Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 கொதித்தெழும் ஷிராஸ் யூனஸ் (தமிழர்கள் தேசிய போராட்டம் குறித்த   மிகவும் மோசமான பார்வை கொண்டவர்)

  • Haha 2
  • Replies 96
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில

valavan

மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா

வாலி

இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின்  இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.

அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார்.

கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி  பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது.

வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை  தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது.

இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது.

தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும்  நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.

  • Like 9
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவமற்ற அமைச்சரவையை நிறுவியமை 🧭 தோழர்கள் விட்ட முதலாவதும் பாரதூரமானதுமான அரசியல் இராஜதந்திர தவறாகும்

Picsart_24-11-19_08-13-11-697-780x781.jpg.webp

 

முதலாவதாக இது பல்லின பலமத பல மொழி பலகலாசார பண்புகளைக் கொண்ட தேசம் என்பதனைப் பிரதிபலிக்கும் அரசியலமைப்பை அரசை அரச யந்திரத்தை கொண்டிருக்க வேண்டிய தேசம் என்பது அரசியல் அரிச்சுவடிப் பாடமாகும்.

அத்தகைய அடிப்படைப் பண்புகளுக்கு மதிப்பளிப்பது அறிவியல், உளவியல், சமூகவியல், விஞ்ஞான, நிபுணத்துவ அடிப்படைகளுக்கு புறம்பானதென எவரேனும் அதிகப்பிரசங்கித் தனமாக நியாயப்படுத்தினால் அவர்களது அறிவியல் நிபுணத்துவ தராதரங்களை  மீள்பரிசீலனை செய்தல் வேண்டும்.

இனவாதம், மொழிவாதம், மதவாதமில்லாத இலங்கையர் நாம் என்ற அடையாளத்தை முன் வைத்து சகல சமூகங்களுக்கும் பொதுவான சவால்களுக்கு ஓரணி நின்று முகம் கொடுத்தல் என்பது சமூகம்சார் தனித்துவங்களை சமரசம் செய்து கொள்வதல்ல என்பதனை நாம் புரிந்து கொள்தல் வேண்டும்.

இனவாதம், மொழிவாதம், மதவாதம், பிரதேசவாதம் வேறு சமூகங்களின் இனத்துவ உரிமைகளை அடையாளங்களை அவற்றிற்கான அங்கீகாரங்களை, நியாயமான பிரதிநிதித்துவங்களை தக்கவைத்துக் கொள்வது என்பது வேறு என்பதனை எமது தோழமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனைப் புரிந்து கொள்ள நாம் சமூகங்களாகவும் தேசமாகவும் கொடுத்த  பாரிய விலைகளின் பின்விளைவுகளே எமது தாய்நாட்டை இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதனை நாம் அறிவோம், சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றை மீள எழுத முன்வந்துள்ள நாம் அதே ஆரம்பப் புள்ளிகளில் மீண்டும் சங்கமம் ஆகி விடலாகாது.

ஒரு தேசத்தில் அமைதி சமாதானமும் சகவாழ்வும் நிலவினால் மாத்திரமே அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட முடியும் அதன் அடிப்படையிலேயே பொருளாதார சுபீட்சம் ஏற்பட முடியும், அதுவே சர்வதேச அளவில் அரசியல் சாசனங்களின் அடிப்படை சித்தாந்தமாகும்.

இத்தகைய அடிப்படை பண்புகள் இல்லாது போகின்ற பொழுது அந்த இடைவெளிகளூடாக தேசிய பிராந்திய சர்வதேச சதிகார சக்திகள் ஊடுருவி தலையீடுகளை மேற் கொண்டு தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கும், மேலாதிக்க போட்டிகளுக்கும் கூலிப்படைகள் கொண்டு சதித்திட்டங்களை தீட்ட முனைகின்றன, அது இன்று ஒரு தேசமாக எமக்குப் புதிய விடயமல்ல.

ஒரு தேசமாக 2015  ஆம் ஆண்டு அழிவின் விளிம்பில் இருந்து நாம் எழுந்து நிற்க முனைந்த பொழுது, வங்குரோத்து நிலையில் இருந்து மீள எத்தனித்த பொழுது  எத்தகைய சதித்திட்டம் 2019 இல் அரங்கேறியது என்பதனையும்  தொடர்ந்து சுனாமிபோல் எம்மைக் காவிக் கொண்ட அரசியல் பொருளாதார நெருக்கடிகளையும் நாம் நன்கு அறிவோம்..

அதன் விளைவாக நாம் ஒரு தேசமாக மக்கள் எழுச்சியிற்கு முகம் கொடுத்தோம், அரகலய எனும் மக்கள் எழுச்சியின் ஜனநாயக பரிமாணங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு  உள்ளும் வெளியேயும் உருக் கொடுத்த தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தி அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு தந்தோம்..

