-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகிகள் ஆகியோரின் தற்பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அவைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பெயர் பட்டியல் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குறித்து விசாரித்து துப்பாக்கிகளை பொலிஸ் காவலில் எடுக்க அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198551 -
By கிருபன் · பதியப்பட்டது
வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார். அப்பெண் மேலும் தெரிவிக்கையில் , “சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.” அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வேட்பாளர்-பட்டியலில்-பெயர்-பெண்-முறைப்பாடு/150-347050 -
நீங்கள் ஒரு மணித்தியாலத்தினை கூட்டி சொல்கிறீர்கள். தற்பொழுது நேரம் மாலை 5.12
-
By ஏராளன் · பதியப்பட்டது
எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர் “குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.” மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பகாரியா கிராமத்தை சேர்ந்த கெளஷல்யா, தனது இரண்டாம் வயதில் இந்த நாத்ரா வழக்கப்படி நிச்சயம் செய்யப்பட்டு, 2021 ஆண்டு தன்னுடைய 22 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய தந்தை ஒரு விவசாயி. “கடந்த மூன்று ஆண்டுகளில் நான் மிகுந்த வன்முறைக்கு ஆளானேன். என்னிடம் ஐந்து லட்சம் பணமும், இருசக்கர வாகனமும் கேட்டனர். அதை என்னால் தரமுடியாததால் என்னுடைய தந்தை வீட்டுக்கு திரும்பி வந்தேன்,” என்றார் கெளஷல்யா. சமூக அழுத்தத்திற்கும் திருமண உறவிலிருந்து வெளிவர பயந்தும் கெளஷல்யாவின் குடும்பத்தினர் இந்த பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல் மீண்டும் அவரை அவரது கணவர் வீட்டிற்கு பலமுறை அனுப்பிவைத்து விட்டனர். “நான் துன்புறுத்தப்பட்டேன். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து 18 லட்ச ரூபாய் பணத்தை அவர்களிடம் கொடுத்து என்னை இந்த உறவிலிருந்து விடுவிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார். 2023 ஆம் ஆண்டு கெளஷல்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இவ்வளவு பணத்தை கொடுக்க இயலாது என்பதை உணர்ந்த குடும்பத்தினர் இவரை மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். இந்த விஷயம் கிராமப் பஞ்சாயத்து வரை சென்றது. அங்கு, இத்திருமணத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ரூ.18 லட்சத்தை கொடுத்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கெளஷல்யா, சோண்டியா சமூகத்தை சேர்ந்தவர். இது இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற சமூகமாகும். இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய பிரச்னைகளை தீர்க்க காவல்துறையிடமோ நீதிமன்றமோ செல்வதில்லை. கிராமப் பஞ்சாயத்திற்கு மட்டும் தான் செல்கிறார்கள். படக்குறிப்பு, கெளஷல்யா சோண்டியா சமூகத்தை சேர்ந்தவர். இது இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற சமூகமாகும். ராஜஸ்தானிலும் தொடரும் இந்த பழக்கம் பகாரியா கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த ஊருக்குள் செல்லும் பிரதான சாலையே மேடும் பள்ளமுமாக இருக்கிறது. இங்கு பெரும்பாலும் மண் சாலைகள் தான் இருக்கின்றது. அதே போல பெரும்பாலான பெண்கள் முக்காடு அணிந்தபடியே இருக்கின்றனர். தேசிய குடும்பநலத்துறை ஆய்வின் படி, ராஜகர்கில் 52% பெண்கள் படிப்பறிவில்லாதவர்களாகவும், 20 ல் இருந்து 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 46 சதவீதத்தினர் 18 வயதை அடைவதற்கு முன்பே திருமண உறவில் தள்ளப்படுகின்றனர். அதாவது குழந்தைத் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் தெரியவருகிறது. 