Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 DEC, 2023 | 02:15 PM
image

சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் 54 வயதுடைய இங்கிலாந்து பிரஜையாவார்.

இவர் இங்கிலாந்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (22) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதியின்றி ஆயுதங்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ரிவோல்வர் துப்பாக்கி இவரது பாட்டி  இவருக்கு பரிசாக கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/172325

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா எயார் லைன்ஸ் பிரித்தானியாவில் வைச்சே இதை தடுத்திருக்கலாமே. காசுக்கு பார்த்தும் பார்க்காமலும் ஏத்திறது.. ஏத்திப் போட்டு கொழும்பில வைச்சு மிச்சம் மீதியை புடுங்கிறது.

சொறீலங்கா உல்லாசப் பயணத்துறைக்கு உகந்த நிர்வாக முறைமையற்ற நாடாகி விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, nedukkalapoovan said:

சொறீலங்கா எயார் லைன்ஸ் பிரித்தானியாவில் வைச்சே இதை தடுத்திருக்கலாமே. காசுக்கு பார்த்தும் பார்க்காமலும் ஏத்திறது.. ஏத்திப் போட்டு கொழும்பில வைச்சு மிச்சம் மீதியை புடுங்கிறது.

சொறீலங்கா உல்லாசப் பயணத்துறைக்கு உகந்த நிர்வாக முறைமையற்ற நாடாகி விட்டது. 

நீங்கள் இன்னமும் விமான பயணம் செய்யவில்லை போல?

பிரித்தானியாவில் விமானத்தில் ஏறும் ஒருவரின் பொதிகளை பரிசோதனை செய்வது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

Heathrow விமான நிலையத்தின் பரிசோதனைகள் எந்த கேவல நிலையில் உள்ளன என்று தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மனுஷன் நினைத்து இருந்தா விமானத்தையே கடத்தி இருக்கலாம். நல்ல மனுஷன் போல..

  • கருத்துக்கள உறவுகள்

இது இங்கிலாந்தில் உள்ள விமான பயணிகளின் பரிசோதனையாளர்களின் தவறு.

அதேநேரம் இலங்கையில் இறங்கும் போது சுங்க பரிசோதனை செய்கிறார்களா?

எப்படி பிடித்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

54 வயது இங்கிலாந்துப் பிரஜை என்டோன்ன வெள்ளை போல என்று நினைத்தால் கொம்பனி பொறுப்பில்லை.

யாராவது, தீவிர தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்த ஒருத்தரை, உள்ளுக்கு போட்டு, அவரது இயக்கத்தை  தடுக்க, இது,  புனையப்பட்டிருக்காலம். 

ஹீத்ரோ விமான நிலையத்தில், டெர்மினல் 5 பிராஜெக்ட் ஒன்றில் வேலை செய்திருப்பதால், உள்ளே, கன்வேயர் பெல்ட் எப்படி இயங்குகிறது என்று, எமது மென்பொருள் பிராஜெக்ட் டீம் போய் பார்த்தது. மனிதர்கள் பரிசீலனை செய்வதிலும், மென்பொருள், ஸ்கேன் பக்காவாக பிடித்து விடும்.

மேலும், விமான நிலையங்களில் உள்ள பலவீனங்களை கண்டறிய, அரச, ரகசிய அனுமதியுடன், சிலர் துப்பாக்கி, கைக்குண்டுகள் கொண்டு போய் அவ்வப்போது பரிசோதனை செய்வார்கள்.

இது, என்ன கதை என்று விரைவில் தெரியவரும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, MEERA said:

Heathrow விமான நிலையத்தின் பரிசோதனைகள் எந்த கேவல நிலையில் உள்ளன என்று தெரிகிறது.

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்தால்  கிந்தியாவில நிக்கிற ஒரு பீலிங் வரும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்தால்  கிந்தியாவில நிக்கிற ஒரு பீலிங் வரும். 😂

அது பழைய காலம் சாமியார் ஆனாலும் விசா இல்லாதவர் கூட ஒரு மணி நேர விமான சுத்திகரிப்பு வேலையில் ஏஜென்ட் மூலம் வருகிறார்கள் அதில் பிளாக் லிஸ்ர்ரில் உள்ள நாடுகளை சேர்ந்தவர்களும் வருகிறார்கள் ஏதோ ஒரு நாள் பிரச்சனை வெடிக்கும் ஆனலும் பாதுகாப்பு ஐந்தடுக்கு உள்ளபடியால் அமைதியாக போகுது .

