Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்

1731074699-sri-daran-2-780x470.jpg

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.

தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதீயில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன் தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.

நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்கு சொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள்.

அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=298483

மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம்; சிறீதரன் பொலிஸில் முறைப்பாடு

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9E%E0%

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கியுள்ளதாக, போலிக் கடிதம் ஒன்றுடன் முகநூலில் பிரசாரம் செய்த ஒருவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காவல் நிலையத்தில் இன்றையதினம் (08) குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்ததன் பின்னர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும், பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்கைய வதந்திகளை பரப்பும் நபரொருவர் மீது இன்றைய தினம் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். தொடர்ச்சியான முறைமைகளுக்குட்பட்டு அந்த நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்பதை எண்பிக்க போதுமான ஆதாரங்கள் அந்தக் கடிதத்திலேயே உள்ளன. அறிவிலித்தனமாக செயற்பட்டுவரும் இவர்களை எமது மக்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்.

என்னை விசுவாசிக்கும் எனது மக்களுக்கு நான் மீளவும் ஒன்றை வலியுறுத்திக் கூறுகிறேன். இதுவரை காலமும் நான் மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெறவோ, அத்தகைய அனுமதி ஒன்றுக்கு சிபாரிசுக் கடிதம் வழங்கவோ இல்லை.

அவ்வாறு நான் வழங்கியிருப்பதாக யாராவது கருதினால் ஜனாதிபதி செயலகத்திலோ, மதுவரி திணைக்களத்திலோ உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளிப்படுத்துங்கள். அதைவிடுத்து பிற்போக்குத்தனமான அற்ப அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு உங்களை நீங்களே தரம்தாழ்த்திக் கொள்ளாதீர்கள்“ என தெரிவித்தார்.

https://akkinikkunchu.com/?p=298446

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

“ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட என்னை, நீதிமன்ற வழக்கினால் இயங்க விடாது தடுத்தவர்களின் மற்றொரு முயற்சியாக, எனது கடிதத் தலைப்பையும், பதவி முத்திரையையும் முறைகேடாகப் பயன்படுத்தி தொழிநுட்ப உதவியோடு போலியான கடிதத்தை தயாரித்து முகநூலில் விசமப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்குத்தான் மக்களிடம் வாக்கு பெற்று நேரம் செலவு செய்கின்றனர். சாள்சும், சிறீதரனும் கலந்து பேசி முறைப்பாட்டாளித்திருப்பார்களோ? இவர்களுக்கு குடைச்சல் கொடுப்பவர்கள் சி. வி. கே. சிவஞானம், சுமந்திரன், சத்தியலிங்கம். சத்தியலிங்கம் தன்னை தேசியபட்டியலில் இணைத்த சுமந்திரனுக்கு நன்றிக்கடன் ஆற்றுகிறார். சுமந்திரன் ஒருவரை அணைப்பது; அவர்களை வைத்து தனது காரியங்களை நிறைவேற்றுவது, அதன்பின் விரட்டுவது. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

May be an image of 1 person and text

May be an image of 4 people, people studying, table and dais

👆 சுப்ரமணிய பிரபா  என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். (வலது பக்கம் இருப்பவர் சுமந்திரன்)
இவர் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி மாறிக் கொண்டே இருப்பார்.
இம்முறை... கிளிநொச்சியில், சஜித் கட்சியின் சார்பில் போட்டியிடும் புலி எதிர்ப்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு  தெரிவித்துக் கொண்டு... ஆதாரம் இல்லாத  பொய் பிரட்டுக்களை எல்லாம், மற்றைய கட்சியினர்  மேல் கூறிக் கொண்டு ஊத்தை அரசியல் செய்து கொண்டு திரிகிறான்(ர்)

போனமுறை சுமந்திரன் ஆதரவாளராக இருந்தவர். இவரின் தகப்பனும் வேறொரு கட்சியின்  உள்ளூர் அரசியல்வாதிதான்.
முகநூலில்  இவரை... @நிழலி@விசுகு,  @ஈழப்பிரியன்@குமாரசாமி@பெருமாள், @தனிக்காட்டு ராஜா, @நந்தன்  ஆகியோர் நன்கு அறிந்து இருப்பார்கள்  என நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

சுப்ரமணிய பிரபா  என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். 

