Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விளிம்பில் இலங்கை நிற்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிங்டன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் அதில் அக்குரஸ்ஸவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அவர் மேலும் தெரிவிக்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விளிம்பில் இலங்கை நிற்பதாகவும் இது நாட்டில் அமைதியை ஏற்படுத்தி புனர்வாழ்வு மறுகடடமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தால் பொதுமக்கள் எவரும் தாக்கபடமாட்டார்கள் என்று சிறீலங்கா பாதுகாப்பு செயலர் உறுதியளித்ததையும் அவர் பாராட்டியுள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் சுமார் 70000 பேர் வரை சிக்குண்டுள்ளதாகவும் அந்தப்பகுதிகளை அடுத்த சில நாட்களில் அகற்றமுடியும் எனவும் சிறீலங்கா ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டதாகவும் தெரியவருகிறது.

நன்றி பதிவு

http://www.pathivu.com/news/806/54/.aspx

அவர் இப்படிச்சொல்லியிருப்பாரா?

என்பது சந்தேகமே.......

பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

விளிம்பில் கனகாலம் நிற்க முடியாது வழுக்கிவிழ வாய்புண்டு. அதுபற்றி கிளாரியம்மா கிளரவில்லையாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்படும் குஞ்சு குழந்தையெல்லாம் .........பொதுமக்கள் இல்லியாமோ ?

வாழ்க தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் கிழறி கிளிங்ரன்

வாழ்க அமெரிக்க யனநாயகம் :icon_mrgreen:

இங்கு கருத்துக்கூறுமுன் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம், இந்தச் செய்திக்கான மூலம் எதுவென்பதைத்தான். ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்தியாகவும் இது இருக்கலாம்.

எதுக்காக தேவையில்லாமல் வேறொருவர்மீது அதீத நம்பிக்கை வைக்கவேண்டும்? பின்னர் அவரைத் திட்டவேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனிசி என்னத்தைக் கதைச்சதோ தெரியாது. உவங்கள் எதையாவது தங்களுக்குச் சாதகமாகச் சொல்லி வைப்பாங்கள்.

மற்றது, ஒரு நாட்டின்ர தலைவரோட தொலைபேசியில பேசக்குள்ள அவர் விளிம்பில நாங்கள் நிண்டு பயங்கரவாதத்தை ஒழிச்சுக் கொண்டிருக்கிறமெண்டால் உவ ஓமோம் விழுந்திராமல் ஒழியுங்கோ ஒழியுங்கோ எண்டுதானே சொல்ல வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மனிசி என்னத்தைக் கதைச்சதோ தெரியாது. உவங்கள் எதையாவது தங்களுக்குச் சாதகமாகச் சொல்லி வைப்பாங்கள்.

மற்றது, ஒரு நாட்டின்ர தலைவரோட தொலைபேசியில பேசக்குள்ள அவர் விளிம்பில நாங்கள் நிண்டு பயங்கரவாதத்தை ஒழிச்சுக் கொண்டிருக்கிறமெண்டால் உவ ஓமோம் விழுந்திராமல் ஒழியுங்கோ ஒழியுங்கோ எண்டுதானே சொல்ல வேணும்.

அடிமுடி தெரியாது அவசரமாய் " கெகலிய வம்புக்கல " மாதிரி நாங்களும்.....

கொஞ்சம் பொறுமை.. கொஞ்சம் ஆ...ய்...வு..... என்ற முறையிலே பார்க்க வேண்டியதும் உண்மையே !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கருத்துக்கூறுமுன் கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம், இந்தச் செய்திக்கான மூலம் எதுவென்பதைத்தான். ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்தியாகவும் இது இருக்கலாம்.

எதுக்காக தேவையில்லாமல் வேறொருவர்மீது அதீத நம்பிக்கை வைக்கவேண்டும்? பின்னர் அவரைத் திட்டவேண்டும்??

நீங்கள் சொல்வது சரிதான். இந்த தொலைபேசி உரையாடலில் தனக்கு சாதகமானதை மட்டும் செய்தியாக வெளியிடுகிறது இலங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

விளிம்பில் கனகாலம் நிற்க முடியாது வழுக்கிவிழ வாய்புண்டு. அதுபற்றி கிளாரியம்மா கிளரவில்லையாமோ?

