Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?

Kumaresan MDec 31, 2024 14:44PM
XYHkEn9e-film.jpg

தெலுங்கில் புஷ்பா 2 படம் மட்டுமே 1,500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் திரையுலகத்தினர் கவலை அடைந்துள்ளனர். 

நடிகர், நடிகைகளின் சம்பளம் குறைவாகவுள்ள மலையாள திரையுலகத்தில் இந்த ஆண்டு 600 முதல் 700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ் சினிமாவின் நிலை அதை விட மோசமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. 

2024 ஆம் ஆண்டு 241 தமிழ்ப்படங்கள் வெளியான நிலையில் 223 படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. 3 ஆயிரம் கோடி மதிப்பில் 241 படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஈதில், 2 ஆயிரம் கோடி தான் வசூலாக கிடைத்துள்ளது. 18 படங்கள் மட்டுமே திருப்திகரமான வசூலை கொடுத்துள்ளன.

வேட்டையன், தி கோட், அமரன், மகராஜா, அரண்மனை4 ,மெய்யழகன் போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களான வாழை, டிமாண்டி காலனி, கருடன், ரோமியோ, அந்தகன் போன்ற படங்களும் வெற்றி பெற்றதாக எடுத்துக் கொள்ளலாம். 400 கோடி மதிப்புள்ள சிறிய பட்ஜெட் படங்கள் 186 வெளி வந்துள்ளன. இவற்றில் லப்பர் பந்து, பேச்சி போன்ற படங்களும் நல்ல வசூலை பெற்றன. இந்த படங்கள் மக்கள் மத்தியில் தரமான படமாகவும் பார்க்கப்பட்டது.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கே. ராஜன் கூறியிருப்பதாவது, ‘இந்த ஆண்டு திரைக்கு வந்த 241 படங்களில் 18 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன. இது வெறும் 7 சதவிகிதம்தான் என்பது வருந்தத்தக்கது. 223 படங்கள் தோல்வியடைந்திருப்பதால் 1000 கோடிக்கு தமிழ் சினிமா இழப்பை சந்தித்துள்ளது. தரமான முறையில் கதையம்சம் கொண்ட படங்கள் வெளி வந்தால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்ல திருப்பம் ஏற்படும்“ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://minnambalam.com/cinema/1000-croe-loss-in-tamil-industries-this-year/

  • கருத்துக்கள உறவுகள்

Congratulations Gif - IceGif

சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். animiertes-gefuehl-smilies-bild-0234
"கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், 
நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், 
சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் 
இனி தூக்குப் போட்டு சாவுங்க.  animiertes-gefuehl-smilies-bild-0415   animiertes-gefuehl-smilies-bild-0090

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

Congratulations Gif - IceGif

சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். animiertes-gefuehl-smilies-bild-0234
"கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், 
நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், 
சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் 
இனி தூக்குப் போட்டு சாவுங்க.  animiertes-gefuehl-smilies-bild-0415   animiertes-gefuehl-smilies-bild-0090

மகிழாதிங்கையா! அவளவிலை தி.மு.க அரசு விடுமா? மானியம் அது இது என்று கொடுத்துக் காத்துவிடும். பிறகு அவிங்க பிழைப்பு என்னாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Congratulations Gif - IceGif

சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். animiertes-gefuehl-smilies-bild-0234
"கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், 
நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், 
சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் 
இனி தூக்குப் போட்டு சாவுங்க.  animiertes-gefuehl-smilies-bild-0415   animiertes-gefuehl-smilies-bild-0090

லைக்காகாரனுக்கு தலை வைக்க இடம் கொடுத்தபோதே தெரிந்தது தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

லைக்காகாரனுக்கு தலை வைக்க இடம் கொடுத்தபோதே தெரிந்தது தானே. 

லைக்கா மீது அபிமானமில்லாமல் இருக்கலாம், ஆனால் வசூல் தராத படங்களுள் எத்தனை லைக்காவினுடையது என்று தேடிப் பார்த்தீர்களா? வேட்டையன் வெற்றிப் படம் (இரசனை ரீதியில் குப்பை) என்று வந்திருக்கிறது. லைக்கா தானே தயாரிப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

லைக்கா மீது அபிமானமில்லாமல் இருக்கலாம், ஆனால் வசூல் தராத படங்களுள் எத்தனை லைக்காவினுடையது என்று தேடிப் பார்த்தீர்களா? வேட்டையன் வெற்றிப் படம் (இரசனை ரீதியில் குப்பை) என்று வந்திருக்கிறது. லைக்கா தானே தயாரிப்பு?

