Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார்.

கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.  

இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார்.

 தமிழ் மக்களின் நெருக்கடிகள்

இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன் | Sri Lankan Mp Sumanthiran Visits Ottawa

இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/sri-lankan-mp-sumanthiran-visits-ottawa-1734244102?itm_source=parsely-detail

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, பெருமாள் said:

எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

large.IMG_7890.jpeg.902ca635b9fa87d8aa47

  • Like 2
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7890.jpeg.902ca635b9fa87d8aa47

 தலைப்பைப் பார்த்துவிட்டு “ ஏன் கனடாவிலும் நாலைஞ்சு பார் திறக்க இடம்பார்க்கப் போறாரோ?” என்று எழுத நினைத்தேன். வந்து பார்த்தால் கவி அருணாசலம் அய்யாவின் கருத்தோவியம் என் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கொன்னமோ இந்தச் செய்தின் சாரத்தில் நம்பிக்கை இல்லை. 

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தேர்தலின் பின்னர் இவர்கள் எவரையும் சந்தித்ததாகத் தகவல் இல்லை. நிலைமை அப்படி இருக்கையில் கனேடிய வெளிவிவகார அமைச்சு அழைத்திருப்பதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

சிலவேளைகளில் ஹரியைச் சந்திக்க இவர்களாகவே நேரம் கேட்டிருக்கலாம். 

😁

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Kapithan said:

எனக்கென்னவோ சுமத்திர கள்ளனும் இந்த பார் கள்ளனும் உள்ளுக்குள் டீல் போட்டு விளையாட்டு  காட்டுகினம் போல் உள்ளது .

இந்த எட்டு நாளைக்குள் எண்ணத்தை செய்து விடபோகிறார் ?

அநேகமா இலங்கை  தமிழ் அரசியல்வாதிகளின்  பினாமி சொத்து லண்டனிலும் கனடாவிலும் தான் குவிந்து கிடக்கின்றது போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_7890.jpeg.902ca635b9fa87d8aa47

என்னையா இது?

********* தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣.

இது முறையா? தர்மம்தானா?🤣

பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என.

சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி.

முன்னொரு காலத்திலே.... சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்....
ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில், 
அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து, 
கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை  பற்றி கதைத்ததாக 
"றீல்" விட்டதை  நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. 

அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன்  கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.
அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.
சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது. 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, தமிழ் சிறி said:

இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி.

முன்னொரு காலத்திலே.... சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்....
ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில், 
அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து, 
கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை  பற்றி கதைத்ததாக 
"றீல்" விட்டதை  நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. 

அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன்  கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.
அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.
சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது. 

சுமந்திரன் பிராண்ட் பேதி மாத்திரை நன்றாகத்தான் வேலை செய்கிறது சிறியருக்கு.  

எனக்கென்னமோ சிறியருடைய பெயரில் கிளிநொச்சியில் பார் இருப்பதாக ஒரு சந்தேகம். சிறியர் என்றவுடன் விழுந்தடித்து ஓடி வருகிறார். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது சுமந்திர டீல்...அதாவது எம்.பி யாக்கும் டீல்...தெருக்கூத்து நடத்தும்தமிழ் அமைப்பு பெரும் விலை கொடுக்கவும் தயாராக் இருக்கிறது..இதனை விட இன்னுமொமொரு புது அமைப்பும்தொடங்கப்பட்டிருக்கிறது...இன்னும் சுமன் ஆதரவுப் பெரும் தலைகளும் காத்திருகின் றனர்..கூட வாறவரும் சுமன் விசுவாசி...பாவம் சிறீ .. போகும்போது கோவணத்துடன் 50 பொறின் சரக்கு போத்திலையும் கொண்டுபோய்..  பாரில் போட்டு விற்க வேண்டியதுதான்😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி.

