Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் படுகொலை: இந்திய அரசினை கண்டித்து சென்னையில் இளைஞன் தீக்குளிப்பு

Featured Replies

சகோதரன் முத்துக்குமரனுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குறேன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நாங்கள் எதாவது உதவி செய்து பட்ட கடனை கொஞ்சமேனும் அடைக்க வேண்டும்!

??????????????????????

  • Replies 81
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்!!தமிழக உறவுகளே எங்களுக்காக போராட எத்தனையோ வழிகள் இருக்கின்றன.தயவு செய்து உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம். இந்திய மத்திய அரசு இதனை ஒரு பொருட்டாகவே நினைக்காது. ஈழ உணர்வாளன் ஒருவன் முடிந்து விட்டான் என்று சந்தோசப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செஞ்சுடைந்து கண்ணீர் அலைகள் பொங்குகின்றது நண்பா முத்துக்குமார்.

அணு அணுவாய் சாகும் பலி உனக்காக்கி, ஈழம் வாழ உன்வாழ்வை விலையாக்கினாய்

உயிர் கரைந்து அழுகின்றோம் எல்லையிலா அன்பு பொக்கிசங்களை இழப்பதனால்

உங்கள் சாவுகளை எமக்கு தரவேண்டாம், அதையும் தாங்கும் இதயம் எமக்கு இல்லை

ஊழலுக்காய் இருக்கும் அரசியலை மக்களுக்காய் மாற்றும் புதியவழிகள் செய்வோம் ஒன்றாய்.

tears.jpg

சகோதரனே முத்துக்குமரா உனக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்

வார்த்தைகளால் உன்னை பற்றி பேச முடியாது

தமிழக

ஈழத்து ஆதரவு உறவுகளே

உங்கள் உயிர்கள்

எமக்காக போராட இருக்க வேண்டும்

மாய்த்துக் கொள்ள இடமளிக்க வேண்டாம்.

ஆதரவாக இரு : இருப்போரும் போய்விட்டால்

பேச ஆளே இருக்காது

Edited by AJeevan

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30.

தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி உரையாடிக் கொள்வாராம்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 நிமிடமளவில் வந்த அவர் கையில் மண்ணெய் கலனை கொண்டு வந்து இருந்தார்.

ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும் அவர்களை காப்பாற்றக்கோரியும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கண்டித்து முழக்கமிட்டபடி மண்ணெயை தன் மீது ஊற்றினார். பிறகு தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.

திடீரென ஒரு வாலிபர் தீப்பிடித்த உடலுடன் ஓடுவதை கண்டதும் சாஸ்திரி பவன் வளாகத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப்பகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.

அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல்துறையினர் அவர் வைத்திருந்த பொருட்களை சோதனையிட்டனர். அப்போது 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது.

அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் வைத்திருந்த துண்டுப்பிரசுரத்தில், "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும்.

எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.

எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.

மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக்கொண்டேன்.

வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

www.puthinam.com

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி முத்துகுமாருக்கு வீர வணக்கங்கள் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாகிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

அன்புச் சகோதரா, நீ தியாக வேள்வியில் வீரச்சாவு எய்தியதை அறிந்து மனம் கலங்கிப் போனேன். தமிழர்கள் எங்கிருந்தாலும் சாகடிக்கப் பட வேண்டியவர்கள் என்று தொழில் படுபவர்கள் உனது சாவால் மனம் மாறுவர் என்பது கேள்விக்குறி. உன்னைப்போல் உணர்வுள்ளவர்கள் தான் தமிழ் நாட்டில் நிறைய இருக்கிறார்கள். தமிழ் நாட்டுத் தலைவர்கள் தமிழர் உணர்வுள்ள எல்லோரையும் சரியான போராட்ட வடிவத்துக்குள் உள்வாங்கி இந்திய அரசின் நடவடிக்கையில் மாற்றம் கொண்ண்டு வர தொடர்ந்து போராட வேண்டும். நீ எங்கள் துயர் படிந்த ஈழ வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டாய்.

எனது இதய பூர்வ அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா.. நீ எங்கள் திலீபன் அண்ணாவுக்க ஒப்பானவன். உன்னை என்றும் நாம் மறவோம்!

வீரவணக்கம்!! :(

சகோதரனே, நீயுமோர் விடுதலைப் புலி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைகளே வரவில்லை உன்தியாகத்தையும் பிறருக்காய் உயிர்கொடுக்கத்துணிந்த வீரத்தையும் சொல்வதற்கு

மனம்பதாதைக்கிறது. உன் ஆத்மா சாந்தியடையட்டும் உன் ஆசைகளும் நிறைவேறட்டும்

உங்கள் குடும்பத்தினரின் பிரிவுத்துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரனே.. வார்த்தைகள் கிடைக்கவில்லை உன் தியாகத்தைப் போற்றி உரைக்க..! உமக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும் உரித்தாகுக..! :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழனின் துயர் கண்டு , அவர்களுக்காக உயிரை விட்ட தியாகிக்கு அஞ்சலிகள்

முத்துக்குமரன் அண்ணா, திலீபன் அண்ணாவை போல் என்றும் என் மனதில் இருப்பீர்கள்,

வீரவணக்கங்கள்

சகோதரனே நீ உன் உடலிலிட்ட தீ இன்று எம் மனங்களில். உன் தியாகத்திற்கு ஈடில்லை. உன் வீரச் சாவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன தமிழனக்கு போதாத காலமா? தாயகத்தில் தமிழன் கொத்துக்கொத்தாக கொல்லப்படுகிறான் அதனைத்தடுப்பதற்காக தாய்த்தமிழகத்தில் தமிழ் மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் ,தீக்குளிப்பு என மாய்க்கிறார்கள் தம் உயிர்களை.