இவர் @மெசொபொத்தேமியா சுமேரியர் ஆன்ரிக்கு கிளிநொச்சியில் தோட்டம் காட்டினவர் என்று நினைக்கின்றேன்😆

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of text

May be an image of 1 person and text

May be an image of 4 people, people studying, table and dais

👆 சுப்ரமணிய பிரபா  என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். 
இவர் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி மாறிக் கொண்டே இருப்பார்.
இம்முறை... கிளிநொச்சியில், சஜித் கட்சியின் சார்பில் போட்டியிடும் புலி எதிர்ப்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு  தெரிவித்துக் கொண்டு... ஆதாரம் இல்லாத  பொய் பிரட்டுக்களை எல்லாம், மற்றைய கட்சியினர்  மேல் குறிக்க கொண்டு ஊத்தை அரசியல் செய்து கொண்டு திரிகிறான்(ர்)

போனமுறை சுமந்திரன் ஆதரவாளராக இருந்தவர். இவரின் தகப்பனும் வேறொரு கட்சியின்  உள்ளூர் அரசியல்வாதிதான்.
முகநூலில்  இவரை... @நிழலி@விசுகு,  @ஈழப்பிரியன்@குமாரசாமி@பெருமாள், @தனிக்காட்டு ராஜா, @நந்தன்  ஆகியோர் நன்கு அறிந்து இருப்பார்கள்  என நினைக்கின்றேன்.

முன்னர் அறிந்து இருந்தேன். சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தபோது உள் நுழைந்து விசாரித்ததில் காலை பின்னால் எடுக்க நேர்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

இவர் @மெசொபொத்தேமியா சுமேரியர் ஆன்ரிக்கு கிளிநொச்சியில் தோட்டம் காட்டினவர் என்று நினைக்கின்றேன்😆

ஆமாம்.... அவரேதான். கிருபன் ஜீ .
நீங்கள் நல்ல நினைவு வைத்துள்ளீர்கள். 
நான் அதற்கிடையில் அந்தச் சம்பவத்தை மறந்து விட்டேன்.   😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

முன்னர் அறிந்து இருந்தேன். சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தபோது உள் நுழைந்து விசாரித்ததில் காலை பின்னால் எடுக்க நேர்ந்தது.

நீங்கள்... முன் ஜாக்கிரதை முத்தண்ணா. 🤣
கிட்டப் போய்... அசிங்கப் படுவதை விட, தூர  நிற்பது நல்லது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

466040561_1793008097772094_4501540790188

May be an image of 2 people and people smiling

சுப்பிரமணிய பிரபா... ஸ்ரீதரனுடன் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த போது எடுத்த படம்.

  • கருத்துக்கள உறவுகள்

சேர் இப்ப சேறு பூசுசும் அரசியலைத்தான் முன்னடுத்துக் கொண்டீருக்கிறார்.தெரிந்த முகங்கள் இருந்தால் வுPட்டுக்கு விழும் வாக்குகள். சிதறும. ஆகைையால் புதிய முகங்களை தனது  7சொம்புகளை(சிறிதரன் மட்டும் தனியே)நித்தியிருக்கிறார். 7 சொம்புகளின் வாக்கும் சுமத்திரனுக்குக் கிடைக்கும் தான் ஈசியாக வெல்லலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார். சிறிதரனையும்  வேட்பாளர் தெரிவில் ஓரங்கட்டப் பாரத்தார். ஆனால் சிறதரன் விடாக் கண்டனுக்கு கொடாக்கண்டனாக இலருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புதிய முகங்களின் வாக்குகள் முழமையாக சுமத்திரனுக்கு விழுந்தாலும். புதிய முகங்களுக்கு மக்கள்  பெருவாரியாக வாக்களிக்க வேண்டும். அது நடக்குமா? எந்த முறை சுமத்திரனின் வெற்றி சந்தேகம்தான். ஆனால் தேசியப்பட்டியல் கூலமாக அவர் எம்பியாவார்.

