Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடியார்களே... நான் பசியாய் இருக்கிறேன், எனக்கு சாப்பாடு தாருங்கள்

Featured Replies

நான் மறுக்கவில்லை ஆனால் அதற்கான உங்கள் அணுகுமுறைதான் பிழை எனக்கூறுகிறேன்.

நான் கோவிலுக்கு போறதனாலோ, கடவுள் நம்பிக்கை இருப்பதனாலோ, நான் முட்டாள் என நீங்கள் நினைக்கிறீர்களாயின் அதற்கான பதில் :lol::D:o தான்.

இளையவர்களுக்கு மத பற்று மட்டுமல்ல தமிழ் பற்றும் குறைந்து தான் வருகுது

ஒருவன் எங்கே சுயமாகச் சிந்திக்காமால் தனக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கைகளின் பாற்பட்டு அந்தச் சிந்தனைகளின் சிறைக் கைதியாக இருக்கிறானோ அவனையே முட்டாள் என உலகம் பொதுவில் கருதுகிறது.இங்கே உங்களை முட்டாள் என்று எவரும் கூறவில்லை, நீங்கள் உங்கள் சிந்தனையை மட்டுப்படுதினால் நீங்களே உங்களை முட்டளாக்கிக் கொள்கிறீர்கள். இங்கே நாங்கள் கேட்ப தெல்லாம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் தான்.மிகுதியை நீங்கள் தான் சிந்தித்து தெளிவடைய வேண்டும்.இல்லை நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று சொல்லி நடைமுறையில் நடப்ப்னவற்றை எல்லாம் மறுதலித்து பொய்களைச் சொல்லிக் கொண்டிருப்பதில் எதுவித பயனும் இல்லை..அதற்காக நீ கேள்வி கேட்காதே மதத்தை விமர்சிக்காதே என்றெல்லம் சொல்ல உங்களுக்குச் எந்தச் சுதந்திரமும் இல்லை.இங்கே எவரும் மத வழி பாட்டைத் தடை செய் கோவிலுக்குச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லம் சொல்லவில்லை.சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றே சொல்லப்படுகிறது.இதில் என்ன தவறு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

  • Replies 125
  • Views 11.9k
  • Created
  • Last Reply

1001319nz0.jpg

1001324fz2.jpg

800pxganeshcoconutco2.jpg

குறிப்பு: இது முன்னைய காலங்களில் நடைபெற்ற விழாப் படங்கள்

Edited by Aalavanthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு எங்கள் மக்கள் மீது நிறையவே நம்பிக்கை! ஆனால் உங்கள் நம்பிக்கை யதார்த்தத்திற்கு புறம்பான ஒரு அழகான கனவு என்பதுதான் இதில் கசப்பான உண்மை. மதம் ஒரு மாயை என்ற தெளிவு உண்டாகும் வரை மக்கள் எதற்கும் ஒத்துழைக்கப் போவதில்லை. நாட்டுக்கு கிள்ளிக் கொடுக்கவும் தயங்குபவர்கள் கோயிலுக்கு அள்ளிக் கொடுப்பதை எத்தனை தடவை நான் பார்த்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

தாயகத்தில் எமது மக்கள் படும் அவலம் பற்றித் தெரியாமால் யாரும் இங்கே இல்லை. தெரிந்துதான் இத்தனையும் செய்கின்றார்கள். ஒரே காரணம் மதம் என்கின்ற மாயை. அந்த மாயை உடையும் வரைக்கும் இவர்கள் திருந்தப் போவது இல்லை.

ஒரு திருடன் திருடுவதற்க்கு எது காரணம்? அது பாவம் என்கின்ற அறிவு இல்லாமையா?

ஒரு கணவன் தன்மனைவியை கொடுமைப் படுத்துவதற்க்கு எதுகாரணம் பெண்ணின் உணர்வும் தன்போன்றதே என்ற அறிவு இல்லாமையா?

இவை ஊண்மையாக இருந்தால் மதநம்பிக்கைதான் அனைத்துக்கும் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக உறவுகளுக்கு உதவி செய்வதற்கு மதம் ஒரு பிரச்சனையில்லை. அடுத்தது மதத்தைக் காரணம் காட்டி எவரும் உதவி செய்யாமல் விடுவதும் இல்லை என்பதே எனது எண்ணம்.ஒருவர் ஒரு தேங்காய் அடிப்பதால் அதை ஆடம்பரம் என்றோ அல்லது வன்னிக்கு உதவாமல் இருப்பதற்கான ஒரு காரணம் என்றோ நினைக்க முடியாது.

இப்படி எல்லாவற்றையுமே பார்த்தால் புலத்தில் உள்ளவர்கள் எதையுமே செய்யாது துறவுக் கோலம் பூண்டு இருக்க வேண்டியிருக்கும்(அப்படி இருப்பதே நன்றென்றாலும் கூட, அது சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்).கடவுள் நம்பிக்கை அவரவர் சொந்த விஷயம். அந்த நம்பிக்கைதான் சில நல்ல காரியங்களையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு வருகிறது.அதைக் குறை கூற வேண்டாமே.

அடிப்படையில் இங்கு எல்லோருக்கும் தேவையானது வன்னிக்கு எமது உதவிகள் போய்ச் சேர வேண்டுமென்பதுதான்.அதைச் செய்வோம், இங்குள்ள எவரையும் புண்படுத்தாது.

மனிதத் தேவைகள் கணக்கற்றவை என்பது யாவரும் அறிந்த விடயமே. ஒரு தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு காலங்காலமாகத் தேங்காயை உடைத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஈழத்தமிழனுக்கான தேவை இக்காலகட்டத்தில் சொல்லில் அடங்காத ஒன்று. இவ்வாறான தேங்காய் உடைத்து விரையம் செய்யப்படுவதை வேறு வழிகளில் அதனைச் சேமிப்பாக்கி அவலமுறும் அந்தத் தமிழர்களுக்கு உதவலாம். தேவைகளை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்வது அவசியம்.