தேசிய மக்கள் சக்தியின் மீதும் அதன் தலைமை மீதும், குறிப்பாக ஜனாதிபதி தோழர் அநுர மீதும் நாம் வைத்துள்ள நம்பிக்கை கிஞ்சித்தும் பழுதடைந்து விடக்கூடாது, சர்வதேச சமூகத்தில் குறிப்பாக அரபு முஸ்லிம் உலகில் அது ஒரு கேள்வியாக இருக்கக் கூடாது என்பதில் அதன் ஆதரவாளர்களாக செயற்பட்ட தொண்டர்களும் தோழர்களுமாக நாம் உறுதியாகவே இருக்கின்றோம், அத்தகைய திடமான நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

உரிமைகளுக்கான, அடிப்படை உரிமைகளுக்கான ஜனநாயக அரசியல் போராட்ட வடிவங்கள் என்றவகையில் அதன் மைய நீரோட்டத்தில் இணைந்து கொண்டு எமது நியாயமான மனக்குறைகளை அபிலாஷைகளை அடைந்து கொள்ளவே நாம் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் அணிதிரண்டிருக்கிறோம்.

“நாம் ஆட்சிக்கு வர முன் எமக்கு ஒரு அரசியல் இயக்கமாக முன்னுரிமைகள் கடப்பாடுகள் இருந்தன, ஆனால் இன்று மக்கள் ஆட்சியை எம்மிடம் தந்துள்ளார்கள், மூன்றில் இரு பெரும்பான்மையையும் தந்துள்ளார்கள், தற்போது ஒரு அரசாங்கமாக எமது முன்னுரிமைகள் கடப்பாடுகள் பற்றி நாம் ஒட்டு மொத்த தேச மக்களுக்கும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்”

என ஜனாதிபதி தோழர் அநுர வலியுறுத்தியது போல் இந்த தேசத்தின் இறுதி எதிர்பார்ப்பாக அமைந்துள்ள இந்த தேசிய ஒருமைப்பாட்டு அரசு முன்நோக்கி நகரும் என்ற நம்பிக்கையில் அதனை பாதுகாக்கவும் நாம் ஒரு தேசமாக ஒன்றினைந்து பயணிப்போம்.

புதிய அமைச்சரவையில் இன்று எமது பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்ற பிந்திய தகவலுக்கு நன்றி கூறி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து புதிய அமைச்சர்களுக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

*மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்*
✍️ 18.11.2024 || SHARE

முன்னாள் பொதுச் செயலாளர் தேசிய ஷூரா சபை
முன்னாள் ஸவூதி அரேபிய ஜித்தா நகரிற்கான  கொன்ஸல் ஜெனரல்
முன்னாள் அரசியல் நிபுணத்துவ ஆய்வாளர் ஸவூதி மற்றும் கத்தார் தூதரகங்கள்.
முன்னாள் கொன்ஸுலர் அதிகாரி குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகங்கள்.

https://madawalaenews.com/8595.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தப்பு நானா தப்பு...சவுதி அரேபியாவிடம் சொல்லி இதற்கு ஒர் முடிவு கட்ட வேணும் வரலாற்று தவறை அனுரா உருவாக்கி விட்டார் ....ஆட்சியை கவிழ்க்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அனுர அரசு… முஸ்லீம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விடும் போதே, முஸ்லீம்களிடம் இருந்து பாரிய எதிர்ப்பு வரும் என்று அறிந்தே இருப்பார்கள். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல. நன்கு  தெரிந்தே செய்யப் பட்டது.

இவ்வளவிற்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் தமக்கும் ஒரு மாற்றம் வேண்டி, அனுர கட்சிக்கு பிரச்சாரம் செய்து இருக்கும் போது…
முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரவையை நியமித்து, அவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாக சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரிகின்றது.

அது என்னவாக இருக்கும்… ? எனது சந்தேகம்,   சில வேளை….


1) இவர்கள் தமது மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலப்பது.
2) சொந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல், முஸ்லீம் நாடுகளுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது.
3) பௌத்தத்தை விட தமது மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது.
4) எவருடன் ஒன்றாகச்  சேர்ந்து இயங்கினாலும்… நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாமல், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது.
5) பௌத்த ஶ்ரீலங்காவிற்கு ஒவ்வாத  இவர்களின் கலாச்சார உடைகளான தொப்பி, பர்தா போன்றவைகளாக இருக்குமோ என நினைக்கின்றேன்.


இதனை விட... வேறு காரணங்கள் இருந்தால், அறியத் தாருங்கள்.

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லிம் ஒருவ‌ருக்கு அமைச்சு ப‌த‌வி கொடுப்ப‌த‌ன் மூல‌ம் அர‌சு ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை த‌விர்க்க‌ முடியும்.- முபாற‌க் முப்தி

collage.jpg

 

முஸ்லிம் ஒருவ‌ருக்கு அமைச்சு ப‌த‌வி கொடுப்ப‌த‌ன் மூல‌ம் அர‌சு ப‌ற்றிய‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை த‌விர்க்க‌ முடியும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வுக்கு க‌டித‌ம் அனுப்பியுள்ள‌து.

