Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

இன்று பிராந்சில் நடந்து முடிந்த  ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி  கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். 

ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது.

இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார்.

பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும்.

தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இங்கே ஜெர்மனியியில் AFD   எனும் இனவாதக் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது-
ஒரு காலத்தில் மலேசியா சிங்கப்பூர் எனக் குடியேறி அல்லது பலவந்தமாக குடியேற்றப்பட்டு அங்கு குடித்தனமாக வாழ்ந்து ஒய்வு காலம் வந்தபோது குறிப்பிட்ட தொகை மக்கள் இலங்கை திரும்பியிருந்தார்கள் .
அந்த மாதிரி இனி வரும் காலத்தில் ஒரு தொகை மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து  இலங்கை திரும்பும் காலம் விரைவில் வரும்.

அதற்கு இந்த இனவாத ரீதியான கட்சிகளின் ஆக்கரமிப்பும் ஒரு காரணமாக இருக்கும் . 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, வாத்தியார் said:

பஞ்சம் பிழைக்க/ வாய்ப்பு தேடிவரும் வெளிநாட்டவர்கள் சாதுக்களாக இருக்கின்றார்களா? அவர்கள் ஐரோப்பிய சட்டங்களை மதித்து நடக்கின்றார்களா?
 
பிரான்ஸ் லாசப்பலுக்கு போனால் ஒரே வெத்திலை துப்பலும்,கஞ்சலும் குப்பையும்.....வெறிக்கூட்டங்களும்...🤣
இது ஐரோப்பிய கலாச்சாரமா? 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, இணையவன் said:

இன்று பிராந்சில் நடந்து முடிந்த  ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தேசியவாத தீவிர வலதுசாரி  கட்சி (RN) 31.5 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

வெற்றிபெற்ற Rassemblement national கட்சி உறுப்பினர்கள் நாசிகளுடன் தொடர்புடையவர்களாக பல தடவை சர்ச்சைக்குட்பட்டவர்கள். இக் கட்சியின் தலைவர் மரின் லுபென் ரஸ்ய அதிபர் புதினிடம் சட்டவிரோதமகப் பணம் பெற்று ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர். இவர்கள் பிரான்சிலுள்ள அனைத்து வெளிநாட்டவரையும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். 

ஏனைய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 40 வீதமான வாக்குகள் தேசியவாதக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது.

இத் தேர்தலில் ஆளும் கட்சி பலத்த தோல்வியைத் தழுவியுள்ளது. இதனையடுத்து பிரெஞ்சு அதிபர் மக்ரோன் இன்று இரவு பிரான்சின் பாராளுமன்றம் சட்டவரைபுக்கு உட்பட்ட வகையில் கலைக்கப்படுவதாக தொலைக்காட்சியில் திடீரென அறிவித்தார். இந்த மாத இறுதியில் பிரான்ஸ் சட்டமன்றத் தேர்தல் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அறிவித்தார்.

பல்லின மக்களைக் கொண்ட பிரான்சில் தேசியவாதிகளின் எழுச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அசாதாரணமானது. அதுவும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள வேளையில் இது பிரான்சுக்கு அவப்பெயரை உண்டாக்கும்.

தொடர்புபட்ட பிரெஞ்சுச் செய்தி: https://www.lemonde.fr/politique/live/2024/06/09/en-direct-resultats-europeennes-2024-emmanuel-macron-annonce-la-dissolution-de-l-assemblee-nationale-apres-le-score-historique-du-rn-aux-europeennes_6238193_823448.html

வந்து குடியேறியவர்கள் ஒழுங்காய் இருந்தால் மாற்று கட்சிகளுக்கு வேலையே வந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

கடந்த வாரம் தான் அதி வலது சாரி நாசிகளின் பிடியில் இருந்து மேற்கு ஐரோப்பாவை மீட்க இலட்சக்கணக்கான அமெரிக்க, பிரிட்டன், கனேடிய இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்து நோர்மண்டியில் வந்திறங்கிய (D-Day) 80 வருடத்தை நினைவு கூர்ந்தார்கள்.

இனி இந்த நவீன அதி வலது சாரிக் குப்பைகள் ஐரோப்பாவை மீளவும் ஒரு இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும்! ஏதாவது ஆனால், இருக்கவே இருக்கிறார்கள் அமெரிக்கர்களும், கனேடியர்களும், மீண்டும் வந்து மீட்டுக் கொடுக்க! இப்படித் தான் ஓடுகிறது ஐரோப்பாவின் வாழ்க்கை வட்டம்😎!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பஞ்சம் பிழைக்க/ வாய்ப்பு தேடிவரும் வெளிநாட்டவர்கள் சாதுக்களாக இருக்கின்றார்களா? அவர்கள் ஐரோப்பிய சட்டங்களை மதித்து நடக்கின்றார்களா?
 