2011 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி ராஜ்கர்கின் மக்கள்தொகை 15.45 லட்சமாக இருந்தது. அதில் பெண்கள் 8 லட்சம் பேர் இருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் பகுதியை போல, ராஜஸ்தானில் உள்ள அகர் மல்வ, குணா, ஜலவர் ஆகிய இடங்களிலும் ஜடா நாத்ரா இன்னும் நடைமுறையில் தொடர்ந்து வருகிறது. படக்குறிப்பு, பகாரியா கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இந்த ஊருக்குள் செல்லும் பிரதான சாலையே மேடும் பள்ளமுமாக இருக்கும் இந்த பழக்கம் பற்றிய பின்னணி 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை இவ்விடங்களில் நடந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ராஜ்கரின் பீஜி கல்லூரியில் 1989 ஆம் ஆண்டு முதல் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றுகின்றார் சீமா சிங் . "ஜடா நாத்ரா நடைமுறை பற்றி எந்தவொரு எழுத்துப்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக இந்த பழக்கம் கைம்பெண்களுக்கும், திருமணமாகாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் கைகொடுத்துள்ளது. ஆரம்ப காலங்களில் இது நாட பாத்ரா என்று அழைக்கப்பட்டது." என்று அவர் கூறினார். அவரைப் பொருத்தவரை, “இந்த நடைமுறையினால் கைம்பெண்களுக்கு மீண்டும் இந்த சமூகத்தில் இணைந்து செயல்பட ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்பொழுது இந்த வடிவமைப்பில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றைக்கு பெண்களை பேரம் பேசி சிறுவயதிலேயே திருமணமோ அல்லது நிச்சயமோ செய்துவைக்கின்றனர். பின்னர் ஏதேனும் சிக்கல் வரும் பொழுது இந்த உறவிலிருந்து வெளிவர பெண்கள் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. பெண்கள் இந்த நடைமுறையை எதிர்த்தாலோ அல்லது பணத்தை கொடுக்கமுடியவில்லை என்றாலோ பிரச்னை கிராமப் பஞ்சாயத்திற்கு செல்லும். அந்த சமூகத்தை சேர்ந்தவர்களே எவ்வளவு பணம் கொடுத்து விவாகரத்து பெற வேண்டும் என்று முடிவெடுப்பர்,”என்று சீமா சிங் குறிப்பிடுகிறார். அங்குள்ள உள்ளூர் பத்திரிகையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான பானு தாகூர் இதைப் பற்றி கூறுகையில், “இங்குள்ள மக்களின் மீது இந்த நடைமுறையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இவர்கள் பதிவுத் திருமணத்தை விட இதைத் தான் அதிகமாக நம்புகின்றனர்.” என்றார். கடந்த மூன்று ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட ஜடா நாத்ரா வழக்குகள் ராஜ்கரில் பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பற்றி மட்டும் தான் தெரியும், இன்னும் பதிவு செய்யப்படாத இதுபோன்ற பல நிகழ்வுகள் இருக்கலாம் என்று பானு தாகூர் தெரிவித்தார். படக்குறிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட ஜடா நாத்ரா வழக்குகள் ராஜ்கரில் பதிவாகியுள்ளன மூன்று ஆண்டுகளில் 500 வழக்குகள் இதுதொடர்பாக நாங்கள் ராஜ்கரின் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஷ்ராவை சந்தித்தோம். “பெண்களின் உரிமைகளை பறிக்க இன்றளவும் முயற்சி நடக்கிறது. இது சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தாலும் பாரம்பரியம் என்ற பெயரில் இதை தொடர்ந்து செய்து வருகின்றனர்,” என்கிறார் அவர். “குழந்தைப்பருவத்தில் அவர்களுக்கு நிச்சயம் செய்து வைத்துவிடுகிறார்கள். பின் இந்த உறவில் பிரிவு ஏற்பட்டால் அந்த பெண்ணிடம் பல லட்ச ரூபாயை மாப்பிளை