Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது.

இந்தநிலையில்,  184 வாக்குகளைப் பெற்று சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,  எதிர்த்துப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். 

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சி.சிறீதரன் | C Siridharan New President Of Tamil Arasu Kachchi

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகிறார் சிறிதரன்

Published By: VISHNU   21 JAN, 2024 | 01:38 PM

image
 
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான இரகசிய வாக்கெடுப்பு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (21) திருகோணமலையில் முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் அவருக்கு உதவியாளர்களாக வடக்கு, கிழக்கு மாகணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எண்மர் செயற்பட்டனர்.

இந்நிலையில் குறித்த வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு அங்கத்தவர்களும் மாவட்டங்களில் இருந்து பொதுச்சபைக்கு வாக்களிப்பதற்கான அங்கீகாரத்தைக் கொண்டவர்கள் வாக்களித்தனர்.

அதன்படி, இன்று 21 ஆம் திகதி ததிருகோணமலை நகரமண்டபத்தில் இடம் பெற்ற வாக்களிப்பில் 327 பேர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்பு மனு கோரப்பட்டபோது கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனும் விண்ணப்பங்களை செய்திருந்தனர்.

எனினும் கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில் போட்டியின்றி தலைமைத்தெரிவு நடைபெறவேண்டுமென்று கருத்து வலியுறுத்தப்பட்டதை அடுத்து மூன்று வேட்பாளர்கள் இடையேயும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தலைமைக்கு வாக்கெடுப்பை நடத்துவதே பொருத்தமானது என்ற தீர்மானம் இறுதியானது.

இந்நிலையில் அண்மைய நாட்களில் சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமைக்கு போட்டியிடும் சக வேட்பாளரான சிறீதரனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளதன் காரணமாக சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  சீனித்தம்பி யோகேஸ்வரனும் தனது வாக்கை சிறிதரனுக்கு அளித்துள்ளார்.

20240121_124637.jpg

20240121_122139.jpg

20240121_102215.jpg

20240121_101951.jpg

https://www.virakesari.lk/article/174449

  • கருத்துக்கள உறவுகள்

IMG20220416104233.jpg?resize=720,375&ssl

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதற்கினங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.

இன்னிலையில் வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1366693

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைவர் பதவிக்குரிய பதவிக்காலம் எவ்வளவு? ஆயுள் காலமா? யாப்பு என்ன கூறுகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயம் said:

இந்த தலைவர் பதவிக்குரிய பதவிக்காலம் எவ்வளவு? ஆயுள் காலமா? யாப்பு என்ன கூறுகின்றது?

அதனை இந்தியாதான் தீர்மானிக்கும். யாப்பு எல்லாம் ஒரு பிரச்சினை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது இந்தியாவின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தெரிவு வெற்றி பெற்றுள்ளது. இந்திய சுமந்திரனின் தெரிவை விரும்பவில்லை. எப்படியோ கட்சி இரு பிரிவாக செயல்படப்போகின்றது. நிச்சயமாக அடுத்த தேர்தலில் இதன் விளைவுகளை காணலாம். 

எப்படி இருந்த போதிலும் இந்தியாவை தவிர இலங்கையிலும் மற்றைய நாடுகளிலும் ஸ்ரீதரனின் (மாவை 2 ) கருத்தைவிட சுமந்திரனின் கருத்துக்கு பெறுமதி இருக்கும். அதுவும் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும். பொறுத்திருந்து பார்ப்பம். 

இன்று வீரகேசரி பத்திரிகையில் சி . அ. யோயதிலிங்கம் எழுதிய சமகால அரசியல் கட்டுரையை வாசிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

“தமிழரசு கட்சி தேர்தலில் முறைக்கேடு: 13 பேரின் பெயர்கள் நீக்கம்”

கனகராசா சரவணன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான  தேர்தலில் வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற தான் உட்பட 13 பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல்  திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

இந்த தேர்தலுக்கு கட்சியின் உறுப்புரிமை கொண்ட கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 350 பேருக்கு வாக்களிப்பதற்கான தகுதி செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்களிப்புக்கு பெயர்பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தைச் 50 பேர் சென்றிருந்த நிலையில்  வாக்களிப்பதற்கான பெயர் பட்டியலில் மகளிர் அணி செயலாளராகிய  எனது பெயர் உட்பட 13 பேரின் பெயர்கள் வெட்டப்பட்டிருந்தன. வாக்களிக்க உட்செல்ல எங்களை அனுமதியளிக்கவில்லை.

