Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

01 MAY, 2025 | 08:56 PM

image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

01__7_.jpg

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

01__6_.jpg

தொழிலாளர்களிற்காக அன்று முதல் இன்றுவரை இந் நாட்டில் செயற்படுகின்ற ஒரே கட்சி தமிழ் அரசுக் கட்சி தான். தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான நம்பிக்கையை பெற்ற பிரதான கட்சியும் எமது கட்சி தான்.

இப்படியாக உழைக்கும் தொழிலாளர்களிற்காகவும் மக்களுக்காகவும் எப்போதும் உண்மையாக குரல் கொடுத்து வருகிற நிலையில் ஆட்சியில் உள்ள அனுரகுமார தரப்பினர் தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு கடந்த காலங்களில் ஏமாற்றியவர்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கோட்டாபாய ராஜபக்ச 51 வீதத்திற்கு மேல் வாக்கெடுத்து ஐனாதிபதியாகிய போதும் அதே மக்களால் துரத்தியடிக்கப்பட்டதை பார்த்திருந்தோம்.

சிங்கள மக்களாலே தான் நான் வந்தேன் வந்தேன் என கூறிக் கொண்டிருந்த கோட்டாவிற்கே இதே கதி என்றால் கேவலம் வெறுமனே 42 வீதத்தில் வந்த உங்களுக்கு என்ன நடக்குமோ. ஆகவே பொய்யான வாக்குறுதி வழங்கி மக்களை ஏமாற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றாமல் உள்ளீர்கள். ஆக மொத்தத்தில் பொய்யான வாக்குறுதிகளையே வழங்கி உள்ளீர்கள். எனவே உங்கள் வழியை நீங்கள் சரி பண்ணாவிட்டால் உங்களுக்கும் இது தான் நடக்கலாம். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றாதீர்கள்.

குறிப்பாக நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளில் மக்களின் காணிகள் மக்களிடமே வழங்கப்படும் என்று கூறியிருந்தீர்கள். படையினர் வசமுள்ள மக்கள் காணியை விரைவில் விடுவிப்போம் என்றும் கூறியிருந்தீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கு மாறாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளீர்கள். உங்களுடைய இந்தச் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.

உங்களது வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக கைவாங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் யாழ் மண்ணிற்கு வரமுடியாமல் கால் வைக்க முடியாமல் செய்வோம். 

எங்களை ஏமாளிகள் என கருத வேண்டாம். ஏமாற்றுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. அதற்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம்.மேலும் இன்றைய மே நாளில் நாம் சில தீர்மானங்களையும் எடுத்துள்ளோம். 

குறிப்பாக இராணுவ கையிருப்பில் உள்ள எமது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

இன்றைக்கு நாட்டில் நாளாந்தம் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தேர்தல் வருகிறபோது குறைப்பது மாதிரி குறைத்துக் கொண்டாலும் மறுபக்கம் விலை வாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

குறிப்பாக சீனியை விட உப்பின் விலை அதிகரித்துள்ளது. அதிலும் ரஜலுணு என உப்பிற்கு ஒரு புதிய பெயரை வைத்தவர்கள் அதைப் பற்றிக் கேட்டால் பெயரைப் பார்க்காதீர்கள் ருசியைப் பாருங்கள் எனச் சொல்கிறார்கள்.

தமிழ் பெயரை சிங்களப் பெயராக அவர்கள் மாற்றுவார்களாம். அதைப் பற்றி கேட்டால் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். ஆக தமிழ் பெயரை அவர்கள் இங்கு மாற்றலாம். தாங்கள் தமிழ் பெயரை வைக்க தயாரில்லை.

இவ்வாறானவர்கள் தான் எங்களுக்கு வந்து உபதேசம் செய்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாத்திலே இதெல்லாம் நடக்கிறதென்றால் இனி என்ன என்ன எல்லாம் நடக்க போகிறதோ என்று பார்க்கலாம்.

