Jump to content

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் தெரிவித்துள்ளனர்.

இறப்புக்குப் பின்னும் சாந்தனுக்கு விடுதலை கிடைக்காது போலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் மறைவுக்கு அனுதாபம் வெளியிடாத தமிழ்த் தேசிய கட்சிகள்

Oruvan

சந்தனின் மறைவுக்குத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் இதுவரை அனுதாபம் எதனையும் வெளியிடவில்லை. 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரூவிற்றர் தளத்தில் அனுதாபம் வெளியிட்டிருக்கிறார். 

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் அவர் அனுதாபம் தெரிவித்திருந்தார்.

தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனிப்பட்ட முறையில் அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால் கட்சிகளாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்த கூட்டு அனுதாபமாகவோ இதுவரை அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்தியா மீது குற்றம் சுமத்திப்பட்டிருந்த அந்த அறிக்கையில் ஈழத்தமிழர் மீதான அரசியல் பழிவாங்கல் குறித்தான பின்புலங்கள் வெளிப்பட்டிருந்தன. 

மாணவர்களின் அறிக்கையில் காந்தி தேசத்தின் செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்களும் உள்ளடங்கிருந்தன.

சென்னையில் இருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடலை வவுனியாவில் வைத்து அல்லது யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்க விரும்பியிருந்தனர்.

ஆனாலும் சாந்தனின் பூதவுடலைப் பொறுப்பேற்று அஞ்சலி நிகழ்வுகளையும் செய்யும் ஏற்பாடுகளை சாந்தனின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகனிடம் கையளித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒருவன் செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்ட கோமகன், பொதுமக்கள் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகளைத் தமது அமைப்பு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். 

அதேவேளை தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் அஞ்சலி நிகழ்வில் உரையாற்ற இடமளிக்க முடியாதென சாந்தனின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாகவும் அறியமுடிகின்றது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தியை வரவேற்ற கோமகன், அவருடன் இணைந்து சாந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றார். 

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் சட்டவிதிகளுக்கு அமைவாக சாந்தனின் பூதவுடல் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்படும் வரை அங்கு நின்ற கோமகன், அஞ்சலி நிகழ்வு ஏற்பாடுகளுக்காக நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
 
https://oruvan.com/sri-lanka/2024/03/02/tamil-politician-not-tribute-to-santhan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் மறைவிற்கு தமிழ் மக்கள் கொடுக்கும் அஞ்சலி இந்திய அராஜகப் பேய்களுக்கு நல்ல பாடத்தைக் கொடுக்கட்டும்.

கண்ணீர் அஞ்சலிகள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வேசிய கட்சிகளுக்கு நல்ல செருப்படி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20240301_151017-750x375.jpg

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிக்க இடமளிக்க வேண்டும்: போராளிகள் நலன்புரிச் சங்கம் கோரிக்கை.

சாந்தனின் நினைவேந்தலை ஜனநாயக ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் இடமளிக்க வேண்டும் என போராளிகள் நலன்புரிச் சங்க தலைவரும், முன்னாள் அரசியல் கைதியுமான செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது இந்திய அரசால் சட்டப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்தனின் உடலத்தை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியாத இழுபறி நிலையில் இருந்தது. இது கூட இந்திய -இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1371924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

மறைந்த திரு சாந்தன் அவர்களுக்கு ஈழத் தமிழரால் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்குச் சொல்லும்/சொல்லப்போகும் செய்தி என்ன? 

எந்த செய்தியையும் சொல்லப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் கிடைக்கப்போவதும் இல்லை. 

படிக்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று கூறிவிட்டு முகநூல்களில் வீரவணக்கம் செலுத்துவதும் தேசக கனவை சுமந்தவன் தேசமெங்கும் நடந்தவன் போராளி சாந்தன் என்று  போஸ்ரர் அடிப்பதும் சரியான ஆளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உலகத்தை நினைக்க வைக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

புலிகளை மக்கள் இன்னமும் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதும், ரஜீவ் தனது பாவங்களுக்கான தண்டனையினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் தான் அந்தச் செய்தி.

ராஜீவ் தன்பாவங்களுக்கு தண்டனை பெற்றார் என்ற உங்கள் கூற்று  உண்மையானால்  இளமைக்காலம் முழுவதையும் இழந்து  இறுதியில் தாயை பார்ககாமலே மரணித்த சாந்தனுக்கும் இது பொருந்துமா?  ராஜீவுக்காவது  உலகம் முழுவதும் மரியாதை உள்ளது.

ராஜீவ் கொலை போன்றவை புலிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க உதவுகின்றது என்பது உங்களுக்கு மகிழ்சசியை கொடுத்தாலும் பரந்த  உலகின் முன்னால்   இதில் எந்த பெருமையும் இல்லை. 

