Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர்

Featured Replies

இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர்

முதல்வர் கருணாநிதி இன்று கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’அரசுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இலங்கைத் தமிழர்கள் நலனை நீங்கள் கை கழுவி விட்டதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே?

தன்னுடைய மகனின் அமைச்சர் பதவி போய்விடக் கூடாது என்பதற்காக காங்கிரசோடு கூட்டணி என்று கடைசி வரை ஏமாற்றி வந்தது யார் என்பதை தமிழ்நாடு அறியும்.

இலங்கைத் தமிழர்களுக் காக இரண்டு முறை கழக ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்பதையும் - நானும், பேராசிரியரும் எங்கள் சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5756

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர்

அது ஒண்டும் நீங்களா விரும்பி பலி குடுக்க இல்லை..! உங்களிட்ட இருந்து பறிக்கப்பட்டது..! அதான் இந்த முறை இருந்த கொஞ்ச நஞ்ச முதுகுத்தண்டையும் கழட்டி வச்சிட்டீங்கள்..! ஆட்சியும் நல்லா ஓடுது..! :mellow:

ஐயா கலைஞரே நீங்கள் ஈழம் அமைவதற்காக மூன்றாவது தடவையும் ஆட்சியை இழந்திருந்தால் உலகத் தமிழர்களின் தலைவராக இருந்திருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் உங்கள் கச்சையை காப்பாற்றுவதற்காக இத்தாலி காங்கிரசில் சரணடைந்து சோனியா அம்பாளின் முந்தானையில் உங்களை மறைத்துக் கொண்டமையால் எட்டப்பனின் இடத்துக்கு சென்றுவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழடு...

இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள்:கலைஞர்

உது பழசு ஐயா ஏதாவது புதுசா எடுத்துவிடுங்கள்

Edited by Subiththiran

உறவுகளே கலைஞர் உட்பட தமிழக அரசியல்வாதிகள் எவெர் கருத்தையும் கணக்கிலெடுக்காதீர்கள்.

ஏனெனில் இப்போ தேர்தல்களம். தமிழகமக்களின் தீர்ப்பினை நாம் தேர்தல்முடிவில் பார்ப்போம்.

உறவுகளே கலைஞர் உட்பட தமிழக அரசியல்வாதிகள் எவெர் கருத்தையும் கணக்கிலெடுக்காதீர்கள்.

ஏனெனில் இப்போ தேர்தல்களம். தமிழகமக்களின் தீர்ப்பினை நாம் தேர்தல்முடிவில் பார்ப்போம்.

யாழ்கள நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கை!

தமிழக கருணா... இவ்வாறு தான் கூறியிருப்பார்! இயலுமாயின் தலைப்பை மாற்றவும்!

!

"இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள், அதற்காக இன்று இலங்கை தமிழர்களை பலி எடுக்கின்றோம்":கலைஞர்

இரண்டு தரம் அரசை இழந்தும் ஈழத்தமிழர் என்ன கண்டனர். நீங்கள் மீண்டும்பலமாக ஆட்சியில் உள்ளீர்கள்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப செய்யாத உதவி என்றும் பயன் இல்லை.

அதுதான் கலைஞர் அரசின் நிலையும்.

இன்றைய நிலை ஈழத்தமிழரின் வாழ்வா சாவா நிலை. இன்றைய கலைஞரின் நிலையை தமிழர் வரலாறு என்றும் மறக்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு என்ன செய்தோம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லாததால் தான் 20௦ ஆண்டுகள் 30௦ ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தோம் என்று சொல்லி தன்னையும் ஊரையும் ஏமாற்றுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு 85 வயதாகிறது இந்த வயதில் உள்ள ஒருவர் நான் வசிக்கும் நாட்டுக்கு முதலமைச்சராயிருந்தால் நான் அந்த நாட்டிலே வாழமாட்டேன். தமிழக மக்கள் இதுவிடயத்தில் ஏன் இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. 66 மில்லியன் தமிழகத்து தமிழர்களில் இளமையும் துடுக்கும் உள்ள தலைவர் ஒருவர்கூடவா இன்னும் பிறக்கவில்லை. இந்த உலகில் தனது முதுமைக்காலத்தை அமைதியுடன் கழிக்க எத்தனையோ பேர் படாதபாடு படுகிறார்கள். இந்த கிழவனோ தனது முதுமையை ஆட்சியிலிருந்தால் தான் படு ஜோராக கழிப்பார் போலிருக்கிறது.