இறைவன் சொன்ன கருத்தும் வரவேற்க தக்கது உணர்ந்து கொள்ளுங்கள்

ஈசன் உவக்கும் இன்மலர்கள்

வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ

வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ

வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

வள்ளலாம் இறைவன் திருவடிக்கு ஏற்ற மலரெது? வெள்ளை நிற மல்லிகையா? வேறெந்த பெரிய மலரா?

உத்தமனாம் இறைவன் திருவடிக்கு வேண்டிய மலர் வெள்ளை நிறப் பூவுமில்லை வேறெந்த மலருமில்லை. உள்ளமாம் தாமரையே அவன் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ

மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ

காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல

கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

மலர்ந்த தாமரையா? கழுநீர்ப்பூ மாலையா? பெரியவனாம் இறைவனுக்கு ஏற்ற மலரெது?

மலர்ந்த மலருமில்லை. கழுநீர்ப்பூ மாலையும் இல்லை. அன்பினால் வணங்கும் கூப்பிய கைகளாம் காந்தள் மலரே அரசனாம் இறைவன் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ

வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ

பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல

நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

பாடிக் கொண்டு வரும் வண்டுகள் விரும்பும் பொன்னிறக் கொன்றை மலரா? உலகத்தில் இல்லாமல் தேவர் உலகில் இருக்கும் கற்பக மலரா? வேண்டுதல் வேண்டாமை இல்லாததால் எந்த வித வருத்தமும் இல்லாத இறைவனுக்கு ஏற்ற மலரெது?பாடும் வண்டுகள் விரும்பும் கொன்றையில்லை. பாரில் இல்லாத பூவுமில்லை. அவன் அருளை எண்ணிக் கண்ணீர் விடும் விழியெனும் நெய்தல் பூ தான் தலைவனாம் இறைவன் வேண்டுவது.

http://www.iht.com/articles/ap/2008/08/16/...S-Elections.php

அமெரிக்காவான அமெரிக்காவிலேயோ god bless america முதல் நாட்டின் தலைவரை தெரிவு செய்வதில் என்று எல்லா அரசு மற்று அரசு சாரா விடையங்களிலும் மத நம்பிக்கை பின்னிப் பிணைந்திருக்கிறது. அவர்கள் தமது மதத்தில் நம்பிக்கையோடு இருந்ததால் தான் இன்று வல்லரசாக உயர முடிந்தது. சோவியத் ஒன்றியம் மக்களின் மத நம்பிக்கையை அடக்கி ஒடுக்கி கமியூனிசம் சோசலினம் என்று இறுதியில் நம்பிக்கை இழந்து தனக்கு தானே புதை குழியை தோண்டிக் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக இருக்கும் தமிழரின் சைவை இந்து மத நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களும் தமிழீழப் போராட்டம் அப்படி புதை குழிக்குள் தள்ளப்பட வேண்டும் எண்ட நோக்கில் தான் செயல்படுகிறார்கள். வெறுமனே 1 பிஸ்டலுடன் ஆரம்பித்த போராட்டம் வான்படை வரை வழந்தது மத நம்பிக்கைகளோடு தான். இனியும் மிச்சமும் மதநம்பிக்கைளோடே பெற முடியும்.

நான் அறிந்தவரை கோவில்களில் வழிபடுபவர்கள் பூசை அருச்சனை செய்பவர்கள் நேர்த்திக்கடன் வைப்பவர்கள் தனிய தமது சுயநலன்களிற்காக செய்யவில்லை. எத்தனையோ பேர் நாட்டி சமாதானம் மலர வேணும் மக்களுக்கு ஏதே ஒரு தீர்வு கிடைக்க வேணும் என்று வேண்டுபவர்கள் இருக்கிறார்கள். கோவில் பூசகர்கள் கூட அதற்காக விசேட ஏற்பாடுகளில் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது கடவுள் நம்பிக்கை மூலம் தனிப்பட்ட வாழ்வில் உயர்ந்து நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அந்த நம்பிக்கை மூலம் சிறீலங்காவில நடக்கிற பிரச்சனைக்கும் ஒரு தீர்வை காண முடியும். அதை தடுக்க குறை கூறுவதை விட்டு விட்டு எல்லோரும் ஒற்றுமையாக பிரார்த்திப்போம்.

300 தேங்காய் உடைத்து எமது தனிப்பட்ட வாழ்வில் வெற்றி அடைய முடிந்தால் அதையே 3000 உடைத்தால் பரந்த அளவில் சிறீலங்காவில் வெற்றி பெற உதவலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவில்கள் ஆடம்பரம் செய்யும்போதுதான் பிரச்சனை வருகின்றது.

கோவில்கள் வழிபாட்டு தலமாக இருக்கட்டும்.மூலஸ்தானம் சில்லறைகளை எதிர்பார்க்கவேண்டாம்.

கோவில்கள் வியாபார தளங்களாக மாறவேண்டாம்.

கோவில்களின் வருமானத்தை வைத்து இந்தியாவில் வீடுகள் வாங்க வேண்டாம்.

வீதிகளில் உடைக்கப்படும் தேங்காய்களின் விலை அதிகமில்லாமல் இருக்கலாம். ஆனால் தேர் திருவிழா நடத்த அனுமதி பெறுவதற்காக பல்லாயிரக் கணக்கான யூரோக்கள் செலவிடப்படுகிறது.

