Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவை குருவி பபா சொன்னவர் "யாழ் ஒரு பேருந்து போல, உறுப்பினர்கள் பயணிகள் போல ஏறி இறங்கிக் கொண்டேயிருப்பார்கள்" என

இதைச் சொன்ன குருவிப் பபாவே யாழ் எனும் பேருந்தை விட்டு இறங்கிப் போட்டார்.. ஆனால் நீங்கள் அதன் அர்த்தம் புரிந்து இப்பவும் பாவிக்கிறியள்.

அழகான எழுத்து நடை.. கை வீசம்மா கைவீசு.. யாழ் களத்தில படைப்புக்காய் கை வீசு...என்றதா இருக்குது. பாராட்டுக்கள். :wub:

Edited by nedukkalapoovan

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இதைச் சொன்ன குருவிப் பபாவே யாழ் எனும் பேருந்தை விட்டு இறங்கிப் போட்டார்.. ஆனால் நீங்கள் அதன் அர்த்தம் புரிந்து இப்பவும் பாவிக்கிறியள்.

அவர் இறங்கினால் இன்றும் நான் குருவிபபா என கதைத்து கொண்டிருப்பேனா?

சிலர் கூட இருந்தாலும் இல்லாட்டிலும் யாழில் குருவி என்ற பெயரை மறக்க முடியுமா? அல்லது யாராவது குருவி பபாவை பற்றி பேசுவதை தான் நிறுத்தியிருக்கார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் வசம்பு அருமையன கருத்தாளர். அநாகரிகமாக கருத்தெழுதி பார்த்ததில்லை. உண்மை/மனசுக்கு பட்டதை/தனக்கு அறிந்ததை/தெரிந்ததை நேரடியக சொல்வதனால் சிலருக்கு பிடிப்பதில்லை என்பது கசப்பானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணணின் கருத்துக்கள் பலது புரிந்துகொள்ளக் கூடியவர்களாலே மட்டும் புரிந்து கொள்ள முடியும்.

நல்ல கருத்தாளன் மட்டுமல்ல ஒவ்வொரு கருத்துடனும் குசும்பையும் புகுத்தி அருமையாக வசனம் எழுதக்கூடியவர்.

எனது முன்னோடிகளில் இவரும் ஒருவர் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் வசம்பு ஒரு வி்த்தியாசமான கருத்தாளந்தான். அவரின் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமான போக்கு ரசிக்க கூடியது.....

அவர் இலங்கை அரசியலை அவ்வளாவாக ரசிக்கவில்லை போல...

உலக நடப்பையே அதிகமாக ரசிப்பவர். யதார்த்தவாதி...அதனாலேயே சிலபேருக்கு [கருத்து] விரோதி.....எந்தநிலையிலும் தன்கருத்தை மாற்றாதவர்.

நன்றி தூயா...

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலகா யாழ் வந்தபோது உங்கள் இந்த இணைப்பை வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது

மிக நன்றாக உள்ளது ........

பல பல பழை நினைவுகள்.... நான் யாழின் கருத்தாளனக வந்தது குறைவு. வசகனாகவே அடிக்ககடி வருவேன்.

நீங்கள் தமிழில் நல்ல எழுத்தாளியும் ஆகிவிட்டீர்கள்.

வாழ்த்துகள் தூயாஅக்கா. தொடருங்கள்.

(யாழ் ஒரு பஸ்வண்டிபோல........ எனில் நான் ஒரு கிராமத்து பயணி போல தேவை வரும்போது மட்டும் ஏறி கொள்வேன் அன்றாட பயணமெல்லாம் நடையில்தான்)

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பின் குசும்பு எனக்குப் பிடிக்கும் . நகைச்சுவை உணர்வு மிக்கவர் . அநாகரீகமாக எழுத மாட்டார் .

இந்திய சஞ்சிகைகளை விரும்பி படிப்பார் போல் உள்ளது ...........

இருந்தும் கருணாநிதியை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பார் .

தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் மாவட்ட செயலாளராகவோ , வாரியத்தலைவராகவோ இருந்திருப்பார் . :lol:

தூயா அக்கா வசம்பண்ணாவின் கருத்துக்களை கொஞ்ச நாட்களாக படிக்கின்றேன். அவர் நக்கலை மிகவும் நளினமாக செய்கின்றார். நல்ல ஞாபக சக்தி இருக்கின்றவர் போலும். அதே நேரத்தில் கொஞ்சம் கோபக்காரர் போல் தெரிகிறார் புதிதாக இணைந்த என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்கள் பதிவு . தொடருங்கள் உங்கள் பயணத்தை

  • தொடங்கியவர்

வசம்பண்ணாவை அனைவரும் தான் கவனித்து வருகின்றார்கள போல ;)

ஆகா நம்ம வம்பண்ணாவைப் பற்றி அழகாக எழுதி இருக்கிறீங்கள் :wub:

வசம்பு என்ற பெயரை ஏன் வசம்பு தெரிவு செய்தார்?. வசம்பு என்றால் என்ன? ஆராவது புலவர்கள் இருந்தால் சொல்லுங்கோ?.அல்லது வசம்பு நீங்கள் சொல்லுங்கோ

  • தொடங்கியவர்

வசம்பு என்ற பெயரை ஏன் வசம்பு தெரிவு செய்தார்?. வசம்பு என்றால் என்ன? ஆராவது புலவர்கள் இருந்தால் சொல்லுங்கோ?.அல்லது வசம்பு நீங்கள் சொல்லுங்கோ

வசம்பு என்பது ஒரு மருந்து :huh:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல யாபகசக்தி படைத்தவர் வசம்பு. வாதத்திறமை உடையவர்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு என்பது ஒரு மருந்து :huh:

வசம்பு என்பது ஒரு மருந்து என்று தான் நானும் கேள்விபட்டுள்ளேன்.இஞ்சியை காய வைத்து பாவித்தால் அது தான் வசம்போ அல்லது சுக்கோ என்று தெரியவில்லை.பழைய கள உறவுகளை மீட்டதிற்கு நன்றிகள் தொடர்ந்தும் பதியுங்கள் நானும் யாழ் என்னும் பேருந்தில் கிழமையில ஒருக்கா அல்லது இரண்டு தரம் தான் பயணிக்கிறனான் நேரம் கிடைத்தால் தூர பயணம் மேற்கொண்டால் யாழ் என்னும் பேருந்தில் அதிக நேரம் பயணிப்பேன்.அதில் உங்களின் பதிவையும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. :o

  • தொடங்கியவர்

வசம்பு என்பது ஒரு மருந்து என்று தான் நானும் கேள்விபட்டுள்ளேன்.இஞ்சியை காய வைத்து பாவித்தால் அது தான் வசம்போ அல்லது சுக்கோ என்று தெரியவில்லை.பழைய கள உறவுகளை மீட்டதிற்கு நன்றிகள் தொடர்ந்தும் பதியுங்கள்

புத்து, இதை வசம்பண்ணாவே தெளிவுபடுத்துவார் என நம்புவோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல யாபகசக்தி படைத்தவர் வசம்பு. வாதத்திறமை உடையவர்.

ஏதோ உங்களுக்குத் தான் தமிழ்ப் பற்றுப் போல, இந்திய ஊடகங்களைக் கொச்சைப்படுத்துவீர்களே கந்தப்பு. ...... அது யாபகம் அல்ல... ஞாபகம் என்று வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:) வாழ்த்துக்கள் தூயா தெடருங்கள் :D

உங்களுக்கு ஒரு உடாங் சம்பல் போட்டு வைச்சிருக்கிறேன்

சாப்பிடுங்கோ :lol::lol:

  • தொடங்கியவர்

:icon_idea: வாழ்த்துக்கள் தூயா தெடருங்கள் :rolleyes:

உங்களுக்கு ஒரு உடாங் சம்பல் போட்டு வைச்சிருக்கிறேன்

சாப்பிடுங்கோ :icon_idea::huh:

ஏன் இந்த கொலைவெறி??

இருந்தாலும் என் அளவிற்கு உடாங் சம்பல் போட யாருக்கும் தெரியாது :P

கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

சென்ற வியாழனன்று (24.07.08) காலையில் களத்திற்கு வந்தபோது தூயா எனைப்பற்றி பதிந்திருப்பதைக் கண்டேன். அதற்கு ஏனைய கள உறவுகள் விமர்சனம் வைத்திருப்பதையும் கண்டேன். எனவே கள உறவுகளின் விமர்சனங்களுக்கும் சேர்த்துப் பதிலளிப்பதற்காக இன்றுவரை காத்திருந்து எனது பதிலைப் பதிகின்றேன்.

முதலில் தூயாவிற்குத்தான் நன்றிகளைச் சொல்ல வேண்டும். இப்படியான ஒரு பதிவினை மேற்கொள்வதால் களத்தில் புதிதாக இணையும் கருத்தாளர்களுக்கு உதவியாக இருக்குமெனவே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் இப்பதிவுகளின் பின் வரும் ஏனைய கள உறவுகளின் நாகரீகமான விமர்சனங்களின் மூலம் எம்மை சுயபரிசோதனை செய்யவும் முடிகின்றதென்பது யதார்த்தமான உண்மை. இதனால் எல்லாப் புகழும் தூயாவிற்கே!!!!