தமிழன் உயிர் அவ்வளவு கேவலமா? இந்த தரித்திரம் பிடிச்ச உலகுக்கும்,இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்?

தயவு செய்து உறவுகளே உயிர் விலை மதிப்பற்றது,உங்கள் எதிர்ப்புகளை வேறு வடிவத்தில் காட்டலாம்

உ+ம்

1. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியோ அல்லது பாராளுமன்றத்தினால் பிரதினிதிப்படுத்தும் பிரதமர் ஆட்சி முறைமையோ எதுவாயிருப்பினும் சட்டம் என்ற சக்தி கொண்டே இயக்கப்படுகிறது அனைத்தும்

2.ஒரு நாட்டின் இறையாண்மையை குறித்து நிற்கும் தேசியக்கொடி

3.வரிப்பணம் இப்பிடி பல உங்களுக்குத்தெரியாததா? இந்தியணி கிரிக்கட்டில் ஒழுங்கா விளையாடாவிட்டால் எவ்வாறு பொங்கி எழுகிறீர்கள்(விளையாட்டிற்கே) இது உயிர் பிரச்சனை!

இது ஒன்றும் இந்தியாவுக்கு புதிதல்ல இது காந்தியின் ஒத்துளையாமை இயக்கம்

தியாகி முத்துகுமாருக்கு ஒடுக்கப்படும் உலகத்தமிழினம் சார்பாக கண்ணிர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்.. வாழும் தமிழர்களே சிங்கக் கொடியை தூக்கிட்டுத் திரியும்.. ஈனப்பிறவிகளாக உள்ள நிலையில் இந்த இளைஞன்.. அவர்களுக்காகவும் தன்னுயிரை மாய்த்தானே எனும்.. போது இம்முடிவு மிகவும் கவலையளிக்கிறது.

ஈழத்தமிழர்களுக்காக கடந்த காலங்களிலும் தமிழக உறவுகள் பலர் தீக்குளித்து.. தியாக மரணம் எய்தியுள்ளனர். அந்த வரிசையில்.. முத்துக்குமாரின் மரணம்.. கடைசியாக அமையட்டும். தமிழக உறவுகள் இவ்வாறான.. உயிருக்கு ஆபத்து மிக்க முடிவுகளை எடுக்காமல்.. நேரடியாகவும்.. மறைமுகமாகவும் சிங்கள அரசோடு சேர்ந்தியங்கும்.. தமிழக.. இந்திய அரசியல் கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை தமிழகத்தில் சூனியமாக்கின்.. நிச்சயம் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிட்டும்..!

அதைச் செய்யுங்கள். அதுவே.. முத்துக்குமரனுக்குச் செய்யும் அஞ்சலியாக அமையும்..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் உங்களைத்தானே நம்பி இருக்கின்றோம்? நீங்களும்?!!!!!!!! உங்கள் வயிறுகள் பட்டினியால் எரிவதையே ஒத்துக்கொள்ளாத எமக்கு இப்படி உங்கள் வாழ்வினையே எரித்துவிட்டால்!...

என் கண்ணீர் அஞ்சலிகள்

சிறீலங்காவின் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்.. வாழும் தமிழர்களே சிங்கக் கொடியை தூக்கிட்டுத் திரியும்.. ஈனப்பிறவிகளாக உள்ள நிலையில் இந்த இளைஞன்.. அவர்களுக்காகவும் தன்னுயிரை மாய்த்தானே எனும்.. போது இம்முடிவு மிகவும் கவலையளிக்கிறது.

ஈழத்தமிழர்களுக்காக கடந்த காலங்களிலும் தமிழக உறவுகள் பலர் தீக்குளித்து.. தியாக மரணம் எய்தியுள்ளனர். அந்த வரிசையில்.. முத்துக்குமாரின் மரணம்.. கடைசியாக அமையட்டும். தமிழக உறவுகள் இவ்வாறான.. உயிருக்கு ஆபத்து மிக்க முடிவுகளை எடுக்காமல்.. நேரடியாகவும்.. மறைமுகமாகவும் சிங்கள அரசோடு சேர்ந்தியங்கும்.. தமிழக.. இந்திய அரசியல் கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை தமிழகத்தில் சூனியமாக்கின்.. நிச்சயம் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிட்டும்..!

அதைச் செய்யுங்கள். அதுவே.. முத்துக்குமரனுக்குச் செய்யும் அஞ்சலியாக அமையும்..! :(

உறவே! உன் முன்னால் நான் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கண்ணீர் அஞ்சலிகள்!!

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக தன்னுயிரை மாய்த்த முத்துக்குமாரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

muththukumarantp8.jpg

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாகிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் என் இனத்தையும் நினைக்க வெட்க்கமாகஇருக்கிறது.இந்ததி

வேலைக்கு ஒருநாள் விடுப்பெடுத்து ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்து கொள்வதையே பெரும் தியாகமாகக் கருதும் எம்மவர்கள் பலர் இருக்க இந்த இளைஞனின் தமிழின உணர்வு நெகிழ்ச்சியை எற்படுத்துகிறதென்றாலும் இது போன்ற அநியாயச் சாவுகள் தொடர்ந்து இடம்பெறக் கூடாது என்பதே அனைத்துத் தமிழர்களதும் விருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

FIRE1.jpg

கண்ணீர் அஞ்சலிகள்.

deepam74.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.