பிரான்ஸ் லாசப்பலுக்கு போனால் ஒரே வெத்திலை துப்பலும்,கஞ்சலும் குப்பையும்.....வெறிக்கூட்டங்களும்...🤣
இது ஐரோப்பிய கலாச்சாரமா? 😂

லண்டன் மட்டும் என்னவாம் ?

4 minutes ago, பெருமாள் said:

லண்டன் மட்டும் என்னவாம் ?

Ealing Rd, Wembley சிவப்பு பாக்கு துப்பல்கள் ஒரு சில இடங்களில் கலர்மாறி விட்டு இருக்கும் அவ்வளவு அகோரம் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இங்கே கருத்து எழுதும் எவருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் நோக்கம் புதியவில்லை என்று. 

  • தொடங்கியவர்
12 hours ago, குமாரசாமி said:

பஞ்சம் பிழைக்க/ வாய்ப்பு தேடிவரும் வெளிநாட்டவர்கள் சாதுக்களாக இருக்கின்றார்களா? அவர்கள் ஐரோப்பிய சட்டங்களை மதித்து நடக்கின்றார்களா?
 
பிரான்ஸ் லாசப்பலுக்கு போனால் ஒரே வெத்திலை துப்பலும்,கஞ்சலும் குப்பையும்.....வெறிக்கூட்டங்களும்...🤣
இது ஐரோப்பிய கலாச்சாரமா? 😂

பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் பெரும்பாலும் இந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. வெளிநாட்டவர்களின் அதிகமான வாக்குகள் மட்டும் காரணமல்ல. பொருளாதாரம் எதிர்காலம் பற்றிய பரந்த அறிவுள்ளவர்கள் இப்படியான நகரங்களில் உள்ளனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களை வெளிநாட்டவர்களால் பிரான்சின் பணவீக்கமும் பாதுகாப்பும் சீரழிந்து விட்டதாக நம்பவைத்துள்ளனர்.

பிரான்சின் கலாச்சாரம் இந்த வெற்றிலைத் துப்பல் கூட்டத்தினால் சீரழிந்து விட்டதாகவும் தமது வேலைவாய்ப்பினைப் பறித்து வெற்றிலை துப்பாத கூட்டம் முன்னேறி விட்டதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. எந்த வகையிலும் வெளிநாட்டவர் வேண்டப்படாதவர்கள்.

12 hours ago, குமாரசாமி said:

வந்து குடியேறியவர்கள் ஒழுங்காய் இருந்தால் மாற்று கட்சிகளுக்கு வேலையே வந்திருக்காது.

ஒழுங்காக இருந்து முன்னேறினாலும் பிரச்சனைதான். ஜேர்மனியிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்களும் உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டி வரலாம். இப்போதே நீங்கள் அனுபவிக்கும் வசதிகளைக் துறக்க ஆயத்தப்படுத்துங்கள். 🤣
 
11 hours ago, Justin said:

இனி இந்த நவீன அதி வலது சாரிக் குப்பைகள் ஐரோப்பாவை மீளவும் ஒரு இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும்! 

எனக்குத் தெரிந்த தமிழர்கள் சிலரும் இந்த இனவாதக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். ஏனென்றால் வெளிநாட்டவர்களின் தொல்லை தாங்க முடியவில்லையாம் 😂. இந்தத் தமிழர்கள் யாரென்று பார்த்தால் அரசாங்கத்துக்கு வரி ஏய்ப்புச் செய்பவர்களும் உதவிப் பணத்தை எடுத்துக் கொண்டு களவாக வேலை செய்பவர்களும் மற்றும் வேறு வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களுமாவர் இதில் அடங்கும்.  

  • தொடங்கியவர்
3 hours ago, விசுகு said:

நான் நினைக்கிறேன் இங்கே கருத்து எழுதும் எவருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் நோக்கம் புதியவில்லை என்று. 