இது ப‌ற்றி ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் ஊட‌க‌ பேச்சாள‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்த‌தாவ‌து,

ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர‌வை மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ உள்ள‌து. இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் அமைச்ச‌ர்க‌ளாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌மை மூலம் த‌மிழ் ம‌க்க‌ள் கௌர‌விக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

ஆனாலும் இன்றைய‌ அமைச்ச‌ர‌வை நிய‌மிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வில் யார் முஸ்லிம் அமைச்ச‌ர் என்ப‌தை முழு முஸ்லிம்க‌ளுட‌ன் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ன‌ர்.

ஆனாலும் எவ‌ரும் நிய‌மிக்க‌ப்ப‌டாத‌து க‌வ‌லைக்குரிய‌தாகும். இது விட‌ய‌ம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் க‌டுமையான‌ க‌வ‌லையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தை ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ள் சொல்கின்ற‌ன‌. முத‌ல் நிக‌ழ்விலேயே இந்நிய‌ம‌ன‌ம் இட‌ம் பெற்றிருக்க‌ வேண்டும். ஆனாலும் இன்ன‌மும் கால‌தாம‌த‌ம் ஆக‌வில்லை.

ஆக‌வே கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ முஸ்லிம் ஒருவ‌ரை அமைச்ச‌ராக‌ நிய‌மிப்ப‌துட‌ன் முஸ்லிம் ச‌ம‌ய‌ விவ‌கார‌த்துக்கென‌ பிர‌தி அமைச்சு ஒன்றை உருவாக்கும்ப‌டியும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தியை கேட்டுக்கொள்கிற‌து.

https://www.importmirror.com/2024/11/blog-post_336.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

NPP யின் இடதுசாரிக் கொள்கை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் ? “நாங்கள் கலக்கலாம் ஆனால் அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது

collage.jpg

 

மது நாட்டில் பல்கலைக்கழக மானவர்களாக இருக்கும்போது JVP யின் கொள்கையில் கவரப்பட்டு இடதுசாரியாகவும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்பு வலதுசாரியாகவும் மாறிவிடுகின்றனர்.

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் JVP யின் ஆதிக்கத்துக்கு வந்தபின்பு அம்மாணவர்கள் தொடர்ந்து அதே கொள்கையில் இருந்திருந்தால், எப்பவோ இந்த நாட்டை JVP ஆட்சி அமைத்திருக்கும்.

வலதுசாரிக் கொள்கையில் இருப்பது இலகு. கட்டுப்பாடுடன்கூடிய இடதுசாரிக் கொள்கையில் தொடர்ந்து பயணிப்பது கடினம்.

JVP யின் ஆரம்பகால முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் பின்னாட்களில் JVP யின் கொள்கையை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ வாதிகளாக மாறினர்.

அந்தவகையில் JVP தலைவரே இனவாதியாக மாறிய வரலாறுகள் இன்றுள்ள முஸ்லிம் புதிய போராளிகளுக்கு தெரியாது. அதாவது நீண்டகாலங்கள் JVP யின் தலைவராக பதவி வகித்த சோமவன்ச அமரசிங்க மற்றும் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் JVP வளர்ச்சிக்காக இன்று உள்ளவர்களைவிட அரும்பாடுபட்டவர்கள்.

அப்படியிருந்தும் அவர்கள் பின்னாட்களில் கொள்கையினை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாது இனவாதியாக முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

விடையம் அவ்வாறிருக்கும்போது, தேசிய அரசியலை கூர்ந்து கவனிக்காமல், ஊழலை ஒழித்தல் என்ற பிரச்சாரத்துக்கு மயங்கி எங்களது தனித்துவ அடையாளத்தினை இழந்துவிட முடியாது.

சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாங்கள் தனித்துவ சக்தியாக NPP க்குள் கலக்கலாமே தவிர, எங்களது தனித்துவத்தினை இழந்து அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது.

ஏனெனில் அனைவரும் மனிதர்கள். அவர்கள் எந்நேரமும் கொள்கை மாறலாம் அல்லது மரணிக்கலாம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 19/11/2024 at 07:21, colomban said:

ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் அர‌சாங்க‌த்தின் அமைச்ச‌ர‌வை மிக‌வும் பாராட்ட‌த்த‌க்க‌தாக‌ உள்ள‌து. இர‌ண்டு த‌மிழ‌ர்க‌ள் அமைச்ச‌ர்க‌ளாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌மை மூலம் த‌மிழ் ம‌க்க‌ள் கௌர‌விக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

ஆனாலும் இன்றைய‌ அமைச்ச‌ர‌வை நிய‌மிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வில் யார் முஸ்லிம் அமைச்ச‌ர் என்ப‌தை முழு முஸ்லிம்க‌ளுட‌ன் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ன‌ர்.

