Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள யதார்தங்களும் பிரச்சாரங்களும்--சி.இதயச்சந்திரன்

Featured Replies

10 நாள் போர் நிறுத்தம் முடிந்ததும், விடுதலைப் புலிகள் பாரிய படை நகர்வொன்றை மேற்கொள்ளப் போகிறார்கள் என எந்த எழுத்தாளரும் எழுதவில்லை.

நிழல் யுத்தம் செய்வதற்கு மாயமான்களை தேடுவது போல் தனியார் இணையத்தளமொன்றில் எம்மையெல்லாம் மிக கீழ்த்தரமாக விமர்சித்து, இறைவனின் குசும்பொன்று ஊர்ப் புதினத்தில் வந்தது.

இத்தகைய அலட்டல்களை ஒரு புறம் ஒதுக்கி, எமது பணியை இன்னமும் வேகமாக முன்னெடுப்போம்.

ஒருதலைப்பட்ச போர் நிறுத்தப் பிரகடனம் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட காலமறிந்த, இராஜதந்திர நகர்வாகும். ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவன்று பெரும்யுத்தமொன்றை விடுலைப் புலிகள் ஆரம்பிப்பார்களென்று தேசிய உணர்வு கொண்ட ஆய்வாளர்கள் எவருமே கூறவில்லை. இத்தகைய எதிர்பார்ப்பு சிங்கள தேசத்திற்கு இருக்குமென விடுலைப்புலிகளின் அரசியல் அறிவிற்கும் புரியும்.

பத்தி எழுத்தாளர்களின் அரசியல் ஆய்வுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு யுத்தம் புரிபவர்கள் அல்லர் விடுதலைப் புலிகள். அதாவது சமகால கள யதார்த்தம் புரிந்தவர்கள், அதை நேரில் தரிசிப்பவர்கள் மட்டுமே. அரசியல் விமர்சனமோ அல்லது ஆய்வோ செய்யும் உரித்துடையவர் என்று கருதினால் சர்வதேபரப்புரையை மூட்டை கட்டி ஒரு ஓரமாகப் போட்டு விடலாம்.

அடுத்த வாரம் வன்னி அதிரப் போகின்றதென பரபரப்புச் செய்திகளை அள்ளி வீசுவதே, மக்களை முட்டாள்கள் ஆக்கும் அரசியல் அறிவிலித்தனத்தைக் காட்டுகிறது.

தற்போதைய சார்க் ஒன்றுகூடலில் ஒரு விடயத்தை உன்னிப்பாக அவதானிக்கலாம்.

தோளில் தொங்கிய துண்டை இடுப்பில் கட்டியபடி மிக பவ்வியமாக, இந்தியாவைப் புகழும் சிங்கள தேசத்தின் அதிரடிப் போக்கினைப் பார்க்கின்றோம்.

சிறிய அணுமின் உற்பத்தி நிலையங்களை இந்தியாவின் உதவியுடன் தெற்காசிய நாடுக ளில் நிறுவும் முயற்சியொன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதாவது, உருவாகும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தினால் கிடைக்கப்பெறும் அனுகூலங்களை, தமக்குச் சாதகமாக பயன்ப டுத்த இலங்கை முனையும் அதேவேளை, இந்தியா ஊடாக அமெரிக்காவுடன் ஒருவித சமரசத்தையும் நட்பையும் பேண முடியுமென்றும் சிங்கள தேசம் கணிப்பிடுகிறது.

ஒரே கல்லில் பல மாங்காய்கள். ஆனாலும் இலங்கையை, முற்றுமுழுதாக தனது பொருளா தாரப் பிடிக்குள் கொண்டு வந்தால், சீனப்பக்கம் சாயும் சிங்களதேசத்தின் நகர்வுகளை நிறுத்தலா மென்பதே இந்தியாவின் நிகழ்காலத் தந்திரோ பாய அரசியல் உத்தியாகும்.

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வினை கொடுக்கும்படி சிங்கள தேசத்தை இந்தியா வற்புறுத் தும்வரை, இந்த இந்தியஇலங்கை தேனிலவு நீடிக்கும்.

தற்போது வன்னிக் களமுனையில் ஏற்படும் புலிகளின் பின்னகர்வுகளால் இலங்கை அரசாங்கத்தின் இந்திய நெருக்கம் அதிகரிக்கி றது.

10 ஆயிரம் படையினர் மேலதிகமாகத் தேவைப்படுவதாக இராணுவத் தளபதி விடுக்கும் வேண்டுகோளில், இழப்புகளின் பரிமாணங்களும் தென்படுகின்றன. கடந்த சில நாட்களாக மன்னார் முன்னரங்குகளில் நகர்வற்ற நிலையொன்று காணப்படும் அதேவேளை பின் தளங்களிலிருந்து முன்னோக்கி படைக்கல ஆளணி குவிப்பினை இராணுவம் மேற்கொள்ளும் நிலை தொடர்கிறது.

படையினரின் இரு வளமும் கைப்பற்றப்பட்ட இடங்களில் செறிவாகக் காணப்படும் நிலை வரை, தடுத்து நிறுத்தும் உபாயங்கள் பிரயோகிக்கப்படலாம்.

