Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

அமைச்சரவையில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றோ, அல்லது இலங்கைத் தமிழ் பிரதிநித்துவம் வேண்டும் என்றோ ஜேவிபியினர் உளமார நினைக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் 'தோழர்களை' மட்டுமே அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவார்கள். இது எந்த இடதுசாரிப் போக்கு உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக, அனுதாபிகளாக மட்டுமே இருக்கலாம்.

ஆனாலும் ஒரு ஜனநாயக ஆட்சியில் பலரின் பிரதிநிதித்துவமும் வேண்டும் என்ற ஒரு அரசியல் சரிநிலைக்காக சில பிரதி அமைச்சர் பொறுப்புகள் இந்த இரண்டு சமூகங்களுக்கும்  வழங்கப்படும் என்றே நான் நினைக்கின்றேன்.

'அக்பர் ஹால்' என்னும் ஒரு இடம் பற்றி இங்கு சிலருக்கு தெரிந்திருக்கும். கோஷானும் சமீபத்தில் வேறொரு திரியில் இதைக் குறிப்பிட்டிருந்தார். இது பேராதனை பொறியியல் பீட மாணவர்கள் தங்கும், வசிக்கும் இடம்.

இந்த ஹாலையும் இதைச் சுற்றி இப்போது புதிதாக கட்டப்பட்டவற்றையும் ஜேவிபியினர் 'நிஸ்மி ஹால்' என்றே அழைக்கின்றனர். நிஸ்மி என்பவர் 80ம் ஆண்டுகளில் அவர்களின் மாணவர் தலைவராக இருந்து அன்றைய அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர். அன்று அவர் அநுரவிற்கு பல படிகள் மேலே. 

நிஸ்மி ஒரு சிங்களவர் இல்லை, அவர் ஒரு இஸ்லாமியர். தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சுத் திறமை கொண்டவர் என்கின்றனர். ஒரு மிகப் பெரிய ஆளுமை என்றும் சொன்னார்கள்.

அவர்களில் ஒருவராக இருந்தால், எவரையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். 

ரசோ அண்ணா,அக்பர் விடுதிக்கு பின்னால் இருப்பது தான் நிஷ்மி விடுதி. அக்பர் விடுதியை அக்பர் என்று தான் அழைப்பார்கள் 

  • Replies 96
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில

  • மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா

  • வாலி
    வாலி

    இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின்  இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மத

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாதவூரான் said:

ரசோ அண்ணா,அக்பர் விடுதிக்கு பின்னால் இருப்பது தான் நிஷ்மி விடுதி. அக்பர் விடுதியை அக்பர் என்று தான் அழைப்பார்கள் 

நன்றிகள் வாதவூரான்....................👍.

எங்களின் காலத்தில் பின்னால் அந்த விடுதி இருந்திருக்கவில்லை என்றே நினைக்கின்றேன். ஒரு சின்ன மண்மலை இருந்ததாக ஞாபகம். அந்த இடத்தில் கட்டப்பட்டதற்குத் தான் நிஷ்மியின் பெயர் வைத்துள்ளனர் போல.................

எங்களின் காலத்தில் அக்பருடன் நியூ விங்க் மற்றும் சி-குவாட்டர்ஸ் என்பன இருந்தன. 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்.

இலங்கை இசுலாமியர்களைப்போல தமிழர்கள் வாழ்ந்து தழைத்தோங்கணும் என்று எழுதியவர்கள் வரிசையாக வரவும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19/11/2024 at 10:29, தமிழ் சிறி said:

மேலும் சில காரணங்கள் சிங்கள, முஸ்லீம்  பகுதிகளில் வாழ்ந்த 
 @goshan_che, @colomban, @Sasi_varnam, @ரஞ்சித், @valavan, @நிழலி, @nedukkalapoovan, @குமாரசாமி, @ஈழப்பிரியன், @ரசோதரன் ஆகியோருக்கு தெரிந்து இருக்கும். அவர்களும் தமது கருத்தை கூறினால் நல்லது.

தமிழினம் மொழி சார்ந்த இனம்.மத சார்பு இனமல்ல.
 