4 hours ago, MEERA said:

Heathrow விமான நிலையத்தின் பரிசோதனைகள் எந்த கேவல நிலையில் உள்ளன என்று தெரிகிறது.

இது ஒரு செட்டப் ஆக இருக்கலாம் கொஞ்சம் வெயிட் பண்ணுவம் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

நீங்கள் இன்னமும் விமான பயணம் செய்யவில்லை போல?

பிரித்தானியாவில் விமானத்தில் ஏறும் ஒருவரின் பொதிகளை பரிசோதனை செய்வது யார்?

இது என்ன கேள்வி?? எந்த விமான சேவையே   அதில்  வேலை செய்பவர்கள் தான்   பேடி பாஸ் கொடுத்து பெரிய பெட்டிகளை அனுமதிப்பார்கள். ...கையில் கொண்டு போவதை லண்டன் பாதுகாப்புதுறை  பார்ப்பர்கள். அல்லது விமான நிலையத்தில் வேலை செய்வோர் மேலும் இரண்டாவது முறையாக  விமான சேவை ஊழியர்கள் பார்த்து தான்  பேடி பாஸ் மெசினில் கொடுத்து  விமானம் எற முடியும்  நடந்து போய் ஏறும் போது  மீண்டும் விமான சேவை ஊழியர்கள் பார்ப்பார்கள் ஆகவே  விமான சேவையில் பிழை உண்டு” 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பொத்தம் பொதுவா எல்லா விமானா சேவையையும் இங்கு எழுத முடியாது எழுதினால் யாழ் படுத்து விடும் அவ்வளவு தரவுகள் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நியாயம் said:

நீங்கள் இன்னமும் விமான பயணம் செய்யவில்லை போல?

பிரித்தானியாவில் விமானத்தில் ஏறும் ஒருவரின் பொதிகளை பரிசோதனை செய்வது யார்?

அடிப்படையே தெரியாமல் தான் வாழ்ந்து வருகிறீர்கள் போலும்.

கையில் கொண்டு போபவை எல்லாம்.. நேரடியாகவும்..

உதிரப்படும்  பிரதான பெரிய பொதிகள் ஸ்கான்.. உட்பட பல்வேறு சோதனைகளுக்கு அப்புறம் தான் விமானத்தில் ஏறும்.

இதில் எயார்லைனின் பங்களிப்பும் உள்ளது. 

ஆக.. இந்த துப்பாக்கி ஒன்றில் பிரித்தானியாவில் அனுமதி பெற்று பிரதான பொதியில் கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

சொறீலங்காவில் ஸ்கான் செய்து பொதிகள் வெளியே விடப்படும் பொறிமுறை இருந்தால்.. அல்லது பிரித்தானியாவில் இருந்து அறிவிக்கட்டிருந்தால்.. சொறீலங்கா.. ஆட்கள் காசுக்கு இவரை பிடிச்சு வெருட்டி இருக்கலாம். அவர் மசிய மாட்டார் என்றால்.. உடனடியாக.. சொறீலங்கா.. புலனாய்வுத்துறையிடம் கையளிப்போம் என்று வெருட்டு. அப்படி நிகழ்ந்திருக்கவே வாய்ப்பிருக்குது. ஏனெனில்.. ஒரு பயணி என்னென்ன பொருட்களோடு பயணிக்கிறார் என்பது எயார் லைன்சுக்கு தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்தால்  கிந்தியாவில நிக்கிற ஒரு பீலிங் வரும். 😂

அது பழைய காலம் சாமியார்

இப்போது அங்கே இருந்த இந்தியர்கள் பெரும்பான்மையோர் இந்தியாவுக்கு நாடு கடத்தபட்டுவிட்டனரா

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இப்போது அங்கே இருந்த இந்தியர்கள் பெரும்பான்மையோர் இந்தியாவுக்கு நாடு கடத்தபட்டுவிட்டனரா

அதை விட டபிள் றிபிள்.. சவுத்கோல் ஹைஸ் பக்கம் போனா கவுன்சிலே றோட்டில லைட் எல்லாம் கட்டி தீபாவளி கொண்டாடும்.. என்னடா குஜராத்தில நிக்கிறமா எண்டு நினைப்பு வரும்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

ஒரு பயணி என்னென்ன பொருட்களோடு பயணிக்கிறார் என்பது எயார் லைன்சுக்கு தெரியும். 