பொதுவாக அரச தரப்பு விடும் அறிக்கைகளில், முல்லைத்தீவின் சில பகுதிகளை தாம் பிடித்து விட்டோமென்று குறிப்பிடும்போது தமிழ்மக்கள் அதிர்ச்சியடைந்து விடுகின்றனர். முல்லைத்தீவு எனும்போது புதுக்குடியிருப்புதான் எல்லோரினது நினைவிற்கு வரும்.

ஆனால், இந்த வவுனிக்குளம்,மல்லாவி போன்ற இடங்களில், ஏ9 பாதையில் மேற்குப் புறத்திலுள்ள மன்னார் மாவட்ட எல்லையில் இருப்பது பலருக்குப் புரியாது.

ஆகவே இத்தகைய செய்தியை வெளியிடும்போது, நில வரைப்ப டத்தோடு அவர்கள் குறிப்பிடும் இடங்களை புள்ளியிட்டால் தெளிவாக இருக்கும்.

அதேவேளை, வவுனியாவின் வடக்கேயுள்ள பாலமோட்டையில் பல மாதங்களாக மோதல் நீடிக்கிறது. இரண்டு நாட்களில் 10 கிலோ மீட்டரை விடத்தல் தீவிலிருந்து கடந்த இராணு வம், பாலமோட்டையில் நகர முடியாமல் தவிக்கிறது.

இம்முனையிலும் பல்குழல் எறிகணைகள், ஆட்டிலெறிகள் சகிதம் பெரும் சமர் நிகழ்ந்தா லும், படையினரால் எதிர்பார்க்கப்பட்டது போல முன்னகர்வு முடியவில்லை.

இதைப் புரிந்து கொள்ள பாரிய அரசியல் ஞானமோ அல்லது போரியல் புரிதலோ தேவைப்படாது.

அதாவது இராணுவத்தை முன்னகர விடுவ தும், சில இடங்களில் நகர விடாமல் தடுப்ப தும், விடுதலைப் புலிகளின் போரியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே நடக்கிறது என்பதை சராசரி மக்களும் தற்போது புரிந்து கொள்கின்றார்கள்.

வேகமாக முன்னுக்கு ஓடிவந்த இராணுவம் மல்லாவி, துணுக்காயில் நிறுத்தப்பட்டு, மோதலை எதிர்கொள்கிறது.

ஆகவே புலிகளின் நிழ்ச்சி நிரலின் படியே படையினரின் ஓட்டமும், நடைப்பயணமும் நிகழ்த்தப்படுகின்றன. அதனைப் புலிகளின் பலவீனமென்று பறைசாற்றி, அரசியல் லாபம் தேடுவதை எந்த முதலாளித்துவ அரசியல்வாதியும் நிராகரிக்க மாட்டார்.

இத்தகைய உளவியல் பரப்புரை தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர்ந்த நாடுகளிலும் பெரிய தாக்கத்தை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

விடுதலைக்கு எதிரான சக்திகள், தமக்கிடை யேயுள்ள சிறு வேறுபாடுகளையும் மறந்து ஒரே திசையில் பயணிக்கும் போது, எமது இணையத்தளமொன்றில் ஆய்வாளர்களை அரசியல் அறிவிலிகள் என்று குற்றம் சுமத்தி எமது சக்தியை மழுங்கடிக்கச் செய்யும் நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலையை நோக்கிய நெருப்பாறு விரைவாக ஓடும். அந்த ஓட்டமானது தன்னால் நிகழ்வதாக வீசும் காற்று கற்பிதம் கொண்டால் நாமென்ன செய்ய முடியும்?

தேசியத் தலைமையின் ஆசீர்வாதத்தோடு வெளியிடப்பட்ட மொட்டைக் கட்டுரை போன்றே அது எழுதப்பட்டுள்ளதாக பல பத்தி எழுத்தாளர்கள் வருத்தம் கொள்கின்றார்கள்.

ஒன்று நிச்சயம். அதாவது, இன்று எமக்குள் பலப்பரீட்சை நடத்தும் நேரமல்ல இது என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து நடந்துகொள்வதே தமிழினத்திற்கு நன்மை பயக்கும்.

Edited by வலைஞன்
முழுமையான கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

  • Replies 62
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காய்களை நகர்த்துபவர்களே தவிர என்றைக்குமே அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு கிழ் செயற்பட்டவர்கள் இல்லை. ஒரு சில வேளை வன்னியின் போர்கள நிலைமை மாறலாம். ஆனால் புலிகளின் தனித்துவம் அன்றும் என்றும் மாறாது. புலிகளின் நேரக்கணிப்பே வேறு.

"விடுதலைக்கு எதிரான சக்திகள், தமக்கிடை யேயுள்ள சிறு வேறுபாடுகளையும் மறந்து ஒரே திசையில் பயணிக்கும் போது, எமது இணையத்தளமொன்றில் ஆய்வாளர்களை அரசியல் அறிவிலிகள் என்று குற்றம் சுமத்தி எமது சக்தியை மழுங்கடிக்கச் செய்யும் நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலையை நோக்கிய நெருப்பாறு விரைவாக ஓடும். அந்த ஓட்டமானது தன்னால் நிகழ்வதாக வீசும் காற்று கற்பிதம் கொண்டால் நாமென்ன செய்ய முடியும்?