சர்வதேச நாணய நிதிய ஓப்பந்தம் தங்களது அடிப்படைக் கொள்கைக்கு மாறானது எனக் கூறி அதற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றவர்கள் இன்றைக்கு அந்த ஒப்பந்தத்தில் எதனையும் மாற்றாது அப்படியே ஏற்றுக் கொண்டு செயற்படுகின்றனர்.

கடன் மறுசீரமைப்பு செய்கிற போது தொழிலாளர வர்க்கத்திற்கு செய்யும் துரோகம் என்று சொன்னவர்கள் அதனையே இன்று பெருமையாக பேசிவருகிற நிலைமையை காணக்கூடியதாக உள்ளது. 

தங்களை இடது சாரிகள் என காட்டிகொண்டு மோசமான ஆட்சி செய்பவர்கள் தான் இந்த அனுரகுமார ஆட்சியாளர்கள். 

உங்களது தலைவர் ரோஹன விஜயவீர தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறியிருக்கின்றார் என்றால் நீங்களும் உண்மையான இடதுசாரிகள் என்றால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என சொல்லுங்கள். இல்லலாவிட்டால் சிவப்பு சட்டை அணிவதில் அர்த்தமில்லை தொழிலாளர்களுக்கு நன்மை அளிப்பதாக கூறிக் கண்டு முதலாளித்துவ கொள்கையில் பயணித்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு எப்படி நன்மையளிக்க முடியும். எனவே முதலாளித்துவ கொள்கையை விட்டு விலகி உங்களது பழைய ஆரம்பத்திற்கு வாருங்கள். 

லெலினிஸ கோட்பாட்டிற்கு வாருங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், அப்படியாக உங்களால் திரும்பி வர முடியாவிட்டால் மக்களிடம் செல்ல முடியாத நிலை உங்களுக்கு விரைவில் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/213449

  • கருத்துக்கள உறவுகள்

கதிரைகள். எல்லாம் நிரம்பிவழிகின்றன சுமத்திரனுக்கு செல்வாக்கு ஏறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இந்தாளே யாழ் மண்ணில் கால் வைக்க யோசிக்குது.

அந்தாளை எப்படி கால் வைக்காமல் பண்ணுவார்.

அந்தாளின் பாதுகாப்பிலேயே இந்தாள் வந்துபோகுது.

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களின் பின் சும்:

நாம் யாழ் மண்ணில் கால்வைக்க விட மாட்டோம் என சொன்னதை செய்துகாட்டியுள்ளோம்.

எமக்கு பயந்து அனுர சப்பாத்து போட்டுத்தான் யாழ் மண்ணில் இறங்க கூடியதாக இருந்தது.

42 minutes ago, Kandiah57 said:

கதிரைகள். எல்லாம் நிரம்பிவழிகின்றன சுமத்திரனுக்கு செல்வாக்கு ஏறிவிட்டது.

அவருக்கு செல்வாக்கு ஏறுதோ இல்லையோ… நீங்கள் எழுதியதை வாசித்து இங்க பலருக்கு பிளட் பிரசர் ஏறப்போது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு கோவம் வந்திட்டுதாம். இனி சிங்களவன் இருந்த மாதிரி தான்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தாளே யாழ் மண்ணில் கால் வைக்க யோசிக்குது.

அந்தாளை எப்படி கால் வைக்காமல் பண்ணுவார்.

அந்தாளின் பாதுகாப்பிலேயே இந்தாள் வந்துபோகுது.

சும்மர் போட்டிருகிற சேர்ட் கலரைப்பார்த்தாலே அவர் யாருடன் நிற்கிறார் என்று தெரியுமே..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேடை வீராவேச பேச்சுக்களில் இன்னும் 70,80களில் இருந்த மாதிரி அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருக்கிறார் நம்ம சுமந்திரன். இவருக்கு பாடம் எடுத்த வாத்தியார் அந்த மாதிரியான ஆள் தானே 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அனுரகுமார தரப்பினர் தொடர்ச்சியாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி வருகின்றனர்.

தலிவர் எவ்வழியோ தோழர்களும் அவ்வழியே..

