Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு மலேசியா பதிலடி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார்.

மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இந்தியாவின் இந்த கருத்துக்கு மலேசியா வெளியுறவு அமைச்சர் அல்பார் கண்டனம் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தி ஸ்டார் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தினால் நல்லது. மலேசியர்கள் குறித்தும், மலேசிய விவகாரங்கள் குறித்தும் அது கவலைப்படத் தேவையில்லை.

எங்களது நாட்டுப் பிரச்சினைகள் குறித்து, எங்களது நாட்டுச் சட்டப்படி நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.

இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய அரசு, இந்தியர்கள் குறித்துக் கவலை தெரிவித்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அவர்கள் மலேசிய குடிமக்கள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அது தவறானது.

மலேசிய குடிமக்களாக இருப்பவர்கள் - அவர்கள் எந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சரி - மலேசியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

சட்டத்தை மீறி நடக்க முயன்றால், நாங்கள் அதை தடுக்கத்தான் செய்வோம்.

மலேசியாவில் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். எனவே இனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் பிரச்சனை எழுப்பினால் மலேசியா சிதறிவிடும் என்று கூறியுள்ளார் அல்பார்.

தற்ஸ்தமிழ்.கொம்

-------------------

தென் ஆசிய நாடுகளுக்கும் (இந்தியா உட்பட்டவை) தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் (மலேசியா சிங்கப்பூர் உட்பட்டவை) எப்பவும் கொள்கை அளவில் ஒத்துப் போறதில்லை. காரணம் ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பொருளாதாரப் போட்டா போட்டியே.

மலேசியாவில் தமிழர் விவகாரத்தை இந்தியா தனது பொருளாதார நலன் கருதி தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறதே தவிர அங்குள்ள தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதற்கு எள்ளளவும் கரிசணை கிடையாது என்பதே உண்மை. எப்படி ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் தனது பிராந்திய நலன் வேண்டி ஆதரவளித்ததோ அப்படி.. இதையும் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சாதமாக்கும் வகையிலும் மலேசியாவை ஒரு அரசியல் சாதகமற்ற தளமாக்கி சர்வதேசத்துக்குக் காட்டவும் முதலீட்டாளர்களுக்குக் காட்டவும் இந்தியா இதை கையாள எண்ணியுள்ளது. அதை தமிழக சாக்கடை அரசியல்வாதிகளூடு செய்ய முனைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழர் அக்கறையில்லாத கட்சிகளே அதாவது காங்கிரஸ் கட்சி கூட இது விவகாரத்தில் முண்டியடித்து அறிக்கை விட்டதும் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சி வெளிப்பட்டது.

அண்டை ஈழத்தில் தமிழர்கள் சிங்களப் பயங்கரவாத அரசின் வன்முறைக்கு தினமும் இறக்கிறார்கள்.. மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் சிறீலங்கா அரச படைகளால் வகைதொகையின்றிக் கைதாகிறார்கள்.. அங்கெல்லாம் மெளனம் காத்ததுடன் சிறீலங்கா அரசுக்கு ஆயுத மற்று பொருளாதார உதவி செய்யும் இந்திய மத்திய அரசுக்கு என்னடா திடீர் பாசம் மலேசிய தமிழ் மக்கள் மீது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டார்கள்..!

ஆனால் இந்தியாவின் சூழ்ச்சி என்பது அதன் பொருளாதார போட்டியாளர்களின் சரிவை வேண்டுவதும் தன்னை நோக்கி முதலீட்டாளர்களை இழுப்பதும் தான். இந்திய மத்திய அரசும் ஏதோ தான் இந்த விவாகரத்தில் அக்கறையற்றவர் போல ஆரம்பத்தில் காட்டிக் கொண்டதும்.. பின்னர் தமிழகத்தில் இருந்து எழும் அழுத்தம் காரணமாக தான் தலையிடுவது போலவும் நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.

மலேசிய தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் இந்தியாவை நம்பி நிச்சயம் பெற முடியாது. தமிழகத்தில் உள்ள ஒரு சில தமிழுணர்வு மிக்க அரசியல்வாதிகளைத் தவிர மிகுதியானோரின் ஆதரவுக் குரலென்பது மத்திய அரசின் சொல்லுக்கு ஏற்ப எழுவதும் அடங்குவதும் ஆகும். அவை போலியானவை. இந்திய அரசியல் மயமானவை. இவற்றை நம்பி மலேசிய தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பின் இந்தியா தனது நலன் பூர்த்தியாகும் வேளையில் மலேசிய தமிழர்களையும் ஈழத்தமிழர்களைப் போல பாவித்துவிட்டு தூக்கி எறிவது நிச்சயம் நடக்கும். இறுதியில் உள்ள உரிமைகளையும் இழந்து மலேசிய தமிழ்மக்கள் மலேசிய அரசிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்தியா தோற்றுவிக்கும். இதற்காக மலேசிய அரசுடன் நெருங்கிச் சென்று வியாபாரம் பேசவும் இந்தியா தயங்காது. தன்னை நோக்கி பொருளாதார முதலீடுகளைக் கவர மலேசியாவுடன் ஒப்பந்தங்களை இயற்றவும் அதற்கான சந்தர்ப்பங்களை தேடவும் அதன் மூலம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விவகாரத்தைப் பயன்படுத்தவுமே இந்தியா முயற்சிக்கும்.

