Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவில் தோன்றிய காட்சிகளை புகைப்படமாக பதிவுசெய்யும் தொழில்நுட்பம்- ஜப்பானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு

Featured Replies

ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூளையின் சிந்தனைகளிலிருந்து பிரதி பிம்பங்களை உருவாக்கும் "மனதை வாசித்தல் தொழில்நுட்பம்' உருவாக்கப்பட்டுள்ளமை உலகில் இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் இந்த வருட ஆரம்பத்தில் அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனதை ஊடுகாட்டும் சாத்தியம் குறித்த எண்ணக்கருவை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மென்பொருளானது மூளையிலிருந்தான சமிக்ஞைகளைப் பெற்று, அவற்றைத் தனது நிகழ்ச்சித் திட்ட ஒழுங்கமைப்புக்கு ஏற்ப ஒப்பீடு செய்து புகைப்படமாக மாற்றும் வல்லமை கொண்டதாகும்.

எனினும், தற்போது கறுப்புவெள்ளை புகைப்பட பிரதிமையாக காட்சிப்படுத்தப்படும் இந்தப் புகைப்படங்கள் தொடர்பான துல்லியத் தன்மையை மேம்படுத்த, மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

-வீரகேசரி நாளேடு 12/15/2008 8:23:08 PM-

"முடியாதுன்னு ஒன்னுமில்லை"

"Nothing Impossible" :)

ஏன் இந்த விசப்பரீட்சை ...?

முன்னேற முன்னேற விஞ்ஞானம் விசஞானம் ஆகுதுபோல...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கற்பனை செய்வதையும் படமாக்கினால்.......

நிஸமானவர்கள் ஆடையணிந்தும் .........

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் உறக்கத்தில் காணும் கனவுகளை விழித்தெழுந்ததும் புகைப்படங்களாக கண்டுகளிப்பதற்கு வழிவகை செய்யும் மென்பொருள் ஒன்றை ஜப்பானிய கயோடோ நகரிலுள்ள நரம்பு விஞ்ஞான கணிப்பு ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

என்ன கோதாரியப்பா ..... இந்த விஞ்ஞானியள் சும்மா இருக்க மாட்டாங்களா ? :D

நான் , கனவு கண்டு நித்திரையால எழும்புறதுக்குள்ளை அந்த படத்தை ஆரும் பாத்திட்டா ..... :lol:

தலையிலை கல்லை எல்லோ ..... தூக்கி போட்டுடுவினம் . :)

  • கருத்துக்கள உறவுகள்

நமது பத்திரிகைகள் எந்தவித ஆதாரமுமில்லாமல் சும்மா புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுவதில் முன்னணியில் நிற்கின்றன. இன்றைய விஞ்ஞான உலகில் எழுதப்படும் எல்லா தரவுகளுக்கும் செய்திகளுக்கும் உரிய பின்னணியை நிரல்படுத்தியே கட்டுரைகள் வரையப்படுகின்றன.

அறிவியலின் அணுகுமுறைகள் எங்கோ போய்க்கொண்டிருக்க எந்தவித விளக்கங்களுமில்லாமல் ஒரு சராசரித் தமிழனை முட்டாளாக்கும் விதத்தில் நெடுங்காலமாகவே இத்தகைய செய்தித் துணுக்குகள் பரவலாகப் பிரசுரிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்த மனிதன் தொடக்கம் அகத்திய முனிவருட்பட்ட சித்தர்களின் செய்திவரை பலரும் எழுத, அதைக் கண்ணைமூடிக் கொண்டு பத்திரிகைகள் பிரசுரிக்க மொத்தத்தில் தமிழினம் முட்டாளாக்கப்பட்டுக்nகொண்டே போகின்றது.

கனவில் தோன்றும் காட்சிகளை நரம்பியல் மண்டலம் வேண்டுமானால் அதிர்வலைகளாகப் பிரதிபலிக்கக்கூடும். அந்த அதிர்வலைகள் கருத்தற்ற தாறுமாறான கோடுகளாகத்தான் படங்களில் தெரியுமேயொழிய நயன்தாராவுடன் கட்டிப்பிடித்து டூயட்பாடும் ஒரு காதல் காட்சியாகத் தெரியாது. வாசிப்பவன் கேனையனாக இருந்தால் எழுதுகிறவனும் பிரசுரிப்பவனும் அறிவாளிகளாகிவிடுகிறார்கள் பத்திரிகையும் அறிவியல் விஞ்ஞான ஏடாகிவிடும். தமிழரின் சாபக்கேட்டை என்னென்பது.