அவவுன்ரை புருசன் , மோனிக்காவுட்டை :icon_mrgreen: விழுந்ததுக்கே ............., அவ கிளரவில்லை .

இதுக்கா அவ கிளரவும் , கிளறவும் போறா ...... ?

சுத்த பம்மாத்து அரசியலப்பா .

உரிச்ச வெங்காயங்கள் உதுகள் . :blink:

  • கருத்துக்கள உறவுகள்

Edited by kuddipaiyan26

இது ஒரு பொதுவான கருத்து தான். அகாசி எரிக்சொல்கைம் இன்று கில்லாரி எவராயினும் தற்போது தமிழர்களுக்கு சாதகமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க விரும்பவில்லை. உலகத்தை பொறுத்தவரை புலிகளை வளித்து துடைத்து ஒரு 35 சதுர கிலோமீட்டர் பாரப்பளவுக்குள் அடைத்தாகி விட்டது. இந்த சிறு பிரதேசத்துக்குள் அவர்களை சுற்றிவழைத்தாகி விட்டது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போர் ஒரு முடிவுக்கு இன்றோ நாளையோ வரப்போகின்றது. இலங்கை அரசின் நடவடிக்கைகளும் அதற்கான படம் காட்டல்களும் நல்ல வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசை பகைப்பதற்கு யாரும் விரும்பவில்லை. போர் முடிந்தால் இலங்கை அரசுக்கு போருக்காக நிதி கொடுக்க தேவையில்லை மாறாக கொடுத்த கடனை அடிப்படையாக வைத்து வர்த்தகத்தை தொடரலாம் என்பது தான் உதவி செய்யும் நாடுகளின் எதிர்பார்ப்பு. இனறோ நாளையோ யுத்தம் முடிகின்றது என்ற தோற்றத்தை சிங்களம் ஏற்படுத்தியிருப்பதின் மாயையில் இருந்து சர்வதேசம் விடுபடுவதாக இல்லை. தினமும் 50, 100 என்று மக்கள் கொல்லப்படுகின்றார்கள், பல நூற்றுக்கணக்கில் காயமடைகின்றார்கள். அவலத்தின் எல்லைகளை தாண்டி எமது மக்கள் சிதைந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றார்கள். ஆனால் செய்திகளில் அவைகள் பற்றி மூச்சும் இல்லை. தமிழ்மொழியிலான இந்திய செய்திகளே அவைகளை தவிர்க்கின்றன. இதை விட ஒரு துயரம் என்ன இருக்கின்றது? ஒரு இனத்திற்கு ஒரு நாடு இல்லாவிடில் அந்த இனம் இந்த உலகில் எந்த கதிக்கு உள்ளாகும் என்பதுக்கு வன்னி பேரவலத்தை விட வேறு நல்ல உதாரணம் உலகில் இல்லை.

இப்போதுள்ள நிலையில் சிங்களம் ஏற்படுத்தியிருக்கும் மாயை தகர்த்தெறியப்படும் போதே உலகநாடுகளின் கருத்தில் மாற்றம் வரும். ஆனால் அந்த மாற்றம் எமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைவது உலகெங்கிலும் முன்னெடுக்கப்படும் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தின் செறிவையும் உறுதியையும் பொறுத்தது. இன்றய கவனயீர்ப்பு போரட்டத்துக்குரிய பலன் நாளைக்கு கிடைக்கவேண்டும் என்றால் நாளைவரை கவனயீர்ப்பும் போராட்டங்களும் தொடரவேண்டும். நடந்தேறும் படுகொலைகளை சர்வதேச அமைப்புகளும் செய்தி நிறுவனங்களும் அலட்சியம் செய்வதை கடந்து எம்மால் உலகில் ஆணித்தரமாக பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கான புதிய புதிய வழிமுறைகளை கருத்துக்களாக பரிமாறுவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமான இடத்தில் , பொருத்தமான படக்காட்சியை இணைத்த குட்டிப்பயலின் கெட்டித்தனத்துக்கு நன்றி . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சிந்தனையிலும் செய்கையிலும் என்றும் புரிந்துகொள்ளவேண்டிய விடயங்கள்:

1. தமிழர் விடயத்தில் விடுதலைப் புலிகளுக்கு அனுகூலமான எந்தவித அழுத்தங்களையும் சர்வதேச சமுகம் சிங்கள அரசுக்கு கொடுக்காது.

