Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்.்

Featured Replies

தலைவர் இருக்கிறார்/இல்லை என்று கதைத்தே பொழுதைப்போக்கக்கூடாது.

இங்கே ஏற்கனவே கூறப்பட்டது போல தலவரை அழித்துவிட்டோம் என்று அறைகூவல் விடுக்கும் இலங்கை அரசு இனி தமிழ் மக்களுக்கு என்ன செய்யப்போகிறது என்று பார்க்கவேண்டும். புலம்பெயர்ந்த மக்கள் சர்வதேச அரசாங்கங்கள் இந்த விஷயத்தை மறந்துவிடாது இருக்க வைக்கவேண்டும். சரியான அத்தியாவசியத்தேவைகள், வைத்தியத்தேவைகள் அங்கே முகாம்களில் உள்ள மக்களுக்கு கிடைக்கபோராடவேண்டும். மேலும் அரசாங்கத்தின் 2 அல்லது 3 வருட களையெடுப்பு சிந்தனைய முறியடித்து முகம்களில் உள்ள மக்களை துரிதமாக மீளக்குடியமர வைக்கச்செய்ய வேண்டும். இந்தபோராட்டங்களுக்கு தலைமை இல்லை என்பது உதவும். அதனால் தலவர் தான் இருப்பதை இப்போது அறிவிக்காமல் இருக்கலாம். அவர் எபோதும் தமிழரின் உரிமைக்காக போரடியவர். தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களில் இருந்து மீளவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கால அவகாசம் வேண்டும்.

பத்ம நாதன் 19ம் திகதி தலவர் இறக்கவில்லை என்று கூறிவிட்டு, 24ம் திகதி தலைவர் 17ம் திகதியே இறந்துவிட்டார் என்று கூறும் போது உண்மையான செய்தி அவருக்கு 19ம் திகதி கிடக்கமல் இருந்திருக்கலாம்.

ஆனால், கடைசி நேரத்தில் நடேசன் மற்றவர்களை(!) நம்பாது தானே மரீ கொல்வினுடனும் (Times reporter) ரோகான் சந்திரனேருவுடனும் (MP)தானே தொடர்புகளை ஏற்படுத்தி வெள்ளைக்கொடியுடன் வெளியே வர முயற்சித்துள்ளார். அவர் துணைவியார் சிங்களத்தில் இராணுவத்தினருடன் உரையாடியும் அவர்கள் உயிருடன் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. இது நம்பவைத்து மோசம் செய்யப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. அவர்கள் வெளியே வந்தால் ஏதும் கூறிவிடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.

நாம் இனி முகாம்களில் உள்ள, மற்றும் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை தொண்டு நிறுவனங்களினூடாகவும், சர்வதேச அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்தும் செய்விக்கவேண்டும்.

தலவர் இருக்கிறார்/இல்லை - காலம் அல்லது தலவரே பதில் சொல்லட்டும். காத்திருப்போம்.

  • Replies 141
  • Views 31.1k
  • Created
  • Last Reply
“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”

முதலில் நாம் செய்ய வேண்டியது - அங்கு முகாம்களில் அவல நிலையில் இருக்கும் மக்களிற்கு உதவுவது!

இரண்டாவது - தெற்கில் வசிக்கும் நம் சொந்தங்களை உடன் வடக்கு கிழக்கிற்க திரும்பிச்சென்று குடியமர வழி சமைப்பது.

முன்றாவது தொடரந்த அரசியல் போராட்டம் மூலம் பாதுகாப்பு வலயம் மற்றும் பலவந்த சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவது. இதற்கு நாம் அனைவரும் அரசியற் பேரம் பாராது அனைத்து தமிழ் கட்சிகளையும் (குறிப்பாக தேசிய விடுதலைக்கு அதரவான அனைத்து சக்திகளையும்) ஒன்றினைத்து போராடுவது.

இது நடைபெறுகையில்.....

தெற்கில் காலப்போக்கில் மகிந்த குடும்ப சர்வாதிகாரம் தலைதூக்கும். இதற்கு எதிராக இயங்கும் எந்த பேய்களுக்கும் ஆதரவு கொடுத்து போராட வைப்பது. முடிந்தால் ஒரு ஆயுதக்கிளர்ச்சி செய்ய முனையும் சிங்கள போராளிகளுக்கு நம் முழுஆதரவையும் வழங்குவது.