 இவ்வாறான வெறும் சென்றி மென்ற் உசுபேற்றல்கள்   தமிழரின் எதிர்காலத்திற்கு  கிஞ்சித்தும் பிரயோசனப்படப் போவதில்லை. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது.

தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது

பிரேத பரிசோதனையில் ஏதாவது மெல்லக் கொல்லும் விஷம் கண்டு பிடிக்கப்பட்டால் சிறிலங்கா அதனைப் பகிரங்கப்படுத்துமா என்பதும் கேள்விக்குறியே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, island said:

எந்த செய்தியையும் சொல்லப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் கிடைக்கப்போவதும் இல்லை. 

படிக்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று கூறிவிட்டு முகநூல்களில் வீரவணக்கம் செலுத்துவதும் தேசக கனவை சுமந்தவன் தேசமெங்கும் நடந்தவன் போராளி சாந்தன் என்று  போஸ்ரர் அடிப்பதும் சரியான ஆளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உலகத்தை நினைக்க வைக்கும்.

இந்தியா மீதான ஈழத் தமிழரின்  வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் செயற்பாடாக இது இருக்கப்போகிறது. 

Inferiority complex ஆல் பீடிக்கப்பட்டு, வர்ணாசிரம வேறுபாட்டால் நிரம்பி, தற்பெருமை தலைக்கேறி,  ஜெய்சங்கர் போன்ற குறைகுடங்களால் ஆட்டம் போடும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள், ஈழத் தமிழரின் இந்தியா மீதான வெறுப்பைக் கண்டு கொள்ள சாந்தனின் மரணம் ஒரு நல்ல சந்தர்ப்பமாக இது இருக்கிறது. 

இலங்கையில் உள்ள எந்த ஒரு இனமும் (சில RSS பதர்களைத் தவிர) இந்தியாவை நம்பாது என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை கண்டுகொள்ளும். 

21 hours ago, கிருபன் said:

மீண்டும் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சாந்தனின் உடல்

Oruvan

முன்னாள் போராளி சாந்தனின் உடலானது இலங்கையில் மீண்டும் பிரதேச பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை (03) இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதம்

சாந்தனின் பூதவுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நீண்ட இழுபறிகளின் பின்னராக உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்துக்கு பூதவுடலை எடுத்துச் செல்வதில் தாமதமாகியுள்ளது.

தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் பூதவுடல் கையளிக்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலத்தை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் உறவினர் ஒருவன் செய்தி சேவைக்குத் தெரிவித்தனர்.
 
https://oruvan.com/sri-lanka/2024/03/01/the-plane-carrying-shantans-lotus-leaves

அது என்ன முன்னாள் போராளி? 

ஆளாளுக்கு கற்பனைக் குதிரைகளைத் தட்டி விடுகிறார்கள்,.😏

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

பிரேத பரிசோதனையில் ஏதாவது மெல்லக் கொல்லும் விஷம் கண்டு பிடிக்கப்பட்டால் சிறிலங்கா அதனைப் பகிரங்கப்படுத்துமா என்பதும் கேள்விக்குறியே?

அரபாத்துக்கு நடந்தது தெரியும் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ யாழ் களத்தில் எந்தக்கருத்துக்களையும் பகிரமுடியாது. அப்படி ஏதாவது கருத்தெழுதினால் சாணி கரைச்சு முகத்தில அடிக்க நிறையப்பேர் ஒரு கைபார்ப்பம் வரட்டும் என வரிசைகட்டி நிற்கிறார்கள். 

கொஞ்சக்காலத்துக்கு யாழ் களத்தைவிட்டு விலகி இருப்பது நல்லம் என நினைக்கிறன். அங்க என்ன மாதிரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kapithan said:

இந்தியா மீதான ஈழத் தமிழரின்  வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தும் செயற்பாடாக இது இருக்கப்போகிறது. 

ஆனால்  ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யபட்ட தமிழ் தலைவர்கள் இந்தியா சொற்படி தான் நடப்பவர்கள்.

9 hours ago, Kapithan said:

இலங்கையில் உள்ள எந்த ஒரு இனமும் (சில RSS பதர்களைத் தவிர) இந்தியாவை நம்பாது என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை கண்டுகொள்ளும். 

இலங்கை மத்தியமாகாணத்து  தமிழர்களும்  அவர்கள்  தலைவர்களும்  இந்தியாவை தீவிரமாக நம்புபவர்கள்.

Edited by விளங்க நினைப்பவன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால்  ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யபட்ட தமிழ் தலைவர்கள் இந்தியா சொற்படி தான் நடப்பவர்கள்.

