Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   19 FEB, 2024 | 02:00 PM

image

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

 அத்தோடு கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த பிரச்சினைக்கு சரியான ஒரு தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும், கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி வழங்கியதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/176754

  • கருத்துக்கள உறவுகள்

Edited by நிழலி
Merged

  • நிழலி changed the title to பெண் அதிபர் வேண்டாம் -யாழில் பெற்றோர்கள் போராட்டம்

எத்தனை ஆயிரம் பெண் போராளிகள் களமாடிய பூமியில் தான் இவ்வாறு பெண்கள் உட்பட பலர் பெண் தலைமைத்துவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நிர்வாகப் பதவி. பெண், ஆண், இடைப்பாலினர் ஆகிய எவரும் தகுதி இருந்தால் வழங்கப் பட வேண்டிய பதவி. இதில் "கலாச்சார விழுமியம் காக்க" அவர் பெண்கள் பாடசாலைக்குப் போக வேண்டுமென்கிறார்கள். அதென்னப்பா ஆண்கள் பாடசாலையின் "கலாச்சார விழுமியம்" 😂?

  • கருத்துக்கள உறவுகள்

அரைகுறை ஆடையுடன் தமன்னா வந்தால் மாகாணங்கள் கடந்து பஸ் பஸ்ஸாக வந்து முன்னாடி நிகழ்ச்சி பாத்துக்கொண்டிருந்தவங்களையெல்லாம் மாடு உழக்கினமாதிரி உழக்கிக்கொண்டும் பனைமேல ஏறி நின்றும் பார்க்கும்  கூட்டம், அறிவு சார்ந்த விடயத்தில் பெண் தலைமையேற்றால் வேண்டாம் என்று எதிர்ப்புக்குரலெழுப்புகிறது.

போகிறபோக்கில் கலவிக்கு மட்டுமே பெண் வேண்டும் கல்விக்கு வேண்டாம் என்ற தலீபான்களின் கொள்கைகளை மனபூர்வமாக ஏற்கப்போகிறது போலும் யாழின் ஒருசில மக்கள் திருக்கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னர் ஒரு காலத்தில் ஆண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக ஆண்களும்

பெண்கள் பாடசாலையில் ஆசிரியர்களாக பெண்களுமே இருந்தார்கள்.

கலவன் பாடசாலைகளில் ஆசிரியர்களாக ஆண்களும் பெண்களும் இருந்தார்கள்.

அடுத்ததாக அதிபர்களை தெரிவு செய்யும் போது உபஅதிபராக இருப்பவரே கூடுதலாக அதிபராக வருவார்.

இப்போது அரசியல் தான் எல்லாவற்றையுமே தீர்மானிக்கிறது.

விபரங்கள் தெரியாமல் கருத்தெழுதவே யோசனையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பிரபலமான கல்லூரிகளில் அதிபராக அக்கல்லூரியின் பழைய மாணவர்களே தெரிவுசெய்யப்படுவது பாரம்பரியம். இது கட்டாயமல்ல. இந்தப் பாரம்பரியத்தை மீறி யாழ் மத்திய கல்லூரி சமூகத்தை ஒரு குழப்ப நிலைக்கு தள்ளுவதே தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனம் . இது அரசியல் சார்பானது என்பது எனது எண்ணம். மற்றும்படி ஆண்கள் பாடசாலையில் ஒரு பெண் அதிபராக வருவது எல்லாம் பெரிய விடயமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாலி said:

ஏற்கனவே இருந்த அதிபரை ஏன் மாற்றினார்கள் என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே இருந்த அதிபரை ஏன் மாற்றினார்கள் என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

அரசியல் தலையீடாக இருக்கலாம் என ஊகிக்கிறேன்.

