Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_2eab00207b.jpg

இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம்.

இந்தாண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சவூதியில் வழக்கத்தைவிட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.

மக்காவில் அல் ஹராம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 922 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் எகிப்தை சேர்ந்தவர் 600 என்றும் இந்தியர்கள் 80 என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வீதியெங்கும் சடலங்கள் கிடப்பதாக கூறப்படுகின்றது.

இறந்தவர்கள் சடலங்கள் மக்காவுக்கு அருகில் உள்ள அல் – மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 250 பேர் சுயநினைவு இன்றி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை செய்வதற்கு சவூதி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாததாலும் அதிகம் பேர் பலியானதாக கூறப்படுகிறது.

Tamilmirror Online || மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்களுக்கு அருகில் இருக்கும் நாடுகள் உதவ முன்வரவேண்டும்........!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

அந்த மக்களுக்கு அருகில் இருக்கும் நாடுகள் உதவ முன்வரவேண்டும்........!

ஏன் அண்ணா?

அங்கே போய் சாவதே அவர்களது பிரார்த்தனைகளும் இறுதி விருப்பங்களும்.....

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக அன்னந்தண்ணி இல்லாமலா போவது........ எங்கு போனாலும் அகாலமாய் சாகக் கூடாது விசுகர்........!  

  • கருத்துக்கள உறவுகள்

ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை செய்வதற்கு சவூதி அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்த செலவில் சென்றால் ....கஷ்ட நிலயை சந்திக்க தானே வேண்டும் .பரலோகம் போக வேணும் என்று போனால் ....நடப்பதைக்கண்டு கொள்ள வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

புனித ஹஜ் யாத்திரை என்று சொல்லபடுகின்ற யாத்திரைக்கு சென்று  இறந்து போனால் அதை ஒரு பாக்கியமாக நம்புபவர்கள் அவர்கள்.
ஹஜ் யாத்திரை வருகின்ற பக்தர்கள் அல்லாவின் விருந்தாளிகள் என்று சவுதியில் சுலோகங்கள் வைக்கபட்டுள்ளனவாம்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

கடவுளை மட்டுமே நம்பினால், கைவிடப்படுவார்!

இல்லை 72 கன்னிகைகளும் ..மாட மாளிகைகளும்  உடன்டியாக கிடைக்கச் செய்யப்படும்☺️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் மக்காவில் போய் இறப்பதை புனித மரணமாக கருதுவர்.

அநேகமான இந்துக்கள் காசியில் தங்கள் உடலை எரிக்க வேண்டும் என வேண்டுதல்கள் வைப்பார்களாம்.

கிறிஸ்தவர்கள் ஜெருசலம் போனாலே பெருமிதமாக நினைப்பதை பார்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்காவில் பெட்டகத்துக்குள் இருக்கும் உருவம் சிவலிங்க வடிவம் என்று கேள்வி.

வேறு எவராவது இந்த விடயத்தை  கேள்விப்பட்டது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நிழலி said:

கடவுளை மட்டுமே நம்பினால், கைவிடப்படுவார்!

மதம் சம்பந்தமாக இறப்பவர்களை விட ஆறறிவு படைத்த மூர்க்கமானவர்களாலேயே உலகில் இறப்பவர்கள் அதிகம்..அதை விட தமக்கு எல்லாமே தெரியும்  என மார்தட்டிக்கொள்ளும் மானிடம் செய்யும் தவறுகளால் முழு உலகமே இயற்கை அழிவுகளை தினசரி அனுபவிக்கின்றது. காரணம் உலக வெப்பமயம்.

இதையெல்லாம் நாத்தீகவாதிகள் கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்கள்.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஹஜ் யாத்திரை வருகின்ற பக்தர்கள் அல்லாவின் விருந்தாளிகள் என்று சவுதியில் சுலோகங்கள் வைக்கபட்டுள்ளனவாம்.

சவுதி நாட்டுக்கு ஹஜ் யாத்திரிகை மூலம் 15 பில்லியன் டொலர் வரை வருமானம் கிடைக்கிறது.

இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒருபோதும் சவுதி அரசு அறிவிப்பதில்லை. இறந்தவர்களின் சொந்த நாடுகளின் தகவல்களின் அடிப்படையிலான ஒரு மதிப்பீடு. முன்னைய வருடங்களில் சன நெரிச்சலில் மிதிபட்டு நூற்றுக் கணக்கானோர் இறந்துள்ளனர். ஒரு தடவை இடி விழுந்தும் பலர் இறந்தனர். 

இலங்கை இஸ்லாமிய இணையத் தளம் ஒன்று இறந்தவர்களைத் தியாகிகளாகியுள்ளனர் என்று எழுதியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி தனது நாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து இருக்க வேண்டும். பல முறை பக்தர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.விசா உள்ளவர்கள் , விசா இல்லாதவர்கள் என பாகுபடுத்துவது அரக்க தனமானது.மேற்கு ஊடகங்கள் சவூதி பற்றி அடக்கியே வாசித்தன. இனிமேல் அது  நடக்கும் என நான் நம்பவில்லை!!!!

29 minutes ago, குமாரசாமி said:

மதம் சம்பந்தமாக இறப்பவர்களை விட ஆறறிவு படைத்த மூர்க்கமானவர்களாலேயே உலகில் இறப்பவர்கள் அதிகம்..அதை விட தமக்கு எல்லாமே தெரியும்  என மார்தட்டிக்கொள்ளும் மானிடம் செய்யும் தவறுகளால் முழு உலகமே இயற்கை அழிவுகளை தினசரி அனுபவிக்கின்றது. காரணம் உலக வெப்பமயம்.

இதையெல்லாம் நாத்தீகவாதிகள் கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்கள்.

ஆம் கடவுளை நம்புபவர்கள் மிக அமைதியானவர்கள். வாகனங்கள் ஓட்டி காற்றினை மாசுபடுத்துவதில்லை, விமானம் ஏறுவதில்லை, தொலைக்காட்சி பார்த்து மின்சாரத்தை வீணாக்குவதில்லை, காடுகளை அழித்து வீடு கட்டுவதில்லை, நாசினிகள் பாவிக்கப்படும் தானியங்களை உண்பதில்லை, மருத்துவர் தரும் மருந்துகளை உண்ணாமல் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்பவர்கள்.

நாத்திகவாதிகள் அதிகமாக வாழும் சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனித நேயமும் ஒழுக்கமும் சுற்றாடல் இயற்கை பற்றிய சிந்தனையும் இல்லாத மூர்க்கமானவர்களால்தான் உலகம் வெப்பமடைகிறது.

18 minutes ago, nunavilan said:

சவூதி தனது நாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய வசதிகள் செய்து இருக்க வேண்டும். பல முறை பக்தர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.விசா உள்ளவர்கள் , விசா இல்லாதவர்கள் என பாகுபடுத்துவது அரக்க தனமானது.மேற்கு ஊடகங்கள் சவூதி பற்றி அடக்கியே வாசித்தன. இனிமேல் அது  நடக்கும் என நான் நம்பவில்லை!!!!

அல்ஜஸீராவுக்கும் 1000 பேர் இறந்தது பெரிய செய்தி இல்லை போலுள்ளது. அதன் முதற் பக்கத்தில் இச் செய்தியை எங்கும் காணவில்லை. அதன் Middle East News பக்கத்திலும் இது தொடர்பான செய்தி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

மக்காவில் பெட்டகத்துக்குள் இருக்கும் உருவம் சிவலிங்க வடிவம் என்று கேள்வி.

வேறு எவராவது இந்த விடயத்தை  கேள்விப்பட்டது?

ஓம் நானும் கேள்விபட்டேன் 😄. மெக்காவில் உள்ள சிவலிங்கத்தை தான் கறுப்பு கல் என்று முஸ்லிம்கள் வணங்குகின்றனராம்.