முஸ்லீம்கள் மொழி சார்ந்த இனமல்ல. அவர்கள் மதத்தை வைத்து மட்டுமே உலக அரசியல் செய்பவர்கள் .உலக வாழ் முஸ்லீம்களுக்கு மதத்தை தவிர மொழி சார்பு எதுவுமில்லை.கிட்டத்தட்ட பார்ப்பனியர்களைப்போல்.....முஸ்லீம்களுக்கு மொழியும் தேவையில்லை.அந்தந்த நாட்டு வரைமுறைகளும் தேவையில்லை. போற வாற இடமெல்லாம் அல்லஃகு அக்பர். அதுவே அவர்கள் தாரக மந்திரம்.

நான் மனித அழிவுகளையும் மனித/இன அடக்கு முறைகளையும் விரும்புபவனல்ல.

ஆனால் இஸ்ரேல் மத்திய கிழக்கில் செய்யும் பொதுமக்கள் அழிவுகளை பார்த்து கண் கலங்கினாலும்  முஸ்லீம்களின் வரட்டுக்கர்வம் அழிய வேண்டும் என விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு இப்ப உள்ள பிரச்சினை 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டது என்பதுதான். அமைச்சரவை முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, வாலி said:

இவர்களுக்கு இப்ப உள்ள பிரச்சினை 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டது என்பதுதான். அமைச்சரவை முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

அந்த  இரு தமிழர்களும் அமைச்சரவையில் இடம் பெறாவிட்டிருந்தால்.....

தமிழர்களுக்கு பதவியில்லை ,இனவாத அரசாங்கம், அது இது என பல ஆயுதங்களை தூக்கியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவர் ( கடும்போக்கு வாதி ) என்னிடம் சில வருடங்களுக்கு முன் இப்படி சொன்னார் 

" நீங்கள் தமிழர்கள் கேட்டீர்கள், கிடைக்காத பொழுது சண்டைக்கு வந்தீர்கள், அதில் தோல்வி அடைந்தீர்கள் ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருந்தது. இந்த முஸ்லீம்கள் சண்டைக்கு நேர வாறார்களே இல்லேயே "...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பகிடி said:

ஒரு சிங்களவர் ( கடும்போக்கு வாதி ) என்னிடம் சில வருடங்களுக்கு முன் இப்படி சொன்னார் 

" நீங்கள் தமிழர்கள் கேட்டீர்கள், கிடைக்காத பொழுது சண்டைக்கு வந்தீர்கள், அதில் தோல்வி அடைந்தீர்கள் ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருந்தது. இந்த முஸ்லீம்கள் சண்டைக்கு நேர வாறார்களே இல்லேயே "...

அவர்கள் தொப்பி பிரட்டிகள் என்பதை யாழ்களம் ஏற்காது.
ஆனால் நான் வாழ்ந்த  சமூகம் ஏற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இவர்களுக்கு இப்ப உள்ள பிரச்சினை 2 தமிழர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டது என்பதுதான். அமைச்சரவை முழுவதுமாக சிங்களவர்களாக இருந்திருந்தால் இவர்களுக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

இந்த உண்மை இன்றைக்கு நாளக்கு தெரிந்துவிடும்...எப்படியும் வளர்ப்பு பிராணிகளுக்கு எலும்புத்துண்டு போடுவினம் ...பிரதி அமைச்சர் பதவி...அவ்வளவூக்கும்..என்ன மாதிரி கெஞ்சுகினம் ..வளையினம்..அப்பப்பா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

அவர்களில் ஒருவராக இருந்தால், எவரையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். 

ரோஹண விஜேவீரவின் மறைவுக்கு பின் தப்பியோடி பின் - 1991 இல் சோமவன்ச அமரசிங்க பிரேமதாசாவுடன் டீல் போட்டு, இலண்டனில் இருந்து திரும்பி வந்து, வீரவன்ச, கலப்பதி, டில்வின், லால் காந்த, ஹேரத்தை சேர்த்து ஜேவிபியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தார்.

இது வெளியுலகுக்கு சொல்லப்படும் கதை.

