Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!

screenshot28842-down-1704391958.jpg

சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, என்னை இசை ஞானி என மக்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. ஆனால், நான் என்னை அப்படி நினைக்கவில்லை. 
அந்த கர்வத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இளையராஜா பேசுகையில், "எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ எதுவும் கிடையாது. புத்தக வெளியிடுக்கு சம்பந்தம் இல்லாத ஆள் நான். 
நான் முதன் முதலாக ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்தப் படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுகிறது...
 கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு நான் இசை அமைத்தேன். அதனால் முதல் படத்திலே ஆண்டாள் 
எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதெல்லாம் மாதத்தில் 30 நாட்களிலும் எனக்கு வேலை இருக்கும். அப்போது 7 மணியிலிருந்து 1 மணி வரைக்கும் 1 கால்ஷீட். இப்போது கால்ஷீட் எல்லாம் கிடையாது. 
இரவு பகலாக வேலை செய்கிறார்கள். 1 பாட்டு மியூசிக் பண்ணுவதற்கு ஆறு மாதம் ஆகிறது. 1 வருஷம் எடுத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள்
 எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு மியூசிக் வரவில்லை...

நான் கர்நாடக சங்கீதத்தில் கரை கண்டு வந்தவன் எல்லாம் இல்லை. நான் இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அது கேள்விக்குறிதான். 
ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு என் நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. 
அதையெல்லாம் சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன்.

நான் சிறுவனாக இருக்கும்போது கச்சேரி நடக்கும்போது, ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டுவார்கள். 
அதைக் கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகிட்டே போனது. 
எனக்கு கிடைக்கும் கைதட்டல் ஜாஸ்தி ஆக, ஜாஸ்தி ஆக... கர்வமும் அதிகரித்துக்கொண்டே போனது.

ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்காகவா, இசைக்காகவா இல்லை நான் வாசிக்கிற திறமைக்காகவா என மனசுக்குள் ஒரு கேள்வி. 
அப்புறம் பாட்டுக்கு தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகிறது. அதற்குப் பிறகு என் தலையில் 
இருந்த பாரமெல்லாம் இறங்கிப் போய் விட்டது. நமக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுபட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டும் என்னை அதைப் பற்றியே சிந்திக்க வைக்காது. 
தீபாவளி நேரத்தில், மூன்று நாட்களில் 3 படங்களுக்கு நான் பிண்ணனி இசையை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. 
இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. படக்குழுவின் நெருக்கடி அப்படி இருந்தது" எனப் பேசினார்..

https://tamil.oneindia.com/news/chennai/ilayaraja-says-that-i-got-rid-of-head-weight-many-years-ago-571859.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா , தூக்கி எறிந்தது அருகிலேயே கிடக்கும் ......மீண்டும் அதைக் கையில் எடுக்க அதிக நேரம் எடுக்காது ...... அதை எறிவதைவிட உங்களுக்குள்ளேயே வைத்திருந்து அது எழும்பும்போதெல்லாம் உள்முகமாக  அதை உற்றுக் கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்ற வேண்டும்........அதாவது உண்ணும் உணவு செமிபாடடைந்து வெளியேறுவதுபோல் .........!  😳

Posted

கர்வம் உங்களோடு பிறந்தது. அது போவதற்கான சாத்தியங்கள் இல்லை என பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பேச்சுக்கு வேணுமெனில் சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, nunavilan said:

கர்வம் உங்களோடு பிறந்தது. அது போவதற்கான சாத்தியங்கள் இல்லை என பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பேச்சுக்கு வேணுமெனில் சொல்லலாம்.

பேச்சுக்கு வேணுமெனில் சொல்லலாம்👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயா இளையராஜா .. உங்கள் பாடல்களை கேட்கும் எனக்கே கொஞ்சம் கர்வம் வருகிறது. ஆகவே உங்கள் பன்முக திறமைக்கு நீங்கள் எவ்வளவு கர்வமாக இருந்தாலும் உங்கள் ரசிகர்களுக்கு கவலை இல்லை. ஏனெனில் நாங்கள் உங்களிடம் இருந்து ரசிப்பது உங்கள் மெட்டமைக்கும், இசை அமைக்கும் விந்தையை, அது காலங்கள் கடந்து எங்கள் மனதுக்குள் நீங்கா இடம் பெரும் விந்தையை!!!

