Jump to content

தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   02 SEP, 2024 | 03:20 AM

image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி

கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர். சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன். ரணில் எமது கொள்கைகளுடன் இணங்கவில்லை தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கத்தை சிறந்த நகர்வாக பார்க்கிறேன். நான் சஜித்தை சந்தித்து பேசவில்லை. பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. பொய் வாக்குறுதிகளை நான் வழங்கமாட்டேன். ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். செனட் சபை குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும். வடக்கு இளைஞர் யுவதிகளுடனான எனது உறவு தனித்துவமானது. காணாமல் போனோர் விவகாரத்துக்கு பதில் அளிப்பேன். முஸ்லிம்களின் உடல் தகன விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறோம். இந்தியா, சீனாவுடன் நட்பு ரீதியான உறவை பேணுவேன். மோடியுடன் எனக்கு சிறந்த உறவுள்ளது. அப்பா என்னை அடித்ததில்லை, ஆனால் தவறு செய்தால் திட்டுவார்

சகல  இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன். சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள்.  ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர்.  சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர்.  ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இவற்றை குறிப்பிட்டார்.  செவ்வியின் விபரம் வருமாறு  

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் களம் தற்போது எப்படி இருக்கிறது?

பதில்: எமது பிரச்சார செயல்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.  நாம் மிக முக்கியமாக கிராமத்துக்குள்ளேயே   தேர்தல் பிரச்சாரத்தை மையப்படுத்தி இருக்கிறோம். அனுராதபுரத்தில் பாரிய பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். அதன் பின்னர் நாம் அதிகளவு கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்கிறோம்.  எமது பலம் அங்கேதான் இருக்கிறது. இம்முறை தேர்தலில் செலவுகளுக்கான ஒரு வரையறையும் காணப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம்.

கேள்வி: அரசியல் தேர்தல்   களத்தில் எவ்வாறான நிலைமையை உணருகிறீர்கள்?

பதில்: மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர்.  எமக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். சிலர் நேரடியாக ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் வேறு வழிகளில் ஆதரவு தெரிவிக்கின்றனர். சிலர் மெளனமாக இருக்கின்றனர். 

கேள்வி: மக்கள் உங்களை சந்திக்கும்போது என்ன உங்களிடம் கேட்கின்றனர் ?

பதில்: நாட்டின் இன்றைய பொருளாதார பிரச்சனை மக்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கிறது. வரிசை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது,  மின்வெட்டு இல்லை என்று கூறப்பட்ட போதிலும் மக்கள் உள்ளக ரீதியில் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.  பொருட்களின் விலைகள் அதிகரித்ததன் காரணமாகவே வரிசையுகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. 

மக்களின் நுகர்வு குறைவடைந்து இருக்கிறது. மக்களிடம் பணம் இல்லை. அன்றாடம் தொழில் செய்கின்றவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்களே சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி மாத சம்பளம் பெறுகின்றவர்களுக்கு   வரியை செலுத்த வேண்டி இருக்கிறது.

எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டும். கிராமிய வங்கிகளுடாக அவர்களை பலப்படுத்துவது அவசியம்.  அங்கிருந்து சந்தையை உருவாக்க வேண்டும்.  அடுத்ததாக முதலீட்டாளர்களை ஊக்குவித்து தொழில்களை உருவாக்குவது அவசியம்.

கேள்வி: இந்த தேர்தலில் பொருளாதாரம் தான் முக்கியமான பேசு பொருளாக இருக்கிறதா ?

பதில்: எந்த தேர்தலிலும் பொருளாதாரம் தான் மிக முக்கியமான பேசு பொருளாக இருக்கும். பொருளாதாரத்தை பலப்படுத்துவது மட்டுமின்றி பொருளாதாரத்தை சுயாதீனமாக்க வேண்டும். இன்னொரு நாட்டிடம் நாம் பொருளாதாரத்திற்கு தங்கி இருந்தால் அங்கு சுயாதீனம் இல்லை. அதற்கு நாம் தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். 

கேள்வி: உங்கள் பார்வையில் கோட்டா ராஜபக்சவுக்கு என்ன நடந்தது?

பதில்: கோட்டாபய அரசாங்கத்தில் பல நல்ல விடயங்கள் நடைபெற்றன. ஆனால் கோட்டா அரசாங்கம் தவறு இழைத்தது எங்கு என்று பார்க்க வேண்டும்.  எரிபொருள் வரிசை மற்றும் மின்வெட்டு ஆகிய இரண்டு விடயங்களில் தான் கோட்டா நெருக்கடியை சந்தித்தார். மின்வெட்டுக்கு காரணம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவாமையாகும்.

மேலும் கொரோனா நெருக்கடியும் வந்தது. ஆனால் இந்த இவ்வாறான எந்த பிரச்சனையும் இல்லாத பங்களாதேஷுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறதே? எனவே கோட்டாவின் அரசாங்கத்தை திட்டமிட்டு சதித்திட்டத்தின் ஊடாக வீழ்த்தினர் என்பது நன்றாக தெரிகிறது.  

கேள்வி: 38 வயதில் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?

பதில்: அரசியல் பயணம் தொடர்கிறது.  ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் எண்ணி இருக்கவில்லை.  பொறுப்பு கிடைக்கும்போது அதனை ஏற்க வேண்டும்.  அரசியல்வாதிக்கு அந்த பண்பு இருப்பது அவசியம்.  நான் சவாலை ஏற்று களமிறங்கி இருக்கிறேன்.  நெருக்கடி நேரத்தில் களமிறங்க வேண்டும். 

நாடு நன்றாக இருக்கும் போது நான் அரசியல் ரீதியாக நன்றாக பிரபலமடைந்திருக்கும் போது பொறுப்பை ஏற்பதில் பயனில்லை.  இவ்வாறான நெருக்கடி நேரத்தில் எம்மை போன்ற இளைஞர்கள் நவீன சிந்தனைகளை கொண்டவர்கள் களத்துக்கு வருவது அவசியம்.  அந்த வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நான் மரபுரீதியிலிருந்து வெளியே செல்வேன்.

என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. இந்த நாட்டின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன்.  சகல  இன மக்களினதும் கலாச்சாரங்களை பாதுகாப்பேன்.   சில தலைவர்கள் அதிகார பகிர்வு தொடர்பில் பேசுகின்றார்கள்.  ஆனால் கலாச்சாரங்களை அழிக்கின்றனர்.  சில சட்டங்களைக் கொண்டு வந்து கலாச்சார மரபுகளை அழிக்கின்றனர்.  ஆனால் நான் சகல மக்களினதும் கலாச்சாரங்களையும் பாரம்பரிய மரபுகளையும் விழுமியங்களையும் பாதுகாப்பேன் என்று உறுதி வழங்குகிறேன். 

கேள்வி: ரணில் விக்ரமசிங்கவை நெருக்கடி நேரத்தில் ஜனாதிபதியாக கொண்டு வந்தீர்கள். இரண்டு வருடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்கு நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாமே?

பதில்: இங்கு நீண்டகால விடயத்தையா அல்லது குறுகிய கால விடயத்தையா பார்க்க வேண்டும் என்பதே கேள்வியாகும்.  தற்போது எமக்கு வளர்ச்சி தேவைப்படுகிறது. தற்போது சஜித் அநுர ரணில் ஆகிய மூன்று வேட்பாளர்களின் விஞ்ஞாபனத்தை பார்க்கும்போது அங்கு வளர்ச்சிக்கான இடமில்லை.  2029 ஆம் ஆண்டில் கடன் செலுத்த ஆரம்பிக்கும்போது மீண்டும் பிரச்சனை  ஏற்படும். எனவே அவற்றை ஆராய்ந்துவிட்டே போட்டியிட தீர்மானித்தோம்.

கேள்வி:  மஹிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் ரணிலை ஆதரிக்கலாம் என்று கூறியபோதும் நாமல் ராஜபக்ஷ அதனை எதிர்த்தபதாக கூறப்படுகிறது. அது உண்மையா?

பதில்: அது ஒரு பொய்யான தகவல். நாங்கள் ஆரம்பத்தில் அனைவரும் ரணிலுக்கு ஆதரவு வழங்கினோம்.  நிபந்தனையற்ற வகையில் நாம் ஆதரவு வழங்கினோம்.  அவர் கொண்டு வந்த சில சட்டங்களை எமது கொள்கைகளுக்கு முரணானவை.    எமது கொள்கைகளுக்கு இணங்குகின்ற ஒரு வேட்பாளருக்கே ஆதரவு வழங்க வேண்டும்.   நாம் தற்போதைய ஜனாதிபதிக்கு   முதலீடுகளை ஊக்குவிக்குமாறும்   தொழில் வாய்ப்புகளை உருவாக்குமாறும் கூறினோம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத சட்டங்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறினோம். ஆனால் அவற்றுக்கு அவர் செவிமடுக்கவில்லை. 

