Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த க்ளைமாக்ஸ்! பிரபாகரனை நேரில் கண்ட எழுத்தாளரின் பேட்டி!

Featured Replies

prabhakaran.jpg

ஈழத்து எழுத்தாள ரான திருநாவுக்கரசு, நக்கீரன் வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. நன்கு அறி முகமானவர்தான். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிவரும் சுற்றும்- முற்றும் தொடரில் திருநாவுக்கரசுவின் படைப்பாற்றல் குறித்து பதிவு செய்திருக்கிறார். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப் போர்வரை அங்கிருந்துவிட்டு, தற்போது தமிழகத்திற்கு தப்பித்து வந்திருக்கிறார் திருநாவுக்கரசு. அவரை சந்தித்தபோது, இறுதிநாள் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு முழுக்க ஈழத்தமிழர்களின் பாஷையிலேயே இருந்தது.

தடுப்பு முகாம்களைச் சுற்றி இலங்கை ராணுவத்தின் கடுமையான பாதுகாப்பும் ஏக கெடுபிடிகளும் இருக்கும் சூழலில் எப்படி தப்பித்து வந்தீர்கள்?

பணம்.. பணம்.. பணம்... எல்லாம் பணம்தான். இலங்கை பணத்தில் 2 லட்ச ரூபாய் தந்துவிட்டுத்தான் தப்பித்து வந்தோம். நள்ளிரவில் போட்டில் ஏற்றிக்கொண்டு வந்த சிங்களவன் விடியற்காலையில் ஒரு திட்டில் இறக்கிவிட்டுட்டு போய்விட்டான். பிஸ்கட் மட்டும் இருந்தது. குடிக்கிற தண்ணீரும் தீர்ந்துபோச்சு. திக்கு தெரியாத திட்டில் பசியோடு எப்படி தமிழகத்திற்கு போவது என்று தெரியாமல் விழித்தோம். இந்த திட்டில் சிக்கித் தவிக்கிறோம் என்று அறிந்துகொண்ட முதல்வர் கலைஞர், காவல் துறையினரை அனுப்பி எங்களை காப்பாத்தச் சொல்லி யிருக்கிறார். காவல் துறையினரும் கடலில் இருந்த ஒவ்வொரு திட்டு திட்டாகத் தேடித்தேடி களைத்துப் போனார்கள். ஒரு வழியாக மறுநாள் மாலை 5 மணி சுமாருக்கு எங்களை கண்டுபிடித்து அழைத்து வந்தனர் தமிழக போலீஸார்.

prabhakaran1.jpg

* தடுப்பு முகாம்களில் தமிழர் களின் நிலைமை எப்படி இருக்கிறது?

நினைச்சாலே திகிலடிச்ச மாதிரி இருக்கு. முள் வேலிகள் சூழப்பட்டிருக் கிறது தடுப்பு முகாம்கள். கூண்டுக்குள் அடைத்த விலங்குகள்போல மக்கள். பெரிய பெரிய பள்ளங்களும் காடுகளுமாக இருந்த பகுதியை சமப்படுத்தி, சின்னச் சின்ன டெண்ட் அமைத்திருக்கிறார்கள். ஒவ் வொரு டெண்டிலும் 18 பேர் தங்கியிருக் கோம். படுக்க முடியாது. உட்கார்ந்து கொள்ளத்தான் இடமிருக்கும். இந்தியா மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்த நிதி உதவிகளையெல்லாம் மந்திரிகளும் ராணு வமும் கொள்ளை அடித்துக்கொண்டது. முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்துதரப்படவில்லை. உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் என எதுவுமே சரிவர இல்லை. கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்து கொடுக் கிற சாப்பாட்டில்தான் பருப்பு இருக்கும், உப்பு இருக்கும். காய்கறிகள் கொஞ்சமேனும் இருக்கும்.

இந்த சாப்பாட்டு பொட்டலங் களை வாங்குவதற்கு மக்கள் தவியாய் தவிப்பார்கள். ரெண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு இங்க கொடுங்க... இங்க கொடுங்க.. என்று கெஞ்சுவதை பார்த் தால் நம் நெஞ்சு வெடித்துவிடும். போதிய கழிப்பிட வசதிகள் இல்லாத தால் கழிவறைகள் எல்லாம் நிரம்பி வழியும். வெளிநாடுகளில் இருந்து வந்த துணிகள் எதுவும் பயன்படுத்தமுடியவில்லை. எல்லாமே "அன்-சைஸ்'களாக இருந்தன.