திரு. இந்திரகுமார் பதவிக்கு வந்த பின் டக்ளசை வந்து சந்திக்கும் படி அழுத்தம் கொடுக்கப் பட்டதாக அறிந்தேன். அவர் சில நாட்கள் தள்ளிப் போட்டார், இறுதியில் போய் சந்தித்தாரா என அறியேன். மறு பக்கம் பிரதி அதிபராக இருந்த திருமதி செல்வகுணாளன், புலத்தில் இருக்கும் பழையமாணவர் அமைப்புகளோடு தொடர்பு கொண்டு வெளிநாட்டுக் காசு பாடசாலைக்கு வர முயற்சிகள் செய்து வருபவர் (எல்லாக் காசும் பாடசாலைக்குத் தான் போகிறதா என்பது மில்லியன் டொலர் கேள்வி😎!)

இந்தப் பின்னணியில் குறுகின காலத்தில் திரு.இந்திரகுமாரை அகற்றி, இவருக்கு பதவியுயர்வு வந்திருக்கிறது.

(நான் மத்திய கல்லூரிப் பழைய மாணவன் என்பதால் இந்த வசந்தி/துலாபாரம்/பின் கதையெல்லாம் எனக்கு வந்து விடும் உடனே!)

  • கருத்துக்கள உறவுகள்

பெண் அதிபர் வேண்டாம் - இந்த யாழ்ப்பாணத்தில்  போக்கு மிகவும் கவலையானது.
கருத்து சொல்லவந்தவரையும் கருத்து சொல்விடாமல் தடுக்கின்றனர்☹️

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கம் தான் ஆண்கள் தலைமைத்துவப் பாடசாலைகளின் பெருக்கத்திற்கு அடிகோள்.

யாழ் மத்திய கல்லூரி கிறிஸ்தவ மிசனரி வழி வந்த ஒன்று. ஆனாலும் அங்கு ஆரம்பப் பிரிவு கலப்பு தான். மேலும் யாழ் மத்திய கல்லூரியில் பெருமளவிலான ஆசிரியைகள் பன்னெடுங்காலமாக.. மகத்தான சேவை ஆற்றி இருக்கினம்... சேவை ஆற்றிக் கொண்டும் இருக்கினம்.

அந்த வகையில் கல்லூரியின் தனித்துவத்தையும் கல்வி மற்றும்  விளையாட்டுத்துறையில் முன்னேற்றங்களையும் மற்றும் மாணவர்களை நல்ல சமூகப் பிரஜைகளாவும் ஆக்கக் கூடிய எவரும் அதிபர் பதவியில் அமர்வதில் சிக்கலில்லை. ஏனெனில் கல்லூரி இப்போ கிறிஸ்தவ மிசனரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஒரு காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில்.. ஒரே ஒரு பெண் ஆசிரியை தான் இருந்தார். ஆனால்.. இப்போ சரி பாதி பெண் ஆசிரியைகள். மேலும் இலங்கையின் நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் பெண்களே அதிகம். 

வீட்டில் அம்மா செல்லமெல்லாம்.. இந்த பெண் அதிபர் நியமனத்தை ஏற்றுக் கொண்டு.. போய் படிக்கிற வேலையை பாருங்க.

தேவை தரமான கல்வி... உயர்ந்த ஒழுக்கம்.. ஓயாத விளையாட்டு... யாழ் மத்தியின் மைந்தனாகவும் இருந்த ஒருவனாக இக்கருத்தைச் சொல்வதில் பெருமைபட முடிகிறது. விடாப்பிடியாக.. என்னை யாழ் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று சேர்ப்பித்ததே என் அம்மா. போர்ச் சூழல் கருதி... இடை நடுவில் யாழ் இந்துவுக்கு பாய்ந்தது வேறு விடயம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

இசை நிகழ்ச்சிகள்,மற்றும் பெண்கள் தலமைத்துவத்தை விரும்பாத  சமுகம் ஒன்று யாழில் உருவாகிறது...வீடியோவில் சாரம் அணிந்து ஒரு பதாதை வைத்திருக்கும் நபரின் பிள்ளைகள் இந்த பாடசாலையில் கல்வி கற்கின்றாரா? 

"பெண்கள் பாடசாலையில் ஆண் அதிபர் ஏன் நிராகரிகப்படுகின்றது"....என்ற பதாதையை வைத்திருக்கின்றார் ..வடிவாக கவனியுங்கள்..சகல பேட்டிகளிலும் முகம் காட்ட ஒடி வருகின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஆண்பிள்ளைகள் மட்டும் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு என்ன வேலை என்று வருமோ? நாசமாப் போக என்று முடிவெடுத்தாச்சு. எப்படி போனால் என்ன???