விமானம் நாட்டுக்குள் வரமுதலே பொதிகளின் தரவுகள் முழு விபரங்கள் போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்து விடும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதை விட டபிள் றிபிள்.. சவுத்கோல் ஹைஸ் பக்கம் போனா கவுன்சிலே றோட்டில லைட் எல்லாம் கட்டி தீபாவளி கொண்டாடும்.. என்னடா குஜராத்தில நிக்கிறமா எண்டு நினைப்பு வரும்..

அதே போல லூட்டன்  கடையள் பக்கம் போனாலும் பாகிஸ்தான் பக்கம் நிண்ட மாதிரி இருக்கும்😂

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான மேற்கு நாட்டு விமான சேவைகளில் துப்பாக்கியையும் சன்னங்களையும் வேறாக்கி Hold luggage (UK) அல்லது Checked-in luggage (US/Canada) இல் எடுத்துச் செல்லலாம். கையோடு கொண்டு  செல்லும் (hand luggage) பயணப் பொதியில் எடுத்துச் செல்ல முடியாது.  செக்ட் இன் லக்கேஜில் கொண்டு செல்பவர், அதை விமானப் பொதியை விமான சேவையிடம் கையளிக்கும் போது அறிக்கையிட (declare) வேண்டும். "ஏதாவது அறிக்கையிட வேண்டிய, தடை செய்யப் பட்ட பொருட்கள் இருக்கின்றனவா?" என பொதியை ஏற்கும் விமான சேவை ஊழியர் கேட்க வேண்டியது அவரது சட்டக் கடமை. பயணி "இல்லை" எனப் பதில் அளித்தால் பொதியை அங்கேயே திறந்து பரிசோதிக்கும் உரிமை (search power) விமான சேவையின் ஊழியருக்கு இல்லை. அதோடு அவர் பணி முடிந்தது.

துப்பாக்கி எடுத்துச் செல்லும் பயணி பொய்யைச் சொன்னால் அடுத்து என்ன நடக்கும்?

விமான சேவையின் ஊழியர் நிறையைச் சரிபார்த்து, லேபலைப் போட்டு கவுண்டருக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் கொன்வேயர் பெல்ட்டில் பயணைப் பையைப் போடுவார். அது ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கும் பகுதிக்குச் செல்லும். ஹீத்ரோவில் நவீன முப்பரிமாண (3D) ஸ்கேனர் 2022 இல் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. இந்த ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வது விமான சேவையின் பணி அல்ல, அது விமான நிலையைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பணி. இந்தப் பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரச்சினைக்குரிய பொதிகளைத் திறந்து சோதனை செய்யவும், பயணியையும், பொதியையும் விமானத்தில் ஏற்றாமல் தடுக்கவும் உரிமை இருக்கிறது. இந்தச் சோதனையில் ஒரு  பிரச்சினைக்குரிய பொருள் தப்பினால், அது விமானம் ஏறி இலங்கை போயிருக்கும். இலங்கையில் ஸ்கானர் பாவிக்கின்றனரா தெரியாது, ஆனால் "அறிக்கையிட எதுவும் இல்லை" என்று நிறையப் பொதிகளை உருட்டிக் கொண்டு செல்ல முயற்சித்தால் நிச்சயம் நிறுத்தி எல்லாப் பைகளையும் திறந்து சோதிப்பர் - இது சுங்க அதிகாரிகளின் சோதனை. 