குழந்தைகளுக்குரிய ஆடைகள் தொளதொளவென இருந்தன. அதேபோல ஆண்களுக்கு வந்த ஆடைகளும் பெண்களுக்கான சுடிதார், சல்வார் கம்மீஸ்களும் பெரிய சைஸ்களில் இருந்ததால் யாருமே பயன்படுத்தமுடியவில்லை. சேலைகள் வந்திருந்தால் ஒரு வேளை பயன்பட்டிருக்கும். முகாமில் நான் இருந்த போது "சிக்கன் பாக்ஸ்' நோய் தாக்கி 200 குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். போதிய மருந்துகள், சிகிச்சைகள் இல்லாததால் 60 குழந்தைகள் இறந்து போனார்கள். நம்மை காப்பாத்த யாரும் இல்லை என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட் டார்கள். கடவுளைக் கூட அவர்கள் நம்ப தயாரில்லை. அந்தளவுக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கின்றனர். ஜனங்களிடம் சாவு பயம் அதிகரித்து கிடக்கிறது. தாங்கள் செத்துவிடுவோம்ங்கிற பயத்தைக் காட்டிலும் தங்கள் உறவுகளைத் தேடிச் சென்றவர்கள் திரும்பி வராது போனால்... அவர்களை பற்றிய பயம்தான் அதிகம்.

* இறுதிக்கட்டப் போரின்போது என்ன நடந்தது?

மே 10-ந் தேதி நடேசனை சந்தித்து யுத்தத்தின் போக்கு குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது, ""ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள், அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியாவிடமிருந்து தகவல் வந்துள்ளது'' என்று சொன்னார்.

மறுநாள் மீண்டும் அவரை நான் சந்தித்தபோது, ""இந்தியாவிடமிருந்து வந்த தகவலை தேசியத் தலைவரிடம் சொன்னேன். "சரணடைய முடியாது, இறுதிவரை யுத்தம்தான்' என்று கூறிவிட்டார். இதற்கு காரணம் அமெரிக்காவில் இயக் கத்தைச் சேர்ந்த பாபியிடமிருந்து, மனிதாபிமான அடிப்படை யில் தனது படைகளை அனுப்பி அமெரிக்கா உதவி செய்ய விருக்கிறது என்று தேசியத் தலைவருக்கு தகவல் கிடைத் ததுதான்'' என்று என்னிடம் விவரித்தார் நடேசன்.

* அப்பறம் எப்படி இலங்கை ராணுவத்திடம் நடேசனும் புலித்தேவனும் சரண டையச் சென்றனர்?

தேசியத் தலைவர் பிரபாகரன் நம்பியதுபோல எதுவும் நடக்கலை. 16-ந் தேதி "உங்களின் சுய முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்' என்று அனைவ ருக்கும் இயக்கம் அறிவித்தது. அந்த சூழலில் பணயக் கைதிகளாக தங்கள் வசமிருந்த 9 சிங்கள ராணுவத்தினரை அழைத்துக்கொண்டு நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் ஆகியோர் ராணுவத்தினரை நோக்கிச்சென்றனர். 9 ராணுவ கைதிகளையும் விடுவித்தனர். ராணுவ கைதிகள் தங்கள் பக்கம் வந்ததும் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ஈவு இரக்கமின்றி மிருகத்தனமாக அவர்களை சுட்டுக்கொன்றது ராணுவம்.

* பிரபாகரனைப் பற்றி?