தேசியத் தலைமையின் ஆசீர்வாதத்தோடு வெளியிடப்பட்ட மொட்டைக் கட்டுரை போன்றே அது எழுதப்பட்டுள்ளதாக பல பத்தி எழுத்தாளர்கள் வருத்தம் கொள்கின்றார்கள்.

ஒன்று நிச்சயம். அதாவது, இன்று எமக்குள் பலப்பரீட்சை நடத்தும் நேரமல்ல இது என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து நடந்துகொள்வதே தமிழினத்திற்கு நன்மை பயக்கும்."

இதயச்சந்திரனைக் காயப்படுத்தியது யார்? அது நிச்சயமாக நானில்லை .

தேசியத் தலைமையின் ஆசீர்வாதத்தோடு வெளியிடப்பட்ட மொட்டைக் கட்டுரை போன்றே அது எழுதப்பட்டுள்ளதாக பல பத்தி எழுத்தாளர்கள் வருத்தம் கொள்கின்றார்கள்.

இதில் ஏன் திரு.இதயச்சந்திரன் தேவையற்று தேசிய தலைமையின் பெயரை இழுக்கிறார் என்று புரியவில்லை :lol:

மொட்டை கட்டுரைகளுக்கு ஆதரவும் ஆசீர்வாதமும் வழங்க வேண்டிய எந்த அவசியமும் தேசிய தலைமைக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை!!!

அது அவர்கள் நடைமுறையும் இல்லை.

அவர்களுக்கென்று பல்வேறு தொடர்பு சாதனங்கள் உள்ளன. அதன் மூலம் அறிக்கைகள் விடுவார்களே ஒழிய இப்படி மொட்டை கட்டுரைகளை ஊக்கப்படுத்துவதில்லை!!!

தேவை ஏற்பட்டால் நேரடியாகவே பத்தி எழுத்தாளர்களை அவர்களால் தொடர்பு கொண்டு விட முடியும். இது ஒன்றும் மதிப்பிற்குறிய இதயச்சந்திரன் அறியாததல்ல!!!

முதலில் தேவையில்லாமல் தேசிய தலைமையை ஆதாரமாக இழுப்பதையும், மேற்கோள் காட்டுவதையும் நாம் நிறுத்துவது நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன் :lol:

Edited by vettri-vel

"விடுதலைக்கு எதிரான சக்திகள், தமக்கிடை யேயுள்ள சிறு வேறுபாடுகளையும் மறந்து ஒரே திசையில் பயணிக்கும் போது, எமது இணையத்தளமொன்றில் ஆய்வாளர்களை அரசியல் அறிவிலிகள் என்று குற்றம் சுமத்தி எமது சக்தியை மழுங்கடிக்கச் செய்யும் நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலையை நோக்கிய நெருப்பாறு விரைவாக ஓடும். அந்த ஓட்டமானது தன்னால் நிகழ்வதாக வீசும் காற்று கற்பிதம் கொண்டால் நாமென்ன செய்ய முடியும்?

தேசியத் தலைமையின் ஆசீர்வாதத்தோடு வெளியிடப்பட்ட மொட்டைக் கட்டுரை போன்றே அது எழுதப்பட்டுள்ளதாக பல பத்தி எழுத்தாளர்கள் வருத்தம் கொள்கின்றார்கள்.

ஒன்று நிச்சயம். அதாவது, இன்று எமக்குள் பலப்பரீட்சை நடத்தும் நேரமல்ல இது என்பதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து நடந்துகொள்வதே தமிழினத்திற்கு நன்மை பயக்கும்."

இதயச்சந்திரனைக் காயப்படுத்தியது யார்? அது நிச்சயமாக நானில்லை .

அது நீங்களில்லை. ஆனால் உங்களின் பெயரைக் கொண்ட ஒருவர் என்று இதயச்சந்திரன் சந்தேகம் கொண்டே இதனை எழுதியுள்ளார். இதயச்சந்திரன், ஆரூஸ் உட்பட்ட புலம்பெயர் ஆய்வு ஆளர்களின் கட்டுரைகள் ஒரு தளத்தில் வெளியிடப்படுகின்றன. அந்தத் தளத்தின் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் மற்றைய தளத்தில்த்தான் தம்மை கீழ்த்தரமாக விமர்சித்து எழுதப்பட்டதாக இதயச்சந்திரன் வீரகேசரியில் எழுதியிருக்கிறார்.

இனி இந்த நாற்காலி ஜெனரல்களின் ஆய்வுகள், அந்த தளத்தில் இனியும் வெளியிடப்படுமா?

  • தொடங்கியவர்

இதயசந்திரனின் ஈ. மெயில் முகவரி

ithayachandran@hotmail.co.uk

இதயசந்திரனின் ஈ. மெயில் முகவரி

ithayachandran@hotmail.co.uk

எம்மவர் பலரின் ஈ-மெயில் முகவரிகளை சேகரிக்கும் முயற்சியா இது?!!!

