகத் தமிழர் பேரவையினர் சம்பந்தனுடன் விசேட சந்திப்பு!

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.

உலக தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவரான ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், பவான் பவகுகன், வேலுப்பிள்ளை குகனேந்திரன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி கண்ணப்பர் முகுந்தன், பிரகாஷ் ராஜசுந்தரம், கனடாவிலிருந்து ராஜ் தவரத்னசிங்கம், அமெரிக்காவிலிருந்து கலாநிதி ஜெயராஜா ஆகியோர் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தக் குழுவினர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கொழும்பில் அமைந்துள்ள சம்பந்தரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பௌத்த மதகுருமார்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது நாட்டில் சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, புலம்பெயர் மக்களின் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவருவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1362861

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் - சஜித் பங்காளிகள் சகிதம் கோரிக்கை.

ஆர்.ராம்

புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு 'புலம்பெயர் இலங்கையர்கள்' என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உலகத் தமிழர் பேரவையினரிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது, புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்தவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான முதல் படியே இமயமலை பிரகடனம் என்றும் உலகத் தமிழர் பேரவையினர் பதிலளித்துள்ளனர்.

உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியின் பங்காளிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. 

இதில், பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, ஏரான் விக்கிரமரட்ன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், திகாம்பரம், உதயகுமார், வேலுகுமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தௌபிக் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, உலகத் தமிழர் பேரவையினால் இமயமலை பிரகடனம் கையளிக்கப்பட்டதோடு, அதனை செயற்பாட்டு ரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கான ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.

மதிய போசன விருந்துபசாரத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பானது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவரது தலைமையிலான எதிரணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். 

இந்த நிலையில், அவருடனான உரையாடலின்போது, இமயமலை பிரகடனத்தை நான்கு பீடாதிபதிகளுக்கும் கையளித்து அவர்களிடமிருந்து ஆதரவினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டமையானது முக்கியமானதொரு விடயம் என்று சுட்டிக்காட்டினார். 

அத்தோடு குறித்த பிரகடனத்தின் உள்ளடகத்தில் காணப்படும் விடயங்களில் மூன்றில் இரண்டு பகுதியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஒருசில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் ஆழமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருப்பதாக கூறியதோடு, அதற்கான முன்னெடுப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் கூறினார்.

இதேநேரம், அவரைப் பொறுத்தவரையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதி செய்து அனைத்தின பிரஜைகளும் சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதே இலக்காக உள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த வகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு என்பது புலம்பெயர் இலங்கையர் அமைப்பு என்ற அடையாளத்தினையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று எம்மிடம் எதிர்பார்ப்பதாகவும், அதனை ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

அச்சமயத்தில், புலம்பெயர் இலங்கையர் என்றோ அல்லது உள்நாட்டில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கோ நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, அந்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு நீண்ட பயணம் அவசியமாக உள்ளது. அந்தப் பயணத்தின் முதல் கட்டமாகவே இமயமலை பிரகடனம் காணப்படுகிறது என்ற விடயத்தினை சுட்டிக் காண்பித்தோம் என்றார்.

இதனையடுத்து, குறித்த குழுவினர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் சந்தித்ததோடு அமரபுர நிக்காயவைச் சேந்த வல்பொல விமலஞான தேரர், மாகல்லே நாகித மகா தேரர் பேராசிரியர் கந்தேகொட விமலதம்மே மகா தேரர், வாஸ்கடுவ மஹிந்த வம்ச மகா தேரர், பள்ளிகந்தே இரத்தினசார மகா தேரர், நிந்தனே சந்தவிமல மகா தேரர் ஆகியோரையும் சந்தித்தனர். 

இதில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பின்போது, போர் உக்கிரமடைந்த காலத்தில் தான் போரை நிறுத்துவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதேபோன்ற மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், இருப்பினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனதாக கர்தினால் குறிப்பிட்டதாக அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.

அதேநேரம், கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தீர்மானங்கள், செயற்பாடுகளை ஏன் எடுத்திருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான அணுகுமுறையின் ஊடாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை எட்ட முடியும் என்று கருதியதாக பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார்.

தற்போது எம்மால் கையளிக்கப்பட்ட இமயமலை பிரகடனத்தினை அமுலாக்குவதற்கு பொருத்தமான சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக தான் ஆயர் பேரவையின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் மூன்றாவது கரமொன்று உள்ள நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைப்பதற்கு தான் முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அமரபுர நிக்காயவின் தேரர்களை கொட்டாஞ்சேனை திபதுதேமராமய தாய் விகாரையில் சந்தித்த உலகத் தமிழர் பேரவை தலைமையிலான குழுவினர், அங்கு பிரித் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். 

இதன்போது, நாட்டில் பிரிவினைவாத சிந்தனையை தோற்றுவித்து குழப்பங்களையும் பதற்றங்களையும் தோற்றுவிப்பது இலகுவானது. ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ்வதற்காக தீர்மானித்து முன்வருவது கடினமானதொரு பணியாகும். அந்தக் கடினமான பணியை உலகத் தமிழர் பேரவை முன்னெடுத்துள்ளமையை வரவேற்பதோடு, அந்த சிந்தனை மாற்றத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை நன்மைகளை அளிக்கும் முகமாக பயன்படுத்த வேண்டும் என்று தேரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்ற சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்தார்.

புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள் - சஜித் பங்காளிகள் சகிதம் கோரிக்கை | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.