85 வயதில் ஒரு மனிதனால் என்னென்ன செய்யமுடியாது என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால் புரியும் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது சரியா இல்லையா என்பது.

எல்லா உத்தியோகங்களுக்கும் ஓய்வுபெறும் வயது ஒன்று ஒன்றை தீர்மானித்து வைத்திருக்கும்போது எமது நாடுகளில் மட்டும் ஏன் அரசியல் தலைவர்களுக்கு ஓய்வு பெறும் வயதென்று ஒரு வயதெல்லையை நிர்ணயிக்கக்கூடாது. உடல் தளர்ந்து பார்வை மங்கி காதும் செவிடாகி ஞாபக மறதி நடுக்கம் சேர்ந்து கொள்ள இந்த தள்ளாத வயதிலும் பதவியில் இருப்பேன் என்கிற இந்த ஜடங்களை தூக்கி கூவத்தில் எறிந்து விட்டு வயக்காட்டிலை இருக்கிற ஒரு சோளப்பொம்மையை கொண்டாந்து முதலமைச்சர் கதிரையிலை இருக்கவைச்சா அது தேவல.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கை!

தமிழக கருணா... இவ்வாறு தான் கூறியிருப்பார்! இயலுமாயின் தலைப்பை மாற்றவும்!

!

"இலங்கை தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியையே பலி கொடுத்தவர்கள் நாங்கள், அதற்காக இன்று இலங்கை தமிழர்களை பலி எடுக்கின்றோம்":கலைஞர்

சரியாக சொன்னீர்கள் நெல்லையன் .

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, எப்போது ரெண்டாவது முறை ஆட்சியை இழந்தார்? 1991 இல் ஒருமுறை மட்டுந்தானே? ரெண்டாவது எங்கிருந்து வந்தது? ஜெயா விடம் தோற்றதை எல்லாம் எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறாரா அல்லது வயதாகி விட்டதால் ஒன்றும் ரெண்டு மாதிரித் தெரிகிறதா?

  • தொடங்கியவர்

அதுசரி, எப்போது ரெண்டாவது முறை ஆட்சியை இழந்தார்? 1991 இல் ஒருமுறை மட்டுந்தானே? ரெண்டாவது எங்கிருந்து வந்தது? ஜெயா விடம் தோற்றதை எல்லாம் எங்கள் தலையில் கட்டப் பார்க்கிறாரா அல்லது வயதாகி விட்டதால் ஒன்றும் ரெண்டு மாதிரித் தெரிகிறதா?

1991ம் ஆண்டு கூட கலைஞரின் ஆட்ச்சியை ஈழத்தமிழருக்காக கலைக்க படவில்லை.... திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனது நண்பர்கள் எண்று கலைஞரால் சொல்லப்படும் பத்மநாபாவை யும் அவர்ர் குழுவையும் ஆயுதங்களுடன் தங்க வைத்தமையினால்தான் கலைக்க பட்டது...

ஈழத்தில் வெறியாட்டம் ஆடிய இந்திய படைகளை வரவேற்க போகாத கலைஞர் அவர்களின் துணைப்படைகளான பத்மநாபா குழுவுக்கு ஆயுதங்களுடன் அடைக்கலம் கொடுத்தார்.. அந்த பத்மநாபாவையும் அவர் குழுவையும் யரோ சுட்டு கொண்று விட , அங்கு வந்த போலீசார் பத்மநாபா குழுவின் ஆயுதங்களை கைப்பற்றுகிறார்கள்...

அப்போது மத்தியில் இராஜீவின் மரணத்தால் அனுதாப அலையில் ஆட்ச்சிக்கு வந்த காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்ச்சியில் இருந்தது... இதையே சாக்காக வைத்து ஜெயலலிதா கூட்டணி கட்ச்சியான காங்கிரசை வற்புறுத்தி திமுக ஆட்ச்சியை கலைத்தது...

