Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

spacer.png

எதிர்வரும் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய பயணம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பயணத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி பயணத்தை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.  நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் பின்னரான இந்த பயணமானது தெளிவான மக்கள் ஆணையை முன்னிறுத்தியுள்ளதால் இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்கால நலன்களில் முக்கியத்துவம் பெறுகிறது. 

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறும்.

ஏனெனில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதும் மாகாண சபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கருத்துக்களை கூறி வருகின்றது. 

1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் கொண்டுவரப்பட்ட நடைமுறையில் உள்ள இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பானது 22 தடவைகள் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது. எனவே டெல்லி பேச்சுகளில் புதிய அரசியலமைப்பு விடயம் கருத்தில் கொள்ளப்படும்.

மேலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களின் எதிர்காலம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்திய தரப்பு பேச்சுக்களில் பங்கேற்கும். 

இதேவேளை, இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள்  மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளும் டெல்லி பேச்சுவார்த்தைகளில் கவனத்திற்கு உட்படும் எனவும் மறுபுறம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது. இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

2015 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே ஜனாதிபதியின் இப்பயணத்தின் போது, சீன விவகாரமும் முக்கிய தலைப்பாக இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. (ச)

https://newuthayan.com/article/எதிர்வரும்_ஞாயிற்றுக்கிழமை_இந்தியா_பயணமாகும்_ஜனாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை, இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/313470

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது பயணமே இந்தியாவிற்கு.

அரசி, வெங்காயம் & உப்பு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அநேகமான நாட்டு தலைவர்கள் தாம் பதவியேற்ற பின் முக்கியமான அயல் நாட்டுக்கு  செல்வது வழமையானதே.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தலைமை அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்யும் வழமையான நிகழ்வு போன்றது மட்டுமே, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, தமிழர்கள் கவனிக்க வேண்டியது இதனைத்தான், சும்மா அனுர என பூசாரியுடன் மல்லுக்கட்டாமல் நேரடியாக சாமியிடம் செல்ல வேண்டும்😁.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர பேச்சு குறித்து டில்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் - அரசாங்கம்

10 DEC, 2024 | 06:42 PM
image
 
(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 3 நாட்கள் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. 

பேச்சுவார்த்தைகளின் போது அவதானம் செலுத்தப்படும் விடயங்கள், எட்டப்படும் இணக்கப்பாடுகள் குறித்து டில்லியிலிருந்து கூட்டு அறிவித்தல் வெளியிடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது ஜனாதிபதியின் இந்திய விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது, அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார். 

அவருடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த உயர்மட்ட தூதுக்குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட முக்கிய இராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளது. 

எனினும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ள விடயங்கள், கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து டில்லியிருந்து கூட்டு ஊடக அறிவித்தல் விடுக்கப்படும். 

விஜயத்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் வெளியிடப்படும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/200902

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

முதலாவது பயணமே இந்தியாவிற்கு.

அரசி, வெங்காயம் & உப்பு 

இந்தியா, இவற்றை  கொடுத்தே... அனுரவை, வழிக்கு கொண்டு வந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தியா, இவற்றை  கொடுத்தே... அனுரவை, வழிக்கு கொண்டு வந்து விடும்.

இவற்றை தந்தால் அதானி குழுமத்தை நாட்டை விட்டு துரத்த மாட்டேன் என சொல்லுவாரோ...

21 hours ago, vasee said:

இது ஒரு தலைமை அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்யும் வழமையான நிகழ்வு போன்றது மட்டுமே, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, தமிழர்கள் கவனிக்க வேண்டியது இதனைத்தான், சும்மா அனுர என பூசாரியுடன் மல்லுக்கட்டாமல் நேரடியாக சாமியிடம் செல்ல வேண்டும்😁.

பூசாரி சொல்வதை சாமி கேட்கப்போவதில்லை(வழமையாக எங்களுக்கே அப்படித்தானே)
சாமியின் ஆட்டம் சொந்த ஆட்டம் ....பக்தர்களுக்கு எல்லா பக்கத்தாலும் அடி ...இதில காசு இருக்கும் (அதிகாரம்)பக்தன் சாமிக்கு கிட்ட போய் கும்பிடுவான் ...  காசில்லாத பக்தன் கும்பிட்டுக் கொண்டே யிருக்க வேணும் ஒரு நாள் சாமி கண்திறப்பார் எண்ட நம்பிக்கையில்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

இவற்றை தந்தால் அதானி குழுமத்தை நாட்டை விட்டு துரத்த மாட்டேன் என சொல்லுவாரோ...