களத்தோடு நெருங்கிய தொடர்புடைய எனது சில நண்பர்களின் தூண்டுதலாலேயே நானும் களத்திற்கு முதலில் பார்வையாளனாக வந்து சில தினங்களிலேயே கருத்தாளனாக இணைந்தும் விட்டேன். எனக்குக் கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி என்பதனாலேயும் கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே நேரம் இதுவரை மற்றவர்கள் வைக்காதது போலவும் ஒரு பெயரை வைக்க விரும்பினேன். அப்போது மனதில் உதித்தது தான் இந்த வசம்பு. வசம்பில் வம்பும் இருப்பதால் இது குசும்பிற்கும் பொருந்துவதால் சரியாக இருக்குமென்று இதையே தெரிவு செய்தேன். வசம்பு என்பது சில கள உறவுகள் குறிப்பிட்டிருப்பது போல் ஒரு மருந்து தான். இது ஒருவகைப் புல்லின் வேரிலிருந்து தயாரிக்கப்படுவது. வசம்பைக் கூடுதலாக மைனா வளர்ப்பவர்கள் அதற்கு வலிப்பு நோய் வராமலிருப்பதற்காக கொடுப்பதை நான் அறிந்திருக்கின்றேன். இஞ்சியைக் காயவைத்தால் வருவது வேர்க்கொம்பு. இதற்கும் வசம்பிற்கும் சம்பந்தமில்லை.

இன்றுவரை எவரையும் புண்படுத்தாது குசும்பாகவும், வம்பாகவும், நட்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். அதுபோல் தவறுகளைச் சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. என்னையும் அறியாமல் எவரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக இந்தச் சந்தர்பத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். களத்தில் எல்லோரும் நாகரீகமாகக் கருத்தாடுவதையே என்றும் விரும்புகின்றேன். அதனையே அநேகமான கள உறவுகளும் கடைப்பிடிக்கின்றார்கள்.

குடும்பத்தில் நான் தான் கடைக்குட்டி. அதனால் தம்பி தங்கை இல்லாத ஏக்கம் இருந்தது. சிறுவயதில் இது பற்றி அம்மாவிடம் கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளேன். அப்போதெல்லாம் அம்மாவின் பதில் சிரிப்பாக மட்டுமேயிருக்கும். அடிக்கடி கேட்டுத் தொல்லை கொடுத்ததால் ஒரு நாள் அம்மாவே என்னிடம் திருப்பிக் கேட்டா, சரி உன் ஆசைப்படி ஒரு தம்பிப் பாப்பாவோ அல்லது தங்கச்சிப் பாப்பாவோ பிறந்ததாலும், திரும்பவும் அவர்கள் உன் போல் என்னைக் கேட்டால் பிறகென்ன செய்வது?? இந்தக் கேள்வியிலுள்ள நியாயத்தால் தம்பி, தங்கை இல்லையென்ற ஏக்கம் இருந்தாலும் அத்தோடு அம்மாவிற்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் யாழ்க் களத்திற்கு வந்தபின் எனக்கு நிறைய தங்கைகள் இரசிகை, தூயா, வெண்ணிலா, அனிதா என்று நிறையவே கிடைத்தார்கள். ஆனால் தம்பியாக ஒரேயொரு தூயவன் மட்டுமே கிடைத்தார். பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும். காரணம் களத்தில் கருத்துக்களால் நாம் மோதிக் கொள்வதே அதிகம். அவை கருத்துக்களில் மாத்திரம் தான். தனிமடலில் என்னை அண்ணாவென தூயவன் அழைக்கும் அழகே தனி. அவர் மடல்களில் உண்மையான பாசம் கொப்பளிக்கும். அதனால் அவர் மீது நானும் உண்மையான பாசத்தையே வைத்திருந்தேன். களத்தில் என் கருத்தைக் கடுமையாகச் சாடி தூயவன் கருத்தெளிதினால், உடன் எனக்கொரு தனிமடலும் அனுப்புவார். அதில் அண்ணா என்னில் கோபிக்கிக்க மாட்டீர்கள் தானே அண்ணாவோடு தானே நான் மோதலாம் எனக் கேட்டிருப்பார். அவர் களத்தை விட்டு விலகுவதாக அறிவித்த போது உண்மையாகவே என் மனது வலித்தது. அவர் மீண்டும் தூயவனாக களம் வர வேண்டுமென்பதே என் பேரவா!!