நீங்கள் சொல்வது ஒரு படம் 

மீதி???

நான் கேள்விப்பட்டவரை லைக்கா நிறுவனம் மட்டுமே இந்தளவு பணத்தை இழந்துள்ளது. இதனைவிட பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய் விட்டனர். சாதாரணமாக இருந்த தமிழ் சினிமாவை பிரமாண்ட படுத்துகிறேன் என்று புறப்பட்ட கோபம் மட்டுமே எனக்கு லைக்கா மீது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மிக விரைவாக அழியட்டும் .

முதலில் ஒழுங்கான கதையமைப்பு கிடையாது இன்னமும் நஞ்சு என்று எழுதிய போத்தலை காட்டினால் தான் விளங்கி கொள்ளும் ரசிக குஞ்சு மணிகள் இன்னை வரைக்கும் நீச்சல் குளத்தில் பாயும் போது வண்டியட விழுவது ஒரு பாய்ச்சல் என்று காட்டுவது ஒரு தமிழ் படத்தில் கூட முறையான நீச்சல் பாய்தல் கிடையாது இப்படி கேணத்தனமான காட்சிகளை வைத்து விட்டு படம் ஓடா விட்டாலும் ஓடுது அள்ளுது என்று மீடியாவில் அள்ளி விட்டு கடைசியில் ஒப்பாரி வைப்பது அவர்களின் வாடிக்கை .

netflix போன்றவை ஆங்கில படங்களுக்கும் தமிழ் ஆக்கம் செய்து வெளியிடுகிறார்கள் .

இன்னமும் விஜயையும் அசித்தையும் கிழட்டு  ரசனியையும் நம்பினால் இதுதான் வழி .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நீங்கள் சொல்வது ஒரு படம் 

மீதி???

நான் கேள்விப்பட்டவரை லைக்கா நிறுவனம் மட்டுமே இந்தளவு பணத்தை இழந்துள்ளது. இதனைவிட பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய் விட்டனர். சாதாரணமாக இருந்த தமிழ் சினிமாவை பிரமாண்ட படுத்துகிறேன் என்று புறப்பட்ட கோபம் மட்டுமே எனக்கு லைக்கா மீது. 

கணக்கைக் கவனியுங்கள்: 
2024 இல் வெளியான 241 தமிழ்படங்களில் லைக்கா தயாரித்த படங்கள் 4 மட்டுமே. அவற்றில் 2 (வசூல் ரீதியில்) வெற்றிப் படங்கள் என்று செய்தியிலேயே இருக்கிறது (வேட்டையன், அரண்மனை 4). எனவே லைக்காவுக்கு 50% வசூல் வெற்றிப் படங்கள்.

ஆனால், லைக்கா எடுத்த எல்லாப் படங்களும் பெரிய செலவுப் படங்கள். எனவே, மொத்தமாக லைக்கா இழந்த தொகை ஏனையோரை விட அதிகமாக இருப்பது அதிசயமல்ல.

குறைந்த செலவுப் படங்களில் பெரும்பாலானவை போட்ட காசையே எடுக்க முடியாமல் வசூல் தோல்வி. இந்தக் குறைந்த செலவுப் படங்களில் ஒன்றையும் லைக்கா தயாரிக்கவில்லை. ஏனையோரின் தோல்விகளுக்கும் லைக்கா காரணம் என்ற முடிவு எங்கேயிருந்து வருகிறதெனப் புரியவில்லை.  
 
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

1- சிறிய படங்கள் கோடிக் கணக்கில் அடி வாங்குவதில்லை 

2- இந்த வருடத்தில் லைக்கா நிறுவனம் ஆயிரம் கோடியை இழந்தது என்று எங்கும் நான் குறிப்பிடவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக இந்திய சினிமாக்கள் எந்த வருடமும் இழந்து கொண்டே இருக்கின்றன. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று இழப்பு எல்லா இடமும் நடந்து கொண்டே இருக்கின்றன. 70ம் ஆண்டுகளில், 80ம் ஆண்டுகளில்  மொழிவாரியாக 100 படங்கள் என்ற அளவில் வந்து கொண்டிருந்த போதும் பத்து படங்கள் தான் வென்றன, 90 படங்கள் தோற்றன.