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இனி ஆண்பிள்ளைகள் மட்டும் பிறந்த வீட்டில் அம்மாவுக்கு என்ன வேலை என்று வருமோ? நாசமாப் போக என்று முடிவெடுத்தாச்சு. எப்படி போனால் என்ன???

வேடிக்கை என்னவென்றால்.. வகுப்பறையில் ஆசிரியைகளை ஏற்றுக் கொள்ளும் மாணவர்களும் பெற்றோரும்.. அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆசிரியையை ஏற்றுக் கொள்ள தயங்குவது எங்கேயோ இடிக்குதே..?!

எல்லாம் குத்தியரின் திருவிளையாடலாகத்தான் இருக்கும். தனக்கு வேண்டியவரை உள்ள போட.. இப்படி புரளியை கிளப்பி விட்டிருப்பார். 

அவர் பெயருக்குத்தான் மீன்பிடி அமைச்சர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை முடிசூடா சுயம்பு மன்னன். 

எல்லாத்துக்குள்ளும் தன் மூக்கை நுழைப்பதே அவரின் கொள்கை. இதனால் தான் முன்னர் அடிவாங்கிக் கொண்டு ஹிந்தியாவுக்கு ஓடினவர். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

IMG-5863.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கம் தான் ஆண்கள் தலைமைத்துவப் பாடசாலைகளின் பெருக்கத்திற்கு அடிகோள்.

No Jews No News என்று சொல்லுவார்கள். இப்போது கிறிஸ்தவ மிஸ்சோனோரிகளின் ஆதிக்கம் என்று செய்தி வந்திருக்கிறது. அதாவது ஒரு பாடசாலைக்கு பெண் அதிபர் போடுபடடதட்கு கிறிஸ்தவ மிஸோநரிகள் இங்கு வந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் கல்வியில் முன்னேறுவதேட்கே இவர்கள்தான் காரணம். அது ஆண்கள் , பெண்கள் அல்லது கலப்பு பாடசாலையாக இருக்கலாம்.

இப்போது தஞ்சமடைந்திருப்பது அவர்களிடமா இல்லை வேறு எங்குமா?

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

பெண் அதிபர் வேண்டாம் - இந்த யாழ்ப்பாணத்தில்  போக்கு மிகவும் கவலையானது.
கருத்து சொல்லவந்தவரையும் கருத்து சொல்விடாமல் தடுக்கின்றனர்☹️

பெண் ஆளுநர், பெண் அரச அதிபர்கள், இன்னும் முக்கிய பதவிகளில் பெண்கள் வடக்கில் இருக்கும்போது பெண் அதிபர் மட்டும் வேண்டாமாம். நல்லா உருப்படுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதினம் தெரியுமோ

(உதயன் 20/02/2024)

யாழ்ப்பாணத்தில நித்தியமா உள்ள ஒரு கல்லூரியில நேற்று ஆர்ப்பாட்டம். விசயம் என்னெண்டால், 208 வருசமா தொட்டுத் தொடரும் பட்டுப்பாரம்பரியம் கொண்ட 'தனியப் பெடியள் மட்டும் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பெண் அதிபரைப் போடக் கூடாதாம். கொஞ்சக்காலமா அந்தப் பள்ளிக்கூடம் பிரின் சிப்பல் இல்லாமல் தான் இயங்கிக்கொண்டு வருகுது.

இலங்கைக் கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஒருத்தர்தான் பதில் அதிபரா இருக்கிறார். அவர் ஏற்கனவே இன்னொரு பள்ளிக்கூடத்தில இருக்கேக்க, இந்தக் கல்லூரிக்கு வந்தால் அதிபராக்கலாம் எண்டு அமைச்சர் வாசிச்ச வீணைக்கு மயங்கித்தான் இஞ்ச வந்தவர்.