இந்த முபறாக் முத்தி…. தமிழரை சாட்டி, பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார். 😂
இவ்வளவு காலமும்… மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில் என்று ஜானாதிபதி பதவியில் இருப்பவர்களுக்கு குழை அடித்து காரியம் பார்த்துக் கொண்டு இருந்த ஆள்… எந்த வெட்கமும் இல்லாமல், ****… அனுர புகழ் பாட வந்து விட்டார்.  🤣

Edited by மோகன்
*** நீக்கப்பட்டுள்ளது
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, colomban said:

சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாங்கள் தனித்துவ சக்தியாக NPP க்குள் கலக்கலாமே தவிர, எங்களது தனித்துவத்தினை இழந்து அவர்களுக்குள் கரைந்துவிட முடியாது.

மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார்.

பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர்  கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி  அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா.

அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே.

ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள்.

அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள்.

சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ  நான் ஒருபோதும் சொல்லமாட்டேன்,

ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. 

முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம்

ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

A/L பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளது ஆடை - உரிமையை உறுதிப்படுத்துவாரா பிரதமர் ஹரினி..?

அஷ்ஷெய்க் ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத் (கபூரி)

 

உயர்தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளது ஆடை விவகாரத்தில் அரச சுற்றுநிருபத்தினை அமுல்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

எதிர்வரும் 25-11-2024 முதல் இலங்கையில் உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற ஏற்பாடாயிருக்கிறது. பரீட்சையில் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்களையும், வளமான பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தேசிய பரீட்சைகள் வரும்போது கடந்த பல வருடங்களாக, முஸ்லிம் மாணவிகளின் ஆடை விவகாரம் சில பரீட்சை மண்டபங்களில் வைத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுவருதும், இதனால் முஸ்லிம் மாணவிகள் சங்கடங்களுக்குள்ளாவதும் வழமையாகிவிட்டது.

 

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாரிய எதிர்பார்ப்போடு, ஒருவித மனதயக்கத்தோடே முகம்கொடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக மாணவிகள் இதில் ஓரளவு அதிகமான மனஅழுத்தத்துடனும், பயத்துடனுமே பரீட்சைகளுக்கு தோற்றுகின்றனர்.

 

இவ்வாரான நிலையில் எதிர்வரும் உயர்தரப் பரீட்சையின் போது முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கும் ஆடை குறித்த (பர்தா-தலையை மறைக்கும்) தெளிவான நிலைப்பாட்டை கல்வி, உயர்கல்விக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூர்ய அவர்கள் பரீட்சை ஆணையாளருக்கும், பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுருத்தல்கள் வழங்க அவரச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கடந்த காலங்களில் பரீட்சை மண்டபத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவிகளது பர்தாக்கள், பரீட்சை மண்டப அதிகாரகளால் களையப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் பரீட்சைக்கு தோற்றாமல் இருந்ததாகவும் கடந்த காலங்களில் பேசப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களது பிள்ளைகள் பெரும்பாலான ஆண் பரீட்சாத்திகளுடன் (வகுப்பறைகளில்) அமர்த்தப்பட்டு பரீட்சைக்கு தோற்ற பணித்துள்ளனர். இதனால் அம்மாணவிகள் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையிலே பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

 

எனவே மாணவர்களுக்கு தங்களது பாடசாலை சீருடையோடு பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான சட்டபூர்மான அனுமதியினை (சுற்றுநிருபத்தை) அரசு வழங்கியிருக்கும் போது, அதற்கு மாற்றமாக செயல்படும் அதிகாரிகள் தண்டிக்கப்டவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

பரீட்சை மண்டபத்தில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா (தலை மற்றும் காதுகள் மறைக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை சீருடை) அணிந்து வருவதால் அவர்கள் கதைப்பதாகவும், Headset போன்றவற்றை பயண்படுத்துவதாகவும், பர்தாவினுள் பார்த்து எழுதுவதற்கான துனுக்குகளை மறைத்து வருவதாகவும் பரீட்சை மண்டப அதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

அவ்வாறான நிலைமைகளில் அதன் நம்பகத் தன்மை உறுதிப்டுத்தப்பட்டால், அவ்வாரு பரீட்சை மோசடிகளில் ஈடுபடும் மாணவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும். அவர்களது பரீட்சை தடைசெய்யப்பட்டு, பரீட்சைகளில் தோற்றுகின்ற அவகாசம் மறுக்கப்படவும் வேண்டும்.

 

நேற்றைய (18-11-2024) தினம் புதிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவிகள் 21 பேருக்கு வழங்கப்பட்ட போதிலும், ஒரு முஸ்லிம் உறுப்பினருக்காவது அவ்வாரான ஓர் அமைச்சுப் பதவியை வழங்காத இந்த அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை சற்று தளர்ந்துள்ள நிலையில், எதிர்வரும் உயர்தரப் பரீட்சைகளின் போதாவது முஸ்லிம் மாணவிகளது ஆடைவிவகாரத்தில் அரச சுற்றுநிருப்த்தின்படி பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பார்களா? என்று எதிர்பார்த்திருக்கின்றனர்.

