Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

8 minutes ago, Eppothum Thamizhan said:

அது சரி, சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கும், கூட்டமைப்பின் மற்றவர்கள் சொன்னதால் ரணிலுக்கும் போட்ட வாக்குகளால் என்ன சாதகம் வந்தது என்று சொல்லிவிட்டு போறது!!

ஒரு சிறு திருத்தம்: சுமந்திரன் சொன்னதால் சனம் சஜித்துக்கு வாக்கு போடவில்லை. சனம் இப்படித்தான் சஜித்துக்கு போடும் என சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் போடும் என ரவிராஜின் மனைவி போன்றோருக்கும் ஓரளவு புரிந்து இருந்திருக்கின்றது.

இவர்களுக்கு போட்டதால் என்ன சாதகம்?

ஒன்றுமில்லை.  

இனவாத அலை இல்லாத இந்த தேர்தலில், தமிழ் கட்சிகள் மூன்று முக்கிய வேட்பாளர்களுடன் புனர்வாழ்வு, வேலை வாய்ப்பு,  அரசியல் கைதிகளின் விடுதலை, 13 + போன்ற விடயங்களை பேசி ஒரு பேரம் பேசலுக்கு முற்பட்டு ஆதரவு கேட்டு இருப்பின் அது முன்னேற்றகரமாக இருந்திருக்கும். ஆனால் எவரும் அப்படி செய்யவில்லை என்பதால் தமிழர்களின் வாக்குகள் வீணாக மீண்டும் போய்யுள்ளது.

  • Replies 109
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெ

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை க

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை..  இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 கூட்டம் சொல்லி இருக்கிறது. காது கொடுக்க தயாராக உள்ளவனுக்கு இது போதும். மற்றவர்களுக்கு 99,99 ம் கேட்கப் போவதில்லை..

நன்றி அரியம் அண்ணா.

20% பதில் வந்த பின்னத்தின் பகுதியெண் என்ன? பொது வேட்பாளரின் சொந்த தொகுதியையும் தூக்கி விட்டுக் கணித்திருக்கிறீர்கள் என ஊகிக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நிழலி said:

இந்த 20 வீதம் என்ற கணக்கை எங்கிருந்து பெற்றீர்கள் விசுகு?அல்லது யாழ்ப்பாண மக்கள் மட்டும் தான் வடக்கு கிழக்கின் மொத்த மக்கள் தொகையா?

வடக்கு கிழக்கின் வாக்களித்த மொத்த மக்களில் 9.84  வீதத்தினரின் வாக்குகளே அரியத்திற்கு கிடைத்துள்ளது.

வடக்கு கிழக்கு மக்களால்  நிராகரிக்கப்பட்டவருக்கு பட்டுக் குஞ்சம் சாத்தாமல், யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் புரிந்து கொள்ளாவிடின் கூட பிரச்சனை இல்லை, அதானால் மக்களுக்கு எந்த பாதகமும் ஏற்படப் போவதில்லை.

நன்றி

வடக்கு கிழக்கின் வாக்களித்த மொத்த மக்களில் 9.84  வீதத்தினரின் வாக்குகளே அரியத்திற்கு கிடைத்துள்ளது. +யாழ்ப்பாணத்தில் 20 வீதம் அல்ல)

இதை எப்படி அதிகரிக்க என்ன வழிகள் உள்ளன. அதையும் எனக்கு சொல்லி என்ன பிரயோஜனம் என்றால் சொல்லவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

ஒரு சிறு திருத்தம்: சுமந்திரன் சொன்னதால் சனம் சஜித்துக்கு வாக்கு போடவில்லை. சனம் இப்படித்தான் சஜித்துக்கு போடும் என சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் போடும் என ரவிராஜின் மனைவி போன்றோருக்கும் ஓரளவு புரிந்து இருந்திருக்கின்றது.