கலைஞர் ஆட்ச்சி ஒண்றும் ஈழத்தமிழருக்கான போராட்டம் செய்ததினாலோ இல்லை அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமையலோ கலைக்கப்படவில்லை...

உண்மையில் இந்த முறை தான் ஈழத்தமிழர்களால் பதவி இழக்கப் போகிறார்.

ஈழத்திலே தமிழ் உறவுகளைப் பலி எடுத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைத்ததற்காக தமிழக மக்களால் பதவி பறிக்கப்படும். (இப்போதைக்கு மத்திய அரசுப் பதவிகள். வெகு விரைவில் மாநில அரசுப் பதவிகள்)

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் ஜயா பதவி பறிபோகக்கூடாது என்ற கொள்கையுடன் மட்டும்தான் இருக்கின்றார்.

மாசில்லா தமிழ் தொண்டு

மூத்த தமிழனே எம் தமிழகத்தின் முதல்வனே,

எம் கண்ணீரை ஒரு கவி பாடும் உம் சங்கத் தமிழ் கொண்டு

தெருவில் நிற்கிறோம் தமிழன் என்று தலை குனிந்து

நீ ஆட்சி செய் தமிழனென்று தலை நிமிர்ந்து

சங்கம் வளர்த்த எம் தலைவனே தமிழை வார்த்த எம் வேந்தனே

எம் சாவில் ஒரு கவி பாடும் உம் சரித்திர தமிழ் கொண்டு

குண்டு மழை பெய்தபின்னர் கொலை கொலையாய் பிணங்கள் அங்கே

ஓட்டு மழை பெய்தபின்னர் வாழ்க உம் வெற்றி இங்கே

பெரியாரின் புதல்வனே பெரியாரை புகழ்ந்தவனே

எம் கதறலை ஒரு கவி பாடும் உம் பொய்யா மொழி கொண்டு

இலவச மருந்து என்றாய் மருந்தின்றி சாகிறோம் பார்

உன் தமிழை பாடும் என் தமிழ் சாதி

செம்மொழி கண்டவனே சென்கோளை வென்றவனே

எம் குமுறலை ஒரு கவி பாடும் உம் குங்குமத் தமிழ் கொண்டு

இலவச டிவி தந்தாய் உன் டிவி காட்டுது பார்

தமிழ் தாயின் குழந்தைகள் தலை இல்லா முண்டங்களாய்

நாடாளும் நாத்திகனே நாடே போற்றும் நாயகனே

எம் பட்டினியை ஒரு கவி பாடும் உம் பல்கலை தமிழ் கொண்டு

இலவச அரிசி தந்தாய் எதுவும் இன்றி சாகிறார் பார்

ஒரு மூட்டை அனுப்பிவை ஓராயிரம் தமிழனின் வாய்க்கு அரிசியாய்

மரணத்தை வென்றவனே மார்பில் தமிழை கொண்டவனே

எம் மரணத்தை ஒரு கவி பாடும் உம் மாசில்லா தமிழ் கொண்டு

இலவச அடுப்பு தந்தாய் இங்கே, அடுப்பில் பிணம் எரியுது பார் அங்கே

ஓர் அடுப்பை அனுப்பிவை தமிழ் பிணங்கள் எரியட்டும்

காப்பியங்கள் கடைந்தெடுத்தீர், தமிழை ஓவியமாய் தீட்டிவைத்தீர்

மணிமணியாய் வசனமிட்டீர், பாடல் பல படைத்துவிட்டீர்,

முத்தமிழின் கலைஞரே உன் செந்தமிழால் கவி பாடும்,

உன் முத்தமிழால் காவியம் பாடும் என் இன அழிவை அழகை படும்

நான் கேட்க வேண்டும்.

