Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்

தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு 
லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் 
சோக்காய் தான் வாச்சுப்போச்சு 
இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு

சுத்தி அடிச்சு கதை பேசி 
சும்மா எல்லாம் உசுப்பேத்தி  
நாளுக்கு ஒரு கதை சொல்லி 
ஆளுக்கு ஒரு அரசியல் ஆய்வாளர் போல 
காலை ஒரு காணொளி 
மாலை ஒரு காணொளியாய் 
கனக்கவெல்லோ வருகுதிப்போ 
புலத்திலும் தான் நிலத்திலும் தான் 

சிங்கம் தனியா சிங்குலா வருகுது 
கோட்டைக்கு என்று 
வட்டுகோட்டைக்கு வழி கேட்டால் 
கொட்டை பாக்குக்கு விலை சொல்லி 
அரசியல் வகுப்பு எடுக்கினம்

யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே 
கனக்க எல்லாம் புழுகியடிச்சு 
பணத்தை மட்டும் பார்கிறார்கள் 
சொந்த இனத்தை எண்ணி 
கவலை இல்லை

இவர்களோடு கூட நின்று 
மேடை போட்டு முழங்கியது போலவே
அருச்சுனன் பீமன் சகாதேவன் நகுலன் என்று  
நல்லாத் தான் நடிக்கிறார்கள் 
அந்தப் பாராளுமன்ற கதிரைக்காக 
ஆளுக்கு ஒரு சின்னத்தோட
வீட்டுக்கு ஒரு வேட்பாளர் போல 

சிலர் சமத்துவமே வந்தது போல் 
தமிழர் பிரச்சினையே தீர்ந்தது போல் 
கனக்க வந்து காணொளியில் புழுகிறார்கள் 
நினைக்கவே கவலையாய் இருக்கு 
சமூக ஊடகங்கள் பொறுப்பாய் இல்லை  
ஏதோ ஒரு அலை எல்லோரையும் 
மயக்கத்தில தள்ளுது 

தமிழ் யூடியூப் தம்பிமாரே 
எல்லோரையும் சொல்லவில்லை
நல்லோரும் உண்டு 
லைக்கை மட்டும் பார்க்காமல் 
கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் 
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் 
பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள்
அறிவாய் எதையும் அணுகுங்கள்.

பா.உதயன்✍️

  • Like 8
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த தமிழ் யூடியூப்காரர்ர சேட்டையளைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதலாம்.உங்கள் கவிதை ஒரு செருப்படி.

ஆனால் எல்லா தமிழ் யூடியுப்காரரும் மோசமானவர்கள் இல்லை. ஒரு சில நியாயபூர்வமானவர்களும் இருக்கிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, குமாரசாமி said:

உந்த தமிழ் யூடியூப்காரர்ர சேட்டையளைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதலாம்.உங்கள் கவிதை ஒரு செருப்படி.

ஆனால் எல்லா தமிழ் யூடியுப்காரரும் மோசமானவர்கள் இல்லை. ஒரு சில நியாயபூர்வமானவர்களும் இருக்கிறார்கள்.

ஓமோம்...இந்தக் காச்சல் இப்ப கனடாவிலையும் கூடிவிட்டது...விசிட்டர்கள்  அனைவரும் போனும் கதையும்தான்..கனடிய சட்ட திட்டங்கள்   காற்றில் பறக்குது...கனடாக்க்காரரின் யூடியூப் பார்க்க ஆயிரக்கணக்கில் சனம் ..ஏனென்றாள் இவை அவைக்கு கனடாவுக்கு   வாறதுக்கு வழிகாட்டியாம்...அம்மம்மாரே இங்கு  நிறய நடிகைகள்... இது எங்குபோய் முடியுமோ..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, alvayan said:

ஓம்...நானும் பாத்தன்....பாத்தன்.
உவையளை ஊருக்கு கூட்டிக்கொண்டு போய்  மண்வெட்டிய குடுத்து தோட்டம் கொத்த விடவேணும். 🤣

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
36 minutes ago, குமாரசாமி said:

உந்த தமிழ் யூடியூப்காரர்ர சேட்டையளைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதலாம்.உங்கள் கவிதை ஒரு செருப்படி.

ஆனால் எல்லா தமிழ் யூடியுப்காரரும் மோசமானவர்கள் இல்லை. ஒரு சில நியாயபூர்வமானவர்களும் இருக்கிறார்கள்.