இப்போ பார்த்தால் இந்து மதத்தின் ஒரு பிரிவு ஈழதமிழர்களிடம் உள்ள சைவம் போன்று  முஸ்லிம் மதமும் இன்னொரு பிரிவு. பாலஸ்தீனர்களுக்காக  ஏன்  வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்கள்   இவ்வளவு  ஆதரவு வழங்குகிறார்கள் என்பதும்  விளங்கியது 😂

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓம் நானும் கேள்விபட்டேன் 😄. மெக்காவில் உள்ள சிவலிங்கத்தை தான் கறுப்பு கல் என்று முஸ்லிம்கள் வணங்குகின்றனராம்.

🤣.........

தலை பத்திரம்............... ஒரு விலை வைத்து விடுவார்கள்.........🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, இணையவன் said:

ஆம் கடவுளை நம்புபவர்கள் மிக அமைதியானவர்கள். வாகனங்கள் ஓட்டி காற்றினை மாசுபடுத்துவதில்லை, விமானம் ஏறுவதில்லை, தொலைக்காட்சி பார்த்து மின்சாரத்தை வீணாக்குவதில்லை, காடுகளை அழித்து வீடு கட்டுவதில்லை, நாசினிகள் பாவிக்கப்படும் தானியங்களை உண்பதில்லை, மருத்துவர் தரும் மருந்துகளை உண்ணாமல் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ்பவர்கள்.

நாத்திகவாதிகள் அதிகமாக வாழும் சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மனித நேயமும் ஒழுக்கமும் சுற்றாடல் இயற்கை பற்றிய சிந்தனையும் இல்லாத மூர்க்கமானவர்களால்தான் உலகம் வெப்பமடைகிறது.

லூசுத்தனமான ஏட்டிக்கு போட்டியான கருத்தே தவிர உள்ளடக்கங்கள் ஏதுமில்லை.  
நான் எழுதியதை இன்னுமொரு தடவை வாசித்து கருத்து எழுத முயற்சிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களின் முன் ஒரு படம் பார்த்திருக்கின்றேன். பிரெஞ்ச் படம் என்று ஞாபகம், ஏதோ ஒரு ஃபிலிம் பெஸ்டிவலில்.

ஒரு தந்தையும், மகனும் இந்தக் கடமைக்காக பிரான்சில் இருந்து மெக்கா போகின்றனர். இருவருக்கும் சுத்தமாக ஆகாது. குடும்பத்தின் வற்புறுத்தலில் வழித் துணையாக மகன் போகின்றார். வழியில் இன்னும் பிரிவினை அதிகமாகின்றது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில், ஞாபகமில்லை, மகன் தந்தையை புரிந்து கொள்கின்றார்.

தந்தை மெக்காவில் இறந்து போகின்றார். இறந்த உடல்களை ஒரு நிலவறையில் வரிசையாக அடுக்கி வைத்திருக்கின்றனர். அங்கேயே இறுதிச் சடங்குகள் செய்யும் வசதிகளும் இருந்ததாகவும் ஒரு ஞாபகம்.......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

மக்காவில் பெட்டகத்துக்குள் இருக்கும் உருவம் சிவலிங்க வடிவம் என்று கேள்வி.

வேறு எவராவது இந்த விடயத்தை  கேள்விப்பட்டது?

சிவலிங்கம் தான் உள்ளது என்று கேள்வி. அதுவும் பீடம் இல்லாத சிவலிங்கம். சிவலிங்கம் அகிலத்தின் வடிவம். அதற்குப் பீடம் அமைத்து அசிங்கமாக்கியவர்கள் பார்ப்பனர்கள் தான்..!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

அல்ஜஸீராவுக்கும் 1000 பேர் இறந்தது பெரிய செய்தி இல்லை போலுள்ளது. அதன் முதற் பக்கத்தில் இச் செய்தியை எங்கும் காணவில்லை. அதன் Middle East News பக்கத்திலும் இது தொடர்பான செய்தி இல்லை.