ஆனால் வீணை வாசிப்பெல்லாம் வீணாப் போன கதையா அவருக்குப் பதிலா அந்தப் பள்ளிக் கூடத்தில பிரதி அதிபரா இருந்தவாக்குத்தான் நியமனம் குடுபட்டிருக்கு. அதுக்கும் ஒரு காரணம் இருக்குது. உந்தப் பள்ளிக்கூடம் தேசிய பாடசாலை எண்டதால தேசிய பொதுச்சேவை ஆணைக்குழுதான் அந்தப் பள்ளிக் கூடத்துக்கான அதிபரின்ர தரம் பற்றி தீர்மானிக் கோணும். அதின்படி அதிபர் தரம் 1 ஐச் சேர்ந்தவைதான் உந்தக் கல்லூரிக்கு அதிபரா இருக்கலாமாம்.

ஆனால் அதிபர் பதவியை எதிர்பார்த்து வேற பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் அதிபர் தரத்தை விட கூடின இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். ஓவர் தகுதியும் பதவிக்கு ஆகாது கண்டியளோ. பள்ளிக்கூடத்துக்கு அதிபரைத் தெரிவு செய்யிறதுக்கு நடந்த இன்ரர்வியூவுக்கு அதிபர் தரம் 1 ஐச் சேர்ந்தவையைத் தான் கூப்பிடலாம். அதின்படி தான் இவ்வளவு காலமும் பிரதி அதிபரா இருந்தவாக்கு தகுதி இருந்ததால, அவாவையே அதிபராத் தெரிவு செய்திருக்கினம்.

ஆனால் இது வீணைக்கார அமைச்சருக்குப் பிடிக்கேலை. 'நான் கொண்டு வந்த ஆளுக்கு குடுக்காமல், அவரை விடதகுதி குறைஞ்ச ஓராளுக்கு குடுத்திட்டினம். ஆனால் உதை நான் சும்மா விடமாட்டன். நான் சொன்னதைச் செய்வன்.செய்யிறதைத்தான் சொல்லுவன்' எண்டு 'பஞ்ச்' வசனமெல்லாம் பேசி, வேட்டியை மடிச்சு கொண்டு தன்ர ஆக்களை போராடச் சொல்லிக் களத்தில் இறக்கி விட்டிட்டார். ஏற்கனவே பள்ளிக்கூட பழையமாணவர் சங்கமும் இந்த விசயத்தில ரண்டாத்தான் பிரிஞ்சு நிக்குது. அதில தனக்குச் சாதகமான ரீமை, இப்ப அதிபரா வரப்போறவாக்கு எதிரா ஏதும் காரணம் சொல்லிப் போராடுங்கோ எண்டு தியேட்டரில இருந்து ஓர்டர் போயிருக்குதாம்.

ஆனால் அவைக்கு என்ன காரணத்தைச் சொல்லிப் போராடுறது எண்டு ஒண்டும் பிடிபடேலை. அதுக்குப் பிறகுதான் 'இது ஆம்பிளைப் பிள்ளையள் படிக்கிற பள்ளிக்கூடம். பெண் அதிபர் வேண்டாம்' எண்டு பிரிசில் போர்ட்டை பிடிச்சுக்கொண்டு நிண்டிருக்கினம்.

ஒரு கதைக்கு ஆம்பிளைப் பிள்ளையள் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பெண் அதிபர் வேண்டாம் எண்டால், அந்தப் பள்ளிக்கூடத்தில் பொம்பிளை ரீச்சர் மாருமெல்லோ படிப்பிக்கக் கூடாது. அதைவிடப் பகிடி என்னெண்டால், இப்ப அதிபரா தெரிவு செய்யப்பட்டிருக்கிறவா, அதே பள்ளிக்கூடத்தில இவ்வளவு நாளும் பிரதிஅதிபரா இருந்தவா. அப்ப 'பெண் பிரதி அதிபர் இருக்கக்
கூடாது' எண்டு என் போர்க்கொடி தூக்கேலை.