நம்மினத்தின் குருதி ஒருதுளியம் சிந்தாது சிங்கள தேசத்தின் அழிவிற்கு நாம் வழிவகுப்போம்!

இதுவே நம் தலைவனுக்கு நாம் செய்யும் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது - தெற்கில் வசிக்கும் நம் சொந்தங்களை உடன் வடக்கு கிழக்கிற்க திரும்பிச்சென்று குடியமர வழி சமைப்பது.//

புலம்பெயர்ந்த தமிழர்கள்.....????

புலம் பெயர் சொந்தங்கள் நாடுதிரும்புவது அவர்களின் சுயவிருப்பு! ஆனால் தெற்கில் நம் சொந்தங்களின் இருப்பு தெற்கை பணரீதியாக வளர்ப்பதுடன் வடக்கில் சிங்கள குடியேற்றங்களை வழிசமைக்க உதவும். புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களை விட தெற்கில் இருக்கும் நம் சொந்தங்களின் நிதி தேவையை பூர்த்தி செய்பவர்கள் புலம் பெயர் தமிழர்களே! ஒரு 5வீதமானவர்களே அங்கு சுயமாக சம்பாதித்து வாழ்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அங்கு தங்குவதில் பிரச்சனை கிடையாது. அனால் புலம் பெயர் நாடுகளில் இருந்து தெற்கிற்கு செல்லும் பணம் வடக்கிற்கும் கிழக்கிற்கும் சென்றால் வடகிழக்கில் தொழில் வாய்புகள் அதிகமாவதுடன் முதலீடுகளும் அதிகமாகும்! நான் தெற்கில் இருப்பவர்கள் வடகிழக்கிற்கு செல்லவேண்டும் என்பதன் முக்கிய காரணி அதவே! அத்துடன் இனிவரும் காலங்களில் தெக்கிலேயே அசம்பாவிதங்கள் நடைபெற சாத்தியம் இருக்கிறது. இது பாதுகாப்பு காராணமாகவும் இருக்கலாம்!

தலைவர் இருக்கிரார்.. ஒருநாள் அவர் வருவார்.... இதுதான் உண்மை.

அவர் வருவதற்கு ஏற்ற சூழ்நிலையை நாம் ஏற்படுத்தவேண்டும்.

இதுதான் உண்மை நிலவரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்பவையை நம்புதல்

+ அடிக்கடி ஆய்வு எழுதுதல்

+ மற்றவர்களையும் குழப்புதல் = சாத்திரி

எழுத நேரமின்மையால் அதிகம் எழுதமுடியல... வசி , ரதி இவர்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.

Edited by Vishnu

அந்த சூழ்மிலையை எம்மால் ஏற்படுத்தமுடியாவிட்டால்.. தலைவர் வரவை மட்டுமல்ல. இலங்கையில் தமிழர் இருப்பை கூட உறுதி செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு உதவி வேணும்... சனங்கள் எண்டைக்குத்தான் திருந்துமெண்டு யாராச்சும் சொல்லமுடியுமா???........................

என்ன நிலவன் அண்ணா காமடி பண்ணுறிங்க ஒரு தலைவன் இல்லை ஓராயிரம் தலைவர் வந்தாலும் திருந்தாதுகள் வேணும் என்றால் என்னோடு பந்தயம் கட்டுங்கள் என் உயிருக்கு நான் பந்தயம் கட்டுகிறேன்..........சவால்..........

என்னைப் பொறுத்தவரைக்கும் தலைவர் அவர்கள் இறந்து விட்டதாய் மிக உறுதியாக, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நம்ப முயல்கின்றேன்.

இது என் உணர்வு நிலை சார்ந்தது.

வாழ்வில் மிக மிக துயரமான, ஏற்றுக் கொள்ள முடியவே முடியாத நிகழ்வாக, என்னால் கடக்கவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு அடர் துயர் கொண்ட ஒரு நிகழ்வு அது. நான் இறந்து போன பின் தான் தலைவரின் சாவு இடம் பெற வேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன். அவரும் ஒரு மனிதன் (human), அவருக்கும் சாவு என்பது வரும் என்ற யதார்த்த பூர்வமான சிந்தனையில் இருந்து விலகி, சாவே அற்ற ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். அது அவரின் மீதான பற்றினால் மட்டும் அல்ல, அவரைத் தவிர எமக்கு யாரும் உண்மையாய் இல்லை என்ற திடமான கருத்தினாலும் நான் அவ்வாறு நினைத்து இருந்தேன்.