எனவே மலேசிய தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளை தாங்களே போராடிப் பெற முனைவதுடன் யாரையும் முழுமையாக நம்பி அவர்களின் வழிநடத்தலின் பெயரில் போராட்டங்களை தீர்மானிக்கக் கூடாது. மலேசிய அரசவை விட இந்தியா ஆபத்தானது என்பதை மலேசிய தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு கூட மலேசிய தமிழ் மக்கள் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் என்ற நிலையில் நின்று எழுந்ததிலும் இந்திய மத்திய அரசின் ரகசிய குரலுக்கு அமைய எழுவதே அதிக சாத்திமானது. எனவே மலேசியத் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்துக்கான ஆதரவை இந்தியாவை முழுமைக்கும் நம்பி ஏற்படுத்திக் கொள்வது மலேசிய அரசிடம் சரணாகதி அடைவதற்குச் சமனானது.

மலேசிய மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவதுடன் உலகத்தமிழினத்தின் ஆதரவை அதற்கு வேண்டிச் செயற்படுவது இந்தியாவையும் மலேசியாவையும் இவ்விடயத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அக்கறை செய்ய அதிகம் வறுபுறுத்தும். இன்றேல் அவர்கள் தங்கள் சுயநலன்களை கவனிப்பதற்காக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போல நாடகமாடிக் கொண்டே அவற்றைச் சீரழித்துவிடுவார்கள்..! இதுவிடயத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் அறிக்கைப் போரை நம்பி.. மலேசிய தமிழ் மக்கள் ஏமாந்தும் விடக் கூடாது. இந்தியா மலேசியாவை விட சூழ்ச்சி மிக்க நாடு..! இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அரசு. அதை அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் தெளிவுறக் காட்டிவிட்டுள்ளனர்...!

மலேசிய தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது. அதை சர்வதேச அரங்கிற்கு உலகத் தமிழர்களின் ஆதரவுடன் வெளிப்படுத்தும் அதேவேளையில் எந்த அரச சக்திகளையும் முழுமையாக நம்பி விடயங்களைத் தீர்மானிக்காமல் தங்களின் உரிமைகள் தொடர்பில் தேவைகள் தொடர்பில் தாங்களே விடயங்களைத் தீர்மானிப்பதே சிறந்தது. போராட்ட வெற்றிக்கு வகை செய்யும். அரசுகளுக்கு உண்மையான அழுத்தங்களை வழங்கும்.

Edited by nedukkalapoovan

தங்கள் சுயநலன்களை கவனிப்பதற்காக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போல நாடகமாடிக் கொண்டே அவற்றைச் சீரழித்துவிடுவார்கள்..! இதுவிடயத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் அறிக்கைப் போரை நம்பி.. மலேசிய தமிழ் மக்கள் ஏமாந்தும் விடக் கூடாது. இந்தியா மலேசியாவை விட சூழ்ச்சி மிக்க நாடு..! இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அரசு. அதை அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் தெளிவுறக் காட்டிவிட்டுள்ளனர்...!

உண்மையைத்தான் சொல்லியிருக்கிர் நெடுக்ஸ்

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

அதெண்டால் 100வீதம் உண்மைதான் :)கொழும்பிலையும் பல நுறு இந்திய வம்சாவழி தமிழர் கைது இதுக்கும் இந்தியா ஒரு ஒப்புசபபபிலல்லா அறிக்கையாவது விடலாமே

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப்படைகளிடம் கடலில் உயிர்களையே தொலைத்துக் கொண்டிருக்கின்றது தமிழ்நாடு.

இங்கே எல்லாம் தன் சொந்த மக்களின் உணர்வுகளை மிதித்து அரசியல் நடத்தும் இந்திய போக்கு மலேயதமிழர்களின் பால் முதலைக்கண்ணீரதான் வடிக்க முடியும்!

பார்பானின் சட்டைப் பையுக்குள் இருக்கும் இந்திய அரசியல் அதிகாரம் வெளிப்பட்டால் தான் விடிவு இந்தியாவுக்கும், அதன் அயல் நாடுகளுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமான பார்வை நெடுக்ஸ்

உண்மையின் தோலை உரித்துக் காட்டுகின்ற பொருத்தமான ஆதாரங்களும் வேறு!