சரி, இவை சொல்றபடி அதிபர் சேவை தரம் 1 இல் இருக்கிற ஒரு ஆண் அதிபரை உதே பள்ளிக்கூடத்துக்கு போட்டால், போராட்டத்தை கைவிட்டிடுவினமோ? இல்லைத்தானே. எல்லாமே அரசியலா மாறினா இப்பிடி தொட்டதுக்கும் போராடிப் போராடியே எங்கட சனம் மாய வேண்டியது தான். இதுக்குள்ள அந்த பதில் அதிபர் தான் பாவம். திறமை. தகுதி எல்லாம் கூடவா இருந்தும் அமைச்சரின்ர சொல்லைக் கேட்டு, சேராத இடம் சேர்ந்ததால வஞ்சத்தில வீழ்ந்து நெஞ்சாரத் துயர்ப்படுறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2024 at 00:20, நிழலி said:

எத்தனை ஆயிரம் பெண் போராளிகள் களமாடிய பூமியில் தான் இவ்வாறு பெண்கள் உட்பட பலர் பெண் தலைமைத்துவத்திற்கு எதிராக போராடுகின்றனர்.

கேவலமானவசெயல், பின் நின்று யாரேனும் தூண்டிவிடுகின்றார்களோ

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2024 at 20:21, Cruso said:

No Jews No News என்று சொல்லுவார்கள். இப்போது கிறிஸ்தவ மிஸ்சோனோரிகளின் ஆதிக்கம் என்று செய்தி வந்திருக்கிறது. அதாவது ஒரு பாடசாலைக்கு பெண் அதிபர் போடுபடடதட்கு கிறிஸ்தவ மிஸோநரிகள் இங்கு வந்திருக்கிறார்கள். யாழ்ப்பாணம் கல்வியில் முன்னேறுவதேட்கே இவர்கள்தான் காரணம். அது ஆண்கள் , பெண்கள் அல்லது கலப்பு பாடசாலையாக இருக்கலாம்.

இப்போது தஞ்சமடைந்திருப்பது அவர்களிடமா இல்லை வேறு எங்குமா?

நெடுக்ஸ் ஆண் கிறீத்துவ மிசனறிகளை பிழையான அர்த்தத்தில் கூறவில்லை என யூகிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நெடுக்ஸ் ஆண் கிறீத்துவ மிசனறிகளை பிழையான அர்த்தத்தில் கூறவில்லை என யூகிக்கிறேன். 

அப்படி என்றால் ஆதிக்கம் என்று எழுதி இருக்க மாடடார். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

புதினம் தெரியுமோ

(உதயன் 20/02/2024)

யாழ்ப்பாணத்தில நித்தியமா உள்ள ஒரு கல்லூரியில நேற்று ஆர்ப்பாட்டம். விசயம் என்னெண்டால், 208 வருசமா தொட்டுத் தொடரும் பட்டுப்பாரம்பரியம் கொண்ட 'தனியப் பெடியள் மட்டும் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பெண் அதிபரைப் போடக் கூடாதாம். கொஞ்சக்காலமா அந்தப் பள்ளிக்கூடம் பிரின் சிப்பல் இல்லாமல் தான் இயங்கிக்கொண்டு வருகுது.

இலங்கைக் கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த ஒருத்தர்தான் பதில் அதிபரா இருக்கிறார். அவர் ஏற்கனவே இன்னொரு பள்ளிக்கூடத்தில இருக்கேக்க, இந்தக் கல்லூரிக்கு வந்தால் அதிபராக்கலாம் எண்டு அமைச்சர் வாசிச்ச வீணைக்கு மயங்கித்தான் இஞ்ச வந்தவர்.

ஆனால் வீணை வாசிப்பெல்லாம் வீணாப் போன கதையா அவருக்குப் பதிலா அந்தப் பள்ளிக் கூடத்தில பிரதி அதிபரா இருந்தவாக்குத்தான் நியமனம் குடுபட்டிருக்கு. அதுக்கும் ஒரு காரணம் இருக்குது. உந்தப் பள்ளிக்கூடம் தேசிய பாடசாலை எண்டதால தேசிய பொதுச்சேவை ஆணைக்குழுதான் அந்தப் பள்ளிக் கூடத்துக்கான அதிபரின்ர தரம் பற்றி தீர்மானிக் கோணும். அதின்படி அதிபர் தரம் 1 ஐச் சேர்ந்தவைதான் உந்தக் கல்லூரிக்கு அதிபரா இருக்கலாமாம்.