அது போலவே களத்தில் நிறையவே நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் மூலம் நிறைய அறிவுசார் விடயங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்தன.

இப்படியான பல நன்மைகளுக்கு வழி சமைத்த யாழ் கருத்துக் களத்திற்கும் இச்சந்தர்பத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனி என் அன்பான கள உறவுகள் சிலரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கின்றேன்.

1)வேறு பெயர்கள்: வசம்பர்: அழைக்கத் தொடங்கியது சின்னப்பு

குசும்பர்: அழைக்கத் தொடங்கியது முகத்தார்.

வேறு ஐடி: தெரியலை

2)வசம்பு அண்ணாவும் சமையல்கட்டில் எழுத தவறவில்லை. எங்க சமையல்கட்டிற்கு அத்தனை மகிமை. செய்முறை எழுதாவிடினும், சில உதவிக்குறிப்புகளை வாரி வழங்கியுள்ளார். (எல்லாம் அனுபவம் போல) படித்து பயன் பெறுங்கள்.

3)வசம்பு அண்ணாவை பற்றி நான் அவதானித்த ஒரு விடயம், விவாதங்களில் அடிக்கடி "களத்து பெண்கள் என்ன சொல்கின்றார்கள் பார்க்கலாம்" போன்ற ஒரு வரி நிச்சயம் இருக்கும். பொல்லு குடுத்து அடி வாங்குவதில் அவருக்கு அத்தனை பிரியம். முன்னர் தமிழினி அக்கி தான் இதற்கு பல தடவைகள் நல்ல பதில்கள் எழுதியிருக்கின்றார். (கிகிகி)

4)சியாம் அண்ணாவை பற்றி எழுதிய போது, வசம்பண்ணாவே எங்கள் முதல் பட்டிமன்றத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றது என்ற அணியின் தலைவராக இருந்து, சிறப்பாக செயல்பட்டிருந்தார். சியாமண்ணாவும், வசம்பண்ணாவும் நண்பர்களா என ஆச்சர்யப்பட்டவர்கள் மறக்காமல் இதை படித்து பாருங்கள். யாழின் முதல் பட்டிமன்றமாக அமைந்த இந்த பட்டிமன்றத்தில் பல விடயங்கள் நடந்திருக்கு. அது பற்றி இன்னொரு பகுதியில் விவரமாக பார்க்கலாம்.

5)சிலவருடங்கள் தினமும் வசம்பண்ணா எழுதுவதை பார்த்து வருகின்றேன். அதில் நான் அவதானித்த ஒரு விடயம், வசம்பண்ணா அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார். எங்களில் பலர் அண்ணா, அக்கா, தங்கை, தம்பி என குறிப்பிடுவோம். ஆனால் வசம்பண்ணா அப்படியல்ல. சரிதானே வசம்பண்ணா? அனைவரையும் ஒரே முறையில் மரியாதையாக தான் அழைப்பார், கதைப்பார், விவாதங்களில் பங்கெடுக்கும் போது விளிப்பார்.

6)வசம்பண்ணாவிடம் எனக்கு பிடித்த இன்னொரு விடயம், பாரபட்சம் பாராமல் திறமையாளர்களை ஊக்குவிப்பதும், நன்றி சொல்ல வேண்டிய இடங்களில் யார் என்றாலும் நன்றி சொல்வது தான். இவரை பார்த்து நானும் இந்த நல்ல விடயத்தை கற்றுக்கொண்டு செயல்படுத்த முயற்சிக்கின்றேன்.

7)இதில் நான் பேருந்தில் ஏறிய நேரத்தில் இருந்து இன்றுவரை பயணிக்கும் வசம்பு அண்ணா, தொடர்ந்து எங்களுடன் பயணிக்க வேண்டும். வாழும் காலம் வரை யாழுடன் பயணிக்க வேண்டும்.

ஆரம்பத்திலிருந்து என் ஆக்கங்களை மறக்காமல் ஊக்கம் தரும் உங்களிற்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் வசம்பண்ணா.. :lol:

மீண்டுமொரு முறை உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இப்டியொரு பதிவை ஆரம்பித்ததற்காக.

1)வசம்பர் என அழைக்கதம் தொடங்கிய சின்னப்பு இப்ப அதையும் சுருக்கி வம்பர் ஆக்கிவிட்டார். நம்ம ஜம்மு என்னை வசபண்ணா என்றே அழைக்கின்றார்.