உணர்ச்சி மயப்பட்டு நாம் எதுவும் எழுதலாம். ஆனால், தரவுகளைப் பரிசோதித்த பின்னர் எழுதினால் இது போன்ற திரிகளில் பயணம் செய்யும் மக்களுக்குத் தெளிவையூட்டலாம் . நான் மேலே குறிப்பிட்ட தகவல்கள், பிரிட்டனின் அரச வலைத் தளத்திலேயே இருக்கும் தகவல்களில் இருந்தும், என் பயண அனுபவங்களில் இருந்தும் பெற்றவை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நன்றி. 

இந்த துவக்கு யூகேயில் சட்டபூர்வமானதா? இது antique வகையான exemption  உக்கு உட்பட்டதா?

சிலவேளை யூகேயை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதி எடுத்திருக்கலாம், இலங்கைக்குள் கொண்டு செல்ல கிளியரன்ஸ் எடுக்காமல்.

ஹண்ட் லகேஜில் போனதா அல்லது லகேஜிலா?

செய்தியில் எந்த தகவலும் இல்லை.

ஆனால் ஹீற்றோவுக்கு cab ஓடிபோனவர், கோப்பி கடையில் வேலை செய்தவர், பயணியாய் போனவர், ஆட்களை drop off, pick up க்கு போனவர், பதினைச்சு யூரோ டிக்கெட்டில் லூட்டன் ஏர்போர்ட் வந்திறங்கியவர், சவுத்தோலில் பஞ்சாபி செட் வாங்கபோனவர்….

எல்லாரும் தம் தம் கற்பனைக்கு ஏற்ற மாதிரி வியாக்கியானம் கொடுத்துள்ளார்கள்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம், டயட் கோக் அடிப்பவர் என்ன சொல்கிறீர்கள்? 🤣

பிரிட்டனில் அனுமதி எடுத்தாலும், சம்பந்த பட்ட நாட்டின் அனுமதி இல்லாமல் விமானத்தில் கொண்டு போக முடியுமா?

சில, மூளை பிசகிணத்துகள் ரிஸ்க் எடுக்குதுகள் என்று, அது அடுத்தவர்களும் எடுக்கலாம் என்று சொல்வதை விடுத்து, இது, தொந்தரவு பிடித்த விவகாரம். அதாலை. இதனை கொண்டு போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம். அதனை விடுத்து, அப்படி கொண்டு போகலாம், இப்படி கொண்டுபோகலாம் எண்டு வியாக்கியானம் தேவையில்லை என்பது எனது கருத்து.

உந்த ரிஸ்க் எடுக்கிறதுக்கு, பேசாமல் காசோட வாங்கோ, உங்களுக்கு பிடித்த மாதிரி இலங்கையில் வாங்கித்தரலாம். பிரச்சனை இல்லை என்று சொல்லுறன், நீங்கள் என்ன சொல்லுறியள்? 

போன கிழமை ஆஸ்திரேலியா பார்டர் கண்ட்ரோல் டிவியில் பார்த்தேன். ஒரு விசர், இப்படி ரிவோல்வரினை கொண்டு போயிருக்குது. ஏர்போர்ட்டே அலறி, செக்கிங் எல்லாம் செய்து, ஆளை விசாரிக்க, அது, சிகரெட் லைட்டர், சிநேகிதருக்கு கிபிட் ஆக கொண்டு வந்தாராம். அவருக்கு பைன் போட்டு, அதனை சீஸ் பண்ணி, அனுப்பி வைத்தார்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஓம், டயட் கோக் அடிப்பவர் என்ன சொல்கிறீர்கள்? 🤣

பிரிட்டனில் அனுமதி எடுத்தாலும், சம்பந்த பட்ட நாட்டின் அனுமதி இல்லாமல் விமானத்தில் கொண்டு போக முடியுமா?

சில, மூளை பிசகிணத்துகள் ரிஸ்க் எடுக்குதுகள் என்று, அது அடுத்தவர்களும் எடுக்கலாம் என்று சொல்வதை விடுத்து, இது, தொந்தரவு பிடித்த விவகாரம். அதாலை. இதனை கொண்டு போகாமல் இருப்பதே புத்திசாலித்தனம். அதனை விடுத்து, அப்படி கொண்டு போகலாம், இப்படி கொண்டுபோகலாம் எண்டு வியாக்கியானம் தேவையில்லை என்பது எனது கருத்து.