இது தொடர்பாக மாவட்ட தலைவருக்கு அறிய படுத்தியும் அவர் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளை கொழும்பில் இருந்து கட்சியிலையோ, கட்சி கிளையிலையோ,  மாவட்டகிளையிலையோ  உறுப்புரிமை இல்லாத சிங்காரவேல் மலர்விழி என்பவரின் பெயர் பட்டியில் இடப்பட்டு அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு அவர் வாக்களித்துள்ளார்.

அதேவேளை அங்கு வாக்களிப்பதற்காக சென்றிருந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ரவிராஜ் சசிகலாவின் பெயர் உட்பட 7 மாவட்டங்களில்  பலரது பெயர்கள் விடுபட்டிருந்தன. இதன் போது அங்கு  அந்த மாவட்ட தலைவர்கள் செயற்பாட்டினையடுத்து சசிகலா உட்பட விடுபட்டிருந்த 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வாக்களிக்க அனுமதி வழங்கினர்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் 13 பெயர்களை வெட்டி வாக்களிக்க அனுமதியளிக்காமை தொடர்பாகவும் யார்? எங்கள் பெயரை வெட்டினார்கள் என பல கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை என்றார். .

அதேவேளை, அங்கிருந்த நாங்கள் ஸ்ரீ தரனுக்கு ஆதரவானவர்கள் என்பதால் உங்கள் பெயர் வெட்டப்பட்டுள்ளதாக ஒருவர் இரகசியமாக தெரிவித்தார் இவ்வாறான நிலையில் வாகளிப்பு முடிவுற்று முடிவு தெரிவிக்கப்பட்டது  

இது தொடர்பாக கட்சி முன்னால் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும்  நிர்வாக செயலாளர் கணநாயகம் ஆகியோரிடம்  எங்களது வாக்களிக்கும் உரிமையை மறுத்தமை தொடர்பாக முறையிட்டுள்துடன் இது ஒரு ஜனநாயக தேர்தலா? மட்டக்களப்பில்  இருந்து திருகோணமலைக்கு வாக்களிப்பதற்காக சென்று வாக்களிக் அனுமதி மறுத்தமை பெரும் ஏமாற்றமானதும் கவலையானதுமாகும் என அவர் தெரிவித்தார்.
 
https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமழரச-கடச-தரதலல-மறககட-13-பரன-பயரகள-நககம/73-331912

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருத்தரும் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் திரு.சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

சுமந்திரனும் கணிசமான வாக்குகள் எடுத்துள்ளார்.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிறிதரனுக்கு வாழ்த்துகள்.அவர் அனைத்துத் தமிழ்த்தேசிய கட்சிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும்.சுமத்திரன் ஏனைய கட்சிகளை அரவணைத்துச் வெல்லமாட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் சிறிதரனை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்பதை சிறிதரன் புரிந்து கொண்டு அதற்கேற்ப தமிழரசுக்கட்சியை வழிநடத்த வேண்டும்.கடந்த காலத்தில் மாவை தலைவராக இருந்த போது மாவைக்குத் தெரியாமல் சுமத்திரன் ஏன்சிறிதரன் கூட அவருடன் சேர்ந்து கொண்டு ஆடிய ஆட்டங்களை; போல் இனி நடக்காது என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறிதரன் அவர்களே. தமிழ் மக்களின் இக்கட்டான நிலையில் தமிழ் மக்களையும் ஏனைய கட்சிகளையும் ஒற்றுமையாக்க கடுமையாக உழைக்க வேண்டிய தருணம் இது. சுமந்திரன் அவர்கள் தொடர்ந்தும் தமிழரசு கட்சியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தியாவை விட்டு சுயமாக செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு வாழ்வுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்+

ஆள் தான் மாறியுள்ளதே ஒழிய அங்கை எந்தக் கொப்பையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. அதே பழைய பல்லவி தான் இவரும் பாடப் போறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, theeya said:

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

IMG-5712.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறிதரன்...இருவரும் அரசியல் தெரிந்த மேதைகள் ...