இதே சமயம் - விஜேவீரவுக்கும், உபதிஸ்ச கமநாயக்கவுக்கும் அடுத்த நிலையில் இருந்து - ரஞ்சன் விஜேரத்ன கண்ணில் மண்ணை தூவி ஒஸ்ரேலியா போய் -அங்கிருந்து கட்சியை வழி நடத்தி, பின் பிறிதொரு பெயரில் இலங்கை வந்து போய் இருந்த கட்சியின் மிக முக்கிய உயர்பீடம்தான், சிங்கள தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த குமார ஐயே எனப்படும் குமார் குணரட்ணம்.

இவரின் அண்ணா ரஞ்சித்தும் மத்திய குழுதான் ஆனால் 87 இல் கொல்லப்பட்டார்

ஆகவே இவர்கள் தமது ஆள் என்றால் வேற்று இன, மதத்தினரையும் ஏற்பார்கள் என்பது சரியே.

ஆனால்….

இவர்கள் ஆள்….என ஆவதற்கு….

இன அடையாளம் துறந்து, வர்க்க அடையாளம், அவர்கள் சொல்லும் இனவாத அடையாளத்தை ஏற்க வேண்டும். அதாவது யாழ் எம்பிகள் செய்ததை போல சொல்லாமலே பிக்குகள் காலில் போய் விழ வேண்டும்.

சிங்கள பேரினவாதத்தின் flavor வேறுபடும். அதில் ஜேவிபியின் சுவை, KFC secret recipe மாதிரி தனிச்சுவை. ஆனால் அதுவும் பேரினவாதம்தான்.

26 minutes ago, பகிடி said:

ஒரு சிங்களவர் ( கடும்போக்கு வாதி ) என்னிடம் சில வருடங்களுக்கு முன் இப்படி சொன்னார் 

" நீங்கள் தமிழர்கள் கேட்டீர்கள், கிடைக்காத பொழுது சண்டைக்கு வந்தீர்கள், அதில் தோல்வி அடைந்தீர்கள் ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருந்தது. இந்த முஸ்லீம்கள் சண்டைக்கு நேர வாறார்களே இல்லேயே "...

இது….

இதுதான் முஸ்லிம்ள் பற்றி மிக பெரும்பான்மையான சிங்களவர் மனநிலை.

  • கருத்துக்கள உறவுகள்

பிழை திருத்தம்

குமார் குணரட்னத்தின் தாயாரும் தமிழரே (மலையக தமிழர்).

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பகிடி said:

ஒரு சிங்களவர் ( கடும்போக்கு வாதி ) என்னிடம் சில வருடங்களுக்கு முன் இப்படி சொன்னார் 

" நீங்கள் தமிழர்கள் கேட்டீர்கள், கிடைக்காத பொழுது சண்டைக்கு வந்தீர்கள், அதில் தோல்வி அடைந்தீர்கள் ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருந்தது. இந்த முஸ்லீம்கள் சண்டைக்கு நேர வாறார்களே இல்லேயே "...

தமிழர்கள் மீது பல அடக்குமுறைகள் ஏற்படுத்தப்பட்ட பின்னரே தமிழர்கள் தமக்கும் சரிநிகர் உரிமை வேண்டும் என கோரினார்கள் (பெரும்பான்மையின் அடக்குமுறைதான் ஆரம்ப புள்ளி), தமிழ் இளையோர் அதில் கொள்கை பிடிப்புடன் இருந்தமையால் அவர்களை அழித்து தமிழ் மக்களை மீண்டும்  ஆரம்ப புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.

ஆனால் இஸ்லாமியர்கள் அடிப்படையில் தமிழர்கள் போல் இல்லை, அவர்கள் தமக்கென தனித்துவமான கொள்கையினை கடைப்பிடிக்கிறார்கள், அதில் சாதாரண மக்களில் இருந்து அரசியல்வாதிகள் வரைஅவர்களை தமிழர்கள் மாதிரி கையாள முடியாது அத்துடன் அவர்கள் எக்காலத்திலும் தமது தனித்துவத்துவத்தினை இழக்கமாட்டார்கள்.