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Sasi_varnam said:

இளையராஜா யுகம் தொடங்கிய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் அவர் ரசிகன் நான்.எந்தவொரு பாடலையும் தவற விட்டது கிடையாது.இளையராயாவிற்கு இருக்கும் கர்வத்தை விட ஆயிரம் மடங்கு கர்வம் எனக்குண்டு.
ஆயினும் மற்றவர்களை மதிக்காவிட்டாலும் மட்டம் தட்டும் உரிமை அவருக்கில்லை.

ஆயிரம் இருந்தாலும் இசைக்கு ராஜா இளைய ராஜா தான். அதை யாரும் மேவ முடியாது.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையராஜா திறமையானவர் மற்றும் உளவியலாக சில இடையூறினை சந்திப்பவராக இருப்பார் எனகருதுகிறேன், இளையராஜாவுக்கு கர்வம் இருப்பதாக உணரவில்லை, ஆனால் அவர் சிறுவயதில் பாதிக்கப்பட்ட ஒரு  பிற்போக்கு சமூகத்தின் பாரபட்சத்தினால் ஏற்பட்ட கோபத்தினால் தன்னிலை மீறுகிறார், ஒரு சமூக போரளியின்  நியாயமான கோபம் இலக்கின்றி காட்டாறு போல போவதாக உணர்கிறேன்.

மற்றது கர்வம் என்பது ஒருவித பெருமிதம் என கருதுகிறேன் சிலர் அதனை சில்லறைதனமாக நடப்பதனை கர்வம் என தவறாக கருதுகிறார்களோ என தோன்றுகிறது. 

எனக்கு கர்வம் இல்லை என்ற கர்வம் உண்டு😁.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

ஒரு  பிற்போக்கு சமூகத்தின் பாரபட்சத்தினால் ஏற்பட்ட கோபத்தினால்

எனக்கு தெரிந்த இளையராஜா தீவிர இரசிகர்கள் தமிழ் கொஞ்சம் தான் கதைக்க வருபவர்கள் கூட இருக்கின்றனர்.இளையராஜாவுக்கு கர்வம் என்று சிலர் சொல்கிறார்களே என்றேன். யார் உனக்கு சொன்னார்கள்  சரி அந்த இசைமேதைக்கு கர்வம் அதனாலே உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்லு என்றார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவரின் இசை எம்மை மெய்மறக்க வைக்கும். அவரின் இசைக்கு நாம் எம்மை அறியமல் அடிமையாவோம்.  திறமைசலியான அவருக்கு கர்வம் இருந்தாலும்  பிரச்சனை இல்லை. 

ஆனால், சபை நாகரீகம் தெரியாத எதிரில் இருப்பவருக்கு அடிப்படை மரியாதையை கொடுக்க முடியாத அளவுக்கான அவரது கீழ்தரமான வார்ததை பிரயோகங்கள்  அவரின் மனிதன் என்ற வகையிலான மதிப்பை குறைக்கவே செய்யும். 

மிக சிறந்த இசையமைப்பாளர். மிக கீழ்தரமான மனிதர். 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/1/2024 at 07:48, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சென்னை தியாகராய நகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இப்படி எல்லாம் பேசலாம் என்றால் அதுதான் கர்வம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த இசை அமைப்பாளரை போட்டு இப்படி கலாய்க்குறார்..?

On 5/1/2024 at 12:18, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1 பாட்டு மியூசிக் பண்ணுவதற்கு ஆறு மாதம் ஆகிறது. 1 வருஷம் எடுத்தவர்கள் கூட இருக்கிறார்கள். அதில் ரெக்கார்ட் பிரேக் செய்பவர்கள்
 எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு மியூசிக் வரவில்லை...