4 hours ago, ஏராளன் said:

லெலினிஸ கோட்பாட்டிற்கு வாருங்கள், சம்பள உயர்வு கொடுங்கள், அப்படியாக உங்களால் திரும்பி வர முடியாவிட்டால் மக்களிடம் செல்ல முடியாத நிலை உங்களுக்கு விரைவில் ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்

என்னடாப்பா இந்த மனுசனும் லெனிசம் கதைக்குது ....கவனம் அண்ணோய்,இந்தியா தூதரகம்,அமெரிக்கா தூதரகம் எல்லாம் ஏறி இறங்க வேணும் தமிழ் மக்களுக்காக ஏறி இறங்க வேணும் ....சிவப்பு சேர்ட்,சிவப்பு சித்தாந்தம் எல்லாம் அவையளுக்கு பிடிக்காது ...நீங்கள் சூழியன் வெட்டி ஓடுவியல்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

கதிரைகள். எல்லாம் நிரம்பிவழிகின்றன சுமத்திரனுக்கு செல்வாக்கு ஏறிவிட்டது.

வீரசிங்கம் மண்டபத்தில் ஆகக்கூடியது 300 பேர் என்று பார்த்தால் யாழ்மாநகரசபை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் வந்தாலே போதும். மேதினம் என்றால் மேதின பேரணியாக வந்து ஒரு திறந்த வெளியில் குறிப்பாக அந்தக்காலத்தில் முற்றவெளியில்நடக்கும் மாபெரும் பெரும் கூட்டம் நடைபெநறும். மேதினப் பேரணியைக் கட்சிகள் தங்கள் பலத்தைகக் காட்டப்பாவிப்பார்கள். ஆனால் வழமைக்கு மாறாக அதுவும் தேர்தல் நேரத்தில் ஒரு சிறிய மண்டபத்திற்குள் சுருக்க வெுண்டிய காணம் என்ன?

மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்!

2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுடன் நினைவுகூருகிறது.

குறிப்பாக கொழும்பில் குறைந்தது 15 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர்.

முக்கிய மே தின பேரணிகள் இங்கே:

கொழும்பு

தேசிய மக்கள் சக்தி (NPP): தேசிய மக்கள் சக்தி அதன் முக்கிய பேரணியை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துகிறது.

இந்த இடத்தில் அரசியல் கூட்டங்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் காலி முகத்திடலுக்கு திரும்புவதை இந்த நிகழ்வு குறிக்கிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP): SLPP யின் பேரணி நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP): கொழும்பு 10, டார்லி வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் முன்னாள் தலைவர் டி.பி. இளங்கரத்னவுக்கு மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு நினைவு நிகழ்வை நடத்துகிறது.

முன்னணி சோசலிசக் கட்சி: அவர்களின் பேரணி கிருலப்பனை லலித் அதுலத்முதலி மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பிற குறிப்பிடத்தக்க இடங்கள்: ஹைட் பார்க், விஹாரமஹாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கம், கொழும்பு நகராட்சி மன்ற வளாகம், ஆர்மர் வீதி, ஈ.ஏ. குணசிங்க சிலைக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டம், பி.டி. சிறிசேனா மைதானம், தபால் தலைமை அலுவலகம், கொஸ்கசந்தி மற்றும் பொது நூலகத்தில் கூடுதல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

கொழும்புக்கு வெளியே

ஐக்கிய மக்கள் சக்தி (SJB): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாகலை நகரில் பிற்பகல் 2:00 மணிக்கு SJB தனது பேரணியை நடத்துகிறது.

இதில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வஜன பலய (மக்கள் சக்தி கட்சி): இந்தக் கட்சி, வாரக்காபொல வாராந்திர சந்தை மைதானத்தில் காலை 10:30 மணிக்கு “தொழிலாளர்கள் தொழில்முனைவோரை நோக்கி” என்ற தலைப்பில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்கிறது.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமை தாங்குகிறார்.

இலங்கை தமிழரசுக் கட்சி : ITAK வின்பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது.