நான் எங்கே இவ்வாறு கொண்டு போகலாம், அல்லது போனது சரி என எழுதினேன்?

இணைக்கப்பட்ட செய்தியில் போதிய தரவுகள் இல்லை.

ஜஸ்டின் அண்ணா போல் குறைந்த பட்சம் யூகேயில் என்ன நடைமுறை என்பதை யாரும் தேடிப்பார்த்ததாயும் தெரியவில்லை.

இங்கே கருத்து எழுதிய எவரும் இதுவரை துப்பாக்கியை விமானத்தில் இலங்கைக்கு எடுத்து போன அனுபவம் இருப்பவர்களாக தெரியவில்லை. அப்படி இருக்க விமானத்தில் போனோம், விமானநிலையத்துக்கு போனோம் என்பதை வைத்தே ஆளாளுக்கு எழுதியதைத்தான் குறிப்பிட்டேன்.

நல்ல வேளை நான் இருக்கும் வீடு கீத்துரோவில் இருந்து 2 மைல்தான் - என்ற பீடிகையோடும் யாரும் எழுதவில்லை🤣.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இங்கு கருத்து எழுதுபவர்கள் வாழ்க்கையில் ஒரு நாளாவது விமானத்தில் பயணம் செய்திருப்பார்கள். எனவே தேடிப் பார்க்கும் தேவையில்லை. பிரித்தானியாவில் உள்ள நடைமுறை தான் பெரும்பாலான நாடுகளில், 

ஆனால் கொழும்பில் 24 மணிநேரமும் சுங்கத் திணைக்களம் சேவையில் இருக்கும் பிரித்தானியாவில் அப்படி அல்ல.

பெரும்பாலான நாடுகளில் விமான நிலையத்திலும் துறைமுகங்களிலும் உரிமையாளரின் அனுமதியின்றி பொதிகளை திறக்கும் அதிகாரம் சுங்கத் திணைக்களத்தினருக்கே உள்ளது.

விமான நிலையங்களில் checked in செய்யப்பட்ட பொதி பரிசோதனையின் போது சந்தேகத்திற்கு உட்படுமேயானால் உரிமையாளரை / பயணியை ஒலிபெருக்கி ஊடாக அறிவித்து அவரின் முன்னரே திறந்து பரிசோதிக்கப்படும். 

Edited by MEERA
மேலதிக சில வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஆனால் கொழும்பில் 24 மணிநேரமும் சுங்கத் திணைக்களம் சேவையில் இருக்கும் பிரித்தானியாவில் அப்படி அல்ல.

பிரித்தானியாவிலும் விமான நிலையம் பயணிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ள நேரம் அத்தனையும் சுங்கம் சேவையில் இருக்கும்.

ஆனால் வரும் போது கவனிப்பு அதிகம். அப்போதும் கூட சுங்க சாவடியில் ஆள் இல்லாதது போல இருந்தாலும், கண்காணிப்பு இருந்த படியே இருக்கும்.

அதுமட்டும் அல்ல 2010 ற்கு பிறகு immigration officers + customs இரண்டு பதவிகளையும் ஒன்றாக்கி உருவாக்கியதே Border Force Officer , இந்த தொழிலில் இருப்பவர்கள் குடிவரவு, சுங்க இரெண்டு அதிகாரிகளுக்குரிய பயிற்சியும், சட்ட அதிகாரத்தையும் கொண்டிருப்பர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இங்கு கருத்து எழுதுபவர்கள் வாழ்க்கையில் ஒரு நாளாவது விமானத்தில் பயணம் செய்திருப்பார்கள். எனவே தேடிப் பார்க்கும் தேவையில்லை. பிரித்தானியாவில் உள்ள நடைமுறை தான் பெரும்பாலான நாடுகளில், 

ஓம் ஆனால் துப்பாக்கியோடு பயணித்திருக்க மாட்டார்கள் ஆகவே அந்த நடைமுறை தெரியாது என்பது எழுதிய பதில்களில் தெரிகிறது.