பெரும்பான்மை இனவாதத்திற்கு மக்கள் தத்தமது நம்பிக்கைகள், உரிமைகளை பேணுவதென்பது ஒரு ஒவ்வாமைக்குரிய விடயமாக உள்ளது, இவர்கள் தமிழர்களிடம் பெற்ற அனுபவம் மாதிரி இஸ்லாமியர்கள் இலகுவில் கையாள முடியாது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளும் போது அது மிக தாமதமாகியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜே.வி.பி தலைவர் ரோகணவை கைது செய்து ..சித்திரவதை செய்து சுட்ட இடத்துக்கு கிட்டதான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தேன் ... அது நாரேன்பிட்டி மனிங்ரவுன் ரோட்டில் உள்ள கோல்ப் கிளப்...அதாவது மோட்டர் ரபிக் திணைக்களத்துக்குப் பக்கத்தில் ..அன்று இரவு அதிசயமாக துப்பாக்கிச் சத்ததையும் கேட்க முடிந்தது...அவரது உடலை உடனடியாகவே கனத்தையில் எரித்து விட்டதாகவும் கேள்வி

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இலங்கை இசுலாமியர்களைப்போல தமிழர்கள் வாழ்ந்து தழைத்தோங்கணும் என்று எழுதியவர்கள் வரிசையாக வரவும். 

முதல் ஆளாக நான் ஆஜர் 🤣.

ஆனால் நான் சொன்னது மேல வசி சொன்னது போலதான்.

நாம் பண்டா, சிறில் மத்யூவை எதிர் கொண்டது போல் நேரடியாக மூர்க்கமாக அவர்கள் ஞானசார, டான் பிரசாத், ரணவக்க, கமன்பில வை எதிர் கொள்ளவில்லை. அவர்கள் ஆட்களை வைத்தே அவர்களை காயடித்தார்கள்.

இனியும் ஜேவிபியை எப்படி கையாள்கிறார்கள் என்பதை இருந்து பாருங்கள்.

20 minutes ago, vasee said:

இவர்கள் தமிழர்களிடம் பெற்ற அனுபவம் மாதிரி இஸ்லாமியர்கள் இலகுவில் கையாள முடியாது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளும் போது அது மிக தாமதமாகியிருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

ஒரு சிங்களவர் ( கடும்போக்கு வாதி ) என்னிடம் சில வருடங்களுக்கு முன் இப்படி சொன்னார் 

" நீங்கள் தமிழர்கள் கேட்டீர்கள், கிடைக்காத பொழுது சண்டைக்கு வந்தீர்கள், அதில் தோல்வி அடைந்தீர்கள் ஆனால் அதில் நேர்மையும் உண்மையும் இருந்தது. இந்த முஸ்லீம்கள் சண்டைக்கு நேர வாறார்களே இல்லேயே "...

சண்டைக்கு. வந்தால்  அவர்களின் தலைகளில். குண்டுகளை போடும்படி    அதாவது இந்தியா இலஙக்கைக்கு உதவியது போல்  உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளின் உதவிகள்.  இலங்கைக்கு கிடைக்குமா??? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

இந்த ஜே.வி.பி தலைவர் ரோகணவை கைது செய்து ..சித்திரவதை செய்து சுட்ட இடத்துக்கு கிட்டதான் என்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தேன் ... அது நாரேன்பிட்டி மனிங்ரவுன் ரோட்டில் உள்ள கோல்ப் கிளப்...அதாவது மோட்டர் ரபிக் திணைக்களத்துக்குப் பக்கத்தில் ..அன்று இரவு அதிசயமாக துப்பாக்கிச் சத்ததையும் கேட்க முடிந்தது...அவரது உடலை உடனடியாகவே கனத்தையில் எரித்து விட்டதாகவும் கேள்வி

ஒ….உலப்பன வில் இவர் கைதான வீட்டை போய் பார்த்துள்ளேன். ஆங்கிலேயர் கட்டிய bungalow style வீடு. அங்கே அத்தநாயக்க என்ற பணக்காரர் வேடத்தில் வசித்து வந்தாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இதே சமயம் - விஜேவீரவுக்கும், உபதிஸ்ச கமநாயக்கவுக்கும் அடுத்த நிலையில் இருந்து - ரஞ்சன் விஜேரத்ன கண்ணில் மண்ணை தூவி ஒஸ்ரேலியா போய் -அங்கிருந்து கட்சியை வழி நடத்தி, பின் பிறிதொரு பெயரில் இலங்கை வந்து போய் இருந்த கட்சியின் மிக முக்கிய உயர்பீடம்தான், சிங்கள தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த குமார ஐயே எனப்படும் குமார் குணரட்ணம்.