ஆனால், இன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக நம்ப முனைகின்றேன். ஆயிரம் பேர் இல்லை என்று உரத்து சொன்னாலும், அவர் இறந்ததாகவே நம்ப முனைகின்றேன். ஏனெனில், இந்த அடர் துயரை தாண்ட வேண்டி உள்ளது. இந்த புள்ளியை கடக்க வேண்டி உள்ளது. இந்த துயரின் பின்னாலும் எமக்காக போராட்டம் மிக கனதியான வடிவில் காத்து இருக்கின்றது என்பதை உணர தேவை உள்ளது.

தாங்க முடியவே முடியாது என்ற துயரை தாங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன். அவ்வாறு தாங்கினால் தான் என்னால் அடுத்த அடியை (step) எடுக்க முடியும் என்று நம்புகின்றேன். இருக்கின்றாரா இல்லையா என்ற 'உள்ளே வெளியே' விளையாட்டின் மூலம் என்னுடைய அனைத்து அசைவையும் நிறுத்தி, அவரின், அந்த ஒப்பற்ற தலைவனின், இறுதி வரைக்கும் தன் தேச மக்களின் விடுதலைக்காய் தன்னை உண்மையாய் அர்பணித்த தலைவனின் உயிரை வைத்து நடக்கும் அற்பத்தனமான விளையாட்டினால் என் அசைவியக்கத்தினை முற்றாக முடக்கி அடுத்த அடியை எடுக்காமல் இருக்க முடியாது

காலமும், வரலாறும் எமக்கு மிக பாரிய கடமையை தந்துள்ளது. உடனடியாக அரசியல் ரீதியில் போராடி மீட்கப் பட வேண்டி, இறுதி வரைக்கும் தம் உயிரை பணயம் வைத்த மக்கள் இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய போராட்டம் பற்றி சிந்திப்பதற்கு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதமே முழுத் தடையாக இருக்கின்றது. அந்த விவாததின் என்னுடைய உணர்வு சார்ந்த பதிலாக அவர் இறந்து விட்டார் என்ற கடும் துயர் நிரம்பிய பதிலைத்தான் என்னுள் நிரப்ப விரும்புகின்றேன். ஏனெனில் இந்த புள்ளியை, அசையாது நின்ற நிலையில் இருக்கும் புள்ளியை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது

மீண்டும், இது என்னுடைய உணர்வு சார்ந்தது,

:நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அந்தப்புள்ளியிலிருந்து எல்லோரும் வெளியே வரவேண்டுமென்பதே என்விருப்பம்.. ஆனால் இங்கு பலர் எனது பதிவின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு கருத்தெழுதிக்கொண்டிருக்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கனும் சாத்திரி, நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பதற்க்கு மிக கொஞ்ச சந்தர்பங்களே உள்ளன! ஏன் எனில் படைகளால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் அனைவரும் புலிகள் அல்லரே! அது மட்டுமன்றி முன்னாள் போராளிகள், மற்றம் எல்லைப்படை, சிறப்பு எல்லைப்படையில் பணி புரிந்தோர், வானொலி பத்திரிகையில் பணியாற்றியோர், ஏன் இன்றும் சேரன் சோழன், பாண்டியனில் பணி புரிந்தோர் என்று எல்லாருமே புலிகள் என்ற அடிப்படையில் தான் அடக்கப்படுகின்றனர்.

எனவே அதில் எத்தனை சத வீதம் உண்மையான உறுப்பினர்கள் உள்ளனர் என்பது கேள்விக்கிடமானதே!

மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிகாலம் என்ன???சிந்திப்பீர்களா??

நிதர்சன் நானும் 10000 போராளிகள் என்றே குறிப்பிட்டிருந்தேன்.. புலிகள் என்று குறிப்பிடவில்லை ... வேண்டுமானால் பதிவை திரும்பவும் படிக்கவும்.. நன்றி.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவடி தலைவர் இறந்ததை தலைவரே வந்து சொல்ல வேண்டும் என இல்லை அவரோடு இருந்தவர்கள் அதாவது தளபதிகள் வந்து சொல்லலாம் தானே[உ+ம்]ஜெயம்,பானு போன்றவர்கள்.தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சர்வதேச ரீதியில் விரைவான ஓர் தீர்வைப் பெற இத் தளபதிகள் மறைந்து வாழ்ந்தால் ஏன் தலைவர் மறைந்து வாழக் கூடாது அது தான் என் கேள்வி .