13-ந் தேதி விடியற்காலை புதுமாத்தளை கடற்கரையோரம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்பட 150 பேர் நின்று கொண்டி ருந்ததைப் பார்த்தேன். 13-ந்தேதி இரவு அந்த பகுதிக்கு சென்றபோது யாருமே அங்கு இல்லை. 14-ந்தேதி அதி காலையில் அதே பகுதியில் பொட்டுவை மட்டும் பார்த்தேன். அப்போது அவரிடம், "என்னாச்சு?' என்று கேட்டபோது, "ராத்திரி சிக்கல் ஆயிடுச்சு, கிளம்ப முடியலை' என்று பொட்டு சொன்னார். 15-ந்தேதி மீண்டும் நான் அங்கு போய்ப் பார்த்தபோது 200 பேருடன் தேசியத்தலைவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பொட்டு, "இன்னைக்கு நாங்கள் போய்விடுவோம்' என்று சொன்னார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் போய்ப் பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. கிளம்பிப் போயி ருப்பார்கள்.

* அப்படியானால்.. பிரபாகர னின் உடல் என்று இலங்கை ராணுவம் காட்டியதே, அது...?

புலம் பெயர்ந்த தமிழர்களும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களும் இதனை நம்பவில்லை.

* தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவிட மிருந்து ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஈழத் தமிழர்களின் பாதுகாப்பில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தியாவின் அனுசரிப்பில்தான் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு இருக்கிறது. இதனை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

சந்திப்பு : இளையசெல்வன்

படம் : அசோக்

நன்றி நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வதுபோல இப்படியே தவளை மாதிரி கத்திக்கொண்டிருந்தால் போராட்டத்தின் நிலை தேக்கம்தான். "புலிகளின் பயங்கரவாத கட்டமைப்பு இன்னமும் குலையவில்லை, தடையை நீட்டிக்கவேண்டும்" என்ற இலங்கையரசின் கூப்பாட்டிற்கு ஏதுவாக முக்கிய தளபதிகளின் நிலைபற்றி போட்டுகொடுத்து பரபரப்பு எற்படுத்தி காசு பார்க்கும் குணம் இந்த தமிழ் ஊடகங்களுக்கு என்றுதணியுமோ,அன்றுதான் தமிழனுக்கு விடிவு,வெளிச்சம்.

இவர் கடந்த வாரம் ஜூ.வி. க்கு வழங்கி இருந்த பேட்டியில் சொன்னவற்றை இந்த நக்கீரன் பேட்டியில் கூறிய பதில்களால் குழப்புகின்றார்

ஜூ.வி யில் இருந்து

''பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?''

''அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத் தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப் பட்டிருக்கும் உண்மை.''

''பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..?''

''பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்... பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து ராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடி யில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!''

''பிரபாகரனின் நிலை என்ன ஆனது?''

''சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!''

* பிரபாகரனைப் பற்றி?

13-ந் தேதி விடியற்காலை புதுமாத்தளை கடற்கரையோரம் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்பட 150 பேர் நின்று கொண்டி ருந்ததைப் பார்த்தேன். 13-ந்தேதி இரவு அந்த பகுதிக்கு சென்றபோது யாருமே அங்கு இல்லை. 14-ந்தேதி அதி காலையில் அதே பகுதியில் பொட்டுவை மட்டும் பார்த்தேன். அப்போது அவரிடம், "என்னாச்சு?' என்று கேட்டபோது, "ராத்திரி சிக்கல் ஆயிடுச்சு, கிளம்ப முடியலை' என்று பொட்டு சொன்னார். 15-ந்தேதி மீண்டும் நான் அங்கு போய்ப் பார்த்தபோது 200 பேருடன் தேசியத்தலைவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பொட்டு, "இன்னைக்கு நாங்கள் போய்விடுவோம்' என்று சொன்னார். அதன்பிறகு மறுநாள் மீண்டும் போய்ப் பார்த்தபோது அங்கு யாருமே இல்லை. கிளம்பிப் போயி ருப்பார்கள்.

மற்றும் இப்படி ஒரு பத்திரிகையாளர் போய் பார்க்கும் போது கண்ணில் படுவது போல் மிக சாதாரணமாக புலிகளின் தலைமை நிற்கும் என எல்லோரும் நம்புவார்கள் என்று நினைத்தாரா?

ஒரு வேளை நெடுமாறன் & Co வை ஜூவி யின் பேட்டிக்கும் நக்கீரனின் பேட்டியிற்கும் இடையில் சந்தித்தாரோ தெரியவில்லை...

நக்கீரன் கிளைமாக்ஸ், ஓபினிங் சீன்...என இன்னும் எம் போராட்டத்தினை சினிமா பார்க்கின்றதைப் போலத்தான் தமிழக மக்களுக்கு காட்டுகின்றது...