ம்ம்ம்ம்! உங்களுடன் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும்!!! :lol:

Edited by vettri-vel

அரசியல் ஆய்வு இராணுவ ஆய்வு என்பதெல்லாம் உளவியற் போரின் ஒரு பகுதி என்பதை இந்த புலத்தில் இருக்கும் நாற்காலி ஆய்வாளர்கள் மறந்து விடுகிறார்கள்.யார் பெரியவர் என்னும் முனைப்பே இவற்களிடம் இருக்கிறது.

இதில் தாரகி ஒருமுறை சொன்னது நாபகம் வருகிறது, நமது ஆய்வுகள் எதிரியை விழைப்படையச் செய்யக் கூடாது, எதிரி நம்பும் வகையில் அவனை ஒரு புதை குழையை நோக்கிச் செலுத்த வேண்டும் என்று.முன்னரும் இவ்வாறு தான் தாங்கள் வெல்கிறோம் என்னும் மமதையில் எதிரி புதைகுழிகளுக்குள் சென்று இருக்கிறான்.

இதயச் சந்திரன் எழுதும் ஆய்வுகள் போராட்டத்தின் முனையை மழுங்கடிக்காமால் எதிரியை விழிபடையச் செய்யாமல் இருக்க வேண்டும்.இதயச் சந்திரன் கூறலாம் எதிரிக்கு இந்த வியூகங்கள் தெரியாதா என்று ஆனால் இனவாத வெறியில் மூழ்கி இருக்கும் எதிரியானவன் சிந்திக்கும் போது தனது பொது அறிவை இழந்துவிடுகிறான்.இவ்வாறு வெளியில் இருந்து செய்யப்படும் ஆய்வுகள் அவனை அந்த மிதப்பில் இருந்து விடுவித்துவிடுகிறது.இதன் மூலம் அவன் விழிப்படைந்து விடுகிறான்.அந்த விழிப்பில் இருந்து எச்சரிக்கையாக மூலோபாயங்களை வகுக்கிறான்.

இன்றையை காலகட்டத்தில் முக்கியமானது எதிரியை புதைகுழிக்குள் தள்ளுவதே அவனை விழிப்படைய வைப்பதல்ல.இன்று புலம் பெயர் தமிழ் மக்கள் புலிகள் தோற்கிறர்கள் என்று நினைப்பதால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.மக்களில் பெரும் பகுதி அரசியற் மயப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் புலிகல் இராணுவ ரீதியில் வெல்கிறார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.புலம் பெயர் மக்களுக்கோ களத்தில் இருக்கும் மக்களுக்கோ இவ்வாறு இராணுவ ரீதியான ஆய்வுகள் அவசியம் அற்றவை.

மேலும் சிலர் நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்புக்களை மக்கள் மத்தியில் விதைத்து விடுகின்றனர், இதன் மூலமும் உளவியல் ரீதியான பாதிப்புக்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன.ஆகவே ஆய்வுகள் எதிரியைக் குழப்பவும் மக்கள் மத்தியில் இராணுவ ரீதியாக பெரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுதாதனவையாகவும் அரசியல் ரீதியாக போராட்டதிற்கான ஆதரவைத் தக்கவைப்பனவாகும் இருக்க வேண்டும்.புலம் பெயர் மக்கள் மத்தியில் அரசியல் ஆய்வுகளே அவசியம் ஆனவை இராணுவ ஆய்வுகள் அல்ல.இராணுவ ஆய்வுகள் எதிரி மீதான உளவியற் போரின் ஒரு அங்கமாகவே இருக்க வேண்டும்.அவை ஆய்வாளர்களின் மேதாவித் தனத்தை வெளிப்படுத்துவனவாக இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் நீங்கள் இப்பிடி சொல்லுறியள் ஆனால் பல இராணுவ அiசியல் ஆய்வாளர்மார் இதயச் சந்திரன் உட்பட தாங்கள் அரசியல் ஆய்விலையே தமிழீழம் கிடைக்கப்போகுதெண்டு அடம் பிடிக்கினம்.அடிப்படை இராணுவ அறிவோ சமர்க்கள பூகொள அறிவோ இல்லாமல் கூகிள் விக்கிபீடியா உதவியோடை இவையள் எழுதித் தள்ளுற ஆய்வுகளை பாத்தால்.ஒண்டு விழங்கிது இவையளுக்கு நேரம் கனக்க இருக்குது அதாலை ஏதோ எழுதினம் எண்டு விழங்கிது. அவையளின்ரை ஆசையை ஏன் கெடுப்பான்.

ஈஈஈஈஈஈஈஈஈஈ

இதில இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.யார் கவனிகிறார்களோ இல்லையோ தமிழல் எழுதப்படுவனவற்றை அத்தாஸ் போன்றவர்கள் கவனித்துக்கொண்டிருகிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவா__

அரசியல் அறிவிலிகளின் கைகளில் அகப்பட்டுள்ள போர் நிறுத்த விமர்சனம்

http://www.puthinam.com/full.php?2b46WVc4a...dhZlo2cc0Mg4A3e

ஆளையாள் மாறிக் கடிபடுகினம் எண்டு விளங்குது ஆனால் உது புலம் பெயர் ஊடகங்களுக்கு நல்லது இல்லை.