இதே கட்சி சில வருடங்களுக்கு முன் பிறெக்சிட் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தது. இங்கிலாந்து போல பிரான்ஸும் ஐரோப்பாவிலிருந்து பிரிய வேண்டும் என்று கூட்டங்களில் பேசினார்கள். பின்னர் இங்கிலாந்து பிரிந்தபின் குத்துக்கறணமடித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் பிரான்சை வலுப்படுத்த வேண்டும் என்று தற்போதைய தேர்தலில் பிரச்சாரம் செய்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, இணையவன் said:

ஒழுங்காக இருந்து முன்னேறினாலும் பிரச்சனைதான். ஜேர்மனியிலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்களும் உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டி வரலாம். இப்போதே நீங்கள் அனுபவிக்கும் வசதிகளைக் துறக்க ஆயத்தப்படுத்துங்கள். 🤣

நடக்கிற கதையை கதையுங்கோ 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

ஏதாவது ஆனால், இருக்கவே இருக்கிறார்கள் அமெரிக்கர்களும், கனேடியர்களும், மீண்டும் வந்து மீட்டுக் கொடுக்க! இப்படித் தான் ஓடுகிறது ஐரோப்பாவின் வாழ்க்கை வட்டம்

இந்த ஐரோப்பியர்களைக் காலம் காலமாகக்  காப்பாற்றும் கனேடியர்களும் அமெரிக்கர்களும் வானத்தில் இருந்து குதித்தவர்களாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

வாத்தியார், எதிராக எழுத வேண்டுமென்பதற்காக அர்த்தமில்லாத கருத்துக்களை எழுதும் நபராக மாறாதீர்கள். சொல்லப் பட்ட தரவின் விளக்கம்: ஐரோப்பிய நாடுகள், 1918 இலும், மீண்டும் 1940 களிலும் அமெரிக்க இராணுவ உதவியினால் தான் அதி வலது சாரிகளின் பிடியில் இருந்து மீண்டன. இது ஐரோப்பாவில் வந்தேறு குடிகளாக இருக்கும் சில தமிழர்களுக்கு இன்னும் புரியாத வரலாறு. "வாத்தியார்" என்று பெயரை வைத்துக் கொண்டு நீங்களும் அவர்கள் போல மாற வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்😎.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நடக்கிற கதையை கதையுங்கோ 😀

ஒன்று துறக்க ஆயத்தப் படுத்த வேண்டும், அல்லது "நான் AfD இற்கு வாக்களித்தவன்" என்று உடலில் வெளித்தெரியும் பகுதியில் பெரிதாகப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும். ஏன் என்பதற்கு பதிலாக அமெரிக்காவில் நடந்த ஒரு உதாரணம் சொல்கிறேன்.

2016 இல் ட்ரம்ப் "முஸ்லிம்களுக்கு விசா கொடுக்காமல் செய்வேன்" என்று பிரச்சாரம் செய்த போது பல மோடி வாலா இந்தியர்கள் ட்ரம்பை வெளிப்படையாக ஆதரித்தனர். சிலர் அவருக்கு வாக்களித்திருக்கவும் கூடும். அவர் வென்றார். அவர் வென்ற பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசம் அமெரிக்காவில் அதிகரித்தது. கன்சாஸ் நகரில் இரு மண்ணிறத்தோல் குடியேறிகளை ஒரு ட்ரம்ப் விசுவாசி துப்பாக்கியால் சுட்டு, ஒருவர் சாக மற்றவர் காயத்துடன் தப்பினார். "மத்திய கிழக்கில் இருந்து வந்த பயங்கரவாதிகளென நினைத்து சுட்டேன்" என்றார் ட்ரம்ப் ஆதரவாளர். சுடப் பட்ட மண்ணிறத் தோல் குடியேறிகள் இருவரும் தென்னிந்தியர்கள்.

எனவே, இப்பவே பச்சை குத்த ஆயத்தப் படுத்துங்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் தீவிரவலதுசாரிகள் - பிரான்ஸ் ஜேர்மனி அரசியலில் குழப்பம்

Published By: RAJEEBAN  10 JUN, 2024 | 12:25 PM

image

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சிகள் பெரும் வெற்றிபெறலாம் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐரோப்பாவில் நிச்சயமற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் மூன்று நாட்கள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ள நிலையில் தீவிர வலதுசாரி கட்சிகள்  குறிப்பிடத்தக்க வெற்றியை பெறலாம் என முன்கூட்டிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

720 ஆசனங்களில் 150க்கும் அதிகமான ஆசனங்களை வலதுசாரி கட்சிகள் கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

france_far_right.jpg

பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி போன்ற அதிக ஆசனங்களை கொண்டுள்ள நாடுகளில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்சில் மரைன் லெ பென்னின் தீவிரவலதுசாரி கட்சி வெற்றிபெறும் என்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்ததை தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர்இமானுவேல் மக்ரோன்  நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான புதிய திகதிகளை அறிவித்துள்ளார்.