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடந்த வாரம் ஜூ.வி. க்கு வழங்கி இருந்த பேட்டியில் சொன்னவற்றை இந்த நக்கீரன் பேட்டியில் கூறிய பதில்களால் குழப்புகின்றார்

ஜூ.வி யில் இருந்து

மற்றும் இப்படி ஒரு பத்திரிகையாளர் போய் பார்க்கும் போது கண்ணில் படுவது போல் மிக சாதாரணமாக புலிகளின் தலைமை நிற்கும் என எல்லோரும் நம்புவார்கள் என்று நினைத்தாரா?

ஒரு வேளை நெடுமாறன் & Co வை ஜூவி யின் பேட்டிக்கும் நக்கீரனின் பேட்டியிற்கும் இடையில் சந்தித்தாரோ தெரியவில்லை...

நக்கீரன் கிளைமாக்ஸ், ஓபினிங் சீன்...என இன்னும் எம் போராட்டத்தினை சினிமா பார்க்கின்றதைப் போலத்தான் தமிழக மக்களுக்கு காட்டுகின்றது...

:icon_idea:

அவருக்கு வயது போய் விட்டது அது தான்

வயது போன எல்லாத்தையும் ஞாவகம் வைச்சு இருக்க மாட்டினம்...

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியங்களா!

விடவே மாட்டாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மே 10-ந் தேதி நடேசனை சந்தித்து யுத்தத்தின் போக்கு குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது, ""ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள், அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறோம். அதற்கு ஏற்பாடு செய்வதாக இந்தியாவிடமிருந்து தகவல் வந்துள்ளது'' என்று சொன்னார்.

நிச்சயமாக உங்களை இந்தியாவில் தொடர்ந்து இருக்க வைக்க பேச வைக்கப்படுவதைப் புரிந்து கொள்கின்றோம்... ஆயினும், இந்த வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இந்தியா கொண்டிருந்த பங்கை யாரும் மறந்து விட முடியாது.

தலைவர் இல்லை என்று உடனே சொன்னால், தமிழகத்தில் ஏதும் கிளர்ச்சி ஏற்பட்டு விடுமா என்ற அச்சத்தில் ரோ காட்டுகின்ற நாடகத்தில் என்னமும் எத்தனைபேர் நடிக்கப் போகின்றார்களோ தெரியா... ஆனால், தலைவரின் வீரமரணச்செய்தியை மெலிது மெலிதாக்க கசியவிட்டு, மக்களுக்கு ஏற்படும் உணர்வினை மழுங்கடிக்கப் பார்க்கின்றார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea:

அவருக்கு வயது போய் விட்டது அது தான்

வயது போன எல்லாத்தையும் ஞாவகம் வைச்சு இருக்க மாட்டினம்...

அவர் எவ்வளவு ஞாபகமாக பொட்டுஅம்மானையும் சந்தித்து தேசியத்தலைவர் பயிற்சியெடுத்ததையும் பார்த்து வந்து சொல்லியிருக்கிறார். இதுவா மறதி ?

குட்டிப்பையன் சுட்டித்தனமாவே சிந்திக்கிறீங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் உண்மையா நக்கீரனுக்கு பேட்டி குடுத்ததெண்டு எப்பிடித் தெரியும்? குடுத்திருந்தாலும், அந்தாள் சொன்னதைத்தான் அவர்கள் எழுதினார்கள் எண்டு எப்படித் தெரியும்? ஏனெண்டால் அங்கத்தைய பத்திரிகைள் பத்திரிகைத் தர்மம் ஒரு சொட்டும் பிசகாமல் தானே இருக்கிறது. :icon_idea::D

Edited by Sabesh

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எவ்வளவு ஞாபகமாக பொட்டுஅம்மானையும் சந்தித்து தேசியத்தலைவர் பயிற்சியெடுத்ததையும் பார்த்து வந்து சொல்லியிருக்கிறார். இதுவா மறதி ?

குட்டிப்பையன் சுட்டித்தனமாவே சிந்திக்கிறீங்கள் :D

இல்லை அங்கோ. :icon_idea:

அவர் போன கிழமை ஒரு மாரி சொன்னார் இந்த கிழமை வேர மாரி சொல்லுறார் அது தான்..