கேள்வி: கலாச்சாரத்துக்கு எதிரான வகையில் கொண்டு வந்த சட்டம் என்ன?

பதில்: ஓரின சேர்க்கை சட்டமூலத்தை குறிப்பிடலாம். கலாச்சாரத்துக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் கொண்டுவரக் கூடாது.  அவ்வாறு  செய்தால் அந்த தரப்பினர் கலாச்சாரத்தில் இருந்து ஒதுக்கப்படுவார்கள்.  அவர்களுக்கு சட்டத்தில் உரிமை கிடைத்தாலும் நாட்டின் கலாச்சாரத்தில் அவர்களுக்கு உரிமை கிடைக்காமல் போய்விடும். 

கேள்வி: நீங்கள் களமிறங்க எடுத்த முடிவுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கின்ற ஆதரவு குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?

பதில்: இல்லை அப்படி இல்லை. எனது வாக்குகள் ரணிலுக்கு செல்லவில்லை. சென்றால் தானே பிரச்சினை வரும். அதனால் நான் போட்டியிடுவதால் ரணிலுக்கு எந்தபிரச்சினையும் இல்லை. 

கேள்வி: தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார்.  அது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

பதில்: ஒரு பக்கத்தில் அதனை நான் சிறந்த ஒரு விடயமாக பார்க்கிறேன்.  காரணம் இந்த நாட்டில் எவரும் எந்தவொரு இனத்தவரும் ஜனாதிபதியாகலாம் என்ற ஒரு சூழல் உருவாகிறது.  அரசியலமைப்பில் உள்ள விடயம் பிரயோகப்படுத்தப்படுகிறது.  சிறந்த ஆரம்பமாக இதனை நான் பார்க்கிறேன்.  எனது கட்சியிலும் தமிழ் தலைவர்கள் உருவாகுவார்கள். எனது கட்சியிலும் தமிழர்கள் தலைமைத்துவ பதவிக்கும் வருவார்கள் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. 

 

கேள்வி: எதிர்க்கட்சி தலைவர் சஜித்தை  சந்தித்து நீங்கள் பேசியதாக கூறப்படுவது?

பதில்: அது ஒரு பொய்யான தகவல். நான் அவரை சந்தித்து பேசவில்லை.

கேள்வி: அப்படியானால் இந்த வதந்தி எங்கிருந்து உருவாகின்றது?

பதில்: ராஜபக்ஷமார் எல்லோருடனும் நல்ல உறவை பேணுகின்றனர். மேலும்  தேர்தல் காரணமாக இந்த கதை உருவாகி இருக்கலாம்.

கேள்வி: உங்களை தவிர்த்து பிரதான மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன ?

பதில்: இந்த மூவருக்கும் ஒரே கொள்கையே காணப்படுகிறது.  அனுராவின் விஞ்ஞாபகனம் ரணிலின் விஞ்ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது.

கேள்வி: உங்களுடன் இளம்  அமைச்சர்கள் அதிகளவு இருந்தார்கள். அவர்களுக்கு உங்கள் அரசாங்கத்தில் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இன்று உங்களுடன் இல்லை. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: இதுதான் அரசியல். சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அங்கு இருக்கின்றனர் என்பதற்காக அங்கே தான் இருக்கின்றார்களா என்று யாருக்கும் தெரியாது. 

கேள்வி: அவர்களுடன் உங்களுக்கு எதிர்கால பயணம்  இருக்குமா?

பதில்: கொள்கை பதில் கொள்கை அடிப்படையில் பிரச்சனை இல்லாவிடில் பயணம் இருக்கும். 

கேள்வி: 13-வது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக  கூறுகின்றீர்கள். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவே முடியாது என்று கூறுகின்றீர்கள். ஏனைய வேட்பாளர்கள் அது தொடர்பாக எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் பாராளுமன்றத்தில் ஆராயலாம் என்று கூறுகின்றனர்.  ஆனால் நீங்கள் ஏன்  இவ்வாறு கடினமான ஒரு போக்கை இந்த விடயத்தில் கையாளுகின்றீர்கள்?

பதில்: இந்த நாட்டில் பதவிக்கு வந்த  எட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமார்களும்  இந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகள் அதனை வழங்குவதாக கூறிறே அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் அதனை வழங்கவில்லை.

எனவே இதனை அடுத்த வருடத்தில் வழங்க முடியும் என்று தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு கூற முடியும்? பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டில் ஒரு பகுதி மக்கள் எதிரிக்கின்றனர். அதனை வழங்கினால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும் என்ற நிலைமையுள்ளது.  இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.  வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனர்.  நான் உண்மையை மட்டுமே கூறுவேன். வழங்க முடியாது என்றால் முடியாது என்பதனை  தெளிவாக  திட்டவட்டமாக உண்மையை கூறுகிறேன்.

தமிழ் இளைஞர்களும் நான் இவ்வாறு உண்மையை கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள். காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று கூறுகின்ற நான் எனது முதலாவது தேர்தல் அலுவலகத்தை முல்லைத்தீவில் அமைத்தேன். 

கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: அரசியல்வாதிகளுக்கு தான் இந்த அரசியல் பிரச்சனை இருக்கின்றது.  மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் பேசுவதில்லை. பொலிஸ் அதிகாரத்தை வழங்கி விட்டதும் மக்களின் வயிறு நிறைந்து விடுமா?

கேள்வி: அப்படி என்றால் நீங்கள் ஜனாதிபதியானால் மாகாண சபை முறை இருக்காதா?

பதில்: மாகாண சபை முறை இருக்கும். நான் ஜனாதிபதியாகியதும் மாகாண சபை தேர்தலை நடத்துவேன். உள்ளூராட்சி மன்ற தேர்தலையும் உடனடியாக நடத்துவேன். வரலாற்றில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவோம் என்று கூறிய எவரும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்தவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச முதல் முதலாக வடக்கில் தேர்தலை நடத்தினார். வடக்கில் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான் தெற்கிலும் இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர்.

எனவே நாம் இந்த இரண்டு பிரச்சினைகளையும் ஒரே கோணத்தில் ஆராய வேண்டும். இவற்றுக்கு இரண்டு தீர்வுகள் இல்லை. ஒரே தீர்வு தான் இருக்கிறது. தெற்கில் இளைஞர்களுக்கு கிடைக்கின்ற சகல உரிமைகளும் சந்தர்ப்பங்களும் வடக்கில் கிழக்கில் இருக்கின்ற இளைஞர்களுக்கும் கிடைக்கும் என்பதை  உறுதிப்படுத்துகிறேன். பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது. புதிய தலைவரான என்னிடம் புதிய விடயங்களை மக்கள் எதிர்பார்க்கலாம்.

கேள்வி: வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் சமஷடி கோரிக்கையை முன்வைக்கின்றனவே?

பதில்:  இது ஒரு அரசியல் தீர்மானமாக இருக்கிறது. அதற்காகத்தான் மைத்திராபாலவை  ஆட்சிக்கு கொண்டுவந்தனர். அப்போது கூட இதனை பெற முடியாமல் போய்விட்டது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதெனில் அது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். அது ஜனாதிபதியின் பொறுப்பல்ல.  நிறைவேற்று அதிகாரம் முறை மற்றும் தேர்தல் முறையை ஒன்றாகவே மாற்றவேண்டும். ஜனாதிபதி தேர்தல் மேடையில் அது தொடர்பாக வாக்குறுதி வழங்குவதில் அர்த்தமில்லை.  

கேள்வி:  செனட் சபை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? 

பதில்: இந்த விடயங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தலாம். அதற்கு எமது கதவுகள் திறந்து இருக்கின்றன. அதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். நாமல் ராஜபக்ஷ தீர்மானிக்க முடியாது. இதனை ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானிக்க முடியாது.

கேள்வி:  வடக்கில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இளைஞர் யுதிகளுடன் உங்களுக்கு கடந்த காலங்களில் சிறந்த தொடர்பு இருந்தது. அந்த தொடர்பு இன்னும் இருக்கிறதா?

பதில்: இன்னும் சிறப்பாக இருக்கின்றது.  கடந்த சில வருடங்களில் அங்கு எனது பிரசன்னம்   குறைவாக இருந்தது. ஆனால்  அவர்களுடனான எனது உறவு சிறப்பாகவே தொடர்கிறத.  அவர்களது நிகழ்வுகள் பிறந்த நாள் நிகழ்வுகள் வீட்டு நிகழ்வுகளுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன்.  தற்போது தேர்தல் காலத்தில் நிச்சயமாக நான் அங்கு செல்வேன். அங்கு கூட்டங்களை நடத்துவேன்.  அங்குள்ள இளைஞர்களுடன்  எனது உறவு அரசியல் ரீதியானதல்ல. அது தனிப்பட்ட உறவாகவே காணப்படுகிறது.  அதிகமானோருக்கு இது தெரியாது.  