தேர் செல்லவிருக்கும் பாரிஸ் வீதிகளைச் சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் காலையிலிருந்து மாலை வரை மூடப்பட்டு மேலதிக காவல் துறையினர் வீதி ஒழுங்கு படுத்தலிலும் பாதுகாவலிலும் ஈடுபடுத்தப் படுவார்கள். தேர் செல்வதற்கு முன்னர் வீதிகள் நீர் பாச்சி சுத்தம் செய்யப்படும். பின்னர் ஆயிரக்கணக்கான தேங்காய்களும் உணவுகளும் சிதறியிருக்கும் வீதிகள் சுத்தம் செய்யப்படும். இவற்றிற்கான செலவை கோயில் நிவாகம் தமிழ் மக்களிடமிருந்து பெற்று பிரெஞ்சு அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

இத்தனைக்கும் இந்தப் பிள்ளையார் கோயிலை நினைத்தாலே வாந்திதான் வரும். இக் கோயில் லாசப்பலுக்கு அருகில் பாழடைந்த கட்டடம் ஒன்றின் கீழ் அமைந்துள்ளது. சுமார் 20 பேர் நின்று கும்பிட மட்டுமே இடவசதியுள்ள அறையொன்றில் யன்னல்கள் இல்லாததால் சுவரெங்கும் கற்பூரப் புகையுடன் காணப்படும். இடவசதி போதாமையால் மூலஸ்தானத்தை வலம் வருவதற்கெல்லாம் முடியாது. சனீஸ்வரன் மட்டும் தனியாக இருப்பதால் வழுக்கி விழாமல் அவதானமாக ஐந்து அடி எடுத்து வைத்தால் ஒரு முறை சுற்றி வந்துவிடலாம். தரைக்கு கம்பளம் போட்டு அதன் சிதைவுகள் மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் எப்போது அது ஈரலிப்பாகவே காணப்படும். அதனால் தரையில் இருப்பதற்கு சிலர் விரும்புவதில்லை. ஒரு மலசல கூடம் உண்டு. அது எப்படி இருக்குமென்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

ஒ..தலப்ப பார்த்தவுடன் நம்ம "பூஸ்குட்டி" அண்ணா பசியில இருக்கிறார் எண்டு நெனைச்சிட்டன்..சரி அதை விடுவோம் விசயதிற்கு வருவோம்.. :lol:

ம்ம்..படம் வந்து கனக்க விசயங்களை தான் சொல்கிறது.. :(

ஆனால்!!

உங்க தேங்காய் அடிக்காமல் விட்டால் அவ்வளவு காசையும் அங்க அனுப்புவீனம் எண்டு நினைக்கிறியளோ..??..நான் எண்டா அப்படி நெனைக்கல பாருங்கோ..உந்த "தேங்காய் போஸ்டர்" அடிக்கிற நேரம் நீங்க வந்து குறிப்பிட தேங்காய்களை மலிவா வாங்கி.. :)

உங்க தேங்காய் அடிக்க வாறவையிட்ட கொஞ்சம் காசை கூட்டி விற்றாலும்..உவையள் கட்டாயம் வாங்குவீனம் தானே ஏன் எண்டா தெய்வ குற்றம் ஆகிடும் எண்டு..(நான் சொல்லுறது சரி தானே).. :D

அதில் வரும் வருமானத்தை நீங்கள் எங்கள் உறவுகளுக்கு அனுப்பி வைப்பதோடு மிண்கட்டும் "நோட்டிஸ்" அடித்தியளே அந்த காசையும் அனுப்பி வைத்தா நன்னா இருந்திருக்கும் அதை விட்டிட்டு.."நோட்டிஸ்" கொடுத்து கொண்டு இருந்தா ஆயுசிற்கும் கொடுத்து கொண்டு இருப்பியள்.. :)

"நோட்டிஸை"

உடையிற தேங்காய் உடைந்து கொண்டு தான் இருக்கும்..ம்.. :)

அப்ப நான் வரட்டா!!

யம்மு, இப்பிடியெல்லாம் நினைத்தால் நாம் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருக்கலாம். சிறுதுரும்பும் பல்லுக் குத்த உதவும் என்பதுபோல, இது கொஞ்சப் பேரையாவது சிந்திக்கத் தூண்டும். யாழிலேயே இது ஐந்து பக்கத்தைத் தாண்டிவிட்டது. இதைப் பற்றி ரொறன்ரோ வானொலி ஒன்றிலும் பேசியதாக அறிந்தேன். இதைத்தான் பிரச்சாரம் என்பது. நாம் எவ்வளவுக்கதிகமாகப் பிரச்சாரம் செய்கிறமோ அவ்வளவிற்கு எமக்கு நன்மைகள் உண்டு.

புலம்பெயர்நாடுகளில், ஆரம்பகாலங்களில் ஆலயவாசல்களில் உண்டியல்களை வைத்துக் குலுக்கித்தான் காசு சேர்த்தார்கள். நீங்கள் பிட்ஸா வாங்கிச் சாப்பிடும் காசை, கோப்பி வாங்கிச் சாப்பிடும் காசை இதில் போடுங்கள் என்று கூவிக் கூவித்தான் காசு சேர்த்தார்கள். அதற்கு அநேகமான ஆலயங்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சிறுகாலத்தின்பின், அடியார்கள், முக்கியமாகச் சிறுவர்கள் புனர்வாழ்வுக் கழக உண்டியலில் போடுவதற்குமெனச் சேர்த்துக் காசு கொண்டுவரத் தொடங்கினார்கள். அதன்பின்னர், மக்களின் வீடுகளில் புனர்வாழ்வுக் கழக உண்டியல்களை வைத்துக் காசு சேர்த்தார்கள். சமாதானக்கால இடைவெளி, தடைகள் ஆகியவற்றால் நிதிச்சேகரிப்பில் பின்னடைவு ஏற்பட்டது. அதனை நாம் மீண்டும் உத்வேகத்தோடு முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இதனை விமர்சிப்பதை விட்டு, அவர்களை ஊக்குவிப்பதே நல்லது. இந்தச் சுவரொட்டிகளை அடித்தவர்கள் நாத்திகவாதிகள் என்று நாம் முடிவுக்கு வருவதும் தவறு. எனக்குத் தெரிந்த தாயகப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்களில் பலர் ஆத்திகவாதிகள்தான். மக்கள் அதிகமாகக் குழுமும் இடங்களில் அந்தந்த இடத்திற்கேற்றவகையில் பிரச்சாரம் செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கோயிலுக்கு வரும் மக்களிடம் கோயில் சம்பந்தமான விடயங்களைப் படமாகப் போட்டுத்தான் நோட்டீஸ் அடிக்க முடியும். சினிமாப்படத்தைப்போட்டோ, உணவுப் படங்களைப் போட்டோ நோட்டீஸ் அடிக்கமுடியாது. இப்படி எடுத்ததெற்கெல்லாம் பிழை பிடித்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. பிழை பிடிப்பவர்கள் எப்போதும் பிழை பிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைக் கணக்கலெடுப்பதை விடுத்து, நாம் எமது கடமைகளைத் தொடர்ந்து செய்வதே இப்போதைய கட்டாயத் தேவை.