 

இப்போது தேசிய மக்கள் சக்தியே ஆளும் கட்சியாக இருக்கின்றது என்று சாக்குபோக்கு கூறாமல், எதிர்கட்சிகளில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனிகளாக இருக்காமல், இம்மாணவர்கள் தோற்றும் பாடசாலைமட்ட இறுதிப் பரீட்சையாகவும், தங்களது எதிர்காலத்தை தீர்மாணிக்கின்ற மிக முக்கியமான பரீட்சையாகவும் இது இடம்பெற இருப்பதால் இதுவிடயத்தில் அக்கரை செலுத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாரு வேண்டிக் கொள்கிறோம்.

https://www.jaffnamuslim.com/2024/11/blog-post_335.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இதனை விட... வேறு காரணங்கள் இருந்தால், அறியத் தாருங்கள்.

இருக்கிறது   முஸ்லிம்கள். ஜேவிபி  இல். இணைந்து செயல்படவில்லை    அதாவது  பல வருடங்களாக செயல்படவில்லை  சரோஜா எடுத்துக்கொண்டால். அவர்   கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஜேவிபி இணைந்து பயணித்து உள்ளார்  சந்திரசேகரமும் அப்படி தான்   ஜேவிபி சொல்லி விட்டது  எங்களுடன் இணைந்து செயல்படுகிறவரகளுக்கு தான்  அமைச்சர் பதவிகள் என்று   

ஜேவிபி இணைந்து  பல ஆண்டுகளுக்கு உழைந்த   முஸ்லிம்களுண்டா ???? குமார் ........சொல்லுங்க பார்ப்போம்   

ஐக்கிய தேசிய கடசியில் உண்டு 

மகிந்த  கட்சியில். உண்டு” 

ஆனால் ஜேவிபி இல். இல்லை    வென்ற பின்னர் வந்து இணைய முடியாது   இது

 சிங்களவரகள். 

தமிழர்கள் 

முஸ்லிம்கள். 

அனைவருக்கும் பொதுவானதும்கூட  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kandiah57 said:

இருக்கிறது   முஸ்லிம்கள். ஜேவிபி  இல். இணைந்து செயல்படவில்லை    அதாவது  பல வருடங்களாக செயல்படவில்லை  சரோஜா எடுத்துக்கொண்டால். அவர்   கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஜேவிபி இணைந்து பயணித்து உள்ளார்  சந்திரசேகரமும் அப்படி தான்   ஜேவிபி சொல்லி விட்டது  எங்களுடன் இணைந்து செயல்படுகிறவரகளுக்கு தான்  அமைச்சர் பதவிகள் என்று   

ஜேவிபி இணைந்து  பல ஆண்டுகளுக்கு உழைந்த   முஸ்லிம்களுண்டா ???? குமார் ........சொல்லுங்க பார்ப்போம்   

ஐக்கிய தேசிய கடசியில் உண்டு 

மகிந்த  கட்சியில். உண்டு” 

ஆனால் ஜேவிபி இல். இல்லை    வென்ற பின்னர் வந்து இணைய முடியாது   இது

 சிங்களவரகள். 

தமிழர்கள் 

முஸ்லிம்கள். 

அனைவருக்கும் பொதுவானதும்கூட  

ஆம்... நீங்கள் சொல்வது சரி கந்தையா அண்ணை. 
முஸ்லீம்கள் எப்போதுமே... வென்ற பக்கம் திடீரென சாய்ந்து விட்டு, 
அதே வேகத்தில்... தமக்கு பொறுப்பும் தரப்பட வேண்டும் என்ற  மனநிலையில் உள்ளவர்கள்.
அத்துடன்... முஸ்லீம் சமயத்தவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்க மதமும் அவ்வளவு விரும்பாது என  நினைக்கின்றேன்.

மேலும் சில காரணங்கள் சிங்கள, முஸ்லீம்  பகுதிகளில் வாழ்ந்த 
 @goshan_che, @colomban, @Sasi_varnam, @ரஞ்சித், @valavan, @நிழலி, @nedukkalapoovan, @குமாரசாமி, @ஈழப்பிரியன், @ரசோதரன் ஆகியோருக்கு தெரிந்து இருக்கும். அவர்களும் தமது கருத்தை கூறினால் நல்லது.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

அனுர அரசு… முஸ்லீம்களை அமைச்சரவையில் சேர்க்காமல் விடும் போதே, முஸ்லீம்களிடம் இருந்து பாரிய எதிர்ப்பு வரும் என்று அறிந்தே இருப்பார்கள். இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல. நன்கு  தெரிந்தே செய்யப் பட்டது.

இவ்வளவிற்கும் பெரும்பாலான முஸ்லீம்கள் தமக்கும் ஒரு மாற்றம் வேண்டி, அனுர கட்சிக்கு பிரச்சாரம் செய்து இருக்கும் போது…
முஸ்லீம்கள் இல்லாத அமைச்சரவையை நியமித்து, அவர்களுக்கு ஏதோ ஒரு செய்தியை மறைமுகமாக சொல்கிறார்கள் என்றே எனக்குத் தெரிகின்றது.

அது என்னவாக இருக்கும்… ? எனது சந்தேகம்,   சில வேளை….