அப்பொழுதே தயாரிப்பாளர் துரை என்று நினைக்கின்றேன். பின்னர் ஒரு கோவில் தர்மம் வாங்கிக் கொண்டிருந்தார். மணிரத்தினத்தின் சகோதரர், ஜீ.வி, தற்கொலை செய்துகொண்டார். ஏவிஎம்மே இனிமேல் முடியாது என்று ஒதுங்கிக் கொண்டனர். அட்சயபாத்திரம் போல இருந்த, அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஆர்.பி. சௌத்திரியும் ஒதுங்கினார்.

இந்திய சினிமா உலகம் என்பது லாஸ் வேகாஸ் போன்றதே. லாஸ் வேகாஸில் இறுதியில் வென்றவர்கள் எவருமில்லை என்பார்கள்.

ஷாருக்கின் 'திவான்', 'பதான்' இரண்டும் வந்து தான் ஹிந்திப் படங்களிற்கு இன்னும் சந்தை இருக்கின்றது என்பது தெரியவந்தது. அதுவரை சில வருடங்களாக பாழும்கிணற்றில் விழுந்தது போலக் கிடந்தது ஹிந்தி திரையுலகம்.

400 கோடிகள் செலவென்றால், 800 கோடிகள் வசூலாக வந்தால் தான் போட்ட முதல் கையில் வரும் என்ற நிலைதான் இன்று. 800 கோடிகள் மதிப்புள்ள படைப்பாளிகள், கலைஞர்கள் என்று தமிழில் எவரும் இல்லை. படம் வெளியாகி அடுத்த நாள், மூன்றாம் நாள், முதல் வாரம் என்று அறிக்கைகளில் வெற்றி கொண்டாடுவார்கள். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் பின், தாங்கள் இழந்து விட்டோம் என்ற உண்மையை விநியோகஸ்தர்கள் வெளியே சொல்லிக் கொள்கின்றனர்.

தீராத கவர்ச்சி, கறுப்பு பணம் போன்றன சினிமாவை அழியாமல் கொண்டு செல்கின்றன. சரவணாஸ் 'லெஜெண்ட்' போல சிலர் வந்து சினிமாவை வாழவைப்பார்கள். லைக்கா போன்ற நிறுவனங்களும் வாழவைப்பார்கள்.

'பொன்னியின் செல்வன்' வெளிவந்த போது, அதுவரை வெளியாகியிருந்த லைக்காவின் எந்தப் படங்களும் இலாபத்தை சம்பாதிக்கவில்லை என்று ஒரு செய்தியும் வந்திருந்தது. ஆனால், அவர்களின் பல படங்களை பெரும் வெற்றிப்படங்களாக அவை வெளியான காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சினிமா என்பது திரையில் மட்டும் தான் நடிப்பு என்றில்லை, திரைக்கு வெளியேயும் சம்பந்தப்பட்டவர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்திய மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒரு நாயக பிம்பம் என்றும் தேவையாக இருக்கின்றது. ஒரு சின்ன விலங்கு உருளையில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பது போல சமூகமும், திரை உலகமும் ஓடிக் கொண்டிருக்கின்றது.         

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கோடி நஷ்டம் என்று வெளியில் சொன்னாலும் பலர் படம் எடுப்பது கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்கவும், நஷ்டக் கணக்கை காட்டி வியாபாரதில் அரசுக்கு கட்ட வேண்டிய வரியை குறைக்கவும் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

1- சிறிய படங்கள் கோடிக் கணக்கில் அடி வாங்குவதில்லை 

2- இந்த வருடத்தில் லைக்கா நிறுவனம் ஆயிரம் கோடியை இழந்தது என்று எங்கும் நான் குறிப்பிடவில்லை. 

1-இலட்சக் கணக்கில் செலவு செய்தால் எப்படி கோடிக் கணக்கில் அடி வாங்க முடியும் விசுகர்? போட்ட முதல் வராவிட்டால் நஷ்டம். அவ்வளவு தானே?