Edited by Thamilachchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாகச் சொனீர்கள் தமிழச்சி.

இதை ஏன் இந்து மதத்திற்கு எதிரான ஒன்றாக பலர் பார்க்கிறீர்கள்?

தாயகத்தில் அல்லல்ப்படும் உறவுகளை மறந்துவிட்ட உறவுகளுக்கான ஒரு வகையான கவனயீர்ப்பு என்று ஏன் கொள்ளலாகாது?

95 காலப் பகுதிகளில் யாழில் புலிகளின் அரசியல் துறை அறிக்கைகளில் "கவச வாகனங்கள் சூழ்ந்துள்ள வேளையில் கைலாய வாகனங்கள் தேவையா?" என ஒரு வசனம் வந்தது. அது மதத்திற்கு எதிராக சொல்லப்படவில்லை. மாறாக தமிழனே நீ போராடப் புறப்பட வேண்டிய தருணம் இது. வீணாக பொழுதைப் போக்காமல் போராட வா என்பது தான் அந்த செய்தி. ஆனால் இப்படிச் சொன்னால் உறைக்காது என்பதால் ஒரு உதாரணத்தைக் காட்டி மண்டையில் உறைக்கும்படி சொல்லப்பட்டது.

எல்லா முயற்சிகளுக்கும் குறைகளை சொல்லி முட்டுக்கட்டை போடாதீர்கள்.

இந்த படம் வெறுமனே தேங்காய் உடைப்பவனுக்கு மட்டுந்தானா? நிச்சயமாக இல்லை. உணர்வுள்ள எந்தத் தமிழனையும் அல்லல்ப்படும் உறவுகளை நினைத்துப் பார்க்கவைக்கும்.

இன்றைய மிக முக்கிய தேவை வன்னி மக்களின் அல்லல் புலம் பெயர் மக்களை சென்றடைவது. எம்மவரில் பலர் இன்னும் அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கிறார்கள். பலர் கூடும் இடம் கோயில். அதனால் இப்படியான கவனயீர்ப்பு அவசியம் தான்.

மீண்டும் சொல்கின்றேன். இன்றைய மிக முக்கிய தேவை வன்னி மக்களின் அல்லல் புலம் பெயர் மக்களை சென்றடைவது. சொல்லும் வழி எவ்வாறாயினும் இருக்கட்டும். தயவு செய்து குறை காணாதீர்கள்.

..................................... ...............

இத்தனைக்கும் இந்தப் பிள்ளையார் கோயிலை நினைத்தாலே வாந்திதான் வரும். இக் கோயில் லாசப்பலுக்கு அருகில் பாழடைந்த கட்டடம் ஒன்றின் கீழ் அமைந்துள்ளது. சுமார் 20 பேர் நின்று கும்பிட மட்டுமே இடவசதியுள்ள அறையொன்றில் யன்னல்கள் இல்லாததால் சுவரெங்கும் கற்பூரப் புகையுடன் காணப்படும். இடவசதி போதாமையால் மூலஸ்தானத்தை வலம் வருவதற்கெல்லாம் முடியாது. சனீஸ்வரன் மட்டும் தனியாக இருப்பதால் வழுக்கி விழாமல் அவதானமாக ஐந்து அடி எடுத்து வைத்தால் ஒரு முறை சுற்றி வந்துவிடலாம். தரைக்கு கம்பளம் போட்டு அதன் சிதைவுகள் மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் எப்போது அது ஈரலிப்பாகவே காணப்படும். அதனால் தரையில் இருப்பதற்கு சிலர் விரும்புவதில்லை. ஒரு மலசல கூடம் உண்டு. அது எப்படி இருக்குமென்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இதனை கோயில் என்கிறார்கள்....கடவுளை வைத்து வியாபாரம் செய்கிறனர்.. கடவுளை இங்குவைத்து நய்யபுடைப்பதுபோல் உள்ளது. :(:) இதற்காகத்தான் நான் இங்குள்ள கோயிலுக்கு போக விரும்புவதில்லை.... ஏதோ ஒரு கிறிஸ்தவ தேவாலயங்களில் போய் மனதை அடக்கி தியானித்தால் அங்கு எமது கடவுளை காண்கிறேன். அதிகம் இப்படித்தான் இங்குள்ளோர் என எண்ணுகிறேன். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மலசல கூடம் உண்டு. அது எப்படி இருக்குமென்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.

லா சப்பலில் உள்ள தொடரூந்து நிலையத்தில் இருந்து மேலே வீதிக்கு வந்தாலே மலசல கூடத்திற்கு வந்தமாதிரி இருந்தது.. பியர் கான்களுக்கிடையில் தடக்குப்படாமல் நடப்பதே கடினம்தான்.. இதற்குள் அங்கு கோயில் வேறு உள்ளதா?

