Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள் 🤣.

அப்ப தமிழர் "ஜாவாவில்" இருந்து வந்த வந்தேறு குடிகளா? இது தமிழர்-திராவிடர் பிணக்கிற்கு புதிய பரிமாணமொன்றைத் தருகிறதே😎?

  • Replies 108
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இத

  • Kadancha
    Kadancha

    இதை பொதுவாகத் தான் சொல்கிறேன். எவரையும் குறை சொல்வதற்கு இல்லை. பொங்கலின்  அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன்.  ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது , தைப்பொங்கலுக்கு பல

  • தைப்பொங்கல் வரலாறு   தைப்பொங்கல் -  ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, goshan_che said:

உப்பிடி உங்களை போன்றோர் அறளை கதையள் கதச்சதும் கூட முஸ்லிம்கள் தாம் தமிழர் அல்ல சோனகர் என்ற தனி இனம் என பிரிய காரணமாகியது.

இப்போ தமிழனாக உணரும் கிறிஸதவரையும் துரத்தி அடியுங்கோ.

இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள் 🤣.

நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை.

ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர்  பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது.
என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது.

நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை.

பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான்.

என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.

சிறப்பாக சொன்னீர்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மட்டுமல்ல உலகில் தற்போதய மதங்கள் உருவாவதற்கு முன்னரே இயற்கை தெய்வ வழிபாடு இருந்துள்ளது, பயத்தினடிப்படையிலேயே இந்த வழிபாடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால் பொங்கல் நிகழ்வு ஒன்றும் சாமி கண்ணை குத்தும் என்று பாமரர்களை ஏமாற்றும் ஒரு மத நிகழ்வல்ல மாறாக கோசான் கூறுவது போல உலக மக்கள் கொண்டாடும் அறுவடை தின கொண்டாட்டம்.

அறுவடைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக அது பின்னாளில் மாறியிருக்கலாம், அதனை  மத உரிமை கொண்டாடும் பரிதாப நிலையில் தற்போது பொங்கல் உள்ளது.

பொங்கலுக்கு மத சாயம் பூச விளைவது இல்லாத ஒன்றை உருவகிக்கும் ஒரு முயற்சி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்ப தமிழர் "ஜாவாவில்" இருந்து வந்த வந்தேறு குடிகளா? இது தமிழர்-திராவிடர் பிணக்கிற்கு புதிய பரிமாணமொன்றைத் தருகிறதே😎?

அது சாவகர் சேரி என்றும் சொல்கிறார்கள்.

சைவம் வர முதல் அங்கே சாவக மதத்தை பின்பற்றியே மக்கள் வாழ்ந்திருக்க கூடுமாம்.

சாவகர் ஒரு வகை சமணர் பிரிவு.

வள்ளுவர் கூட சாவகராக இருக்கலாம் என்போருமுளர்.

https://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023203.htm

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை.

ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர்  பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது.
என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது.

நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?

அந்தோணியார் கோவிலுக்கு நீங்கள் மட்டும் அல்ல, பல இந்துக்கள் போவார்கள். 

ஆனால் அந்தோனியாரை சைவக்காரன் தூக்கப்போறான் என கத்தோலிக்கர் பயப்படுவதில்லை.

இங்கே யாரும் யாரிடமும் அனுமதி கேட்டு பொங்கல் வைக்க வேண்டியதில்லை.

அது தமிழர் பண்டிகை. அதில் குமாரசாமி போலவே சூசைதாசனுக்கும் சம உரிமை உண்டு.

கு.சா வீட்டில் பொங்கலாம், அல்லது கோவிலில் பொங்கலாம். சூ.தா வீட்டில் பொங்கலாம் அல்லது தேவாலயத்தில் பொங்கலாம்.

பொங்கல், தாலி கட்டுவதை, சேலை அணிவதை, பொட்டு வைப்பதை, வேட்டி உடுப்பதை போல ஒரு மதம் சாரா பண்பாட்டியல் கூறு.

இது என்னுடையது நீ புதிதாக செய்கிறாய் அல்லது செய்யாதே, தேவாலயத்தில் செய்யாதே என்பது எல்லாம்….