தமிழ் பிணங்களை உமக்கு பரிசளிக்கிறோம்.வாழ்க உன் புகழ் பல்லாண்டு

சு. பிரசாத்

தமிழ் நாடு

இந்த ஒட்டுப் பொறுக்கி வரும் தேர்தலில் தோற்றுவிட்டு, முன்றாவது முறையாக ஆ(ச்)ட்சியை ஈழத்தமிழருக்காக பறிகொடுத்தோம் என்று குரைத்தாலும் குரைக்கும்.

Edited by Janarthanan

எனக்கு ஒரு ஆசை இந்தக் கிழடு சாகமுன்னம் தமிழீழம் கிடைக்கனும், கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்காக எதை செய்து நீங்கள் ஆட்சியை பறிகொடுத்தீர்கள்?

ஒன்றே ஒன்றை நீங்கள் செய்தீர்கள்தான். அதற்காக என் மனதில் உங்களுக்கு ஒரு கரையில் இடமுண்டு. ,ழ தமிழரை கொன்றுவிட்டு வந்த இந்தியகூலிகளை வரவேற்க செல்லாது நீங்கள் ஒரு தமிழன் என்பதை சொன்னீர்கள். ஆனால் அதற்குள்ளும் ஏதாவது அரசியல் பண்ண நினைத்தீர்களோ என்றுதான் இப்போதைய உங்களின் செயல்கள் எமக்கு ஒரு சந்தேகத்தை தருகின்றது. தவிர மற்றதெல்லாம் 'றோ' செய்த கூத்து. கையகலாதவனாக நீங்கள் இருந்ததால்தான் என்ன போனாலும் பரவாயில்லை எனக்கு ஆட்சி வந்தால் போதும் என்ற மனம் கொண்டவர் நீங்கள் என்பதை புரிந்துதான் றோ நடந்தது. இந்த ஒரே ஓரு விடயத்தை மட்டும் றோ புத்திசாலிதனமாக செய்துள்ளது என்பதும் குறிப்பிட தக்கது. உங்களிடம் இருந்து வைகோ வை பிரித்தபோது. உங்கள் கதிரை பற்றி எண்ணீர்களே தவிர. நீங்களே முன்பு கூறுவது போல. திமுக வின் கொடுவாளக இருந்து கட்சியை வளர்த்த அந்த தமிழனின் உழைப்பை பற்றி கொஞ்சமாவது எண்ணீரோ? ஈழதமிழரை சாடினதே தவிர நடந்ததெல்லாம் சதி. என்ன மு.க போன ஆட்சி மீண்டும் வரும்தானே என்று செல்லாமக தோழை தட்டிவிட்ட றோ வோடுசேர்ந்து அதே சதியை நீங்கள் ஈழ தமிழருக்கு செய்கின்றீர்களே. பிறகேன் ஐயா நீங்கள் ஈழதமிழரை இழுக்கின்றீர்கள்? உங்களுக்குத்தான் ஞபகமறதியும் வயோதிபமும் எமக்கல்ல என்பதையாவது மறந்துவிடாதீர்கள்.

எனக்கு ஒரு ஆசை இந்தக் கிழடு சாகமுன்னம் தமிழீழம் கிடைக்கனும், கிடைக்கும்

அப்போதும் இந்த கிழடு சும்மாவா இருக்கும். தான் இறந்திருந்தால் ஈழதமிழரின் தமிழ்ஈழ கனவு வெறும் கனவாகவே இருந்திக்கும் என்றுதானே அறிக்கைவிடும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?

சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் தான் இரண்டுமுறை ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்திருக்கிறேன், மூன்றாவது முறையும் இழக்கத் தயார் என்று கூறி உள்ளார். பல முறை தன் ஆட்சி பறிக்கப்பட்டதைப் பற்றி கருணாநிதி புலம்பியதுண்டு, ஆனால் இம்முறை ஈழத்தமிழர்களுகாக ஆட்சியை இழந்தேன் என்று கூறியதால் அதைப் பற்றி அலச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

1977:

முதன்முதலில் ஜனவரி திங்கள் 31 ஆம் தேதி திமுக ஆட்சி, கருணாநிதி இரண்டாம் முறையாக முதல்வராக இருந்தபொழுது நடுவண் அரசான காங்கிரசினால் கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கபடுகிறது. அதற்கு அடுத்த நாளே திமுகவின் செயற்குழுவைக் கூட்டி கலைஞர் தலைமையில் "ஜனநாயகத்தை பாதுகாக்கிறோம் என்று கூறி சர்வாதிகார கொற்றக் குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா" என்று தீர்மானம் நிறைவேற்றபடுகிறது. பிரதமர் இந்திரா மிகவும் கோபம் கொள்கிறார். மேல் சபையில் நடந்த ஒரு விவாதத்தில் "இந்தியாவின் கட்டுபாடற்ற தீவாய் தமிழகம் இருப்பதாய்" அறிவிக்கும் அளவிற்கு திமுகவின் ஆட்சியின் மீது கடுமையாகிறார். இதை அடுத்து ஜனவரி 30 ஆம் தேதி அப்போதைய கவர்னர், ஆட்சியைப் பற்றி நல்லவிதமாய் எடுத்துக்கூறிய பிறகும் 31 ஆம் ஜனாதிபதி ஆட்சியை கலைக்கிறார்.

இதற்கு நடுவே எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய கட்சி ஆரம்பித்து, 1973யில் திண்டுக்கல் இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுகிறது. 1973 ஆம் ஆண்டே எம்.ஜி.ஆர் திமுக அமைச்சரவை மீதான 54 ஊழல் புகார்களைக் கொண்ட பட்டியலை மத்திய அரசிடம் அளித்தார். அதன் அடிப்படையிலும் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆட்சி கலைக்கபட்டது. மிசாவில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் மரணமடைந்தார்கள்.

திமுக ஆட்சி கலைக்கப்பட்டபின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன், அதிமுக கூட்டணி கண்டது. 1977 மார்ச் மாதம் நடந்த அத்தேர்தலில் பிற மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றாலும் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அதற்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் இந்திரா காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து விலகிய பின்னும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதே 1977யில் வென்றார்.

72-இல் இருந்து 77-க்குள் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இராஜாஜி, பெரியார், காமராசர் ஆகிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். தமிழக அரசியலில் அவர்கள் இடத்தை இட்டு நிரப்ப அவர்கள் அளவிற்குத் தகுதி பெற்ற தலைவர்கள் இல்லை. அந்த வேளையில் எம்.ஜி.ஆரா கருணாநிதியா என்ற கேள்விதான் மக்கள் முன்னால் வைக்கப்பட்டது. மக்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படவில்லை. அதே ஆண்டு அங்கேயும் தேர்தல் நடந்தது, தனி நாடுதான் தீர்வு என்று கூறி அமிர்தலிங்கம் தலைமையில் இருந்த "ஒருங்கிணைந்த தமிழர் விடுதலை முன்னணி" பெருவாரியாக வெற்றிபெற்றது. இதுதான் நடந்தது. இதில் எங்கே ஈழப்பிரச்சனை வந்தது? இதில் எந்த இடத்தில் கருணாநிதி ஈழபிரச்சனைக்குப் பாடுபட்டார், குரல் கொடுத்தார் ஆட்சி இழந்தார் என்பதை நாம் அறிய முடியவில்லை?

1983 ஆம் ஆண்டு தான் இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கிய சமயத்தில் அவரின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். யாரும் அவரை நிர்பந்திக்கவில்லை அவராகவே ராஜினாமா செய்தார். அப்பொழுது வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது, எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பாராமுகாய் இருந்துவிட்டது, இப்பொழுது நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது" என்று குற்றஞ்சாட்டி ராஜினாமா செய்தார். ஆனால் அடுத்த வருடத்திலேயே மேல்சபைக்கு போட்டியிட்டு மேல்சபை உறுப்பினராகிவிட்டார். அதற்குப் பின் 1979 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதே காங்கிரசுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற பின் அனைத்து இடங்களையும் தோற்ற எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி துணையுடன் கலைத்தார் கலைஞர். ஆனால் முன்னைவிட அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார்.