முன்னொரு காலத்திலே.... சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்....
ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில், 
அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து, 
கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை  பற்றி கதைத்ததாக 
"றீல்" விட்டதை  நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. 

அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன்  கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.
அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.
சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது. 

இனி விசர் சுமத்திரன் கனடா பக்கம் போனால் உடுப்பை கழட்டி விட்டு அடி போட்டுத்தான் அனுப்புங்கள் .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, alvayan said:

இது சுமந்திர டீல்...அதாவது எம்.பி யாக்கும் டீல்...தெருக்கூத்து நடத்தும்தமிழ் அமைப்பு பெரும் விலை கொடுக்கவும் தயாராக் இருக்கிறது..இதனை விட இன்னுமொமொரு புது அமைப்பும்தொடங்கப்பட்டிருக்கிறது...இன்னும் சுமன் ஆதரவுப் பெரும் தலைகளும் காத்திருகின் றனர்..கூட வாறவரும் சுமன் விசுவாசி...பாவம் சிறீ .. போகும்போது கோவணத்துடன் 50 பொறின் சரக்கு போத்திலையும் கொண்டுபோய்..  பாரில் போட்டு விற்க வேண்டியதுதான்😎

அப்படியே மொன்றியல் பக்கம் வீடுகளில் போய் நின்றார் என்றால் வசதியற்ற பிள்ளைகளை படிப்பிக்க காசைக் கேட்டால் பொக்கற்றை நிரப்பி அனுப்புவார்கள்..முன்பு ஒரு முறை வந்த போது அப்படித் தான் நடந்து என்று அறிந்து கொண்டேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பெருமாள் said:

இனி விசர் சுமத்திரன் கனடா பக்கம் போனால் உடுப்பை கழட்டி விட்டு அடி போட்டுத்தான் அனுப்புங்கள் .

கனடாவில் இருப்போர் எல்லோரும் பைத்தியக்காறர்  அல்லவே. 

கனடாவில் பாடகர் சிறீநிவாசுக்கு முட்டையடித்த, பள்ளிக்கூடம்  போகாத,  நாகரீகம் அடையாத ஒரு கூட்டம் உண்டு. அந்தக் கூட்டம் யார் போனாலும் முட்டையடிக்கும். ஆனால் அதிகாரத்திற்கு கூழைக் கும்பிடு போடும் சுயநலக் கூட்டம்.

இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? 

11 minutes ago, யாயினி said:

அப்படியே மொன்றியல் பக்கம் வீடுகளில் போய் நின்றார் என்றால் வசதியற்ற பிள்ளைகளை படிப்பிக்க காசைக் கேட்டால் பொக்கற்றை நிரப்பி அனுப்புவார்கள்..முன்பு ஒரு முறை வந்த போது அப்படித் தான் நடந்து என்று அறிந்து கொண்டேன்.

எல்லா அரசியல்வியாதிஸ்தர்களும் இதைச் செய்கிறார்கள். இதில் இனம் மதம் பிரதேசம் என்று வேறுபாடு எதுவும் இல்லை. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

எனக்கொன்னமோ இந்தச் செய்தின் சாரத்தில் நம்பிக்கை இல்லை. 

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தேர்தலின் பின்னர் இவர்கள் எவரையும் சந்தித்ததாகத் தகவல் இல்லை. நிலைமை அப்படி இருக்கையில் கனேடிய வெளிவிவகார அமைச்சு அழைத்திருப்பதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

சிலவேளைகளில் ஹரியைச் சந்திக்க இவர்களாகவே நேரம் கேட்டிருக்கலாம். 

😁

🤣

இப்போ  நிலைமை சரியில்லை தான்
கனேடிய தூதுவர் இலங்கை அரச அதிகாரிகளை   சந்தித்து ஒத்துழைப்பாதாக சொன்னாராம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பெருமாள் said:

இனி விசர் சுமத்திரன் கனடா பக்கம் போனால் உடுப்பை கழட்டி விட்டு அடி போட்டுத்தான் அனுப்புங்கள் .