சைவத்தின் கூறுகள் = தமிழின் கூறுகள் என்ற ஆறுமுகநாவலர் உருவாக்கிய யாழ்பாணிய, வெள்ளாள ஆதிக்கவாதத்தின் வெளிப்பாடுதான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள்

கடைசியா சண்டை சாவகச்சேரியில் வந்து நிற்கின்றது.

சாவாகச்சேரி எனது ஊர். இனி இங்க என்ன நடந்தாலும் நான் இனி என்ர ஊர் ஆக்களோட தான் 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகிடி said:

கடைசியா சண்டை சாவகச்சேரியில் வந்து நிற்கின்றது.

சாவாகச்சேரி எனது ஊர். இனி இங்க என்ன நடந்தாலும் நான் இனி என்ர ஊர் ஆக்களோட தான் 😄

அதான் திருவள்ளுவர கொண்டத்து கொழுவி ஷேப் பண்ணி இருக்கிறன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

""தைப்பொங்கல் விழா மத ரீதியானதா அல்லது இன ரீதியானதா""  என்று   நாலு பக்க புகைச்சலுக்குப் பிள்ளையார் சுழி போட்ட @RishiK அதற்குப் பின்னர் இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. 

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2025 at 09:38, MEERA said:

சூரிய பகவானுக்கு நன்றி கூறும் நிகழ்வே பொங்கல்.

அது அதன் ஒரு குறியீடே தவிர, அது தான் என்று இல்லை.

அப்படி ஆயின், வேறு தினங்களில், வேறு நிகழுவுகளில் அப்படி பொங்கப்படுவதையும் பொங்கல் என்று ஏன்  அழைக்க வேண்டும்?

உண்மையில் பொங்கலின்  அர்த்த குறியீடு, ((உணவு) வளம் கைக்கு கிடைத்து (வாழ்க்கை)) பொங்கும் (ஒரு) நாள்.

பொங்கி பிரவகித்து (பொஙங்கலை போல ) எழுவது ஒன்றேயொன்று தான் நீர் (ஆறு அல்லது கடல்), அடிப்படை வளம் (பொங்குவது).

இதுவே பொங்கலின் அர்த்தக் குறியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

""தைப்பொங்கல் விழா மத ரீதியானதா அல்லது இன ரீதியானதா""  என்று   நாலு பக்க புகைச்சலுக்குப் பிள்ளையார் சுழி போட்ட @RishiK அதற்குப் பின்னர் இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. 

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

@RishiKரிஷிகள் அப்படித்தான். வழி காட்டிவிட்டு சென்று விடுவர், ஆனால் நாம் தான் ரிஷி மூலம் பார்க்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

பேராசிரியர் சண்முகதாஸின் ஒரு உரையில் கேட்டிருக்கிறேன். ஜப்பானிலும் பொங்கலை "அறுவடை நாள், நன்றி கூறல்" என்ற நிகழ்வாகக் கொண்டாடுவார்களாம். இந்தப் பண்டிகை koshogatsu என்பார்கள் .

ஊரில், 90 களில் யாழ் நகரின் மத்தியில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவிருக்கிறது. ஆனால், கத்தோலிக்கர், ஏனைய கிறிஸ்தவர்களின் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடியதை 90 களில் நான் காணவில்லை.

சில தரவுகள், தகவல்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திலும் பயன்படுத்தலாம்😂.

1960 களில், கத்தோலிக்க திருச்சபையில் இப்படியான ஒரு சிந்தனை உருவானது: "நாம் உலகம் முழுவதும் பல்வேறு இனங்கள் நாடுகளிடையே பரவி விட்டோம். ஐரோப்பிய மொழியான லத்தீனில் வழிபாடு செய்யும் படி இந்த ஐரோப்பியரல்லாத மக்களைக் கேட்க முடியாது. எனவே, அந்தந்த இனங்கள், நாடுகள், பாரம்பரியங்களின் படி வழிபாடு செய்ய விதிகளை வகுக்க வேண்டும்"

இதன் விளவு தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம். இதன் முடிவில் உருவான மாற்றங்களுள் சில உடனே அமலுக்கு வந்தன. உதாரணமாக, வழிபாட்டு மொழி, கீதங்கள் என்பன உடனே தாய்மொழிக்கு மாற்றப் பட்டன. சில மாற்றங்கள் நடைமுறையாக நீண்ட காலங்கள் எடுத்தன. பொங்கலை கத்தோலிக்க நிறுவனங்கள் கொண்டாடுதல் என்பது இப்படி நீண்ட நாட்களின் பின் அமலான மாற்றம்.