2. சர்வதேச நலன்கள் மற்றும் பிராந்திய இஸ்திரத் தன்மை என்பவற்றுக்கு அடுத்தாகவே மனித உரிமை கவனத்தில் கொள்ளப்படும்.

3. சர்வதேச பிரச்சினைகளில் தலையிடும் நாடுகளுக்கு சுய இலாப நோக்கம் எப்போதும் முதலிடத்தில் இருக்கும்.

4. பயங்கரவாத இயக்கமென்று சர்வதேசத்தால் கருதப்படும் அமைப்பொன்றை அழிக்க முன்னெடுக்கும் போரினால் ஏற்படும் உயிர் அழிவுகளையும் கொடுரங்களையும் பற்றி சர்வதேசம் கவலைப்படப் போவதில்லை.

5. அவ்வகையான போரொன்றில் பொதுசனம் சிக்கிக்கொண்டால் அந்நிலமை போரைத் தொடர்வதற்கு தடையாகி விடாமல் சர்வதேசம் பல திட்டங்களை முன்னெடுக்கும்.

செய்தியைவிட இச்செய்தியின் பீன்னணியில் தான் சந்தேகமுள்ளது.... இது கிலரியின் உத்தியோகபூர்வ செய்தியில்லை. இருந்தாலும் அவர் இப்பிடியொரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டாரென நினைப்பதற்கு அவரெண்டும் தமிழர்களின் தலைவி இல்லைத்தானே. ஏகாதிபத்தியத்தின் இன்னொரு பிரதிநிதி.

அதுபோக இலங்கையின்பால் அவர்கள் அக்கறையுமில்லை அண்மையில் மேனனுடன் அவரின் கலந்துரையாடல் அவருக்கு பல யதார்த்தத்தை உணார்துவதாக உள்ளாது. மேனனுடன் இந்தி அமரிக்க உறவைப்பற்றி அவர்கள் என்ன கதைத்தார்களோ தெரியாது ஆனாலும் இலங்கை பற்றியும் தற்போது நடந்துவர்ம் போர்பற்றியும் கலந்துரையாடியதே ஊடகங்களில் பரவலாகக்காணப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னமொரு ஜெயலலிதா

  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களாக ஊர்வலங்கள் போன்றவற்ரை செய்து விட்டு உலகம் எங்கள் பக்கம் கதைக்கும் என்றால் அது பெரிய நகைச்சுவையாக தான் இருக்கும் .அதிலும் இந்தியா போடு முட்டுக்கட்டைகள் சொல்லி வேலையில்லை. இவற்றை முறியடிக்க பொறுமையும் புத்திசாலித்தனமும் வேண்டும் .எடுத்தேன் கவுழ்த்தேன் என்று இருக்காமல் எமது கடமையை தொடர்ந்து செய்வோம். இன்னும் இலங்கை அரசின் பொய்பிரச்சாரத்தை முறியடிக்க முடியாமல் உள்ளோம். அவர்கள் சொல்வதை தான் மேற்குலகு நம்புகிறது. சில திருப்பங்கள் இருந்தாலும் பெரிய அளவில் வர காலமெடுக்கும் என்பது தனிப்பட்ட அபிப்பிராயம்.

சிங்கள உலகு 30 வருடங்களாக செய்து வரும் திட்டமிட்ட பிரச்சாரம் தான் அவர்களை வெளியுலகு நம்புகிறது.நாம் இப்போ தான் முறியடிப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் ஏன் ? சர்வதேசமட்டில் ஈழத் தமிழனிற்காக குரல் எழுப்பக் கூடிய அரசியல் தலைவர்கள் பிறக்கவில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களால் ஏன் ? சர்வதேசமட்டில் ஈழத் தமிழனிற்காக குரல் எழுப்பக் கூடிய அரசியல் தலைவர்கள் பிறக்கவில்லை .