இப்படி ஒவ்வொருவரும்  out of box சிந்திக்கும் மனிதர்களை அடிப்பேன் வேட்டியை கழற்ருவேன் என்று சண்டித்தனம் செய்வதால்த் தான் நம் அரசியல் வியாதிகளாக பள்ளிக்கூட அதிபரும், மருத்துவர் என்ற பெயரில் தெளிந்த புதியற்ற ஒருவரும் எமக்கு கிடைத்து இருக்கிறார்கள். 

படித்த பண்பான மனிதர்கள் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த விடாத காரணத்தால்த் 1980 களில் இருந்து எமக்கு இந்த நிலை 

இந்த நிலை இனிமேலும் தொடருமே தவிர முன்னேற்றத்துக்கு வாய்ப்பில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பகிடி said:

அரசியல் வியாதிகளாக பள்ளிக்கூட அதிபரும், மருத்துவர் என்ற பெயரில் தெளிந்த புதியற்ற ஒருவரும் எமக்கு கிடைத்து இருக்கிறார்கள். 

அதுக்கு காரணமே நீங்கள் தானே விளங்கா விட்டால் ஓசி விசுகோத்து க்கு யார் படிக்க போனார்கள் ?

12 minutes ago, பகிடி said:

இப்படி ஒவ்வொருவரும்  out of box சிந்திக்கும் மனிதர்களை அடிப்பேன் வேட்டியை கழற்ருவேன் என்று சண்டித்தனம் செய்வதால்த் தான் நம் அரசியல் வியாதிகளாக பள்ளிக்கூட அதிபரும், மருத்துவர் என்ற பெயரில் தெளிந்த புதியற்ற ஒருவரும் எமக்கு கிடைத்து இருக்கிறார்கள். 

out of box மைன்ட் என்றால் விளக்கமாக சொல்லுங்க பார்கலாம் பேராண்டி ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனேடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை சந்தித்த சிறீதரன்

December 21, 2024
0
sritharn-mp.jpg
கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
டொரொன்டோ வில் (Toronto) நேற்று வெள்ளிக்கிழகை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
ஈழத்தமிழர் விவகாரங்கள் சார்ந்து இருதரப்புக்குமிடையில் ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
471166153_10226722857122024_203955163938
 
https://akkinikkunchu.com/?p=304156

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 15/12/2024 at 23:32, பெருமாள் said:

out of box மைன்ட் என்றால் விளக்கமாக சொல்லுங்க பார்கலாம் பேராண்டி ?

சுமத்திரன் விசுவாசிகளுக்கு நாலு இங்கிலுசில் அடித்து விட்டால் காணும் எதிராளி படுத்திடுவான் என்ற நினைப்பு .

out of box மைன்ட் என்றால்

கொஞ்சம் பழைய கதை தான்!

ஒரு பெருந்தனக்காரர் காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் காரின் ஒரு டயர், டியூப் வெடித்து விட்டது. அதனை கழற்றி காரின் டிக்கியில் இருக்கும் உபரி சக்கரத்தை எடுத்து பஞ்சரான டயரை கழற்றிக்கீழே வைத்துவிட்டு வேறு ஒரு டயரை பொருத்தும் சமயம் அங்கிருந்து நான்கு பொருத்தும் நட்டுக்கள் கால் இடறி ஒரு பெரிய சாக்கடைக்குள் விழுந்து விட்டது. எடுக்க இயலாத ஆழம் கூட!

இவர் என்ன செய்வதென்று தெரியாமல் கையைபிசைந்து   கொண்டிருந்த நேரம், அவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் வாசலில் இருந்து ஆசாமி நான் ஒரு உங்களுக்கு உதவட்டுமா?என்று கேட்டான்.

