Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களது தலைவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.

சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் அரசியல் உரையாடலைத் தொடர மொஸ்கோ எதிர்பார்த்துள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரம் மேலும் கூறியுள்ளது.

சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) ஒரு மின்னல் முன்னேற்றத்திற்குப் பின்னர் தலைநகர் டமாஸ்கஸை எதிர்ப்பின்றி கைப்பற்றினர்.

இது 14 ஆண்டுகால உள் நாட்டுப் போருக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகால பஷர் அல்-அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கும் கொண்டு வந்தது.

https://athavannews.com/2024/1411490

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு; ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரியா ஜனாதிபதி

மத்திய கிழக்கு நாடான சிரியாவை எச்டிஎஸ் கிளர்ச்சி படை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு அளித்துள்ளதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புதினின் வசிப்பிடமான க்ரெம்ளின் மாளிகை வட்டாரத் தகவலை சுட்டிக்காட்டி இத்தகவலை ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ், டாஸ், ரியா நோவோஸ்டி பத்திரிகைகள் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.

பைடன் வரவேற்பு: இதற்கிடையில் சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி ஆசாத்தின் வீழ்ச்சி நீதியின் வெற்றி. இது பல ஆண்டுகளாக துண்பப்பட்டுவரும் சிரிய மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பு அவர்கள் தங்கள் தேசத்தை வளமான எதிர்காலத்துக்காக கட்டமைக்க உதவும். அவர்கள் தங்கள் நாட்டை பெருமைமிகு அடையாளமாக மாற்ற உதவும்” என்று அதிபர் பைடன் வரவேற்றுள்ளார்.

சிரிய பிரச்சினையின் பின்னணி: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் தேதி ஜனாதிபதினார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்தன. கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி, அமெரிக்கா ஆதரவு அளித்தன. கடந்த 2014-ல் சன்னி பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. ஜனாதிபதி ஆசாத் படைகள் கிளர்ச்சி படைகள் இடையிலான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

பின்னர், ரஷ்யா, ஈரானின் ஆதரவால் ஜனாதிபதி ஆசாத்தின் கை ஓங்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து, சிரியா ஜனாதிபதி ஆசாத்தின் ராணுவத்துக்கு ரஷ்யா, ஈரானின் ஆதரவு படிப்படியாக குறைந்தது.

கடந்த 1-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றியது. அடுத்தடுத்து பல்வேறு நகரங்களை கைப்பற்றிய எச்டிஎஸ் படை வீரர்கள், நேற்று சிரியா தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றினர்.

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, மனைவி, பிள்ளைகள் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், தற்போது ஆசாத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://thinakkural.lk/article/313382

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

ரஷ்யாவில் தஞ்சமடைந்தார் சிரியா ஜனாதிபதி

large.IMG_7873.jpeg.42af96daa086f218a713

  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் – ரஸ்யா

image
 
பதவிகவிழ்க்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுதமோதலில் ஈடுபட்டுள்ள ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் அவர் அமைதியான ஆட்சி மாற்றத்திற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளில் ரஸ்யா ஈடுபவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு சிரியாவில் உள்ள தனது தளங்கள் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றிற்கு ஆபத்தில்லை என  குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் எதிர்தரப்பை சேர்ந்த அனைத்து குழுக்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.

பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதியின் நெருங்கிய நேசநாடு ரஸ்யா என  குறிப்பிட்டுள்ளது.

  •  
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

இது 14 ஆண்டுகால உள் நாட்டுப் போருக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகால பஷர் அல்-அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கும் கொண்டு வந்தது.

இனி சிரியாவில் அரபு வசந்தம் வீசும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செத்தகிளி இப்ப தஞ்சமுமல்லே குடுக்க வெளிக்கிட்டிட்டிட்டு!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு மனிதன் ரஷ்யாவில் போய் தஞ்சமடைந்தான் என்ற செய்தியளவிற்கு வெறுமையான உணர்வுகளைத் தந்த செய்திகள் மிகக் குறைவு............................. இந்த உலகில் வேறு ஒரு நாடுமா அடைக்கலம் கொடுக்கவில்லை.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரியாவில் இருந்து வந்தவர்கள் நாடு திரும்ப விரும்பினால் ஆளுக்கு 1000யூரோக்களைக் கொடுத்து விமானத்தையும் ஏற்பாடு செய்யுங்கள் என எதிர்க்கட்சிகள் அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்கள்.