அப்போ தொலைபேசிக்கு போடச்சொல்ல ஏன் கல்குலேட்டருக்கு போட்டார்கள்? அதுவும் அவர்களாகவே போட்டதா?? அவர்களுக்கு பியதாச என்றால் யாரென்றே தெரியாதே!!

3 minutes ago, Eppothum Thamizhan said:

அப்போ தொலைபேசிக்கு போடச்சொல்ல ஏன் கல்குலேட்டருக்கு போட்டார்கள்? அதுவும் அவர்களாகவே போட்டதா?? அவர்களுக்கு பியதாச என்றால் யாரென்றே தெரியாதே!!

உண்மையிலேயே நாம் வெட்கப்பட வேண்டிய விடயம் இது எப்போதும் தமிழன். கல்குலேட்டருக்கும் தொலைபேசிக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளனர் எம் சனம்.

அத்துடன் இலங்கையில் யாழ் மாவட்டத்தில் தான் 6 வீதத்துக்கு மேல் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் கிடைத்துள்ளது. வன்னியில் 4 வீதம். ஏழ்மையான பின் தங்கிய சிங்கள மாவட்டங்களை விட இது மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

உண்மைதான். அவர்களின் படிப்பறிவு இந்த நிலையில் இருக்கும்போது, தாயக மக்களை அப்படியே விடுங்கள் அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று யாழில் கூவிக்கொண்டு திரிவோரை என்ன சொல்வது!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

உண்மைதான். அவர்களின் படிப்பறிவு இந்த நிலையில் இருக்கும்போது, தாயக மக்களை அப்படியே விடுங்கள் அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று யாழில் கூவிக்கொண்டு திரிவோரை என்ன சொல்வது!

அவர்கள் சுயமாக சிந்தித்து தான் வாக்களித்து இருக்கிறார்கள். அதில் என்ன சந்தேகம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, island said:

அவர்கள் சுயமாக சிந்தித்து தான் வாக்களித்து இருக்கிறார்கள். அதில் என்ன சந்தேகம். 

எது, பியதாசவிற்கு போட்ட வாக்குகளை சொல்கிறீர்களா? விளங்கீடும்!!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

எது, பியதாசவிற்கு போட்ட வாக்குகளை சொல்கிறீர்களா? விளங்கீடும்!!

நான் பெரும்பான்மை மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதையே தெரிவித்தேன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

நான் பெரும்பான்மை மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதையே தெரிவித்தேன்.  

மக்களும் தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியும் வாக்களித்துள்ளார்கள் அண்ணை. நண்பர் ஒருவரைக் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்துள்ளார், தனக்கு பணி நிரந்தரமாக்கினவர் என சொன்னார்! 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

மக்களும் தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியும் வாக்களித்துள்ளார்கள் அண்ணை. நண்பர் ஒருவரைக் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்துள்ளார், தனக்கு பணி நிரந்தரமாக்கினவர் என சொன்னார்! 

இருக்கலாம். ஆனால், தாயக மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவில்லை என்ற பொருள்பட எப்போதும் தமிழன் கூறிய கருத்துக்கே பதிலளித்தேன்.  தனக்கு பணி நிரந்தரபாக்கியவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாக சிந்தித்து தான் அவர் வாக்களித்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார் - பொ.ஐங்கரநேசன்

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவுவரை தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் அதன் பின்னர் சாதிகளாகவும், சமயங்களாகவும், பிரதேசங்களாகவும், கட்சிகளாகவும் சிதறடிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் கைகோர்த்து திட்டமிட்டு இதனை நிறைவேற்றி வந்துள்ளனர்.

"இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் சிதறிக்கிடக்கும் தமிழ்த் தேசிய உணர்வுத் தளத்தை மீளக்கட்டமைப்பதில் காத்திரமான பங்காற்றியுள்ளார்." என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்யுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு இனத்தைத் தேசமாகக் கட்டியமைப்பதில் அந்த இனம் பேசுகின்ற மொழி, தாயகமாகக் கொண்டிருக்கும் நிலப்பரப்பு, பண்பாடு ஆகியன வகிக்கும் பங்களிப்புகளுக்கு நிகராக தேசம் என்ற உணர்வு நிலையும் இன்றியமையாதது.