யார் ஊடக பேச்சாளர்?
சம்பந்தன் சுமத்திரனை உள்வாங்கி தமிழ்தேசியத்தை ஆட்டம் காண வைத்தது போல....
சிறிதரன் நம்பிக்கையான உண்மையான தமிழ் தேசிய பற்று உள்ள  இளைஞர்களை உள்வாங்கி தனக்கு அடுத்த கட்ட செயல் வீரர்களை உருவாக்க வேண்டும்...
இன்றைய இக்கட்டான் நேரத்தில் தமிழ் தேசியத்தை நீக்க பல கோணங்களிலிருந்து செயல் படுகின்றனர். சர்வதேசமும் தமிழ் தேசிய நீக்கத்தை விரும்புகிறது .இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..இவை யாவற்றையும் சுளிச்சு  வெட்டி ஒடி தமிழ் தேசியத்தை தக்க வைப்பார்களா இவர்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

“தமிழரசு கட்சி தேர்தலில் முறைக்கேடு: 13 பேரின் பெயர்கள் நீக்கம்”

கனகராசா சரவணன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான  தேர்தலில் வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற தான் உட்பட 13 பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல்  திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

இந்த தேர்தலுக்கு கட்சியின் உறுப்புரிமை கொண்ட கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 350 பேருக்கு வாக்களிப்பதற்கான தகுதி செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்களிப்புக்கு பெயர்பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தைச் 50 பேர் சென்றிருந்த நிலையில்  வாக்களிப்பதற்கான பெயர் பட்டியலில் மகளிர் அணி செயலாளராகிய  எனது பெயர் உட்பட 13 பேரின் பெயர்கள் வெட்டப்பட்டிருந்தன. வாக்களிக்க உட்செல்ல எங்களை அனுமதியளிக்கவில்லை.

இது தொடர்பாக மாவட்ட தலைவருக்கு அறிய படுத்தியும் அவர் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளை கொழும்பில் இருந்து கட்சியிலையோ, கட்சி கிளையிலையோ,  மாவட்டகிளையிலையோ  உறுப்புரிமை இல்லாத சிங்காரவேல் மலர்விழி என்பவரின் பெயர் பட்டியில் இடப்பட்டு அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு அவர் வாக்களித்துள்ளார்.

அதேவேளை அங்கு வாக்களிப்பதற்காக சென்றிருந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ரவிராஜ் சசிகலாவின் பெயர் உட்பட 7 மாவட்டங்களில்  பலரது பெயர்கள் விடுபட்டிருந்தன. இதன் போது அங்கு  அந்த மாவட்ட தலைவர்கள் செயற்பாட்டினையடுத்து சசிகலா உட்பட விடுபட்டிருந்த 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வாக்களிக்க அனுமதி வழங்கினர்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் 13 பெயர்களை வெட்டி வாக்களிக்க அனுமதியளிக்காமை தொடர்பாகவும் யார்? எங்கள் பெயரை வெட்டினார்கள் என பல கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை என்றார். .

அதேவேளை, அங்கிருந்த நாங்கள் ஸ்ரீ தரனுக்கு ஆதரவானவர்கள் என்பதால் உங்கள் பெயர் வெட்டப்பட்டுள்ளதாக ஒருவர் இரகசியமாக தெரிவித்தார் இவ்வாறான நிலையில் வாகளிப்பு முடிவுற்று முடிவு தெரிவிக்கப்பட்டது  

இது தொடர்பாக கட்சி முன்னால் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும்  நிர்வாக செயலாளர் கணநாயகம் ஆகியோரிடம்  எங்களது வாக்களிக்கும் உரிமையை மறுத்தமை தொடர்பாக முறையிட்டுள்துடன் இது ஒரு ஜனநாயக தேர்தலா? மட்டக்களப்பில்  இருந்து திருகோணமலைக்கு வாக்களிப்பதற்காக சென்று வாக்களிக் அனுமதி மறுத்தமை பெரும் ஏமாற்றமானதும் கவலையானதுமாகும் என அவர் தெரிவித்தார்.
 
https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமழரச-கடச-தரதலல-மறககட-13-பரன-பயரகள-நககம/73-331912

இப்படி எல்லாம் செய்திகள் போடக்கூடாது. ஜனநாயக முறைப்படி தேர்தல் நடை பெற்றது. 😜

6 hours ago, putthan said:

வாழ்த்துக்கள் சிறிதரன்...இருவரும் அரசியல் தெரிந்த மேதைகள் ...