வீட்டார் கேட்கின்றனர். பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் ஒரு செயலாக இது இருக்கின்றது, ஆனால், இங்குள்ள மக்கள் இதை சரியான செயல்முறையாக பார்க்கின்றனர். ஏறத்தாழ 500 வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவாகியுள்ளது. ஆனால் இதை பார்க்கும் பொழுது முன்பை விட மக்கள் தைரியமாக முன்வந்து சட்டத்தின் உதவியை நாடுவது நம்பிக்கையளிக்கிறது,” என்றார் ஆதித்ய மிஷ்ரா. “இந்த நடைமுறையில் பெண்களை வைத்து பேரம் பேசுகின்றனர். பழைய உறவிலிருந்து வெளிவர வேண்டுமானால் அப்பெண் ஒரு தொகையை அந்த ஆணுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அந்த பெண்ணுக்கு வெளியில் பல வரன்கள் பார்க்கப்படும். அதில் யார் அந்த பெண்ணுக்கு அதிக தொகையை கொடுக்கின்றனரோ அவருடன் அந்தப் பெண் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார். அவரிடமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பழைய திருமண உறவிலிருந்து அந்தப் பெண் வெளியேறுகிறார்,” என்கிறார் சீமா சிங். படக்குறிப்பு, முன்பை விட மக்கள் தைரியமாக முன்வந்து சட்டத்தின் உதவியை நாடுவது நம்பிக்கையளிக்கிறது என்கிறார் காவல் கண்காணிப்பாளர் ஆதித்ய மிஷ்ரா இது மங்கிபாயின் கதை ராஜ்கரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோடக்கியா கிராமத்தை சேர்ந்தவர் மங்கிபாய். இவரின் கதையும் கெளஷல்யா போன்றது தான். இதை எடுத்துரைக்கும் போது அவர் உணர்ச்சிவசப்பட்டார். “எனக்கு அங்கு ஒழுங்கான உணவோ அல்லது உறங்கும் இடமோ கிடைக்கவில்லை. என்னுடைய கணவர் மது அருந்துவதை தடுக்கும் போது என்னை அடிப்பார். என்னுடைய வாழ்க்கை அங்கு மோசமாகிவிட்டது. எனக்கு பெரிய கனவுகள் இருந்ததில்லை. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஆனால் அதுவும் நடக்காமல் போய்விட்டது,” என்று வருந்தினார். அந்த திருமணத்தில் இருந்து வெளியேற அவர் 5 லட்ச ரூபாய் தர வேண்டும் என்று கணவர் வீட்டார் கேட்டுள்ளனர். அதனால் கிராமப் பஞ்சாயத்திற்கு அதனை எடுத்து சென்ற போது அது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மங்கிபாய், கில்ச்சிபூர் காவல் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மற்றும் மைத்துனருக்கு எதிராக புகார் கொடுத்தார். காவல் துறையிடமிருந்து கிடைத்த தகவலின் படி, மங்கிபாயின் கணவர் கமலேஷ் , மைத்துனர் மங்கி லால் மற்றும் மாமனார் கன்வர் லால் மீது இந்திய தண்டனை சட்டம் 498A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது அவர்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர். மங்கிபாய் தற்பொழுது தனது பெற்றோருடன் வசிக்கிறார். மங்கிபாயின் தந்தையும் அவரின் சகோதரர்களும் இருவரும் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். அவரின் தந்தை 5 லட்சம் ரூபாய் தன்னிடம் இல்லை என்று கூறினார். அதனால் அவரால் தனது மகளை வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது. படக்குறிப்பு, கணவரை பிரிந்து வாழும் மங்கிபாய் இதற்கிடையில் மங்கிபாயின் கணவர் கமலேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். பிபிசியிடம் பேசிய கமலேஷ், “ஆறு மாதத்திற்கு முன்பு மங்கிபாயின் தந்தைக்கு மூன்று லட்சம் வழங்கினேன். திருமணத்தின் போது ஒரு தோலா தங்கத்தையும், ஒரு கிலோ வெள்ளி நகைகளையும் வழங்கினேன். நாங்கள் கொடுத்ததை தான் திருப்பி கேட்கிறோம். அதை நாங்கள் நிச்சயம் வாங்கியே தீருவோம்”. என்றார். இந்த பணம் எதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு கமலேஷ் விடையலளிக்கவில்லை. படக்குறிப்பு, மங்கிபாயின் கணவர் கமலேஷ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். கிராமத்தினர் தலையீடு 