இதயச் சந்திரன் அருஸ் போன்றோர் எழுதும் ஆய்வுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன சபேசன்?

மக்களை இராணுவ ரீதியான மாயைக்குள் வைப்பதில் உள்ள ஊசலாட்டங்களால் நாங்கள் யாழ்க் களத்தில் அண்மைக்காலத்தில் நிகழ்ந்த கருத்தாடல்களில பார்க்கலாம்.இதன் மூலம் போராட்டத்தின் மேல் உள்ள நம்பிக்கை என்பது சிதைவடைந்துள்ளதையும் பார்க்கலாம்.இதெற்கெல்லாம் இந்த இராணுவ ஆய்வுகள் காரணம் இல்லையா?

புலம் பெயர் ஊடகங்களும் ஆய்வாளர்களும் செய்ய வேண்டியது மக்களை அரசியற் மயப்படுத்தும் கட்டுரைகள் ஆய்வுகளை ஏன் இந்த ஊடகங்கள் வெளியிடுவதில்லை?எல்லோருமே பரபரப்பன இராணுவ ஆய்வுகளை வெளியிடுவதிலையே ஏன் குறியாக இருகிறார்கள்?இவை தமது ஊடகத்தைப் பிரபலியப்படுத்துவதற்கான வியாபார நோக்கம் அன்றி வேறென்ன?

சபேசன்

2005 களில் இதயச்சந்திரன், நீங்கள் உட்பட எல்லா ஆய்வாளர்களும் ஊடகர்களும் ஓரேமாதிரித்தான் (மாத்திரமல்ல போட்டிக்கு) எழுதினார்கள். தற்பொழுது (2007 பிற்பகுதியில் இருந்து) தவறை உணர்ந்து சற்று நிதானமாக எழுத முனைகிறார்கள்.

அதற்குள் சிறு போட்டியாக இருக்கலாம் கடந்த கால தவறுகளை எப்படி தம்மிடம் இருந்து கழட்டிவிடுவது அல்லது அதற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று காட்டும் முயற்சியாக. அதை பெரிது படுத்தி 1 பதிலாக இன்னொன்று வருகிறது ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் எழுதுகிறார் என்று பகுப்பாய்வு செய்வது தேவையற்றது.

பலர் கசப்பான கடந்த கால அனுபவத்தினால் நிதானமாக எழுத முனைகிறார்கள் என்பது தான் இன்றைய வரவேற்கத்தக்க விடையம். மிகுதியாக உள்ள சலசலப்புகள் காலப்போக்கில் சரிவந்து விடும். இந்த மனோநிலை நீடிக்காது.

பி.கு: உவர் நல்லவன் என்னமும் இதைப் பார்க்கேல்லையோ? :lol:

Edited by kurukaalapoovan

ஆளாளுக்கு ஆயுறவையை கடிக்கிறதை விட்டு போட்டு நீங்கள் சரியான முறையிலை ஆயுங்கோ...! அதை மற்றவர்கள் விமர்சிக்கட்டுக்கும்.. அப்போ தெரியும் ஆயுறது எண்டா என்ன எண்டு..

ஐசூர்யா,

உங்களுக்கு கருத்துக்கள நிர்வாகம் பலமுறை - கட்டுரைகளை அல்லது செய்திகளை இணைப்பது தொடர்பாக - அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நீங்கள் அதனை கவனத்தில் கொள்வதாககத் தெரியவில்லை. ஒன்றில் - கட்டுரையை முழுமையாக இணைத்துவிட்டு அது எடுக்கப்பட்ட தளத்துக்கு இணைப்புக்கொடுங்கள். அரைகுறையாய் இணைப்பதெனில் இணைக்காமலே விடுங்கள். இனியும் தொடரின் நீங்கள் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்படும். மன்னிக்கவும் - ஆனால் உங்களுக்கு பலரும் பலதடவைகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். நீங்கள் அதனைக் கவனத்தில் கொள்வதாக இல்லை.

நன்றி.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அரசியல் எழுத்தாளர்களை நெறிப்படுத்தி வழிகாட்ட வேண்டிய கடமை ஈழத்தில் உள்ளவர்களுக்கு இருக்கின்றது. அது நடந்தால்தான் இங்கே இருப்பவர்கள் அங்கே உள்ளவர்களுக்கு வழிகாட்ட முனைவது இல்லாது போகும். வேறு பல பிரச்சனைகளும் ஏற்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் குறுக்கால போவானின் கருத்துக்களுக்கு நன்றி. சில யதார்த்தங்களைக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள

Edited by nirmalan

இவ்வாறானவர்கள் தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். விமர்சனங்களை கையாளத் தெரியாது இவர்கள் போன்றவர்கள் வெளிப்படையாக எப்போது பிறரையும், பிற ஊடகங்களையும் எதிர்க்கத் துணிகின்றார்களோ அவர்கள் எதிரிகளுக்கும், ஒட்டுண்ணிகளுக்கும் தம்மை அறியாமலேயே துணை போகின்றார்கள் என்பதனை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேல் உள்ள உங்கள் கருத்துக்களுடன் முற்றுமுழுதாக உடன்படுகிறேன்!!!