உங்களுக்கு தெரியுமா ரெல் மீ..?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/1/2024 at 01:48, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தீபாவளி நேரத்தில், மூன்று நாட்களில் 3 படங்களுக்கு நான் பிண்ணனி இசையை அமைத்திருக்கிறேன். அப்படி இசையமைத்தவர்கள் உலகிலேயே கிடையாது. 
இது என்னுடைய திறமையை சொல்வதற்காக அல்ல. படக்குழுவின் நெருக்கடி அப்படி இருந்தது" எனப் பேசினார்..

மேலே எறிந்து போட்டு

கீழே எடுத்து விட்டாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/1/2024 at 18:58, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எந்த இசை அமைப்பாளரை போட்டு இப்படி கலாய்க்குறார்..?

உங்களுக்கு தெரியுமா ரெல் மீ..?

இவர் எண்டு நினைக்கிறன் 🤣

123443.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 6/1/2024 at 07:05, island said:

இளையராஜா மிகச் சிறந்த இசையமைப்பாளர். அவரின் இசை எம்மை மெய்மறக்க வைக்கும். அவரின் இசைக்கு நாம் எம்மை அறியமல் அடிமையாவோம்.  திறமைசலியான அவருக்கு கர்வம் இருந்தாலும்  பிரச்சனை இல்லை. 

ஆனால், சபை நாகரீகம் தெரியாத எதிரில் இருப்பவருக்கு அடிப்படை மரியாதையை கொடுக்க முடியாத அளவுக்கான அவரது கீழ்தரமான வார்ததை பிரயோகங்கள்  அவரின் மனிதன் என்ற வகையிலான மதிப்பை குறைக்கவே செய்யும். 

மிக சிறந்த இசையமைப்பாளர். 

இளையராஜா மிக கீழ்தரமான மனிதர்.  உங்கள் பார்வையில் "மேல்தரமான மனிதர்கள்" எப்படி எல்லாம்  இருக்க  வேண்டும்? எதாவது வரையறை,  அளவுகோல் இருக்கிறதா? மேடை நிகழ்ச்சிகளில், டீவி ஊடகங்களில்  மட்டும் "மேல்தரமாக" இருந்தால் போதுமா? 

Edited by Sasi_varnam
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பாட்டையெல்லாம் கேட்டதற்கு பின்பு, இப்போது வரும்  எந்த பாட்டை கேட்டாலும் மனசில் ஒட்டவில்லை. காதோடு நுழைந்தது காதோடு போய்விடுகிறது !!!
என்னுடைய இந்த மண்ணாங்கட்டி பிறப்புக்கு சிறப்பு சேர்த்த ஒருசில விடயங்கள் என நான் நினைப்பது.
தமிழன் என்ற அடையாளம்.
ஈழ விடுதலை போராட்ட காலத்தில் உன்னதமான ஒரு தலைவனை, ஒப்பற்ற போராளிகளை சாட்சியமாய் பார்த்து வாழ்ந்தது.
வள்ளுவன், பாரதி இப்படி சில படைப்புகளை நுனிப்புல் மெய்தது.
இசைஞானி இளையராஜா, MSV ஐயா படைப்புகளில் கரைந்து போனது.

  • Like 1
Posted
42 minutes ago, Sasi_varnam said:

சசி, நானும் இளையராஜாவின் பரம ரசிகன். என் வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவரது இசை என்னுடன் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. என் வாழ்வில் இருந்து அவரது இசையை பிரித்து விட்டால், பின்னனியிசை அற்ற ஒரு சினிமாவை பார்ப்பது போலத்தான் வெறுமையாக இருக்கும்.

ஆனால், அவரது இசைக்கும் அவர் குணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உயர்வு வருகையில் பணிவு வேண்டும் என்பர். பணிவு கூட இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மற்றவர்களை ஏளனத்துடன் அணுகுவதும், அவர்களை மதிக்காமல் அதை எந்த கூச்சமும் இன்றி வெளிப்படுத்துவதும் இளையராஜாவின் குணங்கள்.