யேர்மனியில் ஏறக்குறைய ஒரு மில்லியன் சிரியர்கள் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வாலி said:

செத்தகிளி இப்ப தஞ்சமுமல்லே குடுக்க வெளிக்கிட்டிட்டிட்டு!😂

வாலி [ப] கிளி 2025 தொடக்கம் மீண்டும் பறக்கும்    🤣. இன்னும் சாகவில்லை.    மயங்கி கிடக்கிறது    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, Kavi arunasalam said:

சிரியாவில் இருந்து வந்தவர்கள் நாடு திரும்ப விரும்பினால் ஆளுக்கு 1000யூரோக்களைக் கொடுத்து விமானத்தையும் ஏற்பாடு செய்யுங்கள் என எதிர்க்கட்சிகள் அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்கள்.

யேர்மனியில் ஏறக்குறைய ஒரு மில்லியன் சிரியர்கள் வாழ்கிறார்கள்.

அது  எப்படி முடியும் ??? அவர்களுக்கு தொழில் பயிற்சிகள். வேலைவாய்ப்பு     தொழில் தொடங்க முதல்   ......இப்படி கொடுத்து [  எங்களுக்கு ஒன்றும் தரவில்லை உடனே  கடிதம் போட்டார்கள் நாட்டை விட்டு போ. என்று ] வளர்த்து விட்டு   1000 யூரோ தருவேன் போ என்றால்   சிரியாவில். போய்  வாழ இந்த பணம் எந்த மூலைக்கு காணும்??   தேவையெனின் கோலிடோக்கு.  வருடம் ஒருமுறை போய் வரலாம்   அதற்கு ஆயிரம் யூரோவும்.  விமான ரீக்கற்.  போதும்   🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

ஒரு மனிதன் ரஷ்யாவில் போய் தஞ்சமடைந்தான் என்ற செய்தியளவிற்கு வெறுமையான உணர்வுகளைத் தந்த செய்திகள் மிகக் குறைவு............................. இந்த உலகில் வேறு ஒரு நாடுமா அடைக்கலம் கொடுக்கவில்லை.......................

ரஷ்யாவில் பலருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் ஊதி பெரிதாக்குவதில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவில் பலருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் ஊதி பெரிதாக்குவதில்லை. 
 
நாங்கள் வீம்புக்கு  உண்மைகளை அறிய விரும்புவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Kapithan said:

நாங்கள் வீம்புக்கு  உண்மைகளை அறிய விரும்புவதில்லை. 

ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் ஏதோ ஒரு சிறிய ஒற்றுமையுடன் பல சங்கதிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள் என எண்ணத் தோன்றுகின்றது.

ஆனால் நாங்கள் விஜய்-அஜித் ரசிகர் சண்டை போல் ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாமல்.....😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, Kapithan said:

நாங்கள் வீம்புக்கு  உண்மைகளை அறிய விரும்புவதில்லை. 

🤣...................

'இதுக்கு மேல நீ ஒரு எழுத்து வாசித்தாலும், நீ ஆள் குளோஸ்..............' என்று ஒரு டாக்டர் வந்து சொல்லும் வரை சகல செய்திகளையும் வாசித்துக் கொண்டே இருக்கப் போகின்றோம், கபிதன்.................  

40 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவில் பலருக்கு அரசியல் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் ஊதி பெரிதாக்குவதில்லை. 
 
நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும், குமாரசாமி அண்ணா. அசாத் போன்று பலர் வரலாற்றில் வந்து போயிருப்பார்கள். தொடர்ந்தும் அங்கேயே இருப்பார்களா............. ரஷ்யாவில் எந்தப் புலம்பெயர் சமூகமும் தொடர்ச்சியாக இருப்பதாக நான் தகவல்கள் எதுவும் பார்த்ததில்லை............. சீனாவிலும் இப்படியே.

அந்த நாட்களில் பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஜப்பானுக்கு சில புலமைப்பரிசில்கள் கிடைக்கும். எந்த நாட்டிலும் கிடைக்கும் பணத்தின் அளவை விட ஜப்பான் கொடுக்கும் பணத்தின் அளவு பெரும்தொகை. படிக்கும் போதே 'ஒரு பணக்காரன்' ஆகிவிடலாம். அத்துடன் ஐந்து வருடங்கள் தான் மேற்படிப்பு என்றால், ஜப்பானில் சரியாக ஐந்து வருடங்களில் அதை முடித்தும் விடுவார்கள்.

ஆனாலும் படிப்பு முடிந்தவுடன் அங்கு எவரும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. ஜப்பானியச் சமூகத்தில் அந்நியர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு இடம் இல்லை என்றே சொல்கின்றனர். அங்கே படித்து முடித்தவர்கள் சிலர் இலங்கைக்கு திரும்பிப் போனார்கள், பலர் மேற்கு நாடுகளுக்கு போனார்கள். 