பேரணிகள் காரணமாக இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பணியில் உள்ள போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1430151

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இந்த வீராவேசத்தை ஏன் கடந்தகால அரசாங்கங்களின் மேல் இவர் காட்டவில்லை? இதே தவறுகள் அப்போதும் நடந்ததே. இவர் சந்திக்க போனபோது, அனுரா இவருக்கு பதவி உத்தரவாதம் வழங்கவில்லை என்கிற கோபத்திலா இப்படி அனல் கக்குகிறார்? எலி தானாக போய் பொறியில் தலை வைக்கப்போகிறது போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

கதிரைகள். எல்லாம் நிரம்பிவழிகின்றன சுமத்திரனுக்கு செல்வாக்கு ஏறிவிட்டது.

அவருக்கு செல்வாக்கு ஏறுதோ இல்லையோ… நீங்கள் எழுதியதை வாசித்து இங்க பலருக்கு பிளட் பிரசர் ஏறப்போது.

கந்தையா அண்ணா சொன்னதை வைத்து இங்கே பலருக்கு பிளட் பிரசர் உயரத்திற்கு செல்லும் என்பது உண்மை தான். ஆனால் அப்படி அவர்கள் பதட்டமடைய வேண்டிய களநில இல்லை என்று சொல்கின்றார்கள். சிங்கல மக்கள் கூட ஜேவிபியின் ஏமாற்றுகளை விளங்கி கொள்ள தொடங்கிவிட்டனராம் ஆனால் தமிழர்களுக்கு ஜேவிபி தான் தமிழர் காப்பாளன் என்ற நம்பிக்கை. இது வரை எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவுக்கு பொய் புரட்டுக்களை தமிழர்களுக்கு ஜேவிபி அள்ளி வீசுகின்றதாம். தமிழர்களுக்காக பல உயிர் தியாகம் செய்து கடந்த காலங்களில் போராடிய கட்சி தான் ஜேவிபி என்று மட்டும் தான் இன்னும் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அதுசரி, இந்த வீராவேசத்தை ஏன் கடந்தகால அரசாங்கங்களின் மேல் இவர் காட்டவில்லை? இதே தவறுகள் அப்போதும் நடந்ததே. இவர் சந்திக்க போனபோது, அனுரா இவருக்கு பதவி உத்தரவாதம் வழங்கவில்லை என்கிற கோபத்திலா இப்படி அனல் கக்குகிறார்? எலி தானாக போய் பொறியில் தலை வைக்கப்போகிறது போலுள்ளது. 