2)சமையல் கட்டில் என் கைவரிசையும் உண்டு தான். ஆனாலும் பொதுவாக ஏனைய இணையத்தளங்களில் நான் பார்த்த நல்ல விடயங்களை என் கள உறவுகளும் தெரிந்து பயனடைய இணைப்பது என் வழக்கம்.

3)முன்பு களம் கலகலப்பாக இருந்த காலத்தில் களத்்தில் எழுதும் பெண்கள் குறைவு. ஓரளவு அதிகமாக எழுதி வந்தவர் தமிழினி. அவரை மேன்மேலும் எழுத வைப்பதற்காக அப்பப்போ சீண்டுவேன். அது போல் நான் சீண்டிய இன்னொரு கள உறவு நித்திலா. அவவும் எனக்கு பதில் எழுதுவதற்காக அடிக்கடி எழுதுவா. ஆனால் இருவரும் தற்போது களத்தில் இல்லாதது வேதனையானது. நிறையப்் பெண்கள் (பெண் பெயரில் ஆண்களல்ல) களத்தில் இணைந்து தங்கள் திறைமைகளையும் வெளிக் கொணர வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. எனவே திறைமையுள்ள பெண்கள் களத்தில் இணைந்து உங்கள் திறைமைகளை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை வரவேற்று உற்சாகப்படுத்த பல கள உறவுகள் காத்திருக்கின்றோம்.

4)உண்மையில் நடைமுறையில் நான் பாடசாலை காலத்திலிருந்து பல பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்களில் கலந்து கொண்டிருந்தாலும் களத்தில் முதன் முதலாக நடந்த பட்டிமன்றம் எனக்கொரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது என்றால் அது மிகையாகாது. அதற்கும் எல்லாப் புகழும் தூயாவிற்கே!!!

5)பொதுவாகவே எமது பெயரை எம்மைவிட அடுத்தவர்கள் தான் அதிகமாகப் பாவிக்கின்றார்கள். அதனால் உறவுகள் தமக்கென வைத்துள்ள பெயரை நாமும் பாவிக்காது விட்டால் எப்படி?? அதனாலேயே எல்லோரையும் பெயரைக் கூறி ஆனால் மரியாதைக் குறைவில்லாமல் அழைப்பது என் வழக்கம்.

6)உண்மையில் பாராட்டுவதென்பது ஒவ்வொரு படைப்பாளியையும் மேலும் பல படைப்புக்களை படைப்பதற்கான ஊக்குவிப்பைக் கொடுக்கும் உன்னதமான ஒரு டானிக்.

7)யாழ்க் களத்தில் உங்கள் எல்லோருடனும் தொடர்ந்து பயனிப்பதே எனது விருப்பமும்.

வசம்பு ஒரு திறமையான கருத்தாளர். நகைச்சுவையானவர். நிறையப் பொது விடயங்களைப் படித்து வைத்திருப்பவர்.

ஆனால் அவர் விவாதம் செய்கின்ற போக்கு ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். அவருடைய கருத்துக்கு யாரும் பதில் எழுதினால், உடனே வடிவாகப் படித்து விட்டு எழுது, விளக்கமில்லாமல் எழுததாதே என்று கருத்துக்குக் கருத்து எழுதிக் கொண்டிருப்பார்.

உங்கள் விமர்சனத்திற்கு என் நன்றிகள். சில கருத்துக்களை முழுமையாக வாசிக்காமல் பதில்க் கருத்து எழுதியவர்களைத்தான் நான் அப்படி எழுதியிருக்கின்றேன். ஆனால் நீங்கள் எழுதியது போலல்லாது நாகரீகமாகவே எழுதியுள்ளேன். மற்றும் படி எவரையும் தரக்குறைவாக எழுத வேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஒருபோதுமில்லை.

வசம்புவின் கருத்துக்கள் வித்தியாசமானவை. சிந்திக்க தூண்டுபவை. பிடித்தது கருத்து எழுதுபவரை( செய்தி இணைப்பவரை) அடிக்கடி கேள்வி கேட்பார். நிறைய வாசிப்பார் போல தெரிகிறது. மொத்தத்தில் நல்ல கருத்தாளர். தூயாவுக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிடுவது போல் நான் நிறையவே வாசிப்பவன் தான். நீங்களும் நிறைய வாசிப்பவர் தானே?? உங்கள் கருத்துக்களும், இணைப்புக்களும் எங்களைப் போன்ற கள உறவுகளுக்கு நிறையவே உதவியிருக்கின்றன. அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உண்மைதான் வசம்பு அருமையன கருத்தாளர். அநாகரிகமாக கருத்தெழுதி பார்த்ததில்லை. உண்மை/மனசுக்கு பட்டதை/தனக்கு அறிந்ததை/தெரிந்ததை நேரடியக சொல்வதனால் சிலருக்கு பிடிப்பதில்லை என்பது கசப்பானது.