இவன் என்ன உதவப் போகிறான்? என்று அலட்சியமாக நினைத்த முதலாளி இருந்தாலும் வேறு வழியில்லாமல் சரி சொல்லு? என்கிறார்.நன்றாக இருக்கும் மூன்று டயர்களிலிருந்தும் ஒவ்வொரு நட்டினை எடுத்து நான்காவது சக்கரத்துக்கு பொருத்திச் செல்லுங்கள். அருகில் இருக்கும் ஊர் வந்தவுடன் நான்கு புதிய நட்டுக்கள் வாங்கி பொருத்திக் கொள்ளுங்கள் என்றார்.

அதவாதுஒரு பிரச்சனையை வழக்கமான முறையில் சிந்தித்து மேலும் பிரச்னையை உருவாக்கி கொள்ளாமல் சமயத்துக்கு ஏற்ப சிந்தித்து இலகுவான வழிமுறைய கண்டு பிடித்தல் இன்னுமொரு உதராணம் .

அது மிகவும் மிகப்பிரபலமான விமான நிலையம். அனைத்து வானூர்திகளும் சரியான நேரத்தில் புறப்படும் மற்றும் வந்து சேரும்.ஆக அங்கே பிரச்சினை என்ன வென்றால்,

பயணிகள் அனைவரும் விமானத்தில் இறங்கி தங்களுடைய சுமைகளை எடுக்க அதற்கான இடத்திற்க்கு வந்து விடுகிறார்கள்.ஆனால் அவர்களுடைய சுமைகள் வருவதற்க்கு அதிகம் நேரம் ஆகிறது.

இதனால் பயனிகள் பொறுமை இழந்து விமான நிலைய அதிகாரிகளுடன் சண்டையிடுகிறார்கள்.

இதற்கு தீர்வு கான விமான நிலைய அதிகாரிகள் பல்வேறு விதமான கலந்தாய்வு மூலம் சில புதிய முயற்ச்சியில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக புதிய அதி நவீன இயந்திரம் வாங்குதல். அதிக பணியாளர்களை பணிக்கு அமர்த்துதல் ….

ஆனாலும் பயணிகள் பிரச்சினை தீரவில்லை.மேலும் பல பயணிகளின் புகார்கள் அதிகரித்து கொண்டிருந்தது. இதற்கான தீர்வுதான் என்ன என்று சிந்தனை செய்யும்பொழுது அங்கே ஒரு மாற்று சிந்தனையாளரின் யோசனை என்னவெனில் பயணிகள் விமானத்தில் இறங்கி தங்களுடைய பயணச்சுமைகளை எடுக்கும் இடத்தின் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தவது (Zigzag way) புதிய பாதை அமைப்பது.இதனால் பயணிகள் தங்ளுடைய பயணச்சுமைகள் இருக்கும் இடத்திற்க்கு வருவதற்கு அதிக நேரமாகும் .இதற்குள் நாம் அவர்களுடைய பயணச்சுமைகளை அதற்கான இடத்திற்க்கு கொண்டு வந்து விடலாம் என்ற அந்த யோசனையும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு பயணிகள் பிரச்சினையும் தீர்ந்தது.

அதுசரி இந்த out of box மைன்ட்க்கும் உங்கள் விசர் சுமத்துரனுக்கும் என்ன சம்பந்தம் ?

இதுவரை அப்படி எந்த அறிகுறியுமே காணவில்லையே கடந்த 14வருடங்களில் ?

Edited by பெருமாள்
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

கனேடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை சந்தித்த சிறீதரன்

December 21, 2024
0
sritharn-mp.jpg
கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
டொரொன்டோ வில் (Toronto) நேற்று வெள்ளிக்கிழகை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
ஈழத்தமிழர் விவகாரங்கள் சார்ந்து இருதரப்புக்குமிடையில் ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
471166153_10226722857122024_203955163938
 
https://akkinikkunchu.com/?p=304156

  தமிழீழ கோழி இட்ட முட்டைகளை எதிர்காலத்தில் முட்டையடிக்க கனடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான  உடன்படிக்கையில் இருதரப்பும் கைச்சாத்திட்டனர்.   

  • Downvote 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.