இதையொட்டியே என் எண்ணம் இருந்தது..................... 

Edited by ரசோதரன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெரூசலேம் போஸ்ற் இன் இன்றைய தலையங்கம்.

Assad falls, Khamenei wobbles: Will events in Syria lead to something similar in Iran? - analysis

https://m.jpost.com/middle-east/article-832724

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும், குமாரசாமி அண்ணா. அசாத் போன்று பலர் வரலாற்றில் வந்து போயிருப்பார்கள். தொடர்ந்தும் அங்கேயே இருப்பார்களா............. ரஷ்யாவில் எந்தப் புலம்பெயர் சமூகமும் தொடர்ச்சியாக இருப்பதாக நான் தகவல்கள் எதுவும் பார்த்ததில்லை............. சீனாவிலும் இப்படியே.

இலங்கை தமிழர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடா விட்டிருந்தால் இன்று நாட்டு நிலமை வேறாக இருந்திருக்கும் அல்லவா? அதைத்தான் ரஷ்ய மக்கள் விரும்புகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடா விட்டிருந்தால் இன்று நாட்டு நிலமை வேறாக இருந்திருக்கும் அல்லவா? அதைத்தான் ரஷ்ய மக்கள் விரும்புகின்றார்கள்.

உங்களின் சில பதில்கள் தொப்பிக்குள்ளிருந்து புறா வருவது போல, அண்ணா.............🤣

இவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்............. அந்த நாட்டுக்கும், சனங்களுக்கும் இன்னொரு ஆப்கானிஸ்தான், தலிபானின் அடக்குமுறை ஆட்சி என்ற நிலை வராமல் இருந்தாலே போதும்............... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, ரசோதரன் said:

ரஷ்யாவில் எந்தப் புலம்பெயர் சமூகமும் தொடர்ச்சியாக இருப்பதாக நான் தகவல்கள் எதுவும் பார்த்ததில்லை............. சீனாவிலும் இப்படியே.

முழுக்க உண்மை

சீனாவில் இருந்து சீன அகதிகள் உங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக  பல வழிகளில் பெட்டிகளில் அடைக்கபட்டும் உயிரை பணயம் வைத்து வந்து குவிந்து கொண்டிருக்கின்றார்கள். ரஷ்யா பற்றி சொல்ல வேண்டியது இல்லை 😂 நமது ஆட்களே ரஷ்ய விமானத்தில் அங்கே சென்று தான் தப்பினோம் என்று மேற்குலநாடுகளில் குடியேறியவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ரசோதரன் said:

ஒரு மனிதன் ரஷ்யாவில் போய் தஞ்சமடைந்தான் என்ற செய்தியளவிற்கு வெறுமையான உணர்வுகளைத் தந்த செய்திகள் மிகக் குறைவு............................. இந்த உலகில் வேறு ஒரு நாடுமா அடைக்கலம் கொடுக்கவில்லை......................

அசாத்தின் 9 பில்லியன் டாலர்கள் ரஸ்சியாவிடம் தானே இருக்கிறது.

இதுக்கு தானே  சிரியா  சின்னாபின்னமாக்கப்பட்டது us மற்றும் அதன் வாலான நேட்டோ ஆலும்.

(வேறு நோக்கங்கள், இஸ்ரேல், ஈரான் போன்றவையும் இருக்கிறது. )

ஆனால்  தொடங்கியது அசாத் 9 பில்லியன் ஐ  cia இன் கண்ணில்  மண்ணைத் தூவி வெட்டியாடியபடியால்.

 என்ன  மக்களை அசாத் போட்டு வதைக்கிறார் என்றா?

மத்திய கிழக்கில் அசாத் செய்தது - ஆட்சியை எதிர்த்தவர்களுக்கு - அங்கே நடக்காதது ஒன்றும் அல்ல.

அசாத்தை ஐடா  கொடுமைகள், அப்பாவிகளுக்கு அமெரிக்காவின் வாலுகள் செய்து இருக்கின்றன, இப்போதும் செய்வதாக முன்னணி துருக்கி, இஸ்ரேல் (பலஸ்தீனியரின் காணியை திருடுவதற்கு, அவர்களை வதைத்து அகற்றுவதற்கு  us,  மேற்கின் இன் முழமையான  விருப்பம்)   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kadancha said:

என்ன  மக்களை அசாத் போட்டு வதைக்கிறார் என்றா?