யம்மு, இப்பிடியெல்லாம் நினைத்தால் நாம் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருக்கலாம். சிறுதுரும்பும் பல்லுக் குத்த உதவும் என்பதுபோல, இது கொஞ்சப் பேரையாவது சிந்திக்கத் தூண்டும். யாழிலேயே இது ஐந்து பக்கத்தைத் தாண்டிவிட்டது. இதைப் பற்றி ரொறன்ரோ வானொலி ஒன்றிலும் பேசியதாக அறிந்தேன். இதைத்தான் பிரச்சாரம் என்பது. நாம் எவ்வளவுக்கதிகமாகப் பிரச்சாரம் செய்கிறமோ அவ்வளவிற்கு எமக்கு நன்மைகள் உண்டு.

புலம்பெயர்நாடுகளில், ஆரம்பகாலங்களில் ஆலயவாசல்களில் உண்டியல்களை வைத்துக் குலுக்கித்தான் காசு சேர்த்தார்கள். நீங்கள் பிட்ஸா வாங்கிச் சாப்பிடும் காசை, கோப்பி வாங்கிச் சாப்பிடும் காசை இதில் போடுங்கள் என்று கூவிக் கூவித்தான் காசு சேர்த்தார்கள். அதற்கு அநேகமான ஆலயங்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சிறுகாலத்தின்பின், அடியார்கள், முக்கியமாகச் சிறுவர்கள் புனர்வாழ்வுக் கழக உண்டியலில் போடுவதற்குமெனச் சேர்த்துக் காசு கொண்டுவரத் தொடங்கினார்கள். அதன்பின்னர், மக்களின் வீடுகளில் புனர்வாழ்வுக் கழக உண்டியல்களை வைத்துக் காசு சேர்த்தார்கள். சமாதானக்கால இடைவெளி, தடைகள் ஆகியவற்றால் நிதிச்சேகரிப்பில் பின்னடைவு ஏற்பட்டது. அதனை நாம் மீண்டும் உத்வேகத்தோடு முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இதனை விமர்சிப்பதை விட்டு, அவர்களை ஊக்குவிப்பதே நல்லது. இந்தச் சுவரொட்டிகளை அடித்தவர்கள் நாத்திகவாதிகள் என்று நாம் முடிவுக்கு வருவதும் தவறு. எனக்குத் தெரிந்த தாயகப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொண்டர்களில் பலர் ஆத்திகவாதிகள்தான். மக்கள் அதிகமாகக் குழுமும் இடங்களில் அந்தந்த இடத்திற்கேற்றவகையில் பிரச்சாரம் செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கோயிலுக்கு வரும் மக்களிடம் கோயில் சம்பந்தமான விடயங்களைப் படமாகப் போட்டுத்தான் நோட்டீஸ் அடிக்க முடியும். சினிமாப்படத்தைப்போட்டோ, உணவுப் படங்களைப் போட்டோ நோட்டீஸ் அடிக்கமுடியாது. இப்படி எடுத்ததெற்கெல்லாம் பிழை பிடித்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. பிழை பிடிப்பவர்கள் எப்போதும் பிழை பிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைக் கணக்கலெடுப்பதை விடுத்து, நாம் எமது கடமைகளைத் தொடர்ந்து செய்வதே இப்போதைய கட்டாயத் தேவை.

தமிழச்சி, உங்கள் கருத்தை 100 வீதம் ஆமோதிக்கிறேன்.

மகாபாரத்தில் துரோணர் அர்சுனனிடம் கேட்டார் "உனக்கு மரம் தெரிகிறதா?" "இல்லை", "கிளை தெரிகிறதா?" "இல்லை", "இலை தெரிகிறதா?" " இல்லை", "கிளி தெரிகிறதா" "ஆமாம்" என்றான். அர்சுனனின் குறிக்கோள் கிளியாகத்தான் இருந்தது. அவனுக்கு கிளியைத்தவிர வெறொன்றும் தெரியவில்லை. மற்றவர்களுக்கோ கிளியைத்தவிர மற்றெல்லாமே தெரிந்தது. அதனால்த்தான் அர்ச்சுனன் வில்லுக்கு விஜயனானான்.

எமது எலோருக்கும் குறிக்கோள் ஒன்று உள்ளது. அதை நோக்கி எல்லோரும் நடந்தேயேமானால் வெற்றி நம்மை நோக்கி நடக்கத் தொடங்கிவிடும்.

அபச்சாராம் அபச்சராம்,

தமிழரின் கலை கலாச்சாராம் மொழி எண்டு எல்லாத்தையும் பாதுகாக்கும் தமிழரின் அடையாளமா இருக்கிற கோவில்களை உங்க நாத்திகர் எல்லாம் சேர்ந்து சதி செய்து துலைக்கப்பாக்கிறியள்.

அன்பே சிவம், கோவிலில இருக்கிற சிலை ஒரு குறீயீடு எண்டுவம் ஆனா அந்தக் குறியீட்டுக்கு தேங்காய் உடைப்பம் நகை போடுவம் தங்கத்தாலை அலங்கரிப்பம் சப்பறம் கட்டுவம் தேர் ஓட்டுவம் பாலாபிசேகம் செய்வம் வீடுகள் வாங்குவம் அய்யருக்கு பென்ஸ் கார் வாங்குவம்.என்ன மிஞ்சி மிஞ்சிப் போன ஒரு சில மில்லியன்கள் தான் செலவாகும்.எங்கட காசு நாங்க என்ன வேண்டுமானாலும் செய்வம் உங்களுக்கு என்ன?