மிக்க நன்றிகள் உங்கள் விமர்சனத்திற்கும். எனக்கு எதையும் நேரடியாகவே சொல்லிப் பழகிவிட்டதால் அதுவே பழக்கமாகி விட்டது. என்ன செய்வது பல வேளைகளில் உண்மைகள் கசக்கத் தானே செய்கின்றது.

வசம்பு அண்ணணின் கருத்துக்கள் பலது புரிந்துகொள்ளக் கூடியவர்களாலே மட்டும் புரிந்து கொள்ள முடியும்.

நல்ல கருத்தாளன் மட்டுமல்ல ஒவ்வொரு கருத்துடனும் குசும்பையும் புகுத்தி அருமையாக வசனம் எழுதக்கூடியவர்.

எனது முன்னோடிகளில் இவரும் ஒருவர் :lol:

உங்கள் விமர்சனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். நான் உங்கள் முன்னோடி என்பது சும்மா குசும்பு தானே?? உண்மையில் நாங்கள் எல்லோரும் உங்கள் பின்னாடி தான். பல சீரியஸான விடயங்களைக் கூட நகைச்சுவையாக நீங்கள் கையாழும் விதம் அலாதியானது. களத்தில் என்றென்றும் உங்கள் பணி தொடர மனமார வாழ்த்துகின்றேன்.

உண்மையில் வசம்பு ஒரு வி்த்தியாசமான கருத்தாளந்தான். அவரின் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமான போக்கு ரசிக்க கூடியது.....

அவர் இலங்கை அரசியலை அவ்வளாவாக ரசிக்கவில்லை போல...

உலக நடப்பையே அதிகமாக ரசிப்பவர். யதார்த்தவாதி...அதனாலேயே சிலபேருக்கு [கருத்து] விரோதி.....எந்தநிலையிலும் தன்கருத்தை மாற்றாதவர்.

நன்றி தூயா...

உங்கள் விமர்சன்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது தாய் நாட்டு அரசியலை தவிர்த்து ஏனைய நாடுகளின் அரசியலை பார்க்க முடியுமா?? ஆனாலும் எனது தாய் நாட்டு அரசியலை யதார்த்தமாக கையாளும் விதத்தில் களமில்லை என்பதனாலேயே பல இடங்களில் தவிர்த்தாலும் சில இடங்களில் எனது கருத்தையும் பதிந்திருக்கின்றேன். பல விடயங்களை அலசி ஆராய்ந்தே எனது கருத்துக்களை பகிர்கின்றேன். அதனால் எனது கருத்துக்களிலோ, கொள்கையிலோ மாற்றங்கள் வரவேண்டியதில்லை எனவே நினைக்கின்றேன். தவறுகள் இருந்தால் மாற்றம் செய்வதிலும் தவறில்லை.

வசம்பின் குசும்பு எனக்குப் பிடிக்கும் . நகைச்சுவை உணர்வு மிக்கவர் . அநாகரீகமாக எழுத மாட்டார் .

இந்திய சஞ்சிகைகளை விரும்பி படிப்பார் போல் உள்ளது ...........

இருந்தும் கருணாநிதியை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பார் .

தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் மாவட்ட செயலாளராகவோ , வாரியத்தலைவராகவோ இருந்திருப்பார் . :unsure:

உங்கள் விமர்சனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். கொடுத்தது தான் கொடுத்தீர்கள் ஒரு MLA ஆகவோ அல்லது MPயாகவோ கொடுத்திருக்கக் கூடாதா?? அப்படியே நான் எம்மிக் குதித்து மந்திரியாகி இருப்பேனாக்கும். :( கலைஞர் கருணாநிதியை நான் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதாக நீீீங்கள் மட்டுமல்ல, வேறு சிலரும் நினைக்கின்றார்கள். ஆனால் கலைஞர் முன்பு எமக்குச் செய்த குறிப்பாக தமிழகத்திலிருக்கும் இலங்கை அகதிகளுக்குச் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கின்றேன். இன்று அவரின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற உண்மைகளையும் நாம் இலகுவாக மறந்து விடுகின்றோம். அதுபோல் எமது சுயநலம் மட்டுமே சார்ந்து ஒருவர் விமர்சிக்கப் படுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