ரதி ஜெயம் பானு ஆகியோரும் இறந்து விட்டார்கள்.. அவர்களின் இறந்த படங்கள் மின்னஞ்சலில் உலாவந்தது.. என்னிடம் இருந்ததை அழிந்துவிட்டேன்.. ஆனால் யாழ்கள உறுப்பினர்கள் சிலரிடம் அது உள்ளது கேட்டு பார்க்வும். அவர்கள் பற்றிய சில நினைத்தே பார்க்கமுடியாத தகவல்கள் வெளியாகும்...

  • கருத்துக்கள உறவுகள்

இது ஊடக அவியலாளர்களின் அவியல் நேரம் போல..!

யாழ் களம்.. ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அவர் நாலா மாடியில.. இவர் வன்னிக்க.. 10,000 பேர் புலியள்.. 15,000 போராளிகள் என்று.. இவர்களே காட்டிக் கொடுப்பாங்க போல இருக்கே..!

ஊடக அவியலாளர்கள் தங்களுக்கு இன்னொரு நபர் மூலம் தெரிந்த விடயத்தை இங்கு சொல்ல அனுமதிக்கக் கூடாது. சரியான ஆதார அடிப்படைகளோடு செய்திகளை பிரசுரிக்க வேண்டுமே தவிர.. அவர் சொன்னார்.. இவர் சொன்னார்.. என்று நானும்.. எனது கற்பனைகளை பதிவாக்க முடியும்..!

யாழ் நிர்வாகம் மக்களைக் குழப்பும் இவ்வகையான ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை பிரசுரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது நன்று மட்டுமன்றி.. மக்களின் பாதுகாப்பிற்கும் உதவும்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் வாத விதண்டா வாதங்களை விடுத்து தயவு செய்து எம்மவருக்கான அடுத்த கட்டத்தை சிந்தியுங்கள்.

வன்னிபோரின் வெற்றியை சிங்களவன் இன்னும் பெருவீதிகள் தொடக்கம் குச்சொழுங்கை வரைக்கும் தோரணங்கள் கட்டி கொண்டாடுகின்றான்.

ஆனால் நாங்கள் இன்னும் கிணற்று தவளைமாதிரியே குறுகியவட்டத்திற்குள் கத்திக்கொண்டிருக்கின்றோம்.

தலைவரை வீழ்ந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக நகரவேண்டிய தேவை இருக்கிறது. எங்களுடைய தாயக மீட்புப் போராட்டம் தலைவருடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. எல்லோருக்குள்ளும் முளைவிட்ட விருட்சம். சற்று ஆடிப்போனோம் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலை எம்மை உடைத்துவிடலாகாது. எந்தத் தலைவரைப் பின்பற்றினோமோ, எந்தத் தலைவரை நேசித்தோமோ, அந்தத் தலைவர் தன் சிந்தனையின் மூலம் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பார். எங்கள் உறவுகளைக் காக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய தருணத்தில் மனம் சோர்ந்து உழன்று கொண்டிராது வதை முகாம்களுக்குள் எஞ்சியிருக்கும் எங்களின் உறவுகளைக் காக்க ஏதாவது முயற்சி எடுக்கவேண்டும்.

யாழ் களம்.. ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். அவர் நாலா மாடியில.. இவர் வன்னிக்க.. 10,000 பேர் புலியள்.. 15,000 போராளிகள் என்று.. இவர்களே காட்டிக் கொடுப்பாங்க போல இருக்கே..!

யாழ் நிர்வாகம் மக்களைக் குழப்பும் இவ்வகையான ஆதார அடிப்படைகளற்ற செய்திகளை பிரசுரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது நன்று மட்டுமன்றி.. மக்களின் பாதுகாப்பிற்கும் உதவும்..! :D

:rolleyes:

உண்மை!

யாழ்கள நிர்வாகிகள் இதை தயவுசெய்து கவனத்தில் எடுங்கள்!