பாதையைத்  திறந்துவிட்டு வளவுக்க இறங்கவிடாமல் வேலியைப் போடுறான். அதைப்பற்றி ஒருகதை கிடையாது.  இவையள் ஏதோ பாதையை விட்டதை, ஈழத்தை விட்டமாதிரி உச்சமா வாசிக்கினம். எனக்கு சில யூரூப்பர்மாரிலை சந்தேகமாக இருக்கிறது. 14ஆம் திகதி அநுரக்குப் போடுங்கோ என்று சொல்லும் வேலையையும் ஒருவர் செய்வதை அவதானித்தேன்.  
    மயிலிட்டித்துறை முகத்தைக் காட்டுகினம். எங்கடசனம் தொழில் செய்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்த துறைகளில் ஒன்று. இன்று சிங்களவன் படகுவைச்சு மீன்பிடிக்கிறான். .... இப்படி நிறைய எழுதலாம்.  காலத்தைப் பதிவுசெய்த கவிதைக்குப் பாராட்டுகள்.

Edited by nochchi
திருத்தம்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, uthayakumar said:

யாருக்கும் ஒன்றும் தெரியாது போலவே 
கனக்க எல்லாம் புழுகியடிச்சு 
பணத்தை மட்டும் பார்கிறார்கள் 
சொந்த இனத்தை எண்ணி 
கவலை இல்லை

எமது அரசியல் தலைவர்கள் காட்டிய பாதை.

நாங்களும் சேர்க்கிறோம்

நீங்களும் எப்படி வேணுமானாலும் சேருங்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, uthayakumar said:

தமிழ் யூடியூப் தம்பிமாரே 
எல்லோரையும் சொல்லவில்லை
நல்லோரும் உண்டு 
லைக்கை மட்டும் பார்க்காமல் 
கைக்கு வரும் காசை மட்டும் நினைக்காமல் 
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்காமல் 
பொறுப்பாய் கொஞ்சம் பேசுங்கள்
அறிவாய் எதையும் அணுகுங்கள்.

பா.உதயன்✍️

அடிப்படை அறிவு கூட இல்லாமல் அரசியல் விளக்கம் சொல்லிக் கொண்டும், தேவையில்லாத இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தையும் செருகுவதும், பிழையான  உச்சரிப்புடான் ஆங்கில சொற்களை சொல்வதும் கேட்க கடுப்பாக இருக்கின்றது. 
நல்ல தமிழ் சொற்களை.. இவர்களே பேச்சு வழக்கில் இருந்து ஒழித்து விடுவார்கள் போலுள்ளது.
காலத்துக்கு ஏற்ற  கவிதைக்கு நன்றி உதயன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாலு வரியிலை சொல்லும் விடயத்தை நீட்டி முழக்கி பார்க்கிறவனின் நேரத்தை விரயமாக்குகிறார்கள் .

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காத்துப்போன யு டியூப் புளுகுணிக் காரருக்கு பலமாகவே தலையில் ஒரு குட்டு . .......... எதோ அவர்களும் பிழைக்கட்டும் . ........ நல்ல கவிதை . ......!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, uthayakumar said:

தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்

தமிழ் யூடியூப் சில தம்பிமாருக்கு 
லொத்தர் சீட்டிலுப்பு விழுந்தது போல் 
சோக்காய் தான் வாச்சுப்போச்சு 
இலங்கை தேர்தல் திருவிழாவாச்சு

பா.உதயன்✍️

அப்படியே இந்த தவகரனுக்கு மட்டும் தனியே ஒரு கவிதை எழுதுங்கோ அண்ணை, கிளிநொச்சி சந்தைக்குள்ள புகுந்து சனத்தட்ட அநுரவுக்குத்தான் வாக்கு போடுங்கோ என்பதை அவர்கள் வாய்க்குள்ளாலயே புடுங்கி எடுக்க என்னமா படாத பாடு படுகிறார்.