  • கருத்துக்கள உறவுகள்

465737573_865114752482395_89126475701225

May be an image of text

May be an image of text

சுப்ரமணிய பிரபா செய்தது குற்றமே.
Edit ✍️ செய்யும் போது மண்டை மேல உள்ள கொண்டையை மறந்திட்டாய்.
பார் பெமிற் விடயம் தொடர்பில் குறித்த அணி edit செய்யும் போது விடப்பட்டவை.
1)சித்தார்தன் சிறிதரன் இருவரது பெயரை போட்ட நீ, சிறிதரனின்  கடித தலைப்பை பயன்படுத்தினாயே அதிலே மாட்டியுள்ளாய்
2)ஒரு கடிதத்தில் இலக்கம் போடப் பட்டதில் இடையில் இருந்து ஆரம்பிக்கிறது.
யாரை வெல்ல வேண்டும் என நினைத்து நீங்கள் பதிவிடுகிறீர்களோ அவரே உங்களால் தோற்கடிக்கப்படுவார்.
ஒருவரது கடித தலைப்பு மற்றும் உத்தியோக முத்திரை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.
(சுயபுத்தியில் இயங்க வேண்டும்.)

Kilinochchi Podiyan

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

465800856_1381324002993807_6657309926038

படம்(1) ஒன்றில் இருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் ஊடகவியலாளர் ஒருவர் பெற்ற கிளிநொச்சியில் Bar புதிதாக திறந்தவர்களின் தரவு. 

படம்(2) இரண்டில் இருப்பது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தரவை போலியாக சிறீ சேரின் கடித தலைப்பில் இடைச்செருகி வைத்திருப்பது. 

சிறீ சேரை வீழ்த்த இப்படி கேவலமான வேலையை சுமந்திரன் தரப்பு செய்யும் என்று முதலே அனைவருக்கும் தெரியும். 

இந்த போலி தகவலை முகநூலில் பதிவிட்டு பரப்பும் நபருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இயலாதவர்களின் கடைசி ஆயுதம் போலி செய்திகளை பரப்புதல்.

Siva Paran

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

சிறீ சேரை வீழ்த்த இப்படி கேவலமான வேலையை சுமந்திரன் தரப்பு செய்யும் என்று முதலே அனைவருக்கும் தெரியும். 

இந்த போலி தகவலை முகநூலில் பதிவிட்டு பரப்பும் நபருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

இயலாதவர்களின் கடைசி ஆயுதம் போலி செய்திகளை பரப்புதல்.

பேய்க்கும் பேய்க்கும் சண்டை 
அதை  ஊரே வேடிக்கை பார்க்குது 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்

வாத்தியார் நல்ல சோப் போட்டு குளித்துவிட்டு  உங்கள் தமிழ்தேசிய பணியை தொடரவும் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இவர் @மெசொபொத்தேமியா சுமேரியர் ஆன்ரிக்கு கிளிநொச்சியில் தோட்டம் காட்டினவர் என்று நினைக்கின்றேன்😆

நான் யாழில் இல்லாத போது பல சம்பவங்கள் நடந்திருக்கும் போலயே🤣

—————————

இவ்வளவு நடக்குது…..இலண்டனில் சிறிக்கு டிரைவர் வேலை பார்த்தவர் கமுக்கமாய் இருக்கிறார். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலில் தகுதி இல்லாதவர்களில்  இந்த ஶ்ரீதரனும் ஒருவர்.   

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2024 at 14:45, தமிழ் சிறி said:

May be an image of text

May be an image of 1 person and text

May be an image of 4 people, people studying, table and dais

👆 சுப்ரமணிய பிரபா  என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். (வலது பக்கம் இருப்பவர் சுமந்திரன்)
இவர் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி மாறிக் கொண்டே இருப்பார்.
இம்முறை... கிளிநொச்சியில், சஜித் கட்சியின் சார்பில் போட்டியிடும் புலி எதிர்ப்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு  தெரிவித்துக் கொண்டு... ஆதாரம் இல்லாத  பொய் பிரட்டுக்களை எல்லாம், மற்றைய கட்சியினர்  மேல் கூறிக் கொண்டு ஊத்தை அரசியல் செய்து கொண்டு திரிகிறான்(ர்)

போனமுறை சுமந்திரன் ஆதரவாளராக இருந்தவர். இவரின் தகப்பனும் வேறொரு கட்சியின்  உள்ளூர் அரசியல்வாதிதான்.
முகநூலில்  இவரை... @நிழலி@விசுகு,  @ஈழப்பிரியன்@குமாரசாமி@பெருமாள், @தனிக்காட்டு ராஜா, @நந்தன்  ஆகியோர் நன்கு அறிந்து இருப்பார்கள்  என நினைக்கின்றேன்.