இங்கு கருத்துக்கள் எழுதிய நண்பர்கள் பலரதும் உணர்ச்சிக் கொந்தளிப்பை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் வெறும் உணர்ச்சிப் பித்தர்களாகி, வீரவணக்கம் செலுத்துகிறேன் என்றும்,

இல்லை அது எல்லாம் தேவை இல்லை மீண்டும் வருவார் என்றும் உளறித்தள்ளி,

எமக்குள் குழாயடிச் சண்டை நடத்தி, காலவிரயம் செய்யக்கூடிய ஒரு கால கட்டத்தில் நாம் வாழவில்லை.

உறங்குவதற்கும் நேரமில்லை வீணாய் உளறுவதற்கும் இது நேரமில்லை!

புறப்படு தமிழா!! புதியதோர் உலகு செய்வோம்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வலைப் பூவிலே பார்த்தது, தலைப்புடன் ஒன்றியிருப்பதால் இணைக்கிறேன். பிழையாக இருந்தால் பெரிய கத்தியால் ஒரே வெட்ட வெட்டி விடுங்கோ.... :(

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

இலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா...வீரவணக்கங்கள்

Edited by sukan

உங்கள் கருத்துக்களை பார்த்து பொறுக்க முடியாமல் எழுதுகிறேன். இந்த பேட்டிகள் தாயக ஊடகங்கள் என்று செல்லப்படுபவைக்கும் கொடக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். தாயாமோகன் முதலில் CMR ற்கு தான் பேட்டி கொடுத்தார் அதை அவர்கள் வெளியே விடவே இல்லை..

ஆமாம் உங்களிடம் சொல்லிவிட்டுதான் கொடுத்தார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொள்வதற்கு உங்களுக்கு ஆர்வம். இவர்களுடைய கருத்துக்களை பார்க்கும்போது இவர்கள் தலைமை பதிவிக்கு ஆசைப்படுபவர்கள் போல் சந்தேகம் வருகின்றது.

நண்பாகளே உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூருகின்றேன். குர்திஸ்தான் தலைவர் ஒச்சலாடனை துருக்கிய அரசு இன்னுமொரு நாட்டிலிருந்து இராணுவ அதிரடிதாக்குதல் மூலம் துருக்கிக்கு கடத்திச்சென்றது. பத்மநாதன் முதலில் தலைவர் நலமாக இருக்கின்றார் என்றுவிட்டு

பின்பு இறந்தவிட்டார் என்று கூறுகின்றார். முதலில் தலைவர் பாதுகாப்பான இடம் ஒன்றை உருவாக்கிவிட்டு மக்களுக்கு அறிப்பார் என்றார். எந்த ஒரு மனிதனும் சாவுக்கு விதி விலக்கல்ல. ஆனால் இபபோது தலைவர் இறந்திருக்க சந்தர்ப்பமில்லை. இங்குள்ள பலர் ஒச்சலாடனின் நிலை தலைவருக்கும் வரவேண்டும் என்று விரும்புகின்றார்கள் போலும்.சாத்திரியார் தமிழினி புதுவை ஆகியோர் சரணடைந்ததாக கூறுகின்றார்.அது உண்மைதான் எல்லோரையும் பாதுகாப்பாக கூட்டிச்செல்வது சாத்தியமில்லை.

இதுவரை ராஜபக்ச எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லவில்லை.

சிரிப்பு மந்திரிகள்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியை நீட்டிச் செல்வதற்கு முன்னர் ஒன்றை சிந்தியுங்கள் ...

1) கழிந்து போன ஏழு நாட்களில் நீங்கள் தாயகவிடுதலை மற்றும் எமது மக்கள் நலன் நோக்கி என்ன என்ன செய்தீர்கள் என்பதை பட்டியிலிடுங்கள் ..

2) உங்கள் பட்டியல் நீண்டு காணப்பட்டால் .. அவற்றை தெரியப்படுத்திவிட்டு உங்கள் கருத்துகளை இங்கு எழுதுங்கள் ..

3) பட்டியலிட எதுவுமில்லை என்றால், இங்கு எதுவும் வெட்டியாய் எழுதாதீர்கள் இன்னொரு ஏழு நாட்கள் பொறுத்திருங்கள் பின்னர் 1) இலிருந்து ஆரம்பியுங்கள் ...