70 வயதாகும் பவன் குமார்( பெயர் மற்றப்பட்டுள்ளது) இது தொடர்பான கிராமப் பஞ்சாயத்துகள் பல நூற்றாண்டுகளாக நடந்து வருவதாக தெரிவித்தார். இதன் தீர்ப்புகள் எல்லாமே மாப்பிள்ளை வீட்டாருக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். “இந்த கிராமத்தில் இதுபோன்ற வழக்குகளில் கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பே இறுதியானது. அறுபதாயிரம் முதல் எட்டு லட்சம் வரையிலான பணம் சம்பத்தப்பட்ட வழக்குகளை நான் தீர்த்துள்ளேன்.” என்றார். “சிறுவயதிலேயே திருமணம் நிச்சயிக்கப்படுவதால் பெண்கள் இந்த உறவில் இருக்க மறுக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆண்களும் இந்த பிரிவிற்கு காரணமாக இருக்கின்றனர். அப்போது நாங்கள் பெண் வீட்டார் குறைவாக பணம் கொடுக்கும் படி அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வோம். இருப்பினும் 90% வழக்குகளில் பெண் வீட்டார் தான் இந்த தொகையை கட்ட வேண்டும்" என்கிறார் அவர். படக்குறிப்பு, 90% வழக்குகளில் ஆண் வீட்டாருக்கு சாதகமாகவே கட்டப் பஞ்சாயத்துகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் கூறுவது என்ன? சமூக செயற்பாட்டாளர் மோனா சுஸ்தானி இந்த நடைமுறைக்கு எதிராக பத்தாண்டுகளாக போராடுகிறார். அவர் இதை பெண்களுக்கு எதிரான செயலாகவும் , ஆணாதிக்க சிந்தனை மிக்கதாகவும் இருக்கின்றது என்று தெரிவித்தார். “நான் ஒரு அரசியல் குடும்பத்தில் 1989-ல் திருமணம் செய்துகொண்டேன். இந்த நடைமுறையைக் கண்டு நான் அதிர்ந்தேன். அப்போதே இதற்கு எதிராக குரல் கொடுக்க முடிவு செய்தேன்.” என்றார் அவர். அவர் உருவாக்கிய அமைப்பு, இதுதொடர்பான வழக்குகளில் குறுக்கிட்டு, பெண்களின் மீது பொருளாதார நெருக்கடி சேராத படி பார்த்துக்கொள்கிறது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 237 பெண்களை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இதிலிருந்து விடுவித்துள்ளதாக மோனா தெரிவித்தார். அப்படி வெளியேறிய பெண்கள் பலர் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறார். படக்குறிப்பு, கடந்த ஐந்தாண்டுகளில் 237 பெண்களை ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இதிலிருந்து விடுவித்துள்ளதாக மோனா தெரிவித்தார் அதேசமயம் ராம்கலா, கடந்த ஆறு மாதங்களாக இந்த தீய பழக்கத்தை அழிப்பதற்காக போராடுகிறார். இவரே இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான். இந்த பழக்கத்தினால் ராம்கலா தனது வீட்டை விட்டு வெளியேறினார். தற்பொழுது அவர் தனது உயர்கல்வியை படித்துக்கொண்டும் இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறார். “பெண்களை இதிலிருந்து விடுவிப்பது மிகவும் கடினமாக இருக்கும். சமூக அழுத்தங்கள் நிறைய உள்ளன. எங்களிடம் அவர்கள் வந்தவுடன் முதலில் காவல்துறையிடம் புகர் அளிப்போம். பிறகு அந்த மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினரிடம் பேசுவோம். அவர்கள் புரிந்துகொண்டால் அப்பெண்ணிற்கு சட்டத்தின் வாயிலாக அவர்கள் உதவுவார்கள்.” என்றார் ராம்கலா. என்னதான் ராம்கலா, மோனா சுஸ்தானி போன்றவர்கள் இந்த தீய பழக்கத்திற்கு எதிராக போராடினாலும், கெளஷல்யா, மங்கிபாய் போன்ற பெண்கள் தங்களது திருமணத்திலிருந்து வெளியேற இன்னும் பல லட்ச ரூபாயை கொடுக்கவேண்டிய நிலை மாறவில்லை. படக்குறிப்பு, ராம்கலா, கடந்த ஆறு மாதங்களாக இந்த தீய பழக்கத்தை அழிப்பதற்காக போராடுகிறார்,இவரே இந்த நடைமுறையினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c154p1ejeqxo
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts