Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்பின் கருத்தை, "கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" எனக் குறிப்பிட்டார் நெதன்யாகு
 
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று டிரம்ப் கூறினார். அவர் இதுகுறித்துப் பேசியது என்ன?

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், தான் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகுதான் எனக் கூறி, அதற்காக நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன், தான் ஆட்சியிலிருந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலின் எதிரிகள் மிகவும் வலுவாக வளர்வதற்கு அனுமதித்துவிட்டதாக விமர்சித்தார்.

"அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிணைப்பைத் தகர்க்க முடியாது" என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும் பேசிய டொனால்ட் டிரம்ப், எவ்வித மாற்று வழிகளும் இல்லை என்பதால்தான் பாலத்தீனர்கள் மீண்டும் காஸாவுக்கு செல்வதாக, எவ்வித ஆதாரங்களுமின்றி கூறினார். மேலும், காஸா 'அழிவின் தலமாக' இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, காஸாவில் வாழும் சுமார் 18 லட்சம் மக்கள், மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், காஸாவை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அமெரிக்காவால் மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

காஸா குறித்த டிரம்பின் பேச்சு

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, காஸாவில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார்

எதிர்காலத்தில் காஸா முனையை அமெரிக்கா "சொந்தமாக்குவது" குறித்து டிரம்ப் கூறியது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

"இறையாண்மை கொண்ட ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது குறித்தா நீங்கள் பேசுகிறீர்கள்?" என செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார்.

அதற்கு ஆம் என பதிலளித்த டிரம்ப், "எதிர்காலத்தில் (காஸா முனையைக் கைப்பற்றி) அமெரிக்கா நீண்ட காலத்துக்கு வழிநடத்துவது குறித்து தான் கற்பனை செய்து பார்ப்பதாக" குறிப்பிட்டார்.

"அந்த நிலத்தைச் சொந்தமாக்கி, மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அது மிகவும் அற்புதமானதாக இருக்கும்."

"எல்லோரும் அந்த யோசனையை விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார்.

நெதன்யாகு கூறியது என்ன?

டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,REUTERS

இதன் பிறகு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் இந்த யோசனை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவரது யோசனை 'கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.

அந்தப் பிராந்தியம் (காஸா) தங்கள் நாட்டுக்கு இனியும் ஆபத்தாக இருக்காது என்பதை உறுதி செய்வதில் தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"காஸாவுக்கு டிரம்ப் வித்தியாசமான எதிர்காலத்தை வழங்கும் யோசனையைக் கொண்டிருப்பதாக" கூறிய அவர், "அது வரலாற்றை மாற்றும் ஒன்றாக இருக்கும் எனத் தான் நினைப்பதாகவும்" குறிப்பிட்டார்.

நெதன்யாகுவுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனுடனான உறவு அடிக்கடி பதற்றமானதாகவே இருந்தது. இந்நிலையில், டிரம்ப் அதிபரானது குறித்த தனது மகிழ்ச்சியை நெதன்யாகு வெளிப்படையாகக் காட்டினார்.

"வெள்ளை மாளிகையில் உள்ள இஸ்ரேலின் மிகச் சிறந்த நண்பர்" என்று நெதன்யாகு டிரம்பை குறிப்பிட்டார். இந்தப் பயணத்தின்போது முன்னதாக அமெரிக்காவுக்கான மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃபிடம் நெதன்யாகு பேசினார்.

பிபிசியின் சர்வதேச உறவுகள் செய்தியாளர் பால் ஆடம்ஸின் பகுப்பாய்வு

டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, டிரம்பின் பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக பால் ஆடம்ஸ் கூறுகிறார்

காஸாவுக்கான முன்மொழிவுகள் தொடர்பாகப் பேசியுள்ள டிரம்ப், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

"காஸா முனையைக் கைப்பற்றி", அங்கு இடிபாடுகளை அகற்றுதல், வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், மற்றும் "கணக்கிலடங்கா வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்", "அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்துதல்" ஆகியவற்றை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் யார் குறித்துப் பேசுகிறார் என்பதை டிரம்ப் தெரிவிக்கவில்லை.

காஸா முனையில் வாழும் ஒட்டுமொத்த பாலத்தீன மக்களும் அதாவது 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர வேண்டும் என முன்பு டிரம்ப் கூறிய நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"மத்திய கிழக்கின் சொர்க்கபுரியாக காஸாவை மாற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார். அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவில், "பாலத்தீனர்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வாழ்வார்கள்," என்ற விநோதமான கருத்தையும் அவர் தெரிவித்தார்.

அவருடைய இந்தக் கூற்று தலைசுற்ற வைப்பதாக உள்ளது. மேலும், எந்த சர்வதேச அதிகாரத்தின் கீழ் அமெரிக்கா செயல்படும் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் வாழும் பாலத்தீனர்கள், தங்களைப் பற்றி டிரம்ப் என்ன யோசனை வைத்துள்ளார் என்பது குறித்த ஆச்சரியத்தில் உள்ளனர்.

மேற்கு கரையின் சில பகுதிகளை இஸ்ரேலுடன் இணைப்பது குறித்து தான் இன்னும் யோசிக்கவில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், "இன்னும் நான்கு வாரங்களில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவதாக" கூறினார்.

தன்னுடைய யோசனை, இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையிலான 'இரு நாடு' தீர்வுடன் தொடர்புடையது அல்ல என்றும், ஆனால் பாலத்தீனர்களால் அப்படித்தான் பார்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Replies 53
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை

  • கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்! "....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020,

  • Maruthankerny
    Maruthankerny

    இந்த செய்தி யாழில் வருமா? மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்...... இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண

  • கருத்துக்கள உறவுகள்

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப் - தெரிவித்துள்ளது என்ன?

Published By: Rajeeban

05 Feb, 2025 | 10:36 AM
image

cnn

காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க ஜனாதிபதி நிராகரிக்கதவறியுள்ளார்.

காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவாரா என்ற கேள்விக்கு காசாவை பொறுத்தவரை நான் என்ன அவசியமோ அதனை செய்வேன் படைகளை அனுப்புவது அவசியம் என்றால் நான் அதனையும் செய்வேன், நாங்கள் காசாவை கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

475772046_1024118323080103_5217142416173

நீண்டகால உரிமை பிரச்சினை உள்ளது எனக்கு தெரியும்,மத்திய கிழக்கின் அந்த பகுதிக்கும் மத்தியகிழக்கின் முழுவதற்கும் ஸ்திரதன்மையை கொண்டுவருவதற்கு நான் முயல்கின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இது மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட முடிவில்லை, நான் உரையாடிய அனைவரும் காசா அமெரிக்கா சொந்தமாக்கிக்கொள்வதையும் அபிவிருத்தி செய்வதையும்  ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைஉருவாக்குவதையும் விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

  •  

https://www.virakesari.lk/article/205831

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது - பாலஸ்தீன தேசமே உறுதியான தீர்வு - சவுதி அரேபியா

Published By: RAJEEBAN   05 FEB, 2025 | 10:31 AM

image
 
காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள சவுதிஅரேபியா பாலஸ்தீன தேசமொன்று உருவாக்கப்படாவிட்டால் இஸ்ரேலுடன் உறவினை ஏற்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களிற்கு என ஒரு தேசம் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை புதன்கிழமை சவுதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

காசாவை அமெரிக்கா கையகப்படுத்த விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள பின்னர் சவுதி அரேபியாவின்வெளிவிவகார அமைச்சு இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தனது முன்னைய நிலைப்பாட்டை மீள வலியுறுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானதாகவும் தளர்ச்சியற்றதாகவும் காணப்படுவதாக தெரிவித்துள்ள  அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர்- பிரதமர் செப்டம்பர் 18ம் திகதி 2024 சூரா கவுன்சிலின் முதலாவது அமர்வில் ஆற்றிய உரையில் தனது இந்த நிலைப்பாட்டினை தெளிவாக வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

2024 இல் ரியாத்தில் இடம்பெற்ற அராபிய- இஸ்லாமிய உச்சிமாநாட்டில் அவர் இதனை வலியுறுத்தினார், 1967ம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாக கொண்ட பாலஸ்தீன தேசத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார், பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை நிறுத்தவேண்டும் என கோரினார் என சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/205830

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்டன் அதிபரை அழைத்து அங்கு பலஸ்தீனியர்களை குடியேற்ற ட்ரம்ப் வற்புறுத்துவார்.

  • கருத்துக்கள உறவுகள்

காசா மக்கள் அந்த நிலத்தை மறக்க வேண்டியது தான்.

அகண்ட இஸ்ரேல் உருவாகிறது.

ஒரு அதி தீவிர வலதுசாரி பதவிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை ட்றம்ப் காட்டிக் கொண்டு இருக்கின்றார். காசாவில் இனச்சுத்திகரிப்புக்கு அங்கீகாரம் வழங்குகின்றார்.

ஒரு சிங்கள அதி தீவிர இனவாதி எம் தாயக மக்களை இந்தியாவில் குடியேற்றி விட்டு, வடக்கு கிழக்கை முற்றிலும் சிங்கள மயமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடின் அது எப்படி இருக்குமோ, அவ்வாறு தான் இந்த வலதுசாரி யின் கோரிக்கையும்.

அமெரிக்காவை நாசமாக்காமல் விட மாட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்!

"....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020, it was a Democratic Party stronghold. This year, it flipped for President-elect Trump. For many in Dearborn, the war in Gaza played a deciding factor in their votes"

https://www.npr.org/2024/11/08/nx-s1-5183216/how-trump-was-able-to-win-support-from-many-muslim-voters-in-michigan

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் 15 வாக்குகள் முக்கியமானவை. அமெரிக்க மாநிலங்களில், முஸ்லிம்கள்  செறிந்து வாழும் ஒரு நகரம், கவுன்ரி ஆகியவை மிச்சிகனில் இருக்கின்றன. கடந்த ஜனாபதித் தேர்தலில் பைடனோடு கோவித்துக் கொண்டு "மிகுந்த தூர நோக்கோடு" 😎 ட்ரம்பை பகிரங்கமாக இந்த மாநிலத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்தார்கள். இம்மாநில முஸ்லிம் அமெரிக்கர்கள் சிலர், ட்ரம்புக்குப் போடாமல், ஆனால் கமலாவுக்கும் போடாமல் மூன்றாம் தரப்பிற்கு வாக்கை அளித்து, இறுதியில் ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்தார்கள்.

விளைவு இது தான்! ஒரு வருடம் அல்ல, ஒரு மாதத்திலேயே வீட்டு வாசலில் டெலிவரி!

என் மனக் குரல் சொல்வது: "சாவுங்கடா".  

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இங்கு களத்தில் கூட அப்படியான ஒரு நிலைப்பாடும் இருந்தது.

ட்ரம்ப் வருவதால் உலகத்திற்கே பெரும் கேடு என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தேன். என்ன கேடு, அவர் எங்கே யுத்தம் செய்யப் போகின்றார் என்ற ஒற்றை வரிக் கேள்விகள் தான் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன.

ஒரு மனிதனை புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு எவ்வளவு நாட்களும், எத்தனை நிகழ்வுகளும் தேவை. இவர் போன்ற ஒருவரால் சர்வமும் நாசம் தான். 

20 இலட்சம் மக்களை 'நீங்கள் உங்கள் மண்ணை விட்டு வேறு எங்கேயாவது போங்கள்...................' என்று சொல்லுவது எந்த யுத்தம் அளவிற்கும் கொடுமையானதே. என்ன ஒரு திமிரும், அறியாமையும் வேண்டும் இப்படிச் சொல்லுவதற்கு.

சூடானில் பாடசாலையில் கொடுக்கப்படும் அந்த ஒரு நேர உணவிற்காகவே பாடசாலை போகும் அந்தச் சிறுவர்கள், அமெரிக்க உதவியை நிற்பாட்டிய பின், இன்று என்ன செய்வார்கள், என்ன சாப்பிடுவார்கள் என்ற அந்த நினைவே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இதுவா இவர் வந்தால் உலகத்திற்கு கிடைக்கும் நன்மை. அதுவும் ஒரு வருடச் செலவே சில பில்லியன் டாலர்கள் மட்டுமே.

பக்கத்தில் இருக்கும் நாடு கனடா. முழு உலகத்திலேயேயும் உற்ற தோழன் அது தான். அதனுடனேயே தகராறா............ இத்தனைக்கும் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் போகும் குடியேறிகளும், போதைப் பொருட்களும் தான் மிக அதிகம். கனடாவை பகைப்பதால், பயப்படுத்துவதால், என்ன சமாதானம் இங்கே கிடைத்து விடப்போகின்றது.

இங்கு அமெரிக்க உள்நாட்டில் இவருடைய மற்றும் இவரின் சகாக்களின் நடவடிக்கைகளை நீதிமன்றின் மூலம் கேள்வி கேட்கலாம். ஆனால், இவர்களின் அறியாமையினாலும், அதிகாரம் உள்ள திமிரினாலும் உலகிற்கு வந்து சேரப் போகும் கேடுகளுக்கு எவரைப் போய் கேட்பது.....................😌.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

புரிகிறது! சில வருடங்கள் முன்பிருந்தே, நான், கோசான், நீர்வேலியான் உட்பட பலர் ட்ரம்ப் பற்றியும், புரின் பற்றியும், புரின் வால்களாக உருவாகி வரும் ஓர்பான் போன்றோர் பற்றியும் மீள மீளச் சொல்லி வந்திருக்கிறோம். இதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தோரை இரு வகைகளில் அடக்கலாம்:

1. இந்தக் கருத்துக்களைச் சொல்வோரைப் பிடிக்காத உறவுகள், அதனால் கீரைக்கடைக்கு எதிர்க்கடை போட்டு வாதாடுவோர்.

2. உலகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அல்ல, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்ற வரலாறு கூடத் தெரியாத அறிவலட்சியர்கள்.

துரதிர்ஷ்ட வசமாக, இந்த இரண்டாவது வகையினர் எங்கள் சமூகத்தில் பெருகி விட்டனர். தொடர்ந்து பெருகுவர் என்றே அஞ்சுகிறேன்.  யாழுக்கு வெளியே, பொறியியல், உயிரியல், நிதியியல் துறைகளில் பெரிய படிப்பெல்லாம் படித்த என் நண்பர்கள் பலருக்கு, ஹிற்லர் எத்தனை பேரைக் கொன்றார் என்பது பற்றிய விபரங்கள் கூட இன்னும் தெரியாத அளவுக்கு, அறிவலட்சியர்களாக இருப்பதைக் காண்கிறேன்.

இதற்கு என்ன தான் தீர்வு?

வீடுகளில் நம் குழந்தைகளை வாசிப்பாளர்களாக உருவாக்க வேண்டும். வளர்ந்தவர்கள் உலாவரும் யாழ் போன்ற இடங்களில் விடயம் தெரிந்தவர்கள் கூச்சப் படாமல் பேச வேண்டும். குடத்தில் வைத்த விளக்காக இருக்காமல், குன்றில் வைத்த விளக்காக இருக்க வேண்டும்!

நக்கல், திட்டு, பேச்சு எல்லாம் வரும் தான்! ஒரு பக்கம் தூக்கிப் போட்டு விட்டு வளர்ந்தவர்கள் இருக்கும் இடங்களிலும் விடயங்களைப் பேச வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிர்வலையை கிளப்பிய Trump; Netanyahu-வை சந்தித்த பின் பேசியது என்ன? இதன் நிஜ பொருள் என்ன? Explained

Greenland, Panama Canal, Canada- வை தொடர்ந்து Gaza -வை கட்டுப்படுத்த விரும்புவதாக America President Trump கூறியது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

#Trump #Gaza #Netanyahu 
 
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

Published By: RAJEEBAN   05 FEB, 2025 | 03:32 PM

image

காசாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை என காசா மக்கள் தெரிவித்துள்ளனர்.

காசா மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து மிகுந்த வெறுப்படைந்துள்ளதாக காசாவில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார் என பிபிசி  செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது,

அக்ரம்கான் ரபாவிற்கும் கான் யூனிசிற்கும் இடையில்  காசாவின் தென்பகுதியில் வசிக்கின்றார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் காசாவின் வடபகுதியில் பலர் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதை அவர் பார்த்துள்ளார்.

2023 ஒக்டோபர் மாதம் 7 ம்திகதி மோதல் வெடித்த பின்னர் காசாவிலிருந்த 70 வீதமான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ள போதிலும் பாலஸ்தீனியர்கள் வேறு நாட்டிற்கு செல்வதை விட தற்காலிக தங்குமிடங்களிலேயே வாழ விரும்புவார்கள் என அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்கள் மீள்எழும் திறன் கொண்டவர்கள், அவர்கள் இன்னமும் இங்கேயே வாழ விரும்புகின்றனர், அவர்கள் வேறு எங்கும் செல்வார்கள் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் குடிநீரை போக்குவரத்தை அடிப்படை வாழ்விற்கான விடயங்களை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர், ஆனால் அவர்கள் இந்த மண்ணிலிருந்து வெளியேறுவது வேறு எங்காவது செல்வது குறித்து ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/205871

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது வாயையும் அடைப்பதற்காக நெத்தன்யாகு

ரம் மூலமாக இதை உலகுக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு கிழமைக்கு ஐயோ குய்யொ முறையோ என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Trump நித்திரையால் எழும்பிக் கட்டிலில் குந்தியிருந்து  இன்றைக்கு யாருக்கு ஆப்பு வைக்கலாம் என்று யோசிக்கிறார் , "இன்றைக்கு பலஸ்தீனியருக்கு  வுக்கு ஆப்பைச் செருகுவோம்" என்று முடிவெடுக்கிறார். குளித்துவிட்டு வந்து நெத்தன்யாகுவுக்கு போனைப் போட்டு "பலஸ்தீனியருக்கு ஆப்பைச் செருகுவதாக முடிவு. நீர் என்ன  சொல்கிறீர்?  "" என்று கேட்க, நத்தன்யாகுவோ,..யோசித்துவிட்டு,..Mr. Trump ...நீர் ஏன் Gaza  வை லீசுக்கு எடுக்கக்கூடாது? ஒரு போடு போட்டார். அதற்கு Trump ....இது ஒரு நல்ல Idea .....Okey . Gaza  வை அமெரிக்க பொறுப்பெடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அடுத்த 99 ஆண்டுகளுக்கு நான் Gaza வை அமெரிக்காவிற்கு குத்தகைக்கு இஸ்ரேல் தரும் என்று அறிவிப்பதாக நெதன்யாகுவிற்குக் கூறுகிறார். 

அதன்படி Gaza அமெரிக்காவிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறது. 

(யாவும் கற்பனை அல்ல. 😁

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அறிவுலகில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் அந்த மக்களால் உணர்த்தப்படுகிறது. இதில் படிப்பறிவு அதிகமற்ற ஏழை மக்கள் அதிகமுள்ள இந்திய மக்களின் தேர்தல் முடிவுகள் பற்றி நக்கல் நையாண்டி வேறு.

1 hour ago, விசுகு said:

அமெரிக்கா அறிவுலகில் இல்லை என்பது மீண்டும் மீண்டும் அந்த மக்களால் உணர்த்தப்படுகிறது. இதில் படிப்பறிவு அதிகமற்ற ஏழை மக்கள் அதிகமுள்ள இந்திய மக்களின் தேர்தல் முடிவுகள் பற்றி நக்கல் நையாண்டி வேறு.

ட்ரம்ப் பதவிக்கு வந்தது இனங்களுக்கிடையே, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து. பெரும்பான்மையான  அமெரிக்கர்களை வெறுப்பின் மூலம் ஒன்றிணைத்து வெற்றி அடைந்தார்.

எவரெவர் சமூகங்களிற்கிடையே, தேசியவாதம், இனத்தூய்மைவாதம் எனும் போர்வையில் வெறுப்பை விதைத்து பெரும்பான்மையானோரை ஒன்றிணைக்க முயல்கின்றனரோ அவர்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். 

அப்படியான விசச்செடிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கு ட்ரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maharajah said:

என்று யோசிக்கிறார் , "இன்றைக்கு பலஸ்தீனியருக்கு  வுக்கு ஆப்பைச் செருகுவோம்" என்று முடிவெடுக்கிறார். குளித்துவிட்டு வந்து நெத்தன்யாகுவுக்கு போனைப் போட்டு "பலஸ்தீனியருக்கு ஆப்பைச் செருகுவதாக முடிவு. நீர் என்ன  சொல்கிறீர்?  "" என்று கேட்க, நத்தன்யாகுவோ,..யோசித்துவிட்டு,..Mr. Trump ...நீர் ஏன் Gaza  வை லீசுக்கு எடுக்கக்கூடாது? ஒரு போடு போட்டார். அதற்கு Trump ....இது ஒரு நல்ல Idea .....Okey . Gaza  வை அமெரிக்க பொறுப்பெடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அடுத்த 99 ஆண்டுகளுக்கு நான் Gaza வை அமெரிக்காவிற்கு குத்தகைக்கு இஸ்ரேல் தரும் என்று அறிவிப்பதாக நெதன்யாகுவிற்குக் கூறுகிறார். 

அதன்படி Gaza அமெரிக்காவிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறது. 

(யாவும் கற்பனை அல்ல. 😁

இது அமெரிக்க/இஸ்ரேலின் நேற்று இன்றைய திட்டமாக இருக்காது. நீண்ட கால திட்டத்தை அழிவுகள் மூலமாக தீர்க்கின்றனர்.
இது யூத - அரேபிய யுத்தங்களுக்கு இன்னும் வழிவகுக்கும் என நான் நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

Trump நித்திரையால் எழும்பிக் கட்டிலில் குந்தியிருந்து  இன்றைக்கு யாருக்கு ஆப்பு வைக்கலாம் என்று யோசிக்கிறார் , "இன்றைக்கு பலஸ்தீனியருக்கு  வுக்கு ஆப்பைச் செருகுவோம்" என்று முடிவெடுக்கிறார். குளித்துவிட்டு வந்து நெத்தன்யாகுவுக்கு போனைப் போட்டு "பலஸ்தீனியருக்கு ஆப்பைச் செருகுவதாக முடிவு. நீர் என்ன  சொல்கிறீர்?  "" என்று கேட்க, நத்தன்யாகுவோ,..யோசித்துவிட்டு,..Mr. Trump ...நீர் ஏன் Gaza  வை லீசுக்கு எடுக்கக்கூடாது? ஒரு போடு போட்டார். அதற்கு Trump ....இது ஒரு நல்ல Idea .....Okey . Gaza  வை அமெரிக்க பொறுப்பெடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு அடுத்த 99 ஆண்டுகளுக்கு நான் Gaza வை அமெரிக்காவிற்கு குத்தகைக்கு இஸ்ரேல் தரும் என்று அறிவிப்பதாக நெதன்யாகுவிற்குக் கூறுகிறார். 

அதன்படி Gaza அமெரிக்காவிற்கு குத்தகைக்குக் கொடுக்கப்படுகிறது. 

(யாவும் கற்பனை அல்ல. 😁

வணக்கம் மஹாராஜா,

புது உறவோ நல்வரவு வைப்பம் எண்டு பார்த்தால் 2019 இல் இருந்து யாழில் உள்ளீர்கள்.

ஆனால் இரெண்டு கருத்து, ஒன்று ஜேசு நாதர் பற்றி மற்றையது இது மட்டும்தான் பதிந்துள்ளீர்கள்.

மஹாராஜா என்பது சொந்த பெயரோ?

மேலும் கருத்துக்களோடு இணைந்திருங்கள்.

1 hour ago, நிழலி said:

எவரெவர் சமூகங்களிற்கிடையே, தேசியவாதம், இனத்தூய்மைவாதம் எனும் போர்வையில் வெறுப்பை விதைத்து பெரும்பான்மையானோரை ஒன்றிணைக்க முயல்கின்றனரோ அவர்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். 

அப்படியான விசச்செடிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கு ட்ரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார்.

விச செடிகளை முளையிலேயே கிள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் வளரும் நிலத்தையே நஞ்சாக்கி போடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ட்ரம்ப் பதவிக்கு வந்தது இனங்களுக்கிடையே, சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து. பெரும்பான்மையான  அமெரிக்கர்களை வெறுப்பின் மூலம் ஒன்றிணைத்து வெற்றி அடைந்தார்.

எவரெவர் சமூகங்களிற்கிடையே, தேசியவாதம், இனத்தூய்மைவாதம் எனும் போர்வையில் வெறுப்பை விதைத்து பெரும்பான்மையானோரை ஒன்றிணைக்க முயல்கின்றனரோ அவர்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். 

அப்படியான விசச்செடிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கு ட்ரம் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளார்.

இதில் எனக்கு தெளிவுண்டு. இந்த மண் எங்களின் சொந்த மண் ஒன்பதும் எமது நிலம் எமக்கு வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியவை. அதை இழந்ததால் இவ்வுலகில் வாழும் தகுதி இல்லாமல் போன இனங்கள் பல. ஆனால் இந்த நிலம் எமக்கு மட்டுமே சொந்தம் அல்லது இன்னாருக்கு மட்டுமே சொந்தம் என்பது தான் இனவாதம் அல்லது வெறி. 

உலகம் முழுவதும் அந்தந்த தேசிய மக்கள் தான் அந்தந்த நாட்டை ஆள்கிறார்கள். பிரான்சிலும் கூட அடுத்த அடுத்த தேர்தலில் அவர்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறார்கள். அவர்களது நாட்டின் பற்றின் மீது எனக்கும் உடன்பாடே. கறுப்பு வெள்ளை என்ற நிறவெறி மட்டுமே என்னை அவர்களுக்கு வாக்களிக்க முடியாது தடுக்கிறது.

பிரான்ஸ் தேசம் பிரெஞ்சு மக்களுக்கே சொந்தம் என்பதில் எனக்கு எந்த விதமான சங்கடங்களும் இல்லை.  இவ்வாறு அவர்கள் சொல்லும் போது எனக்கு குத்துவது நான் எனது மண்ணை இழந்ததே. மாறாக நான் எனது மண்ணை இழந்த வேதனையை உண்மையில் உணர்பவனாக இருந்தால் அவர்களது தேசத்தை காக்க அவர்கள் புரியும் தேசியவாதத்தை எளிதில் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்து இருக்கணும். 

இழந்தவனுக்கே அதன் அருமை அதிகம் தெரியும். அது நிலமாக பெற்றோராக உடன்பிறந்தோராக பிள்ளைகளாக..... எதுவானாலும்.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இங்கு களத்தில் கூட அப்படியான ஒரு நிலைப்பாடும் இருந்தது.

ஐரோப்பிய ஒன்றயத்தில் இருந்து பிரிட்டன் பிரிய வேண்டும் என்று கிட்டத்தட்ட 99 வீதமான ஈழத்தமிழர்கள் எந்த வித துரே நோக்கின்றியும். ஐரோப்பி ஒன்றயத்தின் பல நாடுகளில் தமிழ்கள் வாழுகின்றார்கள் என்ற சிந்தனையுமின்றி வாக்களித்தார்கள். அதன் விளைவுகளை இப்போது பிரிட்டன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இது போன்ற செயற்பாடே  டிரம்புக்கு வாக்களித்த முஸ்லிம்கள் >தமஜிழர்கள் >இந்தியர்கள் மற்றும் குடியேறிகளின் செயற்பாடாகும். ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான்.

6 hours ago, Justin said:

கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்!

சரியாகச் சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இங்கு களத்தில் கூட அப்படியான ஒரு நிலைப்பாடும் இருந்தது.

ஈழ தமிழர்களின் ஒரு பகுதியினரிடம் டொனால்ட் ரம், புதின், ஜின்பிங் , கிம் யொன்உன் முல்லாக்கள் போன்ற தீயவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் போக்கு இருந்து வருகின்றது 😟

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

இதில் எனக்கு தெளிவுண்டு. இந்த மண் எங்களின் சொந்த மண் ஒன்பதும் எமது நிலம் எமக்கு வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியவை. அதை இழந்ததால் இவ்வுலகில் வாழும் தகுதி இல்லாமல் இனங்கள் பல. ஆனால் இந்த நிலம் எமக்கு மட்டுமே சொந்தம் அல்லது இன்னாருக்கு மட்டுமே சொந்தம் என்பது தான் இனவாதம் அல்லது வெறி. 

உலகம் முழுவதும் அந்தந்த தேசிய மக்கள் தான் அந்தந்த நாட்டை ஆள்கிறார்கள். பிரான்சிலும் கூட அடுத்த அடுத்த தேர்தலில் அவர்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறார்கள். அவர்களது நாட்டின் பற்றின் மீது எனக்கும் உடன்பாடே. கறுப்பு வெள்ளை என்ற நிறவெறி மட்டுமே என்னை அவர்களுக்கு வாக்களிக்க முடியாது தடுக்கிறது.

பிரான்ஸ் தேசம் பிரெஞ்சு மக்களுக்கே சொந்தம் என்பதில் எனக்கு எந்த விதமான சங்கடங்களும் இல்லை.  இவ்வாறு அவர்கள் சொல்லும் போது எனக்கு குத்துவது நான் எனது மண்ணை இழந்ததே. மாறாக நான் எனது மண்ணை இழந்த வேதனையை உண்மையில் உணர்பவனாக இருந்தால் அவர்களது தேசத்தை காக்க அவர்கள் புரியும் தேசியவாதத்தை எளிதில் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடைந்து இருக்கணும். 

அப்படிப்பார்த்தால் அமெpரிக்கா டி;ரம்புக்குரிய மண் அல்ல அதேபோல் அவுஸ்தரேலியா. கனடா என்று  இந்தப்பட்டியல் நீளும் அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

அப்படிப்பார்த்தால் அமெpரிக்கா டி;ரம்புக்குரிய மண் அல்ல அதேபோல் அவுஸ்தரேலியா. கனடா என்று  இந்தப்பட்டியல் நீளும் அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்.

அந்த மண்ணில் சொந்தக்காரர்கள் அதற்கான போராட்டத்தை முன்னெடுத்தால் நிச்சயமாக அதனை நான் ஆதரிப்பேன்.  ஆனால் நியாயத்தின் பக்கம் யார் நிற்கிறார்கள் இன்று?? யார் பலசாலி அல்லது யார் வெல்வார் என்று தானே பார்த்து ஆதரவு தருகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு

February 6, 2025

‘‘காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சீரமைக்கும். இங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் வேறு நாடுகளில் குடியேற வேண்டும்’’ என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதே நேரம் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், “பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது.

பாலஸ்தீன மக்களை இடம்பெயர வைக்கும் முயற்சிகள் மூலம், பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்படுமானால் அதனை சவுதி அரேபியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது. சவூதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளுக்கோ, சமரசங்களுக்கோ உட்பட்டது அல்ல” என்று தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்களை கட்டாய இடமாற்றம் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “இரு நாடுகள் தீர்வின் அடிப்படையில் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய நிர்வாகத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று சீனா நம்புகிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காசாவை கையகப்படுத்துவது குறித்த ட்ரம்ப்பின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன், “பாலஸ்தீனியர்களை அவர்களது சொந்த மண்ணில் இருந்து விலக்கி வைக்கும் எந்தவொரு திட்டமும் மேலும் மோதலுக்கு வழிவகுக்கும். பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களின் நிலைமைகள் மாறினால், வர்த்தகத்தை துண்டித்தல், தூதரை திரும்பப் பெறுதல் என இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை துருக்கி மறுபரிசீலனை செய்யும்” என குறிப்பிட்டார்.

“ட்ரம்பின் காசா திட்டம் சர்வதேச குற்றத்தின் கீழ் வரும். இது சட்டவிரோதமானது, ஒழுக்கக்கேடானது மற்றும் முற்றிலும் பொறுப்பற்றது. அதோடு, ட்ரம்ப் கூறி இருப்பது முட்டாள்தனமானது. கட்டாய இடப்பெயர்வுக்கு தூண்டுவது ஒரு சர்வதேச குற்றம். சர்வதேச சமூகம் 193 நாடுகளால் ஆனது. அமெரிக்காவின் விருப்பத்தை, புறக்கணிக்க வேண்டிய நேரம் இது.” என்று பாலஸ்தீன பிரதேசத்துக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து வாஷங்டனில் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பேற்போம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/china-saudi-arabia-turkey-strongly-oppose-trumps-announcement-to-capture-gaza/

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இங்கு களத்தில் கூட அப்படியான ஒரு நிலைப்பாடும் இருந்தது.

ட்ரம்ப் வருவதால் உலகத்திற்கே பெரும் கேடு என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருந்தேன். என்ன கேடு, அவர் எங்கே யுத்தம் செய்யப் போகின்றார் என்ற ஒற்றை வரிக் கேள்விகள் தான் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன.

ஒரு மனிதனை புரிந்து கொள்வதற்கு எங்களுக்கு எவ்வளவு நாட்களும், எத்தனை நிகழ்வுகளும் தேவை. இவர் போன்ற ஒருவரால் சர்வமும் நாசம் தான். 

20 இலட்சம் மக்களை 'நீங்கள் உங்கள் மண்ணை விட்டு வேறு எங்கேயாவது போங்கள்...................' என்று சொல்லுவது எந்த யுத்தம் அளவிற்கும் கொடுமையானதே. என்ன ஒரு திமிரும், அறியாமையும் வேண்டும் இப்படிச் சொல்லுவதற்கு.

சூடானில் பாடசாலையில் கொடுக்கப்படும் அந்த ஒரு நேர உணவிற்காகவே பாடசாலை போகும் அந்தச் சிறுவர்கள், அமெரிக்க உதவியை நிற்பாட்டிய பின், இன்று என்ன செய்வார்கள், என்ன சாப்பிடுவார்கள் என்ற அந்த நினைவே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றது. இதுவா இவர் வந்தால் உலகத்திற்கு கிடைக்கும் நன்மை. அதுவும் ஒரு வருடச் செலவே சில பில்லியன் டாலர்கள் மட்டுமே.

பக்கத்தில் இருக்கும் நாடு கனடா. முழு உலகத்திலேயேயும் உற்ற தோழன் அது தான். அதனுடனேயே தகராறா............ இத்தனைக்கும் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் போகும் குடியேறிகளும், போதைப் பொருட்களும் தான் மிக அதிகம். கனடாவை பகைப்பதால், பயப்படுத்துவதால், என்ன சமாதானம் இங்கே கிடைத்து விடப்போகின்றது.

இங்கு அமெரிக்க உள்நாட்டில் இவருடைய மற்றும் இவரின் சகாக்களின் நடவடிக்கைகளை நீதிமன்றின் மூலம் கேள்வி கேட்கலாம். ஆனால், இவர்களின் அறியாமையினாலும், அதிகாரம் உள்ள திமிரினாலும் உலகிற்கு வந்து சேரப் போகும் கேடுகளுக்கு எவரைப் போய் கேட்பது.....................😌.

முற்றிலும் உண்மை… நான் இந்த களத்திலும் சரி, tweeter இல் சரி, வேலையிடத்தில் சரி டிரம்பிற்கு எதிராக்க் கதைத்து பார்த்ததில் தெரிந்த உண்மை, எங்கட ஆக்கள் நினைக்கினம் டிரம்ப் எங்களுக்கு support என்று… இதுதான் மூனாக்களும் நினைச்சவை நல்லா வாங்கிகட்டட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of ‎map and ‎text that says '‎MN qcito GRIENE u ححن N GOLFOF GOLFOFAMERICA GOLF OF AMERICA (FORMERLY GAZA) M m wW aN س كسمه ISRAEL EGYPT‎'‎‎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.