போன கிழமை சொன்னத அவர் மறந்து போட்டார் போல :D

யாருக்கு தெரியும் இந்த கட்டுரையும் கடவுள் பாதி கற்பனை பாதி போல் அல்லது காதல் பாதி காமம் பாதி எனபது போல் இருக்குமோ?

ஒரு செய்தியை தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு திரிப்பதற்கு சொல்லித் தர வேண்டியது இல்லை. பேட்டிகளை தாம் விரும்பியபடி மாற்றி போடுவார்கள். அவர்கள் ஏதோ அர்த்தத்தில் சொல்ல இவர்கள் ஏதோ அர்த்தம் வருவது போன்று எழுதுவார்கள்.

திருநாவுக்கரசு அவர்களின் பேட்டியை இந்த ஊடகங்கள் நிச்சயமாக திரித்திருக்கின்றன. பரபரப்பும் அதன் மூலம் வரும் வருமானமுமே இவர்களின் குறிக்கோள்.

நிச்சயமாக உங்களை இந்தியாவில் தொடர்ந்து இருக்க வைக்க பேச வைக்கப்படுவதைப் புரிந்து கொள்கின்றோம்... ஆயினும், இந்த வலிகளுக்கும், வேதனைகளுக்கும் இந்தியா கொண்டிருந்த பங்கை யாரும் மறந்து விட முடியாது.

தலைவர் இல்லை என்று உடனே சொன்னால், தமிழகத்தில் ஏதும் கிளர்ச்சி ஏற்பட்டு விடுமா என்ற அச்சத்தில் ரோ காட்டுகின்ற நாடகத்தில் என்னமும் எத்தனைபேர் நடிக்கப் போகின்றார்களோ தெரியா... ஆனால், தலைவரின் வீரமரணச்செய்தியை மெலிது மெலிதாக்க கசியவிட்டு, மக்களுக்கு ஏற்படும் உணர்வினை மழுங்கடிக்கப் பார்க்கின்றார்கள்..

அட கொய்யாலே இன்னுமா தமிழ்நாட்டில் கிளர்ச்சி வரும் என்று நம்புறிங்கள்?

புலத்து தமிழனே மெல்ல மெல்ல மறந்து சுந்தர்.சி யின் ஜந்தாம்படை படம் பார்க்க தயார் ஆகிவிட்டார்கள் நீங்கள் வேற

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன் ,ஜூனியர் விகடன் பேட்டிகள் முரண்பாடாக இருந்தாலும் திரு நாவுக்கரசு அவர்கள் கொடிய சிங்கள வதை முகாம்களில் இருந்து தமிழகம் சென்றது மனதுக்கு நிம்மதியாக இருகிறது.

நக்கீரன் இதழ் கலைஞர் புகழ் பாடும் வார இதழ் . உண்மையில் கலைஞரி உத்தரவினால் தான் திருநாவுக்கரசு தப்பி வந்தரா?. உண்மை என்றால் இவ்விடயத்தில் கலைஞருக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கீரன் இதழ் தமிழக அரசின் துதி பாடி என்பதால் முதல்வரின் உத்தரவுக்கமைய தமிழக காவல்த்துறையினர் மீட்டு வந்தனர் என்பதை எப்படி உள் நுழைத்தார்களோ அப்படியே மீதியும் திணக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் போன்ற பத்திரிகைகள், ஆதரவு என்ற நிலையிலிருந்து எமக்கு எதிராகவே எழுதுகின்றன. குறிப்பாக தமிழக அரசுக்கு ஆதரவாக எழுதுவதில் அவர்கள் பின்னிற்ப்பதில்லை.

ஜெயலலிதாவால் உள்ளே போடப்பட்ட கோபால் கரணாநிதியால் மீண்டும் வெளி விடப்பட்டதால் அவருக்கு கருணாநிதி விசுவாசம் அதிகம் தான்:!

இதில் எழுத்தாளர் திருநாவுக்கரசு என்ன செய்ய பாவம்! அகதி முகாம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது என்பதை இப்போது புரிந்திருப்பார் போலும்...