பூசாரி சொல்வதை சாமி கேட்கப்போவதில்லை(வழமையாக எங்களுக்கே அப்படித்தானே)
சாமியின் ஆட்டம் சொந்த ஆட்டம் ....பக்தர்களுக்கு எல்லா பக்கத்தாலும் அடி ...இதில காசு இருக்கும் (அதிகாரம்)பக்தன் சாமிக்கு கிட்ட போய் கும்பிடுவான் ...  காசில்லாத பக்தன் கும்பிட்டுக் கொண்டே யிருக்க வேணும் ஒரு நாள் சாமி கண்திறப்பார் எண்ட நம்பிக்கையில்

இந்த அதானிதான் இப்ப பங்களாதேசில மின்சாரம் குடுக்க மாட்டன் என வம்பு செய்கிறாராமே? அப்படி இருக்க அவரை நாட்டுக்குள்ள விட்டால் இலங்கைக்கும் அதே கதிதான்.

சாமிக்கு இலஞ்சம் கொடுத்தால் (இலங்கையினை கோர்த்துவிட வேண்டியதுதான்) அலுவல் வேகமாக நடக்கும்.

சாமிக்கு இலங்கையினை நேர்த்தி கடனா வைக்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

வேற வழி ...இல்லை ...சாமியை மாற்றலாம் (மதம் மாறுவது போல)ஆனால் இன்றைய காலத்தில் ஒருவனே தேவன் அவனை பகைத்தால் எல்லாம் நாசம்...அந்த தேவன் கள்ளனை நல்லவனாக்கும் தகுதி படைத்தவன் ...
மூன்று/நாலு சில்லறை கடவுள்மார் ஒன்று சேர்ந்து ஒர் பெரிய‌ கோவில் கட்ட வெளிகிட்டிச்சினம் ஆனால் திடிரேனே அந்த சில்லறை கடவுள்மாரின் தனிப்பட்ட கோவிலுக்கே தலையிடி வந்து விட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

அனுரா உண்மையான சிங்கள பவுத்தனாக இருந்தால் 1978 ல் இந்திய ஏவு படைகளால் உயிருடன் கட்டி  v வீதியில் போடப்பட்ட jvp உறுப்பினர்களின் மேல் இந்திய படைகளின் டாங்கி படையணியின்  வெறியாட்டத்தை நினைவு கூற சொல்லுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

1978

1978இலா அல்லது 87 இலா

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, putthan said:

வேற வழி ...இல்லை ...சாமியை மாற்றலாம் (மதம் மாறுவது போல)ஆனால் இன்றைய காலத்தில் ஒருவனே தேவன் அவனை பகைத்தால் எல்லாம் நாசம்...அந்த தேவன் கள்ளனை நல்லவனாக்கும் தகுதி படைத்தவன் ...
மூன்று/நாலு சில்லறை கடவுள்மார் ஒன்று சேர்ந்து ஒர் பெரிய‌ கோவில் கட்ட வெளிகிட்டிச்சினம் ஆனால் திடிரேனே அந்த சில்லறை கடவுள்மாரின் தனிப்பட்ட கோவிலுக்கே தலையிடி வந்து விட்டது...

இன்று நல்ல form இல் உள்ளீர்கள் போலும்.

உங்கள் உவமான உவமேயங்கள் பிறிதொரு படிநிலை🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

வேற வழி ...இல்லை ...சாமியை மாற்றலாம் (மதம் மாறுவது போல)ஆனால் இன்றைய காலத்தில் ஒருவனே தேவன் அவனை பகைத்தால் எல்லாம் நாசம்...அந்த தேவன் கள்ளனை நல்லவனாக்கும் தகுதி படைத்தவன் ...
மூன்று/நாலு சில்லறை கடவுள்மார் ஒன்று சேர்ந்து ஒர் பெரிய‌ கோவில் கட்ட வெளிகிட்டிச்சினம் ஆனால் திடிரேனே அந்த சில்லறை கடவுள்மாரின் தனிப்பட்ட கோவிலுக்கே தலையிடி வந்து விட்டது...

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடார் (பூசாரி எப்பவும் வழிவிடார்) என்பதனை கூறினேன், எல்லைக்குள்ள இருக்கிற சாமிதான் பவர்புல், இப்பவும் அங்கேயும் அதுதான் நடந்திருக்கு, இனிமே இப்ப்டித்தான் இருக்கும், நாங்களும் அப்படி இருந்தாலே நன்மை.

கோயிலுக்கு போனா நேரா அன்னதான கியூவில போய் நிக்க வேணும் தேவையில்லாம பூசாரி, சாமி என அலையக்கூடாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

உங்கட form உம் அசத்தல்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா, இவற்றை  கொடுத்தே... அனுரவை, வழிக்கு கொண்டு வந்து விடும்.