கேள்வி: 2009 இல் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால் இன்னும் காணாமல் போனோர் பிரச்சனை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.  இதனை நீங்கள் எப்படி கையாள்வீர்கள்?  

பதில்: காணாமல் போனோர் பிரச்சினைக்கு நிச்சயமாக ஒரு பதில் வழங்கியாக வேண்டும். தொடர்ந்து காணாமல் போனோர் குறித்த  ஆணைக்குழுக்களை நியமித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.  ஒரு பதில் வழங்க வேண்டும். அந்த பதிலை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.  நான் ஜனாதிபதியாகியதும் அரசியல் கைதிகளை  விடுதலை செய்துவிடுவேன். 

கேள்வி: கொரோனா காத்தில் முஸ்லிம் மக்களின் சடலங்ளை தகனம் செய்த விடயம் ஒரு மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்தது.  அந்த நேரத்தில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

பதில்: அது தனிப்பட்ட ரீதியில் எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ குழு வழங்கிய ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு.  ஆனால் நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழிநடத்தியது.

கேள்வி: நீங்கள் அப்போதே அவ்வாறு கருதுனீர்களா?

பதில்: எந்த நேரத்தில் அவ்வாறு நான் சிந்திக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நாட்டு மக்களை பாதுகாப்பதே பிரதான தேவையாக இருந்தது. நிபுணத்துவ ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்பதே சகலரதும் கருத்தாக இருந்தது. ஆனால் சிறிது காலம் செல்லும்போது இந்த நிபுணத்துவ குழு கோட்டாவை தவறாக வழி நடத்துகிறது என்பதை புரிந்துகொண்டோம்.

போராட்டக் களத்தில் முஸ்லிம் மக்கள் கோட்டாவுக்கு எதிராக உடல் தகன விவகாரத்தில் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தபோது   அருகில் அதற்கு ஆலோசனை வழங்கிய நிபுணத்துவகுழு உறுப்பினர்களும்  பதாதைகளை பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போதுதான் இது உபாய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.  

கேள்வி: இந்த நேர்காணல் ஊடாக முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இது நாங்கள் தனிப்பட்ட ரீதியாக எடுத்த முடிவல்ல. நிபுணத்துவ ஆலோசனை பேரில் செய்யப்பட்ட விடயம். மக்களின் பாதுகாப்புக்காக இது செய்யப்பட்டது.  ஆனால் இந்த முடிவு காரணமாக மக்கள் காயப்பட்டிருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு  கோருகிறோம்.  உடல் தகன  விவகாரம் மற்றும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவுகள் காரணமாக யாராவது காயப்பட்டிருந்தால் கவலை அடைந்திருந்தால் அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்.  

கேள்வி: இந்தியா சீனாவுடனான உங்கள் வெளிவிவகார கொள்கை எப்படி இருக்கும்?

பதில்: நான் இரண்டு நாடுகளுடனும் நட்பு ரீதியான ஒரு கொள்கையை முன்னெடுப்பேன். நட்புரீ மற்றும் அருகாமை நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற  மற்றும் அணிசேரா கொள்கையை நான் பின்பற்றுவேன். எமது அபிவிருத்திக்கு முதலீடுகளுக்கு மற்றும் சுற்றுலாத்துறைக்கு இந்த இரண்டு நாடுகளும் மிக முக்கியத்துவமானவையாகும். ஆனால் இன்னும் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கு எமது நாட்டை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன். 

கேள்வி: இந்தியா இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொள்வதாக கூறப்படுகிறதே? 

பதில்: இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் நாம் கரிசனை கொள்வோம். 

கேள்வி:  ஜனாதிபதி வேட்பாளர் என்று ரீதியில் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ? 

பதில்: தமிழ் பேசும் மக்களின் கலாசாரங்களை விழுமியங்களை பாரம்பரியங்களை நான் காப்பாற்றுவேன்.   மதங்களை காப்பாற்றுவேன். யுத்த காலத்திலும் கொரோனா  காலத்திலும் கூட நாங்கள் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்தினோம். பொய் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன். 

பொய் வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் சிக்க வேண்டாம் என்று நான் கூறுகிறேன்.  30 - 40 வருடங்கள் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாற்றமடைந்து விட்டீர்கள். எனது தந்தையும் 13 பிளஸ் என்ற விடயத்தை முயற்சி செய்தார். அது நடக்கவில்லை. அவற்றில் பாடங்களைக் கற்றுத்தான் நான் இந்த நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன்.  வரலாற்று ரீதியான பாடங்கள் நிகழ்வுகளில் இருந்து பாடங்களை கற்று  நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறேன். 

கேள்வி: மஹிந்த ராஜபக்சவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான உறவு எவ்வாறானது?

பதில்: அது மிகவும் நெருக்கமான உறவு. தந்தை என்ற ரீதியில் அவர் என்னை வழி நடத்துகிறார். எனது பிரச்சாரத்தில் முன்னணியில் அவர் தான் இருக்கிறார்.  தவறு செய்தால் திட்டுவார். ஆனால் ஒருபோதும் என்னை அடித்ததில்லை. ஆலோசனை வழங்குவார்.  ஆனால் முழுமையான சுதந்திரத்தை வழங்கி இருக்கிறார். 

கேள்வி: நீங்கள் ஜனாதிபதி தேர்தல் தேர்தலில் களமிறங்குவதற்கு தந்தை ஆரம்பத்தில் விரும்பினாரா?

பதில்: கட்சியும் தந்தையும் பசிலும் எடுத்து ஒரு முடிவே இதுவாகும். கட்சியை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நான் போட்டியிடவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். 

கேள்வி:  நீங்கள் போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் உங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்களுடன் மீண்டும் பேசினார்களா ?

பதில்: அவர்கள் இன்னும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். அங்கிருந்தும் சிலர் எனக்கு உதவி செய்கின்றனர். சிலர் வருவார்கள். சிலர் அங்கிருந்து எனக்கு உதவி செய்வார்கள். 

கேள்வி: இந்திய பிரதமர் மோடியுடனான உங்கள் எத்தகையது?

பதில்: அது கொள்கை ரீதியாக ஏற்பட்ட பிணைப்பினால் ஏற்பட்ட உறவு. இந்திய பிரதமர் மோடியும் மதங்களை கலாசாரங்களை மதிப்பவர்.  அவர் அசைவம் உண்ண மாட்டார். இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை மதிப்பவர். அந்த  வழியிலேயே நானும் பயணிக்கிறேன்.  இந்து மற்றும் பௌத்த கலாச்சாரங்களை  ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.  நாம் இருவரும் சந்திக்கும் போது பரஸ்பரம் அக்கறை உள்ள விடயங்கள் தொடர்பாக பேசுவோம்.    

கேள்வி: இந்திய பிரதமர் மோடி உங்களை சந்திக்கும்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை தீர்த்து விடுங்கள், அதனை ஏன் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறாரா?

பதில்: இந்திய பிரதமர் மற்றும் இந்திய அரசாங்கம் ஒருபோதும் ஏனைய நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் தங்களது பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவே கவனம் செலுத்துவார்கள்.   

கேள்வி: பிரசார காலத்தில் உங்கள் பிள்ளைகளுடன் இருக்கின்ற சந்தர்ப்பங்களை இழக்கின்றீர்களா?

பதில்: நான் எங்கிருந்தாலும் அவர்களுடன் வீடியோ தொடர்பை ஏற்படுத்தி பேசி விடுவேன். வீட்டில் இருக்கும்போது அவர்களுடன் நெருக்கமாக இருப்பேன். 

https://www.virakesari.lk/article/192602

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வாதவூரான்

மிஸ்ரர் ஐலான்ட்,  இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு ப

Sasi_varnam

1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தி

vasee

விழிப்புலன்ற்ற ஒருவருக்கு பிறந்த குழந்தை, பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்து விட்டது, அவருக்கு குழந்தை இறந்த விடயத்தினை உறவினர், உங்கள் குழந்தை பாலருந்தும் போது மூச்சு திணறி இறந்துவிட்டது என கூறின

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபஷ

ஒம் சூப்பரான தெரிவு! 2005 தேர்தல மனசுல வச்சு சொல்லியிருக்காப்பில!

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

பதில்: இந்த நாட்டில் பதவிக்கு வந்த  எட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமார்களும்  இந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகள் அதனை வழங்குவதாக கூறிறே அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் அதனை வழங்கவில்லை.

