Jump to content

தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png 

 GF7F7giXQAA4Cui.jpg

யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம்  09ஆம் திகதி ஹரிகரனின் 
இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை  வாசகர்களுக்கு  நினைவிருக்கும்.

சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன்  சென்ற போது   நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது.

பனைமரத்தில் ஏறிய இந்த  நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள   பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்."  என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள்.

இது சம்பந்தமான  விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர் பார்ப்பதாகவும்,  முதல் கட்டமாக   நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும்  மூத்த  காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

Kaathilai puu. Com

Edited by தமிழ் சிறி
  • Like 4
  • Haha 14
Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணையின் வருடாந்த சுயஆக்கம் எங்கே என யோசித்தேன், வந்துவிட்டது!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ண தமணா வைச்சுட்டு போன பனை மரத்தை ஏன் அண்ண வெட்டினீங்கள்...😆அது ஏற்கனவே வழைந்து தான் இருந்தது என்றாலும் .........✍️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

spacer.png 

 GF7F7giXQAA4Cui.jpg

யாழ். முற்றவெளியில் தமன்னாவை பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சென்ற மாசி மாதம்  09ஆம் திகதி ஹரிகரனின் 
இசை நிகழ்ச்சியின் போது பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்து கொண்டமை  வாசகர்களுக்கு  நினைவிருக்கும்.

சுமூகமாக நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகை தமன்னா மேடைக்கு வந்த போது, ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தமன்னாவை பார்க்க முண்டியடித்து மேடைக்கு முன்  சென்ற போது   நிகழ்ச்சியில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. சிலர் அங்கிருந்த பனைமரத்தில் ஏறி தமன்னாவை பார்த்து ரசித்த காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக தென்னிந்தியாவிலும், புலம்பெயர் தேசங்களிலும் அலசி ஆராயப்பட்டது.

பனைமரத்தில் ஏறிய இந்த  நிகழ்வானது யாழ். மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதென்று ஒரு சாரார் கோபம் கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு முற்றவெளியில் இருந்த இரு பனை மரங்களும் இனம் தெரியாத நபர்களால் வெட்டி வீழ்த்தப் பட்டுள்ளது. வீழ்ந்துள்ள   பனைமரத்தின் அருகில், "யாழ்ப்பாணத்தின் அவமானச் சின்னமாக நான் இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொண்டேன். இப்படிக்கு பனைமரம்."  என்று எழுதிய துண்டுப் பிரசுரத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளார்கள்.

இது சம்பந்தமான  விசாரணைகளை காவல் துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்களின் ஒத்துழைப்பையும் எதிர் பார்ப்பாதாகவும், முதல் கட்டமாக   நான்கு பல்கலைக்கழக மாணவர்களை சந்தேகத்தின்பேரில் கைது செய்து இருப்பதாகவும் மூத்த  காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

Kaathilai puu. Com

🤣...........

இதுக்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்குது போல........அனுஷ்காவையோ அல்லது இன்னும் யாரையோ அடுத்ததாக கூட்டிக் கொண்டு வருகிற பிளான் போல. எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இப்பவிருந்தே செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.........😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின் சுவாரசியமாக  ஏப்ரல் பூலில் அடித்துவிட்டிருக்கிறீர்கள். நாங்க நம்பீற்றம். பாவம் பனை   மரங்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிசயம்.. முத்தவெளி கடக்க வெட்டின பனமரம் இரவோட இரவா முளைச்சு வளந்து நிக்குது.. தமன்னாவின் சக்தியோ சக்திதான்.. ஓம் தமன்னா அடி போற்றி..🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதல்லை தலைப்பை பாத்திற்று நம்பிற்றன்.

பேந்து ஏராளன் அவர்களின் கருத்தை வாசிச்சிற்றுத்தான், அட இன்டைக்கு ஏப்ரல் ஒன்டென்டதே ஞாபகம் வந்திது!!

கொஞ்சம் ஓட்டியிருந்தால், இந்திய இராணுவம் இலங்கை வந்த கதையாக்கியிருக்கலாம்😂

எங்கட ஊடகங்களும் காவியிருக்கும்.😜

ஒருங்கிணைப்புத் தாக்குதல் முயற்சி ஏமாற்றம்.😄😄

  • Haha 1
Link to comment
Share on other sites

வாசித்ததும் எப்படி தமிழ் சிறியால் இப்படி நகைச்சுவையாக யோசிக்க முடிந்தது என ஆச்சரியப்பட்டேன். 