ஆரம்பத்தில் சமாதானத்தின் சம்பந்தியோ என்று என் பார்வை உங்களை நினைக்க வைத்து விட்டது.

ஆதலால்தான் பதிவுகளால் இம்சைப்படுத்தி விட்டேன் துவக்கத்தில் மன்னிக்கவும் பழையன வற்றுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணை.. நல்ல கருத்துக்கள்..

மலேசியா மட்டுமல்லாமல் சிங்கப்பூரிலும் தமிழர் நிலை மோசமே. ஆனால் அவர்கள் மலேசியா மாதிரி போராட்டமெல்லாம் செய்யும் சாத்தியம் மிகமிகக் குறைவு. சிங்கப்பூரில் பெரும்பாலான தமிழர்கள் கல்வி கற்றுச் சிறப்புறுவதில்லை. சிலர் நல்ல நிலைக்கு வருகிறார்கள். பெரும்பாலோர் குறைந்த சம்பளத்துக்குத் தொற்சாலைகளிலும், பேப்பர் போடுதல், கார் கழுவுதல் போன்ற வேலைகளிலுமே ஈடுபடுகிறார்கள். இதற்கு அங்குள்ள ஒருவித கல்வித்தரப்படுத்தலும் ஒரு காரணம் எனக் கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியாது.

மலேசியாவில் பூமிபுத்திரா என்கிற சட்டப்படி மலாய்கள் எதிலுமே முன்னுரிமை பெறுகின்றனர். இந்தச் சட்டத்துக்கு நோக்கம் அங்குள்ள சீனர்களின் ஆதிக்கத்தை அழிப்பது. ஆனால் இதுபோன்ற சட்டங்களால் இந்திய வம்சாவழியினரும் பாதிப்படைகிறார்கள். இலங்கைச் சிக்கல் போலத்தான். இலங்கையும் மலேசியாவிடமிருந்துதான் தரப்படுத்துதல் திட்டத்தைப் பாடமாகக் கற்றுக்கொண்டதாக எங்கோ வாசித்த ஞாபகம். தெரிந்தவர்கள் விளக்கவும்.

மலேசியா சிங்கப்பூர் இரு நாடுகளும் இந்தியா பங்களாதேஷ் மாதிரியான நாடுகளிலிருந்து குறைந்த கூலிக்கு வேலையாட்களை எடுக்கின்றனர். சிங்கப்பூரிலே ஒரு பங்களாதேஷ் கூலி வேலைக்காரரின் சம்பளம் ஒரு நாளைக்கு 17 டொலர்கள். குப்பை அள்ளுவது, கூட்டுவது கட்டட கூலி வேலை போன்றவற்றை இவர்கள் செய்வார்கள். ஏற்கனவே பின்தங்கியிருக்கும் தமிழர்களுக்கு இவர்களின் வரவால் இன்னும் சம்பளப் பிரச்சினை. ஏனென்றால் இவர்கள் வேலை செய்ய மறுத்தால் முதலாளிமார் இந்தியாவிலிருந்தோ பங்களாதேஷிலிருந்தோ ஆட்களைப்பிடித்துவிடுவார்கள??. :unsure:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள். இந்தியாவின் முன்னாள் தலைமைத்துவங்கள் தமிழர் பால் கொண்ட இரக்கத்தினால் ஆரம்பத்தில் உதவின என்ற கருத்து இன்றும் எம்மிடையே பலருக்கு உண்டு. இந்தியாவின் தலைவர்கள் எனும் போது தமிழ் நாட்டுத் தலைவர்களைத் தவிர்த்தே நான் சொல்கிறேன். ஏனெனின் உண்மையான தமிழ் உணர்வோடு உதவிய உதவிக்கொண்டிருக்கிற தமிழகத் தலைவர்களும் சாதாரண மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியப் பிரிவினை எனும் பூச்சாண்டியினால் அடக்கப் படுகிறார்கள் என்பதே நிஜம். மேலும் இந்தியாவிடம் அயல் நாட்டுறவுக் கொள்கைகளைப் பொறுத்த மட்டில் இரண்டு முக்கிய குணங்கள் உண்டு: ஒன்று பலம் வாய்ந்த இன்னொரு நாடு சம்பந்தப் பட்டிருந்தால் சைலன்டாக வாலைச் சுருட்டிக் கொள்வது. இரண்டு அப்படி ஒரு எதிர்ச் சக்தி இல்லாவிட்டால் பிராந்திய வல்லரசுச் சட்டையைப் போட்டுக் கொண்டு தான் என்ன பிடிக்கலாம் அந்தக் குழம்பிய குட்டையில் என்று தேடுவது. இரண்டாவது அணுகுமுறையில் தான் சிறி லங்கா மாட்டுப் பட்டிருக்கிறது. பங்களாதேஷ் அப்படித் தான் உருவாக்கப் பட்டது.அந்தக் காலப் பகுதியில் "இறைமை, ஆட்புல ஒருமைப் பாடு" போன்ற பதங்கள் இந்தியத் தலைமைத்துவத்திற்குப் பரிச்சயமாக இருக்கவில்லை. முதலாவது அணுகு முறைக்கு மியன்மார், திபெத் என்பன நல்ல உதாரணங்கள். இவ்விரு நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் இருப்பதால் வாலைச் சுருட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.இப்போது இன்னொரு உதாரணம் இந்த வால் சுருட்டும் அணுகு முறைக்குக் கிடைக்கப் போகிறது. வெளிநாட்டமைச்சர் சொல்வது போல எதுவும் நடந்து விடப் போவதில்லை. ஒரு சம்பிரதாயக் கவலை கூட இந்தியா மலேசியாவிடம் தெரிவிக்காது.ஏனெனில் மலேசியாவின் மத்திய கிழக்கு நண்பர்களின் மசகெண்ணெயில் தான் இந்தியாவின் பொருளாதாரம் ஓடுகிறது. எனவே மலேசிய இந்தியர்கள் தாமாகத் தனித்துத் தான் எதையாவது பெற முயல வேண்டும். இந்தியா இவர்களோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவே மாட்டாது. மேலும் இந்தியாவில் உள்ள மலேசிய முதலீடுகளை தனது சில லட்சம் மக்களுக்காக இழக்கும் அளவுக்கு இந்தியா மக்கள் நலன் பேணும் ஒரு நாடும் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்குசாமி! உங்கள் இணைப்புக்கும் அதன்பின் வரும் பின்னணிக்கும் நன்றிகள் நல்லகருத்துகளை இணையுங்கள் தற்காலகட்டத்திற்கேற்ப மாதிரி செய்திகளை இணையுங்கள்.அதற்கேற்ப விவாதியுங்கள் அல்லது ஈழத்துக்கு தேவையானவற்றை விவாதியுங்கள் அதை விட்டு இராமர் பாலமும் பார்ப்பனியர் பிரச்சனையும் இன்றைய காலகட்டத்தில தேவையா?

மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

நெடுக்ஸ்..அருமையான கருத்து. இந்திய அரசின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

அருமை..அருமை. இதைவிடவும் ஒருவரால் இந்தியாவின் கோரமுகத்த தோலுரித்துக் காட்டமுடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் கடைப்பிடித்த அதே இழி-பார்ப்பனக் கொள்கையைத்தான் மலேசியத் தமிழர் பிரசனையிலும் கடைப்பிடிக்கும். இதை இப்போதே மலேசியத் தமிழர்கள் கண்டுகொள்வது மிக மிக அவசியம். இல்லையேல் எம்மைப்போல் அவர்களும் இறுதியில் இந்தியாவினால் காட்டிக்கொடுக்கப்படவேண்டி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி,

ராமர் பாலத்தை விடுங்கள். ஆனால் பார்ப்பன உளவுத் துறையினால் நாம் படும் அவலங்களை பற்றி மட்டும் பேச வேண்டாம் என்று கேட்கவேண்டாம். நாங்கள் இவ்வளவு காலமும் படும் வேதனைகளுக்குக் காரணமே இந்த பார்ப்பனர்கள்தானே ???!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் இணைப்புக்கும், விளக்கத்துக்கும்.இந்தியா எல்லா இடமும் மூக்கை நுழைப்பது போல் மலேசியாவிலும் நுழைத்து நன்றாக வாங்கிகட்டியுள்ளது.

இந்தியா மற்றவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை நிறுத்துவது நல்லது. மிகச்சிறிய நாடான மலேசியாவிடமிருந்தே இவ்வாறு வாங்கிக் கட்டுகிறது என்றால், மற்ற நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒருபக்கத்தில், தமிழீழத்திலிருந்து ஏமாற்றம். மறுபக்கம் மலேசியாவிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது. இரண்டுமே தமிழர்கள் சம்பந்தப்பட்டது. தலைவர் அவர்களின் உரைக்குப் பின்னர், தமிழ்நாட்டில், ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் கசிகின்றன.