மத்திய கிழக்கில் அசாத் செய்தது - ஆட்சியை எதிர்த்தவர்களுக்கு - அங்கே நடக்காதது ஒன்றும் அல்ல.

'அவர்கள் செய்யாததையா இவர்கள் செய்துவிட்டார்கள்........................' என்பதே இன்றைய உலகில் ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயம் ஆகிவிட்டது, கடஞ்சா............

எங்களுக்கு நாங்களே, எங்களுக்குப் பிடித்தவர்களுக்காக/பிடிக்காதவர்களுக்காக, நாங்கள் சொல்லிக் கொள்ளும் சமாதானங்கள் இவையோ என்றும் தோன்றுகின்றன...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரியா அசாத்திடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது  என மக்கள் கொண்டாடும் வேளையில் இஸ்ரேல் சிரியா நாட்டில் குண்டுகளை வீசிக்கொண்டிருக்கின்றது. இஸ்ரேலுக்கு வேறை வேலையே இல்லையா?😋

பல முஸ்லீம்கள் ஒரு சில முஸ்லீம் நாடுகள் எண்ணுவது போல்   இஸ்ரேல்  எனும் நாடு இல்லை என்றால் மத்திய கிழக்கு நிம்மதியாக வாழும் என நான் நினைக்கவில்லை. நினைக்கவும் மாட்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, குமாரசாமி said:

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு பலச்சமனிலையாக உள்ளது, அது செய்யும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள்தான் பிரச்சினையாக உள்ளது, அதனாலேயே அமெரிக்காவிற்கும் அது ஒரு தலையிடியாக இருந்தாலும் இஸ்ரேலை புறந்தள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, vasee said:

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு பலச்சமனிலையாக உள்ளது, அது செய்யும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள்தான் பிரச்சினையாக உள்ளது, அதனாலேயே அமெரிக்காவிற்கும் அது ஒரு தலையிடியாக இருந்தாலும் இஸ்ரேலை புறந்தள்ள முடியவில்லை.

ஒரு முகநூல் பதிவு உங்களுக்காக: 

//யூதர்களின் மத நம்பிக்கையின்படி இறை தூதரின் (டேவிட் மாமன்னரின் மீள்பிறப்பு) வரவுடன் ஜெருசலேமில் (தற்போது இஸ்லாமியர்களின் புனித அல்-அக்ஸா மசூதி இருக்குமிடத்தில்) யூதர்களின் கோவில் மீளவும் எழுப்பப்படுமெனவும், அப்போது உலகில் வாழும் யூதர்கள் அனைவரும் அவர்களுக்கான சத்திய பூமிக்கு திரும்பி அழைக்கப்படுவார்கள் எனவும் உலகம் எங்கும் அப்போது சமாதானம் தழைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வு விரைவில் நடைபெறவிருக்கிறது எனவும் இவ்வுலக யூதர்களின் வரவிற்காக அகன்ற இஸ்ரேல் உருவாக்கப்படுகிறது எனவும் இதன் பொருட்டு நடைபெறும் மனித அழிவுகள் எல்லாமே கடவுளின் சித்தம் என எண்ணுவதால் யூதர்கள் மனக்குழப்பம் அடையத் தேவையில்லை என அவர்களின் மத போதகர்கள் போதனை செய்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. மேலே கூறப்பட்ட இளம்பெண்ணின் உணர்ச்சி வசப்பட்ட கூற்றும் இதையொட்டியே அமைந்திருக்கிறது. சிரியாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இஸ்ரேல் ஏற்கெனவே சிரியாவிடமிருந்து 1967 போரில் கைப்பற்றிய கோலான் மலைப் பிரதேசத்தையும் தாண்டி மேலும் உள்ளே நகர்ந்துகொண்டிருப்பது இத் திட்டத்தின் பிரகாரமே.// முழுமையான கட்டுரைக்கு:

சிரியா: தேவதூதரின் வரவிற்குத் தயாராகுங்கள்! - 

https://www.facebook.com/share/p/1AxcsSfD2Q/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, vasee said:

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு பலச்சமனிலையாக உள்ளது,

இஸ்ரேல் பல சமநிலையாக உள்ளது என்பதை எதை வைத்து கூறுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/12/2024 at 21:54, குமாரசாமி said:

ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களுக்குள் ஏதோ ஒரு சிறிய ஒற்றுமையுடன் பல சங்கதிகளை செய்துகொண்டிருக்கின்றார்கள் என எண்ணத் தோன்றுகின்றது.

அமரிக்க அதிபர் தேர்தல் திரியில், டிரம்ப் வெண்ட பின் நான் எழுதியதை வாசிக்கவும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.