ஒரு உதாரணம். அமெரிக்காவில் இருந்து வரும் விமானங்களில் Armed Air Marshals துப்பாக்கி சகிதம் வருவார்கள். ஆனால் ஹீத்துரோ ஓடுபாதைக்கு வெளியே இவற்றை கொண்டு போக முடியாது. இதெற்கென gun handling பயிற்ச்சி பெற்ற போர்டர் போர்ஸ் அதிகாரிகள் விமானத்தில் ஏறி, அந்த துப்பாக்கிகளை வாங்கி, make safe procedures செய்து, ஹீத்துரோவில் இருக்கும் கிட்டங்கியில் வைப்பார்கள். திரும்பி வரும் போது அமெரிக்க அதிகரிகள் ரசீதை கொடுத்து மீள ஆயுதங்களை பெறுவார்கள்.

அதேபோல் close protection பாடி கார்ட்ஸ்சுக்கும் ஒரு வழி முறை உள்ளது. அநேகமாக துப்பாக்கிகள் நாட்டில் இறங்கியவுடன் கையளித்து பின் மீள தரப்படும். அநேக வெளிநாட்டு அதிபர்களின் யூகே பாதுகாப்பு, இங்கே உள்ள diplomatic protection unitதான் கையாளும். அமெரிக்க அதிபர், சீன அதிபர் போன்றோர் மட்டும் அவர்களின் படையுடன் இராணுவ தளங்கள் ஊடாக பயணிப்பர்.

ஆகவே முதலில் இங்கே என்ன நடந்தது, என்ற தரவுகள் முக்கியம்.

அடுத்து துப்பாக்கி எடுத்து செல்ல நடைமுறை என்ன என்பது சாதாரண விமான பயண அனுபவத்தின் மூலம் தெரிய வராது.

மேலே நான் சொன்ன அமெரிக்கன் மார்ஷல்களுக்குரிய நடைமுறை பற்றி எத்தனை பயணிகளுக்கு தெரிந்திருக்கும்?

இதைதான் நான் சொல்கிறேன்.

2 hours ago, MEERA said:

விமான நிலையங்களில் checked in செய்யப்பட்ட பொதி பரிசோதனையின் போது சந்தேகத்திற்கு உட்படுமேயானால் உரிமையாளரை / பயணியை ஒலிபெருக்கி ஊடாக அறிவித்து அவரின் முன்னரே திறந்து பரிசோதிக்கப்படும். 

இதை யார் பரிசோக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?

2 hours ago, Nathamuni said:

உதை பத்தி ஒன்னுமே சொல்லவில்லையே.. 🤣😁

***

நான் இன்னும் கொஞ்ச நேரத்துல டயட் கோக்கில் ஆரம்பிக்கலாமுங்களா?

அல்லது, ஸ்ட்ராயிட் ஆம் நம்ம, ஸ்காட்லாந்து சமாசாரமா?

கெதியா சொல்லுங்கோ? கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

40% டயட் கோக்+40% சீரோ கோக்+ மீதி ஐஸ் ——-

சும்மா ஜுவ்வுன்னு ஏறும் திண்ணையில் வந்து பொன்முடி, பிடரி முடி, பின் முடி எண்டு பினாத்த வைக்கும்🤣.

மெரி கிறிஸ்மஸ்🎄

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2023 at 14:12, ஈழப்பிரியன் said:

இது இங்கிலாந்தில் உள்ள விமான பயணிகளின் பரிசோதனையாளர்களின் தவறு.

அதேநேரம் இலங்கையில் இறங்கும் போது சுங்க பரிசோதனை செய்கிறார்களா?

எப்படி பிடித்தார்கள்?

On 23/12/2023 at 12:15, MEERA said:

Heathrow விமான நிலையத்தின் பரிசோதனைகள் எந்த கேவல நிலையில் உள்ளன என்று தெரிகிறது.

ரவைக்களின் உள்ளே வெடி மருந்து இருக்கிறது ... வெடி மருந்து கீத்ரோ விமான நிலையத்தை கடந்து 
விமானத்தில் ஏறி இருக்கிறது என்றால் .... கொஞ்சம் அதிர்ச்சியான தகவல்தான்.