அப்ப அன்பே சிவம் எண்டது என்ன பம்மாத்துக்கோ? அன்பை மனிசரிலையோ காட்டச் சொல்லி இருகிறாங்கள்?

கற் சிலைகள் மேல தான் காட்டச் சொல்லி இருக்காங்கள்.

உப்படி எடக்கு முடக்கா கேள்வி கேக்கிறன்வக்கள் எல்லாம் இந்த பின் லாடனை விட மிகப்பெரிய பயங்கரவாதிகள் நாத்திகவாதிகள்.

நீங்கள் பியிர் அடிப்பியள் பிஸா சாப்பிடுவியள் அப்படித் தானே நாங்களும் எங்களுக்கு விருப்பமான சிலையைக் கொண்டு வணங்குவம் தலைகீழ நிப்பம் உங்களுக்கு என்ன வந்தது?

:)

தேங்காய் ஒரு பவுன்ஸ் கோவில் கட்ட ஆயிரம் பவுன்ஸ் பக்கத்து வீடுகளை வாங்க இன்னும் சில மில்லியன்கள் அய்யருக்கு பென்ஸ் கார் திருவிழாச் செய்ய இன்னும் கொன்சம் ஆயிரம் பவுண்ஸ்கள் கடைசியில வன்னிக்கு காத்துக் கூடப் போகாது.

அன்பே சிவம் என்பது மற்றைய உயிர்களைப் பார்த்துச் சொன்னது எண்டு சொல்லுறவன் நாத்திகவாது ஆனா கற் சிலகளுக்கு திருவிழாச் செய்து கொண்டாடுபவன் ஆத்திகவாது. :D:lol:

விந்தையான மனிதர்..... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொர்க்கபுரியில் இருந்து வந்தவர்கள் லாசப்பலின் அழுக்கைப்பற்றி விவாதிக்கின்றார்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கபுரியில் இருந்து வந்தவர்கள் லாசப்பலின் அழுக்கைப்பற்றி விவாதிக்கின்றார்கள் :)

Eiffel tower area, Seine நதிக் கரையோரம், St.Michel, Champs-Elysees, Opera பகுதிகள் சொர்க்கபுரி போலத்தான் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

மனமது லிங்கமாகும்

நேசமே நெய்யும் பாலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாகச் சொனீர்கள் தமிழச்சி.

இதை ஏன் இந்து மதத்திற்கு எதிரான ஒன்றாக பலர் பார்க்கிறீர்கள்? தாயகத்தில் அல்லல்ப்படும் உறவுகளை மறந்துவிட்ட உறவுகளுக்கான ஒரு வகையான கவனயீர்ப்பு என்று ஏன் கொள்ளலாகாது?

(...)

இந்த படம் வெறுமனே தேங்காய் உடைப்பவனுக்கு மட்டுந்தானா? நிச்சயமாக இல்லை. உணர்வுள்ள எந்தத் தமிழனையும் அல்லல்ப்படும் உறவுகளை நினைத்துப் பார்க்கவைக்கும்.

இன்றைய மிக முக்கிய தேவை வன்னி மக்களின் அல்லல் புலம் பெயர் மக்களை சென்றடைவது. எம்மவரில் பலர் இன்னும் அங்கு என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கிறார்கள். பலர் கூடும் இடம் கோயில். அதனால் இப்படியான கவனயீர்ப்பு அவசியம் தான்.

மீண்டும் சொல்கின்றேன். இன்றைய மிக முக்கிய தேவை வன்னி மக்களின் அல்லல் புலம் பெயர் மக்களை சென்றடைவது. சொல்லும் வழி எவ்வாறாயினும் இருக்கட்டும். தயவு செய்து குறை காணாதீர்கள்.

கதோலிக்கப் பாதிரியார்களால் அகதிகளுக்கு தமது திருச்சபையில் யாழ்ப்பாணத்தில் நிதி திரட்ட முடிகிறது.மடு மாதா உற்சவத்தை நடத்தாமல் இருக்க முடிகிறது.

யாழ்ப்பாணத்தில் 1995ல் இடம் பெயர்வு நடக்கும் போது, மடுவில் ஆடம்பரமாகத்திருவிழா நடக்கும் போது நீங்கள் எங்கே போன நீங்கள்?. அட சென்ற வருடம் வாகரை, சம்பூர், மூதூரில் இடப்பெயர்வு நடைபெறும் போதும் மடுவில் திருவிழா நடந்தது தானே. வாரவருடம் சிலவேளை மடுவில பெரிய திருவிழா வைத்தாலும் வைப்பினம். இம்முறை வைப்பதற்கு அங்க சனம் இல்லையே. 95ல மக்கள் இல்லாத்தினால் யாழ்ப்பாணக்கோவில்களில் திருவிழா நடக்கவில்லை.

அவுஸ்திரெலியாவில் வானொலிகள் மூலம் தாயக மக்களுக்கு நிதி சேகரிப்பு நடாத்தப்படுவது வழக்கம்.அப்பணம் கிருஸ்தவ அமைப்புகளின் ஊடாக மக்களுக்கு உதவி செய்யப்படுகிறது. இதில வேடிக்கை என்ன வேண்டால், அவுஸ்திரெலியாவில் அதற்கு பண உதவிகள் செய்பவர்களில் 95 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் இந்துக்கள். பணம் மக்களுக்கு போக வேணுமென்ற நோக்கத்திற்காகவே அவர்கள் உதவி புரிகிறார்கள். ஆனால் அங்கே சில கிருஸ்தவ அமைப்புக்கள் அனாதைச் சிறுவர்களுக்கு உதவும் போது, உணவுப்பண்டங்களை யேசு தான் தந்தவர் என்று சொல்லி, அனாதைச் சிறுவர்களை இலகுவாக மதம் மாற்றமடையச் செய்கிறார்கள். சிலர் வெளினாடுகளில சொல்வதுண்டு, கிறிஸ்தவ பாதிரிமார் தான் வெளினாடுகளில் இருக்கும் தூதுவர்களுக்கு எங்கட பிரச்சனைகள் சொல்லுவதுண்டு. அய்யர்மார் சொல்வதில்லை என்று. ஆனால் அய்யர்மார் பெரும்பாலும் 6ம்,7ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பார்கள். ஆங்கில அறிவு காணாது. அதனால் அவர்களுக்கு தூதுவர்களுடன் கதைக்க ஏலாமல் இருக்கிறது. இதைவிட சில கோவில்களும் அங்குள்ள அனாதைப்பிள்ளைகளுக்கு உதவி புரிகிறது. உ+ம் - தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில்.