சுய விருப்புவெறுப்புக்கள், பத்திரிகை வியாபாரம், எப்படியும் பிரபலமாகி விடவேண்டும் என்னும் அவா, புகழ் போதை, Ego இவற்றை எல்லாம் கடந்து தேசிய விடுதலையை முதன்மைபடுத்தி தேச சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ள பழகி கொண்டவர்கள், எப்படிப்பட்ட விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வார்கள்!

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, பத்திரிகைகளில் ஒப்பாரி வைத்து, தேசிய தலைமையையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் அளவுக்கு ஆணவத்தில் அறிவிழந்து விடக்கூடாது!

விமர்சனங்களை உங்கள் எழுத்துக்களை மேலும் கூர்மையாக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

உங்கள் எழுத்துக்கள் கிழிக்க வேண்டியது எதிரியின் பொய் பிரசாரங்களை! எங்கள் உறவுகளின் குரல்வளையை அல்ல!!

Edited by vettri-vel

அரசியல் ஆய்வு இராணுவ ஆய்வு என்பதெல்லாம் உளவியற் போரின் ஒரு பகுதி என்பதை இந்த புலத்தில் இருக்கும் நாற்காலி ஆய்வாளர்கள் மறந்து விடுகிறார்கள்.யார் பெரியவர் என்னும் முனைப்பே இவற்களிடம் இருக்கிறது.

இதில் தாரகி ஒருமுறை சொன்னது நாபகம் வருகிறது, நமது ஆய்வுகள் எதிரியை விழைப்படையச் செய்யக் கூடாது, எதிரி நம்பும் வகையில் அவனை ஒரு புதை குழையை நோக்கிச் செலுத்த வேண்டும் என்று.முன்னரும் இவ்வாறு தான் தாங்கள் வெல்கிறோம் என்னும் மமதையில் எதிரி புதைகுழிகளுக்குள் சென்று இருக்கிறான்.

இதயச் சந்திரன் எழுதும் ஆய்வுகள் போராட்டத்தின் முனையை மழுங்கடிக்காமால் எதிரியை விழிபடையச் செய்யாமல் இருக்க வேண்டும்.இதயச் சந்திரன் கூறலாம் எதிரிக்கு இந்த வியூகங்கள் தெரியாதா என்று ஆனால் இனவாத வெறியில் மூழ்கி இருக்கும் எதிரியானவன் சிந்திக்கும் போது தனது பொது அறிவை இழந்துவிடுகிறான்.இவ்வாறு வெளியில் இருந்து செய்யப்படும் ஆய்வுகள் அவனை அந்த மிதப்பில் இருந்து விடுவித்துவிடுகிறது.இதன் மூலம் அவன் விழிப்படைந்து விடுகிறான்.அந்த விழிப்பில் இருந்து எச்சரிக்கையாக மூலோபாயங்களை வகுக்கிறான்.

இன்றையை காலகட்டத்தில் முக்கியமானது எதிரியை புதைகுழிக்குள் தள்ளுவதே அவனை விழிப்படைய வைப்பதல்ல.இன்று புலம் பெயர் தமிழ் மக்கள் புலிகள் தோற்கிறர்கள் என்று நினைப்பதால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.மக்களில் பெரும் பகுதி அரசியற் மயப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் புலிகல் இராணுவ ரீதியில் வெல்கிறார்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.புலம் பெயர் மக்களுக்கோ களத்தில் இருக்கும் மக்களுக்கோ இவ்வாறு இராணுவ ரீதியான ஆய்வுகள் அவசியம் அற்றவை.

மேலும் சிலர் நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்புக்களை மக்கள் மத்தியில் விதைத்து விடுகின்றனர், இதன் மூலமும் உளவியல் ரீதியான பாதிப்புக்கள் மக்கள் மத்தியில் எழுகின்றன.ஆகவே ஆய்வுகள் எதிரியைக் குழப்பவும் மக்கள் மத்தியில் இராணுவ ரீதியாக பெரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுதாதனவையாகவும் அரசியல் ரீதியாக போராட்டதிற்கான ஆதரவைத் தக்கவைப்பனவாகும் இருக்க வேண்டும்.புலம் பெயர் மக்கள் மத்தியில் அரசியல் ஆய்வுகளே அவசியம் ஆனவை இராணுவ ஆய்வுகள் அல்ல.இராணுவ ஆய்வுகள் எதிரி மீதான உளவியற் போரின் ஒரு அங்கமாகவே இருக்க வேண்டும்.அவை ஆய்வாளர்களின் மேதாவித் தனத்தை வெளிப்படுத்துவனவாக இருக்க முடியாது.