2-நீங்கள் சொன்னதாக நான் எங்கும் குறிப்பிடவில்லை. செய்தி இந்த ஒரு ஆண்டு பற்றியது. 2014 இல் தொடங்கிய லைக்கா சினிமா 10 ஆண்டுகளில் ஆயிரம் கோடியை இழந்திருக்கிறது என்று நீங்கள் வாசித்த செய்தியை இங்கே  இணைத்தால் அதையும் அலசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

1- லட்சக்கணக்கில் எல்லாம் இன்றைய நிலையில் படம் தயாரிக்க முடியுமா என்ன?

2- வாசித்ததாக எங்கும் நான் குறிப்பிடவில்லை. கேள்விப்பட்ட வரையில் என்று தான் குறிப்பிட்டேன். அதற்காக சொன்னவரை கொண்டு வந்து இங்கே நிறுத்த முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பகிடி said:

இவ்வளவு கோடி நஷ்டம் என்று வெளியில் சொன்னாலும் பலர் படம் எடுப்பது கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்கவும், நஷ்டக் கணக்கை காட்டி வியாபாரதில் அரசுக்கு கட்ட வேண்டிய வரியை குறைக்கவும் தான் 

👍.............

பெரிய நிறுவனங்களுக்கு நீங்கள் சொல்வது பொருந்தும். உதாரணமாக, சண் பிக்சர்ஸ் இப்படிச் செய்யமுடியும். ஆனால், விஷால் போன்ற ஒருவர் பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் பல கோடிகளை கடன் வாங்கி படமெடுத்து நஷ்டப்படும் போது, அந்தக் கடன் விஷாலின் வாழ்க்கையை பாதித்துவிடுகின்றது. இதைப் போன்றே ஊரிலிருந்து அதுவரை தேடியதை எல்லாம் சினிமாக் கனவுகளுடன் கொண்டு வரும் பல தயாரிப்பாளர்கள். நடிகர் சசிகுமார் இன்னுமொரு உதாரணம்.

ஆனால், சினிமா எவருக்காகவும் நிற்பதில்லை, அது கால வெள்ளத்தில் மூழ்காமல், தேவையான மாற்றங்களுடன், ஓடிக் கொண்டே இருக்கும். மனிதர்கள் தான் மூழ்கிப் போகின்றனர்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழரின் அரசியலை மட்டுமல்ல அவர்களின் பொருளாதாரத்தையும் அமிக்கிற வேலையைத்தான் செய்திருக்கிறது.இனியும் செய்யும்.தமிழக சினிமாவல் நாயக விம்பம் கட்டமைக்கப்படுவது உடைக்கப்படவேண்டும். எந்த ஒரு பெரிய சினிமா வந்தாலும் அதை வெளியிடுகிற உரிமையை திமுகவின் ரேட் ஜெயண்ட் வெருட்டி பறித்து விடுகிறது. அவர்கள் இலாபத்தை எடுத்துக்கொண்டு நட்டத்தொகையைக் காட்டுவார்கள். கூவததை சுத்தமாக்குவதற்கு முதலிட்ட பணத்தை முதலை இருப்பதலால் சுத்தமாக்க முடியவில்லை என்று முதலிட்ட முதலை விழுங்கிய  பெரும் முதலை கருணாநிதியின் குமடும்பம்தான் தமிழ்நாட்'டையும் தமிழ்த்திரையுலகையும் ஆட்சி செய்கிறது. ஆனானப்பட்ட கமலகாசனே தன்படம் ஓடவேண்டும் என்பதற்காக திமுகவிடம் சரணடைந்தவர்தானே. முதலில் நடிகர்களுக்கு சம்பளததை கண்மூடித்தனமாக கொடுப்பதை நிறுத்த வேண்டும். அது ஒரு தொழில் அவர்களுக்கு நியாமாக ஒரு தொகையைக் கொடுக்கலாம்.மிகவும் கடினமான  வேலைகளைச் செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு ஒரு அடிப்படைச்சம்பளமே இல்லை. ஆனால் இந்த நடிகர்களுக்கு ஏன் இந்தத் தொகை கொடுக்க வேணடும். அவர்களுக்குப் பெரிய தொகையைப் பேசி அவர்களை ஒப்பந்த் செய்து விட்டு அவர்களுக்காக கதையை எழுத வெளிக்கிட்டால் தரமான கதைம்சம் உள்ள படங்கள் எப்படி வெளிவரும்.தரமானரசனை  உள்ள ரசிகர்கள் எப்படி உருவாகுவார்கள்.அந்தக் காலத்தில் படங்கள் சிறந்த கதை அமைப்பு பொழுதுபோக்கு அம்சகோடு சிறந்த பாடல்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது ரஜனிக்கு விஜைக்கு என்று கதைகள் குறிப்பிபிட்டவகையில் ஒரே மாதிரியாக இருந்தால் எப்படி மக்கள் இரசிப்பார்கள்.முன்பு இந்தியாவில்  பெரிய அளவில் வெற்றி பெறாத கே பாலசந்தரின் படங்கள்  அதுவும் கறுப்பு வெள்ளைப் படங்கள் இலங்கையில் நல்ல வசூலைப்ப்பெற்றது வரலாறு. ஆனால் இப்போது இலங்கை ரசிகர்கள் தமிழ்நாட்டை விட மோசமான ரசனைகளுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கோடி இந்திய ரூபாய் என்றால் 93 மில்லியன் பவுன்ஸ் அல்லவா?