யுத்தத்தின் பின்னரான தமிழர் அரசியலில் தேசம் என்கின்ற உணர்வு நிலை தமிழ்ச் சூழலில் ஊடுருவியுள்ள பெரும்பான்மைக் கடசிகளாலும் அவர்களின் எடுபிடிகளாலும் மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையிலேயே தமிழ் மக்களைத் தேசமாக மீளவும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு நிறுத்தப்பட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் தான் பெற்ற கணிசமான வாக்குகளின் மூலம் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஊட்டியுள்ளார்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கில் கோடான கோடி பணத்தைச் செலவழித்து தமிழ் வாக்குகளை வியாபாரப் பண்டமாக்கிக் கொள்வனவு செய்ய முயன்றனர்.

இதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயினர்.

ஆனால், விலை போகாத தமிழர்களாக இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசிய அரசியலை சீர்செய்து நேர்செய்யும் பயணத்தில் பொதுவேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் பலமான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார் - பொ.ஐங்கரநேசன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிழம்பு said:

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தென்னிலங்கை கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வடக்கு, கிழக்கில் கோடான கோடி பணத்தைச் செலவழித்து தமிழ் வாக்குகளை வியாபாரப் பண்டமாக்கிக் கொள்வனவு செய்ய முயன்றனர்.

இதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் துணைபோயினர்.

ஆனால், விலை போகாத தமிழர்களாக இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசிய அரசியலை சீர்செய்து நேர்செய்யும் பயணத்தில் பொதுவேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் பலமான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதைத்தான்  காலையில் நான்  எழுதி நன்றி அரியத்தாருக்கு  நன்றியும் சொல்லியிருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

உண்மைதான். அவர்களின் படிப்பறிவு இந்த நிலையில் இருக்கும்போது, தாயக மக்களை அப்படியே விடுங்கள் அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று யாழில் கூவிக்கொண்டு திரிவோரை என்ன சொல்வது!

உங்கள் சொற்படி அரியருக்குப் போட்டிருந்தால் புத்திசாலிகள் என்று சொவீர்களோ,.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

உண்மைதான். அவர்களின் படிப்பறிவு இந்த நிலையில் இருக்கும்போது, தாயக மக்களை அப்படியே விடுங்கள் அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று யாழில் கூவிக்கொண்டு திரிவோரை என்ன சொல்வது!

கனம் நாட்டை விட்டு ஓடி அசைலம் அடித்ததால் நாசா விஞ்ஞானி ஆகிய புலம்பெயர் புத்திஜீவியே..!

தலைவா வா.. தலைமை ஏற்க வா.. அறிவுரைகளை அள்ளி வீச வா..

இப்படிக்கு 

தங்கள் அறிவுரைவுரைகளை எதிர்பார்த்து காத்துகிடக்கும் வெளிநாடு போகாமல் ஊரில் இருக்கும் படிப்பறிவு அற்றவர்கள்..

கொய்யாலே.. 😡😡 ஊரில இருக்கிற சனத்துக்கு வகுப்பெடுக்கிற அளவுக்கு வெளிநாட்டுக்கு போயிட்டா உங்களுக்கு தகுதி வந்திடுமோ..? வெளிநாடு ஏஜென்சிக்கு காசுகட்டி போய் அசைலமெடிச்சு விசா எடுத்திட்டா நாங்கள் நாசா வின்ஞானிகள்.. நினைப்பு பெரிசு.. இஞ்ச வந்து 2k கிட்ஸ் இட்ட உத சொல்லிடாதைங்கோ.. வச்சு செஞ்சு விட்டுருவாங்கள்.. 