அப்பாடா ..... இப்பதான் நிம்மதி கரு . :)

  • தொடங்கியவர்

ஒளிப்படக்கருவியை கண்டுபிடிக்கேக்கையும் இப்படியான கேனை விமர்சனங்கள் வந்ததாக கேள்விப்பட்டன். அது சாத்தியமாகலையா???

ஒளியலைகள்தான் கண்ணில படுது அதைத்தான் எங்கட மூளை ஒவ்வொரு பொருட்களாக பிரித்தறியுது இதேபோன்றுதான் கனவிலவாற அலைகளை கொண்டு கணணி மூளையால பொருட்களையும் சில அசைவுகளையும் அவதானிக்கலாம். தற்போதைக்கு ஆரம்பம்தான். ஆனால் ஒருநாளைக்கு புளு-றே தராதரத்தில கலர்புள்ளா படம் வரலாம். அப்பேக்க நாங்கள் விதம்விதமா நயந்தாரவை கண்டுகளிக்கலாம்...ம் இன்னொருத்தன்டை கனவைத்தான். :)

http://www.telegraph.co.uk/news/worldnews/...map-dreams.html

http://www.geek.com/articles/gadgets/dream...japan-20081212/

  • கருத்துக்கள உறவுகள்
அப்பாடா ..... இப்பதான் நிம்மதி கரு .  
[/codebox]

நண்பரே நன்றாகக் கனவு காணுங்கள். இரவென்ன, பகற்கனவே காணுங்கள். இன்னும் ஆயிரம் வருடத்திற்கு உங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதன் பிறகு.... பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='Kuddi thampi' date='Dec 18 2008, 10:20 AM' post='469724']
[b]ஒளிப்படக்கருவியை கண்டுபிடிக்கேக்கையும் இப்படியான கேனை விமர்சனங்கள் வந்ததாக கேள்விப்பட்டன். அது சாத்தியமாகலையா???

ஒளியலைகள்தான் கண்ணில படுது அதைத்தான் எங்கட மூளை ஒவ்வொரு பொருட்களாக பிரித்தறியுது இதேபோன்றுதான் கனவிலவாற அலைகளை கொண்டு கணணி மூளையால பொருட்களையும் சில அசைவுகளையும் அவதானிக்கலாம். தற்போதைக்கு ஆரம்பம்தான். ஆனால் ஒருநாளைக்கு புளு-றே தராதரத்தில கலர்புள்ளா படம் வரலாம். அப்பேக்க நாங்கள் விதம்விதமா நயந்தாரவை கண்டுகளிக்கலாம்...ம் இன்னொருத்தன்டை கனவைத்தான். [/b][/codebox]

ஒளிப்படக் கருவியைக் கண்டு பிடிச்சுப் படத்தை எடுத்துக் கண்ணால பார்க்கச் சொல்லிக் காட்டுனதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் எண்டு தெரியவில்லை.

கணனி மூளை காணும் காட்சியைப் பதிவு செய்யவேணுமென்றால் கணனிதான் கனவு காணவேணும்.

மனிதன் காணும் கனவைக் கணனியின் மூளைக்குள்ச் செலுத்துவது எப்படி என்பதுதான் இங்குள்ள பிரச்சனையே. அதற்குத்தான் ஒரு ஆயிரம் வருடமாவது ஆகலாமென எண்ணுகிறேன். அதற்குப் பிறகும் அது சாத்தியமாகுமா என்பது தெரியாது.

கணனி எல்லாவற்றையும் சாதிக்கும் என்று கேனைத்தனமாக நம்பினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா நாங்கள் காணும் கனவை புகைப்படமாக எடுத்தால் எங்களின் வீட்டில் நடக்கும் நிலைமையை நினைத்தால் எனக்கு இப்பவே ஒப்பாரி வைக்கவேணும் போல் உள்ளது ஆனால் மனிசிற்ற ஒரு சில பேர் அடிவாங்க நேரிடும் என்பது மறையாக உள்ளது :lol::):lol:

இது இந்த ஆராய்ச்சி மிகவும் ஆரம்ப நிலையிலதான் இருக்கிது. குட்டிதம்பி தந்த இணைப்பை பார்த்தன்.

"By applying this technology, it may become possible to record and replay subjective images that people perceive like dreams." எண்டுதான் சொல்லி இருக்கிறாங்கள்.