அவ்வளவு பெரிய தொகையாக தெரியவில்லையே?

8 hours ago, கிருபன் said:

400 கோடி மதிப்புள்ள சிறிய பட்ஜெட் படங்கள் 186 வெளி வந்துள்ளன

அதாவது சராசரியாக 2 கோடியில் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்கலாம்?

அதாவது 186,000 பவுண்ஸ்.

நான் கணக்கு பிழை விடுகிறேனோ?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

ஆயிரம் கோடி இந்திய ரூபாய் என்றால் 93 மில்லியன் பவுன்ஸ் அல்லவா?

அவ்வளவு பெரிய தொகையாக தெரியவில்லையே?

அதாவது சராசரியாக 2 கோடியில் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்கலாம்?

அதாவது 186,000 பவுண்ஸ்.

நான் கணக்கு பிழை விடுகிறேனோ?

'லப்பர் பந்து', 'நிறங்கள் மூன்று' போன்ற படங்களை எடுப்பதற்கு சில கோடிகளே, ஐந்து கோடிகள் அல்லது குறைவாகவே, போதும் என்று நினைக்கின்றேன். இவற்றை விடவும் குறைந்த செலவில் பல படங்கள், நூற்றுக் கணக்கில், வந்திருக்கின்றன போல............ நாம தான் பார்க்காமல் விட்டுவிட்டோம்..........

நீங்கள் சொல்லியிருக்கும் ஆயிரம் கோடி கணக்கு சரியே. நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை, ஆனால் தனிப்பட்ட சிறிய தயாரிப்பாளர்களின், விநியோகஸ்தர்களின் நிதிநிலைக்கு இது மிகவும் அதிகமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

கணக்கைக் கவனியுங்கள்: 
2024 இல் வெளியான 241 தமிழ்படங்களில் லைக்கா தயாரித்த படங்கள் 4 மட்டுமே. அவற்றில் 2 (வசூல் ரீதியில்) வெற்றிப் படங்கள் என்று செய்தியிலேயே இருக்கிறது (வேட்டையன், அரண்மனை 4). எனவே லைக்காவுக்கு 50% வசூல் வெற்றிப் படங்கள்.

ஆனால், லைக்கா எடுத்த எல்லாப் படங்களும் பெரிய செலவுப் படங்கள். எனவே, மொத்தமாக லைக்கா இழந்த தொகை ஏனையோரை விட அதிகமாக இருப்பது அதிசயமல்ல.

குறைந்த செலவுப் படங்களில் பெரும்பாலானவை போட்ட காசையே எடுக்க முடியாமல் வசூல் தோல்வி. இந்தக் குறைந்த செலவுப் படங்களில் ஒன்றையும் லைக்கா தயாரிக்கவில்லை. ஏனையோரின் தோல்விகளுக்கும் லைக்கா காரணம் என்ற முடிவு எங்கேயிருந்து வருகிறதெனப் புரியவில்லை.  
 