உங்கள் மனச்சாட்சியை தொட்டுப்பார்த்துவிட்டு எழுதுங்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ஜெயம் பானு ஆகியோரும் இறந்து விட்டார்கள்.. அவர்களின் இறந்த படங்கள் மின்னஞ்சலில் உலாவந்தது.. என்னிடம் இருந்ததை அழிந்துவிட்டேன்.. ஆனால் யாழ்கள உறுப்பினர்கள் சிலரிடம் அது உள்ளது கேட்டு பார்க்வும். அவர்கள் பற்றிய சில நினைத்தே பார்க்கமுடியாத தகவல்கள் வெளியாகும்...

நிறுவுதல்களில் நேரத்தை கழிக்காமல் அடுத்த கட்டத்தை எண்ணுவோம். நினைத்துப்பார்க்க முடியாதவையெல்லாம் நடந்து முடிந்து விட்டது. எஞ்சியவர்களையாவது பாதுகாப்போம்.

.சாத்திரியார் தமிழினி புதுவை ஆகியோர் சரணடைந்ததாக கூறுகின்றார்.அது உண்மைதான் எல்லோரையும் பாதுகாப்பாக கூட்டிச்செல்வது சாத்தியமில்லை.

எல்லோரையும் கூட்டிச்செல்வது சிரமம் என்றால் எல்லோராலும் நம்பப்பட்டவர்கள் நம்பியவர்களுக்குச் செய்தது மோசமல்லவா. இத்தனை காலமும் தங்களை இந்த விடுதலையென்ற தீயுக்கள் ஆயிரமாயிரமாய் அழித்தவர்களும் அதை நம்பிப் பின் சென்றவர்களும் பாதுகாக்கப்பட முடியாதளவுக்கு பலியெடுக்க விட்டது நம் எல்லோரின் துரோகமும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தாடும் அனைவரும் ஆதாரங்களை இழந்து நிற்போரை ஆளுக்கொரு குடும்பத்தை ஆளுக்கொரு குழந்தையை பராமரிப்பீர்களா ? அப்படி மனிதாபிமானப்பணி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

சிதிலமாய்க் கிடக்கும் எங்கள் சிறுவர்கனை பெண்களை மீளவும் புதுவாழ்வு பெறும் வழிகளைத் திறந்து விடுவோம்.

ஆயிரமாயிரமாய் வேண்டாம் ஆளுக்கு ஒருவர் மாதம் பத்து யூரோ பங்களிக்க முடியுமானால் தயவு செய்து தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும் தலைவர் அவர்கள் இறந்து விட்டதாய் மிக உறுதியாக, சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நம்ப முயல்கின்றேன்.

இது என் உணர்வு நிலை சார்ந்தது.

வாழ்வில் மிக மிக துயரமான, ஏற்றுக் கொள்ள முடியவே முடியாத நிகழ்வாக, என்னால் கடக்கவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு அடர் துயர் கொண்ட ஒரு நிகழ்வு அது. நான் இறந்து போன பின் தான் தலைவரின் சாவு இடம் பெற வேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன். அவரும் ஒரு மனிதன் (human), அவருக்கும் சாவு என்பது வரும் என்ற யதார்த்த பூர்வமான சிந்தனையில் இருந்து விலகி, சாவே அற்ற ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். அது அவரின் மீதான பற்றினால் மட்டும் அல்ல, அவரைத் தவிர எமக்கு யாரும் உண்மையாய் இல்லை என்ற திடமான கருத்தினாலும் நான் அவ்வாறு நினைத்து இருந்தேன்.

ஆனால், இன்று அவர் இறந்து விட்டார் என்று உறுதியாக நம்ப முனைகின்றேன். ஆயிரம் பேர் இல்லை என்று உரத்து சொன்னாலும், அவர் இறந்ததாகவே நம்ப முனைகின்றேன். ஏனெனில், இந்த அடர் துயரை தாண்ட வேண்டி உள்ளது. இந்த புள்ளியை கடக்க வேண்டி உள்ளது. இந்த துயரின் பின்னாலும் எமக்காக போராட்டம் மிக கனதியான வடிவில் காத்து இருக்கின்றது என்பதை உணர தேவை உள்ளது.