இது கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்குரிய விளக்கம்.

இங்கிலாந்து திருச்சபை - தமிழ் நாட்டில் வேரூன்றியிருப்பதால்- அவர்களும் பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஆனால், பெந்கோஸ்து, யெஹோவா போன்ற non-denomination இல் இருக்கும் மக்கள் பொங்கல் இன்னும் Paganism என்று தான் பார்ப்பர். இந்த வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளின் வரலாறு தெரியாதோருக்கு, குருடன் யானை பார்த்தது போன்ற "தெளிவு" கிடைக்கும்😎.  

ஆம் இதுதான் உண்மை. கிறிஸ்தவர்கள் இதை அறுவடை நன்றி செலுத்தல் நாளாகவே கொண்டாடுகின்றார்கள்.
வருடத்தின் முதல் நாளில் தங்கள் கைபிரயாசத்தின் முதற் பலன்களை எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடுகின்றார்கள்.
 
கத்தோலிக்கர் அல்லாதா பைபிள் சபையினர் இவற்றை கொண்டடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

""தைப்பொங்கல் விழா மத ரீதியானதா அல்லது இன ரீதியானதா""  என்று   நாலு பக்க புகைச்சலுக்குப் பிள்ளையார் சுழி போட்ட @RishiK அதற்குப் பின்னர் இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. 

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

நான் பதில்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இதை பொதுவாகத் தான் சொல்கிறேன்.

எவரையும் குறை சொல்வதற்கு இல்லை.

பொங்கலின்  அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன். 

ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது ,

தைப்பொங்கலுக்கு பல குறியீடுகள் உள்ளது (சூரியனுக்கு நன்றி, உழவர் நன்றி திருநாள்  .. போன்றவை , இங்கே உழவர் என்றே பொதுவாக வழங்கப்பட்டு வந்து இருக்கிறது என்பதையும், விவசாயி, கமக்காரர் .. என்று வழங்கப்படவில்லை என்பதும்).

அனால்   தமிழரை பொறுத்தவரையில் சமயம் சார்ந்தது அல்ல என்பதற்கு, தைபொங்கல் திதி எப்படி கூடி வருகிறது, வரலாறையும் பார்க்க வேண்டும்.

உ.ம். ஆக போத்துக்கேயர் வருகை, கிறிஸ்தவ மதம் வலோற்கார மாற்றம், போன்றவை தமிழ் கிறிஸ்தவர்களை பொங்கலில் இருந்து விலத்தியது என்பது உண்மை.

(ஆயினும் கிறிஸ்தவம் போர்த்துக்கேயருக்கு முதலே வந்து பரவத் தொடங்கி  விட்டது. உ.ம். தமிழ்நாடு பறங்கி மலையில் இருக்கும் Apostle   (இயேசுவின்  சீடர்) St Thomas இன்  சமாதியும், அதன் பின் கட்டப்பட்ட தேவாலயாமும், இவர் இயேசுவை சந்தேகித்ததாக சொல்லப்படுகிறது.)

இன்னொரு வளமாக, தமிழரின் தைப்பொங்கல் ( (மகர) சங்கராந்தி) திதி கூடுவது (இது முக்கியம், திதி கணிப்பது சந்திரனின் நிலையை கொண்டு, தமிழருக்கே உரிய சோதிட முறை, வாக்கிய பஞ்சாங்கம் ) சூரியன் மகரத்தில் நுழையும் முதல் நாள், தமிழ் வருடத்தின் படி தை மாதம் 1 ம் நாள். இதை உத்தராணாய காலம் என்பது, அதாவது  பூமியை பொறுத்தவரை (பூமியின் சுழற்சியால்) சூரியன் வடக்கு சார்ந்து   (வடவரைக் கோள ம்சார்ந்து) நிலைக்கு வர ஆரம்பிப்பது.     உத்தராணாய காலம் தமிழ் தைமாதத்தில் இருந்து தமிழ் ஆனி மாதம்  வரைக்கும்.  சூரியன் பூமியை பொறுத்தவரை  தென்னரை கோளம்  சார்ந்து  நிலை எடுப்பதை தட்சிணாய காலம் என்பது, இது தமிழ் ஆடியில் இருந்து தமிழ் மார்கழி வரை.

(தமிழரின் சோதிடத்தை பொறுத்தவரை, சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு வக்கிர பெயர்ச்சி இல்லை, வக்கிர பெயர்சி என்பது புவியின் சார்பாக குறிப்பிட்ட கிரகம் பின்னோக்கி செல்வதான (மாயத்) தோற்றம். இந்த தோற்றம் சூரியன், சந்திரன், இராகு, கேது என்ற கிரகங்களுக்கு  ஏற்படாது. ) 

ஆகவே, பொங்கல் தமிழ் சோதிட (காலக்கணிப்பின்) படி தமிழரின் விழா (அங்கே மதம் இல்லை).

இதில் உள்ள முரண்பாடு எண்னென்றால், தமிரின் மற்ற எல்லா சோதிட விடயங்களும் சந்திரனை மையமாக வைத்து (ஆம் தைபொங்கலின் திதி சந்திரனை வைத்து கணிக்கப்படுவது). ஆனால், திதி கூடுவது சூரியன் மகரத்தில் நுழையும் நாள், தமிழ் தை முதல் நாள்.

எதை சொன்னாலும் சூரிய நிலையயும்ம்  கொண்டு கணிப்பை எடுப்பது, ஆரிய அடிப்படையும்  கலந்துள்ளது.

(தைப்பொங்கலை, அந்த காலத்தை, அகத்தியரின் அறிவுரை படி ) இந்திர  விழா என்று சோழர் தொடக்கி கொண்டாடிய காலமும் என்றும் இருக்கிறது (என்று மணிமேகலையில் இருக்கிறது). 

அது உண்மையாக இருக்க வேண்டும், ஏனெனில் சூரியனின் நிலையை கொண்டு தைபொங்கல் நாள் (இப்போதும்) கணிக்கப்படுவதால்.

(மற்றது, சோழர் அவர்களை சூரிய வம்சம் என நம்பிக்கையும், இது எனது தனிப்பட்ட முடிவு).

மாறாக, சூரியன் மட்டும் தான் அடிப்படை என்றால், மேற்கு நாட்டவர்களும் அதை கொண்டாடி இருக்க வேண்டும், ஏனெனில் மேற்கு சோதிட கணிப்பு, முழுமையாக சூரியனை அடிப்படையாக வைத்து. ஆனால், அப்டி இல்லை.   

அதனால், தைப்பொங்கல் (மகர சங்கராந்தி) இந்தப்  பிராந்தியதுக்கான கலாசார நாளும், கொண்டாட்டமும்.
 
Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

மாறாக, சூரியன் மட்டும் தான் அடிப்படை என்றால், மேற்கு நாட்டவர்களும் அதை கொண்டாடி இருக்க வேண்டும், ஏனெனில் மேற்கு சோதிட கணிப்பு, முழுமையாக சூரியனை அடிப்படையாக வைத்து. ஆனால், அப்டி இல்லை.   

நல்ல தகவல்களும், சரியான முடிவும் (conclusion).

மேலே தமிழர் மட்டுமே சூரியனுக்கு படையல்/வணக்கம் செய்வது என்ற ஒரு கருத்தை @குமாரசாமி எழுதி இருந்தார். திரி திசை திரும்பகூடாது என்பதால் அதை பற்றி எழுதவில்லை.

ஆனால் எகிப்தியர், ரோமர், கிரேக்கர்கள் சூரிய கடவுள்களை பெயர் சொல்லி அழைத்து, கோவில், விழா எல்லாம் எடுத்துள்ளார்கள்.

அதே போல் பேகன் என அழைக்கப்பட்ட வட, மேற்கு ஐரோப்பிய ஆதி குடிகள் winter solstice, summer equinox எனப்படும் சூரியன் மிக நீண்ட, மிக குறுகிய நேரம் தென்படும் நாளை புனிதமாக கருதி வழிபட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் மிக முக்கிய சுற்றுலாதலமான Stone Henge எனும் கற்களால் ஆன கட்டுமானம் - இப்படி ஒரு நிகழ்வு நடந்த இடமே.

அதே போல் மாயன், அஸ்டெக் சமூகங்களும் சூரிய வணங்கிகளே.

உருவமில்லாத ஒற்றை கடவுள் (monotheistic ) கொள்கை நோவாவோடு தொடங்க முன், உலகில் பல பாகங்களில் சூரிய வணக்கம் முதன்மையாய் இருந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கிராம வாழ்வில் இவ்வாறான தனித்துவம் இருந்து இருக்கலாம். ஆனால் நகர வாழ்வில் எல்லாம் கலந்த ஒன்றே இனி சாத்தியம். இது நல்லது தானே. 

நீ வேறு நான் வேறு என்றில்லாமல் உனது நல்லது கெட்டதில் நான் உன்னோடு சேர்ந்திருக்கிறேன் என்று கட்டாயப் படுத்தாமல் அவரவராகவே ஒற்றுமை பேணும் எதுவும் நன்றே. 

கடவுள் நம்பிக்கை அற்ற எனது வீட்டில் மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் மரமும் நிழலி வீட்டில் பொங்கல் படையலும் உணர்த்துவது இதை தான். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2025 at 04:51, island said:

ஒரு தனிப்பட்ட  நம்பிக்கையாக அவை  பல்கி பெருவதில் எந்த அபாயமும் இல்லை, ஆனால் உங்களைப்போன்ற சைவ மத  வெறியர்கள் பல்கி பெருகுவது தமிழ் இனத்துக்கே ஆபத்தானது.  அனைத்து மதங்களைச் சேர்ந்த போராளிகளும் தமது உயிரை கொடுத்து நாட்டை  உருவாக்கி அது உங்களை போன்றவர்கள் சகிப்புத்தன்மையற்ற மத வெறியர்கள்  கையில் சிக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும். அதை விட சிங்களவர்கள் ஆட்சியில் வாழலாம்.  இயற்கை தனது கடமையை சரியாக தான் செய்துள்ளது என்று நிம்மதி கொள்ளலாம். 

காசாவிலும்  இஸ்ரேலிலும்  ,ஈரானிலும் இயற்கை சரியாக செயல் படவில்லை என சொல்லலாமோ?

சரித்திரம் வெறியர்களுக்கு தான் வெற்றியை வழங்கி சென்று கொண்டிருக்கிறது ...அந்த வெறியர்களின் வெற்றி பயணம் நீண்டது(ஒருவரின் வாழ்நாளில் அதை பார்க்கமுடியாது எந்த வெறியர்.அகிம்சாவாதி வெற்றி பெற்றார்கள் என..கண்டு கொள்ள)...அந்த வெறியர்கள் தேசிய  இனங்களிடையே  தங்கள் கருத்துக்களை 
வெறித்தனமாகவும் ,அகிம்சை வழியுடாகவும் பரப்பி பயணிபார்கள்...தேசிய இனங்களில் தங்கள் கருத்துக்களை ,ஆளுமைகளை பரப்பி அந்த தேசிய இனங்களின் மக்களே அவர்களின் கருத்துக்களை வெறித்தனமாகவும் ,அகிம்சையுடாகவும் காவிச் செல்வார்கள் இது தான் சரித்திரம் ...
சைவ மத ...வெறியர்கள் ,
கிறிஸ் மத ..வெறியர்கள்
இஸ்லாம் மத்.. வெறியர்கள் 
பெளத்த மத..வெறியர்கள் 
ஆயுத பலத்தினுடாக அடைந்த வெற்றியை இன்று அகிம்சை வாதிகள் நாம் என்ற போர்வையில் பாதுகாக்கிறோம்...

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

""தைப்பொங்கல் விழா மத ரீதியானதா அல்லது இன ரீதியானதா""  என்று   நாலு பக்க புகைச்சலுக்குப் பிள்ளையார் சுழி போட்ட @RishiK அதற்குப் பின்னர் இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. 

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️

பிள்ளையார் சுழி போடுவது அவர் போன்ற அகிம்சை வாதிகளின் பொறுப்பு 
அதை வெறித்தனமாக எடுத்து செல்வது எங்களை போன்ற வெறியர்களின் பொறுப்பு ..

அடுத்த பொங்கலுக்கு வேறு பெயரில்  வெறித்தனமாக கருத்தாட வருகிறேன் 😀

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

கடவுள் நம்பிக்கை அற்ற எனது வீட்டில் மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் மரமும் நிழலி வீட்டில் பொங்கல் படையலும் உணர்த்துவது இதை தான். 