Edited by Thamilachchi

உண்மையை சொல்லப்போனல் இந்தியா ஒரு கண் துடைப்புக்கு மாத்திரம் தான் மலேசியா விடயத்தில் தனது விரக்த்தியை வெளியிட்டது.அது கூட இவ்வளவு எதிர்ப்பு ஏற்ப்படும் என்று நினைத்துக்கூடப் பார்த்து இருக்காது.பக்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா விடயத்தில் கூட பாராமுகம் காட்டும் இந்தியா எப்படி எங்கேயோ இருக்கும் மலேசியா விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளும்?

முதலைக் கண்ணீர் வடிக்கப்போய் இப்போ அவமானத்தால் இரத்த்க் கண்ணீர் வடிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த மக்களையே பன்சாபிலும், அசாமிலும், கஷ்மீரிலும் வகை தொகையின்றி இலங்கை பாசிச அரசுக்கு நிகராக கொன்று குவித்த உலகின் மிகப் பெரிய ஜனனாயக அரசு வேறு நாட்டில் வாழும் ஒரு மக்கள் பிரிவுக்காக உதவி புரியும் என்று யாரும் நம்பினால்...என்ன சொல்வது ?

ஈழத் தமிழர்கலினதும், மலேஷியத் தமிழர்களினதும் உயிருக்கான போராட்டத்தை தமது பேரம் பேசும் பொருளாக, பொருளாதார விஷயமாகவும் கருதும் ஒரு நாடு ஒருபோதுமே எமக்கு விமோசனம் வாங்கித் தராது.

எனக்குத் தெரிந்த வரையில் உலகில் குறைவான அளவு அடக்குமுறைக்கு உட்பட்டு வாழும் தமிழர்கள் வாழும் நாடுகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை.

இவர்களுக்காக இந்திய அரசாங்கம் குரல் கொடுப்பது வேடிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலேசிய அரசு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை முதலாவதாக வாங்கலாம் என்று எதிர்பார்க்கபடும் போது இந்த பிரச்சனை ஏன் வந்தது :)

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார்.

மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இந்தியாவின் இந்த கருத்துக்கு மலேசியா வெளியுறவு அமைச்சர் அல்பார் கண்டனம் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தி ஸ்டார் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தினால் நல்லது. மலேசியர்கள் குறித்தும், மலேசிய விவகாரங்கள் குறித்தும் அது கவலைப்படத் தேவையில்லை.

எங்களது நாட்டுப் பிரச்சினைகள் குறித்து, எங்களது நாட்டுச் சட்டப்படி நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.

இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய அரசு, இந்தியர்கள் குறித்துக் கவலை தெரிவித்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அவர்கள் மலேசிய குடிமக்கள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அது தவறானது.

மலேசிய குடிமக்களாக இருப்பவர்கள் - அவர்கள் எந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சரி - மலேசியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

சட்டத்தை மீறி நடக்க முயன்றால், நாங்கள் அதை தடுக்கத்தான் செய்வோம்.

மலேசியாவில் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். எனவே இனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் பிரச்சனை எழுப்பினால் மலேசியா சிதறிவிடும் என்று கூறியுள்ளார் அல்பார்.

தற்ஸ்தமிழ்.கொம்

-------------------

தென் ஆசிய நாடுகளுக்கும் (இந்தியா உட்பட்டவை) தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் (மலேசியா சிங்கப்பூர் உட்பட்டவை) எப்பவும் கொள்கை அளவில் ஒத்துப் போறதில்லை. காரணம் ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பொருளாதாரப் போட்டா போட்டியே.

மலேசியாவில் தமிழர் விவகாரத்தை இந்தியா தனது பொருளாதார நலன் கருதி தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறதே தவிர அங்குள்ள தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதற்கு எள்ளளவும் கரிசணை கிடையாது என்பதே உண்மை. எப்படி ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் தனது பிராந்திய நலன் வேண்டி ஆதரவளித்ததோ அப்படி.. இதையும் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சாதமாக்கும் வகையிலும் மலேசியாவை ஒரு அரசியல் சாதகமற்ற தளமாக்கி சர்வதேசத்துக்குக் காட்டவும் முதலீட்டாளர்களுக்குக் காட்டவும் இந்தியா இதை கையாள எண்ணியுள்ளது. அதை தமிழக சாக்கடை அரசியல்வாதிகளூடு செய்ய முனைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழர் அக்கறையில்லாத கட்சிகளே அதாவது காங்கிரஸ் கட்சி கூட இது விவகாரத்தில் முண்டியடித்து அறிக்கை விட்டதும் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சி வெளிப்பட்டது.

அண்டை ஈழத்தில் தமிழர்கள் சிங்களப் பயங்கரவாத அரசின் வன்முறைக்கு தினமும் இறக்கிறார்கள்.. மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் சிறீலங்கா அரச படைகளால் வகைதொகையின்றிக் கைதாகிறார்கள்.. அங்கெல்லாம் மெளனம் காத்ததுடன் சிறீலங்கா அரசுக்கு ஆயுத மற்று பொருளாதார உதவி செய்யும் இந்திய மத்திய அரசுக்கு என்னடா திடீர் பாசம் மலேசிய தமிழ் மக்கள் மீது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டார்கள்..!