இதில தேங்காய் உடைப்பதில் குறை காணுபவர்கள் பொழுது போக்காக படம் பார்க்க போவார்கள், பாருக்கு போவார்கள், கிளப்புக்கு போவார்கள், இல்லை வீட்டில தண்ணி அடிப்பார்கள், பிள்ளையளுக்கு பொழுது போக்க வீடியோ கேம் வாங்கி கொடுப்பார்கள்.

எனக்கும் தேங்காய் உடைப்பதில் துளிஅளவும் விருப்பம் இல்லை ஆனால் ஒரே சமூகத்தை விழுந்து விழுந்து வாருறத விட்டுட்டு உருப்படியா ஏதாவது செய்யலாம்.

உதாரணத்துக்கு எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம் சொல்றேன்.

நானும் நண்பனும் யூனி பாரில ஒரு பிச்சர் பீர் ($12) எடுத்து அடிச்சிட்டு இருக்க தேசிய விரும்பியான ஒரு நபர் அந்த பக்கமாக வந்தார் (அவர் சமூக அந்தஸ்து கருதி குடிப்பதில்லை). வந்து ஒரே லெக்சர். அந்த 12 டொலரை அனுப்பினா அங்கை 12 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடுமாம். அந்தாளுக்கு பதில் சொல்ல எனக்கு இன்னுமொரு பிச்சர் வேணுமெண்டு போட்டு பதில் ஒண்டும் சொல்லாமல் விட்டுட்டேன். அன்று மாலையே வேறொரு இடத்துக்கு போகும் போது தியேட்டருக்கு பக்கத்தில அதே நபர் தனது நண்பருடன் படம் பார்க்க பொப்கோணுடன் நின்றார். எனக்கு கடுப்பாகிட்டுது. நேரா போய் உந்த காசை (2 பட அனுமதி $20, பெப்கோர்ன் $5) அனுப்பினால் 25 குடும்பம் ஒரு நேரம் சாப்பிடும் எண்டு சொல்ல அவருக்கு மூஞ்சையெல்லாம் கறுத்திட்டுது. அவருது நண்பர் ரென்சனாகி என்னோட ஏதோ கதைக்க வெளிக்கிட இவர் சமாளிச்சு தடுத்திட்டார்.

இதில என்ன சொல்ல வாறேன் எண்டால்:

தேங்காய் உடைக்கிறதில ஒரு பிரயோசனமும் இல்லை. 100 தேங்காய் உடைக்க 100 டொலர் முடியும்.

ஆனால் ஒருநாள் நண்பர்களுடன் வெளியே போனால் 100 - 200 எண்டு போகும்

குடும்பத்துடன் படம் பார்க்க போனால் 50 - 100 எண்டு வேணும் (இப்பவும் ரொறன்ரோ போய் தமிழ் தியேட்டர் வளிய பாத்தா சனம் முண்டியடிச்சுகொண்டு தான் நிக்குது)

பிள்ளைக்கு வீடியோ கொன்சோல் வாங்கி கொடுத்தால் 300 - 400 எண்டு வேணும்

அந்த வீடியேக்கு கேம் வாங்கி குடுத்தால் 60 - 70 எண்டு வேணும்

எல்லாத்துக்கும் மேலால புலம்பிற ஆக்கள் தாங்கள் இருக்கிற 400 000 - 600 000 எண்டு வீட்டை வாங்கி, வங்கி காறனுக்கு மோர்கேச்சுக்கு 800 - 1000 எண்டு வட்டி கட்டுறத விட ஒரு சாதாரண வீட்டை வாங்கி 200 - 300 ஜ் வட்டியா கட்டி மிச்ச 500 - 700 ஊருக்கு அனுப்பினாலும் சனத்தின்ர கஸ்டத்தை கொஞ்சம் தீர்கலாம்.

இப்பிடி மாதம் மாதம் 500$ - 1000$ எண்டு மிச்சம் பிடிச்சு அனுப்பிறத விட்டுட்டு வருடத்தில 100 டொலருக்கு கேங்காய் அடிக்கிறான் எண்டு புலம்புறிங்கள். இங்கு சிலருக்கு தேங்காய் அடிக்கிறது பிரச்சனை இல்லை.... சைவ சமூகத்தில் குற்றம் காணுவதே பிரச்சனையாக உள்ளது. :lol: :lol:

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானதே. இது தான் தற்போது ஐரோப்பா முழுவதிலும் நடைபெறுகின்றது. அடுத்தவர்கள் நடாத்தும் கோவிலை குறை சொல்பவர்கள் தாம் நடாத்தும் கோவில்களில் செய்வதை மறந்து விடுகின்றார்கள். எதையும் அடுத்தவர்களுக்கு புத்தி சொல்ல வரும் முன், தாமல்லவா முன்னுதாரணமாக நடந்து காட்ட வேண்டும். ஆனால் என்றுமே ஊருக்கு வெறும் உபதேசம் மட்டுமே. அதைவிட இப்படியான வருமானம் வரும் கோவில்களைத் தாக்க அவற்றை இலங்கை அரசுடன் முடிசசுப் போட்டு விடுவார்கள். இதனால் இந்த கோவில்களுக்கு வரும் மக்களை ஏதோ துரோகிகள் ஆக்குவது போலல்லவா இவர்களின் செயல்கள் அமைகின்றன.