இலங்கை மத்தியமாகாணத்து  தமிழர்களும்  அவர்கள்  தலைவர்களும்  இந்தியாவை தீவிரமாக நம்புபவர்கள்.

JVP தமிழர்கள், துவராக தமிழர்கள்,சில முன்னாள் போராளி தமிழர்கள் ,  தென்னிந்திய திருச்சபை தமிழர்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இலங்கையில் உள்ள எந்த ஒரு இனமும் (சில RSS பதர்களைத் தவிர) இந்தியாவை நம்பாது என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை கண்டுகொள்ளும். 

அது என்ன முன்னாள் போராளி? 

ஆளாளுக்கு கற்பனைக் குதிரைகளைத் தட்டி விடுகிறார்கள்,.😏

தமிழர்கள் தங்களை வெறுக்கின்றனர் என்ற செய்தியை இந்தியா சிங்கள மக்களுக்கு காட்டுவதற்கு இது உதவும்....நாங்கள் தமிழரை விட சிங்களவராகிய உங்களுக்கே ஆதரவு என காட்டுகின்றனர்...தமிழகமீனவர்களுக்கு எதிரான போராட்டம்,மற்றும் கச்சடீவுக்கு அவர்களை வரமால் பண்ணியவை...

7 hours ago, Elugnajiru said:

இப்போ யாழ் களத்தில் எந்தக்கருத்துக்களையும் பகிரமுடியாது. அப்படி ஏதாவது கருத்தெழுதினால் சாணி கரைச்சு முகத்தில அடிக்க நிறையப்பேர் ஒரு கைபார்ப்பம் வரட்டும் என வரிசைகட்டி நிற்கிறார்கள். 

கொஞ்சக்காலத்துக்கு யாழ் களத்தைவிட்டு விலகி இருப்பது நல்லம் என நினைக்கிறன். அங்க என்ன மாதிரி?

சாணி தானே ...அது அகிம்சையின் உச்சம் 
அசிட் அடிச்சால் தான் வன்முறை ...

அகிம்சை என்ற காரணத்தால் நீங்கள் தொடரலாம்😃

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

8 hours ago, Elugnajiru said:

இப்போ யாழ் களத்தில் எந்தக்கருத்துக்களையும் பகிரமுடியாது. அப்படி ஏதாவது கருத்தெழுதினால் சாணி கரைச்சு முகத்தில அடிக்க நிறையப்பேர் ஒரு கைபார்ப்பம் வரட்டும் என வரிசைகட்டி நிற்கிறார்கள். 

கொஞ்சக்காலத்துக்கு யாழ் களத்தைவிட்டு விலகி இருப்பது நல்லம் என நினைக்கிறன். அங்க என்ன மாதிரி?

சாணியில் பிள்ளையாரை பிடித்து வைத்து கும்புடுகிறீர்கள். சாணியை கரைத்து  வீட்டுக்கு தெளிக்கிறீர்கள். சாணியை கரைத்து முகத்தில் அடிப்பதை நீங்கள் பெருமையாக நினைக்க வேண்டும். 😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

சாணியில் பிள்ளையாரை பிடித்து வைத்து கும்புடுகிறீர்கள். சாணியை கரைத்து  வீட்டுக்கு தெளிக்கிறீர்கள். சாணியை கரைத்து முகத்தில் அடிப்பதை நீங்கள் பெருமையாக நினைக்க வேண்டும். 😁

RSS என முத்திரை குத்தி விடுவார்கள்   என பயப்படுகிறார் போல... 😃

 சாந்தனின் மரண செய்தியில் இப்படி எழுதுகிறார்கள் என தோழர்கள் வந்து கண்டன குரல் எழுப்புவார்கள்  தேசத்தின் நலன் கருதி       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்தியாவில் இரண்டு துதரங்கள். அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துணைத்தூரகம் அமைத்திருத்தும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பு என்ன என்பதை அறியமுடியாத துணைத்தூரகம் தமிழர்தாயகத்தில் எதற்காக இருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சகத்தால் வீரச்சாவடைந்த சாந்தனுக்கு தமிழர்தாயகம் பெருமளவில் திரண்டு வந்து உணர்வு பூர்வாக வீரவணக்கம் செய்து இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது. ஆம் இந்திய அரசு முதுகில்குத்தினாலும் தமிழர்தாயகம்இந்திய அரசின் முகத்தில்தான் குத்தியிருக்கிறது.https://fb.watch/qAfJ49Box0/

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புலவர் said:

3 உள்ளன புலவர்… கண்டியிலும் துணைத்தூதரகம் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

33 ஆண்டுகளாய் தன் மகனின் வரவுக்காக காத்திருந்தவள் கண்ட பொழுது… 😥

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2024 at 14:27, island said:

ராஜீவ் தன்பாவங்களுக்கு தண்டனை பெற்றார் என்ற உங்கள் கூற்று  உண்மையானால்  இளமைக்காலம் முழுவதையும் இழந்து  இறுதியில் தாயை பார்ககாமலே மரணித்த சாந்தனுக்கும் இது பொருந்துமா?  ராஜீவுக்காவது  உலகம் முழுவதும் மரியாதை உள்ளது.