தாங்க முடியவே முடியாது என்ற துயரை தாங்கித் தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தான் நான் இருக்கின்றேன். அவ்வாறு தாங்கினால் தான் என்னால் அடுத்த அடியை (step) எடுக்க முடியும் என்று நம்புகின்றேன். இருக்கின்றாரா இல்லையா என்ற 'உள்ளே வெளியே' விளையாட்டின் மூலம் என்னுடைய அனைத்து அசைவையும் நிறுத்தி, அவரின், அந்த ஒப்பற்ற தலைவனின், இறுதி வரைக்கும் தன் தேச மக்களின் விடுதலைக்காய் தன்னை உண்மையாய் அர்பணித்த தலைவனின் உயிரை வைத்து நடக்கும் அற்பத்தனமான விளையாட்டினால் என் அசைவியக்கத்தினை முற்றாக முடக்கி அடுத்த அடியை எடுக்காமல் இருக்க முடியாது

காலமும், வரலாறும் எமக்கு மிக பாரிய கடமையை தந்துள்ளது. உடனடியாக அரசியல் ரீதியில் போராடி மீட்கப் பட வேண்டி, இறுதி வரைக்கும் தம் உயிரை பணயம் வைத்த மக்கள் இலட்சக் கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய போராட்டம் பற்றி சிந்திப்பதற்கு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதமே முழுத் தடையாக இருக்கின்றது. அந்த விவாததின் என்னுடைய உணர்வு சார்ந்த பதிலாக அவர் இறந்து விட்டார் என்ற கடும் துயர் நிரம்பிய பதிலைத்தான் என்னுள் நிரப்ப விரும்புகின்றேன். ஏனெனில் இந்த புள்ளியை, அசையாது நின்ற நிலையில் இருக்கும் புள்ளியை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது

மீண்டும், இது என்னுடைய உணர்வு சார்ந்தது,

:நிழலி

இதை அனைவருரும் மனதால் ஏறு்றுக்கொள்ள வேண்டும்.

உணர்வால் உண்மைகளை ஒத்துக்கொள்வோரால் இலகுவாக விடுபட முடியும்.

இத்தோடு இப்பகுதியிலிருந்து விடைபெறுகிறேன். மனிதாபிமானப்பணிகள் செய்ய விரும்புவோர் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த கட்டத்தை தாண்டட்டும் எமது மக்கள்.

உறவுகளே யார் இருக்கிறார் யார் இறந்து போனார் என்ற விவாதங்களை

எல்லாம் ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு நாம் தமிழர்

எங்களின் நாட்டுக்காகவும் எங்களின் மக்களுக்காகவும் இனியாவது.........

என்ன உருப்படியாக் செய்யப் போகிறோம் என்று சிந்திப்போம்.......

நாங்கள் எங்கள் தலைவரின் மறைவின் உண்மை நிலையை அறிவதில்

முழு நேரத்தையும் செலவு செய்து கொண்டிருக்க ஏற்கனவே மரண வேதனையில்

வாழ்ந்து கொண்டிருக்கம் எம் உறவகள் கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிந்து

விடுவார்கள்........ தமிழர்கள் ஆகிய நாங்கள் போனதை திரத்தி பிடிப்பதிலும்

முடிந்ததை விவாதிப்பதிலும் வல்லவர்களாக இருந்து எதிர்கால நிகழ்வுகளை

கோட்டை விட்டவர்கள்...........

எனவே மீண்டும் மீண்டும் ஒரே தப்பை செய்து மற்ரவர்களுக்கு பயனற்ரவர்களாக

வாழாமல் இனி என்றாலும் சிந்தித்து செயல் படுவோம்..........

குறிப்பு: சரணடைந்த போராளிகளைப் பற்றி நாம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளு முன்

நாம் எம் நாட்டுக்காக என்ன செய்தோம் என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்!!!!!

சில மணித் துளிகளை புலத்தில் இருந்து தன் சொந்த உறவுகளுக்காக குரல் கொடுக்காத

துப்புக் கெட்ட சனங்கள் எல்லாம் போராட்டத்தின் இன்றய நிலை பற்றி கதைப்பதும் விவாதிப்பதும் எந்த வகையில் நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படும்???

தமிழன் எப்போது தன் சொந்த மொழியையும் தன் சொந்த மண்ணையும் தன்மானத்தையும்

மட்டும் தன் வாழ்க்கையின் சொத்தாக கொள்கிறானோ அன்று விடியும் எம் இனம்......

அது வரை இப்படியான கொடூரங்கள் தான் மிகுதியாக மிஞ்சிக்கிடக்கும்...................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.