தூயா அக்கா வசம்பண்ணாவின் கருத்துக்களை கொஞ்ச நாட்களாக படிக்கின்றேன். அவர் நக்கலை மிகவும் நளினமாக செய்கின்றார். நல்ல ஞாபக சக்தி இருக்கின்றவர் போலும். அதே நேரத்தில் கொஞ்சம் கோபக்காரர் போல் தெரிகிறார் புதிதாக இணைந்த என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது உங்கள் பதிவு . தொடருங்கள் உங்கள் பயணத்தை

புதிதாக இணைந்திருக்கும் உங்கள் விமர்சனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். கோபப்படுவதும் என்னிலுள்ள ஒரு குறைதான். அதனை நீங்களும் கண்டு பிடித்து விட்டீர்கள். முடிந்தவரை அதை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றேன்.

வசம்பண்ணாவை அனைவரும் தான் கவனித்து வருகின்றார்கள போல ;)

அனைவரும் கவனிக்கின்றார்கள் என்பது சந்தோசமாகவிருந்தாலும் ஒரு பக்கம் பயத்தையும் ஏற்படுத்துகின்றது. :rolleyes: காரணம் எனி கருத்தெழுதும் போது இன்னும் பொறுப்பாக எழுத வேண்டுமல்லவா??

ஆகா நம்ம வம்பண்ணாவைப் பற்றி அழகாக எழுதி இருக்கிறீங்கள் :lol:

என் இன்னொரு தங்கையின் வாழ்த்திற்கும் நன்றிகள். :lol:

வசம்பு என்ற பெயரை ஏன் வசம்பு தெரிவு செய்தார்?. வசம்பு என்றால் என்ன? ஆராவது புலவர்கள் இருந்தால் சொல்லுங்கோ?.அல்லது வசம்பு நீங்கள் சொல்லுங்கோ

நன்றிகள் உங்கள் கேள்விக் கணைகளிற்கு. இது பற்றிய விளக்கத்தை இதன் ஆரம்ப பகுதியில் கொடுத்துள்ளேன். வாசியுங்கள. இதற்கெல்லாம் புலவர்கள் ஏனுங்கோ??

நல்ல யாபகசக்தி படைத்தவர் வசம்பு. வாதத்திறமை உடையவர்.

நன்றிகள் உங்கள் விமர்சனத்திற்கும். களத்தில் உங்கள் பணியும் அளப்பரியது.

வசம்பு என்பது ஒரு மருந்து என்று தான் நானும் கேள்விபட்டுள்ளேன்.இஞ்சியை காய வைத்து பாவித்தால் அது தான் வசம்போ அல்லது சுக்கோ என்று தெரியவில்லை.பழைய கள உறவுகளை மீட்டதிற்கு நன்றிகள் தொடர்ந்தும் பதியுங்கள் நானும் யாழ் என்னும் பேருந்தில் கிழமையில ஒருக்கா அல்லது இரண்டு தரம் தான் பயணிக்கிறனான் நேரம் கிடைத்தால் தூர பயணம் மேற்கொண்டால் யாழ் என்னும் பேருந்தில் அதிக நேரம் பயணிப்பேன்.அதில் உங்களின் பதிவையும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. :lol:

உங்கள் விளக்கத்திற்கு நன்றிகள். இது பற்றிய எனது விளக்கத்தை இதன் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன்.

ஏன் இந்த கொலைவெறி??

இருந்தாலும் என் அளவிற்கு உடாங் சம்பல் போட யாருக்கும் தெரியாது :P

அட நீங்கள் ஏன் இந்தக் கொலைவெறி என்பதை அடிக்கடி பாவிக்கின்றீர்கள். அப்படி என்ன ஈடுபாடு அந்தக் கொலைவெறியில்?? :o

வசம்பண்ணா உங்கள் விளக்கம் அருமை. தூய அக்காவின் விமர்சனமும் உங்கள் விளக்கமும் நன்றாக உள்ளன. உங்களுக்கு களத்திலிருந்து நிறைய நன்மைகள் கிடைத்துள்ளது என்று கூறியிருக்கின்றீர்கள். புதிதாக வருகின்ற எங்களுக்காக விரிவாக உங்கள் கருத்துக்களை தரலாமென்று நினைக்கின்றேன். களத்தில் உங்கள் நண்பர்கள் எதிரிகள் இத்தனையாண்டுகளில் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் கொஞ:சம் விரிவாக சொல்லுங்களேன்.

தூயா அக்கா இந்த தம்பியை சோதிக்கின்றீர்கள். அடுத்த உங்கள் அண்ணனைப்பற்றிய நிறை குறைகளை விரைவாக தாருங்கள்.