ஒகோ மொத்தத்தில் நீங்கள் ஐரோப்பிய ஊடகங்களை பிரதிநித்துவ படுத்துகிறீர்களாம். நான் அல்ஜசீரா போன்ற ஊடகங்களை பிரதிநித்துவ படுத்துகிறேன் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள்.????

2 hours ago, இணையவன் said:

அல்ஜஸீராவுக்கும் 1000 பேர் இறந்தது பெரிய செய்தி இல்லை போலுள்ளது. அதன் முதற் பக்கத்தில் இச் செய்தியை எங்கும் காணவில்லை. அதன் Middle East News பக்கத்திலும் இது தொடர்பான செய்தி இல்லை.

ஜனநாயகத்தின் கொம்புகள் தங்களுக்கு தக்க மாதிரி தான் செய்திகளை வெளியிடுவார்கள் என சொல்லாமல் சொல்கிறீர்கள்.???

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஜசீரா  பத்தோடு பதினொன்று. இவ்வளவு அடக்கு முறைக்குள்ளும் செய்திகளை உலகுக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக பலஸ்தீனிய மக்களின் கொலைகளை. எமக்கு எப்படி மேற்கு ஊடகங்கள் வேலை செய்தன என்பதை அனைவரும் அறிந்திருக்றோம். இதில் மேற்கு ஊடகங்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் எப்போதோ சுக்கு நூறாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

சிவலிங்கம் தான் உள்ளது என்று கேள்வி. அதுவும் பீடம் இல்லாத சிவலிங்கம். சிவலிங்கம் அகிலத்தின் வடிவம். அதற்குப் பீடம் அமைத்து அசிங்கமாக்கியவர்கள் பார்ப்பனர்கள் தான்..!

சந்தடி சாக்கில் நீங்கள் எடுத்து எறியும் கல்லின் இலக்கினை நோக்குகையில் , மதிய உணவில் நினையாப்பிரகாரமாக கடிபட்ட கார மிளகாயின் உறைப்பின் கடுமையையும் மீறி  மெலிதாக சிரிப்பொன்று வருகிறது 😊
தாங்க்ஸ்.....     

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சாமானியன் said:

சந்தடி சாக்கில் நீங்கள் எடுத்து எறியும் கல்லின் இலக்கினை நோக்குகையில் ,

சாதி பார்த்து கல் எறிவது தவறு தானே😟

21 hours ago, nunavilan said:

இதில் மேற்கு ஊடகங்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் எப்போதோ சுக்கு நூறாகி விட்டது.

ஒவ்வொரு ஊடகத்தின் நிர்வாகம், பிரதேசம், அரசியல் கொள்கை நீரியாக ஏதோ ஒரு பக்கம் நிற்கும். பிரான்சில் நடுநிலையாக மதிக்கப்படும் Mediapart போன்ற ஊடகங்களும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பல தடவை தாக்கப்பட்ட Charlie Hebdo போன்றவற்றுக்கும் அரசியல் நிலைப்பாடு உண்டு. சீ என் என் போன்ற தளங்களை எட்டியும் பார்ப்பதில்லை. பி பி சி செய்திகளை அவசியம் ஏற்பட்டாலே ஒழிய தேடிச் சென்று வாசிப்பதில்லை.   நான் செய்திகளை இன்ன தளத்தில்தான் வாசிக்க வேண்டும் என்று தேடிச் செல்வதில்லை. ஒரு செய்தியைப் பல்வேறு இணையத் தளங்களில் வாசிப்பதுண்டு. இதன் மூலம் தகவல்களின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். 

21 hours ago, nunavilan said:

ஜனநாயகத்தின் கொம்புகள் தங்களுக்கு தக்க மாதிரி தான் செய்திகளை வெளியிடுவார்கள் என சொல்லாமல் சொல்கிறீர்கள்.???

சரி. அடிக்கடி மேற்கின் ஊதுகுழல் என்று வெறுக்கும் இந்த ஊடகங்கள் தவிர உண்மையை எழுதும் செய்தித் தளங்களின் பட்டியலைத் தாருங்கள், இனிவரும் நாளில் நானும் உண்மைச் செய்திகளைப் படிக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.