ஆனால் அதிபர் பதவியை எதிர்பார்த்து வேற பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் அதிபர் தரத்தை விட கூடின இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். ஓவர் தகுதியும் பதவிக்கு ஆகாது கண்டியளோ. பள்ளிக்கூடத்துக்கு அதிபரைத் தெரிவு செய்யிறதுக்கு நடந்த இன்ரர்வியூவுக்கு அதிபர் தரம் 1 ஐச் சேர்ந்தவையைத் தான் கூப்பிடலாம். அதின்படி தான் இவ்வளவு காலமும் பிரதி அதிபரா இருந்தவாக்கு தகுதி இருந்ததால, அவாவையே அதிபராத் தெரிவு செய்திருக்கினம்.

ஆனால் இது வீணைக்கார அமைச்சருக்குப் பிடிக்கேலை. 'நான் கொண்டு வந்த ஆளுக்கு குடுக்காமல், அவரை விடதகுதி குறைஞ்ச ஓராளுக்கு குடுத்திட்டினம். ஆனால் உதை நான் சும்மா விடமாட்டன். நான் சொன்னதைச் செய்வன்.செய்யிறதைத்தான் சொல்லுவன்' எண்டு 'பஞ்ச்' வசனமெல்லாம் பேசி, வேட்டியை மடிச்சு கொண்டு தன்ர ஆக்களை போராடச் சொல்லிக் களத்தில் இறக்கி விட்டிட்டார். ஏற்கனவே பள்ளிக்கூட பழையமாணவர் சங்கமும் இந்த விசயத்தில ரண்டாத்தான் பிரிஞ்சு நிக்குது. அதில தனக்குச் சாதகமான ரீமை, இப்ப அதிபரா வரப்போறவாக்கு எதிரா ஏதும் காரணம் சொல்லிப் போராடுங்கோ எண்டு தியேட்டரில இருந்து ஓர்டர் போயிருக்குதாம்.

ஆனால் அவைக்கு என்ன காரணத்தைச் சொல்லிப் போராடுறது எண்டு ஒண்டும் பிடிபடேலை. அதுக்குப் பிறகுதான் 'இது ஆம்பிளைப் பிள்ளையள் படிக்கிற பள்ளிக்கூடம். பெண் அதிபர் வேண்டாம்' எண்டு பிரிசில் போர்ட்டை பிடிச்சுக்கொண்டு நிண்டிருக்கினம்.

ஒரு கதைக்கு ஆம்பிளைப் பிள்ளையள் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு பெண் அதிபர் வேண்டாம் எண்டால், அந்தப் பள்ளிக்கூடத்தில் பொம்பிளை ரீச்சர் மாருமெல்லோ படிப்பிக்கக் கூடாது. அதைவிடப் பகிடி என்னெண்டால், இப்ப அதிபரா தெரிவு செய்யப்பட்டிருக்கிறவா, அதே பள்ளிக்கூடத்தில இவ்வளவு நாளும் பிரதிஅதிபரா இருந்தவா. அப்ப 'பெண் பிரதி அதிபர் இருக்கக்
கூடாது' எண்டு என் போர்க்கொடி தூக்கேலை.

சரி, இவை சொல்றபடி அதிபர் சேவை தரம் 1 இல் இருக்கிற ஒரு ஆண் அதிபரை உதே பள்ளிக்கூடத்துக்கு போட்டால், போராட்டத்தை கைவிட்டிடுவினமோ? இல்லைத்தானே. எல்லாமே அரசியலா மாறினா இப்பிடி தொட்டதுக்கும் போராடிப் போராடியே எங்கட சனம் மாய வேண்டியது தான். இதுக்குள்ள அந்த பதில் அதிபர் தான் பாவம். திறமை. தகுதி எல்லாம் கூடவா இருந்தும் அமைச்சரின்ர சொல்லைக் கேட்டு, சேராத இடம் சேர்ந்ததால வஞ்சத்தில வீழ்ந்து நெஞ்சாரத் துயர்ப்படுறார்.