அரண்மனை 4 லைக்கா தயாரிக்கவில்லை. அருண்குமார் நடித்த மிஷன் சாப்டெர் 1 , வேட்டையன், இந்தியன் 2, லால்சலாம் ஆகிய 4 படங்களைத்தான் லைக்கா தயாரித்தது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

அரண்மனை 4 லைக்கா தயாரிக்கவில்லை. அருண்குமார் நடித்த மிஷன் சாப்டெர் 1 , வேட்டையன், இந்தியன் 2, லால்சலாம் ஆகிய 4 படங்களைத்தான் லைக்கா தயாரித்தது

திருத்தியமைக்கு நன்றி. சாப்ரர் 1 ஐ அரண்மனை 4 ஓடு குழப்பிக் கொண்டேன்.
7 hours ago, விசுகு said:

1- லட்சக்கணக்கில் எல்லாம் இன்றைய நிலையில் படம் தயாரிக்க முடியுமா என்ன?

2- வாசித்ததாக எங்கும் நான் குறிப்பிடவில்லை. கேள்விப்பட்ட வரையில் என்று தான் குறிப்பிட்டேன். அதற்காக சொன்னவரை கொண்டு வந்து இங்கே நிறுத்த முடியாது. 

1- ஓம். ஒரு , இரு கோடி போட்டால் ஆயிரம் கோடி இழப்பு வராது என்பது யாருக்கும் புரியும்.

2-ஆயிரம் கோடி பற்றி நீங்கள் செவி வழி கேள்விப் பட்டிருக்கிறீர்கள், நான் கேள்விப் படவில்லை, இதை hearsay என்பார்கள். ஆதாரம் கணக்கெல்லாம் கிடையாது என்பதால் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இன்னும் இந்த சிறிய படங்களின் தோல்விக்கு ஏன் லைக்காவை வைகிறீர்கள் என பதில் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

லைக்காவின் தாயாரிப்புக்களில் 90% சராசரி படங்களாகவும் தோல்வி படங்களாகவும் பேரழிவு தயாரிப்பாகவுமே அமைந்தன.

ஆனால் 2024 தயாரிப்புக்களில்  1000 கோடி நஷ்டம் என்றால் அதில் குறைந்தது 400 கோடி லைக்காவையே சாரும். லைக்கா திரைப்பட விளம்பரங்களுக்கு செலவிடுவதில்லையென்றும் அதுவே தோல்விகளுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள், மிக விரைவில் லைக்கா லண்டன் நோக்கி விமானம் ஏறும் வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். 

உலகவியாபாரத்தின் சூட்சுமம் தெரிந்த லைக்கா உலக வியாபாரத்தில் குப்புற விழும் வாய்ப்பு அதிகமுள்ள சினிமா துறையில் பணத்தை கொண்டுபோய் லொறிலொறியாக கொட்டுவது ஏன் எனும் மர்மத்துக்கான விடை  அவர்களுக்கே சொந்தமானது.

16 hours ago, தமிழ் சிறி said:

"கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், 
நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், 
சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் 
இனி தூக்குப் போட்டு சாவுங்க

அப்படி சத்தமாக சொல்லாதீர்கள் தமிழ்சிறி, ஏனென்றால் எங்கட ஆக்களுமெல்லோ சாகவேணும்.

இது இன்றைய யாழ்ப்பாண கூத்து: 

கடவுளே அஜித்தே என கதறிய இளைஞர்கள் யாழில்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஆயிரம் கோடி இந்திய ரூபாய் என்றால் 93 மில்லியன் பவுன்ஸ் அல்லவா?

அவ்வளவு பெரிய தொகையாக தெரியவில்லையே?

லைக்கா பெரிய படங்களை தயாரிப்பதை விட்டு சிறிய படங்களைத் தயாரித்தால் புதியவர்களின் திறமைகளை வெளிப்படுத்தலாம் பெரிய நட்டமும் வராது.ரெட்ஜெயண்டும் தனக்குத்தான் விநியோக உரிமை என்று கேட்காது. ஆனால் அந்தப்படங்களை ஓட விடாமல் எல்லா தியேட்டர்களையும் தமது வெளியீடுகளுக்குப் பாலிப்பார்கள். ஓடிடியில் வெளியிட்டு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டால் அதன்பிறகு தியேட்டர் தானாக் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

திருத்தியமைக்கு நன்றி. சாப்ரர் 1 ஐ அரண்மனை 4 ஓடு குழப்பிக் கொண்டேன்.

1- ஓம். ஒரு , இரு கோடி போட்டால் ஆயிரம் கோடி இழப்பு வராது என்பது யாருக்கும் புரியும்.