இப்படி நீங்கள் நல்லவராக வந்திட்டா எப்படி நாங்க அடுத்த பரம்பரையினருக்கு ராமரை,ஜெசுவை,அல்லாவை,புத்தரை அறிமுகப்படுத்துவது....

எங்கன்ட தோழர் அனுரா சின்ன வயசில நினைத்திருப்பார் தனது கடவுள் மாவோசேதுங் கின் சமாதியை தரிசனம் பண்ண வேணும் எண்டு ...இன்று ஜனாதிபதியாக வந்தவுடன் போய் தரிசிக்கின்றார் ..பொதுவுடமை வாதி....என்ற கொள்கைக்காக ..😀😀

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

கிராம வாழ்வில் இவ்வாறான தனித்துவம் இருந்து இருக்கலாம். ஆனால் நகர வாழ்வில் எல்லாம் கலந்த ஒன்றே இனி சாத்தியம். இது நல்லது தானே. 

நீ வேறு நான் வேறு என்றில்லாமல் உனது நல்லது கெட்டதில் நான் உன்னோடு சேர்ந்திருக்கிறேன் என்று கட்டாயப் படுத்தாமல் அவரவராகவே ஒற்றுமை பேணும் எதுவும் நன்றே. 

கடவுள் நம்பிக்கை அற்ற எனது வீட்டில் மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் மரமும் நிழலி வீட்டில் பொங்கல் படையலும் உணர்த்துவது இதை தான். 

அருமை.

இப்படி கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் கிறிஸ்தவ தமிழர்களை நோண்டுபவர்கள்தான், காலம் மாறி விட்டது, அனுரவின் வரவோடு நாம்  பெளத்த-சிங்கள பேரினவாதத்தோடு இசைந்து வாழ வேண்டும் என்றும் புதிய ஸ்வரம் இசைக்கிறார்கள்.

கூடவே வாழ்ந்து, கொடுமைகளை அனுபவித்து, மத நிறுவனமாகவே போராட்டத்தில் பங்கெடுத்து, மாவீரர்களையும், தளபதிகளையும் தந்த சக தமிழரிடம் காட்டாத நெகிழ்வை - பெளத்தபேரினவாதிகளிடம் காட்டுகிறார்கள்.

வெட்கக்கேடு!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் முதல்காப்பியத்தில் இயற்கையையே மங்கலவாழ்த்துப்பாடலாக உள்ளது.https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=3

முன் பக்கம்

தேடுதல்

புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

"வாழ்த்தும் வணக்கமும்"
 
5

10
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

உரை

உரை

உரை

உரை
 
1 hour ago, விசுகு said:

கிராம வாழ்வில் இவ்வாறான தனித்துவம் இருந்து இருக்கலாம். ஆனால் நகர வாழ்வில் எல்லாம் கலந்த ஒன்றே இனி சாத்தியம். இது நல்லது தானே. 

நீ வேறு நான் வேறு என்றில்லாமல் உனது நல்லது கெட்டதில் நான் உன்னோடு சேர்ந்திருக்கிறேன் என்று கட்டாயப் படுத்தாமல் அவரவராகவே ஒற்றுமை பேணும் எதுவும் நன்றே. 

கடவுள் நம்பிக்கை அற்ற எனது வீட்டில் மார்கழி மாதத்தில் கிறிஸ்துமஸ் மரமும் நிழலி வீட்டில் பொங்கல் படையலும் உணர்த்துவது இதை தான். 

பொங்கல் முற்று முழுதான தமிழ் பண்டிகை என்பதிலும், அதில் மதம் சிறிதளவும் இல்லை என்பதிலும் நான் தெளிவாக இருக்கின்றேன்.  அதனை என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு உரத்து சொல்ல ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த முறை பொங்கல் அமைந்தது.