மல்லிகைவாசம் சொன்னமாதிரி முடியாதது எண்டு ஒண்டும் இல்ல. ஆனால் இதற்காக இன்னும் நீண்டபயணம் மேற்கொள்ளவேணும்.

Edited by முரளி

சாத்தியமாகாது என்று எதுவும் இல்லை. செயற்கை மூளை மூளை பற்றிய ஆராய்ச்சிகளும் இயந்திரங்களை செயற்கையாக 'சிந்திக்க' வைத்தல் பற்றிய ஆராய்ச்சிகளும் முன்னேற்றமடைந்து வரும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் பாதையில் இவை என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக சாத்தியாகும்

  • கருத்துக்கள உறவுகள்

கணனி கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஏற்று ஒரு தளத்தில் மேல் கீழாக ஓடிக் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு சாதாரண யந்திரமாகும். இரண்டாவது மூன்றாவது பரிமாணங்களில் செயற்படும் நிலைக்கே இன்னும் வரவில்லை.

உதாரணமாக மைக்கிரோ சொப்ட் வேடில் மேலிருந்து கீழாக ஒரு கோட்டைப் போட்டுத்தரக்கூடக் கணனியால் முடியாது. இடமிருந்து வலமாக மட்டுமே போட்டுத்தரும் சில பிரத்தியேக புரோக்கிராம்கள+டாகவே இதனைச் செய்யக் கூடியதாயிருக்கிறது.

மனித மூளை அப்படிப்பட்டதல்ல மூன்றுக்கும் மேற்பட்ட தளங்களில் கூடச் செயலாற்றும் வல்லமை கொண்டது. மனிதனின் முப்பரிமாண அல்லது அதற்கும் மேற்பட்ட சிந்தனைகளால் உருவாகும் கனவை கணனியால் படம்பிடிக்க முடியுமென எதிர்பார்க்க முடியாது.

முப்பரிமாணத்தில் சிந்தித்துச் செயற்படக்கூடிய கணனிகள் உருவானாலும்கூட அதற்கும் மிஞ்சிய மனித மூளையின் செயற்பாடுகளைக் கணனிகள் எட்டமுடியாது.

தற்போது உயிரியல் மூலக்கூறுகளை கணனிச் சிப்ஸ்களில் பதித்து இத்தகைய முப்பரிமாணச் சிந்தனையைக் கணனிகளில் உருவாக்க ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். சிலவேளை அந்த ஆய்வுகள் வெற்றிபெற்றால் மனித மூளையின் கலங்களையும் கணனிச் சிப்ஸ்களில் பதித்து ஓர் உயிர்க்கணனியை உருவாக்கும்போது கனவைப் படம்பிடித்தல் சாத்தியமாகலாம்.

அதற்கு ஒரு ஆயிரம் வருடங்களாவது செல்லக்கூடும்.

தற்போதுள்ள பிரச்சனை உயிர்க்கணனிகள் உருவானால் அவற்றின் அனுசேபச் செய்முறைகளை அதாவது சிப்ஸ் கலங்களின் உயிர்ப்பைத் தக்கவைப்பதற்கு அவை சுவாசிக்கவும் உணவுண்ணவும் கழிவு செய்யவும் வேண்டியிருப்பதால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதே.

அதுதான் வெற்றி பெற்றாலும் இன்றைய சடப்பொருட்கணனிகளின் சிப்ஸ்களைப்போல உயிரியல் சிபஸ்களை உருவாக்க முடியுமா என்பது இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.

அதனால்த்தான் ஆயிரம் வருடங்களை ஓர் காலக் கெடுவாகக் குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு டெம்ப சந்தோசம்...பாருங்கோ..படுக்கையி

ல கிடந்து பல கனவு காண்பன்..அப்ப அதுகள பதியலாம்..சப்பட்டைகளிற்கு நன்றிகள்..

நான் ஒரு கனவு கண்டேன் என்ன அது...சொல்ல மாட்டன்..ஏன்..எனக்கு வெட்கமாய் இருக்கு.. :lol::)

Edited by new man

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ கடவுளே உந்தக்கருவி என்ரை கையிலை இப்ப இருந்தால் நல்லதொரு படமெல்லே காட்டியிருப்பன். :)

ஏனெண்டால் போனகிழமைதான் எங்கடை சாத்திரியாரும் சபேசனும் கூட்டாய் கம் அம்மனுக்கு பறவைக்காவடி எடுக்குறதாய் கனவு கண்டனான். :D