எனவே இதனை அடுத்த வருடத்தில் வழங்க முடியும் என்று தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு கூற முடியும்?

நல்ல கேள்வி... ...பதிலும்கூட.  தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பினார்கள் என்பவர்கள் இதனை பலதடவைகள் வாசியுங்கள் 🙏🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணி , பொலிஸ்  அதிகாரம்  வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம்.   காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர்.  தமிழ் தலைவர்களை  சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத்  தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து  தமிழர்கள்  சமஸ்டியை கேட்கிறார்கள்.

2002 ல்  பேச்சுவார்தை தொடங்கிய பின்னர்

நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர்  தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது.   இன்று அதை வேண்டிப் போராட்டம். 

இதற்கு தான் கூறுவது  காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று.

 இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து   திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும்  நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும்.  தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நல்ல கேள்வி... ...பதிலும்கூட.  தமிழர்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பினார்கள் என்பவர்கள் இதனை பலதடவைகள் வாசியுங்கள் 🙏🤣🤣

முட்டையில் மயிர் பிடுங்குபவருக்கு  Island தெளிவான பதிலைத் தந்திருக்கிறார். அதை வாசியுங்கள். 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்த நாட்டில் பதவிக்கு வந்த  எட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமார்களும்  இந்த பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தை வழங்கவில்லை. இரண்டு ஜனாதிபதிகள் அதனை வழங்குவதாக கூறிறே அதிகாரத்துக்கு வந்தனர். ஆனால் வழங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் அதனை வழங்கவில்லை.

எனவே இதனை அடுத்த வருடத்தில் வழங்க முடியும் என்று தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் எவ்வாறு கூற முடியும்

நாமல்  சொல்வது உண்மைதான் எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீரக்க மாட்டார்கள். நாமல் சிங்கள மக்களை ம்டும் நம்பி தேர்தலில் நிற்கிறார். இந்த முறை படு தோல்வி அடைவார். ஆகால் நாமலுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

முட்டையில் மயிர் பிடுங்குபவருக்கு  Island தெளிவான பதிலைத் தந்திருக்கிறார். அதை வாசியுங்கள். 

😏

எந்தவொரு தீர்வுகளையும் தந்தால். அல்லது அமுல்படுத்தப்பட்டிருந்தால். தான் அது தீர்வாகும்.  பேசுவது கதைப்பது எல்லாம் தீர்வு இல்லை    

பண்டாரநாயக்கா தான்  சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தவன்   அதற்கு தமிழ் தலைவர்கள் ஆதரவு அளித்தார்களா?? இல்லையே,.....ஆனால் அமுல் செய்யப்பட்டுள்ளது 

இதேபோல் தமிழர்கள் எதிர்த்ததாலும்.  அந்த தீர்வுகளை ஏன் அமுல் செய்ய முடியாது?? 

குறிப்பு,... முட்டையில் மயிர் புடுங்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் 🤪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இந்த காணி , பொலிஸ்  அதிகாரம்  வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம்.   காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர்.  தமிழ் தலைவர்களை  சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத்  தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து  தமிழர்கள்  சமஸ்டியை கேட்கிறார்கள்.

2002 ல்  பேச்சுவார்தை தொடங்கிய பின்னர்

நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர்  தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது.   இன்று அதை வேண்டிப் போராட்டம். 

இதற்கு தான் கூறுவது  காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று.

 இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து   திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும்  நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும்.  தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும். 

புலிகள் இல்லாத தமிழர் சார்பான அரசியல் தீர்வுக்கு நாம் தயாராக இருக்கின்றோம் என சொல்லித்தானே சர்வதேச உதவியுடன் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடத்தப்பட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

புலிகள் இல்லாத தமிழர் சார்பான அரசியல் தீர்வுக்கு நாம் தயாராக இருக்கின்றோம் என சொல்லித்தானே சர்வதேச உதவியுடன் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடத்தப்பட்டது?

யார் சொன்னார்கள் தீர்வுக்கு நாம் தயார் என்று? 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் எதற்குத் தீர்வு? 

எல்லாம் முடிந்து,  எல்லாம் அவர்கள் கைக்குச் சென்றுவிட்டது. 

அதை நாம்தான் உணரவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள்.

1987 காலப்பகுதியில் அண்ணர் அங்கு இருந்தவரே இல்லையென்றால் காத்து வாக்கில கதை கேட்டு அரசியல் கருத்து எழுதுபவரா?
இலங்கை இந்திய ஒப்பந்தம்  JR ருக்கும் ராஜீவுக்கு இடையில் ஒருதலை பட்சமாக நடந்து, எம்மீது திணிக்கப்பட்டது. சரி அதையும் தாண்டி, எழுதிய ஒப்பந்தத்தைகூட அன்றே சரியாக நடைமுறைபடுத்த வக்கு இல்லாத அரசியல் வறட்சிதான் அந்த ஒப்பந்தம் இன்று வரையிலும் கிடப்பில் இருக்கிறது. இன்றுவரைக்கும்  37 வருஷங்கள் "நொ(இ)ந்தியா" என்ன மசிரை புடுங்கி இருக்கிறது.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

யார் சொன்னார்கள் தீர்வுக்கு நாம் தயார் என்று? 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் எதற்குத் தீர்வு? 

எல்லாம் முடிந்து,  எல்லாம் அவர்கள் கைக்குச் சென்றுவிட்டது. 

அதை நாம்தான் உணரவில்லை. 

அப்போது தமிழர்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர் சம்பந்தன் சொன்னாரே புலிகளை அழித்து தீர்வு தருகிறோம் என்று நாடுகள் தன்னிடம் உறுதி செய்ததாக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, island said:

இந்த காணி , பொலிஸ்  அதிகாரம்  வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம்.   காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர்.  தமிழ் தலைவர்களை  சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத்  தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து  தமிழர்கள்  சமஸ்டியை கேட்கிறார்கள்.

2002 ல்  பேச்சுவார்தை தொடங்கிய பின்னர்

நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர்  தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது.   இன்று அதை வேண்டிப் போராட்டம். 

இதற்கு தான் கூறுவது  காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று.

 இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து   திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும்  நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும்.  தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும். 

மிஸ்ரர் ஐலான்ட், 
இது எல்லாம் எப்பநடந்தது.நேரே பக்கத்திலைநின்றது போல் கதை விடுகிறீர்கள். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உங்களிட்டை என்ன தீர்வு கிடக்கோ சட்டுப்புட்டென்று அமுல் படுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தானே. என்ன சுணக்கம். சும்மா காமடி பண்ணிக்கொண்டு (சிங்களவரிட்டை எந்தத் தீர்வும் எந்தக்காலத்திலையும் இருக்கவில்லை என்பது தான் உண்மை. சும்மா தமிழர்கள் சந்தர்ப்பத்தைப் பாவிக்கவில்லை என்பதெல்லாம் சாட்டு மட்டும் தான்)

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு நாடும் தமது என நினைப்பவர்களிடம் எமக்கு தீர்வு இருக்குமா?!
ஆயுதப்போராட்டம் பேரழிவில் முடிந்தாலும் நில ஆக்கிரமிப்பை 30 ஆண்டுகள் தடுத்திருந்தது என்பதையும் மறக்கக்கூடாது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

1987 காலப்பகுதியில் அண்ணர் அங்கு இருந்தவரே இல்லையென்றால் காத்து வாக்கில கதை கேட்டு அரசியல் கருத்து எழுதுபவரா?
இலங்கை இந்திய ஒப்பந்தம்  JR ருக்கும் ராஜீவுக்கு இடையில் ஒருதலை பட்சமாக நடந்து, எம்மீது திணிக்கப்பட்டது. சரி அதையும் தாண்டி, எழுதிய ஒப்பந்தத்தைகூட அன்றே சரியாக நடைமுறைபடுத்த வக்கு இல்லாத அரசியல் வறட்சிதான் அந்த ஒப்பந்தம் இன்று வரையிலும் கிடப்பில் இருக்கிறது. இன்றுவரைக்கும்  37 வருஷங்கள் "நொ(இ)ந்தியா" என்ன மசிரை புடுங்கி இருக்கிறது.

இந்தியா இலங்கைக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதால்,  அவர்களுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது போலவும்,  தமிழருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமைந்துள்ளது உங்கள் பதில். அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதை தடுக்க அல்லது அதை அமுல்படுத்த விடாமல் தடுக்க தமிழரின் முழுப்பலமும் வளங்களும் பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றி கண்டதை மறைக்க பாரக்கின்றீர்கள். 
 