2-ஆயிரம் கோடி பற்றி நீங்கள் செவி வழி கேள்விப் பட்டிருக்கிறீர்கள், நான் கேள்விப் படவில்லை, இதை hearsay என்பார்கள். ஆதாரம் கணக்கெல்லாம் கிடையாது என்பதால் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இன்னும் இந்த சிறிய படங்களின் தோல்விக்கு ஏன் லைக்காவை வைகிறீர்கள் என பதில் வரவில்லை.

2- ஒரு பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது சிறிய பட்ஜெட் படங்கள் அதே நாளில் வெளியாக ஒன்றிற்கு ஆயிரம் தடவைகள் பின்னிற்பது ஏன் என்பது புரிந்தால் இந்த மாதிரியான கேள்விகளுக்கு இடமில்லை. 

உங்கள் அடுத்த கேள்விக்கு 2026 இலும் பதில் எழுதிக்கொண்டு இருக்க தயாராக வேண்டும்.?😂

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரைத்துறை வீழ்சசி என்பது ஒரு இயல்பான சுற்று என்றே கருதலாம்.  உலக பொருளாதாரங்கள் எப்படி ஏற்ற இறக்கங்களை கொண்டதோ அதை போல் தான் இதுவும்

தற்போதைய OTT தளங்களின் வளர்ச்சி திரையரங்குகளை பாதிப்பதும் ஒரு  காரணம்.  அதை விட தரமற்ற கதைக்களங்கள்.  

தமிழ் திரை உலக வரலாற்றில் வீழ்சசியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. பல முறை அது சவால்களை சந்தித்த போதும் ஒவ்வொரு முறையும் அதை அடக்கி அது எழுந்தேயுள்ளது.  

1980 களில் விசிஆர் களின்  வருகை தமிழ் சினிமாவை பாதித்தது. பின்னர் திருட்டு  விசிடி ஆகியன முன்னைய காலங்களில் தமிழ் சினிமாவை பாதித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

2- ஒரு பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது சிறிய பட்ஜெட் படங்கள் அதே நாளில் வெளியாக ஒன்றிற்கு ஆயிரம் தடவைகள் பின்னிற்பது ஏன் என்பது புரிந்தால் இந்த மாதிரியான கேள்விகளுக்கு இடமில்லை. 

உங்கள் அடுத்த கேள்விக்கு 2026 இலும் பதில் எழுதிக்கொண்டு இருக்க தயாராக வேண்டும்.?😂

மேலே செய்தியில் இருப்பதன் படி (இதே காரணங்கள் தான் முன்னைய வருடங்களிலும் இருந்திருக்கும்) தரமான கதைகள், தயாரிப்பு இல்லாமையால் தான் பெரும்பாலான படங்கள் தோல்வி என்கிறார்கள்.

இப்படி blockbusters ஓடு சேர்ந்து சிறிய படங்கள் வரும் நிலை தமிழக சினிமாவின் கடந்த காலத்திலும் இருந்த போக்கு.

இதைக் கவனிக்காமல் "பாரிய படமெடுப்பவன் தன் கற்பனா சக்தியை சுருட்டி வைத்து உதவ வேண்டும்" என்று எதிர்பார்ப்பது ஒரு வரிசையில் நிற்கும்  எல்லாரையும் ஒரே உயரமாக்குவதற்காக "முழங்காலோடு எல்லோரையும் தறித்து விடலாம்" என்ற "சமத்துவப் பார்வை" 😎என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/12/2024 at 11:47, தமிழ் சிறி said:

Congratulations Gif - IceGif

சந்தோசமான விசயம். அழிவை நோக்கிச் செல்லும் தமிழ் சினிமாவிற்கு வாழ்த்துக்கள். animiertes-gefuehl-smilies-bild-0234
"கட் அவுட்டுக்கு" பால் ஊத்துறவனும், மண் சோறு சாப்பிடுறவனும், 
நடிகர் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறவனும், 
சினிமாவில் தனது அரசியல் தலைவனை தேடுகின்றவனும் 
இனி தூக்குப் போட்டு சாவுங்க.  animiertes-gefuehl-smilies-bild-0415   animiertes-gefuehl-smilies-bild-0090

இதுக்கு மேல நாம் என்ன சொல்லணும்.
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.