ஊரில இருந்தாலும் என்ர மண்ணைவிட்டு போகாமாட்டன் எண்டு கவுரமா உழைச்சு வாழுறாங்கள்.. நாட்டை விட்டு ஓடினவங்கள் எல்லாம் ஊரில இருக்கிறவனுக்கு வகுப்பெடுக்கிறானுகள்.. காலக்கொடுமை..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

 தனக்கு பணி நிரந்தரபாக்கியவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாக சிந்தித்து தான் அவர் வாக்களித்தார். 

 அத்துடன் இலங்கைக்கு சென்ற போது யாழ்பாணமோ கொழும்போ அங்கே  தமிழர்களிடம் சஜித் அல்லது ரணில் என்ற நிலையை தான்  காண கூடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

 அத்துடன் இலங்கைக்கு சென்ற போது யாழ்பாணமோ கொழும்போ அங்கே  தமிழர்களிடம் சஜித் அல்லது ரணில் என்ற நிலையை தான்  காண கூடியதாக இருந்தது.

இனித்தான் அவர்கள் பட்டியலில் அனுரா சேர்க்கப்படுவார்

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, putthan said:

இனித்தான் அவர்கள் பட்டியலில் அனுரா சேர்க்கப்படுவார்

😂  தமிழ் யூடியூபர்கள்அனுராவின் நாட்டிற்கான அதிரடி நல்ல முயற்ச்சிகள் ஆரம்பம் என்று இப்போதே அவருக்கு பின்னால் நிற்க தொடங்கிவிட்டனர்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

ஆனால், விலை போகாத தமிழர்களாக இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்குச் சின்னத்துக்குத் தங்கள் வாக்குகளை வழங்கியுள்ளனர்.

ஐங்கரன் மாஸ்ரர் இதே கோசத்தோடு பொதுத் தேர்தலில் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சில சமயம் அதியுச்ச வாக்குகள் பெற்று பா.உ ஆவார்😂!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂  தமிழ் யூடியூபர்கள்அனுராவின் நாட்டிற்கான அதிரடி நல்ல முயற்ச்சிகள் ஆரம்பம் என்று இப்போதே அவருக்கு பின்னால் நிற்க தொடங்கிவிட்டனர்

நாங்கள் யார் ?🤣யாராவ்து  நட்சத்திரங்களாக வந்து ஜோலிக்க தொடங்கிய பின்புதான் வால் பிடிப்போம்...அதுவரை ஆழந்த சிந்தனையில் ஆழ்மன தியானத்தில் இருப்போம்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ்த்தேசிய உணர்வுத் தளத்தை மீளக் கட்டமைப்பதில் பொதுவேட்பாளர் காத்திரமாக பங்காற்றியுள்ளார் - பொ.ஐங்கரநேசன்

நீங்கள் ஆளாளுக்குப் புலம்பிக்கொண்டு திரியுறியள்.  ரெண்டு நாளாச்சு அரியத்தை பப்பாவிலை ஏத்திவிட்ட நிலாந்தன் மாஸ்டரைக் காணம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

மக்களும் தமது தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியும் வாக்களித்துள்ளார்கள் அண்ணை. நண்பர் ஒருவரைக் கேட்டபோது சஜித்திற்கு வாக்களித்துள்ளார், தனக்கு பணி நிரந்தரமாக்கினவர் என சொன்னார்! 

அப்போ .... அவர், சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கு போடவில்லை என்கிறீர்கள்... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

 அத்துடன் இலங்கைக்கு சென்ற போது யாழ்பாணமோ கொழும்போ அங்கே  தமிழர்களிடம் சஜித் அல்லது ரணில் என்ற நிலையை தான்  காண கூடியதாக இருந்தது.

நீங்கள் இலங்கையின் எப்பகுதிக்கு சென்றீர்கள்? 
ஒரு வருடத்துக்கு முன்பே கருத்து கணிப்புகள் அனுரவுக்கு சாதகமாக இருந்துள்ளன.
நாமே யாழ் களத்தில் ஜே விபியினால் தமிழருக்கு செய்யப்பட்ட அநியாங்கள் பற்றியும் பேசியுள்ளோம். 
நான் தேர்தலுக்கு இரு நாட் கள் முன்பே சிறிலங்காவில்  நிற்கிறேன். நான் பேசிய பலரில் பலரும் ( தமிழர், சிங்களவர் உட்பட) அனுர தான் வருவார் என தெரிவித்தார்கள்.