ஆனால் இந்தியாவின் சூழ்ச்சி என்பது அதன் பொருளாதார போட்டியாளர்களின் சரிவை வேண்டுவதும் தன்னை நோக்கி முதலீட்டாளர்களை இழுப்பதும் தான். இந்திய மத்திய அரசும் ஏதோ தான் இந்த விவாகரத்தில் அக்கறையற்றவர் போல ஆரம்பத்தில் காட்டிக் கொண்டதும்.. பின்னர் தமிழகத்தில் இருந்து எழும் அழுத்தம் காரணமாக தான் தலையிடுவது போலவும் நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.

மலேசிய தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் இந்தியாவை நம்பி நிச்சயம் பெற முடியாது. தமிழகத்தில் உள்ள ஒரு சில தமிழுணர்வு மிக்க அரசியல்வாதிகளைத் தவிர மிகுதியானோரின் ஆதரவுக் குரலென்பது மத்திய அரசின் சொல்லுக்கு ஏற்ப எழுவதும் அடங்குவதும் ஆகும். அவை போலியானவை. இந்திய அரசியல் மயமானவை. இவற்றை நம்பி மலேசிய தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பின் இந்தியா தனது நலன் பூர்த்தியாகும் வேளையில் மலேசிய தமிழர்களையும் ஈழத்தமிழர்களைப் போல பாவித்துவிட்டு தூக்கி எறிவது நிச்சயம் நடக்கும். இறுதியில் உள்ள உரிமைகளையும் இழந்து மலேசிய தமிழ்மக்கள் மலேசிய அரசிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்தியா தோற்றுவிக்கும். இதற்காக மலேசிய அரசுடன் நெருங்கிச் சென்று வியாபாரம் பேசவும் இந்தியா தயங்காது. தன்னை நோக்கி பொருளாதார முதலீடுகளைக் கவர மலேசியாவுடன் ஒப்பந்தங்களை இயற்றவும் அதற்கான சந்தர்ப்பங்களை தேடவும் அதன் மூலம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விவகாரத்தைப் பயன்படுத்தவுமே இந்தியா முயற்சிக்கும்.

எனவே மலேசிய தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளை தாங்களே போராடிப் பெற முனைவதுடன் யாரையும் முழுமையாக நம்பி அவர்களின் வழிநடத்தலின் பெயரில் போராட்டங்களை தீர்மானிக்கக் கூடாது. மலேசிய அரசவை விட இந்தியா ஆபத்தானது என்பதை மலேசிய தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு கூட மலேசிய தமிழ் மக்கள் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் என்ற நிலையில் நின்று எழுந்ததிலும் இந்திய மத்திய அரசின் ரகசிய குரலுக்கு அமைய எழுவதே அதிக சாத்திமானது. எனவே மலேசியத் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்துக்கான ஆதரவை இந்தியாவை முழுமைக்கும் நம்பி ஏற்படுத்திக் கொள்வது மலேசிய அரசிடம் சரணாகதி அடைவதற்குச் சமனானது.

மலேசிய மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவதுடன் உலகத்தமிழினத்தின் ஆதரவை அதற்கு வேண்டிச் செயற்படுவது இந்தியாவையும் மலேசியாவையும் இவ்விடயத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அக்கறை செய்ய அதிகம் வறுபுறுத்தும். இன்றேல் அவர்கள் தங்கள் சுயநலன்களை கவனிப்பதற்காக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போல நாடகமாடிக் கொண்டே அவற்றைச் சீரழித்துவிடுவார்கள்..! இதுவிடயத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் அறிக்கைப் போரை நம்பி.. மலேசிய தமிழ் மக்கள் ஏமாந்தும் விடக் கூடாது. இந்தியா மலேசியாவை விட சூழ்ச்சி மிக்க நாடு..! இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அரசு. அதை அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் தெளிவுறக் காட்டிவிட்டுள்ளனர்...!

மலேசிய தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது. அதை சர்வதேச அரங்கிற்கு உலகத் தமிழர்களின் ஆதரவுடன் வெளிப்படுத்தும் அதேவேளையில் எந்த அரச சக்திகளையும் முழுமையாக நம்பி விடயங்களைத் தீர்மானிக்காமல் தங்களின் உரிமைகள் தொடர்பில் தேவைகள் தொடர்பில் தாங்களே விடயங்களைத் தீர்மானிப்பதே சிறந்தது. போராட்ட வெற்றிக்கு வகை செய்யும். அரசுகளுக்கு உண்மையான அழுத்தங்களை வழங்கும்.