ராஜீவ் கொலை போன்றவை புலிகளை மக்கள் நினைவில் வைத்திருக்க உதவுகின்றது என்பது உங்களுக்கு மகிழ்சசியை கொடுத்தாலும் பரந்த  உலகின் முன்னால்   இதில் எந்த பெருமையும் இல்லை. 

 இவ்வாறான வெறும் சென்றி மென்ற் உசுபேற்றல்கள்   தமிழரின் எதிர்காலத்திற்கு  கிஞ்சித்தும் பிரயோசனப்படப் போவதில்லை. 

அதாவது சாந்தனை இரகசியமாக புதைத்திருக்கவேண்டும். எவருடைய பொல்லாங்கும் வேண்டாம். எம் இனம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு வாழப் பழகணும். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துணைத்தூரகம் அமைத்திருத்தும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பு என்ன என்பதை அறியமுடியாத துணைத்தூரகம் தமிழர்தாயகத்தில் எதற்காக இருக்கிறது.

தமிழர்கள் ஒன்று சேர்ந்திட கூடாது என்பதற்காகவும் இந்திய புலனாய்வுத்துறையின் வேலைகளை இலகுவாக்கவுமே இது இருக்கிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

4 hours ago, புலவர் said:

இலங்கையில் இந்தியாவில் இரண்டு துதரங்கள். அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் துணைத்தூரகம் அமைத்திருத்தும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பு என்ன என்பதை அறியமுடியாத துணைத்தூரகம் தமிழர்தாயகத்தில் எதற்காக இருக்கிறது.

எங்களின் விருப்பு வெறுப்பு அவர்களுக்கு முக்கியமில்லை. எங்களை கருவறுத்தல் தான் அவர்களது விருப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 2/3/2024 at 08:20, island said:

எந்த செய்தியையும் சொல்லப்போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் கிடைக்கப்போவதும் இல்லை. 

படிக்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டார் என்று கூறிவிட்டு முகநூல்களில் வீரவணக்கம் செலுத்துவதும் தேசக கனவை சுமந்தவன் தேசமெங்கும் நடந்தவன் போராளி சாந்தன் என்று  போஸ்ரர் அடிப்பதும் சரியான ஆளுக்கு தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று உலகத்தை நினைக்க வைக்கும்.

இந்திய ஊடகங்களின் கருத்துப்படி சாந்தன் விடுதலை புலிகள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்.  விடுதலை புலிகளால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நின்று விடுதலை புலிகளுக்காக வேலை பார்த்தார். 

வெவ்வேறு புலனாய்வு போராளிகள் வெவ்வேறு திட்டங்களில் செயற்பட்டார்கள் என வைத்தால் சாந்தனும் அவ்வாறு செயற்பட்டு உள்ளார். அவர் ராஜீவ் கொலை திட்டத்தில் பங்குபற்றாமல் போய் இருக்கலாம். ஆனால் விடுதலை புலிகள் அமைப்பிற்காக இந்தியாவில் செயற்பட்டு உள்ளார் தானே?

அப்படி பார்த்தால் வீரவணக்கம் சொல்வது தவறாக தெரியவில்லை.

நாங்கள் நீங்கள் சமூக ஊடகத்தில் எழுதுவதை வைத்து உலகம் விடயங்களை அறியும் என எண்ணுவது நகைப்பானது. 

ஆளாளுக்கு தமது மன அழுத்தங்களை போக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், பொழுது போகவும், பெருமைக்கும், மற்றும் இன்னோரன்ன காரணங்களுக்கு கருத்துக்கள் கூறுகின்றார்கள்.

இப்போது சாந்தன் பேசுபொருள் ஆகி உள்ளார். சிறிது நாட்களில் தலைப்பு இன்னோரிடம் சென்றுவிடும். 

Edited by நியாயம்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அதாவது சாந்தனை இரகசியமாக புதைத்திருக்கவேண்டும். எவருடைய பொல்லாங்கும் வேண்டாம். எம் இனம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு வாழப் பழகணும். 

சிங்கள பெரும்பான்மை தேசியம் வளர, அவர்கள்  மகிழ்ச்சியாக இனவழிப்பு செய்ய ...நாங்கள் பொத்திக்கொண்டு தான் வாழ வேண்டும்.. என சிலர் விரும்பலாம்...

  • Thanks 1
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.