இங்குள்ள கனபேரை பலர் நன்றாக புரிந்து கொள்ளாத நிலைதான் அண்ணை உங்கதும் இங்கு யார் நேரத்துக்கு மாறுவார் யார் காலை வாருவார் என தெரியாது அரசியல் ருசி அப்படி 
இன்று தமிழரசில் இடம் கேட்டவர்கள் கட்சி கொடுக்க மறுக்க வேற கட்சியிலும் தாவுகிறார்கள் இதுதான் இங்குள்ளவர்கள் இப்ப ஒன்றை அடிச்சு இன்னொன்று வாழ்வது போல ஆகிவிட்டது இதுக்குள்ள வடக்கு கிழக்கு இணைப்பு ஈழம் என குறுக்க மறுக்க நாம் ஓடிக்கொண்டிருக்கிறம் 

நீங்கள் என்னை அதிக தடவை மென்சன் பண்ணியதால் வந்து உங்களுக்காக இந்த பதில் அவ்வளவுதான் அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தனிக்காட்டு ராஜா... உங்களை மீண்டும், யாழ். களத்தில் காண்பது மகிழ்ச்சி. 🙂
தொடர்ந்து காணாமல் போகாமல், இடைக்கிடையாவது வந்து கொஞ்சம் எழுதுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

தனிக்காட்டு ராஜா... உங்களை மீண்டும், யாழ். களத்தில் காண்பது மகிழ்ச்சி. 🙂
தொடர்ந்து காணாமல் போகாமல், இடைக்கிடையாவது வந்து கொஞ்சம் எழுதுங்கள். 

தினம் செய்தி வாசிப்பது கருத்துக்கள் பார்ப்பது அதை உங்களிடமும் கேட்டு இருந்தேன் ஏன் இணையம் வேலை செய்ய வில்லையென 
கடும் மழை தாழமுக்கத்தால் கடலும் அருகில் இருப்பதால் தாழமுக்கம் கடக்கும்  வரைக்கும் நித்திரை இல்லை  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அப்பா திருகோணமலையில் வேலை செய்த காலங்களில், விடுமுறைக்கு செல்வதுண்டு.
அந்தக் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக கரைக்கு வரும்.
அந்த வகையில்..  கிழக்கு கடற்கரையின் அச்சத்தை  புரிந்து கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அப்பா திருகோணமலையில் வேலை செய்த காலங்களில், விடுமுறைக்கு செல்வதுண்டு.
அந்தக் கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக கரைக்கு வரும்.
அந்த வகையில்..  கிழக்கு கடற்கரையின் அச்சத்தை  புரிந்து கொள்கின்றேன்.

கடல் சீற்றம் வந்தால் படங்களை இணைக்கிறேன்  அதிக மீன் கள் வேற நேற்று வலையில் பட்டது நெத்தலி கிலோ 200 ரூபாய் என்றால் பாருங்கோவன் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடல் சீற்றம் வந்தால் படங்களை இணைக்கிறேன்  அதிக மீன் கள் வேற நேற்று வலையில் பட்டது நெத்தலி கிலோ 200 ரூபாய் என்றால் பாருங்கோவன் 

நெத்தலி சாதாரண நாட்களில் என்ன விலை.
நமக்கு... கணவாய், நண்டு என்றால்.. மூன்று தரம்   சோறு போட்டு சாப்பிடுவேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

நெத்தலி சாதாரண நாட்களில் என்ன விலை.
நமக்கு... கணவாய், நண்டு என்றால்.. மூன்று தரம்   சோறு போட்டு சாப்பிடுவேன். 😂

kilo 1000,1500 ரூபா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

kilo 1000,1500 ரூபா

ஓ.... பயங்கரமாக விலை சரிந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.... பயங்கரமாக விலை சரிந்துள்ளது.

ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை

யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும்  இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து  சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கட டிசைன் அப்பிடி...

மீன் அதிகமாக பட்டு விலை குறைவென்றால் மீனவர்களுக்கும் நட்டம் என்று இல்லைத்தானே ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.