எனது ஊகத்தில் இதன் உரிமையாளர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் வைத்திருப்பவர் 
உரிமத்தின் பிரதி ஒன்றையும் பாக்கில் வைத்திருந்து இருக்க சாத்தியம் உண்டு அதனோடு 
பொதியை  பூட்டு போட்டு பூட்டியிருக்கலாம் 

குறித்த பொதியை  ஆட்கள் யாரும் பார்க்க தேவையில்லை .... அதை ஸ்கேனர் தானகவே தடுத்து இருக்கும் 
அதை மீள் பரிசோதனை செய்தவர்கள் குறித்த நபர் பதிவு செய்து கொண்டு போகிறாரா? இல்லையா?
எனும் குழப்ப நிலையில் அதனால் விமானத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் ஏற்றி இருப்பார்கள் 

ஆனால் குறித்த நபரின் (பெயருடன்) பொதி ஒன்றில் துப்பாக்கி இருக்கிறது என்பது முதன்மை விமானிக்கும் 
கொழும்புக்கும் அறிவித்து இருப்பார்கள். 

இந்த தகவலின் அடிப்படையிலில்தான் கொழும்பில் குறித்த பொதி சுங்க அதிகாரிகளிடம் சேரும்.

இந்தியர்கள் பலர் டுபாய் அபுதாபியில் இருந்து தங்கத்துடன் சென்று இந்தியாவில் பிடிபடுவார்கள்  
தலைக்குள் வைத்தது  பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து கொண்டு சென்று எல்லாம் பிடிபடுவார்கள்  
அவர்களை இந்திய அதிகாரிகள் எதோ சாமர்த்தியம் செய்து பிடித்ததுபோல செய்தி போடுவார்கள்  
உண்மையில் அதன் பின்னனியில் இருப்பது துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்தான்.  24 கரட் சுத்த தங்கம் மெடல் டெக்டாட்டோரில் (Metal Detectors)   பிடிபடாது அதனுடன் செப்பு கலந்த பின்தான் மெடல் டெக்டோட்டோர் சத்தம் செய்யும்.
இதனை சாதகம் ஆக்கியே தங்கம் கடத்துபவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் துபாய் அபுதாபி ஸ்கேனர்கள்  இவற்றை துல்லியமாக காட்டுகிறது ...... அவர்களுக்கு தங்கம் விற்றாயிற்று அதன் பின்பு ஒரு இந்தியரை  பிடித்து சிறையில் வைத்து வழக்கு வைத்து உணவு கொடுப்பது வீண் செலவு என்பதால்  
இந்தியாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு இருந்துவிடுவார்கள் ....... விமானம் போய் இறங்குமுன்பே  யார் தங்கத்துடன் வருகிறார்  என்பது அவர்களுக்கு தெரிந்துகொண்டுதான்  மிகுதி ஸீன் எல்லாம் உருவாக்குவார்கள் (Scene create) . 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

பிரித்தானியாவிலும் விமான நிலையம் பயணிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ள நேரம் அத்தனையும் சுங்கம் சேவையில் இருக்கும்.

ஆனால் வரும் போது கவனிப்பு அதிகம். அப்போதும் கூட சுங்க சாவடியில் ஆள் இல்லாதது போல இருந்தாலும், கண்காணிப்பு இருந்த படியே இருக்கும்.

அதுமட்டும் அல்ல 2010 ற்கு பிறகு immigration officers + customs இரண்டு பதவிகளையும் ஒன்றாக்கி உருவாக்கியதே Border Force Officer , இந்த தொழிலில் இருப்பவர்கள் குடிவரவு, சுங்க இரெண்டு அதிகாரிகளுக்குரிய பயிற்சியும், சட்ட அதிகாரத்தையும் கொண்டிருப்பர்.

100% இல்லை. கடந்த சனிக்கிழமை இரவு Terminal 3  Arrival இல் ஒருவரும் இல்லை.  Duty free தாண்டியவுடன் ஓர் காவாலாளி மாத்திரம் CCTV monitor ஐ கண்காணித்தபடி உட்காந்திருந்தார்.

சிவப்பு பகுதியில் ஓர் தொலைபேசி மட்டுமே. அதில் அழைப்பை மேற் கொண்டால் சில கேள்விகளின் பின்னர் தேவை ஏற்பட்டால் மாத்திரம் வருவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.