மிக நல்ல கருத்து நாரதர். இன்னார் என்று குறிப்பிடவில்லை ஆனால் அனேகமாக எல்லோரும் புலிகள் வெற்றி பெறுவார்கள் இன்ன விதமாக வெற்றி பெறுவார்கள் இன்ன வித தந்திரத்தை உபயோகிப்பார்கள் என்று ஒருவித ஊகத்துடன் எழுதுவது எந்தவிதத்திலும் ஆரோக்கியமற்றது. இது ராணுவத்திற்கு சாதகமாகவே முடியும். சில காரணங்களை சொல்கின்றார்கள் ஆதுவானது மக்களை சோர்வடையாமல் வைத்திருக்க இவ்வாறு எழுதுவதாக. இது என்ன விழையாட்டுப்போட்டியா சேர்வும் சுறுசுறுப்பும் வருவதற்கு? மக்கள் புலம்பெயர் நாடுகளில் எவ்வாறு அரசியல் ரீதியான போரட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதை அடித்தளமாக கொண்டதாகவே கட்டுரைகள் வரவேண்டும். சோர்வு சோர்வு நீக்குதல் என்பது மக்கள் இங்கு நடத்தும் அரசியல் போரட்டங்களை மையப்படுத்தியதாக இருக்கவேண்டுமே தவிர களநிலமைகளை மையப்படுத்தியதாய் இருக்க கூடாது. வாகரை கைவிட்டுப்போகுமா என்ற ஆய்வு மூலம் சோர்வு நீக்க த் தொடங்கி மல்லாவியில் வந்து நிற்கின்றது. இங்கே வாகரை மக்கள் அவலங்கள் தொடங்கி மன்னார் வவுனிக்குளம் மல்லாவி பகுதி மககள் அவலங்களை என்ன விதமாக புலம்பெயர் தேசத்தில் வெளிப்படுத்தலாம் என்றும் என்ன விதமாக இந்த அவலங்களை மக்கள் போரட்டங்கள் மூலம் அணுகலாம் என்றும் யார் எழுதுகின்றார்கள்.

உட்குத்துப்பாடு பற்றியும் இங்கே எழுதப்பட்டுள்ளது. தொலைக்காட்சி வானொலி பத்திரிகை இணையதளம் இவ்வாறான அனைத்திலும் உட்குத்துப்பாடு முரண்பாடுகள் சண்டைகள் பிளவுகள் பிரிவுகள் சகஜமான ஒன்றுதானே? உட்குத்துப்பாடு உடன் பிறந்த சொத்து. தாய்நாட்டு நிலமையை கருத்தில்கொண்டு தற்காலிகமாகவேனும் இதுகளுக்குள் ஒரு குத்துப்பாடு நிறுத்தம் வரவேண்டும்.

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்.. இராணுவத்துக்கு யுக்திகள் வகுக்க.. ஆக்களில்லாம.. நாடுகளின் உதவியில்லாம இருக்குது. தமிழாக்கள்.. நடத்திற பத்திரிகையை வைச்சுத்தான் இராணுவம்.. யுக்தி வகுக்கப் போகுதாம்.

இது எப்படி இருக்கென்றால்.. பத்திரிகைகளில் வரும் செய்தியை வைச்சு.. புலிகள் போர்த்திட்டம் வகுக்கின்றனர்.. என்று அரசு தான் செய்யும் மனித உரிமை மீறல்களை மறைக்க செய்தித் தணிக்கை கொண்டு வந்ததுக்கு சமனா இருக்குது..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுல வேடிக்கை என்னவென்றால் மக்களை சோர்வடையாமல் வைத்திருப்பதுக்குத்தான் இப்படி எழுதுகிறார்கள் என்பதுதான்.அடுத்த வேளை உணவுக்கோ அல்லது ஏதாவது ஒரு அத்தியாவசிய தேவைக்கோ அல்லல்படும் மக்கள் இவையின்றை ஆய்வையோ ஆறுதலையோ எதிர்பார்த்து இந்தக்கட்டுரைகள் எல்லாத்தையும் வாசிப்பினம் என்பது கேள்விக்குறியே.ஆக இவர்களின் ஆய்வுகள் எல்லாம் களத்துக்கு வெளியில் இருக்கும் விசில்அடிச்சான் குஞ்சுகளை திருப்த்திப்படுத்தத்தான்.இத

ஆமாம்.. இராணுவத்துக்கு யுக்திகள் வகுக்க.. ஆக்களில்லாம.. நாடுகளின் உதவியில்லாம இருக்குது. தமிழாக்கள்.. நடத்திற பத்திரிகையை வைச்சுத்தான் இராணுவம்.. யுக்தி வகுக்கப் போகுதாம்.

எந்த நாட்டில் இருந்து எவர் உதவி கொடுத்தாலும் ராணுவநடவடிக்கை மேற்கொள்ளப்படும் பிரதேசத்துக்குரியவர் எழுதுவது உளவியல் ரீதியாக அவதானிக்கப்படும்.

ராணுவம் முட்டாள் தனமாக முன் நகருகின்றது, புலிகளின் நிகழ்ச்சி நிரலின் படியே முன் நகருகின்றது, என்று தமிழர் தரப்பு தொடர்ந்து முன்வைப்பதால் சில சிக்கல்கள் இருக்கவே செய்யும்.

ராணுவம் முன்நகருகின்றது, அதற்குரிய ஆணை அரசியல் பீடத்தில் இருந்து வருகின்றது, அரசியல் பீடம் ஆடாமல் இருக்க ராணுவ வெற்றிகள் பிரதானமானது. வெற்றிகளாலோ தோல்விகளாலோ ஆட்டங்கணும் செயற்பாட்டுக்கு அத்திவாரமாக பத்திரிகை துறை இருக்கப்போகின்றது. எனவே எழுத்துக்கள் கருத்துக்கள் அரசியல் பீடத்தினூடாக ராணுவ முடிவுகள் வரை தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.