1) இவர்கள் தமது மதத்தையும், அரசியலையும் ஒன்றாக கலப்பது.
2) சொந்த நாட்டுக்கு விசுவாசம் இல்லாமல், முஸ்லீம் நாடுகளுடன் கள்ளத் தொடர்பில் இருப்பது.
3) பௌத்தத்தை விட தமது மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது.
4) எவருடன் ஒன்றாகச்  சேர்ந்து இயங்கினாலும்… நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லாமல், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வது.
5) பௌத்த ஶ்ரீலங்காவிற்கு ஒவ்வாத  இவர்களின் கலாச்சார உடைகளான தொப்பி, பர்தா போன்றவைகளாக இருக்குமோ என நினைக்கின்றேன்.


இதனை விட... வேறு காரணங்கள் இருந்தால், அறியத் தாருங்கள்.

முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணங்களை பெற்று அனுமதியின்றி கிராமங்களை உருவாக்குதல் ..அமைச்சர் என்ற அதிகாரத்தை பாவித்து...

சுன்னத்து செய்வது 😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, putthan said:

முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணங்களை பெற்று அனுமதியின்றி கிராமங்களை உருவாக்குதல் ..அமைச்சர் என்ற அதிகாரத்தை பாவித்து...

சுன்னத்து செய்வது 😅

ஓம்... புத்தன். முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணம் பெற்று காத்தான் குடியை கிட்டத் தட்ட அரபு தேசம் மாதிரி நினைப்பது  போன்றவை எல்லாம்... அவர்களுக்கு ஒரு வெறுப்புக் கலந்த  அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

10 இலட்சம் முஸ்லிம்கள் NPP க்கு வாக்களித்தனர், உணர்வுகளைப் புரியாது செயற்படுவது கவலைக்குரியது

இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது, 

 

முஸ்லிம் மக்களும் இந்நாட்டின் பிரசைகள். அந்த வகையில் இந்த சமுகமும் ஏனைய சமுகங்களைப் போன்று கௌரவத்துடன் இந்நாட்டில் வாழ விரும்புகின்றது. இந்நாட்டின் சுதந்திர காலம் தொட்டு நியமிக்கப்பட்டு வந்த அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது. 

 

இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இந்த அரசாங்கம் நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமுகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. சமுக வலைத்தளங்களை அவதானிக்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. 

 

இந்த அரசாங்கத்தின் கடந்த குறுகிய கால செயற்பாடுகள் சிலவற்றை பாரக்கும் போது முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

 

இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட 6 தவிசாளர் பதவிகளில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளரும் நியமிக்கப்படவில்லை. இந்த விடயம் பேசு பொருளான பின்னர் ஒரு முஸ்லிம் தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

அதேபோல இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற 18 தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பான பெயர்ப் பட்டியல் முன்னர் வெளியிடப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரதும் பெயர் வெளிவரவில்லை. பின்னர் இதுவும் பேசுபொருளான பின்னர் ஒரு முஸ்லிம் உறுப்பினரது பெயரோடு புதிய பட்டியல் வெளியானது. 

 

அந்த வரிசையிலேயே இப்போது இந்த அரசாங்கம் நியமித்துள்ள அமைச்சரவையில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த கோத்தாபாய ராஜபக்ஸ அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

 

இந்த உதாரணங்களை வைத்து நோக்கும் போது இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகின்றது. இப்படியிருந்தால் இந்த ஆரம்பத்திலேயே இது கலையப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்ற முஸ்லிம்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

 

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அளிக்கப்பட்டுள்ள சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளுள் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள வாக்கு விபரங்களை நுணுகி ஆராய்கின்ற போது இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம். 

 

முஸ்லிம்களின் இந்தளவு பெரிய எண்ணிக்கை வாக்குகளைக் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் புரிந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெவித்தார்

https://www.jaffnamuslim.com/2024/11/10-npp.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சிறுபான்மை இனமாக இருந்து அதனால் ஏற்பட்ட அடக்குமுறைகளால் தமிழ் இளையோர் ஆயுதம் ஏந்திய பின்னர் புலிகள் தமிழ் மக்கள் நலன் சார் நிலையில் விட்டுக்கொடுப்பினை என்ற  நிலையில் உறுதியாக நின்றார்கள், ஆனாலிஸ்லாமியர் ஆரம்பத்திலிருந்து தனித்துவமான போக்கினை கடைப்பிடிக்கின்றனர், புலிகளின் பின்னர் வந்த அரசியல்வாதிகள் தமது சொந்த நலனில் எந்தவித விட்டுக்கொடுப்பினையும் செய்யாமல் மறுவளமாக தமது இனத்தினை காட்டி வியாபாரம் செய்கிறவர்களாக இருப்பதால் சிங்கள பேரினவாதத்திற்கு இஸ்லாமியர்களும் அவர்களது அரசியல்வாதிகளும் அச்சத்தினை கொடுக்கின்ற நிலை காணப்படுகின்றது.