அண்ணா, 

தரமாட்டம் என்று கூறியே வழிக்கு கொண்டுவரும் 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடார் (பூசாரி எப்பவும் வழிவிடார்) என்பதனை கூறினேன், எல்லைக்குள்ள இருக்கிற சாமிதான் பவர்புல், இப்பவும் அங்கேயும் அதுதான் நடந்திருக்கு, இனிமே இப்ப்டித்தான் இருக்கும், நாங்களும் அப்படி இருந்தாலே நன்மை.

கோயிலுக்கு போனா நேரா அன்னதான கியூவில போய் நிக்க வேணும் தேவையில்லாம பூசாரி, சாமி என அலையக்கூடாது. 😁

விநாயகனை வழிபட்ட பின்பு தான் மூலவர் தரிசனம்... அதுதான் எழுதப்படாத விதி ...அதை விடுத்து என்னுள் இறைவன் இருக்கிறான் நான் தான் கடவுள் என கூறிய பல சாமிமார் காணாமல் போன சரித்திரம் உண்டு ....
முதல் தன்னிறைவு அடைய (ஞானம்) பெற வேண்டும் அதன் பின்பு சித்தன் ஆகலாம் ,அது ஒர்ர் நீண்ட பயணம் அணுரா மாத்தையா அறியுமல்ல...

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2024 at 15:59, MEERA said:

முதலாவது பயணமே இந்தியாவிற்கு.

அரசி, வெங்காயம் & உப்பு 

அப்ப முட்டை வராதா கோப்பாலு?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2024 at 04:42, கிருபன் said:

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறும்.

கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா?

இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா?

பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை

உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன்    கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அனுரா உண்மையான சிங்கள பவுத்தனாக இருந்தால் 1978 ல் இந்திய ஏவு படைகளால் உயிருடன் கட்டி  v வீதியில் போடப்பட்ட jvp உறுப்பினர்களின் மேல் இந்திய படைகளின் டாங்கி படையணியின்  வெறியாட்டத்தை நினைவு கூற சொல்லுங்க .

தனக்கு தானே சூனியம் வைக்க அநுரா ஒன்றும் தமிழ் தேசிய தலைமைகள் அல்ல. முந்தய  சிங்கள தலைமைகள் போல் இவ்வாறான விடயங்களில் மிகுந்த பொறுப்புணர்சியுடன்  யோசித்து சாதுரியமாகவே செயற்படுவார். 

ஆகவே இவ்வாறான உசுப்பேற்றல்கள்  தமிழ் தலைமைகளுக்கு பலித்ததை போல இங்கு பலிக்கப்போவதில்லை. இருப்பினும் பழக்க தோசத்தில் முயன்று பார்த்துள்ளீர்கள். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன.

அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது.

SI-P19-18-02-Ckg-NEW-2.jpg

இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார்.

பேசுபொருளாகுமா கச்சத்தீவு

பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது.

பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் “கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.” என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மோடி கூறப்போகும் செய்தி 

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது.

புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு

இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன.  அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.

s3.jpg

பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுப்ரமணியம் நிஷாந்தன்
 
https://oruvan.com/sri-lankan-president-makes-india-the-destination-for-his-first-foreign-visit/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

தனக்கு தானே சூனியம் வைக்க அநுரா ஒன்றும் தமிழ் தேசிய தலைமைகள் அல்ல.முந்தய  சிங்கள தலைமைகள் போல் இவ்வாறான விடயங்களில் மிகுந்த பொறுப்புணர்சியுடன்  யோசித்து சாதுரியமாகவே செயற்படுவார். 

முன்பு உசுபபேற்றல்கள்  செய்து கொண்டிருந்த  தமிழ் தேசியவாதிகள் இப்போது  அநுரகுமார திசாநாயக்கவிடம் தமிழர்கள் பொறுமை காத்து மிகுந்த பொறுப்புணர்சியுடன்  யோசித்து ஸ்ரீலங்காவின் ஒருமைபாட்டிற்கு எதுவிதமான பாதிப்பு வராதபடி நடந்து கொள்ளுமாறு பாடம் எடுக்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, valavan said:

உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன்    கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்

இதை முதலே சொல்லியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

இதை முதலே சொல்லியிருக்கலாம்.

போனவுடன் ...கேட்பது

2 கப்பல் வெங்காயம்

3 கப்பல் அரிசி

1 கப்பல் மூடை

முதலில் இந்த மூன்றயும் அனுப்புங்கோ

பின்னர் மற்றவயைக் கதைப்பம்..

  • கருத்துக்கள உறவுகள்

அநுராவுக்கு தெரியும் இந்தியாவை தாண்டி இலங்கையில் ஒண்டும் பிடுங்க முடியாது என்று அதுதான் இந்தியாவுக்கு முதல் விஜயம், அடுத்த மாதம் அநுர சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தியா கிள்ளி தான் கொடுக்கும் ஆனால் சீனா அள்ளிக்கொடுக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.