கருத்துக்களை புலிகள் வெளியிடுவதும் அவை அவதானிக்கப்படுவதும் வேறு. அவர்கள் வெளியிடும் அளவுகள் வேறு, நிறைய ஆய்வுகள் அந்த அளவுகளுக்கு முக்கியத்தவம் கொடுப்பதில்லை,

இது எப்படி இருக்கென்றால்.. பத்திரிகைகளில் வரும் செய்தியை வைச்சு.. புலிகள் போர்த்திட்டம் வகுக்கின்றனர்.. என்று அரசு தான் செய்யும் மனித உரிமை மீறல்களை மறைக்க செய்தித் தணிக்கை கொண்டு வந்ததுக்கு சமனா இருக்குது..!

நீங்கள் கூறுவதும் அதிக தூர வித்தியாசத்தில் இல்லை. அரசு பத்திரிகைத் தணிக்கை மூலம் மனித உரிமை மீறல்களை மறைத்தது. தணிக்கை இன்றி எம்மவர் அதை செய்தனர். மக்கள் அவலங்களை பின்தள்ளி ராணுவ ரீதியிலான வெற்றி தோல்விகளை பற்றி அதிக கவனம் செலுத்தினோம். மக்கள் அவலங்களில் அதிக கவனம் செலுத்துவது எமது முதன்மை கடமை, அது ஆய்வுகளில் இரண்டாம் பட்சமாக இருப்பது உண்மையே. இதுவே இன்று வன்னியில் இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து புலிகளை பார்த்துக்கொண்டிருக்க போதிக்கப்படுகின்றது. உண்மையில் இந்த அவலங்களை வெளிப்படுத்தும் போராட்டங்களை புலம் பெயர் தேசங்களில் முன்னெடுப்பது குறித்து இருந்திருக்க வேண்டும். அதுவே பார்வையாளர் என்ற நிலையில் இருந்து பங்காளிகள் என்ற நிலைக்கு மக்களை நகர்த்தும்.

ஒரு பேட்டியில் பொட்டம்மான் முன்னைய நாட்களில் பத்திரிகைச் செய்திகளை அடிப்படையாக வைத்தே பல உளவுத் தகவல்களைத் திரட்டியதாகச் சொல்லி உள்ளார்.இக்பால் அத்தாஸ் முதல் டிபிஎஸ் ஜெயராச் முதல் தமிழ் இணையத் தளங்களை வாசித்து விட்டு எழுதுபவர்கள்.யாழ்க் களம் உட்பட பத்திரிகைகளும் இணையத் தளங்களும் இருந்த இடத்தில் இருந்து பல்வேறுவகையான தகவல்களைத் திரட்ட உலகின் எல்லா உளவுத் துறைகளாலும் பயன் படுத்தப்படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டமான் குறிப்பிட்டது இயக்கம் வானொலிச் செய்திகளைக் கேட்டு இராணுவத்தின் இழப்புக்களை அறிந்த காலத்தில்.. நடந்தவற்றை. அது அந்தக் காலம். இது இந்தக் காலம்.

ஜெயசிக்குறு காலத்திலும் இப்படிப் போனால் புலிகளை அழிக்கலாம்.. அப்படிப் போனால் புலிகளை ஒடுக்கலாம் என்று சொன்னார்கள் தான். இறுதியில் அப்படி எழுதிய இக்பால் அத்தாசே இன்று சிந்திச்சு தயங்கி எழுதிறார்..!

இன்றைய இராணுவத்தின் போர் நிகழ்ச்சி நிரல் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னரே ஆராயப்பட்டு கைவிடப்பட்ட ஒன்று. அதையே மகிந்த கையில் தூக்கி வைத்திருக்கிறார். அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் களத்தில் நின்று வழிகாட்ட நகர்ந்த ஜெயசிக்குறு.. ஏன் தோற்றது.. அன்று புலிகள் இருந்த பலவீனமா இன்று அவர்களிடம்.. இராணுவமே புலிகள் காட்டும் எதிர்ப்பைப் பற்றி அச்சமுறும் நிலையில்..

மல்லாவி துணுக்காய் சமர் தோல்வியில் முடிய வார இறுதியில் வெற்றிச் செய்தி ஒன்றை வெளியிட ஏலவே வெள்ளாங்குளம் வரை நகர்ந்திருந்த இராணுவம் வெற்றிச் செய்தி ஒன்றை வெளியிட சோர்ந்து போன.. எம்மவர்.. கூக்குரல் எழுப்புகின்றனர்.

ஓர்மம் பொங்கும் படையினரில் கடந்த ஓராண்டில் மட்டும் 9000 பேர் படையை விட்டு ஓடினர் என்று சிங்கள பத்திரிகைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன.. இதை எல்லாம் பலவீனம் என்று படைத்தரப்பே கருதவில்லை.. ஆனால்.. புலிகள்.. பற்றி பத்திரிகைகள் இன்றைய உலகில் ஊகிப்பதை.. வைத்தே மகிந்த படை நடத்துறார்.. என்பது..???! :):lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.