இப்போது அவர்கள் இலக்கு இன்னொரு சிறுபான்மையினரான இஸ்லாமியார்களாக உள்ளார்கள், தமிழ் மக்களின் மீட்கு சிங்கள பெரும்பான்மை தாக்கும் போது அதனை தடுக்க எத்தனிக்காமல் அதனை விட மோசமான நடவடிக்கையாக தாமும் அதில் இணைந்து தவறு செய்தார்கள்.

தற்போது இஸ்லாமியருக்கு எதிராக திரும்பும் இந்த பெரும்பான்மைக்கு தமிழ் மக்கள் ஆதரவ்ளித்து தவறிழைக்க கூடாது, பாதிப்பிற்குள்ளாகும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கே எமது ஆதரவு இருக்கவேண்டும்.

  • Like 3
Posted

இன்னும் 3 அல்லது 4 அமைச்சருக்கான இடங்களும் பிரதி அமைச்சருக்கான இடங்களும் நிரப்பப்பட வேண்டும். இதனை ஒரு முஸ்லிமாவது நிரப்புவார்கள் என முஸ்லிம்கள் நம்புகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்பேசும் மக்களுக்கு அனுரகுமார திசநாயக்க அரசு இரண்டு அமைச்சர்களை தந்துள்ளது.தமிழர்களை பிரித்து அவர் இந்து மதமா கிஸ்துவ மதமா முஸ்லிம் மதமா என்று வேறுபாடுகள் எல்லாம் பார்க்கவில்லை.அரசின் மதம் சாராத இந்த முடிவு வரவேற்கபட வேண்டியது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/11/2024 at 04:29, தமிழ் சிறி said:

மேலும் சில காரணங்கள் சிங்கள, முஸ்லீம்  பகுதிகளில் வாழ்ந்த 
 @goshan_che, @colomban, @Sasi_varnam, @ரஞ்சித், @valavan, @நிழலி, @nedukkalapoovan, @குமாரசாமி, @ஈழப்பிரியன், @ரசோதரன் ஆகியோருக்கு தெரிந்து இருக்கும். அவர்களும் தமது கருத்தை கூறினால் நல்லது.

முஸ்லிம் டாக்கரைக் கேட்டபோது மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு சத்திரசிகிச்சை செய்தாலே எவ்வளவே பணம் வரும்போது உழைப்பே இல்லாமல் வாழ்வை முடக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அதுவும் நிஞாயம் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/11/2024 at 09:29, தமிழ் சிறி said:

ஆம்... நீங்கள் சொல்வது சரி கந்தையா அண்ணை. 
முஸ்லீம்கள் எப்போதுமே... வென்ற பக்கம் திடீரென சாய்ந்து விட்டு, 
அதே வேகத்தில்... தமக்கு பொறுப்பும் தரப்பட வேண்டும் என்ற  மனநிலையில் உள்ளவர்கள்.
அத்துடன்... முஸ்லீம் சமயத்தவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்க மதமும் அவ்வளவு விரும்பாது என  நினைக்கின்றேன்.

மேலும் சில காரணங்கள் சிங்கள, முஸ்லீம்  பகுதிகளில் வாழ்ந்த 
 @goshan_che, @colomban, @Sasi_varnam, @ரஞ்சித், @valavan, @நிழலி, @nedukkalapoovan, @குமாரசாமி, @ஈழப்பிரியன், @ரசோதரன் ஆகியோருக்கு தெரிந்து இருக்கும். அவர்களும் தமது கருத்தை கூறினால் நல்லது.

இதன் பின்னால் இருப்பது பெளத்த சிங்கள மேலாண்மைவாதம் என்றே நான் நினைக்கிறேன்.

தமிழர்களை அடக்கி ஆகி விட்டது.

ஆனால் யுத்தத்தை பாவித்து முஸ்லிம்கள் தம் இருப்பை அதிகரித்ததுடன் மிகவும் உயர் பதவிகளிலும், குறிப்பாக வியாபாரம், வங்கி துறைகளை கையில் வைத்துள்ளார்கள் என்பதும், தமிழரை தட்டி வைத்தது போல இனி இவர்களையும் தட்டி வைக்க வேண்டும் என்பது பேரினவாதத்தின் அடுத்த இலக்கு.

1. முதலில் அவர்கள் பகுதியில் அவர்களின் வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருந்த மலையக தமிழரை நாடு கடத்தி அவர்கள் வாக்குப்பலத்தை பாதிக்கும் கீழாக்கினர்.

2. பின்னர் நம் மீது இனவழிப்பு போர்

3. இப்போ முஸ்லிம்களின் முறை.

இவர்கள் மீதும் வன்முறையை திணித்தார்கள் ஆனால் அதை அவர்கள் வடிவாக கையாண்டபடியால் - இப்போ மறைமுக ஒதுக்கலில் இறங்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு முறை ஒரு சிறுபான்மையை அடக்கும் போதும் - ஏனைய சிறுபான்மைகள் அதை வரவேற்கும் அல்லது காணாமல் இருக்கும்படி செட்டப் செய்வார்கள்.