ஐயோ கடவுளே உந்தக்கருவி என்ரை கையிலை இப்ப இருந்தால் நல்லதொரு படமெல்லே காட்டியிருப்பன். :(

ஏனெண்டால் போனகிழமைதான் எங்கடை சாத்திரியாரும் சபேசனும் கூட்டாய் கம் அம்மனுக்கு பறவைக்காவடி எடுக்குறதாய் கனவு கண்டனான். :D

:):lol::(

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் கருவி வரட்டும் என்டு சின்ப்புன்ட செல்லாச்சி வெயிட்டிங்ல இருக்கிறவாம்....சின்னப'புன்ட கனவில வாறத எல்லாம் படம்பிக்கிறதுக்கு..

இனி இப்புக்கு நிம்மதியா படுக்கவும் ஏலாது மனுஷன் திரிஷாவ எல்லாம கணவு கண்டிட்டி இருந்தது....

இனி அப்புக்கு அப்பிடி போடு போடு...செல்லாச்சின்ட கையால போடு போடு.....

இந்த கனவு போதுமா...? இல்ல இன்னும் கொன்ஞம் வேணுமா...?

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா நிம்மதியாய் நித்திரை கொள்ளவும் விட மாட்டிங்களா :):D

  • கருத்துக்கள உறவுகள்
:wub: கிழிஞ்சுது போ ! மனுசி ரெண்டாம் நாளே என்னை விவாகரத்து ஆக்கிப்போடும் !!!!!
  • கருத்துக்கள உறவுகள்

கு.சா! உங்களின் கனவில பறவைக் காவடிக்கு கயிறு பிடித்த ஆளை வடிவாய்ப் பாத்தனீங்களே! அப்ப நானும் படத்தில வருவன். ஹி..ஹி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரி சோதனை முடிவுகள் சில

மகிந்தாவின் கனவில் கிளிநொச்சியின் படம்

கருணா- முதலமைச்சர் நாற்க்காலி

பிள்ளையாந்- திகில் படம்

டக்கிளசு- வடக்கு மாகாணசபை

சங்கரி-- ஒரே கோடு கோடாயிருந்தது -பிணங்களுக்கு கனவு வருவதில்லை.

அடப்பாவிகளா நாங்கள் காணும் கனவை புகைப்படமாக எடுத்தால் எங்களின் வீட்டில் நடக்கும் நிலைமையை நினைத்தால் எனக்கு இப்பவே ஒப்பாரி வைக்கவேணும் போல் உள்ளது ஆனால் மனிசிற்ற ஒரு சில பேர் அடிவாங்க நேரிடும் என்பது மறையாக உள்ளது :D:lol::)

ஒரு சிலர் தானா? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலர் தானா? :unsure:

ஆமா தூயா நான்[நெடுக்ஸ் ,முனிவர் ,சித்தர் ,சித்தன் ] ஆகியோர் தப்பி விட்டோம் :):)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கடவுளே உந்தக்கருவி என்ரை கையிலை இப்ப இருந்தால் நல்லதொரு படமெல்லே காட்டியிருப்பன். :rolleyes:

ஏனெண்டால் போனகிழமைதான் எங்கடை சாத்திரியாரும் சபேசனும் கூட்டாய் கம் அம்மனுக்கு பறவைக்காவடி எடுக்குறதாய் கனவு கண்டனான். :lol:

ஏன் குமாரசாமியண்ணை உப்பிடியெல்லாம் கனவு காணிறியள் ? பாவம் சாத்திரியார் கிபீராமியம்மனைக் கனவு கண்டு சாபம் வாங்கினது காணாமல் இருக்க கம் அம்மனுக்குமோ ? சபேசன் ஒரளவு சமாளிச்சு வெளியில வந்திடுவார். சாத்திரி நிலமை :lol::huh:

ம்ம் கருவி வரட்டும் என்டு சின்ப்புன்ட செல்லாச்சி வெயிட்டிங்ல இருக்கிறவாம்....சின்னப'புன்ட கனவில வாறத எல்லாம் படம்பிக்கிறதுக்கு..

இனி இப்புக்கு நிம்மதியா படுக்கவும் ஏலாது மனுஷன் திரிஷாவ எல்லாம கணவு கண்டிட்டி இருந்தது....

இனி அப்புக்கு அப்பிடி போடு போடு...செல்லாச்சின்ட கையால போடு போடு.....

இந்த கனவு போதுமா...? இல்ல இன்னும் கொன்ஞம் வேணுமா...?

பாவம் அப்பு. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.