  • கருத்துக்கள உறவுகள்

யா 'றோ' சொன்னதைச் சொல்லியிருக்கலாம். சூழ்நிலைக்கைதி அவர்.

உந்த பேட்டியை உவர் கொடுக்காமலே இருந்து இருக்கலாம்...

வெளிப்படையான அறிக்கைகள் காசுக்காக வேலை செய்தவர்களுக்கும் உலை வைத்து கொண்டு இருக்கிறது... காசை வாங்கிக்க்கொண்டு காணாதது போல இருந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் இப்போ தடுக்க வேண்டிய தேவைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றான்கள்...

தேவை இல்லாதை அறிக்கைகளால் வெளி வர துடிப்பவர்களையும் வதைக்கிறார்... அவர் மற்ரவர்களின் நிலையை பற்றியும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம்... தான் தப்பி வந்தது போதும் எண்று நினைத்து விட்டார் போலும்... வவுனியாவில் இருக்கும் சனத்தை வெளியில் எடுக்க இருந்த வளிகள் இப்போ அடை பட்டு கொண்டு இருக்கின்றன...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

HEAL THE WORLD (TAMILS)

  • கருத்துக்கள உறவுகள்

அட கொய்யாலே இன்னுமா தமிழ்நாட்டில் கிளர்ச்சி வரும் என்று நம்புறிங்கள்?

புலத்து தமிழனே மெல்ல மெல்ல மறந்து சுந்தர்.சி யின் ஜந்தாம்படை படம் பார்க்க தயார் ஆகிவிட்டார்கள் நீங்கள் வேற

உண்மையில் புலத்தில் இருக்கின்றவனை விடத் தமிழகத்தில் இருப்பவனை நம்பலாம்... விடுதலைப் புலிகளே, பிரிகேடியர் தீபன் அண்ணா முதல் பலருக்கு அஞ்சலி செலுத்த முடியாமல். நேரத்தை எதிரியோடு செலவளித்துக் கொண்டிருந்தபோது, தங்களின் தார்மீகக் கடமை என்று அஞ்சலிகளையும், கலந்துரையாடல்களுக்கும் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தார்கள் இந்தப் புலத்தமிழர்கள்..

அத்தோடு தங்களின் தலையில் ஏதாவது செய்யாததற்குப் பழி விழுந்திடும் என்ற பயத்தில் உண்ணாவிரதம் என்று நேரத்தை அதற்குள் வீணாக்கிக் கொண்டிருந்தார்கள்... உண்ணாவிரதம் ஏன் செய்யணும்... என்ன தவம் இருந்து ஏதாவது கிடைக்கும் என்று முயற்சித்தார்களா?? அல்லது மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்பதற்காகவா??

உண்மையில் சொல்லப் போனால், அந்த நிலையைத் தாண்டி பல அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும் மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்தவேளை, இவர்கள் இதற்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை விட்டுச் செலவளித்துக் கொண்டிருந்தார்கள்... இவர்களின் புத்திசாலித்தனம், திட்டமி்டாத தன்மை பற்றி நினைக்கவே வெறுப்பாக இருக்கின்றது.

இன்றைக்கு ஈழத்தில் மக்கள் படுகொலை நடக்கின்றபோது, அதற்காகக் குரல் கொடுத்தவர்களும், படகுகளில் உணவு அனுப்ப முயற்சித்தவர்களும் தமிழகத்தினர் தான். இன்றைக்குக் கூட, முகாம்களில் உள்ள மக்களை மீட்க ஏதாவது செய்யணும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் தமிழகத்தினர் தான் அதிகம்... உண்மையில் அவர்களைப் பற்றிக் குறை சொல்ல எவனுக்கும் அருகதை இல்லை...

உண்மையான வார்த்தைகள் தூயவன் .

இங்கு பலருக்கு இந்திய அரசியலின் கொள்கைகளையும் .......,

தமிழ் நாட்டு மக்களின் உணர்ச்சிகளையும் ( அது சிறிதாகவே இருந்தாலும் ) பிரித்து அறியும் தன்மை இல்லை என்றே நான் நம்புகின்றேன் .

Edited by தமிழ் சிறி

இது இன்று களத்தில் உள்ள ஒரே தளபதியின் கோரிக்கை ........

letter.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.