இன அடையாளம் துறந்து, வர்க்க அடையாளம், அவர்கள் சொல்லும் இனவாத அடையாளத்தை ஏற்க வேண்டும்.

👍..............

குமார் குணரட்ணம் இன்று ஜேவிபியிலிருந்து விலகி Frontline Socialistic Party என்று ஒன்றை நடத்துகின்றார் என்று நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு பல்கலையில் ஜேவிபியினருக்கும், குமாரின் ஆட்களுக்கும் இடையில் தகராறு ஆகியது என்று செய்திகளில் இருந்தது.

ஆமாம், அவர்களின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டாலே அங்கே அவர்களில் ஒருவராக முடியும். அந்த அடையாளத்தை அவர்கள் இலங்கையர்கள் என்னும் அடையாளம் என்கின்றனர், ஆனால் அது உண்மையில் அப்படியான ஒன்றில்லை, மாறாக அது ஒரு சிங்கள பௌத்த அடையாளமே என்பது வெளிப்படையே.

தமிழ்நாட்டில் தமிழிசையின் பேச்சுகளை, பேட்டிகளை கேட்டிருப்பீர்கள் தானே............... சங்கடம், அருவருப்பு இப்படி பலதும் கலந்த ஒரு உணர்வு வரும். இலங்கையிலும் அப்படியான சிலர் முன்னரும் இருந்தவர்கள், புதுதாகவும் சிலர் உருவாகின்றனர் போல.................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

ஒம் அவர்தான் இப்போ FSP தலைவர் - 2012 வரை இலங்கை அரசுக்கு கூட இவர் யார், வந்து போவது எதுவும் தெரியாது என்கிறனர் ( இடைபட்ட காலத்தில் இலங்கை அரசில் ஜேவிபி பங்காளியாகி, அனுர கபினெட் அமைச்சராக இருந்தார் - ஆனால் கட்சியை இயக்கியது - யார் என்பதே தெரியாத குமார்). 

பின்னர் உள்வீட்டு குழப்பத்தில் இவரை கட்சியே மாட்டி விட்டது. இதற்கும் இனவாதமே கடைசியில் காரணம் ஆகியது என்பார்கள்.

இன்னுமொருசாரர் இந்த பிரிவு பொய் நாடகம், இப்போதும் குமார்தார் ஜேவிபியை வழிநடத்துகிறார் என்கிறனர்.

ஜனாதிபதி தேர்தல் நேரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தனக்கும் குமாருக்கும் எந்தவித உடனடி தொடர்பும் இல்லை என மறுத்தார் அனுர. கட்சியின் பழைய உறுப்பினர் என கேள்விப்பட்டேன் அவ்வளவே என்றார்.

ஆனால் முன்பு ஒரு தடவை கேகாலையில் குமாரின் வீட்டில் தங்கி அவரின் தாயாரிடம் ஆங்கில கற்றேன் என கூறியது பின்னர் இன்னொரு வீடியோ வடிவில் வெளிவந்தது.

ஏனைய கட்சிகள் போல அல்ல, ஒரு வல்லரசின் உளவு நிறுவனம் போல ரகசியமான அமைப்பு ஜேவிபி.

எமது மக்களுக்கு இவர்கள் வரலாறு, தன்மை, கொள்கை பற்றி அதிகம் தெரியவாய்பில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரசோதரன் said:

ஆமாம், அவர்களின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டாலே அங்கே அவர்களில் ஒருவராக முடியும். அந்த அடையாளத்தை அவர்கள் இலங்கையர்கள் என்னும் அடையாளம் என்கின்றனர், ஆனால் அது உண்மையில் அப்படியான ஒன்றில்லை, மாறாக அது ஒரு சிங்கள பௌத்த அடையாளமே என்பது வெளிப்படையே.

இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின்  இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். 

முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது.  இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 17:54, vasee said:

பாதிப்பிற்குள்ளாகும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கே எமது ஆதரவு இருக்கவேண்டும்.

இலங்கை தமிழ்  இனம் அழியவேண்டிய இனம் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை.
ஸஹ்ரான் கூட குறிவைத்தது இலங்கை தமிழர்களை மட்டுமே  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின்  இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். 

முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது.  இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀

👍🙏❤️

அதனால்த் தான் சண்டை சச்சரவுகளுக்குப் போகாமல் எங்கள் உரிமையில் பிடிவாதம் காட்டாமல் இயலுமானவரை சிங்கள மக்களுடன் ஒத்துப்போவோம் என்கின்றேன், அறமும் தர்மமும் எம்மை எம் அடுத்த சந்ததியை அரணாய்க் காக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை விட உயர்ந்த்த பதவிக்கு முசுலிம்  எம்பி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார்...உப சபாநாயகர் பதவி... யாழ்முசுலிமின் தலைப்பே  உபசபாநாயகரானார் .முசுலிம்.. இனி நமக்கு பிரச்சனை இல்லை...பார்லிமென்டின் ஆரம்ப உரையிலும் கக்கிம் வளைந்து நெளிந்து பேசின்னார்...இனி அவைக்கு விடிவுகாலம்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, alvayan said:

தமிழரை விட உயர்ந்த்த பதவிக்கு முசுலிம்  எம்பி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார்...உப சபாநாயகர் பதவி... யாழ்முசுலிமின் தலைப்பே  உபசபாநாயகரானார் .முசுலிம்.. இனி நமக்கு பிரச்சனை இல்லை...பார்லிமென்டின் ஆரம்ப உரையிலும் கக்கிம் வளைந்து நெளிந்து பேசின்னார்...இனி அவைக்கு விடிவுகாலம்

அவர்களுக்குத்தான் பதவி கொடுத்து... வாயில் கொழுக்கட்டையை செருகி விட்டார்கள். 
பதவிக்குத் தானே... இந்த உக்கிர ஆட்டம் ஆடியவர்கள்.  😂

இனி... சிறுபான்மை இனம் (முஸ்லீம் / தமிழர்) ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று,
கம்பு சுத்திக் கொண்டு வரமாட்டார்கள் என நினைக்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

அவர்களுக்குத்தான் பதவி கொடுத்து... வாயில் கொழுக்கட்டையை செருகி விட்டார்கள். 
பதவிக்குத் தானே... இந்த உக்கிர ஆட்டம் ஆடியவர்கள்.  😂

இனி... சிறுபான்மை இனம் (முஸ்லீம் / தமிழர்) ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று,
கம்பு சுத்திக் கொண்டு வரமாட்டார்கள் என நினைக்கின்றேன். 🤣

ஆறு மாதங்களில் இன்னொரு பதவி கேட்ப்பார்கள்.  இப்பவே தயாராகி கொள்ளுங்கள்   முஸ்லிம்களும் சுமத்திரனும்.  உழைக்காமல் அனுபவிக்க விரும்புவர்கள்   சந்திரசேகர்.  மாதிரி 

37 வருடமாய் ஒரே  கட்சியில் கிடக்க என்ன பைத்தியமா??   எங்கே பதவி உண்டோ  அங்கேயே படுத்துவிடுவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

ஆறு மாதங்களில் இன்னொரு பதவி கேட்ப்பார்கள்.  இப்பவே தயாராகி கொள்ளுங்கள்   முஸ்லிம்களும் சுமத்திரனும்.  உழைக்காமல் அனுபவிக்க விரும்புவர்கள்   சந்திரசேகர்.  மாதிரி 

37 வருடமாய் ஒரே  கட்சியில் கிடக்க என்ன பைத்தியமா??   எங்கே பதவி உண்டோ  அங்கேயே படுத்துவிடுவார்கள்.  

Moral Stories For Children: Arab and His Camel Short Story

ஆமாம்... இரண்டு பேரும் ஓட்டகங்கள்.   
சின்ன இடம் கேட்டு உள்ளே வந்து... 
முழுக் கூடாரத்தையும் காலி பண்ணி விட்டுத்தான் போவார்கள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.