ஒரு துப்பறியும் கதையை படிப்பதுபோன்ற பரபரப்பு அக்கா தொடருங்கள் உங்கள் பயணத்தை :rolleyes::o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தூயா இன்றுதான் மிகுதி பதிவுகளை படித்தேன் மதிப்பிற்குரியவர்கள் என்கிற தலைப்பிலேயே சியாமையும் எழுதி என்னை தூரநின்று பார்கப்போகிறீர்களாக்கும் என்று நினைத்தேன் ஆனால் அண்ணன் என்று பக்கத்தில் இழுத்தற்கு நன்றிகள்.ஆனாலும் நானே சொல்லியிருக்கிறேன் சியாமை பிடித்தவர்களிற்கு சாத்திரியை பிடிக்காது. அதற்கு பல காரணங்கள் உண்டு சியாமிடம் நிறைய நேர்மை உண்மையிருந்தது. ஆனால் பல விடயங்கள் சம்பவங்கள் வாழ்வை புரட்டிப்போடும் அதேபோல சாத்திரியிடம் எங்கும் எதிலும் வெற்றிபெறவேண்டும் தனித்துவத்தை நிலைநாட்டவேண்டும் என்கிற ஒரு வெறிமட்டுமே இருந்தது.காரணம் அதனால் அன்று ஒரு சிலருக்கு மட்டுமே பிடித்திருந்த நேர்மையான சியாம் இன்று பலருக்கும் தெரிந்த பாதிப்புகளின் பிரதிபலிப்பு வில்லங்கமான சாத்திரியாய் மாறிவிட்டார்.ஆனாலும் யாரையும் காலைவாரியதில்லை கவிட்டதில்லை இன்றுவரை வசம்பும் எனது நண்பர்தான் ஆனால் உணர்வுகளில்தான் வித்தியாசம் நான் யாரிடமும் பகைமை பாராட்டியதும் கிடையாது. யாருடனும் எப்பொழுதும் கருத்தாட தயாராவே நான் இருக்கிறேன்.ஆனாலும் இப்ப எனக்கு கவிதையெல்லாம் எழுதவருகிதேயில்லை

Edited by sathiri

  • தொடங்கியவர்

அட நீங்கள் ஏன் இந்தக் கொலைவெறி என்பதை அடிக்கடி பாவிக்கின்றீர்கள். அப்படி என்ன ஈடுபாடு அந்தக் கொலைவெறியில்?? :mellow:

தமிழ் கொஞ்சமா தெரிந்த காரணம் தான் கீகிகிகி

  • தொடங்கியவர்

இப்ப எனக்கு கவிதையெல்லாம் எழுதவருகிதேயில்லை

சரி சரி நம்பிட்டன்..

முனிஸ்ட்ட தானே இதை பற்றி கேட்கணும் :P

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி நம்பிட்டன்..

முனிஸ்ட்ட தானே இதை பற்றி கேட்கணும் :P

என்ன தூயா எதைவேண்டுமானாலும் கேட்கலாம்

ஆனால் நான் உங்களுக்கு நான் வைத்த பெயர்

குக்[சமையல்] :mellow::huh:

சும்மா பகிடிக்கு சொன்னன் கோபிக்க வேண்டாம்

உங்ககள் சம்பல் சூப்பர்

:o தூயா பபா இன்றுதான் இவற்றை எல்லாம் வாசிக்க நேரம் கிடைச்சது.

அட சமையலோடு இவர்களை எல்லாரையும் எப்படித்தான் ஆழமாக கவனிக்கிறியளோ தெரியவில்லை. பிரமாதம். சமையல் போலவே :(

முகம்ஸ் தாத்தா இருந்த காலத்தில் பொன்னம்மாக்கா என்று அவர் சொல்லிக் கதைப்பதை மறக்க முடியாது. மீட்டியமைக்கு வாழ்த்துக்கள்.

சியாம் அண்ணா சாத்திரி தாத்தாவா :huh: அச்சோ எனக்கு இப்பதான் தெரியும். :( தகவலுக்கு நன்றிகள் பபா

வசம்பண்ணாவைப் பற்றியும் நல்லாக எழுதி இருக்கிறீங்க. உங்கள் யாழ் பயணம்(சுலபமான விடயம் அல்ல) எவ்வளவு கவனம் தேவை என்பது தெரியக்கூடியதாக இருக்கின்றது :mellow: . ம்ம்ம் தொடரட்டும் வாழ்த்துக்கள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.