உண்மையிலேயே தரமான உள்நோக்கு நெடுக்ஸ்அண்ணா!!!!!

இதை நாம் முடிந்த அளவில் மலேசிய தமிழர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பாவம் அவர்கள் இந்தியாவின்

நயவஞ்சகம் தெரியாமல் இந்தியாவுடன் கூடி இருந்ததையும் இழந்துவிட போகிறார்கள். நல்காலதிற்கு

ஈழதமிழருக்கு எல்லாக்காலத்திற்கும் உகந்த ஒரு தலைவன் கிடைத்தான்....... எந்த சூறாவளிகாலத்திலும் நாம் கவுண்டுவிடாது தானும் தளர்ந்துவிடாது எமை கரைசேர்த்தான். பாவம் மலேசியர்கள் வீணாக மாட்டிவிடப்போகிறார்கள்..............

.. கருணாநிதி கூட தான் ஏதோ தமிழருக்கு குரல்கொடுப்பாதாக நாடகம் போடுகிறார். நாளும் நாளும் தமிழக மீனவரை சிங்களவன் கொல்லுகிறான் இவர் என்ன செய்து கிழித்தார்????

டில்லியில் இருந்து றோ காரன் வந்து அது புலிகள்மாதிரி ஒரு அறிக்கையை விட செலல்ல கமிசனரும் விடுவார்...... இவர் முதல்வர் இப்போ மலேசிய தமிழரின் சோகம் கண்டு பொங்கி எழுந்துவிட்டார்.

நல்ல கட்டுரை நெடுக்ஸ்! பராட்டுக்கள்!!

மலேசிய தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! இந்தியா கை கொடுக்கும் என்று நம்பி போராட்டங்களில் குதித்து விடாதீர்கள். கை கொடுப்பது போல் நடித்து தன் காரியம் (மலேசிய அரசாங்கத்திடம்) ஆனதும் அப்படியே உங்கள் காலை வாரிவிடும் இந்தியா!

ஆகவே சொந்த காலில் நீங்கள் நிற்கும் வண்ணம் உங்கள் அரசியல் பலத்தை கட்டி எழுப்புங்கள்! உலகத்தமிழர்களுடன் தொடர்புகளை பேணுங்கள்! அதுவே உங்கள் நியாயமான அரசியல் போராட்டத்தின் அடிப்படை காரணங்களை உலகமெங்கும் ஒலிக்க செய்யும்

முடிந்தால் இந்தியா, உங்கள் போராட்டத்தை சாக்காக வைத்து கொஞ்சம் ஆயுத வியாபாரமும் சில வர்த்தக ஒப்பந்தங்களும் மலேசிய அரசுடன் செய்து கொள்ளும். அவ்வளவு தான்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அவர்களே,

மலேசிய எம் தமிழ் உறவுகள் தொடர்பாக, இந்தியாவின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். ஆரோக்கியமான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்

அண்டை ஈழத்தில் தமிழர்கள் சிங்களப் பயங்கரவாத அரசின் வன்முறைக்கு தினமும் இறக்கிறார்கள்.. மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் சிறீலங்கா அரச படைகளால் வகைதொகையின்றிக் கைதாகிறார்கள்.. அங்கெல்லாம் மெளனம் காத்ததுடன் சிறீலங்கா அரசுக்கு ஆயுத மற்று பொருளாதார உதவி செய்யும் இந்திய மத்திய அரசுக்கு என்னடா திடீர் பாசம் மலேசிய தமிழ் மக்கள் மீது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டார்கள்..!

மலேசியத் தமிழ் உறவுகள், தங்களின் உரிமையை வென்றெடுப்பதற்குத் தீர்க்கமான வழியினைத் தேர்ந்தேடுக்கவேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுவிட்டார்கள்.

நன்றி

மறவன்

  • 2 weeks later...

நன்றி நெடுக்ஸ் இணைப்புக்கும், விளக்கத்துக்கும்.இந்தியா எல்லா இடமும் மூக்கை நுழைப்பது போல் மலேசியாவிலும் நுழைத்து நன்றாக வாங்கிகட்டியுள்ளது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்.

தனது சொந்த மக்களையே பன்சாபிலும், அசாமிலும், கஷ்மீரிலும் வகை தொகையின்றி இலங்கை பாசிச அரசுக்கு நிகராக கொன்று குவித்த உலகின் மிகப் பெரிய ஜனனாயக அரசு வேறு நாட்டில் வாழும் ஒரு மக்கள் பிரிவுக்காக உதவி புரியும் என்று யாரும் நம்பினால்...என்ன சொல்வது ?