காரணம், என் அப்பாவின் தங்கை, எனக்கு மிகவும் பிடித்த மாமி இந்த மாதம் 10 ஆம் திகதி அன்று  தன் 74 ஆவது பிறந்த நாள் அன்றே இயற்கை எய்தி விட்டார். அவர் இறந்தமையால்,  மத நம்பிக்கைகளின் படி, ஒரு நல்ல விடயமும் செய்யக் கூடாது என்று என் அம்மாவில் இருந்து சிலர் அறிவுறுத்தினர். ஆனால் நான், பொங்கல் என்பது தமிழர்களின் நன்றி உணர்வை இயற்கைக்கும், தன் உழவுத் தொழிலுக்கு உதவுகின்றவைக்கும் சொல்வதற்குமான ஒரு நாள் என்பதாலும், தமிழர்களின் பண்டிகை என்பதாலும் (ஆரிய பண்டிகை எதையும் நான் கொண்டாடுவதில்லை) அதில் மதம் ஒரு துளிதானும் இல்லை என்பதாலும் கண்டிப்பாக பொங்குவேன் என்று பொங்கல் வைத்து அதனை முக நூலிலும் பகிர்ந்து இருந்தேன். அதைப் பார்த்து முகம் சுளிக்கவும் சிலர் இருக்கத்தான் செய்தனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

அது சாவகர் சேரி என்றும் சொல்கிறார்கள்.

சைவம் வர முதல் அங்கே சாவக மதத்தை பின்பற்றியே மக்கள் வாழ்ந்திருக்க கூடுமாம்.

சாவகர் ஒரு வகை சமணர் பிரிவு.

வள்ளுவர் கூட சாவகராக இருக்கலாம் என்போருமுளர்.

https://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023203.htm

இல்லையே  அது இஸ்லாமியரின் பகுதியாம் என இஸ்லாமியர் சொல்கின்றனர் "ஷா" என்ற எழுத்து திரிபடைந்து தமிழர்கள் அதற்கு உரிமை கோருகின்ற்னர் என ஒர் இஸ்லாமிய வேலைத்தள நபர் சவுதியில் வைத்து கூறினார் ...."ஷா"முன்னாள் ஈரானிய மன்னரின் பெயரை உதாரணமாக காட்டினார்"

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பிள்ளையார் சுழி போடுவது அவர் போன்ற அகிம்சை வாதிகளின் பொறுப்பு 
அதை வெறித்தனமாக எடுத்து செல்வது எங்களை போன்ற வெறியர்களின் பொறுப்பு ..

அடுத்த பொங்கலுக்கு வேறு பெயரில்  வெறித்தனமாக கருத்தாட வருகிறேன் 😀

சிங்களம் , தமிழனை இரண்டாம் பிரசையாக நோக்குகிறது என்றுதானே போராடினோம்? 

இப்போது தமிழனே இன்னொரு தமிழனை இழிவுபடுத்தும்போது குப்புறப் படுத்துக்கிடந்துவிட்டு இப்போது வந்து வெறியர் என்றால் என்ன அர்த்தம்?  பிழையைக் கண்டிக்கத் துணிச்சல் இல்லை,... உங்களைப்போன்ற ஆட்களைவிட மீரா எவ்வளவோ திறம். அவர் ஒன்றையும் மறைக்காது தனக்குப் பட்டதை  நேரடியாகக் கூறுகிறார். அத்துடன் அது முடிந்தது....  😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இப்படி நீங்கள் நல்லவராக வந்திட்டா எப்படி நாங்க அடுத்த பரம்பரையினருக்கு ராமரை,ஜெசுவை,அல்லாவை,புத்தரை அறிமுகப்படுத்துவது....

எங்கன்ட தோழர் அனுரா சின்ன வயசில நினைத்திருப்பார் தனது கடவுள் மாவோசேதுங் கின் சமாதியை தரிசனம் பண்ண வேணும் எண்டு ...இன்று ஜனாதிபதியாக வந்தவுடன் போய் தரிசிக்கின்றார் ..பொதுவுடமை வாதி....என்ற கொள்கைக்காக ..😀😀

எனக்கு இரண்டு மகன்கள். ஒருத்தன் துளி கூட கடவுள் நம்பிக்கை அற்றவன். மற்றவன் செவ்வாய் வெள்ளி மற்றும் முக்கிய விரதங்கள் எல்லாமே கடைப்பிடிக்கும் அளவுக்கு ஆன்மீகவாதி. நீங்களாக தேடுங்கள் உணருங்கள் என்ற எனது நிலைப்பாட்டின் பெறுபேறு இஃது. எதையும் திணிப்பதில்லை. 

அவர்கள் அடுத்த தலைமுறை. அவரவர் மற்றவரது நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதால் வீட்டில் எந்த சிக்கலும் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.