யார் ஊடக பேச்சாளர்?
சம்பந்தன் சுமத்திரனை உள்வாங்கி தமிழ்தேசியத்தை ஆட்டம் காண வைத்தது போல....
சிறிதரன் நம்பிக்கையான உண்மையான தமிழ் தேசிய பற்று உள்ள  இளைஞர்களை உள்வாங்கி தனக்கு அடுத்த கட்ட செயல் வீரர்களை உருவாக்க வேண்டும்...
இன்றைய இக்கட்டான் நேரத்தில் தமிழ் தேசியத்தை நீக்க பல கோணங்களிலிருந்து செயல் படுகின்றனர். சர்வதேசமும் தமிழ் தேசிய நீக்கத்தை விரும்புகிறது .இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..இவை யாவற்றையும் சுளிச்சு  வெட்டி ஒடி தமிழ் தேசியத்தை தக்க வைப்பார்களா இவர்கள்?  

யார் ஊடக பேச்சாளராக இருந்தால்  என்ன? இந்தியாவை தவிர இலங்கையும் மற்ற நாடுகளும் சுமந்திரன் என்ன சொல்லுகிறார் என்பதைத்தான் பார்க்கும். இத்தேட்கெல்லாம் அவசர பட கூடாது.  😛

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன ஒருத்தரும் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?

கூத்தமைப்பானுகளுக்கு வாழ்த்து வேற ஒரு கேடு.
ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது தமிழ் தேசியம் என்றாலே என்னவென்று தெரியாமல் அடிமட்ட உறுப்பினர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் சுத்துமாத்தின் உழைப்பு சாதாரணமானதல்ல. கூத்தமைப்பு ஒரு  இலங்கை தி.மு.க 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இந்தியாவை விட்டு சுயமாக செயற்பட்டால் தமிழ் மக்களுக்கு வாழ்வுண்டு.

நடக்கிறதை கதையுங்க நுணா.

8 hours ago, putthan said:

இந்தியா ஒருபடி மேலே சென்று இந்து அடையாள அரசியலை திணிக்க முயல்கிறது..

சிறிதரனின் வெற்றிக்கு மறுவன்புலவு சச்சியும் உழைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இரா. சம்பந்தனை சந்தித்தார் சிறிதரன் !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினலுரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் அவர் இன்று காலை இரா.சம்பந்தனை கண்டு ஆசிபெற்றுக்கொண்டார்.

இதேநேரம் அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு தமிழரசு கட்சியின் புதிய தலைவர் உறவுப் பாலமாக இருப்பார் என தாம் நம்புவதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்தார்.

தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஒற்றுமையை சீர்குலைக்க பேரினவாத சக்திகள் முற்பட்டுவருகின்றன இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்றும் வேலுகுமார் வலியறுத்தினார்.

https://athavannews.com/2024/1366780

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஒற்றுமையை சீர்குலைக்க பேரினவாத சக்திகள் முற்பட்டுவருகின்றன இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை என்றும் வேலுகுமார் வலியறுத்தினார்.

https://athavannews.com/2024/1366780

அழகான படம். வாழ்த்து தெரிவிக்கிறார்களா இல்லை ஆளை ஆள் கும்பிடுகிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்ற எல்லாமே உதவாது , அதில் சிறிதரனால் தமிழருக்கு ஆபத்து குறைவு.  அறிவாளிகளான நீலன் வழியில் சுமந்திரன் வந்தால் . ரணிலுக்கு வேலை சுகமாகிவிடும் அவ்வளவுதான் . தேசியம் இல்லாது போய்விடும் மற்றும் , புலி எதிர்ப்பு பலமாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Cruso said:

அழகான படம். வாழ்த்து தெரிவிக்கிறார்களா இல்லை ஆளை ஆள் கும்பிடுகிறார்களா? 

ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது வழமை…

IMG-1773.webp

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின்,  எல்லா ராசதந்திரமும்... வீணாய் போய் விட்டதே.    😂 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரனின்,  எல்லா ராசதந்திரமும்... வீணாய் போய் விட்டதே.    😂 

சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

IMG-5718.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.