அதை நிராகரித்து அமுல்படுத்தவிடாமல் தடுத்த விடயம் பற்றி சாதக பாதகமான முறையில் தர்க்கரீதியான வாதங்களை   முன்வைக்க முடியும். ஏனெனில் அதில் போதாமை பல உண்டு. ஆனால்,  இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய பிரந்திய நலன்களுடன்  இணைத்தே உருவாக்கப்பட்ட போதிலும்,  அதில் ஈழத்தமிழர் நலன்களும் சேர்ந்து முன்னிறுத்தப்பட்டதை மறுக்க முடியாது.  வடகிழக்கு தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்பது அங்கீகரிக்கப்பட்டமை, சிங்களம் மட்டும. சட்டம் முடிவுக்கு கொண்டு வந்து தமிழும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டமை, நிபந்தனையுடன் கூடிய வட கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்களுடன. கூடிய மாகாணசபை என சீதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும் ஜே. ஆர் அரசு இதை மனமுவந்து கொடுக்கவில்லை.
விடுதலை புலிகளால் ஒப்பந்தத்திற்கு காட்டப்பட்ட பாரிய எதிர்ப்பும் ஒப்பந்த அமுல் படுத்துதுதலுக்கு போடப பட்ட முட்டுக்கட்டைகளும் தொடர்ந்த  யுத்தமும் பேரினவாத அரசுகளுக்கு வரப்பிசாதமாக அமைந்தன. அதை சாட்டாக வைத்து இழுத்தடித்தனர். 
முள்ளிவாய்கால் இறுதி முடிவு  தமிழரின் அரசியல் பலத்தை   பாதாளத்தை நோக்கி நகர்த்தியது இனவாதிகளுக்கு மேலும் பலத்தை கொடுத்தது.   அதனால் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வுக்கான சூழ்நிலை தற்போதைய நிலையில் மிகவும் பாதகமான நிலையில் உள்ளது.  
 
இந்தியா 37 வருசமா என்ன மசிரை புடுக்கினதா என்ற உங்கள் கேள்விக்கு பதில், அதற்கான எந்த தேவையும் இப்போது இந்தியாவுக்கு இல்லை. அவர்கள் அதை செய்ய போவதும் இல்லை. தீர்வை தருவதற்கு அது ஒன்றும் சடப்பொருள் இல்லை. புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா?  அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் அதிகம் பாதிக்கப்பட போவது தமிழர்கள் என்பதால் தமிழர்களுக்கு இதில் அதிக பொறுப்பு உள்ளது.  விரும்பியோ விரும்பாமலோ. 
எப்படியும் தீர்வை 
சிங்களவர்களுடன் இணைந்தே தமிழர்களால் உருவாக்க முடியும். அதை விட வேறு வழி இல்லை என்பதே ஜதார்ததம். வேண்டுமானால் தமிழருக்குள் மட்டும் வெட்டி வீரம் பேசி மகிழலாம். அது தீர்வுக்கு கிஞ்சித்தும் பலனளிக்காது. 
Link to comment
Share on other sites

இலங்கை - இந்திய ஒப்பந்தம், இலங்கையின் தலையெழுத்தை மாற்றியது

 

ஜூலை மாதத்துக்குள் இலங்கையின் இனப் பிரச்சினையின் வரலாற்றில், திருப்புமுனைகளாகக் கருதப்பட வேண்டிய இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.   

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி தொடக்கம், சுமார் ஒரு வார காலமாக நாட்டின் பல பகுதிகளில், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்செயல்கள் அதில் ஒன்றாகும்.   

1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் எனப் பரவலாக அழைக்கப்படும் ஒப்பந்தம் மற்றையதாகும்.   

மூன்று நாள்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஒப்பந்தத்துக்கு 31 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.  

இவற்றை, இலங்கையின் இனப்பிரச்சினையின் வரலாற்றில் மட்டுமல்லாது, முழு நாட்டினது வரலாற்றிலும் திருப்பு முனைகளாகவே கருத வேண்டியுள்ளது. அவை அன்று இடம்பெறாவிட்டால், இன்று நாட்டின் நிலைமை என்னவாக இருக்கும் என்று ஊகித்துப் பார்த்தால், அவை உண்மையாகவே திருப்புமுனைகள் என்பது புலனாகும்.   

கறுப்பு ஜூலை என்றழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரமானது, இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை வரவழைத்தது.   

இந்தச் சம்பவம் இடம்பெறாவிட்டாலும், அன்றைய இலங்கை அரசாங்கத்தின் சில கொள்கைகளால் இந்தியத் தலையீடு ஏற்படும் அபாயம் இருந்து வந்துள்ளது.   

ஏனெனில், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்தன, அமெரிக்க, பாகிஸ்தான் சார்பான கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார். அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியத்துடன் அப்போது, இந்தியா இணைந்து செயற்பட்டு வந்தது.   

இந்த நிலையில்,ஜெயவர்தனவின் கொள்கை, பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தது. இதனால் இந்தியா, ஜெயவர்தனவுக்கு பாடமொன்றைக் கற்பிக்கத் தருணம் பார்த்துக் கொண்டு இருந்தது.   

ஜூலை இனக் கலவரம், இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பை வெகுவாக ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று அந்தக் கலவரம் இடம்பெறாதிருந்தால், இந்தியத் தலையீடு சிலவேளை வேறு விதமாகத் தான் அமைந்திருக்கும். அது நாட்டின் வரலாற்றுப் பயணத்தை வேறு திசையில் திருப்பியிருக்கும்.   

இரண்டாவது, திருப்புமுனைச் சம்பவமான இலங்கை - இந்திய ஒப்பந்தம், நேரடியாகவே இந்தியாவுடன் தொடர்புடையது என்பது, அதன் பெயரிலேயே தெளிவாகிறது.   

ஒருவகையில், இதுவும் அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளிடையே, நிலவி வந்த பனிப்போரின் விளைவு என்றும் கூறலாம்.   

அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை, இந்தியாவுக்கும் ஒரு பிரச்சினையாக மாறி வந்ததன் விளைவு என்றும் கூறலாம்.   

தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக தமிழ் ஆயுதக் குழுக்கள், அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நழுவவிடப்பட்ட ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என்றும் கூறலாம்.  

இலங்கை - இந்திய ஒப்பந்தமானது, பல தமிழ்த் தலைவர்கள் அன்று நினைத்ததைப் போல் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் மீது கொண்ட பரிவின் காரணமாக, மேற்கொண்ட ஒரு நடவடிக்கையல்ல. அது, இந்தியா, தமது நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.   

மேலே கூறப்பட்டதைப் போல், ஒரு புறம் இந்தியாவுக்குத் தமது அணியான சோவியத் அணியின் சார்பில், இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் அவசியம் ஏற்பட்டு இருந்தது.   

மறுபுறத்தில் வடக்கு, கிழக்கில் அரச படைகளுக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்று வந்த மோதல்கள் காரணமாக, சுமார் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். இதன் காரணமாகத் தமிழ்நாடு, இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் கொதித்துக் கொண்டிருந்தது.    

image_847d2aa154.jpg

இதனால், தமிழ்நாட்டின் தமிழ் உணர்வுகள், இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்பும் அபாயமும் அப்போது ஏற்பட்டு இருந்தது. இந்த இரண்டும்தான், இந்திய அரசாங்கம் அன்று, இலங்கை விவகாரத்தில் தலையிடுவதற்கான காரணங்களாக அமைந்தன.   

அதற்கு, இலங்கை அரசாங்கமும் துணை போனதாகவே கூற வேண்டும். இலங்கை மீதான தமது கட்டுப்பாட்டை, இந்தியா வைத்துக் கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே, ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சி செய்தது. அதற்காகத் தான் இந்திய அரசாங்கம் 1985 ஆம் ஆண்டு, இரு சாராருக்கும் இடையே முதல் முதலில், பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்தது.  

ஆனால், பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமோ தமிழ்க் குழுக்களோ நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்போது பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்கள், மாக்ஸியத்தை ஏற்றுக் கொண்டு இருந்தமையால், மாக்ஸியத்தின்படி, தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதையும் அந்த இனத்துக்குப் பிரிந்து செல்லும் உரிமை இருக்கிறது என்பதையும் நிரூபிப்பதே தமிழ்க் குழுக்களின் நோக்கமாக இருந்தது. அதனால்,  இலங்கை அரசாங்கத்தோடு எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ள, அவை விரும்பவில்லை.  

ஜெயவர்தனவின் தலைமையிலான இலங்கை அரசாங்கமும், இந்திய நெருக்குவாரத்தின் காரணமாகப் பேச்சுவார்த்தைக்கு சென்றதேயல்லாமல், பேச்சுவார்த்தையின்போது, எவ்வித இணக்கப்பாட்டையும் அடைய வேண்டும் என்ற நோக்கம் அதற்கு இருக்கவில்லை.   