அவர் சுமத்திரன். அரசியல்வாதி. என்ற பெயரிலுள்ள. பிழைப்புவாதி கடந்த காலத்தில் அரசாங்கம்கள். அவரை கவனித்து கொண்டன. எனவே அவர்களின் குற்றங்கள் குறைகளை அவர் கவனிக்கவில்லை ரணில் 20 அல்லது 60. மில்லியன் ஒதுக்கீடு செய்த ஞாபகம் ஆனால் இந்த அரசாங்கம் அவரின் பாதுகாப்பு கார் எல்லாவற்றையும் பிடுங்கி விட்டது விடுவாரோ சும்மா இலங்கையில் பிரபல சட்டத்தரணி சுற்றவாளியை குற்றவாளி என்று நிறுவார். அதேபோல குற்றவாளியை சுற்றவாளி என்றும் நிறுவுவார். நீதிமன்றம்கள். நீதிபதிகள் அவர். நினைத்தபடி தீர்ப்பினை. வழங்குவார்கள் அவரால் முடியாத ஒன்றே ஒன்று தமிழருக்கு தீர்வை பெற முடியாது மட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனால் சும்மா சவால் மட்டுந்தான் விடமுடியும், வேறெதுவும் முடியாது. அனுரா அரசால் ரொம்ப கலங்கிப்போய், கேள்விக்குறியாக இருக்கிறது அவரது பிழைப்பு. அதனாலேயே அடிக்கடி அவர்களை சீண்டுகிறார். எத்தனை தடவை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து, மேடைகளில் பேசி, மக்களை சந்தித்து விட்டு சென்று விட்டார். அப்பவெல்லாம் பாத்துக்கொண்டுதானே இருந்தவர், அப்போ தன் வீரத்தை காட்டியிருக்கலாமே, ஏன் பேசாமல் இருந்தவர்? இப்போ தேர்தலுக்காக மக்களை உசுப்பேற்ற வாய் கிழிய கத்துகிறார். அனுரா, நாட்டின் ஜனாதிபதி. வடபகுதி மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். அவர் யாழ்ப்பாணத்திற்கு வருவதை இவர் எப்படி தடுக்க முடியும்? முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டுமேன். மக்கள் அனுராவுக்கு வாக்களிப்பதற்கும், அவர்கள் வடபகுதிக்கு வருவதற்கும் யார் காரணம்? அதற்கு முதலில் பதிலை கண்டுபிடித்துவிட்டு சவால் விடலாமே? இல்லாத கட்சிக்கு, ஒரு பதில் தலைவர், செயலாளர். நான்குபேருக்கு ஒரு கட்சி. இந்த லட்ஷணத்தில சவால் வேற. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சுமந்திரனால் சும்மா சவால் மட்டுந்தான் விடமுடியும், வேறெதுவும் முடியாது. அனுரா அரசால் ரொம்ப கலங்கிப்போய், கேள்விக்குறியாக இருக்கிறது அவரது பிழைப்பு. அதனாலேயே அடிக்கடி அவர்களை சீண்டுகிறார். எத்தனை தடவை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து, மேடைகளில் பேசி, மக்களை சந்தித்து விட்டு சென்று விட்டார். அப்பவெல்லாம் பாத்துக்கொண்டுதானே இருந்தவர், அப்போ தன் வீரத்தை காட்டியிருக்கலாமே, ஏன் பேசாமல் இருந்தவர்? இப்போ தேர்தலுக்காக மக்களை உசுப்பேற்ற வாய் கிழிய கத்துகிறார். அனுரா, நாட்டின் ஜனாதிபதி. வடபகுதி மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். அவர் யாழ்ப்பாணத்திற்கு வருவதை இவர் எப்படி தடுக்க முடியும்? முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டுமேன். மக்கள் அனுராவுக்கு வாக்களிப்பதற்கும், அவர்கள் வடபகுதிக்கு வருவதற்கும் யார் காரணம்? அதற்கு முதலில் பதிலை கண்டுபிடித்துவிட்டு சவால் விடலாமே? இல்லாத கட்சிக்கு, ஒரு பதில் தலைவர், செயலாளர். நான்குபேருக்கு ஒரு கட்சி. இந்த லட்ஷணத்தில சவால் வேற. 

நீங்கள் சில மாதங்கள் முன்னர் தூக்கிக் கொண்ட "காவடியை" இறக்கி வைத்து விட்டீர்களா அல்லது இன்னும் தோளில் இருக்கிறதா😂?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வசாவிளான் பகுதியில் சில காணிகள் விடுவிக்கப்பட்டதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

நீங்கள் சில மாதங்கள் முன்னர் தூக்கிக் கொண்ட "காவடியை" இறக்கி வைத்து விட்டீர்களா அல்லது இன்னும் தோளில் இருக்கிறதா😂?

எதற்கு இப்போ இந்த அனாவசிய கேள்வி? சுமந்திரனின் கபடத்தனத்தை, கையாலாகாத்தன்மையை எடுத்துக்கூறியதாலா? யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவேன், நல்லது செய்தால் பாராட்டத்தயங்க மாட்டேன். ஒருவரை கண்மூடித்தனமாய் நம்பி, சாமரம் வீசி, அவர்களின் தவறுகளை மூடி மறைக்கவும் மாட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ளவர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழரின் காணிகளுக்கும் ஆபத்து; வடக்கில் அரசு ஆக்கிரமிக்கப் போகும் 5940 ஏக்கர் காணிகள்

sumanithran.jpg

புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றும் காணிகளின் உறுதிகளில்லாத தமிழர்களின் வடக்கு மாகாணத்திலுள்ள காணிகளை ஆக்கிரமிக்கும் பாரிய திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது.இதற்கமைய வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை அரசு ஆக்கிரமிக்கப்போகின்றது.இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத்தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஜனாதிபதி சட்டத்தரணி இது தொடர்பில் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களுக்கும் அவசர கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் காணிகளைக்கபளீகரம் செய்யும் விதத்தில்அரசு விடுத்துள்ள வர்த்தமானிஅறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம்28ஆம் திகதி வரை காலக்

கெடு விதித்திருக்கும் சுமந்திரன்,அரசு இந்த விடயத்தில்

வர்த்தமானியை வாபஸ் பெறத் தவறுமானால் 28 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக சாத்வீக வழிமுறையில் சட்ட மறுப்புப்போராட்டம் ஒன்று ஆரம்பம் ஆகும் என்றும் எச்சரித்துள்ளார்.

வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்த அரசு வர்த்தமானி யூடாக எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை

வெற்றிலைக்கேணியில் உள்ள பொது மண்டபத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்து அவசர கோரிக்கை விடுத்து ,அரசியும் எச்சரித்துள்ள சுமந்திரன் மேலும் கூறுகையில்,

ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதிகளாக இருக்கும் போது அவர்களது காணிகளை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல் அதை நாங்கள் அனுமதிக்க முடியாது

இந்த காணி நிர்ணய கட்டளைச் சட்டம் என்பது இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1931 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதிலே யாரும் பயன்படுத்தாத தரிசு நிலக் காணிகள் அரச காணிகள் என சொல்லப்பட்டுள்ளது. யாராவது காணிகளை உபயோகித்து விட்டு கைவிட்டிருந்தால் இந்த சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பூர்வாங்க அறிவித்தல் பிரசுரிக்கலாம். அந்த பூர்வாங்க அறிவித்தால் பிரசுரித்து மூன்று மாத காலத்தில் காணி உரிமை உள்ளவர் காணி ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். முன்வைக்காது விட்டால் அக்காணி அரச காணியாக பிரகடனப் படுத்தப்படும். இதுதான் கணி காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விடயம்.

உறுதி உண்டு என்று கோரிக்கை விடுத்தால் அந்த ஆவணங்களை சோதித்துப் பார்த்து உறுதி நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அக் காணி விடுவிக்கப்படும். இவ்வாறான நிலையில் இங்குள்ளவர்கள் தாங்கள் பாவிக்கும் காணி தொடர்பான கோரிக்கைகளை எழுத்து மூலமாக முன்வைக்க வேண்டும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இப் பிரதேசத்திலே பலகாலம் பாரிய இடம் பெயர்வு நடந்தது.இதனால் காணி உறுதிகள் இல்லாமல் போயிருக்கலாம். காணி அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்படாது இருந்திருக்கலாம். காணி உறுதி உரிமையாளர் பல காலத்துக்கு முன்னால் இறந்திருக்கலாம்.

இவ்வாறாக நீண்ட இடைவெளி இருக்கின்ற நிலையிலே இதில் உரிமை இருப்பது ,உறுதி இருப்பது என்று என்று சொல்வது சற்று கடினமாக இருக்கும். உங்களது ஆவணங்களை பரிசோதித்து பார்த்து என்ன இருக்கின்றது என்ன இன்னும் வேண்டும் என்ற நிலைமையை அவதானிக்க வேண்டும். எவ்வளவு பேரிடம் ஆவணங்கள் இருக்கின்றன என்பதை கொண்டுதான் அரசுடன் பேசலாம்.

இவ்வாறான ஒரு நிலையில் புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம். உங்களுக்கு இங்கே காணி இருக்குமானால் தயவு செய்து இங்கு வந்து அல்லது சட்டபூர்வ அற்ரோனிக் தத்துவக்காரரை நியமித்து காணி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.அப்படி காணியில் அக்கறை இல்லையென்றால் இங்கு காணி இல்லாத எமது மக்களுக்கு இனாமாக அதனை எழுதிக் கொடுங்கள்.தயவு செய்து உங்களின் காணிகள் அரச காணிகளாக போவதை அனுமதிக்க வேண்டாம்.