யார் கண்டது, உண்மையியே இந்த இரு பனை மரங்களையும் ஆரும் வெட்டினாலும் வெட்டுவர் இனி..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து இருந்தாலும் இருக்கும் என்று எண்ணினேன்.

நல்லதொரு திட்டமும் வர்ணனையும்.

பாராட்டுக்கள் சிறி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் காலையில் பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டு கடந்து போய் விட்டேன் ........!  😂

சூப்பர் சிறியர்......! 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஒற்றை பனையின் கள் நல்ல ருசி ...அதை போய் வெட்ட எப்படி உங்களுக்கு மனசு வந்தது ....ஒர் பனங்காட்டான் இப்படி செய்ய மாட்டான் ...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

GF7F7giXQAA4Cui.jpg

தன்னா வந்து ஆடினதை விட.....சிறித்தம்பியின்ர புலுடாவுக்கும் இந்த படம் தான் ஹைலைட்....ஒரு வித கிக்.. 😍

பனையிலை ஏறி பக்கத்து வீட்டு புதினம் பாத்தவங்களுக்குத்தான் தெரியும் அதின்ர அருமை 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசித்து விட்டு நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்து சென்றேன்…!😋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி கண்டவுடன் குருத்தெடுத்து சாப்பிட ஆசைவந்தது...தேதியைப் பார்த்தேன்...ஏப்பிரில் 01..சிறியர் கடைசியில் தமன்னாவை வைத்து விளையாட்டுக் காட்டிவிட்டார் என்றபடி நகர்ந்தேன்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமன்னா காவோலை தா…காவோலை தா என்றுதானே கேட்டவா?

ஏன் மரத்தையே வெட்டி கொடுத்துள்ளார்கள்🤣.

பிந்திய செய்தி வெட்டிய மரம் எட்டுக்கோடிக்கு ஏலம் போனது🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா... நல்ல வேளை, நான் தப்பிச்சேன்! உதல்லாம் தற்கொலையாகாது சிறியர். தமன்னாவை பாத்திட்டு தற்கொலையா? ஒருவேளை அவாவோட போக முடியலை எண்ட கவலையால் வந்த விரக்தியாய் இருக்குமோ? உங்களுக்கு ஏற்றாற்போல் படங்களும்  செய்தியும் வாய்த்து விடுகிறது, யாரும் ஏமாறாவிடாலும் எல்லோரையும் சிரிக்க வைத்து விடுவீர்கள்.

22 hours ago, குமாரசாமி said:

பனையிலை ஏறி பக்கத்து வீட்டு புதினம் பாத்தவங்களுக்குத்தான் தெரியும் அதின்ர அருமை 

கண்டிப்பாக பனைமரம் வெட்டிய செய்தி உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்த்தேன். புதினம் பார்க்கிறவர்களுக்கு மாத்திரமல்ல, பனைக்கு கீழிருந்து பால் குடிக்கிறவர்கள், பட்டம் விடுகிறவர்கள் எல்லாம்  பனைமரத்தின் அருமையை நினைத்து கவலையும் கோபமும் கொண்டிருப்பார்கள். அந்த பனைமரத்தின் அருமை அவர்களுக்குத்தான் புரியும். 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

கண்டிப்பாக பனைமரம் வெட்டிய செய்தி உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணும் என எதிர்பார்த்தேன். புதினம் பார்க்கிறவர்களுக்கு மாத்திரமல்ல, பனைக்கு கீழிருந்து பால் குடிக்கிறவர்கள், பட்டம் விடுகிறவர்கள் எல்லாம்  பனைமரத்தின் அருமையை நினைத்து கவலையும் கோபமும் கொண்டிருப்பார்கள். அந்த பனைமரத்தின் அருமை அவர்களுக்குத்தான் புரியும். 

பனைமரத்த வெட்டினால் கோபம் வராது கண்டியளோ! ஏனெண்டால் அது ஒரு கற்பகதரு.தமிழனை மாதிரி வெட்ட வெட்ட தளைக்கும் கொள்கை கொண்டது.ஊரிலை பனங்கொட்டையை எங்கையெண்டாலும் தாட்டு பாருங்கோ தன்னிச்சையாய் வளரும்.தண்ணியும் ஊற்றி வளர்க்க தேவையில்லை. பராமரிக்கவும் தேவையில்லை. மரம் வளர்ந்தா பிறகு அதின்ர பலனை அனுபவிக்க மட்டும் அதுக்கு கிட்ட போனால் போதும்.

மற்ற மரங்கள் அப்பிடியில்லை. கண்ணும் கருத்துமாய் வளர்க்கணும்.

  • Like 5
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.