எனவே, ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என்பதிலேயே, அரசாங்கப் பிரதிநிதிகள் உறுதியாக இருந்தனர். இந்த நிலைமை காரணமாகத் திம்புப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.  

ஆனால், இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்திய நெருக்குவாரத்தின் காரணமாக, 1986 ஆம் ஆண்டு அரசாங்கம், அரசியல் கட்சி மாநாடு என்ற பெயரில் சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியது.  

அதன்போதுதான், முதன்முதலில் இலங்கை அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கருவைக் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டது.   

ஆனால், வடபகுதியில் போரும் தொடர்ந்தது. இதனால் தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டே இருந்தது. எனவே, போரை நிறுத்த அல்லது தணிக்க, இந்தியா ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 

அதன்படி, போரை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி, இந்தியா, இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றியே தமது கடற்படையினர் முலம், வடபகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்பியது.   

இது இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக அமைந்தது. முதலாவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு விடுத்த எச்சரிக்கையாகும். மறுபுறத்தில், தமிழ்நாட்டைத் திருப்திப்படுத்தும் வகையிலான அச்சுறுத்தலாகவும் இருந்தது. எனினும், இலங்கைக் கடற்படையினர் அந்தக் கப்பல்களை, இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் நுழைய இடமளிக்கவிலைலை. அவை திரும்பிச் சென்றன.  

ஆனால், ஓரிரு நாள்களில் இந்திய விமானங்கள், திடீரென யாழ்ப்பாண வான்பரப்பில்த் தோன்றி, உணவுப் பொட்டலங்களை ஆங்காங்கே போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றன. இது, தமிழ் மக்களுக்கு உணவு வழங்கும் தேவைக்காக செய்த காரியமல்ல; இலங்கை அரசாங்கத்துக்குச் சவால் விடுப்பதும், இலங்கை அரசாங்கத்தை மிரட்டுவதுமே அதன் நோக்கமாகியது.   

அது பலன் தந்தது. மாகாண சபைகளை உருவாக்கவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் ‘தற்காலிகமாக’ இணைக்கவும் அந்த விடயங்கள் அடங்கிய ஓர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவும் இலங்கை அரசாங்கம் இணங்கியது. 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் தான் இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகும்.  

சுமார் 40 நாள்களுக்கு முன்னர், இந்திய உணவுக் கப்பல்கள் வடபகுதிக்கு வந்த போது, தமது கட்டுப்பாட்டில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்டு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தச் செய்த, அப்போதைய அமைச்சர் காமினி திஸாநாயக்கவே, இந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்துவதில் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

வேலுபிள்ளை பிரபாகரனின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நிர்ப்பந்தத்தின் காரணமாக இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்வதாகக் கூறினாலும், ஓரிரு வாரங்களிலேயே அவ்வமைப்பு அதற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கியது.   

ஆனால், அதுவரை தனித் தமிழ் நாடொன்றுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஏனைய தமிழ்க் குழுக்கள், இந்திய அதிகாரிகளின் முன்னிலையில் ஆயுதங்களை இலங்கை அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, தனி நாட்டுக்கான போராட்டத்தையும் கைவிட்டன. அதன்படி, தமிழீழத்துக்கான போராட்டமும் ஆயுதப் போராட்டமும் புலிகளின் ஏகபோக உரிமையாக மாறியது.   

இந்த ஒப்பந்தத்தோடு, இலங்கையில் தனித்தமிழ் நாட்டுக்கான, இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நின்றுவிட்டது. உண்மையிலேயே, அதற்கு முன்னரும் இந்தியா, இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்தவும் கட்டுப்படுத்தவும் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததேயல்லாமல், இலங்கையில் பிரிவினையை ஆதரிக்கவில்லை.   

தாம் தொடர்ந்தும் இலங்கையில் தனித் தமிழ் நாட்டுக்கான போராட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை இந்தியா, அதற்கு அடுத்த ஆண்டில் வெளிப்படையாகவும் மிகத் தெளிவாகவும் கூறியது. அப்போதைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.கே. சிங், இதை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.   

1988 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டுக்காக சென்றிருந்த எஸ்.கே. சிங், அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைத் தெரிவித்தார்.   

தமிழ்நாட்டில் மற்றொரு தமிழ் ஈழத்தைக் காண விரும்பாததால், தமது அரசாங்கம் இலங்கையில் தனித் தமிழ்நாடு உருவாவதை ஏற்றுக் கொள்வதில்லை என அவர் கூறினார். புலிகளும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இருந்த நிலையில், இந்தியாவுக்கு மிக எளிதில் இந்த முடிவை அறிவிக்க முடியுமாக இருந்தது.   

இப்போது இந்தியா, அந்த ஒப்பந்தத்தைத் தொடர்நதும் வலியுறுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்தத்துக்கு 30 வருடங்கள் பூர்த்தியாகிய கடந்த வருடம், “தொடர்ந்தும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பை வலியுறுத்தவில்லை” என இந்தியா அறிவித்தமை அதையே சுட்டிக் காட்டுகிறது.   

கடந்த வருடம் பெப்ரவரி 18 ஆம் திகதி, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெயசங்கர், அம்மாதம் 20 ஆம் திகதி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரனுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, இக்கருத்தைத் தெரிவித்து இருந்தார். ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை இச் செய்தியை வெளியிட்டு இருந்தது.  

இந்தியாவின் அதிகாரப் படிநிலைகளின் பிரகாரம், வெளியுறவுச் செயலாளரே வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். அவர் ஒரு விடயத்தைப் பற்றிக் கொள்கை ரீதியான கருத்தொன்றை வெளியிடுவதாக இருந்தால், அதுவே இந்திய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும்.  

உண்மையிலேயே, ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பினராகிய, இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் ஆயுதக் குழுக்களும் ஒப்பந்தத்தில் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றவில்லை.   

இந்தியா, தமிழ் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களையத் தவறிவிட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களில் புலிகளும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம், சட்டத்தில் உள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவில்லை. எனவே, எவரும் எவரையும் எந்த விடயம் தொடர்பிலும் தார்மீக ரீதியில் வற்புறுத்த முடியாதநிலைமை பிற்காலத்தில் உருவாகியது.   

இலங்கையின் தலையெழுத்தை மாற்றிய போதிலும் உலக வல்லரசுகளிடையே பனிப்போர் மறைந்துள்ள நிலையில், இலங்கை - இந்திய ஒப்பந்தம் இப்போது ஏறத்தாழ செல்லுபடியற்றதாகி உள்ளது.  

https://www.tamilmirror.lk/சறபப-கடடரகள/இலஙக-இநதய-ஒபபநதம-இலஙகயன-தலயழதத-மறறயத/91-219782

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தில் வாழ்ந்த மக்களுக்கு யதார்த்த புரிதல் ஒன்று இருக்கின்றது.

Edited by Sasi_varnam
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

1987 ஒப்பந்தம் தொடர்பாக தேசியத் தலைவரின் உரையின் சாராம்சம் ... தமிழர்கள் இந்த தீர்வை குழம்பினார்கள் என்று நீங்கள் "நம்புவதற்கு" ஏதுவான காரணங்களை பற்றி பேசுங்களேன். ஏனென்றால் 1987 காலப்பகுதியில் ஈழத்தில் வாழ்ந்த மக்களுக்கு யதார்த்த புரிதல் ஒன்று இருக்கின்றது.

 அரசியல் என்பது காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் வெளிப்படையாக உரையாடுவது. அதன் மூலமே தெளிவு பெற முடியும். அதுவே முன்னேற்றதிற்கான வழி. 

உங்கள் பார்வையில் உள்ளது போல அரசியல்  பக்தி விசுவாச இலக்கியம் அல்ல. நீங்கள் இணைத்தது வெறுமனே  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரச்சார வீடியோ மட்டுமே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளரை உருவாக்கிய ஓனரே அவர்தானே.. அவர் அப்படித்தானே சொல்லுவார்…😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

 அரசியல் என்பது காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் வெளிப்படையாக உரையாடுவது. அதன் மூலமே தெளிவு பெற முடியும். அதுவே முன்னேற்றதிற்கான வழி. 

உங்கள் பார்வையில் உள்ளது போல அரசியல்  பக்தி விசுவாச இலக்கியம் அல்ல. நீங்கள் இணைத்தது வெறுமனே  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரச்சார வீடியோ மட்டுமே.  

ஐயா இவை வரலாறு|||  நிகழ்வு  பட்டவர்தன ஆவணமாய் மேலே இருக்கிறது... இதில் எங்கே பக்தி விசுவாசம்  கண்டுபிடித்தீர்கள்?

காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் நீங்களே சொல்லுங்களேன். அதைத்தானே மேலே நான் கேட்டேன் 

தாழ்மையான கருத்து - கருத்துக்களை உருட்டுவது நீங்களே ஆனாலும் கேட்பது எங்கள் காதுகள். ஆகையினால் பார்த்து உருட்டுங்கள் சார்.

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:
எப்படியும் தீர்வை 
சிங்களவர்களுடன் இணைந்தே தமிழர்களால் உருவாக்க முடியும்.

ஒருபோதும் முடியாது    

2015 இருந்து 2019 வரை  இணந்து தான் இருந்தார்கள் ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை 

டக்ளஸ் தேவானந்தா  அன்று தொடக்கம்  ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இணந்து இருக்கிறார்   ஆனால் தீர்வை உருவாக்க முடியவில்லை    அவர் வாழும் வரை இணந்தே இருப்பார் ஆனால்  தீர்வை உருவாக்க போவதில்லை 

இலங்கை அரசாங்கம்கள்   எதுவானாலும் வடக்கு கிழக்கு இல்  தேர்தல் வைக்கமால். ஒரு பொம்மை சுயாட்சியை நியமிக்கலாம். அவர்களின் சொல்லைஎல்லாம் கேட்கும்   டக்ளஸ் கருணா. .    ... போன்றோருக்கு மாகாண அமைச்சர் பதவிகளை கொடுத்து நியமித்துவிட்டு பொம்மை சுயாட்சி நிறுவ முடியும் 

அவர்கள் விரும்பவில்லை .. .  அவர்கள் செய்வது… எல்லாம் 

பேச்சுவார்த்தைக்கு முதலே பேச்சுவார்த்தையை குழப்பியடிப்பது 

சர்வதேசத்தை குழப்பியடிப்பது 

பேச்சுவார்த்தையில்  ஈடுபடும் தமிழ் தலைவர்களை குழப்பியடிப்பது 

தமிழ் மக்களை குழப்பியடிப்பது 

இலங்கை பாராளுமன்றத்தில் தங்களுக்கு வேண்டிய சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவற்றை நிறுத்த முடிவதில்லை   முடியாது  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவையற்றது  

ஏராளன்.  குறிப்பிட்டது போல் இது சிங்கள நாடு என்று நினைப்பவர்கள்  எப்படி தமிழருக்கு சுயாட்சி தருவார்கள்???  தமிழர்கள்,. ..   

தடுத்தார்கள்

எதிர்த்தார்கள் 

முழு பலத்துடன் அமுல் செய்ய விடவில்லை 

பிழை விட்டு விட்டார்கள் 

ஆதரவு வழங்கவில்லை 

சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இருக்குமாயின் தமிழர்கள் நாங்கள் இலங்கையர்கள்  என்று சொல்லி கொண்டு வாழ்வார்கள்.   

தீர்வு கிடைக்கமைக்கு  தமிழன் தான் காரணம் என்று சொல்லும் தமிழன் இருக்கும் வரை   தீர்வு கிடையாது 🙏

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

தமிழர்கள்,. ..   

தடுத்தார்கள்

எதிர்த்தார்கள் 

முழு பலத்துடன் அமுல் செய்ய விடவில்லை 

பிழை விட்டு விட்டார்கள் 

ஆதரவு வழங்கவில்லை 

இவையெல்லாம் முழுக்க முழுக்க பொய்யாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2024 at 05:54, island said:

இந்த காணி , பொலிஸ்  அதிகாரம்  வேண்டாம் என்று தானே 1987 ல் அதை தமிழர்கள் குழப்பினார்கள். அதை விட மிக அதிகம் தேவை என று போய் இன்று 1987 ல் கிடைத்தது கூட கிடைக்க போவதில்லை என்பது தான் நிஜம்.   காலம் எப்போதும் ஒரே நிலையில் நிற்பதில்லை மாறிக் கொண்டே போகும் . 1929 ல் சிங்கள தலைவர்கள் சமஸ்டியை வலியுறுத்திய போது அன்றைய தமிழர்கள் அதை நிராகரித்தனர்.  தமிழ் தலைவர்களை  சமஸ்டிக்கு இணங்க வைக்க சிங்களத்  தலைவர் பண்டாரநாயக்கா அன்று முயன்று தோல்வியடைந்தார். இன்று காலங்கடந்து  தமிழர்கள்  சமஸ்டியை கேட்கிறார்கள்.

2002 ல்  பேச்சுவார்தை தொடங்கிய பின்னர்

நோர்வேயில் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சமஸ்டியை ஆராய்வது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமஸ்டியை ஆராய வல்லுனர. குழு நியமிக்கப்பட்ட பின்னர்  தமிழர்களால் அது நிராகரிக்கப்பட்டது.   இன்று அதை வேண்டிப் போராட்டம். 

இதற்கு தான் கூறுவது  காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்று.

 இளமை துடிப்பில் தன்னை மன்மதன் என்று கற்பனை செய்து   திருமணத்துக்கு ஆயிரம் நிபந்தனைகள் வைத்து வந்த பெண்கள் எல்லோரையும்  நிராகரிப்பவர்களுக்கு வயதான பின்னர் அதே எந்தப் பெண்ணும் கிடைப்பது அரிதாக தான் இருக்கும்.  தமிழரின் அடுத்த சந்ததியாவது அறிவை பயன்படுத்த வேண்டும். 

தற்போதும் பெரும்பான்மை இனம் போரினால் தமிழர்களை வென்று விட்டோம் இனி தீர்வு கொடுக்கத்தேவையில்லை எனும் மனப்பான்மையில் உள்ளார்கள் என்பதனை உங்கள் கருத்தின் மூலம் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்,

இலனக்யின் பொருளாதார நிலை தற்போது பிரச்சினை இல்லை எனும் எண்ணப்பாடே பெரும்பான்மையான இலங்கையர்களிடையே நிலவுகிறது, ஆனால் அது உண்மையல்ல.

அண்மையில் எங்கோ வாசித்தாகநினைவுள்லது இந்தியா இலங்கையினை தரைப்பாதையினூடகவோ அல்லது வேறு வகையிலோ (சரியாகநினைவில்லை) இதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினை 3 விகிதமாக அதிகரிக்க முடியுமென இந்தியா அறிவித்திருந்தது.

இது இலங்கைக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும் இவ்வாறு இந்தியா இலங்கையில் எப்போதும் கரிசனையாக இருப்பது எதனால்.

இந்த தரைப்பாதை மட்டும் திறந்தால் இந்தியா இலங்கையினை காவு கொண்டுவிடும்.

இந்திய எல்லை நாடுகளான பாகிஸ்தான், சீனா(தரைப்பகுதி இணைப்பு கொண்ட) ஆகிய நாடுகளைத்தவிர்த்து மற்ற நாடுகளில் தனக்கு சாதகமான பொம்மை அரசுகளை உருவாக்கி விடுவதிலேயே கவனம் செலுத்தி வந்திருக்கிறது, இலங்கையில் இனி வரும் காலங்களில் முழுமையான தனது பிடியினை இந்தியா இறுக்கவுள்ளது.

குரங்கு அப்பம் பிரித்தனை போல இந்தியா இனவாதம் கண்ணை மூடி நிக்கின்ற ஒரு நாட்டினை  ஆரம்பத்தில் சிறுபான்மையினருக்கு ஆயுதம் வழ்ங்கி உள்நாட்டு போரை தீவிரப்படுத்தி பின்னர் அதனை அழித்து பெரும்பான்மையினரது இன வெறியினை இந்தியா காப்பாற்றி விட்டது என எண்ணத்தில் தற் போது படிப்படியாக தமது இறைமையினை இழக்கின்றனர்.

யார் ஆட்சி கட்டிலேறினாலும் முதலில் போய் எயமானனின் காலில் விழும் நிலைக்கு பேரினைவாதம் உள்ளது, இறுதியில் எனக்கு மூக்குப்போனாலும் எதிர்க்கு சகுனப்பிழையாக வேணும் (தமிழருக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்ற சந்தோசம்) எனும் நிலையில் தமிழர்களின் நிலைக்கு தமது உரிமைகளை இந்தியாவிடம் அடகு வைக்கும் நிலைக்கு வரும் நிலை வந்து கொண்டிருக்கிறது.

சகல சமூகங்களும் சம அந்தஸ்துடன் வாழ்ந்தால் நாடு அபிவிருத்தி பாதையில்  பயணிக்கமுடியும் அதை விடுத்து தொடர்ந்தும் பிற்போக்குவாத சிந்தனைகளோடு மற்ற சமூகங்களை அடக்கமுற்பட்டால் வேறு யாருக்கல்லாமோ அடிமையாகலாம் ( நாடுகள் மட்டுமல்ல நிதி நிறுவனங்களிடமும்).