ஈழத் தமிழர்கலினதும், மலேஷியத் தமிழர்களினதும் உயிருக்கான போராட்டத்தை தமது பேரம் பேசும் பொருளாக, பொருளாதார விஷயமாகவும் கருதும் ஒரு நாடு ஒருபோதுமே எமக்கு விமோசனம் வாங்கித் தராது.

பஞ்சாப் அச்சாம் மற்றும் காழ்மீர் போன்ற மாநிலங்களின் நடைபெற்று வரும் தீவிரவாத நடவடிக்களின் ஏறாளமான தீவிரவாதிகளை வெட்டையாடி வந்தது தொடர்ந்து அதை செய்து கொண்டு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்.

வழக்கை வாபஸ் வாங்க வைப்பதற்குப் பெயர் இராஜதந்திரம் அல்ல. அந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வைப் பெற்றுக் கொடு;கக முயலுவது தான் ராஜதந்திரம். எவ்வித தீர்வுமின்றி, மக்கள் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் போராட்ட்ததிற்கு என்ன பலன். போராட்டம் செய்யும்போது, கொலை, நீதிமன்றம், சித்திரவதைகள் என்று எதுவுமே கிடைக்காது என்று நம்பி அவர்கள போராட்டத்தில் இறங்கியிருக்கமாட்டார்கள். எனவே வழக்கை வாபஸ் வாங்க வைப்பது தான் தீர்வு என்பது என்ன நியாயம்?

எனக்குத் தெரிந்த வரையில் உலகில் குறைவான அளவு அடக்குமுறைக்கு உட்பட்டு வாழும் தமிழர்கள் வாழும் நாடுகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை.

இவர்களுக்காக இந்திய அரசாங்கம் குரல் கொடுப்பது வேடிக்கை.

மிகவும் அமைதியான முறையில் பேரணி நடத்தியவர்கலின் மீது பெண்கள் எனும் பாராமல் கொடுரமான தாக்குதல் நடத்தியதும் மட்டும்மில்லாமல் அவர்களை கொலை முயர்ச்சி தேச துரோகம் போன்ற வழுக்கு பதிவுசெய்ததையா குறைவான நடக்கைகல் என்கிறீர்கள்,

மலேசிய தமிழர்கள் மீதான தாக்குதலை இந்தியா அரசு கண்டிக்காமல் இலங்கை அதிபரா கண்டிப்பார், மிகவும் பிற்போக்காக சிந்தித்து எழுதி இருக்கிறார் நெடுக்கலப்போவன், இவர் நல்ல மனநல மறுத்துவரிடம் வைத்தியம் பார்ப்பது நல்லது.

Edited by rmsachitha

வழக்கை வாபஸ் வாங்க வைப்பதற்குப் பெயர் இராஜதந்திரம் அல்ல. அந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வைப் பெற்றுக் கொடு;கக முயலுவது தான் ராஜதந்திரம். எவ்வித தீர்வுமின்றி, மக்கள் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் போராட்ட்ததிற்கு என்ன பலன். போராட்டம் செய்யும்போது, கொலை, நீதிமன்றம், சித்திரவதைகள் என்று எதுவுமே கிடைக்காது என்று நம்பி அவர்கள போராட்டத்தில் இறங்கியிருக்கமாட்டார்கள். எனவே வழக்கை வாபஸ் வாங்க வைப்பது தான் தீர்வு என்பது என்ன நியாயம்?

வணகத்திற்குறிய தூயவன் அவர்களே,

அப்பிரச்சனைக்கு தீர்வுக்காக இந்திய அரசு கண்டனம் தெறிவிக்கவில்லை, மலேசிய தமிழர்கள எந்த காரணத்திற்க்காக அந்த பேரணிய நடத்தினார்கள் என்பதி தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள், இன்கிலாந்து அரசிடம்தான் அவர்களின் கோறிக்கைகளை வலியுறுத்தினார்கள், மலேசிய அரசு கண்மூடித்தனமான பெண்கள் என்றும் பாரமல் தாக்கியதைதான் இந்திய அரசும் சரி, தமிழக முதல்வரும் கண்டித்தார்களே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை. மலேசிய தமிழர்களின் பிரச்ச்னைக்கு தீர்வு என்பது அப்பார்பட்ட பிரச்சனை காட்டுமிறாண்டித்தனமான தாக்குதலை மத்திய அரசு கண்டித்தது எவ்வளவு பெறிய ஆறுதல்.

காலமும் மாறும் காட்ச்சியும் மாறும் மலேசியத்தமிழர்களின் அவல நிலைகல் ஒரு நால் மாறியே தீரும். அதற்க்கான முயற்ச்சியின் முதல் வெற்றி இந்திய அரசு மலேசியத்தமிழர்களுக்கு குரல் கொடுத்ததுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.