என்னசிறித்தம்பி???????

பால்குடிகேள்வியெல்லாம் கேட்டுக்கொண்டு?????

இந்தியன் சிங்களவனுக்கு முதல் சொல்லிக்குடுத்த பாடம் அதுதானே!

எவன் எங்கடை பிரச்சனையை சர்வதேசத்துக்கு கொண்டு போகிறானோ அவனை உடனை போட்டுத்தள்ளுறது.

அதாவது நா வல்லமை உள்ளவனை (தமிழின்குரல்வளை) அழிப்பது.

கணக்கு போட்டு பார் ஐயா?

அண்டு தொடக்கம் இண்டைவரைக்கும் எத்தினை படிச்ச எங்கடைதமிழ் பலவான்களை அமசடக்காய் அழிச்சுட்டாங்கள்?

நம்பி ஏமாந்து போனம் :icon_mrgreen:

Edited by குமாரசாமி

இந்தச் செய்தி திரிவுபடுத்தப்பட்டு சிங்கள அரசால் வெளியிடப்பட்டிருக்கும் என்று பரவலாக நம்பப்படும'; இந்த நிலையில் தமிழர்கள் திருமதி ஹிலாரியிடம் இந்தச் செ;யதி குறித்த தது வருத்தத்தை மின்னஞ்சல், தொலைநகல் வாயிலாக வெளியிட வேண்டும்.

அப்போது அவர்கள் இதன் விளக்கத்தை அளிக்க நிர்ப்ப்நதிக்கப்படுவதுடன் சிங்கள அரசிற்கு அவமானத்தையும் ஏற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னசிறித்தம்பி???????

பால்குடிகேள்வியெல்லாம் கேட்டுக்கொண்டு?????

இந்தியன் சிங்களவனுக்கு முதல் சொல்லிக்குடுத்த பாடம் அதுதானே!

எவன் எங்கடை பிரச்சனையை சர்வதேசத்துக்கு கொண்டு போகிறானோ அவனை உடனை போட்டுத்தள்ளுறது.

அதாவது நா வல்லமை உள்ளவனை (தமிழின்குரல்வளை) அழிப்பது.

கணக்கு போட்டு பார் ஐயா?

அண்டு தொடக்கம் இண்டைவரைக்கும் எத்தினை படிச்ச எங்கடைதமிழ் பலவாங்களை அமசடக்காய் அழிச்சுட்டாங்கள்?

நம்பி ஏமாந்து போனம் :icon_mrgreen:

குமாரசாமி அண்ணா ,

நான் உண்மையாக பால் குடி மாதிரி தான் கேட்கின்றேன் ........ ( தவறு என்றால் மன்னிக்கவும் )

காலம்சென்ற அன்ரன் பாலசிங்கம் , தமிழ் செல்வன் போன்றவர்கள் இருக்கும் போது ...........

எல்லாம் நன்றாக நடந்தது , அதன் பின் ஏன் இந்த அழிவு .

அவர்களைப்போல் மேசையில் குத்தி கதைக்கவேண்டிய ஆட்களை தயார் பண்ணினால் நல்லது .

இந்தியா , இந்திரா காந்தியுடன் போய்விட்டது .

இப்ப , சொறியா காந்தி இந்தியா .

Edited by தமிழ் சிறி

Humanitarian Situation in Sri Lanka

Gordon Duguid

Acting Deputy Department Spokesman, Office of the Spokesman

Bureau of Public Affairs

Washington, DC

March 13, 2009

On March 13, Secretary of State Hillary Rodham Clinton called Sri Lankan President Rajapaksa to express the United States’ deep concern over the deteriorating conditions and increasing loss of life occurring in the Government of Sri Lanka-designated “safe zone” in northern Sri Lanka. Secretary Clinton stated that the Sri Lankan Army should not fire into the civilian areas of the conflict zone. The Secretary offered immediate and post-conflict reconstruction assistance and she extended condolences to the victims of the March 10 bombing outside a mosque in southern Sri Lanka. The Secretary condemned the actions of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) who are reported to be holding civilians as human shields, and to have shot at civilians leaving LTTE areas of control.