பாலா (SPB) இறந்தவுடன் அவர் விகடனுக்கு பாலா பற்றிஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதை தேடி வாசித்துப் பாருங்கள் என்ன சொன்னார் என. அதே போன்று பிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேற வேண்டி வந்த பின் அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியே போதும் அவரது மன ஒட்டம் எந்தளவுக்கு சிறுமையானது என (பிரசாத் ஸ்டூடியோ நாசமாக போய்விடும் எனும் தொனியில் பேட்டி கொடுத்து இருந்தார்). 96 படத்தில் அவரது பாடலை சில இடங்களில் ஒலிக்க விட்டமைக்கு கூட  தரக் குறைவாக அப்படத்தின் இசையமைப்பாளரை திட்டி இருந்தார். ஊடகவியலாளர்களை மதிக்காதவர் (ஆனால் அவர்களின் புகழுரையை வேண்டி நிற்பவர்).

அவரது இந்த உரையில் கூட, இப்ப இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு திறமை இல்லை என சாடியிருந்தார் (அந்த வரிகள் இந்த திரியில் இல்லை- ஆனால் பல தமிழக ஊடகங்களில் முழுமையாக வந்துள்ளது)

இந்த திட்டு, அகங்காரமாக நடந்து கொள்வது எல்லாம் தான் சிறுமையாக நினைக்கும் மனிதர்களிடம் மட்டும்தான். பிஜேபி தலைவர்களுடன், மோடியுடன், அரசியல்வாதிகளுடன், சூப்பர் ஸ்டார்களுடன், குனிந்து குழைந்து பேசுகின்ற ஆள் மட்டுமன்றி, முட்டுக் கொடுப்பவராகவும் உள்ளார். 

அவ்வளவு ஏன், தான் பிறந்து வளர்ந்த சாதி  'உயர் சாதி' என போற்றப்படும் சாதியில் பிறந்தவர்களால் ஏளனமாக பார்க்கப்படுவதால், தன்னை அந்த சாதியில் இருந்து விலத்தி வைக்க விரும்புகின்றவர் மட்டுமன்றி, தன்னை பிராமணராக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்குகின்றவர். அதற்காகவே சங்கிகளுக்கு முட்டுக் கொடுப்பவர். 

ஒருவரை விரும்புகின்றோம், அவரது திறமையை விரும்புகின்றோம் என்பற்காக சிறுமைத்தனத்துக்கு முட்டுக் கொடுக்க அவசியம் இல்லை.

43 minutes ago, Sasi_varnam said:

இந்த பாட்டையெல்லாம் கேட்டதற்கு பின்பு, இப்போது வரும்  எந்த பாட்டை கேட்டாலும் மனசில் ஒட்டவில்லை. காதோடு நுழைந்தது காதோடு போய்விடுகிறது !!!
 
என் அப்பாவுக்கு அவர் தலைமுறை இசையமைப்பாளர்களை பிடித்து இருந்தது. அவரது அப்பாவுக்கு அதற்கும் முற்பட்ட இசையமைப்பாளர்களின் இசையை / பாடலை பிடித்து இருந்தது. கண்டசாலாவின் பாடல்களை என் அப்பப்பா விரும்பி கேட்பார். அப்பாவுக்கு கே.வி. மகாதேவனது பாடல்கள் உயிர். சுசீலா அம்மாவின் குரல் தான் அவருக்கு பிடித்தமானது. அதே போன்று, எனக்கு இளையராஜாவின் இசையை பிடித்தும் அனிருத் இன் இசையை பிடிக்காமலும் உள்ளது. என் மகனதும் மகளதும் Play List டில் தமிழ் பாடல்கள் கொஞ்ச எண்ணிக்கையில் தான் உள்ளன. அவற்றில் அனிருத் இனதும், ஏ.ஆர்.ரஹுமானின் இன்றைய பாடல்களும் தான் உள்ளன. 

நாளைக்கு இதுவும் மாறி விடும்.