தீவிரவலதுசாரி கட்சி 31 வீத வாக்குகளை பெறும் மக்ரோனின் ரெனசான்ஸ் கட்சிக்கு 15 வீத வாக்குகளே கிடைக்கும்  என முன்கூட்டிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.சோசலிச கட்சிக்கு 14 வீத வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸில் மக்ரோனிற்கு ஏற்பட்ட பின்னடைவை போன்று ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் ஸ்கோல்சும் பின்னடைவை சந்தித்துள்ளார். அவருடைய சோசல் டெமோகிரட் கட்சிக்கு 14 வீத வாக்குகளே கிடைக்கும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு 29வீத வாக்குகள் கிடைக்கும் தீவிரவலதுசாரி கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி 16.5 வீத வாக்குகளை பெறும் என  கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த தேர்தல் முடிவுகள் அடுத்த ஐந்து வருடகாலத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பாதையை தீர்மானிக்கும்.

இந்த தேர்தல் முடிவுகள் தற்போது ஐரோப்பாவில் ஆளும் அரசாங்கங்கள் மீதான மக்களின் கருத்தினை வெளிப்படுத்துபவையாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/185734

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, இணையவன் said:

பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் பெரும்பாலும் இந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. வெளிநாட்டவர்களின் அதிகமான வாக்குகள் மட்டும் காரணமல்ல. பொருளாதாரம் எதிர்காலம் பற்றிய பரந்த அறிவுள்ளவர்கள் இப்படியான நகரங்களில் உள்ளனர். கிராமப் புறங்களில் உள்ளவர்களை வெளிநாட்டவர்களால் பிரான்சின் பணவீக்கமும் பாதுகாப்பும் சீரழிந்து விட்டதாக நம்பவைத்துள்ளனர்.

நீங்கள் சொல்வது சரியானது என நான் நினைக்கின்றேன். ஆனாலும் பிரான்ஸ்சில் வாழும்  வெளிநாட்டவர்கள் நாட்டின் சட்டங்களை கடைப்பிடித்து ஒழுங்காக வாழ்கின்றார்கள் என நம்புகின்றீர்களா? இனவாத கட்சிகள் உருவாக வெளிநாட்டவர்கள் செய்யும் தவறுகளும் ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

வாத்தியார், எதிராக எழுத வேண்டுமென்பதற்காக அர்த்தமில்லாத கருத்துக்களை எழுதும் நபராக மாறாதீர்கள்.

சரி பெயரை மாற்ற முயற்சிக்கின்றேன்🙏

7 hours ago, Justin said:

"வாத்தியார்" என்று பெயரை வைத்துக் கொண்டு நீங்களும் அவர்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரியானது என நான் நினைக்கின்றேன். ஆனாலும் பிரான்ஸ்சில் வாழும்  வெளிநாட்டவர்கள் நாட்டின் சட்டங்களை கடைப்பிடித்து ஒழுங்காக வாழ்கின்றார்கள் என நம்புகின்றீர்களா? இனவாத கட்சிகள் உருவாக வெளிநாட்டவர்கள் செய்யும் தவறுகளும் ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்.

அத்துடன் இங்கே நடக்கும் அல்லது நடக்க இருக்கும் அத்தனை பிரச்சினைகள், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பற்ற நிலை இதர அத்தனைக்கும் வெளிநாட்டவர் தான் காரணம் என்று பிழையான வழி நடாத்துதல் தொடர்கிறது. அதற்கு ஒரு சில தீனிகள் எம்மவரிடம் இருந்தும் கிடைக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கு பார்த்தாலும் புட்டின் மயமாவே இருக்குது. 

ரம்ப் புட்டின் கையாள்.

பிரான்ஸ் தேசிய வாதிகள் புட்டின் கையாள்.

ஜேர்மன் தேசிய வாதிகள் புட்டின் கையாள்.

பிரிட்டனின் தேசிய வாதிகள் புட்டின் கையாள் (பிரக்சிட் டுடன் தேர்தலில் நிற்க மாட்டன் என்ற Nigel Farage, வேற பிரிட்டன் தேர்தலில் நிற்கிறார்) அவர் ஒருபடி மேல போய்  ஹிட்லர் தொடர்பில் நடுநிலை அவசியம் என்று வேற சொல்லி இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சரி பெயரை மாற்ற முயற்சிக்கின்றேன்🙏

பெயரை மாற்றியமைத்தவுடன்.  கருத்துகள்  மாறுமா???🤣😂

  • தொடங்கியவர்
35 minutes ago, nedukkalapoovan said:

எங்கு பார்த்தாலும் புட்டின் மயமாவே இருக்குது. 