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂  தமிழ் யூடியூபர்கள்அனுராவின் நாட்டிற்கான அதிரடி நல்ல முயற்ச்சிகள் ஆரம்பம் என்று இப்போதே அவருக்கு பின்னால் நிற்க தொடங்கிவிட்டனர்

தமிழ் யூ ரியூபர்களுக்கு தெரிந்தளவு சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் தெரியவில்லை போல???😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

ஆனால், தாயக மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவில்லை என்ற பொருள்பட எப்போதும் தமிழன் கூறிய கருத்துக்கே பதிலளித்தேன்.

இதுக்குத்தான் எழுதியதை வாசித்து விளங்கிக்கொண்டு கருத்து எழுதவேண்டுமென்று சொல்வது. நான் நிழலிக்கு எழுதியது பியதாசவிற்கு வாக்களித்தவர்கள் பற்றியது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கனம் நாட்டை விட்டு ஓடி அசைலம் அடித்ததால் நாசா விஞ்ஞானி ஆகிய புலம்பெயர் புத்திஜீவியே..!

தலைவா வா.. தலைமை ஏற்க வா.. அறிவுரைகளை அள்ளி வீச வா..

இப்படிக்கு 

தங்கள் அறிவுரைவுரைகளை எதிர்பார்த்து காத்துகிடக்கும் வெளிநாடு போகாமல் ஊரில் இருக்கும் படிப்பறிவு அற்றவர்கள்..

கொய்யாலே.. 😡😡 ஊரில இருக்கிற சனத்துக்கு வகுப்பெடுக்கிற அளவுக்கு வெளிநாட்டுக்கு போயிட்டா உங்களுக்கு தகுதி வந்திடுமோ..? வெளிநாடு ஏஜென்சிக்கு காசுகட்டி போய் அசைலமெடிச்சு விசா எடுத்திட்டா நாங்கள் நாசா வின்ஞானிகள்.. நினைப்பு பெரிசு.. இஞ்ச வந்து 2k கிட்ஸ் இட்ட உத சொல்லிடாதைங்கோ.. வச்சு செஞ்சு விட்டுருவாங்கள்.. 

ஊரில இருந்தாலும் என்ர மண்ணைவிட்டு போகாமாட்டன் எண்டு கவுரமா உழைச்சு வாழுறாங்கள்.. நாட்டை விட்டு ஓடினவங்கள் எல்லாம் ஊரில இருக்கிறவனுக்கு வகுப்பெடுக்கிறானுகள்.. காலக்கொடுமை..

இப்பத்தான் தெரியுது ஏன் லண்டனில இருந்து ஓடிவந்து ஸ்ரீலங்காவில் இருக்கிறீர்கள் என்று. என்ன எழுதியிருக்கிறேன் என்று வாசித்து கிரகிக்க கூட தெரியவில்லை. இதுக்குள்ள தம்பட்டம்வேறு. நான் நிழலிக்கு எழுதியது பியதாசவிற்கு வோட்டுப்போட்ட கனவான்களை பற்றியது.

நான் பலமுறை யாழில் எழுதியிருக்கிறேன். நானொன்றும் உங்களைப்போல் நாட்டைவிட்டு ஓடி அசைலமடித்த ஆளில்லை என்று. நான் இப்போதும் இலங்கை பிரஜைதான்.

4 hours ago, satan said:

அப்போ .... அவர், சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கு போடவில்லை என்கிறீர்கள்... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்! 

அதுசரி, சஜித் எப்போது அரசாங்க பதவியில் இருந்தார் அவரின் வேலையை நிரந்தரமாக்குவதற்கு?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.