இப்படிப் பார்த்தால் கிறிஸ்தவ தேவாலயங்களில் எத்தனை மூட்டை மூட்டையாக திருநாள்களின் போது மெழுகுதிரிகளை எரிக்கின்றார்கள். அவற்றை இவர்களால் என்ன செய்ய முடியும். எல்லோருக்கும் இளைத்தவன் இந்து சமயத்தவன் தானோ??

வசம்பு நீங்கள் 'அவர்கள்' என்று யாரைக் குறிப்பிடீர்கள்?

'இவர்கள்' அல்லது ' நாங்கள்' என்று யாரைக் குறிப்பிடீர்கள்?

உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

//பாணத்தில் 1995ல் இடம் பெயர்வு நடக்கும் போது, மடுவில் ஆடம்பரமாகத்திருவிழா நடக்கும் போது நீங்கள் எங்கே போன நீங்கள்?. அட சென்ற வருடம் வாகரை, சம்பூர், மூதூரில் இடப்பெயர்வு நடைபெறும் போதும் மடுவில் திருவிழா நடந்தது தானே. வாரவருடம் சிலவேளை மடுவில பெரிய திருவிழா வைத்தாலும் வைப்பினம். இம்முறை வைப்பதற்கு அங்க சனம் இல்லையே. 95ல மக்கள் இல்லாத்தினால் யாழ்ப்பாணக்கோவில்களில் திருவிழா நடக்கவில்லை.

அவுஸ்திரெலியாவில் வானொலிகள் மூலம் தாயக மக்களுக்கு நிதி சேகரிப்பு நடாத்தப்படுவது வழக்கம்.அப்பணம் கிருஸ்தவ அமைப்புகளின் ஊடாக மக்களுக்கு உதவி செய்யப்படுகிறது. இதில வேடிக்கை என்ன வேண்டால், அவுஸ்திரெலியாவில் அதற்கு பண உதவிகள் செய்பவர்களில் 95 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் இந்துக்கள். பணம் மக்களுக்கு போக வேணுமென்ற நோக்கத்திற்காகவே அவர்கள் உதவி புரிகிறார்கள். ஆனால் அங்கே சில கிருஸ்தவ அமைப்புக்கள் அனாதைச் சிறுவர்களுக்கு உதவும் போது, உணவுப்பண்டங்களை யேசு தான் தந்தவர் என்று சொல்லி, அனாதைச் சிறுவர்களை இலகுவாக மதம் மாற்றமடையச் செய்கிறார்கள். சிலர் வெளினாடுகளில சொல்வதுண்டு, கிறிஸ்தவ பாதிரிமார் தான் வெளினாடுகளில் இருக்கும் தூதுவர்களுக்கு எங்கட பிரச்சனைகள் சொல்லுவதுண்டு. அய்யர்மார் சொல்வதில்லை என்று. ஆனால் அய்யர்மார் பெரும்பாலும் 6ம்,7ம் வகுப்பு மட்டுமே படித்திருப்பார்கள். ஆங்கில அறிவு காணாது. அதனால் அவர்களுக்கு தூதுவர்களுடன் கதைக்க ஏலாமல் இருக்கிறது. இதைவிட சில கோவில்களும் அங்குள்ள அனாதைப்பிள்ளைகளுக்கு உதவி புரிகிறது. உ+ம் - தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில். //

நாட்டில் ஒரு பகுதி மக்கள் துன்பப் பட்டு அல்லற்படும் போது இன்னொரு பகுதி மக்கள் ஆயிரக் கணக்கில் கூடி விழா எடுப்பது எந்தவகையில் நியாயம் என்றே கேட்கிறேன்.அது கதோலிக்கர்கள் செய்தாலும் ஒன்று தான் இந்துக்கள் செய்தாலும் ஒன்று தான்.இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் இவ்வாறு விழாக்களை எடுப்பவர்கள்.

இங்கே இருக்கும் அடிப்படைப் பிரச்சினை உங்களுக்கு மனித நேயம் இருக்கிறதா இல்லை உங்கள் கட்வுள் மீதான பக்தி நம்பிக்கை உங்கள் மனிதாபிமானத்தை இழக்க வைக்கிறதா என்பதே.மதங்கள் மனிதாபிமானத்தை வளர்ப்பதகாச் சொல்பவர்களிட்ம கேட்கிறேன், உங்கள் கடவுள் நம்பிக்கைகள் அடிப்படையில் மனித நேயத்தை வளர்க்கின்றனவா சுய நலத்தை பேராசையைகளை வளர்க்கின்றனவா?

அன்பே சிவம் என்பது மனித நேயமான ஒரு சிந்தனை ஆனால் நடைமுறையில் அது கைக் கொள்ளப்படுகிறதா?இல்லையே.

இயேசு என்பவர் மற்றவர்களின் பாவதிற்காக சிலுவையைச் சுமந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால் அவர் பெயரில் மத வழி பாடு செய்பவர்கள் அவரின் வாழ்க்கையை அதன் மனித நேயத்தைப் புரிந்து கொள்ளமால் அதனை ஒரு சடங்காக ஒரு மதமகா ஒரு திருவிழாவாகப் பார்க்கிறார்கள்.

நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் உண்மையில் மனித நேயத்தை வளர்த்தால் மதங்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் உண்மையில் நடைமுறையில் மதங்கள் அவ்வாறு இல்லை என்பதே இந்தக் கருத்தாடல் மூலம் நாங்கள் கண்டு கொள்ளக் கூடிய உண்மையாக இருக்கிறது.

Edited by narathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.