முஸ்லிம்களை பொறுத்தவரை - அறகலவுக்கு ஆக்கி கொடுத்த பிரியாணி எல்லாம் வீணாப்போய்டே என்ற நிலைதான்.

அமைச்சு செயலாளர்களில் ஒரு தமிழ் பெயர் தென்படுகிறது. மருந்துக்கும் ஒரு முஸ்லிம்மும் இல்லை.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/11/2024 at 10:25, விளங்க நினைப்பவன் said:

தமிழ்பேசும் மக்களுக்கு அனுரகுமார திசநாயக்க அரசு இரண்டு அமைச்சர்களை தந்துள்ளது.தமிழர்களை பிரித்து அவர் இந்து மதமா கிஸ்துவ மதமா முஸ்லிம் மதமா என்று வேறுபாடுகள் எல்லாம் பார்க்கவில்லை.அரசின் மதம் சாராத இந்த முடிவு வரவேற்கபட வேண்டியது.

இலங்கையில் எவரும் தமிழ் பேசும் சமூகம் என உணர்வதில்லை. இது வெறும் வார்த்தை மட்டுமே.

அவர்கள் சோனர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் - தனி இனப்பிரிவு என்கிறது அரசியலமைப்பு சட்டம்.

அவர்களும் அவ்வாறே உணர்கிறனர்.

அதே போல் இந்திய வம்சாவழி தமிழர், இலங்கை  தமிழர் என இரு பிரிவுகள் இருப்பதையும் இலங்கை குடிசன மதிப்பீடுகள் ஏற்கிறன.

இதில் நீங்கள் சொன்ன இரு தமிழ் அமைச்சர்களும் இந்திய வம்சாவழியினரே.

இலங்கை வம்சாவழி (வடக்கு-கிழக்கு) தமிழரும், சோனகர் போலவே அமைச்சரவையில் இடம் இல்லாமல் ஒதுக்கலுக்கு ஆகியுள்ளனர்.

இதில் சரஜோ அக்கா - அசித்த எனும் சிங்கள வைத்தியரை மணம் முடித்து மாத்தறையில் வாழ்பவர்.

இவர்கள் இருவரையும் காட்டி - இலங்கை தமிழருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கபட நாடகம்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text

Sujee Van
இது ஒரு வரலாற்று தவறாகக் கூட இருக்கலாம் ஒரு ஆட்சியை மாற்றக்கூடியதாகவும் இருக்கலாம் ஒரு நாள்.

 

May be an image of 6 people, people smiling and text

 

May be an image of 3 people and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அங்கை ஒண்டும் இவேலுக்கு குடுகத் தேவையில்லை. இப்ப இருக்கிற இரண்டு தமிழ் அமைசர்களும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர்கள். இந்த மண்ணின் குடிகளான இலங்கைத் தமிழர் நாங்களே அமைச்சுப் பதவி கேட்கவில்லை. அதுக்குள்ள இவேலுக்கு வேணுமாம்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமைச்சரவையில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றோ, அல்லது இலங்கைத் தமிழ் பிரதிநித்துவம் வேண்டும் என்றோ ஜேவிபியினர் உளமார நினைக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் 'தோழர்களை' மட்டுமே அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவார்கள். இது எந்த இடதுசாரிப் போக்கு உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக, அனுதாபிகளாக மட்டுமே இருக்கலாம்.

ஆனாலும் ஒரு ஜனநாயக ஆட்சியில் பலரின் பிரதிநிதித்துவமும் வேண்டும் என்ற ஒரு அரசியல் சரிநிலைக்காக சில பிரதி அமைச்சர் பொறுப்புகள் இந்த இரண்டு சமூகங்களுக்கும்  வழங்கப்படும் என்றே நான் நினைக்கின்றேன்.

'அக்பர் ஹால்' என்னும் ஒரு இடம் பற்றி இங்கு சிலருக்கு தெரிந்திருக்கும். கோஷானும் சமீபத்தில் வேறொரு திரியில் இதைக் குறிப்பிட்டிருந்தார். இது பேராதனை பொறியியல் பீட மாணவர்கள் தங்கும், வசிக்கும் இடம்.

இந்த ஹாலையும் இதைச் சுற்றி இப்போது புதிதாக கட்டப்பட்டவற்றையும் ஜேவிபியினர் 'நிஸ்மி ஹால்' என்றே அழைக்கின்றனர். நிஸ்மி என்பவர் 80ம் ஆண்டுகளில் அவர்களின் மாணவர் தலைவராக இருந்து அன்றைய அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர். அன்று அவர் அநுரவிற்கு பல படிகள் மேலே. 

நிஸ்மி ஒரு சிங்களவர் இல்லை, அவர் ஒரு இஸ்லாமியர். தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சுத் திறமை கொண்டவர் என்கின்றனர். ஒரு மிகப் பெரிய ஆளுமை என்றும் சொன்னார்கள்.

அவர்களில் ஒருவராக இருந்தால், எவரையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். 

 

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.