  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறுவன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாங்கடா... வாங்கடா... வந்து வரிசையில வந்து அடிங்கடா... ஆனா ஒன்னு முடிவுல மாற்றமில்லை. SPB ஐயா , Y1, Charan,  இப்படியானவர்கள் மேடைக்கு பின்னால் காட்டும் பந்தா நாங்கள் பார்க்காதாதா. 

நன்றி வணக்கம்!! 🤭

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/1/2024 at 16:27, Sasi_varnam said:

இந்த பாட்டையெல்லாம் கேட்டதற்கு பின்பு, இப்போது வரும்  எந்த பாட்டை கேட்டாலும் மனசில் ஒட்டவில்லை. காதோடு நுழைந்தது காதோடு போய்விடுகிறது !!!
என்னுடைய இந்த மண்ணாங்கட்டி பிறப்புக்கு சிறப்பு சேர்த்த ஒருசில விடயங்கள் என நான் நினைப்பது.
தமிழன் என்ற அடையாளம்.
ஈழ விடுதலை போராட்ட காலத்தில் உன்னதமான ஒரு தலைவனை, ஒப்பற்ற போராளிகளை சாட்சியமாய் பார்த்து வாழ்ந்தது.
வள்ளுவன், பாரதி இப்படி சில படைப்புகளை நுனிப்புல் மெய்தது.
இசைஞானி இளையராஜா, MSV ஐயா படைப்புகளில் கரைந்து போனது.

வேலை நேரத்திலும் அமைதியாக ஓய்வெடுக்க விரும்பும் தருணங்களிலும் எனக்கு உயிர் கொடுப்பது இளையராஜா, கங்கை அமரன் மற்றும் சில இசையமைப்பாளர்களின் இசையே. 

அடக்கம் அமரருள் உய்த்துவிடும், அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும். 

நான் வெறுப்பது தேவாவின் பிற்கால copy cat பாடல்களையும் தற்கால copy king அனுருத்தின் பாடல்களையுமே. 

(என்னிடம் இறைவன் என்ன வரம் வேண்டும் எனல் கேட்டால் அனிருத்தின் கைகள் key board ன் பக்கம் போகும்போது அனிருத்திற்கு ஞாபக மறதி வரவேண்டும் என வரம் கேட்பேன். 🤣)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/1/2024 at 23:08, நிழலி said:

என் அப்பாவுக்கு அவர் தலைமுறை இசையமைப்பாளர்களை பிடித்து இருந்தது. அவரது அப்பாவுக்கு அதற்கும் முற்பட்ட இசையமைப்பாளர்களின் இசையை / பாடலை பிடித்து இருந்தது. கண்டசாலாவின் பாடல்களை என் அப்பப்பா விரும்பி கேட்பார். அப்பாவுக்கு கே.வி. மகாதேவனது பாடல்கள் உயிர். சுசீலா அம்மாவின் குரல் தான் அவருக்கு பிடித்தமானது. அதே போன்று, எனக்கு இளையராஜாவின் இசையை பிடித்தும் அனிருத் இன் இசையை பிடிக்காமலும் உள்ளது. என் மகனதும் மகளதும் Play List டில் தமிழ் பாடல்கள் கொஞ்ச எண்ணிக்கையில் தான் உள்ளன. அவற்றில் அனிருத் இனதும், ஏ.ஆர்.ரஹுமானின் இன்றைய பாடல்களும் தான் உள்ளன. 

நாளைக்கு இதுவும் மாறி விடும்.

மூன்றாம் பிறைக்கு பிறகு பிறந்தவர்கள். ரசிக்கின்றார்கள்.

தியாகராஜ பாகவதர் காலத்தவர்களும் அன்னக்கிளி பாடல்களை மெய்மறந்து ரசித்தார்கள். ஆனால் ரகுமான் மற்றும் அனிருத் பாடல்களை   ஒருமுறை ரசித்து கேட்ட பின் அடுத்த முறை சலிப்புடன் ரசிக்க வேண்டியுள்ளது. இளையராஜா  பாடல்கள் இன்றும் சலிப்பில்லாமல் கேட்கக்கூடியதாகவே இருக்கின்றது.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.