Secretary Clinton called on President Rajapaksa to devise a political solution to the ongoing conflict. The Secretary urged the President to give international humanitarian relief organizations full access to the conflict area and displaced persons camps, including screening centers.

The United States believes that a durable and lasting peace will only be achieved through a political solution that addresses the legitimate aspirations of all of Sri Lanka’s communities. We call on the Sri Lankan Government to put forward a proposal now to engage Tamils who do not espouse violence or terrorism, and to develop power sharing arrangements so that lasting peace and reconciliation can be achieved.

http://www.state.gov/r/pa/prs/ps/2009/03/120341.htm

தேவேளையில் இந்தத் தொலைபேசி உரையாடல் தொடர்பாக சிறிலங்காவின் இணையத்தளங்கள் சிலவற்றில் திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியிருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய பிரிவு அதிகாரியான டியானி கெலி தெரிவித்திருக்கின்றார்.

விடயம் என்னவென்று தெரியமுன்னர் கருத்து எழுதுறன் கத்தரிக்காய் புடுங்கிறன்

எண்டு எதிரிகளுக்கு தீனிபோடாமல் பொறுத்திருந்து முழுமையான விடயம் தெரிந்து கொண்டு எல்லோரும் எழுதுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவு இணையத்தில் இச்செய்தி வந்ததனாலேயே

அதை இங்கு இணைத்தேன்

அதேநேரம் இதனுடைய நம்பகத்தன்மை பற்றிய எனது சந்தேகத்தையும் கூடவே வெளியிட்டிருந்தேன்

தவறாயின் மன்னிக்கவும்

அவர் இப்படிச்சொல்லியிருப்பாரா?

என்பது சந்தேகமே.......

பார்க்கலாம்

Edited by விசுகு

நம்மடை இணையத் தளங்குள்ள பிரச்சனை, இணைய வடிவமைப்பு நல்லத தெரியும், அரசியல் பூச்சியம்! அதன் விளைவே இப்படியான தலைப்புகளுடன் விழுந்தடித்து செய்தி போடுவதுடன் சிறீ லங்காவின் அரசியல் பிரச்சார வலைக்குள் விழுந்து போவது! இப்படியான செய்திகளை ஆராய்ந்து போடும் மனப்பாங்கு உள்ள வரை அரசில் ரீதியில் நாம் முன்னேற முடியாது. கீளே உள்ள தலைப்புகளை பாருங்கள். சிறீ லங்கா தரப்பு ஊடகங்களும் நடுநிலை(?) ஊடகங்களும் வெளியிட்டுள்ள தலைப்புகைளை...

Sri Lanka on verge of defeating terrorism: Hillary Clinton - Xinhua - ‎13 hours ago‎

Clinton protests civilian deaths in Sri Lanka International - Herald Tribune

Clinton concerned over Sri Lanka 'safe zone' deaths - AFP

Hillary Clinton discusses Sri Lanka crisis with Rajapaksa - Express Buzz

நம்மடை இணையத் தளங்குள்ள பிரச்சனை, இணைய வடிவமைப்பு நல்லத தெரியும், அரசியல் பூச்சியம்! அதன் விளைவே இப்படியான தலைப்புகளுடன் விழுந்தடித்து செய்தி போடுவதுடன் சிறீ லங்காவின் அரசியல் பிரச்சார வலைக்குள் விழுந்து போவது! இப்படியான செய்திகளை ஆராய்ந்து போடும் மனப்பாங்கு உள்ள வரை அரசில் ரீதியில் நாம் முன்னேற முடியாது. கீளே உள்ள தலைப்புகளை பாருங்கள். சிறீ லங்கா தரப்பு ஊடகங்களும் நடுநிலை(?) ஊடகங்களும் வெளியிட்டுள்ள தலைப்புகைளை...

Sri Lanka on verge of defeating terrorism: Hillary Clinton - Xinhua - ‎13 hours ago‎

இந்த செய்தி தாபனமும் BBC தமிழும் முற்று முழுதாக ஆராயாமல் இலங்கை அரச தரப்பின் செய்திகளை மட்டுமே வெளியிட்டு உள்ளார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.