ரம்ப் புட்டின் கையாள்.

பிரான்ஸ் தேசிய வாதிகள் புட்டின் கையாள்.

ஜேர்மன் தேசிய வாதிகள் புட்டின் கையாள்.

பிரிட்டனின் தேசிய வாதிகள் புட்டின் கையாள் (பிரக்சிட் டுடன் தேர்தலில் நிற்க மாட்டன் என்ற Nigel Farage, வேற பிரிட்டன் தேர்தலில் நிற்கிறார்) அவர் ஒருபடி மேல போய்  ஹிட்லர் தொடர்பில் நடுநிலை அவசியம் என்று வேற சொல்லி இருக்கிறார். 

இன்னுமொன்றையும் கவனியுங்கள். இந்த தேசிய வாதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாசிகளுடன் தொடர்புள்ளவர்கள். அதே நேரம் புட்டின் இவர்களுடன் எவ்வாறு நட்புடன் உள்ளார்? 🫢

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, இணையவன் said:

இந்த தேசிய வாதிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நாசிகளுடன் தொடர்புள்ளவர்கள். அதே நேரம் புட்டின் இவர்களுடன் எவ்வாறு நட்புடன் உள்ளார்? 🫢

தீயவர்களை தேடி தான் புட்டின் செல்வார் அவர்கள் மட்டுமே இவருடன் இணைவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

giorgia-meloni-alice-weidel-marine-le-pen.jpg

இன்றைய ஐரோப்பிய அரசுகளின் கொள்கைதான் இவர்கள் முன்ணணி வகிக்க காரணம் என பத்திரிகைகளில் குற்றம் சாட்டுகின்றார்கள்.

நடுவில் இருப்பவர் சிறிலங்காவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.  :cool:  (🤣)

  • கருத்துக்கள உறவுகள்

17 minutes ago, குமாரசாமி said:

giorgia-meloni-alice-weidel-marine-le-pen.jpg

இன்றைய ஐரோப்பிய அரசுகளின் கொள்கைதான் இவர்கள் முன்ணணி வகிக்க காரணம் என பத்திரிகைகளில் குற்றம் சாட்டுகின்றார்கள்.

நடுவில் இருப்பவர் சிறிலங்காவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.  :cool:  (🤣)

வலது பக்கம் (பிரான்ஸ்) உள்ளவர் புட்டினிடம் கடன் வாங்கியதாகவும் கடனை திருப்பி கொடுக்கப்போக புட்டின் அதனை தேர்தல் செலவுக்கு வைத்திருக்க சொல்லியுள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2024 at 09:10, Justin said:

கடந்த வாரம் தான் அதி வலது சாரி நாசிகளின் பிடியில் இருந்து மேற்கு ஐரோப்பாவை மீட்க இலட்சக்கணக்கான அமெரிக்க, பிரிட்டன், கனேடிய இளைஞர்கள் உயிரைத் தியாகம் செய்து நோர்மண்டியில் வந்திறங்கிய (D-Day) 80 வருடத்தை நினைவு கூர்ந்தார்கள்.

இனி இந்த நவீன அதி வலது சாரிக் குப்பைகள் ஐரோப்பாவை மீளவும் ஒரு இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும்! ஏதாவது ஆனால், இருக்கவே இருக்கிறார்கள் அமெரிக்கர்களும், கனேடியர்களும், மீண்டும் வந்து மீட்டுக் கொடுக்க! இப்படித் தான் ஓடுகிறது ஐரோப்பாவின் வாழ்க்கை வட்டம்😎!  

டிரம்ப் வந்தால் அமெரிக்கா கிட்டவும் வராது ஏனென்றால் அமெரிக்கா தான் எல்லாநாடுகளுக்குமுன் முன்னால் நிக்கும் நாஸிஸ கொள்ளகையில்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2024 at 00:10, Kandiah57 said:

கந்தையா அண்ணர,   இந்த இனவாதகட்சி  AFD  வெற்றி பெற்றதும், அதிக வாக்குகளை பெற்றதும் ரஷ்யா முன்பு ஆக்கிரமித்து வைத்திருந்த ஈழ தமிழர்கள் வசிக்க விரும்பாத யேர்மனி நாட்டின் கிழக்கு பகுதியாமே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.