இந்தியா பல் முதலீடுகளில் ஆர்வம் காட்டுவது பின்னர் அதற்கான பாதுகாப்பு என இலங்கையில் நுழைவதற்கான ஒரு வழியாக இருக்கலாம் என கருதுகிறேன்.

இதில் இந்தியா உடன் சீனா ஆதிக்கப்போட்டியில் ஈடுபட்டால் நாடு இரண்டுபட்டுவிடும்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sasi_varnam said:

ஐயா இவை வரலாறு|||  நிகழ்வு  பட்டவர்தன ஆவணமாய் மேலே இருக்கிறது... இதில் எங்கே பக்தி விசுவாசம்  கண்டுபிடித்தீர்கள்?

காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் நீங்களே சொல்லுங்களேன். அதைத்தானே மேலே நான் கேட்டேன் 

தாழ்மையான கருத்து - கருத்துக்களை உருட்டுவது நீங்களே ஆனாலும் கேட்பது எங்கள் காதுகள். ஆகையினால் பார்த்து உருட்டுங்கள் சார்.

நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் இணைத்தது ஒரு இயக்கத்தின் பிரச்சார வீடியோ ஆகும்.  இப்படியான பிரச்சார வீடியோக்கள் ஒரு காலத்தில் உங்களை விட என்னை அதிகம் மயக்கியது.  

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதலே அதை முற்றாக  நிராகரித்து  அதை அமுல்படுத்த விடாமல் தடுப்பற்கான தமது போராட்டத்தை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தது  வெள்ளிடை மலை. தனி தமிழீழத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என  முழு வேட்கையுடனும் உத்வேகத்துடனும் புலிகள் அன்று இருந்ததும் இந்த ஒப்பந்தத்தை அதற்கு வந்த இடையூறாக புலிகள் கருதியதும்  எல்லோருமே அறிந்த விடயம் தான். 

புலிகள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் புரிந்தது ஒப்பந்தத்தை அமுல் படுத்த அல்ல. மாறாக இந்திய இராணுவத்தை வெளியேற்றி இலங்கை இராணுவத்திடன் தமிழீழத்துக்கான போரை தொடர்ந்து  நடத்துவதற்காகவே  என்பது அனைவரும் அறிந்த உண்மை.  அதையே பின்னர் செய்தனர். 

பிரேமதாசவுடன் பேச்சுவார்ததை ஆரம்பித்ததும் இந்திய இராணுவத்தை வேளியேற்றும் அரசியல் நகர்வுகளுக்காகவே. அது பற்றி அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

நான் அந்த நடவடிக்கையில் சரி, பிழை கூறவில்லை. அது தொடர்பாக சாதகமான பாதகமான வாத பிரதிவாதங்களுக்கு இடம் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே.  ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பல போதாமைகள் இருந்தன. அதற்காக அதில் பல நல்ல அம்சங்களும் இருந்தன. அதில் உள்ளதை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  இன்று   தமிழர்கள் விரும்புவதில் இருந்தே அதை அறியலாம்.  

ஆனால்,  அன்று தமிழ் தரப்பால் அது நிராகரிக்கப்பட்டது என்பதும் இன்று அதையாவது நடைமுறைப்படுத்தமாட்டார்களா என்று  தமிழ் தரப்பு விரும்புவதும்  எவராலும் மறுக்க முடியாத உண்மை.  

  • Like 1
Link to comment
Share on other sites

49 minutes ago, island said:

 

ஆனால்,  அன்று தமிழ் தரப்பால் அது நிராகரிக்கப்பட்டது என்பதும் இன்று அதையாவது நடைமுறைப்படுத்தமாட்டார்களா என்று  தமிழ் தரப்பு விரும்புவதும்  எவராலும் மறுக்க முடியாத உண்மை.  

தமிழ் தரப்பின் வங்குரோத்து அரசியலின் விளைவு இது.

எதை நிராகரித்து, நிராகரித்ததை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து, ஈற்றில் எம்மால் நிராகரிக்கப்பட்ட ஒன்றை எமக்கு தாருங்கள் என 37 வருடங்களின் கேட்கும் வங்குரோத்து நிலையில் நாம் இன்று.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தமிழ் தரப்பின் வங்குரோத்து அரசியலின் விளைவு இது.

எதை நிராகரித்து, நிராகரித்ததை உறுதி செய்ய ஆயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்து, ஈற்றில் எம்மால் நிராகரிக்கப்பட்ட ஒன்றை எமக்கு தாருங்கள் என 37 வருடங்களின் கேட்கும் வங்குரோத்து நிலையில் நாம் இன்று.

உரிமைகளை  கேட்பது முட்டாள்தனம் அல்ல, அது அவரவர் உரிமை, ஆனால் அந்த உரிமையினை வழங்கமாட்டேன் என கூறி தமது உரிமைகளை இழப்பதுதான் முட்டாள்தனம், அதனைத்தான் சிங்களம் செய்கிறது.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.

நான்  நம்புகிறேன் ஒரு காலத்தில் தமிழர்களின் காலில் விழுந்து உரிமைகளைத்தருகிறோம் என கெஞ்சுவார்கள் ஆனால் அப்பொது அவர்களை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள் (அவர்களே உரிமை இல்லாமல் பிரித்தானியரின் காலனித்துவ காலத்தில் இருந்த நிலையில் இருப்பார்கள்).

  • Thanks 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உங்களுக்கு ஆடத் தெரியவில்லை. அதனால் சுமந்திரனை வசை பாடுகிறீர்கள். சுமந்திரன் இல்லாத வெற்றிடம் ஒன்று உருவாகும்போது பழிபோடுவதற்காக நீங்கள் நாளை இன்னொருவரைத் தேடுவீர்கள்.  இனப்பிரச்சனைக்கு நடைமுறையில் சாத்தியமான வகையில்  முடிவு காணப்பட  வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?  யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறிய சிறீதரன் TNA யின் தலைவர். அவர் எங்களுக்கு தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று நம்பச் சொல்கிறீர்கள்,....  இலங்கையின் அமைதிக்காக உழைக்கும் எல்லோருமே கொல்லப்படுவார்கள். இதுதான் உண்மை.  அது அனுர குமாரவாகவும் இருக்கலாம் அல்லது சஜித் பிறேமதாசாவாகக் கூட இருக்கலாம்.  இலங்கையில் அமைதியை விரும்பும் எல்லோருக்கும் மரணம் மட்டும்தான் பரிசு.   
    • வெளிநாடுகளுக்கு கதிர்காமர் சொல்லித்தான் விபு க்களைத் தடை செய்ய வேண்டிய நிலை இருந்தது என்கிறீர்களா?   சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் தற்ப்போதுதான் கதிர்காமரும் இல்லை, விபு க்களும் இல்லையே? தடையை நீக்கலாமே,.... அத்துடன் சீப்பை ஒழித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைக்கும் அளவில் விபு க்கள் இருந்தனர் என்கிறீர்களா?    ஆகவே விபுக்களின் மீதான தடை என்பது கொள்கை ரீதியான முடிவு என்பதாகவே நோக்கப்பட வேண்டும்.  கதிர்காமரைக் கொல்வதால் யாருக்கு இலாபம்?  அவர்கள்தான் கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னால் இருப்பவர்கள். 
    • பார்டா ரோசத்தை .....மீனவர்களை கொலை செய்யும் பொழுது வராத ரோசம் மொட்டையடிச்சதற்கு வந்திட்டடுது
    • புலிகள் அன்றாடப் பிரச்சினைகள் குறித்துப் பேசலாம் என்றுகேட்டது உண்மைதான். ஏனென்றால், நீண்டகாலப்பிரச்சினைகளான உரிமை, தாயக நிலம், அதிகாரம் என்பவற்றினைபெற்றுக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. தமது ஆயுதப் போராட்ட ஊடாக அரசைப்பணியவைக்கவோஅல்லது தனிநாட்டை உருவாக்கவோ அவர்களிடம் வல்லமையும்நம்பிக்கையும் இருந்தது. அதனால் அன்றாடப் பிரச்சினைகள்குறித்து இப்போது பேசலாம், நீண்டகாலப் பிரச்சினைகளைபின்னர் பார்க்கலாம் என்று கூறினார்கள். மக்களுக்கும் அதுநம்பிக்கை தருவதாக இருந்தது.   இன்று அன்றாடப் பிரச்சினைகளை மட்டுமே பேசிவிட்டு அரசியல்ப்பிரச்சினைகளை பின்னர் பேசலாம் என்கிற நம்பிக்கையோஅல்லது சிங்களவர்கள் அதனைத் தருவார்கள் என்கிறநம்பிக்கையோ உங்களுக்கு இருக்கிறதா? எதற்காக அவர்கள்அதனை உங்களுக்குத் தாரைவார்த்துத் தருவார்கள் என்றுநம்புகிறீர்கள்?
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.