தேர்தல் முறைமைப்படி பொதுமக்களிடம் தனிப்பட்ட ரீதியில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கருத்து கணிப்புக்கள் நடத்துவதே தவறு என்று நினைக்கிறேன், இதெல்லாம் எப்படி அனுமதியோ தெரியல,

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, valavan said:

அவை ஓமென்று ..சொல்லுகினமோ..இல்லையோ ..இவற்றை வாயைப்பார்த்தவுடன் .....திரும்பிவிடுவினம்..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல சிந்தனைகள் கருத்துக்கள் எல்லோருக்கும் நன்றிகள் . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, சுவைப்பிரியன் said:

இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁

அஞ்சு வயசுப் பொடியள் மாதிரி மைக்கைப் பிடிச்சுக்கொண்டு சுத்துறவையை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் எனக்கு எரிச்சல்வரும்😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் யூடியூபர்ஸ்லாம் கனடா க்கு போய்ட்டானுக போல..

திடீர் திடீர்னு கனடால இருந்து வீடியோ போடுறானுக.! 

இவனுக வீடியோக்கள பாத்துட்டு கனடா அங்கிள்மார் 

தம்பி வாங்கோ வந்து எண்ட வாழைத்தோட்டத்த எடுத்து போடுங்கோ..

அட அப்பன்.. வந்து எங்கட ஆட்டுப்பண்ணைய கவர் பண்ணுங்கோ..

தம்பி நீங்க அங்க இருந்து trainல வந்து இறங்குங்கோ நான் எண்ட Tesla ல வந்து பிக் அப் பண்ணி வீட்ட கூட்டியாறன்.. ஒரு home tour ஒண்டும் நீங்க போடலாம் என.. 

ஓமண்ணே.. கனடால லக்சரி வீடு அப்பிடீனு வீடியோவ இறக்கலாம்ணே.. ஆமா அதென்ன அடுப்புக்கு மேல காத்து வருது? 

அது தம்பி சமைக்கிற மணம் வெளிய போக.. 

ஓ.. பாருங்க மக்களே.. இதத்தான் லக்சரி பான்ரி கபேட் எண்டு சொல்றது.. 

என்னன்ணே இங்க கைகழுவிற சிங்ல எதோ கறுப்பா கிடக்கு?

அய்யோ தம்பி.. அதையெல்லாம் ஜூம் பண்ணாதையும்.. அது நேத்தையான் கத்தரிக்காய் பொரியல மகள் அதுக்க கொட்டியிருக்கிறாள். 

ஆம் மக்களே..இப்ப பாத்தீங்கன்னா கனடால இதெல்லாம் லக்சரி வீடுகள். ப்ரிட்ஜ் கூட ரெண்டு கதவு கிடக்கு.. 

அங்கிள்ட்ட மொத்தம் ஆறு கார் கிடக்கு. கராஜ்க்க ரெண்டு நிக்குது. ஸ்விச் அமத்தினா கராஜ் கதவு திறக்குது பாருங்க.. 

சரி நான் கிளம்பப்போறேன். ஸ்கார்ப்ரோக்கு போகப்போறேன்.. அங்கிள் தான் தன்னோட BMW ல கொண்டுபோய் விடப்போறார்.. 

போற வழில மார்கம் ல ஒரு கடையில அங்கிள் மட்டன் ரோல் வாங்கி தந்தவர்..  ரோல் எப்பிடி செய்யுற எண்டு யாழ்ப்பாணத்து கடைக்காரர் கனடா வந்து படிக்கணும் என..

நன்றி- மைந்தன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

அஞ்சு வயசுப் பொடியள் மாதிரி மைக்கைப் பிடிச்சுக்கொண்டு சுத்துறவையை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் எனக்கு எரிச்சல்வரும்😆

சிறிய வயதில் ஏதாவதொரு நிகழ்வை முன்னிட்டு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபெருக்கிக் கொண்டு வருவார்கள்.

தூரத்தில் சத்தம் கேட்கும்போதே இங்கே ஒரு படையே உருவாகிவிடும்.

சில இடங்களில் நின்று ஒலிபெருக்குவார்கள்.குடிமனைப் பகுதிகளில் ஓடீஓடி ஒலிபரப்புவார்கள்.

வாகனத்தின் இரண்டு கரையிலும் அண்ணை நோட்டீஸ் அண்ணை நோட்டீஸ் என்றே புழுதிக்குப் பின்னால் நாய் துரத்துவது போல அரை மைல் தூரத்துக்காவது துரத்துவோம்.

இவைகளையும் இந்த நேரங்களில் எண்ணிப் பார்க்கிறேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.