இந்தியாவிலே தற்போது ஒரு இலட்சத்தை அண்மித்த எமது மக்கள் இருக்கிறார்கள். சர்வதேச சட்டத்தில் அவர்கள் அகதி என்றே இருக்கின்றார்கள். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதியாக இருக்கின்ற போது அவர்களது நிலங்களை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.

மார்ச் 28ஆம் திகதியிடப்பட்டஇந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டுதினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு வாபஸ் பெற காலக்கெடு – மே 28வரை – வழங்குகின்றோம். அந்தத்திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசுவாபஸ் பெறாது விட்டால் ஏனையதமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் மக்களை இணைத்துக்கொண்டுஅந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம்

“இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல.ஒட்டுமொத்த முழுத் தமிழினமும் தமிழ்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப்போகின்ற போராட்டம். தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்கவேண்டிய ஒரு தேவை வந்துள்ளது.தமிழினத்தின் கருத்தை இந்தப்போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம்முன் வைப்போம் என்றார்.

https://akkinikkunchu.com/?p=323150

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனோடு சேர்ந்து போராடப்போபவர்களுக்கு ஒரு அறிவித்தல்! அவருக்கு வாக்களியுங்கள், உங்கள் காணிகளை மீட்டுத்தருவார்.   

ஆமா, உறுதி இருக்கிறது, உரிமகாரரும் சொந்த நாட்டிலேயே இருக்கிறார்கள் அகதிகளாக. அவர்களின் காணியில் விகாரை அமைத்து சொந்தமாக்கி வைத்திருக்கிறார்கள் பௌத்த மகா சங்கத்தினர். அவர்களுக்கெதிராக சவால் விட மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

495019532_1130111732465017_5270486384023

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மீன்பிடி மற்றும் கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

M. A. Sumanthiran 

5h  ·

ஜனாதிபதிக்கு நான் அனுப்பிய கடிதம்:

The letter I sent to the President:

495024944_1212552176902319_5638129080137

495570814_1212552236902313_8344142671242

494905657_1212552180235652_7558300827111

495068741_1212552240235646_3552275118918

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிட காணொளி: 👉 https://www.facebook.com/100011887622942/videos/pcb.1919938458412390/726041803086513 👈

👆 சுமந்திரனை கிழித்து தொங்க விட்ட... கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன்.

  • கருத்துக்கள உறவுகள்

மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி

May 7, 2025 11:54 am

மே 28 வரை அரசாங்கத்திற்கு காலகெடு – மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி

வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியீட்டியிருக்கின்றது. மக்கள் தந்த இந்த வெற்றியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கின்றோம்.

வடக்கு மற்றும் கிழக்கில் சுமார் 58 சபைகளில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிட்டது. இதில் குறைந்தது 40 சபைகளில் நிர்வாகங்களை நடத்துவதற்கு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஆறு மாத காலத்தில் தமிழ் மக்கள் இலங்கை தமிழரசு கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது ஒரு பிம்பம் உருவாகியிருந்தது.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி வென்று விட்டது, மக்கள் ஆணை கிடைத்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. எனினும், ஆறு மாத காலத்தில் தற்போது மக்கள் ஆணை எங்களுக்கு கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சி பெரு வெற்றியை பதிவுசெய்துள்ளது. வடக்கிலும் வவுனியாவை தவிர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் தமிழரசு கட்சி பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். விசேடமாக எங்கள் பகுதிகளில் ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுக்கின்றோம். இதன்படி, கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிப்பை உடன் மீளப் பெறவேண்டும்.

உடனடியாக இந்த வர்த்தமானி அறிவிப்பு மீளப் பெறப்பட வேண்டும். மக்கள் ஆணையுடன் இந்த கோரிக்கையை நாங்கள் விடுக்கின்றோம். எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாங்கள் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம்.

அரசாங்கம் இந்த வர்த்தமானியை மீளப் பெறாமல் இருந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி இதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

https://oruvan.com/government-has-until-may-28th-to-respond-tamil-arasu-party-prepares-for-major-protest-with-peoples-mandate/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.