1991:

1991 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி 30 ஆம் தேதியில் மூன்றாம் முறையாக முதல்வரான கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தைப் பார்போம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஜானகி அம்மாள் முதலமைச்சரானார். 24 நாட்களில் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. பிளவுபட்ட அதிமுக தேர்தலை சந்தித்து, அதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் போபர்ஸ் ஊழல் முக்கியமான பங்கு வகித்தது.

கருணாநிதி வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணியில் இருந்தார். அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி போட்டு அனைத்து இடங்களிலும் வென்றன. தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட தேசியமுன்னணி பெறவில்லை. வடமாநிலத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றதால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது வி.பி.சிங் பிரதமரானார். மண்டல் கமிசன் பரிந்துரையை வி.பி.சிங் அமல்படுத்தியதால் ஆன அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் பின்னணியில் சந்திரசேகர் 54 எம்.பி.க்களோடு வெளியேறியதால் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங்குடன் நெருக்கமாய் இருந்த திமுக ஆட்சியை ராஜிவ் காந்தியின் ஆசியோடு ஜெயலலிதாவிற்காக சந்திரசேகர் கலைத்தார். அதற்கு அவர் சொன்ன பல காரணங்களில் ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதுதான். அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் எதற்காக ஆட்சி கலைக்கபட்டதென்று… மேற்சொன்ன காரணம் உண்மையா பொய்யா என்று... ஏனெனில் விடுதலைப்புலிகள் அப்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அல்லர்.

ஆக 1980 ஆம் அண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியை இந்திரா காந்தி உதவியோடு கலைஞர் கலைத்ததற்கு என்ன காரணங்களோ அதே காரணங்கள் தான் அவர் ஆட்சி 1991 ஆம் ஆண்டு ராஜிவின் உதவியோடு ஜெயலலிதா கலைஞர் ஆட்சியைக் கலைத்ததற்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல்.. அதிகார மாற்றங்கள்.. கூட்டணி மாற்றங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் எந்த ஆட்சியும் பறிக்கப்படவில்லை என்பதே வரலாறு. இனிமேலும் கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஆட்சி இழந்தேன் என்று கூறுவதை தமிழ்கூறும் நல்லுலகம் நம்பக்கூடாது.

இக்கட்டுரையின் நோக்கமே ஈழத்தமிழர்கள் ஆதரவு இப்பொழுதுதான் தமிழகத்தில் பல வருடங்கள் கழித்து எழுந்துள்ளது. அந்த எழுச்சியானது இதைப் போன்ற பொய்யுரைகளினால் இம்மியளவும் நலிந்துவிடக் கூடாது என்பதாலும், தமிழகத்தின் சில முக்கியமான அரசியல் வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும் தான்.

- சே.பாக்கியராசன்

கீற்று

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களுக்காக ஆட்சியை இழந்தாரா கருணாநிதி?

- சே.பாக்கியராசன்

கீற்று

கட்டுரையையாத்தவருக்கும், இணைத்த கத்தப்பு ஐயாவுக்கும் நன்றிகள்.

வெற்று உணர்ச்சிவசப்படுதலுக்கப்பால

  • கருத்துக்கள உறவுகள்

குள்ள நரிய தெரு நாய் மாரி இழுத்துட்டு போக்கேக்க எடுத்த படம்...

Newmidnightarrest.jpg

  • கருத்துக்கள உறவுகள்

"அய்யோ கொல்றாங்களே" நாடகம்தானே இது? இருந்தாலும் முதுமை கருதி, அணைத்துச் சென்றிருக்கலாம்!

துணை நாயகர்தான் இயற்கை எய்திவிட்டார் பாவம்!

Edited by G.ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

"அய்யோ கொல்றாங்களே" நாடகம்தானே இது? இருந்தாலும் முதுமை கருதி, அணைத்துச் சென்றிருக்கலாம்!

துணை நாயகர்தான் இயற்கை எய்திவிட்டார் பாவம்!

ஒம் ஒம் அப்படித் தான் கத்தினவர் :)

ஒம் ஒம் அப்படித் தான் கத்தினவர் :D

:mellow::lol: :lol: குட்டிப்பையன் கருநாய்நிதியின் மேல் கடும் கோவத்தில் இருக்கிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.