இப்படி ஏதாவது ஒரு  குண்டக்க மண்டக்க பிரச்சனை  இருக்கும் என்று ஒரு சந்தேகம் இருந்தது சரியாகப் போய்விட்டது. 

Just now, Cruso said:

அப்படி என்றால் ஆதிக்கம் என்று எழுதி இருக்க மாடடார். 

ஆதிக்கம் என்பது பிழையான அர்த்தத்தில் மட்டும் விளங்கிக்கொள்வதற்கான சொல் அல்லவே? 

எதுக்கும் நெடுக்ஸ் வரட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் போலி கெளரவ கலாநிதி பட்டங்களை  காசுக்கு விற்கும் திருபணியை ஒட்டுக்குழு மனிதர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து இருந்தார் 

இந்த மூன்றாம் தர கோமாளி மனிதர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக கல்வி அமைச்சினால் நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள அதிபரை பதவி ஏற்க விடாமல் ஒரு வாரமாக தடுத்து வருகின்றார் 

கல்வி அமைச்சின் விதிகளின் படி யாழ் மத்திய கல்லூரிக்கு  அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர் மட்டுமே நியமிக்க முடியும் என்கிற விதிகளை மீறி தன் விசுவாசி ஒருவரை  பதவிக்கு கொண்டு வர குழப்பங்களை செய்கின்றார்

பெண் அதிபராக முடியாது என்று  குழப்பங்களை தொடங்கியவர் இப்போது சாதி ரீதியாகவும் குழப்பங்களை ஏற்படுத்த  முயற்சிக்கின்றார் 

மறுபுறம்  மகாஜனா கல்லூரி இடமாற்றங்களை தடுத்து  யாழ்ப்பாண மாவட்ட  இடமாற்ற முறைமைகளை முழுமையாக சீரழித்து வருகின்றார்  

அரச விதிமுறைகளுக்கு மாறாக பள்ளிக்கூடங்களுக்கு போகாத நபர்களை தொண்டராசிரியர்களாக நியமிக்க முயற்சித்து வருகின்றார் 

பாடசாலைகளுக்கான வள பங்கீட்டில் தலையிடுகின்றார்.இதன் மூலம் கல்வி அதிகாரிகளுக்கு நெருக்கடி தருகின்றார். 

மேற்படி கோமாளித்தனங்களால்  முன்னணி பாடசாலையான வேம்படி பெண்கள் பாடசாலை முதல் கிராமிய பாடசாலைகள் வரை  சீரழிந்து வருகின்றது 

இது போதாதென்று யாழ்ப்பாண பல்கலை கழக பேரவைக்கு தனது அல்லக்கைகளை நியமித்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றார் 

அரசியல் அதிகாரமும் இராணுவ புலனாய்வு பிரிவும் தன்னோடு இருப்பதால் படிப்பறிவில்லாத இந்த மனிதர்  தான் நினைத்தையெல்லாம் செய்ய முயற்ச்க்கின்றார் 

போலி பட்டங்களை வழங்கும் முகவரான ஒட்டுக்குழு இந்த மனிதருக்கு தான் செய்வது குற்றம் என்பது கூட தெரியவில்லை

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0AvrFzon9eJtDLV6PJAKCvdtwYPDZejaNoCu1bkr9Dt4tRXBc47BpNEgBrMQCBfDpl&id=100057588638936

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை மிதிக்கும் சமூகம்      என்பதற்கு இதை விட வேறு சாட்சியம் வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்கன் ...மாவோ வின் சிந்தனைகளை தமிழருக்கு மெல்ல மெல்ல டிச் பண்ணுகிறார் போல....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

பெண்களை மிதிக்கும் சமூகம்      என்பதற்கு இதை விட வேறு சாட்சியம் வேண்டுமா?

இது சமூகமாக தெரியவில்லை.

தனியாள் போல தெரிகிறது.

23 minutes ago, putthan said:

சிங்கன் ...மாவோ வின் சிந்தனைகளை தமிழருக்கு மெல்ல மெல்ல டிச் பண்ணுகிறார் போல....

மாவோவின் சிந்தனைகள் இப்படியானதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.